03-07-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! இந்த
எல்லைக்கப்பாற்பட்ட நாடகத்தில் நீங்கள் அதிசயமான நடிகர்கள், இது
அனாதியான நாடகம், இதில் கொஞ்சம் கூட மாற்றம் ஏற்பட முடியாது.
கேள்வி:
எந்த ஆழமான ரகசியத்தை
புத்திவான்கள், தொலை நோக்கு பார்வை உள்ள குழந்தைகள் தான்
புரிந்து கொள்ள முடியும்?
பதில்:
மூலவதனத்திலிருந்து தொடங்கி முழு
நாடகத்தின் முதல்-இடை-கடைசியின் ஆழமான ரகசியத்தை தொலை நோக்கு
பார்வையுள்ள குழந்தைகள்தான் புரிந்து கொள்ள முடியும். விதை
மற்றும் மரத்தின் அனைத்து ஞானமும் அவர்களின் புத்தியில்
இருக்கும். இந்த எல்லைக்கப் பாற்பட்ட நாடகத்தில் சரீரம் என்ற
ஆடையை அணிந்து நடித்துக் கொண்டிருக்கும் ஆத்மா எனும் நடிகன்
சத்யுகத்திலிருந்து தொடங்கி கலியுகம் வரை நடிக்க வேண்டும்.
எந்த நடிகரும் இடையில் திரும்பிச் செல்ல முடியாது.
பாடல்:
நீ இரவை உறங்கிக் கழித்தாய். . .
ஓம் சாந்தி.
இந்த பாடலை குழந்தைகள் கேட்டீர்கள். இப்போது இதில் ஏதோ ஒரு
வார்த்தை சரியாகவும் இருக்கிறது, சில தவறாகவும் இருக்கிறது,
துக்கத்தில் நினைவு செய்வதில்லை. துக்கமும் நிச்சயம் வர வேண்டி
யுள்ளது. துக்கம் ஏற்படும்போது சுகத்தைக் கொடுப்பதற்காக தந்தை
வரவேண்டியுள்ளது. இப்போது நாம் சுகதாமத்திற்காக படித்துக்
கொண்டிருக்கிறோம் என இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்குத்
தெரியும். சாந்தி தாமம் மற்றும் சுக தாமம். முதலில் முக்தி,
பிறகு ஜீவன் முக்தி ஏற்படுகிறது. சாந்திதாமம் வீடாகும், அங்கே
நடிப்பு எதுவும் நடிக்கப்படுவதில்லை. நடிகர்கள் வீட்டுக்குச்
சென்று விடுகின்றனர், அங்கே யாரும் நடிப்பை நடிப்பதில்லை.
நடிப்பு மேடையில் நடிக்கப்படுகிறது. இதுவும் கூட மேடையாகும்.
எல்லைக்குட் பட்ட நாடகத்தைப் போல இது எல்லைக்கப்பாற்பட்ட நாடகம்.
இதன் முதல் இடை கடைசியின் ரகசியத்தை தந்தையைத் தவிர வேறு யாரும்
புரிய வைக்க முடியாது. உண்மையில் இந்த யாத்திரை அல்லது யுத்தம்
என்ற வார்த்தைகள் புரிய வைப்பதற்காக மட்டும் பயன் படுகின்றன.
மற்றபடி இதில் யுத்தம் முதலான விசயங்கள் எதுவுமில்லை. யாத்திரை
என்பதும் ஒரு வார்த்தை யாகும். மற்றபடி நினைவைத்தான்
குறிக்கிறது. நினைவு செய்து செய்து தூய்மை ஆகி விடுவீர் கள்.
இந்த யாத்திரை முழுவதுமே இங்கேதான் நடக்கிறது. எங்கும் செல்ல
வேண்டிய தில்லை. தூய்மையடைந்து நம்முடைய வீட்டிற்குச் செல்ல
வேண்டும் என குழந்தைகளுக்குப்புரிய வைக்கப் படுகிறது.
தூய்மையற்றவர்கள் செல்ல முடியாது. தன்னை ஆத்மா என புரிந்து
கொள்ள வேண்டும். ஆத்மாவாகிய எனக்குள் முழு சக்கரத்தின் நடிப்பு
உள்ளது. இப்போது அந்த நடிப்பு முடிந்து விட்டது. தந்தை
எளிமையான வழி கொடுக்கிறார் - என்னை நினைவு செய்யுங்கள். மற்றபடி
இங்கே அமர்ந்திருக்கிறீர்கள். எங்கும் செல்வ தில்லை. என்னை
நினைவு செய்தீர்கள் என்றால் நீங்கள் தூய்மையடைந்து விடுவீர்கள்
என தந்தை வந்து சொல்கிறார். யுத்தம் எதுவும் கிடையாது. தன்னை
தமோபிரதானத்திலிருந்து சதோ பிரதானமாக்க வேண்டும். மாயையின் மீது
வெற்றி அடைய வேண்டும். பாரதம் சதோபிரதானமாக இருந்தது, 84
பிறவிகளின் சக்கரம் முடிவடைய வேண்டும் என குழந்தைகள் அறிவார்கள்.
அதில் கண்டிப்பாக மனிதர்கள்தான் இருப்பார்கள். நிலம் பூமி
மாற்றத்தை அடையாது. நாம் சதோபிரதானமாக இருந்தோம், பிறகு
தமோபிரதானமாக ஆகினோம், இப்போது மீண்டும் சதோபிரதானம் ஆக
வேண்டும் என இப்போது நீங்கள் அறிவீர்கள். வந்து எங்களை
தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவராக ஆக்குங்கள் என மனிதர்கள்
கூப்பிடவும் செய்கின்றனர். ஆனால் அவர் யார், எப்படி வருகிறார்
என்பதை சிறிதும் அறிவதில்லை. இப்போது பாபா உங்களை
புத்திசாலிகளாக ஆக்கியுள்ளார். எவ்வளவு உயர்ந்த பதவியை நீங்கள்
அடைகிறீர்கள். அங்குள்ள ஏழைகள் கூட இங்குள்ள செல்வந்தர்களையும்
விட மிகவும் உயர்ந்தவர்கள் ஆவார்கள். எவ்வளவோ பெரிய பெரிய
ராஜாக்கள் இருந்தனர், செல்வம் நிறைய இருந்தது, ஆனால்
விகாரிகளாக அல்லவா இருந்தனர். இவர்களை விட அங்குள்ள சாதாரண
பிரஜைகள் கூட மிக உயர்வானவர்களாக இருப்பார்கள். பாபா
வித்தியாசத்தைப் பற்றி விளக்கு கிறார். இராவணனின் நிழல்
விழும்போது பதிதர்கள் (தூய்மையற்றவர்களாக) ஆகிவிடுகின்றனர்.
விகாரமற்ற தேவதைகள் முன்பாகச் சென்று தன்னை தூய்மையற்றவர்கள்
என சொல்லி தலை வணங்குகின்றனர். தந்தை இங்கே வருகிறார் என்றால்
சட்டென உயர்ந்த நிலைக்கு ஏற்றி வைத்து விடுகின்றார். ஒரு
வினாடியின் விசயமாகும். இப்போது தந்தை ஞானத்தின் மூன்றாம்
கண்ணைக் கொடுத்திருக்கிறார். குழந்தைகளாகிய நீங்கள் விசால
பார்வை உள்ளவர் களாக ஆகி விடுகிறீர்கள். மேலே
மூலவதனத்திலிருந்து தொடங்கி முழு நாடகத்தின் சக்கரம் வரை உங்கள்
புத்தியில் நினைவிருக்கிறது. எல்லைக்குட்பட்ட நாடகத்தைப்
பார்த்து விட்டு வந்து சொல்கின்றனர் அல்லவா - என்னென்னவெல்லாம்
பார்த்தோம். புத்தியில் நிறைந்திருப்பதை வர்ணனை செய்கின்றனர்.
ஆத்மாவில் நிரப்பிக் கொண்டு வருகின்றனர், பிறகு வந்து
பிறருக்குச் சொல்கின்றனர். பிறகு இது எல்லைக்கப்பாற்பட்ட
விசயங்கள். குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் இந்த
எல்லைக்கப்பாற்பட்ட நாடகத்தின் முதல் இடை கடைசியின் ரகசியம்
இருக்க வேண்டும். அது மீண்டும் மீண்டும் நடந்தபடி இருக்கிறது.
அந்த எல்லைக்குட்பட்ட நாடகத்தில் ஒரு நடிகர் வெளியேறிவிட்டார்
என்றால் பிறகு அவருக்குப் பதிலாக வேறொருவர் வர முடியும்.
யாருக்காவது உடல் நலம் சரியில்லாவிட்டால் அவருக்கு பதிலாக பிறகு
வேறொருவரை சேர்த்துக் கொள்கின்றனர். இதுவோ சைதன்யமான நாடகம்,
இதில் கொஞ்சம் கூட மாற்றம் செய்ய முடியாது. நாம் ஆத்மாக்கள் என
குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இது சரீரம் எனும் ஆடையாகும்,
இதனை அணிந்து கொண்டு நாம் பல ரூபங்களின் நடிப்பை நடிக்கிறோம்.
பெயர், ரூபம், தேசம், அங்க இலட்சணங்கள் மாறியபடி இருக்கும்.
நடிகர்களுக்கு தம் பாத்திரத்தைப் பற்றி தெரியும் அல்லவா. தந்தை
குழந்தைகளுக்கு இந்த சக்கரத்தின் ரகசியத்தை புரியவைத்தபடி
இருக்கிறார். சத்யுகத் திலிருந்து தொடங்கி கலியுகம் வரை
வருகின்றனர், பிறகு (வீட்டிற்குச்) செல்கின்றனர், அதன்பிறகு
புதிதாக வந்து நடிப்பை நடிக்கின்றனர். இதனை விரிவாக புரிய
வைப்பதற்கு நேரம் பிடிக்கிறது. விதையில் ஞானம் என்னவோ
இருக்கிறது, ஆனாலும் புரிய வைப்பதில் நேரம் பிடிக்கும் அல்லவா.
உங்களுடைய புத்தியில் விதை மற்றும் மரத்தின் முழு ரகசியமும்
உள்ளது, அதையும் நல்ல புத்திவானாக உள்ளவர்கள்தான் இதனுடைய விதை
மேலே இருக்கிறது, இதனுடைய உற்பத்தி, பாலனை மற்றும் அழிவு எப்படி
ஏற்படுகிறது என புரிந்து கொள்கின்றனர், ஆகையால்
திரிமூர்த்திகளைக் கூட காட்டப்பட்டுள்ளது. தந்தை கொடுக்கும்
இந்த விழிப்புணர்வை வேறு எந்த மனிதர்களும் கொடுக்க முடியாது.
அவர் இங்கே வரும்போது தெரிய வருகிறது, ஆகையால் இங்கே வந்து
புரிந்து கொள்ளுங்கள் என்று நீங்கள் அனைவருக்கும் சொல்கிறீர்கள்.
சிலர் மிகவும் மூட நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கின்றனர்,
நாங்கள் எதுவும் கேட்பதாக இல்லை என்று சொல் கின்றனர். சிலரோ
கேட்கவும் செய்கின்றனர், சிலர் பிரசுரங்களை வாங்கிக்
கொள்கின்றனர், சிலர் வாங்குவதில்லை. உங்களுடைய புத்தி இப்போது
எவ்வளவு விசாலமாக, தீர்க்க தரிசியாக ஆகி யுள்ளது. மூன்று
உலகங்களையும் நீங்கள் அறிவீர்கள், மூலவதனம், அது நிராகாரி உலகம்
என சொல்லப்படுகிறது. மற்றபடி சூட்சும உலகத்தில் ஒன்றுமில்லை.
தொடர்பு முழுவதும் மூல வதனத்துடனும் ஸ்தூல வதனத்துடனும்தான்.
மற்றபடி சூட்சும வதனம் சிறிது காலத்திற் கானதாகும். ஆத்மாக்கள்
அனைவரும் மேலேயிருந்து இங்கே நடிப்பை நடிப்பதற்காக வரு கின்றனர்.
இந்த மரம் வரிசைக்கிரமமாக அனைத்து தர்மங்களினுடையதுமாகும். இது
மனிதர் களின் மரம், முற்றிலும் துல்லியமானது. கொஞ்சமும் முன்,
பின் ஆக முடியாது. ஆத்மாக்கள் வேறு இடத்தில் அமரவும் முடியாது.
ஆகாயத்தில் நட்சத்திரங்கள் நின்றிருப்பது போல ஆத்மாக்கள்
பிரம்ம மகாதத்துவத்தில் நின்று கொள்கின்றனர். இந்த
நட்சத்திரங்கள் வெகு தூரத்திலிருந்தபடி பார்க்கும்போது மிகவும்
சிறியவையாக தெரிகின்றன. ஆனால் பெரியதாகத்தான் இருக்கின்றன.
ஆனால் ஆத்மா சிறிது பெரிதாக ஆவதில்லை, அழிவதுமில்லை. நீங்கள்
தங்க யுகத்திற்குச் செல்கின்றீர்கள், பிறகு இரும்பு யுகத்திற்கு
வருகின்றீர்கள். நாம் தங்க யுகத்தில் இருந்தோம், இப்போது
இரும்பு யுகத்திற்கு வந்துள்ளோம், மதிப்பு எதுவுமில்லை என
குழந்தைகள் அறிவார்கள். மாயையின் ஜொலிப்பு எவ்வளவு தான்
இருப்பினும், இது இராவணனின் தங்க யுகம், அது ஈஸ்வரனின் தங்க
யுகம்.
மனிதர்கள் சொல்லிக் கொண்டு இருக்கின்றனர் - இன்னும் 6-7
வருடங்களில் இவ்வளவு தானியங்கள் இருக்கும். . . அதைப் பற்றி
கேட்கவே வேண்டாம். பாருங்கள், அவர்களின் திட்டம் என்ன,
குழந்தைகளாகிய உங்களின் திட்டம் என்ன? என்னுடைய திட்டம் பழைய
உலகை புதியதாக ஆக்குவது என தந்தை சொல்கிறார். உங்களுடையது ஒரே
திட்டம் தான். தந்தையின் ஸ்ரீமத்படி நாம் நம்முடைய ஆஸ்தியை
எடுத்துக் கொண்டி ருக்கிறோம் என அறிவீர்கள். பாபா வழி
காட்டுகிறார், ஸ்ரீமத் (உயர்ந்த வழி) கொடுக்கிறார், நினைவில்
இருப்ப தற்கான வழியைக் கொடுக்கிறார். வழி என்ற வார்த்தை
இருக்கிறதல்லவா. சம்ஸ்கிருத வார்த்தையை தந்தை பேசுவதில்லை.
தந்தை இந்தி மொழியில் புரிய வைத்தபடி இருக்கிறார். மொழிகள்
நிறைய உள்ளன அல்லவா. மொழி பெயர்ப்பவர்களும் இருக்கிறார்கள்,
அவர்கள் கேட்டு (மற்றவர்களுக்கு) சொல்கின்றனர். இந்தி மற்றும்
ஆங்கிலம் பலரும் அறிவார்கள். படிக்கின்றனர். மற்றபடி வீட்டில்
இருக்கக் கூடிய மாதர்கள் அந்த அளவு படிப்பதில்லை. இன்றைய
நாட்களில் வெளி நாட்டில் ஆங்கிலம் கற்கின்றனர், பிறகு இங்கே
வரும்போது கூட ஆங்கிலத்தில் பேசியபடி இருக்கின்றனர். இந்தி
பேசவே முடிவதில்லை. வீட்டிற்கு வரும்போது தாயிடம் ஆங்கிலத்தில்
பேசத் தொடங்கி விடுகின்றனர். பாவம் அவர்கள் குழம்பி
விடுகின்றனர் - நாங்கள் ஆங்கிலத்தைப் பற்றி எதை அறிவோம். பிறகு
அவர்கள் அரை குறை இந்தி கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.
சத்யுகத்திலோ ஒரு இராஜ்யம், ஒரு மொழி இருந்தது, அது இப்போது
மீண்டும் ஸ்தாபனை செய்து கொண்டி ருக்கிறார். ஒவ்வொரு 5 ஆயிரம்
வருடங்களுக்கு ஒரு முறை இந்த சிருஷ்டி சக்கரம் எப்படி
சுற்றுகிறது என்பது புத்தியில் இருக்க வேண்டும். இப்போது ஒரு
தந்தையின் நினைவில் தான் இருக்க வேண்டும். இங்கே உங்களுக்கு
ஓய்வு நேரம் நன்றாக இருக்கிறது. அதிகாலையில் குளித்து விட்டு
வெளியில் சுற்றுவதில் மிகவும் மகிழ்ச்சி ஏற்படுகிறது, நாம்
அனைவரும் நடிகர்கள் என்ற நினைவே உள்ளுக்குள் இருக்க வேண்டும்.
இந்த நினைவும் இப்போது வந்துள்ளது. பாபா நமக்கு 84 பிறவிகளின்
சக்கரத்தைப் பற்றி சொல்லியிருக்கிறார். நாம் சதோபிரதானமாக இருந்
தோம் என்பது மிகவும் மகிழ்ச்சியான விசயம். மனிதர்கள் சுற்றித்
திரிந்தபடி இருக்கின்றனர், அவர் களுடைய வருமானம் எதுவும்
ஏற்படுவதில்லை. நீங்களோ நிறைய வருமானத்தை சம்பாதிக் கிறீர்கள்.
புத்தியில் சக்கரத்தின் நினைவும் இருக்க வேண்டும், பிறகு
தந்தையையும் நினைவு செய்தபடி இருங்கள். வருமானத்தை
ஈட்டுவதற்கான நல்ல நல்ல யுக்திகளை தந்தை சொல்கிறார். ஞானத்தை
மனன சிந்தனை செய்யாத குழந்தைகளின் புத்தியில் மாயை பிரச்னை களை
ஏற்படுத்துகிறது. அவர்களைத்தான் மாயை கஷ்டப் படுத்துகிறது. நாம்
இந்த சக்கரத்தை எப்படி சுற்றி வந்தோம் என உள்ளுக்குள் சிந்தனை
செய்யுங்கள். சத்யுகத்தில் இவ்வளவு பிறவிகள் எடுத்தோம், பிறகு
கீழே இறங்கியபடி வந்தோம். இப்போது மீண்டும் சதோ பிரதானம் ஆக
வேண்டும். என்னை நினைவு செய்தீர்கள் என்றால் சதோபிரதானமாக ஆகி
விடுவீர்கள் என தந்தை சொல்லியிருக்கிறார். நடந்து சுற்றியபடி
புத்தியில் நினைவு இருந்தது என்றால் மாயையின் பிரச்னைகள்
முடிந்து விடும். உங்களுக்கு மிகவும் லாபம் ஏற்படும். கணவன்
மனைவி இருவரும் இணைந்து செல்லக்கூடும், எனினும் ஒவ்வொருவரும்
தன்னுடைய உயர் பதவியைப் பெறுவதற்கு தனது முயற்சியைச் செய்ய
வேண்டும். தனிமையில் செல்வதில் மிகவும் மகிழ்ச்சி உள்ளது.
தன்னுடைய ஆர்வத்தில் மட்டுமே ஈடுபட்டு இருப்பீர்கள். இன்னொருவர்
உடன் இருந்தால் புத்தி இங்கும் அங்கும் போகும். மிகவும் சகஜமே,
பூங்கா முதலானவை அனைத்து இடங்களிலும் உள்ளன. இஞ்சினீயராக
இருந்தால் இங்கே இங்கே பாலம் கட்டலாமா, இதைச் செய்யலாமா என
சிந்தனை செல்லும். புத்தியில் பிளான் வந்து விடுகிறது.
நீங்களும் கூட வீட்டில் அமருங்கள், ஆயினும் புத்தி அந்தப்
பக்கமாக (பாபாவுடன்) ஈடுபட்டிருக்கட்டும். இந்த பழக்கத்தை
வைத்துக் கொண்டீர்கள் என்றால் பிறகு உங்களுக்குள் இதே சிந்தனை
நடந்து கொண்டிருக்கும். படிக்கவும் வேண்டும், தொழில்
முதலானவையும் செய்ய வேண்டும். முதியவர், இளைஞர்கள், குழந்தைகள்
முதலான அனைவருமே தூய்மையடைய வேண்டும். ஆத்மாவுக்கு உரிமை உள்ளது
தந்தை யிடமிருந்து ஆஸ்தியை எடுக்க. குழந்தை களுக்கும் சிறு
வயதிலிருந்தே இந்த விதை விழுந்து விட்டது என்றால் மிகவும்
நல்லது. ஆன்மீகக் கல்வியை வேறு யாரும் கற்றுத் தர முடியாது.
உங்களுக்காக இந்த ஆன்மீகக் கல்வியை தந்தையே வந்து கற்பிக்கிறார்.
அந்தப் பள்ளிகளில் மனிதர் களுக்கான கல்வி தான் கிடைக்கிறது.
மேலும் அவை சாஸ்திரங்கள் சம்மந்தமான படிப்பு இது ஆன்மீகக் கல்வி,
இதனை பகவான் கற்பிக்கிறார். இது யாருக்கும் தெரியாது. இது
ஆன்மீக ஞானம் என சொல்லப்படுகிறது. இதனை பரம் ஆத்மா வந்து
படிப்பிக்கிறார், அவருக்கு வேறு எந்தப் பெயரும் வைக்கப்பட
முடியாது. இதனை சுயம் தந்தை வந்து படிப்பிக்கிறார். பகவானுடைய
வாக்கியம் அல்லவா. பகவான் ஒரே முறை வந்து புரிய வைக்கிறார், இது
ஆன்மீக ஞானம் என சொல்லப்படுகிறது. அந்த சாஸ்திரங்களின் படிப்பு
வேறு. ஒன்று ஸ்தூலமான கல்லூரியில் கிடைக்கும் ஞானம், இரண்டாவது
ஆன்மீக சாஸ்திரங்களின் படிப்பு, மூன்றாவது இந்த ஆன்மீக ஞானம்.
அவர்கள் எவ்வளவுதான் பெரிய பெரிய தத்துவ ஞான படிப்பில் டாக்டர்
பட்டம் பெற்றவர்களாக இருக்கலாம், ஆனால் அவர்களிடம் இருப்பது
சாஸ்திரங்களின் விசயங்கள். உங்களுடைய இந்த ஞானம் முற்றிலும்
தனிப்பட்டது. இந்த ஆன்மீக ஞானம் அனைத்து ஆத்மாக்களின் தந்தையாக
விளங்கும் ஆன்மீகத் தந்தையே படிப்பிக்கிறார். அவரின் மகிமை
அமைதிக் கட,ல், சுகக் கடல்,.... கிருஷ்ணரின் மகிமைகள்
முற்றிலும் வேறு. குணங்களும், அவ குணங்களும் மனிதர்களுக்குள்
இருப்பவை, அவர்கள் பேசிக்கொண்டே இருகின்றனர். தந்தையின்
மகிமையைக் கூட நீங்கள் சரியான முறையில் அறிவீர்கள். அவர்கள்
வெறுமனே கிளிப்பிள்ளை போல் பாடியபடி இருக்கின்றனர். அர்த்தம்
எதுவும் தெரியாது. ஆக, தனது முன்னேற்றத்தை எப்படி ஏற்படுத்திக்
கொள்வது என தந்தை குழந்தைகளுக்கு வழி கொடுக்கிறார். முயற்சி
செய்து கொண்டே இருந்தீர்கள் என்றால், பிறகு உறுதியாக ஆகிவிடும்,
பிறகு அலுவலகத்தில் வேலை செய்யும் சமயத்தில் கூட இந்த நினைவு
வரும், ஈஸ்வரனின் நினைவு இருக்கும். மாயையின் நினைவோ அரைக்
கல்ப காலம் நடந்தது, இப்போது தந்தை சரியான விதத்தில் புரிய
வைக்கிறார். தன்னைப் பாருங்கள் - நாம் என்னவாக இருந்தோம்,
இப்போது என்னவாக ஆகியுள்ளோம்! பிறகு பாபா நம்மை இப்படி
தேவதையாக ஆக்குகிறார். இதுவும் கூட குழந்தைகளாகிய நீங்கள் தான்
வரிசைக்கிரமமான முயற்சியின்படி தெரிந்திருக்கிறீர்கள். முதன்
முதலில் பாரத தேசம்தான் இருந்தது. பாரதத்தில் தான் தந்தையும்
வருகிறார், நடிப்பை நடிப்பதற்காக. நீங்களும் கூட ஆதி சனாதன தேவி
தேவதா தர்மத்தவர்கள் அல்லவா. நீங்கள் தூய்மையடைய வேண்டும்,
இல்லாவிட்டால் பின்னால் வருவீர்கள், பிறகு என்ன சுகத்தை
அடைவீர்கள்? பக்தி அதிகம் செய்திருக்காவிட்டால் வரமாட்டார்கள்.
இவர்கள் அவ்வளவாக ஞானத்தை எடுக்க மாட்டார்கள் என புரிந்து போய்
விடும். புரிந்து கொள்ள முடியும் அல்லவா. மிகவும்
உழைக்கிறீர்கள், என்றாலும் அபூர்வமாக யாராவது
வெளிப்படுகிறார்கள், ஆனாலும் களைத்து விடக்கூடாது. முயற்சி
செய்யவே வேண்டும். முயற்சி இன்றி எதுவும் கிடைக்காது. பிரஜைகள்
உருவாகியபடி இருப்பார்கள்.
பாபா குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக யுக்தி சொல்கிறார் -
குழந்தைகளே, தனது முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்றால்
அதிகாலையில் குளித்து முடித்து தனிமையில் சென்று சுற்றுங்கள்,
அல்லது அமர்ந்து கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்திற்காக நடப்பதும்
நல்லதே. பாபாவும் நினைவில் இருப்பார், நாடகமும் புத்தியில்
இருக்கும், எவ்வளவு வருமானம் ஏற்படுகிறது! இது உண்மையான
வருமானமாகும், அந்த வருமானம் முடிந்து விட்டது, இப்போது இந்த
வருமானத்தைப் பற்றி சிந்தனை செய்யுங்கள். கொஞ்சமும் கஷ்டம்
கிடையாது. பாபாவைப் (பிரம்மா) பற்றி பார்த்திருக்கிறீர்கள்,
முழு வாழ்க்கைச் சரித்திரமும் எழுதுவார் - இன்று இத்தனை மணிக்கு
எழுந்தேன், பிறகு இதைச் செய்தேன். . . பிற்காலத்தில் வருபவர்கள்
படித்து கற்றுக் கொள்வார்கள் என்று எண்ணுவார். பெரிய பெரிய
மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கிறார்கள் அல்லவா.
குழந்தைகளுக்காக எழுதுகின்றனர், பிறகு வீட்டில் குழந்தைகளும்
நல்ல சுபாவமுள்ளவர்களாக ஆகின்றனர். இப்போது குழனதைகளாகிய
நீங்கள் முயற்சி செய்து சதோபிர தானம் ஆக வேண்டும். மீண்டும்
சதோபிரதான உலகின் இராஜ்யத்தை பெற வேண்டும். ஒவ்வொரு கல்பமும்
நாம் இராஜ்யத்தை அடைகிறோம், பின்னர் இழக்கிறோம் என நீங்கள்
அறிவீர்கள். இவையனைத்தும் உங்கள் புத்தியில் உள்ளது. இது புதிய
உலகம், புதிய தர்மத்திற்கான புதிய ஞானமாகும், ஆகையால்தான்
இனிமையிலும் இனிமையான குழந்தைளுக்கு மீண்டும் கூட புரிய
வைக்கிறார் - வேக வேகமாக முயற்சி செய்யுங்கள். சரீரத்தின் மீது
நம்பிக்கை இல்லை. இன்றைய நாட்களில் மரணம் என்பது மிகவும்
எளிதான ஒன்றாக (சாதாரண நிகழ்ச்சி) ஆகி விட்டுள்ளது. அங்கே அமர
லோகத்தில் இப்படிப்பட்ட மரணம் ஒருபோதும் ஏற்படுவதில்லை, இங்கேயோ
அமர்ந்தபடியே இறந்து விடுகின்றனர், ஆகையால் தனது முயற்சியை
செய்தபடி இருங்கள். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. புத்தியை ஞான சிந்தனையில் மும்முரமாக ஈடுபடுத்தும் பழக்கத்தை
ஏற்படுத்த வேண்டும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனிமையில்
சென்று அமர்ந்து ஞானத்தை மனன சிந்தனை செய்ய வேண்டும். தந்தையை
நினைவு செய்து உண்மையான வருமானத்தை ஈட்ட வேண்டும்.
2. தொலை நோக்கு பார்வையுள்ளவராகி இந்த எல்லைக்கப்பாற்பட்ட
நாடகத்தை சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும். அனைத்து
நடிகர்களின் நடிப்பையும் சாட்சியாகி பார்க்க வேண்டும்.
வரதானம்:
மதுரதா (இனிமைத் தன்மை) என்ற வரதானத்தின் மூலம் சதா முன்னேறிச்
செல்லக்கூடிய உயர்ந்த ஆத்மா ஆகுக.
இனிமைத் தன்மை என்பது அப்படிப்பட்ட விசேஷ தாரணை ஆகும் அதாவது
கசப்பான பூமியை கூட இனிமையானதாக ஆக்கி விடும். யாருக்கேனும்
இரண்டு மணித்துளிகளுக்கு - இனிமையான திருஷ்டி கொடுக்
கின்றீர்கள், இனிமையான வார்த்தைகளை பேசுகின்றீர்கள் எனில்,
எந்தவொரு ஆத்மாவையும் சதா காலத்திற்கு நிரப்பி விடுகின்றீர்கள்
என்பதாகும். இரண்டு மணித்துளிகளின்- இனிமையான திருஷ்டி மற்றும்
வார்த்தை என்பது அந்த ஆத்மாவின் சிருஷ்டியை (உலகை) மாற்றிவிடும்.
உங்களுடைய இனிமையான இரண்டு வார்த்தை கள் கூட சதா காலத்திற்கு
அவர்கள் மாறுவதற்கான கருவியாக ஆகக்கூடும் எனவே இனிமைத் தன்மை (மதுரதா)
என்ற வரதானத்தை சதா தன்னுடையதாக வைத்துக்கொள்ளுங்கள். சதா
இனிமையாக இருங்கள் மேலும் அனைவரையும் இனிமையாக ஆக்குங்கள்.
சுலோகன்:
ஒவ்வொரு சூழ்நிலையையும் ஏற்றுக்கொண்டவராக ஆகுங்கள் அப்பொழுது
ராஜயுக்த் ஆக (இரகசியம் அறிந்தவராக) ஆகி விடுவீர்கள்.
அவ்யக்த சமிக்ஞை: எண்ணங்களின் சக்தியை சேமிப்பு செய்து சிறந்த
சேவைக்கு கருவி ஆகுங்கள்.
எப்பொழுது அனைத்து எண்ணங்களும் சாந்தமாகி, ஒரே ஒரு தந்தை
மற்றும் நான் என்ற - சந்திப்பினுடைய அனுபவத்தின் சங்கல்பம்
இருக்கின்றதோ, அப்பொழுது சங்கல்ப சக்தி சேமிப்பா கின்றது மேலும்
யோகா (தந்தையின் நினைவு) சக்திசாலியாக ஆகுகின்றது. இதற்காக,
தனக்குள் ஏற்றுக் கொள்ளக் கூடிய மற்றும் தாண்டி செல்லக் கூடிய
சக்திகளை தாரணை செய்யுங்கள் . எண்ணங்கள் மீது முழுமையான
கட்டுப்பாடு இருக்க வேணடும், தளர்ந்த நிலை கூடாது. ஒரு வேளை (எண்ணங்களை
கட்டுப்படுத்த) ஒரு நொடியை தாண்டி, அதிகமாக ஆகுகின்றது எனில்
தனக்குள் ஏற்றுக் கொள்ளக் கூடிய சக்தி பலகீனமாக இருக்கின்றது
என்பதாகும்.