03.08.25    காலை முரளி            ஓம் சாந்தி  28.03.2006      பாப்தாதா,   மதுபன்


உலக ஆத்மாக்களை துக்கத்தில் இருந்து விடுவிப்பதற்காக மனசா சேவையை அதிகப்படுத்துங்கள், சம்பன்னம், சம்பூர்ணம் ஆகுங்கள்

இன்று அனைத்துக் கஜானாக்களின் மாலிக் (எஜமான்) தம்முடைய நாலாபுறம் உள்ள சர்வ கஜானாக்களும் நிரம்பப் பெற்ற குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் சர்வ கஜானாக்களின் மாலிக் ஆக்கியுள்ளார். கொடுப்பவர் ஒரே ஒருவர் மற்றும் அனைவருக்கும் ஒரே மாதிரி சர்வ கஜானாக்களையும் கொடுத்திருக்கிறார். சிலருக்குக் குறைவாகவும் சிலருக்கு அதிகமாகவும் கொடுக்கவில்லை. ஏன்? பாபா அளவற்ற கஜானாவுக்கு மாலிக் ஆவார். எல்லையற்ற கஜானா, ஆகையால் ஒவ்வொரு குழந்தையும் அளவற்ற கஜானாவுக்கு மாலிக் ஆவார். பாப்தாதா குழந்தைகள் அனைவருக்கும் ஒரே அளவு, ஒன்று போலவே கொடுத்துள்ளார். ஆனால் தாரணை செய்பவர்களில் சிலர் சர்வ கஜானாக் களையும் தாரணை செய்பவர்கள் மற்றும் சிலர் தங்கள் சக்திக்கேற்றவாறு தாணை செய்கின்றனர். சிலர் நம்பர் ஒன், சிலர் நம்பர்வார். யார் எவ்வளவு தாரணை செய்திருக்கிறார்களோ. அவர்களின் முகத்தின் மூலம், கண்களின் மூலம் கஜானாக்களின் நஷா தெளிவாகத் தெரிகின்றது. கஜானா வினால் நிரம்பிய ஆத்மா முகத்தின் மூலம், கண்களின் மூலம் நிரம்பிய வராகக் காணப்படுகிறார். எப்படி ஸ்தூல கஜானாவை அடைகின்ற ஆத்மாவின் நடத்தை மூலம் முகத்தின் மூலம் தெரிய வருகிறது, அப்போது இந்த அவிநாசி கஜானாக்களின் நஷா, குஷி தெளிவாகத் தென்படுகின்றது. நிரம்பிய நிலையின் பெருமிதம் கவலையற்ற மகாராஜா ஆக்கி விடுகின்றது. எங்கே ஈஸ்வரிய பெருமிதம் உள்ளதோ, அங்கே கவலை இருக்க முடியாது. அவர்கள் கவலையற்ற பாதுஷாவாக, கவலையற்ற ஊருக்கு மகாராஜாவாக ஆகி விடுகிறார்கள். ஆக, ஈஸ்வரிய நிறைவின் கஜானாக் களைப் பெற்ற நீங்கள் அனைவரும் கவலையற்ற மகாராஜாக்கள் இல்லையா? கவலை யற்ற ஊருக்கு மகாராஜாக்கள். ஏதேனும் கவலை உள்ளதா? கவலை எதுவும் இருக்கிறதா? என்ன நடக்கும், எப்படி நடக்கும்? இதைப் பற்றிய கவலையும் இல்லை. திரிகாலதரிசி ஸ்திதியில் நிலைத் திருப்பவர்களாகிய நீங்கள் அறிவீர்கள் - என்ன நடந்து கொண்டுள்ளதோ, அது அனைத்தும் நல்லது. எது நடக்க இருக்கிறதோ, அது இன்னும் நல்லது. ஏன்? சர்வசக்திவான் பாபாவின் துணைவர்கள் நீங்கள், அவரது துணையில் இருப்பவர்கள். ஒவ்வொருவருக்கும் நஷா உள்ளது. பெருமிதம் உள்ளது - பாப்தாதா சதா நமது உள்ளத்தில் இருக்கிறார் மற்றும் நாம் எப்போதும் பாபாவின் மன சிம்மாசனத்தில் இருக்கிறோம். அந்த மாதிரி நஷா உள்ளது இல்லையா? யார் மன சிம்மா சனதாரியாக இருக்கிறார்களோ, அவர் களின் சங்கல்பம் மட்டுமென்ன, கனவிலும் கூட துக்கத்தின் அலை கொஞ்சம் கூட படிய முடியாது. ஏன்? சர்வ கஜானாக்களாலும் நிரம்பியவர்கள். எது நிரம்பி யுள்ளதோ, அது தளும்புவதில்லை.

ஆக, நாலாபுறம் உள்ள குழந்தைகளின் நிரம்பிய தன்மையைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒவ்வொருவரின் சேமிப்புக் கணக்கையும் பாப்தாதா சோதித்துப் பார்த்தார். கஜானாவோ அளவற்ற தாகக் கிடைத்துள்ளது. ஆனால் என்ன கிடைத்ததோ, அந்தக் கஜானாவைக் காரியத்தில் ஈடுபடுத்திக் காலி செய்து விட்டனரா அல்லது கிடைத்துள்ள கஜானாவைக் காரியத்தில் ஈடுபடுத்தி அதிகப் படுத்தவும் செய்திருக்கிறார்களா? எத்தனை சதவிகிதத்தில் ஒவ்வொருவரின் கணக்கில் சேமிப்பாகி இருக்கிறது? ஏனென்றால் இந்தக் கஜானா இந்தச் சமயத்திற்காக மட்டு மில்லை. இந்தக் கஜானா வருங்காலத்திலும் உடன் செல்லக்கூடியதாகும். சேமிக்கப்பட்டது தான் உடன் செல்லும். ஆக, சதவிகிதத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். என்ன பார்த்தார்? சேவையோ எல்லாக் குழந்தை களும் தங்கள் சக்திக்கேற்றவாறு செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் சேவைக்கான பலன் சேமிப்பாவதில் வித்தியாசம் ஏற்பட்டு விடுகிறது. அநேக குழந்தைகளின் சேமிப்புக் கணக்கைப் பார்த்தார். சேவை அதிகம் செய்கிறார்கள். ஆனால் சேவை செய்ததற்கான பலன் சேமிப்பானதா இல்லையா, அவர்களின் அடையாளம் என்னவாக இருக்கும்? சேவை எதுவாகவும் இருக்கலாம். மனசா, வாய்மொழி, கர்மனா மூன்றிலும் 100 சதவிகிதம் மார்க் உள்ளது. மூன்றிலும் நூறு. சேவையோ செய்தீர்கள், ஆனால் சேவை செய்யும் போது அல்லது சேவை செய்த பிறகு சுயம் தனது மனதில், தனக்குத் தான் திருப்தியாக இருக்கிறீர்கள், அதோடு யாருக்கு சேவை செய்தீர் களோ, யார் சேவையில் துணையாகிறார்களோ, சேவை செய்பவரைப் பார்க்கிறார்களோ, கேட்கிறார் களோ, அவர்களும் திருப்தியாக இருக்கிறார்கள் என்றால் சேமிப்பாகி விட்டது எனப்புரிந்து கொள்ளலாம். தனக்குத் திருப்தி, அனைவருக்கும் திருப்தி இல்லை என்றால் சேமிப்பின் சதவிகிதம் குறைந்து விடுகிறது.

யதார்த்த சேவைக்கான விதி இதற்கு முன்பும் சொல்லியிருக்கிறோம். மூன்று விஷயங்கள் விதிபூர்வமாக இருந்தால் சேமிப்பு என்பது சொல்லப்பட்டுள்ளது - ஒன்று நிமித்த பாவ், இரண்டாவது நிர்மான் (பணிவு) பாவனை, மூன்றாவது நிர்மல் (மாசற்ற) சுபாவம், நிர்மல் வார்த்தை. பாவ், பாவனை மற்றும் சுபாவம், சொல். இந்த மூன்று விஷயங்களில் ஒரு விஷயம் கூட குறைவாக இருந்தால், ஒன்று உள்ளது, இரண்டு இல்லை. இரண்டு உள்ளன, ஒன்று இல்லை என்றால் அந்த பலவீனம் சேமிப்பின் சதவிகிதத்தைக் குறைத்து விடுகின்றது. ஆக, நான்கு பாடங் களில் தன்னைத் தான் சோதித்துப் பாருங்கள் -- நான்கு பாடங்களிலும் நமது கணக்கு சேமிப்பாகி உள்ளதா? ஏன்? பாப்தாதா பார்த்தார் - அநேகரின் நான்கு விஷயங்கள் என்ன சொன்னோமோ, பாவ், பாவனா அதன் படி அநேகக் குழந்தைகளின் சேவா சமாச்சாரம் நிறைய உள்ளன. ஆனால் சேமிப்புக் கணக்கு குறைவாக உள்ளது.

ஒவ்வொரு கஜானாவையும் சோதித்துப் பாருங்கள் - ஞானத்தின் கஜானா என்றால் என்னென்ன சங்கல்பம், கர்மம் செய்தீர்களோ, அதை ஞானம் நிறைந்தவராகிச் செய்தீர்களா? சாதாரணமாக ஆகவில்லையே? யோகம் என்றால் சர்வசக்திகளின் கஜானா நிறைந்திருக்க வேண்டும். ஆக, சோதித்துப் பாருங்கள் - ஒவ்வொரு நாளின் தினச்சரியாவில் (ஆன்றாட செய-ல்) சமயத்திற்கேற்ற வாறு எந்த சக்தி தேவையோ, அந்தச் சமயமே அந்த சக்தி கட்டளைப்படி இருந்ததா? மாஸ்டர் சர்வ சக்திவான் என்பதன் அர்த்தமே எஜமான் என்பது தான். சமயம் கடந்த பின் சக்தியை யோசித்துக் கொண்டே இருந்து விட்டீர்கள் என்று இருக்கக் கூடாது. சமயத்தில் கட்டளையிடும் போது இமர்ஜ் ஆகவில்லை, ஒரு சக்தியைக் கூட கட்டளைப்படி நடத்த முடியவில்லை என்றால் நிர்விக்ன ராஜ்யத்தின் அதிகாரியாக எப்படி ஆவீர்கள்? ஆக, சக்திகளின் கஜானா எவ்வளவு சேமிப்பாகி யுள்ளது. எதை சமயத்தில் காரியத்தில் ஈடுபடுத்துகிறார்களோ, அது சேமிப்பாகின்றது. எனது கணக்கு என்ன என்பதை சோதித்துக் கொண்டே செல்கிறீர்களா? ஏனென்றால் பாப்தாதாவுக்குக் குழந்தைகள் மீது அதிக அன்பு உள்ளது. பாப்தாதா இதைத் தான் விரும்புகிறார்-குழந்தைகள் அனைவரின் சேமிப்புக் கணக்கும் நிரம்பி இருக்க வேண்டும். தாரணையிலும் நிறைவு, தாரணை யின் அடையாளம் - ஒவ்வொரு கர்மமும் குணம் நிரம்பியதாக இருக்கும். எந்தச் சமயம் எந்த குணம் தேவையாக உள்ளதோ, அந்த குணம் முகம், நடத்தையில் இமர்ஜ் ஆகிக் காணப்பட வேண்டும். எந்த ஒரு குணமாவது குறைவாக இருந்தால், உதாரணமாக சரளத் தன்மையின் குணம் கர்மத்தின் சமயத்தில் அவசியமாக உள்ளது, இனிமையின் அவசியம் உள்ளது. வார்த்தை யிலோ கர்மத்திலோ சரளத்தன்மை, இனிமைத் தன்மைக்கு பதிலாக கொஞ்சமாவது ஆவேசத்தன்மை வருகிறது, அல்லது களைப்பின் காரணத்தால் வார்த்தை இனிமையாக இல்லை, முகம் இனிமை யாக இல்லை, சீரியஸாக உள்ளதென்றால் குணம் நிறைவாக இல்லை எனச் சொல்வார்கள் இல்லையா? எத்தகைய சூழ்நிலையாக இருந் தாலும் எனது குணம் எனது குணமாக இமர்ஜ் ஆக வேண்டும். இப்போது சுருக்கமாகச் சொல்லிக் கொண்டிருக் கிறோம்.

அது போலவே சேவை - சேவையில் சேவாதாரியின் அனைத்திலும் நல்ல அடையாளம் - தானும் சதா லேசாக, லைட்டாக மற்றும் மலர்ந்த முகத்துடன் காணப்படுவார்கள். சேவையின் பலன் குஷி ஆகும். சேவை செய்யும் போது குஷி மறைந்து விடுகிறது என்றால் சேவையின் கணக்கு சேமிப்பாவதில்லை. சேவை செய்தீர்கள், சமயம் ஒதுக்கினீர்கள், முயற்சி செய்தீர்கள் என்றால் கொஞ்சம் சதவிகிதத்தில் அது சேமிப்பாகும். வீணாகிப் போய் விடாது. ஆனால் எவ்வளவு சதவிகிதத்தில் சேமிப்பாக வேண்டுமோ, அவ்வளவு ஆவதில்லை. அது போலவே தான் சம்பந்தம்-தெடர்பின் அடையாளம் - ஆசிர்வாதங்களின் பிராப்தி ஆக வேண்டும். யாருடைய சம்பந்தம்-தொடர்பில் வந்தாலும் அவரது மனதிலிருந்து உங்களுக்காக ஆசிர்வாதங்கள் வெளிப்பட வேண்டும். மிக நன்று, வெறுமனே வெளிப்புறமாக இல்லை, மனதிலிருந்து வெளிப்பட வேண்டும். மனதிலிருந்து ஆசிர்வாதங்கள் வெளிப்பட வேண்டும் மற்றும் ஆசிர்வாதங்கள் கிடைத்தால் அது மிக சகஜ புருஷார்த்தத்திற்கான சாதனமாகும். சொற்பொழிவு செய்யாதிருக்கலாம், மனசா சேவை யும் கூட அவ்வளவு சக்திசாலியாக இல்லா திருக்கலாம். ஏதாவது புதுப்புது பிளான்கள் உருவாக்க வராதிருக்கலாம். அதனால் பரவாயில்லை. அனைத்திலும் சகஜமான புருஷார்த்தத்திற்கான சாதனம் - ஆசிர்வாதங்களைப் பெறுங்கள், ஆசிர்வாதங்களைக் கொடுங்கள். இது போல் பாப்தாதா அநேகக் குழந்தைகளின் மன சங்கல்பங்களை ரீட் செய்கிறார். அநேகக் குழந்தைகள் சமயத்தின் அனுசாரம் சொல்கின்றனர் - யாராவது தீய காரியம் செய்கிறார்கள் என்றால் அவர்களுக்கு எப்படி ஆசிர்வாதம் கொடுப்பது? அதைப் பார்த்தால் கோபம் வருகிறது இல்லையா? ஆசிர்வாதங்களை எப்படிக் கொடுப்போம்? பிறகு கோபத்தின் குழந்தை-குட்டிகளோ அநேகம் உண்டு. ஆனால் அவர் தீய காரியம் செய்தார், அவர் கெட்டவர். நீங்கள் அவரைக் கெட்டவர் எனச் சரியாகவே புரிந்திருக் கிறீர்கள். இந்த நிர்ணயத்தையோ நன்றாகச் செய்தீர்கள். நன்றாகப் புரிந்து கொண்டீர்கள். ஆனால் புரிவது என்பது ஒன்று, இன்னொன்று அவரது கெட்ட காரியம், கெட்ட பேச்சுகளைத் தனது மனதில் நிறைத்துக் கொள்வது. புரிந்து கொள்வது மற்றும் நிறைத்துக் கொள்வது வித்தியாசம் ஆகிறது. நீங்கள் புத்திசாலி என்றால் புத்திசாலி ஏதேனும் கெட்ட பொருளைத் தம்மிடம் வைத்துக் கொள்வாரா? ஆனால் அது கெட்டது, நீங்கள் அதை மனதில் நிறைத்துக் கொண்டீர்கள், அதாவது நீங்கள் கெட்ட பொருளைத் தன்னிடம் வைத்துக் கொண்டீர்கள், பாதுகாத்தீர்கள். புரிந்து கொள்வது வேறு பொருள். நிறைத்துக் கொள்வது என்பது இன்னொரு பொருள். புத்திசாலி ஆவதோ சரி தான். ஆகுங்கள், ஆனால் நிறைத்துக் கொள்ளாதீர்கள். இவரோ இப்படித் தான் - இதை நிறைத்துக் கொண்டீர்கள். இது போல் புரிந்து கொண்டு விவகாரத்தில் வருவது என்பது புத்திசாலித் தனம் ஆகாது. ஆக, பாப்தாதா சோதித்துப் பார்த்தார். இப்போது சமயம் அப்படியே சமீபத்தில் வந்து விடப் போவதில்லை. நீங்கள் அருகில் கொண்டு வர வேண்டும். அநேகர் கேட்கிறார்கள்- கொஞ்சம் சமிக்ஞை கொடுங்களேன் - 10 வருடமாகும், 20 வருடமாகும், எத்தனை வருடமாகும்?

ஆக, பாபா குழந்தைகளிடம் கேள்வி கேட்கிறார். பாபாவிடமோ நிறைய கேள்விகள் கேட்கிறார்கள் இல்லையா? ஆக, இப்போது குழந்தைகளிடம் பாபா கேள்வி கேட்கிறார் - சமயத்தை சமீபத்தில் கொண்டு வருபவர் யார்? டிராமா இருக்கிறது, ஆனால் நிமித்தமாக இருப்பது யார்? உங்களது ஒரு பாடலும் உள்ளது - கிஸ்கே ரோக்கே ரூக்கா ஹை சவேரா (விடியல் யாருக்காவது காத்திருக்குமா?) பாடல் உள்ளது இல்லையா? ஆக, விடியலைக் கொண்டு வருபவர் யார்? விநாசம் செயபவர்களோ துடித்துக் கொண்டிருக்கிறார்கள் -- விநாசம் செய்யட்டுமா, விநாசம் செய்யட்டுமா ஆனால் நவநிர்மாணம் (புது உலகப் படைப்புக் காரியம்) செய்பவர்கள் அவ்வளவு தயார் நிலையில் இருக்கிறீர்களா? பழையது அழிந்து விட்டது, ஆனால் புதிய படைப்பு நடைபெறவில்லை என்றால் என்னவாகும்? அதனால் பாப்தாதா இப்போது தந்தைக்கு பதிலாக டீச்சர் ரூபத்தை தாரணை செய்திருக்கிறார். வீட்டுப்பாடம் கொடுத்துள்ளார் இல்லையா? யார் வீட்டுப்பாடம் தருகிறார்? டீச்சர். கடைசியில் உள்ளது சத்குருவின் பாகம். எனவே தன்னைத்தான் கேளுங்கள் - சம்பன்ன மற்றும் சம்பூர்ண ஸ்டேஜ் எது வரை அமைந்துள்ளது? சப்தத்தைக் கடந்து செல்வது, சப்தத்திற்குள் வருவது இரண்டும் சமமாக உள்ளனவா? எப்படி சப்தத்திற்குள் வருவது, எப்போது விரும்புகிறீர்களோ, அது சுலபமாக உள்ளதோ, அதே போல் சப்தத்திலிருந்து விலகி அப்பால் செல்வதும் எப்போது விரும்புகிறீர்களோ, எப்படி விரும்புகிறீர்களோ, அப்படியே நடைபெறுகிறதா? ஒரு விநாடியில் சப்தத்தில் வர வேண்டும், ஒரு விநாடியில் சப்தத்தைக் கடந்து சென்று விட வேண்டும் - இவ்வளவு பயிற்சி உள்ளதா? எப்படி சரீரத்தின் மூலம் எப்போது விரும்புகிறீர்களோ, எங்கே விரும்புகிறீர்களோ, அவ்வாறு செல்ல முடிகிறது இல்லையா? அது போல் மனம் புத்தி மூலம் எப்போது விரும்பு கிறீர்களோ, எங்கே விரும்புகிறீர்களோ, அங்கே வரவும் போகவும் முடிகிறதா? ஏனென்றால் கடைசி யில், யார் ஒரு விநாடியில் எதை விரும்புகிறாரோ, எப்படி விரும்புகிறாரோ, என்ன கட்டளையிட விரும்புகிறாரோ, அதில் வெற்றி பெற வேண்டும். விஞ்ஞானிகளும் கூட இதே முயற்சியைச் செய்து கொண்டுள்ளனர் -- சகஜ மாகவும் இருக்க வேண்டும், மற்றும் குறைவான சமயத்தில் நடந்துவிட வேண்டும். ஆக, அந்த மாதிரி ஸ்திதி உள்ளதா? நிமிஷங்கள் வரை வந்திருக்கிறீர்களா, விநாடி வரை வந்திருக்கிறீர்களா, எது வரை வந்து சேர்ந்திருக் கிறீர்கள்? எப்படி லைட் ஹவுஸ், மைட் ஹவுஸ் ஒரு விநாடியில் ஆன் செய்ததும் தனது ஒளியைப் பரப்புகின்றது, அது போல் நீங்கள் ஒரு விநாடியில் லைட் ஹவுஸ் ஆகி நாலாபுறமும் ஒளியைப் பரப்ப முடியுமா? இந்த ஸ்தூல கண்கள் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு தொலை தூரம் வரை பார்க்க முடிகிறது இல்லையா? தனது திருஷ்டியைப் பரப்ப முடிகிறது இல்லையா? அது போல் நீங்கள் மூன்றாவது கண் மூலம் ஓரிடத்தில் அமர்ந்தவாறு நாலாபுறமும் வரதாதா, விதாதா ஆகி ஒரு பார்வையிலேயே திருப்திப்படுத்த முடியுமா? தன்னை அனைத்து விஷயங்களிலும் சோதித்துக் கொண்டிருக்கிறீர்களா? அந்த அளவுக்கு மூன்றாவது கண் கிளின் மற்றும் கிளியராக உள்ளதா? அனைத்து விஷயங்களிலும் கொஞ்சம் கூட பலவீனம் இருக்குமானால் அதற்குக் காரணம் இதற்கு முன்பும் சொல்லியிருக்கிறோம் - இந்த எல்லைக்குட்பட்ட பற்றுதல் நான் மற்றும் எனது என்பது உள்ளது. எப்படி நான் என்பதற்காகத் தெளிவு படுத்தப்பட்டது - வீட்டுப்பாடமும் கொடுக்கப்பட்டது. இரண்டு நான் என்பதை முடித்து விட்டு ஒரு நான் என்பதை வைக்க வேண்டும். அனைவரும் இந்த வீட்டுப்பாடத்தைச் செய்தீர்களா? யார் இந்த வீட்டுப்பாடத்தில் வெற்றி பெற்றார்களோ, அவர் கள் கை உயர்த்துங்கள். பாப்தாதா அனைவரையும் பார்த்தார். தைரியம் வையுங்கள், பயப்படாமல் கை உயர்த்துங்கள். நல்லது, வாழ்த்துகள் கிடைக்கும். மிகக் கொஞ்சம் பேர். இவர்கள் அனைவரின் கைகளை டி.வி.யில் காட்டுங்கள். மிகச்சிலர் தாம் கை உயர்த்தியிருக்கிறார்கள். இப்போது என்ன செய்யலாம்? அனைவருக்கும் தங்கள் மீதே சிரிப்பும் வருகிறது.

நல்லது - இரண்டாவது வீட்டுப்பாடமாக இருந்தது - கோபத்தை விடுவது. இதுவோ சுலபம் தான் இல்லையா? ஆக, கோபத்தை யார் விட்டிருக்கிறார்கள்? இவ்வளவு நாளாக கோபப்படவே இல்லையா? (இதில் அநேகர் கை உயர்த்தினர்) இதில் கொஞ்சம் அதிகம் உள்ளனர். யார் கோபப் படவில்லையோ, உங்கள் அக்கம்பக்கம் இருப்பவர்களிடமும் கேட்போம். யார் கை உயர்த்தினார் களோ, அவர்கள் எழுந்து நில்லுங்கள். நல்லது, அதிகம் உள்ளனர். கோபப்படவில்லையா? சங்கல்பத்தில், மனதில் கோபம் வந்ததா? பிறகும் வாழ்த்துகள். மனதில் வந்தது, வாயினால் கோபத்தைக் காட்டவில்லை என்றாலும் கூட வாழ்த்துகள்! மிக நன்று.

ஆக, நீங்களே ரிசல்ட்டின் கணக்கின்படி பாருங்கள் - ஸ்தாபனையின் காரியம், தன்னை சம்பன்னம் ஆக்குவது மற்றும் சர்வ ஆத்மாக்களுக்கும் முக்தியின் ஆஸ்தி கொடுப்பது - இது நிறை வடைந்துள்ளதா? தன்னை ஜீவன் முக்தி சொரூபம் ஆக்குவது மற்றும் ஆத்மாக்கள் அனை வருக்கும் முக்தியின் ஆஸ்தி கிடைக்கச் செய்வது - இது தான் ஸ்தாபனை செய்யும் ஆத்மாக் களின் சிரேஷ்ட கர்மம். ஆக, பாப்தாதா அதனால் தான் கேட்கிறார் - சர்வ பந்தனங்களில் இருந்தும் விடுபட்ட, ஜீவன்முக்த் ஸ்டேஜுக்கு சங்கமயுகத்தில் தான் சென்று சேர வேண்டுமா அல்லது சத்யுகத்தில் சென்று சேர வேண்டுமா? சங்கமயுகத்தில் சம்பன்னமாக வேண்டுமா அல்லது அங்கேயும் இராஜயோகம் கற்றுக்கொள்ள வேண்டுமா? சம்பன்னமாகவோ இங்கேயே தான் ஆக வேண்டும் இல்லையா? சம்பூர்ணமாகவும் இங்கே தான் ஆக வேண்டும். சங்கமயுக சமயத்தின் கஜானாவும் கூட அனைத்தையும் விடப் பெரியதிலும் பெரிய கஜானா ஆகும். ஆக, கிஸ்கே ரோக்கே ரூக்கா ஹை சவேரா - (விடியல் யாருக்காகவாவது காத்திருக்குமா?) சொல்லுங்கள்.

ஆக, பாப்தாதா எதை விரும்புகிறார்? ஏனென்றால் தந்தையின் நம்பிக்கை தீபம் குழந்தைகள் தாம். எனவே உங்களது கணக்கை சோதித்துப் பாருங்கள். நன்றாக சோதித்துப் பாருங்கள். அநேக குழந்தைகளைப் பார்க்கும் போது அவர்கள் மகிழ்ச்சியாக நேரத்தைப் போக்கிக் கொண்டிருக் கிறார்கள். (மௌஜிராம்) ஆனந்தமாகச் சென்று கொண்டிருக்கிறார்கள். எது நடந்ததோ, நன்றாகவே நடந்தது. இப்போதோ மகிழ்ச்சி கொண்டாடுங்கள். சத்யுகத்தில் யார் பார்க்கப் போகிறார்கள்? யாருக்குத் தெரியும்? எனவே சேமிப்புக் கணக்கில் இத்தகையவர்களை மௌஜிலால் (மனம் போன போக்கில் நடப்பவர்கள்) என்று சொன்னாலும் சரி, மௌஜிராம் என்று சொன்னாலும் சரி. இத்தகைய குழந்தைகளையும் பார்த்தோம். மகிழ்ச்சியாக இருங்கள். மற்றவர்களுக்கும் சொல்கிறீர்கள், என்ன செய்வது, மகிழ்ச்சியாக இருங்கள். உண்ணுங்கள், அருந்துங்கள், மகிழ்ச்சி கொண்டாடுங்கள். மகிழ்ச்சியாக இருங்கள். பாபாவும் அதைத் தான் சொல்கிறார். கொஞ்சம் கிடைத்தால் போது மெனத் திருப்தியடைகிறீர்கள் என்றால் கொஞ்சத்திலேயே திருப்தியாகி விடுங்கள். அழியப்போகும் சாதனங்களின் மகிழ்ச்சி அல்ப காலத்தினு டையதாக இருக்கும். சதா காலத்தின் மகிழ்ச்சியை விட்டு அல்பகால சாதனங்களின் மகிழ்ச்சியில் இருக்க விரும்புவீர்களானால் பாப்தாதா என்ன சொல்வார்? சமிக்ஞை கொடுப்பார் வேறென்ன செய்வார்? யாராவது வைரங்களின் சுரங்கத்திற்குச் சென்று இரண்டு வைரங்களை மட்டும் எடுத்துக் கொண்டு அதிலேயே குஷியாகி விட்டால் அவரை என்னவென்று சொல்வார்கள்? ஆக, அது போல் ஆகக்கூடாது. அதிந்திரிய சுகத்தின் மகிழ்ச்சியின் ஊஞ்சலில் ஆடுங்கள். அழியாத பிராப்திகளின் ஊஞ்சலின் மகிழ்ச்சியில் ஆடுங்கள். டிராமாவில் பாருங்கள், மாயாவின் பார்ட்டும் விசித்திரமானது. இந்தச் சமயத்தில் தான் அது போன்ற சாதனங்களும் வெளி வந்திருக்கின்றன. முதலில் அவை கிடையாது. ஆனால் சாதனங்கள் இல்லாமல் கூட யார் சாதனை செய்தார்களோ, சேவை செய்தார்களோ, அவர்களின் உதாரணமும் கூட முன்னால் உள்ளது இல்லையா? முன்பு இந்த சாதனங்கள் இருந்தனவா? ஆனால் சேவை எவ்வளவு நடைபெற்றது! தரமானவர்கள் வெளிப்பட்டார்கள் இல்லையா? ஆதி ரத்தினங்களோ தயாரானார்கள் இல்லையா? இது சாதனங்களின் கவர்ச்சி. சாதனங்களைப் பயன்படுத்துவது தவறென்று சொல்லவில்லை. ஆனால் சாதனையை மறந்து சாதனங்களைப் பயன்படுத்துவது - இதைத் தவறென்று பாப்தாதா சொல்கிறார். சாதனங்கள் வாழ்க்கைக்கான பறக்கும் கலையின் சாதனங்கள் அல்ல. ஆதாரம் இல்லை. சாதனையே ஆதாரம். சாதனைக்கு பதிலாக சாதனங்களை ஆதாரமாக ஆக்கிக் கொண்டீர்கள் என்றால் ரிசல்ட் என்னவாகும்? நல்லது.

நாலாபுறமுள்ள குழந்தைகளின் புருஷார்த்தம் மற்றும் அன்பின் செய்தி பற்றிய கடிதங்கள் பாப்தாதாவுக்குக் கிடைத்தன. பாப்தாதா குழந்தைகளின் ஊக்கம்-உற்சாகத்தைப் பார்த்து - இதைச் செய்வோம், அதைச் செய்வோம் இந்தச் செய்தியைக் கேட்டுக் குஷியடைகிறார். இப்போது என்ன தைரியம் வைத்தீர்களோ, ஊக்கம்-உற்சாகம் வைத்தீர்களோ, இதற்கு அடிக்கடி கவனம் கொடுத்து நடைமுறையில் கொண்டு வாருங்கள். இது தான் குழந்தைகள் அனைவருக்காகவும் பாப்தாதாவின் மனதின் ஆசிர்வாதங்கள் மற்றும் நாலாபுறமுள்ள சங்கல்பம், பேச்சு மற்றும் கர்மத்தில், சம்பந்தம்-தொடர்பில் சம்பன்னமாகக் கூடிய அனைத்து சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, சதா சுயதர்சனம் செய்யக் கூடிய சுயதரிசனச் சக்கரதாரி குழந்தைகளுக்கு, சதா திட சங்கல்பத்தின் மூலம் மாயாஜீத் ஆகி பாபாவுக்கு முன்னால் தன்னைப் பிரத்தியட்சம் செய்யக்கூடிய, சேவாதாரி மற்றும் ஞானம் நிறைந்த வெற்றிகரமான குழந்தை களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் மனப்பூர்வமான பல கோடி மடங்கு ஆசிர்வாதங்கள், நமஸ்தே, நமஸ்தே!

ஆசீர்வாதம்:
உண்மையான, தூய்மையான உள்ளத்தின் ஆதாரத்தில் நம்பர் ஒன் பெறக்கூடிய திலாராமுக்குப் பிடித்தமானவர் ஆகுக.

திலாரம் பாபாவுக்கு உண்மையான உள்ளம் கொண்ட குழந்தைகள் தாம் பிடித்தமானவர்கள். உலகத்தின் புத்தி இல்லாமல் இருக்கலாம். ஆனால் உண்மையான தூய்மையான உள்ளம் .இருக்கு மானால் நம்பர் ஒன் பெறுவீர்கள். ஏனென்றால் புத்தியோ பாபா இவ்வளவு பெரியதாகக் கொடுத்துள்ளார். இதனால் படைப்பவரை அறிந்து கொள்வதன் மூலம் படைப்பின் முதல்-இடை-கடை பற்றிய ஞானத்தை அறிந்து கொள்கிறீர்கள். ஆகவே உண்மையான, தூய்மையான உள்ளத் தின் ஆதாரத்தில் தான் நம்பர் கிடைக்கும். சேவையின் ஆதாரத்தில் இல்லை. உண்மையான உள்ளத்தின் சேவையின் பிரபாவம் மனது வரை சென்று சேரும். புத்தி உள்ளவர்கள் பெயர் சம்பாதிப்பார்கள் மற்றும் மனம் உள்ளவர்கள் ஆசிர்வாதங்களை சம்பாதிப்பார்கள்.

சுலோகன்:
அனைவருக்காகவும் சுப சிந்தனை மற்றும் சுப விருப்பம் வைப்பது தான் உண்மையான பரோபகாரம் ஆகும்.


அவ்யக்த சமிக்ஞை : சகஜயோகி ஆகவேண்டும் என்றால் பரமாத்ம அன்பின் அனுபவி ஆகுங்கள்

எந்தக் குழந்தைகள் பரமாத்ம அன்பில் சதா மூழ்கிய நிலையில் இருக்கிறார்களோ, அவர்களின் ஜொலிப்பு மற்றும் பொலிவு சக்திசாலியாக இருக்கும். அதனால் எந்த ஒரு பிரச்சினையும் அருகில் வராது என்பது மட்டுமில்லை, ஏறெடுத்துப் பார்த்தாலும் அதைப் பார்க்க முடியாது. அவர்களுக்கு ஒரு போதும் எந்த ஒரு கடின உழைப்பும் இருக்க முடியாது.