04-09-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! சங்கமத்தில் உங்களுக்கு அன்புக் கடலான தந்தை அன்பினுடைய ஆஸ்தியே அளிக்கிறார். எனவே நீங்கள் அனைவருக்கும் அன்பைக் கொடுங்கள். கோபப்படாதீர்கள்.

கேள்வி:
தங்களது ரிஜிஸ்டரை சரியாக வைப்பதற்காக தந்தை உங்களுக்கு என்ன வழியைக் கூறியிருக்கிறார்?

பதில்:
தந்தை உங்களுக்கு அன்பினுடைய வழியைத் தான் கூறி இருக்கிறார். குழந்தைகளே! ஒவ்வொரு வருடனும் அன்புடன் நடந்துக் கொள்ளுங்கள் என்று ஸ்ரீமத் அளிக்கிறார். யாருக்குமே துக்கம் கொடுக்காதீர்கள். கர்ம இந்திரியங்கள் மூலமாக ஒருபொழுதும் எந்தவொரு தவறான செயலையும் செய்யாதீர்கள். எனக்குள் எந்த ஒரு அசுர குணமும் இல்லையே என்று எப்பொழுதும் சோதித்துப் பாருங்கள். மன நிலையில் தடுமாற்றம் ஆவது இல்லையே? எந்த ஒரு விஷயத்திலும் மனநிலை கெட்டுப் போவது இல்லையே?

பாடல்:
இந்த நேரம் கடந்து கொண்டிருக்கிறது ......

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீக குழந்தைகள் பாட்டு கேட்டீர்கள். நாளுக்கு நாள் நமது வீடு அல்லது குறிக்கோள் அருகில் வந்துக் கொண்டே இருக்கிறது. இப்பொழுது ஸ்ரீமத் என்னவெல்லாம் கூறுகிறதோ அதில் அலட்சியமாக இருக்காதீர்கள். அனைவருக்கும் செய்தியை சேர்ப்பியுங்கள் என்று தந்தையின் (கட்டளை) உத்தரவு கிடைக்கிறது. லட்சக்கணக்கானோர், கோடிக் கணக்கானோருக்கு இந்த செய்தியை அளிக்க வேண்டும் என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். பிறகு ஏதாவதொரு நேரத்தில் வந்தாலும் வந்துவிடுவார்கள். நிறைய பேர் வரும்பொழுது நிறைய பேருக்கு செய்தி அளிப்பீர்கள். தந்தையின் செய்தி எல்லோருக்குமே கிடைக்க வேண்டியுள்ளது. செய்தி மிகவும் சுலபமானது ஆகும். தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள். மேலும் எந்தவொரு கர்ம இந்திரியங்கள் மூலமாகவும் மனம், சொல் மற்றும் செயலால் எந்த ஒரு தீய செயலும் செய்யக்கூடாது என்பதை மட்டுமே கூறுங்கள். முதலில் மனதில் வருகிறது. அப்பொழுது தான் பேச்சில் வருகிறது. இப்பொழுது உங்களுக்கு சரி, தவறு பற்றி புரிந்து கொள்ளக் கூடிய யுக்தி வேண்டும். இது புண்ணியமான காரியம், இதைச் செய்ய வேண்டும். மனதில் கோபப்பட வேண்டும் என்ற எண்ணம் எழுந்தால் இப்பொழுது புத்தி கிடைத்துள்ளது - கோபப்பட்டோம் என்றால் பாவம் ஏற்பட்டு விடும் - தந்தையை நினைவு செய்வதால் புண்ணிய ஆத்மா ஆகிவிடுவோம். அப்படி இன்றி, இப்பொழுது ஆனது, ஆகிவிட்டது. இனிமேல் செய்ய மாட்டேன். இவ்வாறு இனி மேல், இனி மேல் என்று கூறிக் கொண்டே சென்றால் அதுவே பழக்கமாகி விடும். மனிதர்கள் இது போன்ற கர்மங்கள் செய்யும்பொழுது இது பாவம் இல்லை என்று நினைக் கிறார்கள். விகாரத்தை பாவம் என்று நினைப்பதில்லை. இது பெரியதிலும் பெரிய பாவம் ஆகும் என்று இப்பொழுது தந்தை கூறியுள்ளார். இவற்றின் மீது வெற்றி அடைய வேண்டும். மேலும் என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார் என்ற தந்தையின் செய்தியை அனைவருக்கும் அளிக்க வேண்டும். மரணம் எதிரிலேயே உள்ளது. யாராவது இறக்கும் தருவாயில் இருந்தால் இறை தந்தையை (காட்ஃபாதர்-ஐ) நினைவு செய்யுங்கள் என்று அவருக்கு கூறுவார்கள். இவர் கடவுளிடம் செல்கிறார் என்று அவர்கள் நினைக் கிறார்கள். ஆனால் இறை தந்தையை நினைவு செய்வதால் என்ன ஆகும் என்றோ எங்கே செல்வோம் என்பதோ அவர் களுக்குத் தெரியாது. ஆத்மா ஒரு சரீரத்தை விட்டு மற்றொன்றை எடுக்கிறது. காட்ஃபாதரிடமோ யாருமே போக முடியாது. எனவே இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு அழிவற்ற தந்தையின் அழியாத (நிரந்தர) நினைவு வேண்டும். தமோபிரதானமாக துக்கம் தாளாது ஆகிவிடும் பொழுது கடவுளை நினைவு செய்யுங்கள் என்று ஒருவருக்கொருவர் கூறுகிறார்கள். அனைத்து ஆத்மாக்களும் ஒருவர் பிறருக்கு கூறுகிறார்கள். கூறுவது ஆத்மா அல்லவா? அப்படி இன்றி பரமாத்மா கூறுகிறார் என்பதல்ல. தந்தையை நினைவு செய்யுங்கள் என்று ஆத்மா ஆத்மாவிற்குக் கூறுகிறது. இது ஒரு சாதாரணமான வழக்கம் ஆகும். இறக்கும்பொழுது இறைவனை நினைவு செய்கிறார்கள். இறைவன் பற்றிய பயம் இருக்கும். நல்லது அல்லது தீய செயல்களின் பலன் களை இறைவன் தான் கொடுக்கிறார் என்று நினைக்கிறார்கள். தீய செயல்கள் செய்தோம் என்றால் இறைவன் தர்ம ராஜரின் மூலமாக மிகவும் தண்டனை கொடுப்பார் என்ற பயம் இருக்கும். உண்மையில் (கர்மங்களின்) வினைப்பயனை அனுபவிக்க வேண்டியே இருக்கும் அல்லவா? குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது கர்மம், அகர்மம் மற்றும் விகர்மத்தின் விளைவைப் புரிந்துள்ளீர்கள். இந்த கர்மம் அகர்மமாகும் என்று அறிகிறீர்கள். நினைவில் இருந்து செய்யும் செயல்கள் நல்ல செயல்கள் ஆகும். இராவண இராஜ்யத்தில் மனிதர்கள் தீய செயல்கள் தான் செய்கிறார்கள். இராம இராஜ்யத்தில் ஒரு பொழுதும் தீய செயல் ஏற்படுவதில்லை. இப்பொழுது ஸ்ரீமத் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. எங்காவது அழைப்பு கிடைக்கிறது. இது செய்ய வேண்டுமா? இல்லை செய்ய வேண்டாமா - ஒவ்வொரு விஷயத்திலும் (ஆலோசனை) கேட்டுக் கொண்டே இருங்கள். உதாரணமாக ஒருவர் காவல் துறையில் வேலை செய்கிறார் என்றால், நீங்கள் முதலில் அன்புடன் (குற்றவாளிக்கு) புரிய வையுங்கள் என்று அவருக்கு கூறப்படுகிறது. உண்மையைக் கூறவில்லை என்றால் பின்னால் அடிக்கலாம். அன்புடன் புரிய வைப்பதால் கைக்குள் வர முடியும். ஆனால் அந்த அன்பில் கூட யோக பலம் நிரம்பி இருந்தது என்றால், அந்த அன்பின் சக்தியுடன் யாருக்காவது புரிய வைக்கும்பொழுது, கடவுளைப் போல புரிய வைக்கிறார் என்று நினைப்பார்கள். நீங்கள் இறைவனின் குழந்தைகள். யோகி ஆவீர்கள் அல்லவா? உங்களிலும் கூட ஈசுவரிய ஆற்றல் உள்ளது. இறைவன் அன்பின் கடல் ஆவார். அவரிடம் வலிமை (சக்தி) உள்ளது அல்லவா? அனைவருக்கும் ஆஸ்தி அளிக்கிறார். சொர்க்கத்தில் மிகுந்த அன்பு இருக்கும் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இப்பொழுது நீங்கள் அன்பின் முழு ஆஸ்தியைப் பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அவ்வாறு பெற்று வரிசைக்கிரமமாக முயற்சி செய்து செய்து பிரியமானவராக ஆகிவிடுவீர்கள்.

யாருக்குமே துக்கம் கொடுக்கக் கூடாது என்று தந்தை கூறுகிறார். இல்லை என்றால் துக்கமுற்று இறப்பீர்கள். தந்தை அன்பிற்கான வழியைக் கூறுகிறார். மனதில் வந்துவிடும் பொழுது அது முகத்திலும் வந்துவிடுகிறது. கர்ம இந்திரியங்களால் செய்து விட்டீர்கள் என்றால் உங்களின் பதிவேடு (ரெஜிஸ்தர்) கெட்டுப் போய்விடும். தேவதைகளின் நடத்தை குணங்கள் பற்றி புகழ் பாடல் பாடுகிறார்கள் அல்லவா? எனவே தேவதைகளின் பூசாரிகளுக்குப் புரிய வையுங்கள் என்று பாபா கூறுகிறார். நீங்கள் சர்வகுணங்களால் நிறைந்தவர்கள், 16 கலை சம்பூர்ணமானவர்கள் ஆவீர்கள் என்று அவர்கள் மகிமை பாடுகிறார்கள் மற்றும் தங்களது நடத்தை பற்றியும் கூறு கிறார்கள். எனவே நீங்கள் இப்படி இருந்தீர்கள், இப்பொழுது இல்லை. மீண்டும் அவசியம் ஆவீர்கள் என்று அவர்களுக்குப் புரிய வையுங்கள். நீங்கள் இது போல தேவதை ஆக வேண்டும் என்றால் உங்களுடைய நடத்தையை இது போல அமைத்துக் கொள்ளுங்கள் அப்பொழுது நீங்கள் இவ்வாறு ஆகிவிடுவீர்கள். நாம் சம்பூர்ண நிர்விகாரியாக இருக்கிறோமா? நமக்குள் எந்த ஒரு அசுர குணமும் இல்லையே? எந்த ஒரு விஷயத் திலும் கோபப்படுவது ஒன்றும் இல்லையே? அடிக்கடி மனநிலை மாறக் கூடியவராக இல்லையே என்று தங்களையே சோதித்துக் கொள்ள வேண்டும். அநேக முறை நீங்கள் புருஷார்த்தம் (முயற்சி) செய்துள்ளீர்கள். நீங்கள் இதுபோல (தேவதை) ஆக வேண்டும் என்று தந்தை கூறுகிறார். அவ்வாறு ஆக்கக் கூடியவர் கூட ஆஜராக இருக்கிறார். கல்ப கல்பமாக உங்களை இது போல உருவாக்குகிறேன் என்று கூறுகிறார். முந்தையை கல்பத்தில் யாரெல்லாம் ஞானம் எடுத்தார்களோ அவர்கள் அவசியம் வந்து எடுப்பார்கள். புருஷார்த்தம் கூட செய்விக்கப்படுகிறது. மேலும் கவலையற்றவராகவும் ஆகிறார்கள். நாடகத்தில் இவ்வாறு பொருந்தி உள்ளது. நாடகத்தில் இருந்தது என்றால், அவசியம் செய்வோம் என்று ஒரு சிலர் கூறு கிறார்கள். நல்ல சார்ட் இருந்தது என்றால் டிராமா செய்விக்கும் என்பார்கள். அவருடைய அதிர்ஷ்டத்தில் இல்லை என்று தெரிகிறது. முதன் முதலில் கூட ஒருவர் இது போல கோபித்துக் கொண்டிருந்தார். அதிர்ஷ்டத்தில் இருக்கவில்லை. கூறினார் - நாடகத்தில் இருந்தது என்றால் நாடகம் என்னை புருஷார்த்தம் செய்விக்கும் - அவ்வளவு தான் (ஞானத்தையே) விட்டு விட்டார் - இது போல கூட உங்களுக்கு நிறைய பேர் கிடைக்கிறார்கள். உங்களுடைய லட்சியம் -நோக்கம் இதுவாக உள்ளது. பேட்ஜ் உங்களிடம் உள்ளது. எப்படி உங்களுடைய கணக்கைப் பார்க்கிறீர்கள், பின் பேட்ஜைக் கூட பாருங்கள். உங்களுடைய நடத்தை நடவடிக்கைகளையும் கூட பாருங்கள். ஒரு பொழுதும் குற்றப் பார்வை இருக்கக் கூடாது. வாயிலிருந்து தீய விஷயங்கள் வெளிப்படக் கூடாது. தீயதை பேசுபவர்களே இல்லை என்றால் காதுகள் எப்படி கேட்கும்? சத்யுகத்தில் எல்லோரும் தெய்வீக குணங்கள் உடையவர்களாக இருப்பார்கள். தீயதின் எந்த விஷயமும் கிடையாது. இவர்கள் கூட பலனை தந்தை மூலமாகத் தான் அடைந்துள்ளார்கள். தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் விகர்மங்கள் விநாசம் ஆகிவிடும் என்பதை அனைவருக்கும் கூறுங்கள். இதில் நஷ்டமாகும் விஷயம் எதுவும் இல்லை. ஆத்மா சம்ஸ்காரத்தை எடுத்துச் செல்கிறது. சந்நியாசியாக இருந்தார் என்றால் பிறகு சந்நியாச தர்மத்தில் வந்துவிடுவார். அவர் களுடைய மரமோ வளர்ந்து கொண்டே இருக்கும் அல்லவா? இச்சமயம் நீங்கள் மாறிக் கொண்டு இருக்கிறீர்கள். மனிதனிலிருந்து தேவதை ஆகிறீர்கள். எல்லோரும் ஒட்டு மொத்தமாக வருவார்களா என்ன? வரிசைக்கிரமமாகத் தான் வருவார்கள். நாடகத்தில் நேரம் வராமல் நடிகர் மேடையில் வருவாரா என்ன? உள்ளே அமர்ந்து இருப்பார்கள். நேரம் வரும்பொழுது வெளியில் தனது பாகத்தை நடிப்பதற்காக மேடை மீது வருவார்கள். அது எல்லைக்குட்பட்ட நாடகமாகும். இது எல்லையில்லாதது. நடிகர்களாகிய நாம் நமது நேரத்தில் வந்து நம்முடைய பாகத்தை நடிக்க வேண்டும் என்பது புத்தியில் உள்ளது. இது எல்லையில்லாத பெரிய விருட்சம் ஆகும். வரிசைக்கிரமமாக வந்துக் கொண்டே இருக்கிறார்கள். முதன் முதலில் ஒரே ஒரு தர்மம் தான் இருந்தது. எல்லா தர்மத்தினரும் முதன் முதலியே வர முடியாது.

முதலிலோ தேவி தேவதா தர்மத்தினர் தான் பாகத்தை நடிக்க வருவார்கள். அது கூட வரிசைக் கிரமமாகத் தான் வருவார்கள். விருட்சம் பற்றிய ரகசியத்தைக் கூடப் புரிந்து கொள்ள வேண்டும். தந்தை தான் வந்து முழு கல்ப விருட்சத்தின் ஞானத்தைக் கூறுகிறார். இது பிறகு நிராகார விருட்சத்துடன் ஒப்பிடப்படுகிறது. மனித சிருஷ்டி என்ற விருட்சத்தின் விதை நான் ஆவேன் என்று ஒரு தந்தை தான் கூறுகிறார். விதையில் விருட்சம் அடங்கியதாக இல்லை. ஆனால் விருட்சத்தைப் பற்றிய ஞானம் அடங்கியுள்ளது. ஒவ்வொருவருக்கும் அவரவர் பாகம் உள்ளது. உயிரூட்டமுடைய (சைதன்யமான) விருட்சம் ஆகும் அல்லவா? விருட்சத்தின் இலைகள் கூட வரிசைக்கிரமமாக வெளிப்படும். இந்த விருட்சம் பற்றி யாருமே புரியாமல் உள்ளார்கள். இதனுடைய விதை மேலே உள்ளது. எனவே இதற்கு தலைகீழான விருட்சம் என்று கூறப்படு கிறது. படைப்பவரான தந்தை மேலே இருக்கிறார். நாம் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அது ஆத்மாக்கள் இருக்கும் இடம் ஆகும். இப்பொழுது நாம் தூய்மை யாகிச் செல்ல வேண்டும். உங்கள் மூலமாக யோக பலத்தினால் முழு உலகம் தூய்மையாகி விடுகிறது. உங்களுக்காக தூய்மையான சிருஷ்டி வேண்டும் அல்லவா? நீங்கள் தூய்மையாக ஆகிவிடும் பொழுது உலகத்தையும் தூய்மையாக ஆக்க வேண்டி இருக்கிறது. எல்லாமே தூய்மையாக ஆகிவிடுகிறது. ஆத்மாவில் தான் மனம் புத்தி உள்ளது, என்பது உங்கள் புத்தியில் உள்ளது. சைதன்யமானது. ஆத்மா தான் ஞானத்தை தாரணை செய்ய முடியும். எனவே எப்படி நாம் புனர்ஜென்மம் எடுக்கிறோம் என்ற முழுமையான ரகசியம் இனிமையிலும் இனிமையான குழந்தைகளின் புத்தியில் இருக்க வேண்டும். உங்களுடைய 84 பிறவிகளின் சக்கரம் முடிவடையும் பொழுது எல்லோருடையதும் முடிவடைகிறது. எல்லோரும் பாவனமாக ஆகிவிடு கிறார்கள். இது அனாதியாக அமைக்கப்பட்ட நாடகம் ஆகும். ஒரு நொடி கூட (ஒரு மாதிரி) நிலைப்பது இல்லை. விநாடிக்கு விநாடி என்ன நடக்கிறதோ அது மீண்டும் கல்பத்திற்குப் பின்னால் நடக்கும். ஒவ்வொரு ஆத்மாவிலும் அவினாஷி (அழியாத) பார்ட் நிரம்பி உள்ளது. அந்த நடிகர்கள் ஏதோ 2-3 மணி நேரத்தினுடைய பாகத்தை நடிக்கிறார்கள். ஆனால் இது ஆத்மாவிற்கு (நேச்சுரல்) இயல்பான பாகமாகக் கிடைத்துள்ளது. எனவே குழந்தைகளுக்கு எவ்வளவு குஷி இருக்க வேண்டும்! அதீந்திரிய சுகம் இப்பொழுது சங்கமத்தினுடையது தான் என்று பாடப்பட்டுள்ளது. தந்தை வருகிறார், 21 பிறவி களுக்கு நாம் சதா சுகமுடையவர்களாக ஆகிறோம். மகிழ்ச்சியான விஷயம் ஆகும் அல்லவா? யார் நல்ல முறையில் புரிந்திருக்கிறார்கள் மற்றும் புரிய வைக்கிறார்களோ அவர்கள் சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். ஒரு சில குழந்தைகள் சுயம் அவர்களே கோபமுடையவர்களாக இருந்தார்கள் என்றால் மற்றவர்களுக்குள்ளும் பிரவேசம் ஆகிவிடுகிறது. இரண்டு கைகள் தட்டும் பொழுதே சப்தம் வரும். அங்கு இதுபோல ஆவதில்லை. இங்கு குழந்தைகளாகிய உங்களுக்கு கிடைக்கும் அறிவுரையாவது - யாராவது கோபப்பட்டார்கள் என்றால் நீங்கள் அவர் மீது மலர்களைத் தூவுங்கள். அன்புடன் புரிய வையுங்கள். இதுவும் ஒரு பூதமாகும். மிகவும் கஷ்டத்தை ஏற்படுத்திவிடும். ஒருபொழுதும் கோபப்படக் கூடாது. கற்பிப்பவர் களிடமோ முற்றிலும் கோபம் இருக்கக் கூடாது. வரிசைக்கிரமமாக புருஷார்த்தம் செய்து கொண்டே இருக்கிறார்கள். ஒரு சிலருடையது தீவிர புருஷார்த்தம் ஆகிறது. ஒரு சிலருடையது மந்தமாக உள்ளது. மந்தமான புருஷார்த்தம் செய்பவர்கள் அவசியம் தங்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்திக் கொள்வார்கள். ஒருவரிடம் கோபம் உள்ளது என்றால் எங்கு போனாலும் அங்கிருந்து வெளியேற்றி விடுவார்கள். எந்த ஒரு தீய நடத்தை உடையவர்களும் இருக்க முடியாது. தேர்வு முடிவடையும் பொழுது அனைவருக்கும் தெரிய வரும். யார் யார் என்னவாக ஆகிறார்கள் என்பது எல்லாமே சாட்சாத்காரம் ஆகும் (காட்சிகளாகத் தெரிய வரும்). யார் எப்படி காரியம் செய்கிறார் களோ அவர்களுக்கு அதற்கேற்ப மகிமை உண்டாகிறது.

குழந்தைகளாகிய நீங்கள் டிராமாவின் முதல் இடை கடையை அறிந்துள்ளீர்கள். நீங்கள் அனைவரும் அந்தர்யாமி (உள்ளுக்குள் இருப்பதை அறிந்தவர்) ஆவீர்கள். ஆத்மா உள்ளுக்குள் இந்த சிருஷ்டி சக்கரம் எப்படி சுற்றுகிறது என்பதை அறிந்துள்ளது. முழு சிருஷ்டியின் மனிதர் களின் நடத்தைகள் பற்றி அனைத்து தர்மங்கள் பற்றிய ஞானம் உங்களுக்கு உள்ளது. அதற்கு அந்தர்யாமி என்று கூறப்படும். ஆத்மாவிற்கு எல்லாமே தெரிந்துவிட்டது. அப்படியின்றி பகவான் எல்லா இடத்திலும் வசிப்பவர் என்பதல்ல. அவருக்கு அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன உள்ளது? அவரோ இப்பொழுதும் கூறுகிறார், யார் எந்த மாதிரி முயற்சி (புருஷார்த்தம்) செய்வார்களோ அந்த மாதிரி பலனை அடைவார்கள். நான் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன? யார் செய்கிறார்களோ அதற்கான தண்டனையைக் கூட அவர்களே பெறுவார்கள். இப்பேர்ப் பட்ட நடத்தை உடையோராக இருந்தார்கள் என்றால் தாழ்ந்த கதியை அடைவார்கள். பதவி மிகவும் குறைந்து போய் விடும். அந்த பள்ளிக் கூடத்தில் தேர்வில் தோல்வி அடைந்து விட்டார்கள் என்றால் பிறகு மீண்டும் அடுத்த வருடம் படிக்கிறார்கள். இந்த படிப்போ கல்ப கல்பாந்திரத்திற்கானதாகும். இப்பொழுது படிக்கவில்லை என்றால் கல்ப கல்பாந்திரத்திற்கும் படிக்க மாட்டார்கள். ஈசுவரிய லாட்டரியை முழுமையாக எடுக்க வேண்டும் அல்லவா? இந்த விஷயங்களை குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்ள முடியும். பாரதம் சுகதாமமாக இருக்கும் பொழுது மற்ற எல்லோரும் சாந்திதாமத்தில் இருப்பார்கள். இப்பொழுது நம்முடைய சுகத்தின் நாட்கள் வந்து கொண்டே இருக்கின்றது என்ற குஷி குழந்தைகளுக்கு இருக்க வேண்டும். தீபாவளியின் நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் பொழுது கூறுவார்கள் அல்லவா, இன்னும் பாக்கி இவ்வளவு நாட்கள் இருக்கின்றது. பின் புதிய ஆடை அணிவோம் என்று. நீங்களும் கூறுகிறீர்கள் - சொர்க்கம் வந்து கொண்டிருக்கிறது. நாம் நமது அலங்காரம் செய்வோம். பின் சொர்க்கத்தில நல்ல சுகம் அடைவோம். செல்வந்தர்களுக்கோ செல்வத்தினுடைய போதை இருக்கும். மனிதர்கள் முற்றிலுமே கோரமான இருளில் இருக்கிறார்கள். பிறகு இவர்கள் உண்மையைத்தான் கூறிக் கொண்டிருந்தார்கள் என்று திடீரென்று தெரிய வரும். உண்மையின் சகவாசம் இருக்கும்பொழுது தான் உண்மையைப் புரிந்து கொள்ள முடியும். நீங்கள் இப்பொழுது உண்மையின் தொடர்பில் உள்ளீர்கள். நீங்கள் சத்தியமான தந்தை மூலமாக சத்தியமானவராக ஆகிறீர்கள். அவர்கள் அனைவரும் அசத்தியத்தின் மூலமாக அசத்தியமானவர்களாக ஆகிறார்கள். இப்பொழுது பகவான் என்ன கூறுகிறார் மற்றும் மனிதர்கள் என்ன கூறுகிறார்கள் என்ற வேற்றுமை பற்றிய புத்தகம் கூட பிரசுரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பத்திரிகை இதழ்களில் கூட போடலாம். கடைசியில் வெற்றியோ உங்களுடையதே ஆகும்! யார் முந்தைய கல்பத்தில் பதவி அடைந்தார்களோ அவர்கள் அவசியம் அடைவார்கள். இது உறுதி ஆகும். அங்கு அகால மரணம் ஏற்படுவது இல்லை. ஆயுள் கூட நீண்டதாக இருக்கும். தூய்மை இருக்கும்பொழுது நீண்ட ஆயுள் இருந்தது. பதீத பாவன பரமாத்மா தந்தை ஆவார். எனவே அவசியம் அவர் தான் பாவனமாக ஆக்கி இருக்க வேண்டும். கிருஷ்ணருக்கு அவ்வாறு கூறினால் அழகாக இருப்பதில்லை. புருஷோத்தம சங்கம யுகத்தில் கிருஷ்ணர் பிறகு எங்கிருந்து வருவார். அதே தோற்றமுடைய மனிதரோ பிறகு இருப்பதில்லை. 84 பிறவிகள், 84 தோற்றங்கள் மற்றும் 84 செயல்முறைகள் - இது ஏற்கனவே அமைந்த, அமைக்கப்பட்ட நாடகம் ஆகும். அதில் வித்தியாசம் ஏற்பட முடியாது. நாடகம் எவ்வாறு அதிசயமாக அமைக்கப்பட்டுள்ளது. ஆத்மா சிறிய பிந்து (புள்ளி) ஆகும். அதில் அனாதி பாகம் நிரம்பி உள்ளது. இதற்கு இயற்கை என்று கூறப்படுகிறது. மனிதர்கள் கேட்டு ஆச்சரியப் படுவார்கள். ஆனால் முதலிலோ தந்தையை நினைவு செய்யுங்கள் என்ற செய்தியை அளிக்க வேண்டும். அவரே பதீத பாவனர் ஆவார். அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல் ஆவார். சத்யுகத்தில் துக்கத்தின் விஷயங்கள் இருப்பதில்லை. கலியுகத்திலோ எவ்வளவு துக்கம் உள்ளது. ஆனால் இந்த விஷயங்களைப் புரிந்து கொள்பவர்கள் வரிசைக்கிரமமாக உள்ளார்கள். தந்தையோ தினமும் புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார். சிவபாபா நமக்கு கற்பிக்க வந்துள்ளார். பின் கூடவே அழைத்துச் செல்வார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். கூடவே இருப்பவர்களை விட பந்தனத்தில் இருக்கும் பெண்கள் அதிகமாக நினைவு செய்கிறார்கள். அவர்கள் உயர்ந்த பதவியை அடைய முடியும். இதுவும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஆகும் அல்லவா? பாபாவின் நினைவிலே மிகவும் துடிக்கிறார்கள். குழந்தைகளே நினைவு யாத்திரையில் இருங்கள், தெய்வீக குணங்களையும் தாரணை செய்யுங்கள். அப்பொழுது பந்தனங்கள் துண்டிக்கப்பட்டு கொண்டே போகும் என்று தந்தை கூறுகிறார். பிறகு பாவக் குடம் அழிந்து போய்விடும். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. நமது நடத்தை நடவடிக்கைகளை தேவதைகள் போல இருக்க வேண்டும். எந்த ஒரு தீய வார்த்தையையும் வாயால் பேசக் கூடாது. இந்தக் கண்கள் ஒருபொழுதும் (கிரிமினல்) குற்றப் பார்வை உடையதாக இருக்கக் கூடாது.

2. கோபத்தின் பூதம் மிகவும் நஷ்டம் ஏற்படுத்துகிறது. இரண்டு கைகள் தட்டும் பொழுது தான் சப்தம் வரும் எனவே யாராவது கோபப்பட்டால் ஒதுங்கி விட வேண்டும். அவர்களுக்கு அன்புடன் புரிய வைக்க வேண்டும்.

வரதானம்:
தியாகம், தவம் மற்றும் சேவை மனப்பான்மை என்ற வழிமுறையின் மூலம் சதா சர்வ காலமும் வெற்றி சொரூபமாக ஆகுக.

தியாகமும் தவமும் தான் வெற்றிக்கான ஆதாரம். தியாக மனப்பான்மை உள்ளவர்களே உண்மை யான சேவாதாரிகளாக ஆக முடியும். தியாகத்தால் தான் தனக்கும் மற்றவர்களுக்கும் பாக்கியம் உருவாகிறது. திடமான சங்கல்பம் செய்வது - இதுவே தவம் ஆகும். எனவே தியாகம், தவம் மற்றும் சேவை மனப்பான்மையால் - பலவிதமான எல்லைக்கு உட்பட்ட எண்ணங்கள் முடிந்துவிடுகின்றது. குழு சக்திசாலியாகின்றது. ஒருவர் சொன்னார், மற்றவர் செய்தார் என்பது நடந்தேறுகின்றது, ஒருபோதும் நீ - நான், எனது-உனது என்பது வருவதில்லை எனில், வெற்றி சொரூபமாகவும், தடையற்றவர்களாகவும் (நிர்விக்னம்) ஆகிவிடுவீர்கள்.

சுலோகன்:
சங்கல்பத்தின் மூலமாகக் கூட யாருக்கும் துக்கம் கொடுக்காமல் இருப்பது - இதுவே முழுமையான அகிம்சை ஆகும்.

அவ்யக்த சமிக்ஞை: இப்போது ஈடுபாடெனும் அக்னியை மூட்டி யோகத்தை ஜூவாலா ரூபமாக்குங்கள்.

யோகத்தை ஜுவாலை ரூபமாக்குவதற்கு, நொடியில் புள்ளி (ஆத்மா-ஜோதிர் புள்ளி) ரூபமாகி மனம்-புத்தியை ஒருமுகப்படுத்தும் பயிற்சியை மீண்டும் மீண்டும் செய்யுங்கள். ஸ்டாப் என்று சொன்னதும், நொடியில் வீணான தேக உணர்விலிருந்து விலகி மனம்-புத்தி ஒருமுகமாகி விட வேண்டும். இதுபோன்ற கட்டுப்படுத்தும் சக்தியை நாள் முழுவதும் பயன்படுத்துங்கள். சக்தி வாய்ந்த பிரேக் மூலம் மனது-புத்தியைக் கட்டுப்படுத்துங்கள், எங்கே மனம்-புத்தியை ஈடுபடுத்த விரும்புகிறீர்களோ, அங்கே நொடியில் ஈடுபட்டுவிட வேண்டும்.