04-04-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! அலஃப் (தந்தை)
மற்றும் பே (ஆஸ்தி)யை நினைவு செய்யுங்கள். அப்போது
அழகானவர்களாக ஆகிவிடுவீர்கள். பாபாவும் அழகானவர் என்பதால்
அவருடைய குழந்தைகளும் அழகானவர்களாக இருக்க வேண்டும்.
கேள்வி:
தேவதைகளின் சித்திரங்கள் மீது
அனைவருக்குமே ஈர்ப்பு ஏற்படுவது ஏன்? அவர்களிடம் எந்த ஒரு
விசேஷ குணம் இருக்கிறது?
பதில்:
தேவதைகள் மிகவும் அழகாகவும் (மனதைக்
கவர்பவர்களாக) பவித்திரமாகவும் இருப்பவர் கள். அழகான
தோற்றத்தின் காரணத்தால் அவர்களின் சித்திரங்களிலும் கூட ஈர்ப்பு
உள்ளது. தேவதைகளிடம் பவித்திரதாவின் விசேஷ குணம் உள்ளது. அந்த
குணத்தின் காரணத்தால் தான் அபவித்திர மனிதர்கள் அவர்கள் முன்
தலை வணங்குகின்றனர். யாரிடம் அனைத்து தெய்வீக குணங்களும்
உள்ளனவோ, யார் சதா குஷியாக உள்ளனரோ, அவர்கள் தான் அழகானவர்களாக
ஆகின்றனர்.
ஓம் சாந்தி.
ஆத்மாக்கள் மற்றும் பரமாத்மாவின் மேளா (சந்திப்பு) எவ்வளவு
அற்புதமானது! அத்தகைய எல்லையற்ற தந்தைக்கு நீங்கள் அனைவரும்
குழந்தைகள் என்றால் குழந்தைகளும் கூட எவ்வளவு மனதைக்
கவரக்கூடியவர்களாக இருக்க வேண்டும்! தேவதைகளும் கூட கவரக்
கூடியவர்கள் இல்லையா? ஆனால் இராஜதானி (சாம்ராஜ்யம்) மிகவும்
பெரியது. அனைவரும் ஒரே மாதிரி மனம் கவர்பவர்களாக இருக்க
முடியாது. பிறகும் கூட ஒரு சில குழந்தைகள் மிகவும் அழகாகவும்,
கவரக்கூடியவர்களாகவும் நிச்சயமாக உள்ளனர். யார் அழகாக உள்ளனர்?
யார் சதா குஷியில் உள்ளனரோ, யாரிடம் தெய்வீக குணங்கள் உள்ளனவோ,
அவர்கள். இந்த இராதை- கிருஷ்ணர் முதலானோர் அழகாகவும், மனதை
கவர்ந்திழுக்கக் கூடியவர்களாக உள்ளனர் அல்லவா? அவர்களிடம்
மிகுந்த ஈர்ப்பு இருக்கிறது, எப்படிப்பட்ட ஈர்ப்பு?
பவித்திரதாவின் ஈர்ப்பு. ஏனென்றால் அவர்களுக்கு ஆத்மாவும்
தூய்மையாக உள்ளது, என்றால் சரீரமும் கூட தூய்மை யாகிறது, ஆகவே
தூய்மையான ஆத்மாக்கள் தூய்மை யற்றவர்களைக் ஈர்க்கின்றனர்.
அவர்களிடம் சரணடைகின்றனர். அவர்களிடம் எவ்வளவு சக்தி உள்ளது!
சந்நியாசிகளாக இருந்தாலும் அவர்கள் தேவதைகளின் முன்னிலையில்
அவசியம் தலைவணங்குகின்றனர். ஒரு சிலர் மிகவும்
கர்வமுள்ளவர்களாகவும் இருக்கலாம். இருப்பினும் தேவதைகளுக்கு
முன்னால், அல்லது சிவனுக்கு முன்னால் அவசியம் தலைவணங்குவார்கள்.
தேவிகளின் சித்திரங்களுக்கு முன்னாலும் தலை வணங்குகின்றனர்.
ஏனென்றால் பாபாவும் மனதை கவரக்கூடியவர் என்றால் பாபாவினால்
உருவாக்கப்பட்ட தேவி-தேவதைகளும் கூட மனம் கவரக்கூடியவர்கள்.
அவர்களிடம் பவித்திர தாவின் கவர்ச்சி உள்ளது. அவர்களின் அந்தக்
கவர்ச்சி இன்று வரை கூட இருந்து கொண்டிருக் கிறது. ஆக,
இவர்களிடம் எந்தளவு கவர்ச்சி உள்ளதோ, அந்தளவு கவர்ச்சி
உங்களிடமும் கூட இருக்க வேண்டும். நாம் இந்த
இலட்சுமி-நாராயணராக ஆகப்போகிறோம் எனப் புரிந்து கொண்டிருப்
பவர்கள் நீங்கள். இச்சமயத்தின் உங்களுடைய கவர்ச்சி பிறகு
அழிவற்றதாக ஆகிவிடும். அனை வருக்கும் ஆகாது. நம்பர்வாரோ
இருக்கத் தானே செய்கின்றனர் இல்லையா? வருங்காலத்தில் உயர்ந்த
பதவி பெறக் கூடியவர்களுக்கு இங்கேயே கவாச்சி இருக்கும்.
ஏனென்றால் ஆத்மா பவித்திரமாகி விடுகின்றது. உங்களில் யார்
குறிப்பாக நினைவு யாத்திரையில் இருக்கின்றனரோ, அவர்களிடம் தான்
அதிகக் கவர்ச்சி இருக்கும். யாத்திரை செல்லும் போது நிச்சயமாக
தூய்மை யாக இருக்கின்றனர்.. பவித்திரதாவில் தான் கவர்ச்சி
உள்ளது. பவித்திரதாவின் கவர்ச்சி பிறகு படிப்பிலும் கூட
ஈர்ப்பைக் கொண்டு வருகின்றது. இது உங்களுக்கு இப்போது தெரிய
வந்துள்ளது. நீங்கள் அவர்களுடைய (இலட்சுமி-நாராயணர்) தொழில்
என்ன என்பது பற்றி அறிவீர்கள். அவர் களும் கூட பாபாவை எவ்வளவு
நினைவு செய்திருப்பார்கள். அவர்கள் இந்த அளவு இராஜ்யத்தை
அடைந்திருக்கிறார்கள் என்றால் நிச்சயமாக இராஜயோகத்தின் மூலமாகத்
தான் அடைந்திருக் கிறார்கள். இச்சமயம் நீங்கள் இந்தப் பதவி
அடைவதற்காகத் தான் வந்திருக் கிறீர்கள். பாபா வந்து உங்களுக்கு
இராஜயோகம் கற்பிக்கிறார். இதை உறுதியாக நிச்சயம் செய்து இங்கே
வந்திருக் கிறீர்கள் இல்லையா? தந்தையும் அவர் தான், படிப்பு
சொல்லித் தருபவரும் அவர் தான். அவர் உடன் அழைத்துச்
செல்பவராகவும் இருக்கிறார். ஆக, இந்த குணம் சதா இருக்க வேண்டும்.
சதா புன்சிரித்த முகத்துடன் இருங்கள். தந்தையாகிய அலஃப்
நினைவில் இருக்கும் போது தான் சதா மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
அப்போது பே (ஆஸ்தி) நினைவும் இருக்கும். மேலும் இதனால்
களிப்புடன் அநேகர் இருப்பார்கள். குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள்,
நாம் இங்கே அன்பானவர்களாக ஆகிப் பிறகு வருங்காலத்தில் இது போல்
(தேவதைகள் போல்) மனதை கவரக்கூடியவர்களாக ஆவோம். இங்கே படிக்கும்
படிப்பு தான் அமரபுரிக்கு அழைத்துச் செல்லும். இந்த உண்மையான
பாபா உங்களை உண்மையான வருமானம் சம்பாதிக்க வைக்கிறார். இந்த
உண்மையான வருமானம் தான் கூடவே வரும் - 21 பிறவிகளுக்கு. பிறகு
பக்தி மார்க்கத்தில் என்ன வருமானம் சம்பாதிக்கிறீர்களோ, அதுவோ
அல்பகால சுகத்திற்கானது. அது ஒன்றும் சதா கூடவே இருக்காது. ஆக,
இந்தப் படிப்பில் குழந்தைகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க
வேண்டும். நீங்கள் சாதாரணமானவராக இருக்கிறீர்கள். உங்களுக்குக்
கற்றுத் தருபவரும் முற்றிலும் சாதாரண வடிவத்தில் உள்ளார். ஆக,
படிப்பவர்களும் சாதாரண மாகவே இருப்பார்கள். இல்லையென்றால்
வெட்கம் வரும். நாம் உயர்ந்த ஆடைகளை எப்படி அணிவது? நம்முடைய
மம்மா-பாபா எவ்வளவு சாதாரணமாக இருக்கிறார்கள்! அதுபோல் நாமும்
சாதாரணமாக உள்ளோம். இவர்கள் ஏன் சாதாரணமாக இருக்கிறார்கள்?
ஏனென்றால் வனவாசம் இல்லையா? இப்போது நீங்கள் (திரும்ப) போக
வேண்டும். இங்கே திருமணம் எதுவும் செய்யக் கூடாது. அந்த
மனிதர்கள் திருமணம் நடத்து கின்றனர் என்றால் குமாரி வனவாசத்தில்
உள்ளார். அழுக்கு ஆடைகளை அணிவிக் கிறார்கள் மற்றும் தைலம்
முதலியவற்றைத் தேய்க்கின்றனர். ஏனென்றால் மாமனார் வீட்டுக்குச்
செல்கிறார். பிராமணர் மூலம் நிச்சயதார்த்தம் நடைபெறுகின்றது.
நீங்களும் கூட மாமனார் வீடு செல்ல வேண்டும். இராவண புரியில்
இருந்து இராமபுரி அல்லது விஷ்ணுபுரிக்குச் செல்ல வேண்டும்.
தேகத்தின் அல்லது ஆடைகளின் அபிமானம் எதுவும் வரக்கூடாது
என்பதற்காக இந்த வனவாசத் தின் வழக்கம் வைக்கப்பட்டுள்ளது.
யாரிடமாவது விலை ம-வான புடவை இருக்குமானால், மற்றவர்களைப்
பார்க்கும்போது அவர்களிடம் விலை உயர்ந்த புடவை இருக்கிற
தென்றால் சிந்தனை வருகிறது. இவரோ வனவாசத்தில் இல்லை என
யோசிக்கின்றனர். ஆனால் நீங்கள் வனவாசத்தில் இதுபோல் சாதாரணமாக
இருந்து கொண்டு யாருக்காவது இவ்வளவு உயர்ந்த ஞானத்தைக்
கொடுங்கள். இவ்வளவு நஷா இருக்குமானால் அவர்களுக்கும் அது மனதில்
பதியும். பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தாலும் ஆடைகளைச் துவைத்து
கொண்டிருந்தாலும் உங்கள் முன்னிலையில் யாரேனும் வந்தால் நீங்கள்
உடனே அவருக்கு அலஃப் (தந்தை)-யின் நினைவைக் கொடுங்கள்.
உங்களுக்கு அந்த போதை ஏறியிருக்க வேண்டும். மேலும் சாதாரண
ஆடைகளில் அமர்ந்து கொண்டு யாருக்காவது ஞானம் கொடுத்தால்
அவர்களும் கூட வியப்படைவார்கள். இவர் களிடம் எவ்வளவு உயர்ந்த
ஞானம் உள்ளது! இதுவோ கீதையின் ஞானம் - அது பகவானால்
கொடுக்கப்பட்டது. இராஜ யோகமோ கீதையின் ஞானமே தான். ஆக,
அப்படிப்பட்ட நஷா ஏறுகிறதா? எப்படி பாபா தம்முடைய உதாரணம்
சொல்கிறார். குழந்தைகளோடு ஏதாவது விளையாடிக் கொண்டிருப்பதாக
வைத்துக் கொள்ளுங்கள், யாராவது மாணவர் முன்னால் வருகிறார்
என்றால் உடனே அவருக்குத் தந்தையின் அறிமுகம் கொடுக்கிறேன்.
யோகத்தின் சக்தி, யோகபலம் இருக்கிற காரணத்தால் அவரும் அங்கேயே
நின்றுவிடுவார் என்றால், இவர் இவ்வளவு சாதாரணமாக இருக்கிறார்,
இவரிடம் இவ்வளவு சக்தி உள்ளது என்று ஆச்சரியப்படுவார். பிறகு
அவரால் எதுவுமே பேச முடியாது. வாயிலிருந்து எந்த ஒரு
வார்த்தையும் வெளிப்படாது. எப்படி நீங்கள் சப்தத்தைக் கடந்து
அமைதி நிலையில் சென்றுவிடுகிறீர்களோ, அதுபோல் அவரும் சப்தத்தைக்
கடந்த நிலைக்குச் சென்று விடுவார். இந்த நஷா உள்ளுக்குள்
இருக்க வேண்டும். யாராவது ஒரு சகோதரன் அல்லது சகோதரி வந்தால்
அவர்களை அப்படியே நிற்க வைத்து உலகத்தின் எஜமானர் ஆக்குவதற்கான
வழிமுறை தர முடியும். உள்ளுக்குள் அவ்வளவு நஷா இருக்க வேண்டும்.
தனது ஈடுபாட்டில் நிலைத்திருக்க வேண்டும். பாபா எப்போதுமே
சொல்கிறார் - உங்களிடம் ஞானமோ உள்ளது, ஆனால் யோகத்தின் கூர்மை
இல்லை. தூய்மை மற்றும் நினைவில் இருப்பதன் மூலம் தான் கூர்மை
வரும். நினைவு யாத்திரை மூலம் நீங்கள் பவித்திர மாகிறீர்கள்.
சக்தி கிடைக்கின்றது. ஞானமோ செல்வத்தின் விஷயம். எப்படி
ஸ்தூலமான படிப்பில் எம்.ஏ., பி.ஏ. முதலியன படிப்பதால்
அதற்கேற்ப பிறகு வருமானம் கிடைக்கிறது. இங்குள்ளது வேறு விஷயம்.
பாரதத்தின் புராதன யோகமோ புகழ் பெற்றது. இது நினைவு. பாபா
சர்வசக்திவான் என்பதால் குழந்தைகளுக்கு பாபாவிடமிருந்து சக்தி
கிடைக்கின்றது. குழந்தைகளுக்கு உள்ளுக்குள் இருக்க வேண்டும் -
நாம் ஆத்மாக்கள் பாபாவின் குழந்தை கள், ஆனால் பாபாவைப் போல்
நாம் பவித்திரமாக இல்லை. இப்போது பவித்திரமாக ஆக வேண்டும்.
இப்போது நோக்கம்-குறிக்கோள் உள்ளது. யோகத்தின் மூலம் தான்
நீங்கள் தூய்மையாகின்றீர்கள். . நல்ல ஈடுபாடுள்ள குழந்தைகள்
நாள் முழுவதும் இதே சிந்தனை செய்து கொண்டே இருப்பார்கள்.
யாரேனும் வந்தால் அவர் களுக்கு நாம் வழி சொல்ல வேண்டும்.
இரக்கம் வர வேண்டும். பாவம், பார்வையற்றவர்கள் என்று இரக்கம்
வர வேண்டும். பார்வையற்றவர்களை கைத்தடி பிடிக்க வைத்து அழைத்து
வருகின்றனர் இல்லையா? இவர்கள் அனைவரும் பார்வையற்றவர்கள்,
ஞானக்கண் இல்லாதவர்கள்.
இப்போது உங்களுக்கு ஞானத்தின் மூன்றாவது கண் கிடைத்துள்ளது.
ஆகவே அனைத்தையும் அறிந்து கொண்டு விட்டீர்கள். முழு
சிருஷ்டியின் முதல்-இடை-கடை பற்றி நாம் இப்போது அறிந்துள்ளோம்.
இவையனைத்தும் பக்தி மார்க்கத்தின் விஷயங்கள். உங்களுக்கு
முதலிலேயே தெரிந்திருந்தது, அதாவது, தீயதைக் கேட்காதீர்கள்........
இந்தச் சித்திரம் ஏன் உருவாக்கப்பட்டுள்ளது? உலகத்தில் யாருமே
இதன் அர்த்தத்தை அறிந்திருக்க வில்லை. எப்படி பாபா ஞானம்
நிறைந்த வராக இருக்கிறாரோ, அதுபோல் குழந்தைகள் நீங்களும் ஞானம்
நிறைந்தவர்களாக நம்பர்வார் புருஷார்த்தத்தின் அனுசாரம் ஆகிக்
கொண்டிருக்கிறீர்கள். ஒரு சிலருக்கோ அதிக நஷா ஏறுகின்றது. ஆஹா!
பாபாவின் குழந்தை ஆகி பிறகு பாபாவிடம் முழு ஆஸ்தி பெறவில்லை
என்றால் (இதுவரை) என்ன செய்தீர்கள்? தினம் இரவில் தனது கணக்கைப்
பார்க்க வேண்டும். பாபா வியாபாரி அல்லவா? வியாபாரிகளுக்கு
தினமும் கணக்கு பார்ப்பது சகஜமாக உள்ளது. அரசாங்க அலுவலருக்கு
கணக்கைப் பார்க்க வராது. அவர்கள் வியாபாரியாக இருப்பதும் இல்லை.
வியாபாரி கள் நன்றாகப் புரிந்து கொள்வார்கள். நீங்கள்
வியாபாரிகள். நீங்கள் தங்களின் இலாப-நஷ்டம் பற்றிப் புரிந்து
கொண்டிருக்கிறீர்கள். தினந்தோறும் கணக்கைப் பாருங்கள்.
விருப்பத்தை நிறை வேற்றுவதில் விழிப்போடிருங்கள். நஷ்டமா,
இலாபமா? வியாபாரி அல்லவா நீங்கள்? பாடல் உள்ளது இல்லையா - பாபா
வியாபாரி, இரத்தின வியாபாரி! அழிவில்லா ஞான இரத்தினங்களின்
வியாபாரம் தருகிறார். இதையும் நீங்கள் அறிவீர்கள் - நம்பர்வார்
புருஷார்த்தத்தின் அனுசாரம். அனைவருமே கூர்மையான
புத்தியுள்ளவர்களல்ல. ஒரு காதினால் கேட்கின்றனர், பிறகு
மற்றொன்றின் மூலம் வெளியேற்றி விடுகின்றனர். பையில் உள்ள
துவாரத்தின் வழியாக வெளி வந்து விடுகின்றது. பை நிரம்பு வதில்லை.
பாபா சொல்கிறார், செல்வத்தைக் கொடுப்பதால் செல்வம் குறைவதில்லை.
இது அழியாத ஞான இரத்தினங்கள் இல்லையா? பாபா ரூப்-பஸந்தாக
உள்ளார். ஆத்மாவுக்குள் ஞானம் நிரப்பப்படுகின்றது. அதற்கு ரூபம்
உள்ளது. ஆத்மா சிறியதாக இருக் கலாம். ரூபமோ உள்ளது தானே? அது
அறிந்து கொள்ளப்படுகின்றது. சோமநாதருக்கு பக்தி செய்கின்றனர்
என்றால் இவ்வளவு சிறிய நட்சத்திரத்திற்கு என்ன பூஜை செய்வார்கள்?
பூஜைக்காக எவ்வளவு லிங்கங்களை உருவாக்குகின்றனர்!
சிவலிங்கத்தைக் கூரையை தொடும் அளவுக்குப் பெரிது-பெரிதாகவும்
தயாரிக்கின்றனர். சிறியதாகத் தான் உள்ளது என்றாலும் பதவியோ
உயர்ந்தது இல்லையா?
பாபா கல்பத்திற்கு முன்பும் கூட சொல்லியிருந்தார், இந்த ஜபம்,
தபம் முதலியவற்றால் எந்த ஒரு பிராப்தியும் கிடைப்பதில்லை. இவை
அனைத்தையும் செய்தாலும் கீழே இறங்கியே செல்கின்றனர். பிறவிகளின்
ஏணிப்படியில் கீழே தான் இறங்குகின்றனர். உங்களுக்கோ இப்போது
உயரும் கலை. பிராமணர்களாகிய நீங்கள் முதல் நம்பர் ஜின் பூதமாக
இருக்கிறீர்கள். கதை உள்ளது இல்லையா - ஜின் பூதம் சொன்னது,
எனக்கு வேலை கொடு, இல்லை யென்றால் உன்னை விழுங்கிவிடுவேன் என்று.
அதற்கு வேலை கொடுக்கப்பட்டது - ஏணிப்படியில் ஏறி, இறங்கிக்
கொண்டே இரு என்று. ஆக அதற்கு வேலை கிடைத்துவிட்டது. பாபாவும்
சொல்லியிருக்கிறார், இந்த எல்லை யற்ற ஏணிப்படியில் நீங்கள்
கீழிறங்குகிறீர்கள், பிறகு ஏறுகிறீர்கள். நீங்கள் தான் முழு
ஏணிப்படியிலும் இறங்குகிறீர்கள், பிறகு ஏறுகிறீர்கள். ஜின்
நீங்கள் தான். மற்ற யாருமே முழு ஏணிப்படியில் ஏறுவதில்லை. முழு
ஏணிப்படியின் ஞானம் கிடைப்பதால் நீங்கள் எவ்வளவு உயர்ந்த பதவி
பெறுகிறீர்கள்! பிறகு கீழிறங்குகிறீர்கள். ஏறுகிறீர்கள். பாபா
சொல்கிறார் - நான் உங்களுடைய தந்தை. நீங்கள் என்னைப்
பதீத-பாவனர் எனச் சொல்கிறீர்கள் இல்லையா? நான் சர்வசக்திவான்,
ஆல்மைட்டி. ஏனென்றால் நான் ஆத்மா எப்போதுமே 100 சதவிகிதம்
பவித்திரமாக இருக்கிறேன். நான் பிந்தி ரூப அத்தாரிட்டி. அனைத்து
சாஸ்திரங்களின் இரகசியத்தை அறிவேன். இது எவ்வளவு பெரிய அதிசயம்!
இது அனைத்தும் அற்புதமான ஞானம். இது போல் கேட்டிருக்க முடியாது,
அதாவது ஆத்மாவுக்குள் 84 பிறவிகளின் அழியாத பாகம் அடங்கியுள்ளது.
அது ஒருபோதும் தேய்வதில்லை. நடந்துக் கொண்டே இருக்கிறது. 84
பிறவிகளின் சக்கரம் சுற்றிக் கொண்டே இருக் கிறது. இவ்வளவு
சிறிய ஆத்மாவுக்குள் எவ்வளவு ஞானம் உள்ளது. பாபாவிடமும் உள்ளது
என்றால் குழந்தைகள் உங்களிடமும் உள்ளது. எத்தனை பார்ட் (பாகம்)
நடிக்கிறீர்கள்! இந்தப் பார்ட் ஒருபோதும் அழியாது. ஆத்மாவை
இந்தக் கண்களால் பார்க்க இயலாது. அது பிந்தியாக உள்ளது.
பாபாவும் சொல்கிறார், நான் அது போல் பிந்தியாக இருக்கிறேன்.
இதையும் குழந்தைகள் நீங்கள் இப்போது புரிந்து
கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எல்லையற்ற தியாகி மற்றும்
இராஜரிஷி. எவ்வளவு நஷா ஏற வேண்டும்! இராஜரிஷி முற்றிலும்
பவித்திரமாக இருப்பார்கள். இராஜரிஷி எனப்படுபவர்கள் சூரியவம்சி,
சந்திரவம்சி-அவர்கள் இங்கே இராஜ்யத்தை அடைகிறார்கள். எப்படி
நீங்கள் இப்போது அடைந்து கொண்டிருக்கிறீர்களோ, அதுபோல். இதையோ
குழந்தைகள் அறிவார் கள், அதாவது நாம் இப்போது சென்றுக் கொண்டே
இருக்கிறோம். படகோட்டியின் கப்பலில் அமர்ந்துள்ளோம். மேலும்
இதையும் அறிந்துள்ளோம். இதையும் அறிவீர்கள், இது புருஷோத்தம
சங்கமயுகம். நிச்சயமாகச் செல்லவும் வேண்டும். பழைய உலகிலிருந்து
புது உலகத்திற்கு, சாந்திதாம் வழியாக. இது சதா குழந்தைகளின்
புத்தியில் இருக்க வேண்டும். நாம் சத்யுகத்தில் இருந்தபோது வேறு
எந்த ஒரு கண்டமும் கிடையாது. நம்முடைய இராஜ்யம் மட்டுமே
இருந்தது. இப்போது மீண்டும் யோகபலத்தினால் தங்களின் இராஜ்யத்தை
அடைந்து கொண்டிருக்கிறீர்கள். ஏனென்றால் யோக பலத்தின் மூலம்
தான் உலக இராஜ பதவியை அடைய முடியும் எனப் புரிய
வைக்கப்பட்டுள்ளது. புஜ பலத்தினால் யாருமே அடைய முடியாது. இது
எல்லையற்ற டிராமா. விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த
விளையாட்டைப் பற்றிய புரிதலை பாபா தான் தருகிறார்.
ஆரம்பத்திலிருந்து முழு உலகத்தின் சரித்திர- பூகோளத்தைச்
சொல்கிறார். நீங்கள் சூட்சுமவதனம், மூலவதனத்தின் இரகசியத்தையும்
நல்லபடியாக அறிவீர்கள். ஸ்தூலவதனத்தில் இவர்களின் இராஜ்யம்
இருந்தது. நீங்கள் எப்படி ஏணிப்படியில் இறங்கி வருகிறீர்கள்
என்பதும் நினைவு வந்துவிட்டது. ஏணிப் படியில் ஏறுவது மற்றும்
இறங்குவது என்ற விளையாட்டு குழந்தைகளின் புத்தியில்
பதிந்துள்ளது. எப்படி இந்த உலகத்தின் சரித்திர-பூகோளம் திரும்ப
திரும்ப நடக்கிறது, இதில் நமது ஹீரோ-ஹீரோயின் பார்ட் இப்போது
புத்தியில் உள்ளது. நாம் தான் தோல்வி யடைகிறோம், பிறகு நாம்
தான் வெற்றி பெறுகிறோம். அதனால் ஹீரோ-ஹீரோயின் எனப் பெயர்
வைக்கப்பட்டுள்ளது. நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக்
கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய
பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) இப்போது நாம் வனவாசத்தில் உள்ளோம் - அதனால் மிக மிக
சாதாரணமாக இருக்க வேண்டும். தேகத்தின் அல்லது ஆடைகளின் மீது
எந்த ஓர் அபிமானமும் வைக்கக் கூடாது. எந்த ஒரு கர்மம் செய்து
கொண்டிருந்தாலும் பாபாவின் நினைவினுடைய நஷா அதிகரித்துக் கொண்டே
இருக்க வேண்டும்.
2) நாம் எல்லையற்ற தியாகி மற்றும் இராஜரிஷி. - இதே நஷாவில்
இருந்து தூய்மையாக வேண்டும்.ஞான செல்வங்களால் நிரம்பப் பெற்று
தானம் செய்ய வேண்டும். உண்மையிலும் உண்மையான வியாபாரி ஆகி தனது
கணக்கை வைத்திருக்க வேண்டும்.
வரதானம்:
தன்னை சேவாதாரி எனப் புரிந்துக் கொண்டு தலைவணங்கி மற்றும்
மற்றவர்களையும் தலைவணங்க வைக்கக் கூடிய நிமித்தமானவர் மற்றும்
பணிவானவர் ஆகுக.
யாரை நிமித்தம் என்று சொல்லாம் என்றால் - யார் தனது ஒவ்வொரு
எண்ணத்தையும் ஒவ்வொரு செயலையும் பாபாவிற்கு முன்னால் அர்ப்பணம்
செய்கிறார்களோ, அவர்களை தான் நிமித்தம் என்று சொல்லாம்.
நிமித்தம் ஆவது என்றால், அர்ப்பணம் ஆவது, பணிவானவர் யாரென்றால்,
யார் தலைவணங்குகிறார்களோ, எந்தளவு சம்ஸ்காரத்தில், எண்ணத்தில்
தலைவணங்குகிறார்களோ, அந்தளவு உலகம் அவர்களுக்கு முன்னால்
தலைவணங்கும். தலைவணங்குவது மற்றும் தலை வணங்க வைப்பது.
மற்றவர்களும் கூட நம் முன்னால் கொஞ்சம் தலை வணங்கட்டும் என்பது
எண்ணத்திலும் வரக்கூடாது. யார் உண்மையான சேவாதாரி என்றால் -
அவர்கள் சதா தலை வணங்குவார்கள். ஒருபொழுதும் ஆணவத்தை காட்ட
மாட்டார்கள்.
சுலோகன்:
இப்பொழுது பிரச்சனை சொரூபம் ஆகாமல், சமாதான சொரூபம் ஆகுங்கள்.
அவ்யக்த இஷாரா - மகான் ஆவதற்காக இனிமை மற்றும் பணிவு என்ற
குணங்களை தாரணை செய்யுங்கள்
மகான் ஆத்மாக்களாகிய உங்களின் ஒவ்வொரு மனதின் எண்ணம், ஒவ்வொரு
ஆத்மாவை பற்றியும் இனிமையானதாக, மகான் தன்மையுடையதாக
இருக்கட்டும். பாபாவின் சுபாவம் எப்பொழுதும் ஒவ்வொரு ஆத்மாவை
பற்றியும் நன்மையுடையதாக, கருணை நிறைந்ததாக இருக்கிறதோ,
ஒவ்வொருவரை பற்றியும் உயர்த்துவதற்காக, இனிமை மற்றும்
முன்னேற்றுவதாக இருக்கிறது. அதுபோல தனது சுபாவத்தை மாற்றுங்கள்.
ஒருவேளை சப்தமாக பேசுவது, ஆவேசத் தில் வரக்கூடிய சுபாவம்
இருந்தால், இதுவும் கூட பிராமண வாழ்க்கையின் மிகப்பெரிய தடையாக
இருக்கும். இப்பொழுது அப்படிப்பட்ட சுபாவத்தை மாற்றுங்கள்.