04-08-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! உங்களை மலர்களின்
அரசனாக ஆக்குவதற்கு பாபா வந்திருக்கின்றார், ஆகையால்
விகாரங்களின் எந்த துர்நாற்றமும் இருக்கக் கூடாது.
கேள்வி:
விகாரங்களின் அம்சத்தையும் கூட
சமாப்தி செய்வதற்கு என்ன முயற்சி செய்ய வேண்டும்?
பதில்:
நிரந்தரமாக உள்நோக்கு
முகமுடையவர்களாக இருப்பதற்கான முயற்சி செய்ய வேண்டும்.
உள்நோக்கு முகம் என்றால் விநாடியில் சரீரத்திலிருந்து
விடுபடுவதாகும். இந்த உலகின் விசயங் கள் முற்றிலுமாக மறந்து
விட வேண்டும். ஒரு விநாடியில் மேலே செல்ல வேண்டும் மற்றும் வர
வேண்டும். இந்த பயிற்சியின் மூலம் விகாரங்களின் அம்சம் முடிந்து
ஆகிவிடும். காரியங்கள் செய்தாலும் இடையிடையே உள்நோக்கு
முகமுடைய வராகி விடுங்கள், முற்றிலும் அமைதி நிலவ வேண்டும்.
எந்த ஓசையும் கூடாது. இந்த உலகமே இல்லாதது போல் ஆகிவிட வேண்டும்.
ஓம் சாந்தி.
அசரீரியாகி தந்தையின் நினைவில் அமருங்கள் என்று இங்கு
ஒவ்வொருவரும் அமர வைக்கப்படுகின்றனர். கூடவே இந்த சிருஷ்டிச்
சக்கரத்தையும் நினைவு செய்யுங்கள். மனிதர்கள் 84 பிறவிச்
சக்கரத்தைப் புரிந்துக் கொள்வது கிடையாது. புரிந்துக் கொள்ளவும்
மாட்டார்கள். யார் 84 பிறவிகள் எடுத்திருக் கிறார்களோ அவர்கள்
தான் புரிந்துக் கொள்வதற்கு வருவார்கள். நீங்கள் இதையே நினைவு
செய்ய வேண்டும், இது தான் சுயதரிசன சக்கரம் என்று கூறப்படுகிறது,
இதன் மூலம் அசுர சிந்தனைகள் அழிந்து விடும். யாரோ ஒரு அசுரன்
இருப்பதாகவும், அவரது தலை துண்டிக்கப்பட்டு விடும் என்பது
கிடையாது. மனிதர்கள் சுயதரிசன சக்கரத்தின் பொருளையும் புரிந்து
கொள்வது கிடையாது. இந்த ஞானம் குழந்தைகளாகிய உங்களுக்கு இங்கு
கிடைக்கிறது. இல்லறத்தில் இருந்தாலும் தாமரை மலர் போன்று
தூய்மையாக ஆகுங்கள். பகவானின் மகா வாக்கியம் அல்லவா! இந்த ஒரு
பிறப்பு தூய்மையாக ஆவதன் மூலம் எதிர்காலத்தில் 21 பிறவி களுக்கு
நீங்கள் தூய்மையான உலகிற்கு எஜமானர்களாக ஆவீர்கள். சத்யுகம்
சிவாலயம் என்று கூறப்படுகிறது. கலியுகம் வைஷ்யாலயமாகும். (விஷம்
நிறைந்தது) இந்த உலகம் மாறிக் கொண்டி ருக்கிறது. இது
பாரதத்திற்கான விசயம் ஆகும். மற்றவர்களின் விசயத்தில் செல்லவே
வேண்டாம். மிருகங்கள் என்ன ஆகும்? மற்ற தர்மங்கள் என்ன ஆகும்?
என்று கேட்கின்றனர். முத-ல் தன்னைப் பற்றி புரிந்து கொள்ளுங்கள்,
பிறகு மற்றவர்களைப் பற்றி சிந்திக்கலாம் என்று கூறுங்கள்.
பாரதவாசிகள் தான் தங்களது தர்மத்தை மறந்து துக்கமானவர்களாக
ஆகிவிட்டனர். நீங்கள் தான் தாய், தந்தை....... என்று பாரதத்தில்
தான் அழைக்கின்றனர். அயல்நாட்டில் தாய், தந்தை என்ற வார்த்தை
கூறுவது கிடையாது. அவர்கள் இறை தந்தை (காட் பாதர்) என்று
மட்டுமே கூறு கின்றனர். உண்மையில் பாரதத்தில் தான் சுகமான பூமி
இருந்தது, பாரதம் சொர்க்கமாக இருந்தது என்பதையும் நீங்கள்
அறிவீர்கள். தந்தை வந்து முட்களை மலர்களாக ஆக்குகின்றார்.
தந்தையை தோட்டக்காரன் என்றும் கூறுகிறோம். வந்து முட்களை
மலர்களாக ஆக்குங்கள் என்று அழைக் கிறோம். தந்தை மலர்கள்
நிறைந்த தோட்டத்தை உருவாக்கு கின்றார். மாயை முட்கள் நிறைந்த
காட்டை உருவாக்குகிறது. ஈஸ்வரனே! உனது மாயை மிகவும் பிரபலமானது
என்று மனிதர்கள் கூறிவிடுகின்றனர். ஈஸ்வரனையோ, மாயையோ புரிந்து
கொள்வது கிடையாது. யாராவது ஏதாவது ஒரு வார்த்தை கூறி விட்டால்
அவ்வளவு தான் திரும்பத் திரும்ப கூறிக் கொண்டே இருக் கின்றனர்.
அர்த்தம் எதுவும் கிடையாது. இராம இராஜ்யம் மற்றும் இராவண
இராஜ்யம் என்பது நாடகத்தின் விளையாட்டு என்பதை குழந்தைகளாகிய
நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். இராம இராஜ்யத்தில் சுகமும்,
இராவண இராஜ்யத்தில் துக்கமும் இருக்கிறது. இங்கு நடக்கக் கூடிய
விசயங்களாகும். இது பிரபுவின் மாயை கிடையாது. 5 விகாரங்கள் தான்
மாயை என்று கூறப்படு கிறது. இதையே இராவணன் என்று கூறுகிறோம்.
மற்றபடி மனிதர்கள் மறுபிறப்பு எடுத்து 84 பிறவிச் சக்கரத்தில்
வருகின்றனர். சதோ குணத்திலிருந்து தமோ பிரதானமாக ஆக வேண்டும்.
இந்த நேரத்தில் அனைவரும் விகாரத்தின் மூலம் பிறப்பெடுக்கின்றனர்,
அதனால் தான் விகாரி என்று கூறப்படு கின்றனர். பெயரே விஷ
உலகமாகும், பிறகு விகாரமற்ற உலகம் அதாவது பழைய உலகம் புது
உலகமாக எப்படி ஆகிறது? என்பது புரிந்து கொள்வதற்கு பொதுவான
விசயமாகும். புது உலகில் முதலில் சொர்க்கம் இருந்தது.
சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யக் கூடியவர் பரம்பிதா பரமாத்மா என்பதை
குழந்தைகள் அறிவீர்கள். அவர் மூலம் சுகமான பூமி உருவானது.
ஞானத்தின் மூலம் பகல், பக்தி மூலம் இரவு எப்படி ஏற்படுகிறது?
என்பதையும் யாரும் புரிந்து கொள்வது கிடையாது. பிரம்மா மற்றும்
பிரம்மா வாய்வழி பிராமணர்களின் பகல் என்று கூறுவர், பிறகு அதே
பிராமணர்களின் இரவாகும். பகல் மற்றும் இரவு இங்கு தான்
ஏற்படுகிறது என்பதை யாரும் புரிந்து கொள்வது கிடையாது.
பிரஜாபிதா பிரம்மாவின் பகல் எனில் அவசியம் அவரது பிரம்மா
வாய்வழி வம்சத்தின் இரவாகவும் இருக்கும். அரைக் கல்பம் பகல்,
அரைக் கல்பம் இரவாகும்.
விகாரமற்ற உலகம் உருவாக்குவதற்காக இப்பொழுது தந்தை
வந்திருக்கின்றார். தந்தை கூறு கின்றார் - குழந்தைகளே! காமம்
மிகப் பெரிய எதிரி. இதன் மீது வெற்றியடைய வேண்டும். சம்பூர்ண
நிர்விகாரி தூய்மை யானவர்களாக ஆக வேண்டும். தூய்மை இழந்து
விட்ட காரணத்தினால் நீங்கள் அதிக பாவங்கள் செய்தீர்கள். இது
பாவ ஆத்மாக்களின் உலகமாகும். பாவங்கள் அவசியம் சரீரத்தின் மூலம்
தான் செய்வீர்கள், அப்பொழுது தான் பாவ ஆத்மாக்களாக ஆவீர்கள்.
தேவதைகளின் தூய உலகில் பாவங்கள் ஏற்படாது. இங்கு நீங்கள்
ஸ்ரீமத் மூலம் சிரேஷ்ட புண்ணிய ஆத்மாக்களாக ஆகிக்
கொண்டிருக்கிறீர்கள். ஸ்ரீ ஸ்ரீ -க்கான 108 மணி மாலை இருக்கிறது.
மேலே மலர் (பூ) இருக்கிறது, அவரைத் தான் சிவன் என்று கூறுகிறோம்.
அவர் நிராகாரி மலர் ஆவார். பிறகு சாகாரத்தில் ஆண், பெண்ணாக
இருக்கின்றனர். அதற்கான மாலை உருவாக்கப்பட்டிருக்கிறது.
சிவபாபாவின் மூலம் இவர்கள் பூஜைக்குரிய மற்றும் புகழுக்கு
தகுதியானவர்களாக ஆகின்றனர். பாபா நம்மை வெற்றி மாலையின்
மணிகளாக ஆக்குகின்றார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள்.
நினைவு பலத்தின் மூலம் நாம் உலகை வென்று கொண்டிருக்கிறோம்.
நினைவின் மூலம் தான் விகர்மங்கள் விநாசம் ஆகும். பிறகு நீங்கள்
சதோ பிரதானமாக ஆகிவிடுவீர்கள். அவர்கள் புரிந்து கொள்ளாமல்,
பிரபுவே! உங்களது மாயை மிகவும் பிரபலமானது என்று
கூறிவிடுகின்றனர். யாரிடத்திலாவது அதிக செல்வம் இருந்தால்
இவரிடம் மாயை அதிகம் இருக்கிறது என்று கூறுவர். உண்மையில் மாயை
என்று 5 விகாரங்களுக்குக் கூறப்படுகிறது. இதுவே இராவணன் என்றும்
கூறப்படுகிறது. இதையே அவர்கள் 10 தலைகளையுடைய இராவணனின்
சித்திரமாக உருவாக்கி விட்டனர். சித்திரங்கள் உள்ளது என்பதால்
புரிய வைக்கப்படுகிறது. இவ்வாறே அங்கதனுக்கும் காண்பிக்கின்றனர்
- அவரை இராவணன் அசைத்துப் பார்த்தார். ஆனால் அசைக்க முடியவில்லை.
உதாரணமாக ஆக்கி விட்டனர். மற்றபடி எந்த பொருளும் கிடையாது. மாயை
உங்களை எவ்வளவு வேண்டு மென்றாலும் அசைக்கட்டும், ஆனால் நீங்கள்
ஸ்திரமாக இருங்கள் என்று தந்தை கூறுகின்றார். இராவணன், அனுமான்,
அங்கதன் போன்ற அனைத்தும் உதாரணமாக ஆக்கிவிட்டனர். இதன் பொருளை
குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். குளவிக்கான உதாரணமும்
இருக்கிறது. குளவி (பிரமரி) மற்றும் பிராமணி (நிமித்தமானவர்கள்)
ஒற்றுமை இருக்கிறது. விஷம் நிறைந்த புழுவை நீங்கள் ஞானம்,
யோகத்தின் மூலம் பூம் பூம் என்று கூறி பதீதத்திலிருந்து
பாவனமாக ஆக்கு கிறீர்கள். தந்தையை நினைவு செய்தால் சதோ
பிரதானமாக ஆகிவிடுவீர்கள். ஆமைக்கான உதாரணமும் இருக்கிறது.
இந்திரியங்களை கட்டுப்படுத்தி உள்நோக்கு முகமுடையவர்களாகி
அமர்ந்து விடுகிறது. உங்களுக்கும் தந்தை கூறுகின்றார் -
காரியங்கள் செய்யுங்கள், பிறகு உள்நோக்கு முகமுடைய வராகி
விடுங்கள். இந்த உலகமே இல்லாததாக ஆகிவிட வேண்டும். சப்தங்கள்
நின்று விட வேண்டும். பக்தி மார்க்கத்தில் வெளிநோக்கு
முகத்துடன் இருக்கின்றனர். பாட்டு பாடுவது, இது செய்வது,
எவ்வளவு குழப்பங்கள்! எவ்வளவு செலவுகள் ஏற்படுகின்றன! எவ்வளவு
திருவிழாக்கள் கொண்டாடுகின்றனர்! இவை அனைத்தையும் விட்டு விட்டு
உள்நோக்கு முகமுடையவர்களாக ஆகிவிடுங்கள் என்று தந்தை
கூறுகின்றார். இந்த உலகமே இல்லாதது போல் ஆகிவிடுங்கள். நான்
தகுதியானவனாக ஆகியிருக்கிறேனா? எந்த விகாரமும் தொந்தரவு
செய்யவில்லை தானே? நான் தந்தையை நினைவு செய்கிறேனா? என்று
தன்னைப் பாருங்கள். எந்த தந்தை உலகிற்கு எஜமானராக ஆக்குகின்றாரோ
அப்படிப்பட்ட தந்தையை இரவு பகல் நினைவு செய்ய வேண்டும். நான்
ஆத்மா, நமக்கு அவர் தந்தையாக இருக்கின்றார். நாம் இப்பொழுது
புது உலகின் மலர்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்ற சிந்தனை
உள்ளுக்குள் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். எருக்கம் பூவாக
ஆகிவிடக்கூடாது. நாம் மலர்களின் ராஜாவாக, முற்றிலும்
நறுமணமுள்ளவர்களாக ஆக வேண்டும். எந்த துர்நாற்றமும் இருக்கக்
கூடாது. கெட்ட எண்ணங்கள் நீங்கி விட வேண்டும். மாயையின்
புயல்கள் வீழ்த்துவதற்கு அதிகம் வரும். கர்மேந்திரியங்களின்
மூலம் எந்த விகர்மும் செய்யக் கூடாது. இவ்வாறு தன்னை பக்குவப்
படுத்திக் கொள்ள வேண்டும். தன்னை விழிப்படையச் செய்து கொள்ள
வேண்டும். எந்த தேகதாரி களையும் நான் நினைவு செய்யக் கூடாது.
தந்தை கூறுகின்றார் - தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு என்னை
நினைவு செய்யுங்கள், சரீர நிர்வாகத்திற்காக காரியங்களும்
செய்யுங்கள். அதிலிருந்து நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள். உணவு
சாப்பிடும் பொழுதும் தந்தையின் மகிமை செய்து கொண்டே இருங்கள்.
பாபாவை நினைத்து சாப்பிடும் பொழுது உணவும் தூய்மையாக ஆகிவிடும்.
எப்பொழுது தந்தையை நிரந்தரமாக நினைவு செய்வீர்களோ அப்படிப்பட்ட
நினைவின் மூலம் தான் பல பிறவிகளின் பாவங்கள் அழிந்து போகும்
மற்றும் சதோ பிரதானமாக ஆவீர்கள். எந்த அளவிற்கு உண்மையான
தங்கமாக ஆகியிருக் கிறேன்? என்று பாருங்கள். இன்று எவ்வளவு மணி
நேரம் நினைவில் இருந்தேன்? நேற்று 3 மணி நேரம் நினைவில்
இருந்தேன், இன்று 2 மணி நேரம் இருந்தேன் - இது இன்று நஷ்டமாகி
விட்டது. ஏற்றம் மற்றும் இறக்கம் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.
யாத்திரைக்குச் செல்கின்றனர் எனில் சில இடங்களில் ஏற்றமும்,
சில இடங்களில் இறக்கமும் இருக்கும். உங்களது மனநிலையும் ஏற்ற,
இறக்கம் ஆகிக் கொண்டே இருக்கிறது. தனது கணக்கைப் பார்க்க
வேண்டும். முக்கியமானது நினைவு யாத்திரையாகும்.
பகவானின் மகாவாக்கியம், கண்டிப்பாக குழந்தைகளுக்குத் தான்
கற்பிப்பார். முழு உலகிற்கும் எப்படி கற்பிக்க முடியும்? பகவான்
என்று யாரைக் கூறுகிறோம்? கிருஷ்ணர் தேகதாரி ஆவார். பகவான்
என்று நிராகார பரம்பிதா பரமாத்மா கூறப்படுகின்றார். நான்
சாதாரண சரீரத்தில் பிரவேசிக்கின்றேன் என்று சுயம் கூறுகின்றார்.
பிரம்மாவிற்கும் வயோதிக சரீரம் என்று பாடப் பட்டிருக்கிறது.
வெள்ளை தாடி வயோதிகருக்குத் தான் இருக்கும் அல்லவா! அனுபவ ரதம்
தான் தேவைப்படுகிறது. சிறிய ரதத்தில் பிரவேசம் ஆகமாட்டார்.
என்னை யாரும் அறியவில்லை என்று சுயம் கூறுகின்றார். அவர்
சுப்ரீம் இறை தந்தை அதாவது சுப்ரீம் ஆத்மா ஆவார். நீங்களும்
100 சதவிகிதம் தூய்மையாக இருந்தீர்கள். இப்பொழுது 100 சதவிகிதம்
அசுத்தமாக ஆகிவிட்டீர்கள். சத்யுகத்தில் 100 சதவிகிதம் தூய்மை
இருந்ததால் அமைதி மற்றும் சுகமும் இருந்தது. முக்கிய மானது
தூய்மை. அசுத்தமானவர்கள் தூய்மையானவர்களிடத்தில் தலை
வணங்குவதைப் பார்க்கவும் செய்கிறீர்கள். அவர்களது மகிமை
பாடுகின்றனர். சந்நியாசிகளின் முன் சென்று நீங்கள் அனைத்து
குணங்களும் நிறைந்தவர்கள்...... நாங்கள் பாவிகள் என்று
ஒருபொழுதும் கூற மாட்டார்கள். தேவதைகளின் முன் இவ்வாறு
கூறுகின்றனர். குமாரி களிடம் அனைவரும் தலை வணங்குகின்றனர்,
திருமணம் ஆன பின்பு அனைவரிடத்திலும் அவர் தலைவணங்கு கின்றார்,
ஏனெனில் விகாரி ஆகிவிடுகின்றார் அல்லவா! என்று பாபா புரிய
வைக்கின்றார். இப்பொழுது தந்தை கூறுகின்றார் - இப்பொழுது
நீங்கள் விகாரமற்றவர்களாக ஆவீர்கள் எனில் அரைக்கல்பம்
நிர்விகாரிகளாகவே இருப்பீர்கள். இப்பொழுது 5 விகாரங்களின்
இராஜ்யம் அழிந்து விடும். இது மரண உலகம், அது அமரலோகம்.
இப்பொழுது ஆத்மாக்களாகிய உங்களுக்கு ஞானம் என்ற மூன்றாவது கண்
கிடைக்கிறது. தந்தை தான் கொடுக் கின்றார். திலகமும் நெற்றியில்
வைத்துக் கொள்கின்றனர் அல்லவா! இப்பொழுது ஆத்மாக்களுக்கு ஞானம்
கிடைத்துக் கொண்டிருக்கிறது, எதற்காக? நீங்கள் தனக்குத் தானே
இராஜ்ய திலகம் கொடுத்துக் கொள்ளுங்கள். வக்கீல் படிப்பு
படிக்கின்றனர் எனில் படித்த பின்பு தனக்குத் தானே வக்கீல் என்ற
திலகம் (பட்டம்) கொடுத்துக் கொள்கின்றனர் அல்லவா! படித்தால்
திலகம் கிடைக்கும். ஆசிர்வாதத்தின் மூலம் கிடைத்து விடாது.
இல்லை யெனில் அனைவரின் மீதும் ஆசிரியர் கருணை காண்பிக்க
வேண்டும், அனைவரும் தேர்ச்சி பெற்று விடுவர். குழந்தைகள்
தனக்குத் தானே இராஜ்ய திலகம் கொடுத்துக் கொள்ள வேண்டும்.
தந்தையை நினைவு செய்தால் விகர்மம் விநாசம் ஆகும், மேலும்
சக்கரத்தை நினைவு செய்வதன் மூலம் சக்கரவர்த்தி மகாராஜா
ஆகிவிடுவீர்கள். உங்களை இராஜாவிற் கெல்லாம் இராஜாவாக
ஆக்குகின்றேன் என்று தந்தை கூறுகின்றார். தேவி தேவதைகள் இரட்டை
கிரீடதாரிகளாக ஆகின்றனர். பதீத அரசர்களும் அவர்களை
பூஜிக்கின்றனர். உங்களை பூஜாரி அரசர் களை விட உயர்வானவர்களாக
ஆக்குகிறேன். யார் அதிகம் தானம், புண்ணியம் செய்கிறார்களோ
அவர்கள் இராஜாக்களிடத்தில் பிறப்பு எடுப்பார்கள், ஏனெனில் நல்ல
காரியங்கள் செய்திருக் கின்றனர். இப்பொழுது உங்களுக்கு இங்கு
அழிவற்ற ஞான செல்வம் கிடைத்திருக்கிறது, இதை தாரணை செய்து பிறகு
தானம் செய்ய வேண்டும். இது வருமானத்திற்கு ஆதாரமாகும்.
ஆசிரியரும் படிப்பை தானம் செய்கின்றார். அந்த படிப்பு அல்ப
காலத்திற்கானது, அயல் நாட்டில் படித்து விட்டு வருகின்றனர்,
வந்த உடனேயே மாரடைப்பு ஏற்பட்டு விட்டால் படிப்பு முடிவடைந்து
விடுகிறது. அழிந்து விடுகிறது அல்லவா! உழைப்பு அனைத்தும் வீணாகி
விடுகிறது. உங்களது உழைப்பு இவ்வாறு ஆக முடியாது. நீங்கள் எந்த
அளவிற்கு நன்றாக படிப்பீர்களோ அந்த அளவிற்கு 21 பிறவி களுக்கு
உங்களது படிப்பு அழிவற்று இருக்கும். அங்கு அகால மரணம் ஏற்படாது.
இந்த படிப்பை கூடவே எடுத்துச் செல்வீர்கள்.
இப்பொழுது தந்தை எவ்வாறு கல்யாணகாரியாக இருக்கின்றாரோ அதே
போன்று குழந்தைளாகிய நீங்களும் கல்யாணகாரிகளாக ஆக வேண்டும்.
அனைவருக்கும் வழி கூற வேண்டும். பாபா மிகவும் நல்ல வழிகளைக்
கூறுகின்றார். ஒரே ஒரு விசயத்தை புரிய வையுங்கள் - சர்வ
சிரேஷ்ட சிரோமணியான ஸ்ரீமத் பகவத் கீதைக்கு அந்த அளவிற்கு ஏன்
மகிமை இருக்கிறது? பகவானின் உயர்ந்த வழியாகும். யாரை பகவான்
என்று கூறுவது? பகவான் ஒரே ஒருவர் தான். அவர் நிராகார மானவர்,
அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தை ஆவார். அதனால் தான்
தங்களுக்குள் சகோதர சகோதரன் என்று கூறிக் கொள்கிறீர்கள். பிறகு
எப்பொழுது பிரம்மாவின் மூலம் புது உலகை படைக்கும் பொழுது
சகோதரன்-சகோதரிகளாக ஆகிவிடுகிறீர்கள். இந்த நேரத்தில் நீங்கள்
சகோதர-சகோதரிகளாக இருப்பதால் தூய்மையாக இருக்க வேண்டும். இது
யுக்தியாகும். கெட்டப் பார்வை முற்றிலும் நீங்கி விட வேண்டும்.
பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும், எண் கண்கள் பைத்தியம்
போல் அலைவதில்லை தானே? பஜாரில் கடலையைப் பார்த்ததும் மனம்
விரும்பு கிறதா? இவ்வாறு பலருக்கு விருப்பம் ஏற்படுகிறது, பிறகு
சாப்பிட்டு விடுகின்றனர். நிமித்த பிராமணிகள் ஒரு சகோதரனுடன்
செல்கின்ற பொழுது ஒரே ஒரு கடலை சாப்பிடுவதால் எந்த பாவமும்
ஏற்பட்டு விடாது என்று கூறுகின்றனர். யார் பக்குவமற்றவர்களாக
இருப்பார்களோ அவர்கள் உடனேயே சாப்பிட்டு விடுவர். இதைப் பற்றி
சாஸ்திரத்திலும் அர்ஜுனனின் உதாரணம் இருக்கிறது. இந்த கதைகளை
உட்கார்ந்து உருவாக்கி இருக்கின்றனர். மற்ற அனைத்தும் இந்த
நேரத்திற்கான விசயமாகும்.
நீங்கள் அனைவரும் சீதைகள். ஒரு தந்தையை நினைவு செய்தால்
பாவங்கள் அழிந்து விடும் என்று உங்களுக்கு தந்தை கூறுகின்றார்.
வேறு எந்த விசயமும் கிடையாது. இராவணன் எந்த மனிதனும் கிடையாது
என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். விகாரங்கள்
பிரவேசம் ஆகின்ற பொழுது இராவண குழந்தைகள் என்று கூறப்படுகிறது.
யாராவது கெட்ட காரியங்கள் செய்கின்ற பொழுது நீங்கள் அசுரர்கள்
என்று கூறுவர். நடத்தைகள் அசுரத்தனமாக இருக்கிறது. நீ குலத்தை
களங்கப்படுத்துகின்றாய் என்று விகாரி குழந்தைகளை கூறுவர். இங்கு
எல்லையற்ற தந்தை கூறுகின்றார் - நான் உங்களை கருப்பிலிருந்து
வெள்ளையாக ஆக்குகின்றேன், பிறகு மீண்டும் கருப்பாக்கிக்
கொள்கிறீர்கள். உறுதிமொழி எடுத்துக் கொண்டு மீண்டும்
விகாரிகளாக ஆகிவிடுகிறீர்கள். அசுத்தத்திலும் அசுத்தமானவர்களாக
ஆகிவிடுகிறீர்கள். அதனால் தான் கல்புத்தி என்று கூறப்படுகிறது.
பிறகு இப்பொழுது நீங்கள் தங்கப் புத்தியுடையவர்களாக ஆகிறீர்கள்.
உங்களுக்கு முன்னேறும் கலை ஏற்படுகிறது. தந்தையைப் புரிந்து
கொள்கிறீர்கள், பிறகு உலகிற்கு எஜமானர்களாக ஆகிறீர்கள்.
சந்தேகத்திற்கான விசயம் இருக்கவே முடியாது. தந்தை சொர்க்கத்தை
ஸ்தாபனை செய்யக் கூடியவர் ஆவார். ஆக அவசியம் சொர்க்கத்தை
பரிசாக கொண்டு வருவார் அல்லவா! சிவஜெயந்தியும் கொண்டாடுகின்றனர்,
என்ன செய்வர்? விரதம் போன்றவைகள் இருப்பர். உண்மையில்
விகாரங்களின் விரதத்தில் இருக்க வேண்டும். விகாரத் தில் செல்லக்
கூடாது. இதன் மூலம் தான் நீங்கள் முதல், இடை, கடை துக்கம்
அடைந்தீர்கள். இப்பொழுது இந்த ஒரு பிறப்பு தூய்மையாக ஆகுங்கள்.
பழைய உலகின் விநாசம் எதிரில் இருக்கிறது. பாரதத்தில் 9 இலட்சம்
பேர் இருப்பர், பிறகு அமைதி ஏற்பட்டு விடும் என்பதை நீங்கள்
பார்ப்பீர்கள். கை தட்டுவதற்கு மற்ற தர்மத்தைச் சார்ந்தவர்கள்
இருக்கமாட்டார்கள். ஒரு தர்மத்தின் ஸ்தாபனை, மற்ற அனைத்து
தர்மமும் விநாசம் ஆகிவிடும். நல்லது.
இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) அழிவற்ற ஞான செல்வத்தை தனக்குள் தாரணை செய்து பிறகு தானம்
செய்ய வேண்டும். படிப்பின் மூலம் தனக்குத் தானே இராஜ்ய திலகம்
கொடுத்துக் கொள்ள வேண்டும். தந்தை எவ்வாறு கல்யாணகாரியாக
இருக்கின்றாரோ அதே போன்று கல்யாணகாரிகளாக ஆக வேண்டும்.
2) சாப்பிடுவது, பானம் அருந்துவதல் போன்றவற்றில் முழு பத்தியம்
கடைபிடிக்க வேண்டும். ஒருபொழுதும் கண்கள் ஏமாற்றி விடக் கூடாது,
இதை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். தன்னை சீர்திருத்திக்
கொள்ள வேண்டும். கர்மேந்திரியங்களின் மூலம் எந்த விகர்மும்
செய்யக் கூடாது.
வரதானம்:
மனதின் சக்தியின் அனுபவம் மூலமாக விசாலமான காரியத்தில்
எப்பொழுதும் சகயோகி (ஒத்துழைப்பவர்) ஆகுக
பிரக்ருதியை (இயற்கையை), தமோகுண ஆத்மாக்களின் அதிர்வலைகளை
பரிவர்த்தனை (மாற்றுவது) செய்வது மற்றும் ரத்தக்களறியின்
வாயுமண்டலம், அதிர்வலைகளில் சுயம் தன்னை பாதுகாப்பாக
வைத்திருப்பது, மற்ற ஆத்மாக்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பது,
புதிய உலகில் புதிய படைப்புகளை யோக பலம் மூலமாக ஆரம்பம் செய்வது
- இவ்வனைத்து விசாலமான காரியங் களுக்கு மனதின் சக்தியின் தேவை
உள்ளது. மனதின் சக்தி மூலமாக தான் சுயத்தினுடைய கடைசி நேரம்
இனிமையானதாக இருக்கும். மனதின் சக்தி என்றால் உயர்ந்த சங்கல்ப
சக்தி, ஒருவரோடு (தந்தையோடு) தெளிவான தொடர்பு - இப்பொழுது இதன்
அனுபவம் நிறைந்தவராக மாறுங்கள் அப்பொழுதுதான்
எல்லைக்கப்பாற்பட்ட காரியத்தில் சகயோகி (ஒத்துழைப்பவர்) ஆகி
எல்லைக்காப்பாற்பட்ட உலகத்தின் ராஜ்ஜிய அதிகாரி ஆவீர்கள்
சுலோகன்:
பயமற்ற நிலை மற்றும் பணிவு - இவை தான் யோகி மற்றும் ஞானி
ஆத்மாக்களுடைய சொரூபம் ஆகும்.
அவ்யக்த சமிக்ஞை : சகஜயோகி ஆகவேண்டும் என்றால் பரமாத்ம அன்பின்
அனுபவி ஆகுங்கள்
பரமாத்மாவின் அன்பு ஆனந்தம் நிறைந்த ஊஞ்சலாகும். இந்த சுகம்
நிறைந்த ஊஞ்சலில் ஊஞ்சலாடிக் கொண்டே எப்பொழுதும் பரமாத்மாவின்
அன்பில் மூழ்கி இரு அப்பொழுது ஒரு பொழுதும் எந்த ஒரு எதிர் மறை
சூழ்நிலை அல்லது மாயையின் சலசலப்பு வர முடியாது. பரமாத்மாவின்
அன்பு அளவற்றது, எப்பொழுதும் நிலையானது. அவ்வளவு நிறைந்துள்ளது
- அனைவருக்கும் (அனைத்து ஆத்மாக்களுக்கும்) கிடைக்க முடியும்,
ஆனால் பரமாத்மாவின் அன்பை பெறுவதற்கான விதிமுறை உள்ளது -
விலகிய நிலையுடையவர், விடுபட்ட நிலை யுடையவர் ஆக வேண்டும்.
எவ்வளவு விலகிய நிலை உடையவராக, விடுபட்ட நிலையுடைய வராக
ஆகின்றோமோ அவ்வளவு பரமாத்மாவின் அன்பின் அதிகாரம் பிராப்தி (கிடைக்கும்)
ஆகும்.