04-07-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! பந்தனங்களில் இருந்து விடுபட்டவராகி சேவையில் ஈடுபட்டிருங்கள். ஏனென்றால் இந்த சேவையில் அதிக வருமானம் உள்ளது. 21 பிறவிகளுக்கு நீங்கள் சொர்க்கத்தின் எஜமானன் ஆகிறீர்கள்.

கேள்வி:
ஒவ்வொரு குழந்தையும் எந்த ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்?

பதில்:
முரளியில் வரும் கருத்துக்களைப் பற்றி புரிய வைப்பதற்கான பழக்கம். பிராமணி (டீச்சர்) எங்காவது சென்று விடுகிறார் என்றால் தங்களுக்குள் கலந்து பேசி முரளி வகுப்பை நடத்த வேண்டும். முரளி நடத்துவதற்குக் கற்றுக் கொள்ளவில்லை என்றால் மற்றவர்களை தனக்குச் சமமாக எப்படி உருவாக்குவார்கள்? பிராமணி இல்லை என்றால் குழப்பமடையக் கூடாது. படிப்போ சுலபமானது. வகுப்பு நடத்திக் கொண்டு இருங்கள். இந்தப் பயிற்சியையும் செய்ய வேண்டும்.

பாடல்:
முகத்தைப் பார்த்துக் கொள் பிராணி.......

ஓம் சாந்தி.
குழந்தைகள் இதைக்கேட்கும் போது தன்னை ஆத்மா என நிச்சயம் செய்து கொண்டு அமர்ந்திருக்க வேண்டும். அதாவது தந்தையாகிய பரமாத்மா நமக்காகச் சொல்லிக் கொண்டி ருக்கிறார் என்பதை. நிச்சயம் செய்து கொள்ள வேண்டும். இந்த வழிகாட்டுதல் அல்லது வழி முறை ஒரே ஒரு தந்தை தான் கொடுக்கிறார். அது தான் ஸ்ரீமத் என்று சொல்லப்படுகின்றது. ஸ்ரீ என்றால் சிரேஷ்டத்திலும் சிரேஷ்டமானது. அவர் எல்லையற்ற தந்தை. அவர் உயர்ந்தவரிலும் உயர்ந்த பகவான் என்று சொல்லப் படுகிறார். அநேக மனிதர்கள் அந்த அன்போடு பரமாத்மாவைத் தந்தை என்று உணர்வதும் இல்லை. சிவனுக்கு பக்தி செய்கிறார்கள், மிகுந்த அன்போடு நினைவு செய்கின்றனர் என்ற போதிலும் மனிதர்கள், அனைவருக்குள்ளும் பரமாத்மா இருப்பதாகச் சொல்லி விட்டனர். ஆக, அந்த அன்பை யாரிடம் வைப்பது? அதனால் தந்தையிடம் விபரீத மாறுபட்ட புத்தி உள்ளவர்களாக ஆகி விட்டுள்ளனர். பக்தியில் எப்போது ஏதேனும் துக்கத்தின் நோய் வரு கின்றதோ, அப்போது அன்பைக் காட்டுகின்றனர். பகவானே, காப்பாற்றுங்கள் என அழைக்கின்றனர். குழந்தை கள் அறிவார்கள், கீதை என்பது ஸ்ரீமத் பகவானின் வாயின் மூலம் பாடப் பட்டது என்று. பகவானே இராஜ யோகம் கற்பித்தார் அல்லது ஸ்ரீமத் கொடுத்தார் என்பதாக வேறு எந்த ஒரு சாஸ்திரத்திலும் கிடையாது. ஒரே ஒரு பாரதத்தின் கீதைக்குத் தான் பிரபாவமும் அதிகம் உள்ளது. ஒரே ஒரு கீதை தான் பகவானால் கூறபட்டதாகும். பகவான் என்று சொன்னாலே ஒரு நிராகாரின் பக்கம் தான் பார்வை செல்கிறது. கைவிரலால் மேலே சமிக்ஞை காட்டுவார்கள். கிருஷ்ணரைப் பற்றி அதுபோல் ஒருபோதும் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் அவரோ தேகதாரி இல்லையா? உங்களுக்கு இப்போது அவரோடு உள்ள சம்மந்தம் பற்றித் தெரிந்து விட்டது. அதனால் சொல்லப் படுகிறது, தந்தையை நினைவு செய்யுங்கள், அவரிடம் அன்பு வையுங்கள் என்று. ஆத்மா தன்னுடைய தந்தையை நினைவு செய்கின்றது. இப்போது அந்த பகவான் குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித் தந்து கொண்டிருக்கிறார். ஆக, அந்த நஷா மிகவும் அதிகரிக்க வேண்டும். மேலும் நஷாவும் நிலையாக அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும். பிராமணி முன்னால் இருந்தால் மட்டும் நஷா அதிகரிக்கிறது, பிராமணி இல்லையென்றால் நஷா காணாமல் போகிறது என்று இருக்கக் கூடாது. பிராமணி இல்லாமல் எங்களால் வகுப்பு நடத்த முடியாது என்றெல்லாம் இருக்கக் கூடாது. சில சென்டர்கள் பற்றி பாபா புரிய வைக்கிறார் - அங்கிருந்து 5-6 மாதங்கள் கூட பிராமணி வெளியே சென்று விட்டாலும் தங்களுக்குள் சென்டரைப் பராமரித்துக் கொள்கின்றனர். ஏனென்றால் படிப்போ சுலபமானது. அநேகரோ, பிராமணி இல்லையென்றால் பார்வையற்ற வர்களாக, ஊமைகளாக ஆகி விடுகின்றனர். பிராமணி வெளியே போய்விட்டால் சென்டருக்கு வருவதையே விட்டு விடு கின்றனர். அட, அநேகர் அமர்ந்துள்ளனர், வகுப்பு நடத்த முடியாதா என்ன? குரு வெளியில் சென்று விட்டால் சீடர்கள் கடைசியில் பராமரிக்கிறார்கள் இல்லையா? குழந்தைகள் சேவை செய்ய வேண்டும். மாணவர்களில் நம்பர் பிரகாரமாய் இருக்கவே செய்கின்றனர். எங்கே முதல் தரமானவர்களை அனுப்புவது என்பது பாப்தாதாவுக்குத் தெரியும். குழந்தைகள் இத்தனை ஆண்டுகள் கற்றுக் கொண்டுள்ளனர் என்றால் கொஞ்சம் தாரணையோ ஆகி யிருக்கும், தங்களுக்குள் ஒன்று கூடி சென்டரை நடத்துவதற்கு முரளியோ கிடைக்கவே செய்கிறது. பாயின்ட்டு களின் ஆதாரத்தில் தான் புரிய வைக்கின்றனர். கேட்பதற்கான பழக்கம் ஏற்பட்டு விட்டதென்றால் ஆனால் மற்றவர்களுக்குச் சொல்வதற்கான பழக்கம் ஏற்படுவதில்லை. நினைவில் இருந்தால் பிறகு தாரணையும் இருக்கும். பிராமணி சென்று விட்டால் நல்லது, நான் சென்டரைப் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்வதற்கு சென்டரில் யாராவது இருக்க வேண்டும். பாபா, பிராமணியை எங்கோ நல்ல சென்டருக்கு சேவைக்காக அனுப்பியிருக்கிறார். பிராமணி இல்லையென்று குழப்பமடையக் கூடாது. பிராமணி போல் ஆகவில்லை என்றால் மற்றவர்களைத் தனக்குச் சமமாக எப்படி ஆக்குவார்கள்? பிரஜைகளை எப்படி உருவாக்குவார்கள்? முரளியோ அனை வருக்கும் கிடைக்கிறது. நாம் கதியில் (பீடம்) அமர்ந்து புரிய வைக்க வேண்டும் என்ற குஷி குழந்தைகளுக்கு இருக்க வேண்டும். பயிற்சி செய்வதால் சேவாதாரி ஆக முடியும். பாபா கேட்கிறார், சேவை செய்பவராக ஆகி விட்டீர்களா? ஆக, யாருமே வெளிப்படுவதில்லை. சேவைக்காக விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். எங்கிருந்து சேவைக்காக அழைப்பு வந்தாலும் விடுப்பு எடுத்துக் கொண்டு அங்கே சென்றுவிட வேண்டும். பந்தனத்திலிருந்து விடுபட்ட குழந்தைகள் அதுபோல் சேவை செய்ய முடியும். அந்த அரசாங்கத்தைக் காட்டிலும் இந்த அரசாங்கத்தின் வருமானம் மிக உயர்ந்ததாகும். பகவான் கற்பிக்கிறார், இதன் மூலம் 21 பிறவி களுக்கு சொர்க்கத்தின் எஜமானர் ஆகிறீர்கள். எவ்வளவு பெரிய வருமானம்! அந்த (வெளியுலக) வருமானத்தினால் என்ன கிடைக்கும்? அற்ப காலத்தின் சுகம் தான் கிடைக்கும். இங்கோ உலகத்தின் எஜமானர் ஆகின்றீர்கள். யாருக்கு உறுதியான நிச்சயம் உள்ளதோ, அவர்களோ சொல்வார்கள், நாங்கள் இதே சேவையில் ஈடுபட்டிருப்போம் என்று. ஆனால் முழுமையான நஷா இருக்க வேண்டும். நாம் யாருக்காவது புரிய வைக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். புரிய வைப்பது மிகவும் சுலபம். கலியுகக் கடைசியில் இவ்வளவு கோடி மனிதர்கள் உள்ளனர். சத்யுகத்தில் நிச்சயமாகக் கொஞ்சம் பேர் தான் இருப்பார்கள். அதன் ஸ்தாபனைக்காக நிச்சயமாக பாபா சங்கமயுகத்தில் தான் வருவார். பழைய உலகத்தின் விநாசம் நடைபெறப் போகிறது. மகாபாரத யுத்தமும் புகழ் பெற்றது. எப்போது பகவான் வந்து சத்யுகத்திற்காக ராஜயோகம் கற்பித்து ராஜாக்களுக்கெல்லாம் மேலான ராஜா ஆக்குகிறாரோ, அப்போது தான் இந்த யுத்தம் நடைபெறும். கர்மாதீத் அவஸ்தாவை அடையச் செய்கிறார். பாபா சொல்கிறார், தேகத்துடன் கூட தேகத்தின் அனைத்து சம்மந்தங்களையும் விட்டு என்னை மட்டும் நினைவு செய்வீர்களானால் பாவங்கள் நீங்கி விடும். தன்னை ஆத்மா என உணர்ந்து பாபாவை நினைவு செய்ய வேண்டும் - இதில் தான் முயற்சி உள்ளது. யோகத்தின் அர்த்தத்தை ஒரு மனிதர் கூடப் புரிந்து கொள்ள வில்லை.

பாபா புரிய வைக்கிறார், பக்தி மார்க்கத்தினுடையது கூட டிராமாவில் விதிக்கப்பட்டுள்ளது. பக்தி மார்க்கம் நடைபெற்றுத் தான் ஆக வேண்டும். விளையாட்டு உருவாக்கப்பட்டதாகும் - ஞானம், பக்தி, வைராக்கியம். வைராக்கியமும் இரண்டு விதமாக உள்ளது. ஒன்று எல்லைக்குட்பட்ட வைராக்கியம். இன்னொன்று எல்லையற்ற வைராக்கியம். இப்போது குழந்தைகள் நீங்கள் பழைய உலகம் முழுவதையும் மறப்பதற்கான முயற்சி செய்கிறீர்கள். ஏனென்றால் நீங்கள் அறிவீர்கள், நாம் இப்போது சிவாலயம், தூய்மையான உலகத்திற்குச் சென்று கொண்டி ருக்கிறோம். நீங்கள் அனைவரும் பிரம்மாகுமார்-குமாரிகள் சகோதர-சகோதரிகள். விகாரி திருஷ்டி இருக்க முடியாது. தற்சமயத்திலோ அனைவருடைய திருஷ்டியும் குற்றமானதாக ஆகி விட்டுள்ளது. தமோபிரதானம் இல்லையா? இதன் பெயரே நரகம். ஆனால் தன்னை நரகவாசி எனப் புரிந்து கொள்வதே இல்லை. தன்னைப் பற்றி அறிந்து கொள்ளவில்லை என்றால் சொர்க்கம்-நரகம் இங்கேயே உள்ளது எனச் சொல்லி விடுகின்றனர். யாருடைய மனதில் என்ன தோன்றுகிறதோ, அதைச் சொல்லி விட்டனர். இது ஒன்றும் சொர்க்கமல்ல. சொர்க்கத் திலோ இராஜ்யம் இருந்தது. தர்மம் சார்ந்த நேர்மை யானவர்களாக இருந்தனர். எவ்வளவு பலம் இருந்தது! இப்போது மீண்டும் நீங்கள் புருஷார்த்தம் செய்து கொண்டிருக்கிறீர்கள். உலகத்தின் எஜமானர் ஆகி விடுவீர்கள். இங்கே நீங்கள் வருவதே உலகத்தின் எஜமானர் ஆவதற்காக. சொர்க்கத்தின் இறைவனாகிய தந்தை (ஹெவன்லி காட் ஃபாதர்) சிவபரமாத்மா என அழைக்கப்படுபவர், உங்களுக்குப் படிப்பு சொல்லித் தருகிறார். குழந்தை களிடம் எவ்வளவு நஷா இருக்க வேண்டும்! முற்றிலும் சுலபமான ஞானம். குழந்தைகளாகிய உங்களிடம் என்னென்ன பழைய பழக்கங்கள் உள்ளனவோ, அவற்றை விட்டுவிட வேண்டும். பொறாமையின் பழக்கமும் கூட அதிகமாக நஷ்டத்தை ஏற்படுத்தும். உங்களுடைய ஆதாரம் அனைத்தும் முரளியில் உள்ளது. நீங்கள் யாருக்கு வேண்டு மானாலும் முரளி பற்றிச் சொல்ல முடியும். ஆனால் உள்ளுக்குள் பொறாமை உள்ளது-இவர் ஒன்றும் பிராமணி கிடையாது, இவருக்கு என்ன தெரியும்? அவ்வளவு தான், அடுத்த நாள் வரவே மாட்டார்கள். இந்த மாதிரி பழக்கங்கள் பழையதாக ஆகி விட்டனர். இதன் காரணமாக சேவைக்கும் குந்தகமாக ஆகி விடுகின்றது. ஞானமோ மிகவும் சுலபமானது. குமாரிகளுக்கோ எந்த ஒரு வேலை, எதுவும் கிடையாது. அவர்களிடம் கேட்கப்படுகின்றது, அந்தப் படிப்பு நன்றாக உள்ளதா, இந்தப் படிப்பு நன்றாக உள்ளதா? அப்போது சொல்கின்றனர், இந்தப் படிப்பு மிக நன்றாக உள்ளது. பாபா, இப்போது நாங்கள் அந்தப் படிப்பைப் படிக்க மாட்டோம். மனம் ஈடுபடுவதில்லை. லௌகிகத் தந்தை ஞானத்தில் இல்லை என்றால் அடி வாங்குவார்கள். பிறகு பெண்குழந்தைகள் சிலர் பலவீன மாகவும் ஆகி விடுகின்றனர். புரிய வைக்க வேண்டும் இல்லையா - இந்தப் படிப்பினால் நாம் மகாராணி ஆவோம். அந்தப் படிப்பினால் என்ன, ஒன்றுக்கும் உதவாத வேலை செய்வார்கள். இந்தப் படிப்போ வரும் 21 பிறவிகளுக்கு சொர்க்கத்தின் எஜமானர் ஆக்குகின்றது. இப்போது அனை வரும் நரகவாசிகள்.

இப்போது பாபா சொல்கிறார், நீங்கள் சர்வகுண சம்பன்னமாக இருந்தீர்கள். இப்போது நீங்களே எவ்வளவு தமோபிரதானமாக ஆகி விட்டிருக்கிறீர்கள்! ஏணிப்படியில் இறங்கியே வந்திருக்கிறீர்கள். தங்கக் குருவி என அழைக்கப்பட்ட பாரதம் இப்போதோ கல்லினுடையதாகக் கூட இல்லை. பாரதம் 100 சதவிகிதம் செல்வம் நிறைந்த தேசமாக இருந்தது. நீங்கள் அறிவீர்கள், நாம் உலகத்தின் எஜமானர் தங்கத்திற்கு சமமாக இருந்தோம். பிறகு 84 பிறவிகள் எடுத்து-எடுத்து இப்போது கல்லாக ஆகி விட்டோம். மனிதர்கள் தான், ஆனால் பாரஸ்நாத் (தங்கம் போன்றவர்) என்றும் பத்தர்நாத் (கல்போன்ற) என்றும் சொல்லப் படுகிறார்கள். பாடலும் கேட்டீர்கள் - தனக்குள் பாருங்கள், நாம் எது வரை தகுதியுள்ளவர்களாக ஆகியிருக்கிறோம்? நாரதரின் உதாரணம் உள்ளது இல்லையா? நாளுக்கு நாள் கீழே இறங்கியே சென்றுள்ளனர். இறங்கி-இறங்கியே ஒரேயடியாக சேற்றில் கழுத்து வரை சிக்கிக் கொண்டுள்ளனர். இப்போது பிராமணர்கள் நீங்கள் அனைவரையும் குடுமியைப் பிடித்து சேற்றிலிருந்து வெளியில் கொண்டு வருகிறீர்கள். வேறெங்கும் பிடிப்பதற்கான இடம் இல்லை. ஆக, குடுமியைப் பிடிப்பது சுலபம். சேற்றிலிருந்து வெளியில் கொண்டு வருவதற் காகக் குடுமியைப் பிடிக்க வேண்டி உள்ளது. சேற்றில் அப்படிச் சிக்கிக் கொண்டுள்ளனர், கேட்கவே வேண்டாம். பக்தியின் இராஜ்யம் இல்லையா? இப்போது நீங்கள் சொல்கிறீர்கள், பாபா, கல்பத்திற்கு முன்பும் ராஜ்ய பாக்கியத்தைப் பெறுவதற்காக கூட உங்களிடம் வந்திருக்கிறோம் -. லட்சுமி-நாராயணரின் கோவில்களைக் கட்டிக் கொண்டே இருக்கின்றனர் என்ற போதிலும் அவர்களுக்கு இது தெரியாது - இவர்கள் உலகத்தின் மாலிக்காக எப்படி ஆனார்கள்? என்று இப்போது நீங்கள் எவ்வளவு புத்திசாலிகளாக ஆகியிருக்கிறீர்கள்! நீங்கள் அறிவீர்கள், இவர்கள் ராஜ்ய பாக்கியத்தை எப்படி அடைந்தார்கள் என்று. பிறகு 84 பிறவிகளை எப்படி எடுத்தார்கள்? பிர்லா எத்தனைக் கோவில்கள் கட்டுகிறார்! பொம்மைகளை உருவாக்குவது போல உள்ளது. அவை சின்னச்சின்ன பொம்மைகள், இவர்கள் பிறகு பெரிய பொம்மைகளாக உருவாக்குகிறார்கள். உருவங்களைத் தயார் செய்து பூஜை செய்கின்றனர். அவர்களின் செயல்பாடுகள்-தொழில் என்ன என்று தெரியா தென்பதால் பொம்மைகளின் பூஜை ஆகிறது இல்லையா? இப்போது நீங்கள் அறிவீர்கள், பாபா நம்மை எவ்வளவு பெரிய செல்வந்தர்களாக ஆக்கியிருந்தார்! இப்போது எவ்வளவு ஏழையாக ஆகி விட்டோம். யார் பூஜைக்குரியவராக இருந்தார்களோ, அவர்களே இப்போது பூஜாரிகளாக ஆகி விட்டார்கள். பக்தர்கள் பகவான் பற்றிச் சொல்லி விடுகின்றனர், நீங்களே பூஜைக்குரியவர், நீங்களே பூஜாரி என்று. நீங்களே சுகம் தருகிறீர்கள், நீங்களே துக்கமும் தருகிறீர்கள். எல்லாம் நீங்களே செய்கிறீர்கள். அவ்வளவு தான், இதிலேயே போதையாகி விடுகின்றனர். ஆத்மா நிர்லேப் (அதில் பாவ புண்ணியம் ஒட்டாது) என்று வேறு சொல்லி விடுகின்றனர். எதை வேண்டுமானாலும் உண்ணுங்கள், அருந்துங்கள், மகிழ்ச்சியை கொண்டாடுங் கள், சரீரத்தில் தான் அனைத்தும் தாக்கத்தை ஏற்படுத்தும் அது கங்கா ஸ்நானத்தினால் சுத்தமாகி விடும். எதை விரும்புகிறீர்களோ, உண்ணுங்கள் எனச் சொல்லி விடுகின்றனர். என்னென்ன ஃபேஷன்கள் உள்ளன! யார் என்ன பழக்கத்தை ஏற்படுத்தினாரோ, அதே மற்றவர்களாலும் பின்பற்றப்படுகின்றது. இப்போது பாபா புரிய வைக்கிறார், விஷக்கடலில் இருந்து சிவாலயத்திற்குச் செல்லுங்கள். சத்யுகம் பாற்கடல் எனச் சொல்லப்படுகின்றது. இது விஷக்கடல். நீங்கள் அறிவீர்கள், நாம் 84 பிறவிகள் எடுத்துப் பதித் ஆகி விட்டுள்ளோம். அதனால் தான் பதித-பாவனர் பாபாவை அழைக்கின்றோம். சித்திரங்களால் புரிய வைக்கப்படும் போது மனிதர்கள் சுலபமாகப் புரிந்து கொள்வார்கள். ஏணிப்படியில் 84 பிறவிகளின் விருத்தாந்தம் (விளக்கம்) உள்ளது இவ்வளவு சுலபமான விஷயம் கூட யாராலும் புரிய வைக்க முடிவதில்லை. அப்போது பாபா புரிந்து கொள்வார், இவர்கள் முழுமையாகப் படிப்பதில்லை முன்னேற்றத்தை அடைவதில்லை என்று.

பிராமணர்களாகிய உங்களுடைய கடமை, குளவியைப் போல் புழுக்களை பூம்-பூம் செய்து தங்களைப் போல் ஆக்குவது. மேலும் உங்களுடைய புருஷார்த்தம் பாம்பைப் போல் பழைய தோலை (சரீரம்) விட்டுப் புதியதைப் பெற்றுக் கொள்வதாகும். நீங்கள் அறிவீர்கள், இது பழைய இற்றுப் போன சரீரம். இதை விட்டுவிட வேண்டும். இந்த உலகமும் பழையது. சரீரமும் பழையது. இதை விட்டுவிட்டு இப்போது புது உலகத்திற்குச் செல்ல வேண்டும். உங்களுடைய இந்தப் படிப்பே புது உலகமாகிய சொர்க்கத்திற்கானது. இந்தப் பழைய உலகம் அழிந்துவிடப் போகின்றது. கடலின் ஓர் அலையிலேயே எல்லாம் தலைகீழாக மாறிவிடும். விநாசமோ நடந்தேயாக வேண்டும் இல்லையா? இயற்கைச் சேதங்கள் யாரையும் விடப் போவதில்லை. நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) உள்ளுக்குள் இருக்கும் பொறாமை முதலான பழைய பழக்கங்களை விட்டு தங்களுக்குள் மிகவும் அன்போடு ஒன்றாகி இருக்க வேண்டும். பொறாமையின் காரணத்தால் படிப்பை விட்டுவிடக் கூடாது.

2) இந்தப் பழைய இற்றுப்போன சரீரத்தின் உணர்வை விட்டுவிட வேண்டும். குளவியைப் போல் ஞான பூம்-பூம் செய்து புழுக்களைத் தனக்குச் சமமாக ஆக்குகிற சேவை செய்ய வேண்டும். இந்த ஆன்மிகத் தொழிலில் ஈடுபட்டு இருக்க வேண்டும்.

வரதானம்:
மன பந்தனங்களிலிருந்து விடுபட்டு, அதீந்திரிய சுகத்தின் அனுபவம் செய்யக் கூடிய முக்தியின் வள்ளல் ஆகுக.

அதீந்திரிய சுகத்தில் ஆடுவது என்பது சங்கமயுக பிராமணர்களின் விசேஷதா ஆகும். ஆனால் மனதில் எண்ணங்களின் பந்தனம் அதீந்திரிய குஷி அல்லது அதீந்திரிய சுகத்தின் அனுபவம் செய்ய விடுவது கிடையாது. வீண் எண்ணங்கள், பொறாமை, சோம்பல் அல்லது அலட்சிய சங்கல்பத்தின் பந்தனத்தில் மாட்டிக் கொள்வது தான் மன பந்தனமாகும். இப்படிப்பட்ட ஆத்மா அபிமானத்திற்கு வசமாகி மற்றவர்களை குறை கூறுவதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருப்பர். அவர்களது உணர்ந்து கொள்ளும் சக்தி அழிந்து விடும். ஆகையால் இந்த சூட்சும பந்தனத்தி-ருந்து முக்தியாகுங்கள் அப்போது தான் முக்தியின் வள்ளலாக ஆக முடியும்.

சுலோகன்:
உங்களிடம் துக்கத்தின் அலைகள் வர முடியாத அளவிற்கு குஷியின் பொக்கிஷத்தில் நிறைந்தவர்களாக இருங்கள்.

அவ்யக்த சமிக்ஞை: எண்ணங்களின் சக்தியை சேமிப்பு செய்து சிறந்த சேவைக்கு கருவி ஆகுங்கள்.

எந்த ஒரு சிரேஷ்ட சங்கல்பத்தையும் பலனுடையதாக ஆக்குவதற்கு எளிய சாதனம் ஒன்றே ஒன்று தான், அது சதா விதை ரூபமான தந்தையிடமிருந்து ஒவ்வொரு நேரத்திலும் சர்வ சக்திகளின் பலத்தை அந்த விதையில் நிறைத்துக் கொண்டே இருக்க வேண்டும். விதை ரூபத்தின் மூலம் உங்களது சங்கல்பம் என்ற விதை எளிதாக மற்றும் தானாகவே விருக்தி அடைந்து கொண் பலனுடையதாக ஆகிவிடும். சங்கல்ப சக்தி சேமிப்பாகி விடும்.