04-12-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! உங்களுக்கு இப்போது
பாபாவிடமிருந்து தெய்வீக பார்வை (திவ்ய திருஷ்டி) கிடைத்துள்ளது.
நீங்கள் அந்த தெய்வீக பார்வையின் மூலம் தான் நீங்கள் ஆத்மா
மற்றும் பரமாத்மாவைப் பார்க்க முடியும்.
கேள்வி:
டிராமாவின் எந்த ரகசியத்தைப்
புரிந்து கொண்டிருப்பவர்கள் மற்ற எந்த ஓர் அறிவுரையை யாருக்கும்
கொடுக்க மாட்டார்கள்?
பதில்:
டிராமாவில் என்னென்ன நடந்து
முடிந்துள்ளதோ, அது மீண்டும் அப்படியே மிகச்சரியாக திரும்பவும்
நடைபெறும் என்பதை யார் புரிந்து கொண்டிருக்கிறார்களோ, அவர்கள்
ஒருபோதும் யாருக்கும் பக்தியை விடுவதற்கான அறிவுரை தர
மாட்டார்கள். எப்போது அவர் களின் புத்தியில் ஞானம் நல்லபடியாகப்
பதிந்து விடுகிறதோ அப்போது நாம் ஆத்மா, நாம் எல்லையற்ற
தந்தையிட மிருந்து ஆஸ்தி பெற வேண்டும் என்பதைப் புரிந்து
கொள்வார்கள். எப்போது எல்லையற்ற தந்தை யின் அறிமுகம் கிடைத்து
விடுகிறதோ, அப்போது எல்லைக் குட்பட்ட விஷயங்கள் தாமாகவே
முடிந்து போகும்.
ஓம் சாந்தி.
ஆத்மா என்ற தனது சுயதர்மத்தில் அமர்ந்திருக்கிறீர்களா? ஆன்மிகத்
தந்தை ஆன்மிகக் குழந்தைகளிடம் கேட்கிறார். ஏனென்றால் இதையோ
குழந்தைகள் அறிந்துள்ளனர், ஒரே ஓர் எல்லையற்ற தந்தையைத் தான்
ஆத்மா எனச் சொல்கின்றனர். அவர் சுப்ரீம் என்று மட்டும்
சொல்லப்படுகிறார். சுப்ரீம் ஆத்மா அல்லது பரம ஆத்மா எனச் சொல்
கின்றனர். பரமாத்மா நிச்சயமாக உள்ளார். பரமாத்மா இல்லை எனச்
சொல்ல மாட்டார்கள். பரம ஆத்மா என்றால் பரமாத்மா (அனைத்து
ஆத்மாக்களையும் விட மிக மேலான ஆத்மா). இதுவும் புரிய வைக்கப்
பட்டுள்ளது, குழப்பமடையக் கூடாது. ஏனென்றால் 5000 ஆண்டுகளுக்கு
முன்பும் கூட நீங்கள் இந்த ஞானத்தைக் கேட்டிருக்கிறீர்கள்.
ஆத்மா தான் கேட்கின்றது இல்லையா? ஆத்மா மிகச் சிறிய, மிக
சூட்சுமமானது. கண்களால் பார்க்க முடியாத அவ்வளவு சூட்சுமமானது.
ஆத்மாவை இந்தக் கண்களால் பார்த்தவர் என்று எந்த ஒரு மனிதரும்
இருக்க முடியாது. பார்க்க முடியும், ஆனால் திவ்ய திருஷ்டி
மூலமாக மட்டுமே. அதுவும் டிராமா பிளான் படி. நல்லது,
யாருக்காவது ஆத்மா வின் சாட்சாத்காரம் ஆகிறது என்று வைத்துக்
கொள்ளுங்கள்-எப்படி மற்றப் பொருட்கள் பார்க்கப் படுகிறதோ,
அதுபோல. பக்தி மார்க்கத்திலும் ஏதாவது சாட்சாத்காரம் ஆகிறது
என்றால் இந்தக் கண்களால் தான். அந்த திவ்ய திருஷ்டி கிடைக்கிறது.
அதன் மூலம் சைதன்யத்தில் பார்க் கின்றனர். ஆத்மாவுக்கு ஞானக்கண்
கிடைக்கிறது என்றால் அதன் மூலம் பார்க்க முடியும், ஆனால்
அதுவும் தியானத்தில். பக்தி மார்க்கத்தில் அதிக பக்தி
செய்கின்றனர். அப்போது சாட்சாத்காரம் கிடைக் கின்றது. எப்படி
மீராவுக்கு சாட்சாத்காரம் ஆயிற்று, நாட்டியமாடினார். வைகுண்டம்
அப்போது இல்லை. அச்சமயம் 500-600 ஆண்டுகளாக இருக்கக்கூடும்.
அந்தச் சமயம் வைகுண்டம் இருந்ததில்லை. எது நடந்து முடிந்ததோ,
அதை திவ்ய திருஷ்டி மூலம் பார்க்க முடியும். அதிக பக்தி
செய்து-செய்து முற்றிலும் பக்தி மயமாக ஆகி விடுவார்களானால்
காட்சி கிடைக் கின்றது. ஆனால் அதன் மூலம் முக்தி கிடைப்பதில்லை.
முக்தி-ஜீவன் முக்திக்கான வழி பக்தியிலிருந்து முற்றிலும்
தனிப்பட்டதாகும். பாரதத்தில் எவ்வளவு ஏராளமான கோவில்கள் உள்ளன!
சிவனுடைய லிங்கத்தை வைக்கின்றனர். பெரிய லிங்கத்தையும்
வைக்கின்றனர். சிறியதையும் வைக்கின்றனர். இப்போது இதையோ
குழந்தைகள் அறிவார்கள், எப்படி ஆத்மா உள்ளதோ, அதுபோல் பரமபிதா
பரமாத்மாவும் இருக்கிறார். அளவு அனைவருக்கும் ஒன்று தான்.
எப்படி தந்தையோ, அப்படி குழந்தைகளும் உள்ளனர். ஆத்மாக்கள்
அனைவரும் சகோதர-சகோதரர்கள். ஆத்மாக்கள் இந்த சரீரத்தில்
நடிப்பதற்காக வரு கின்றனர். இவை புரிந்து கொள்ள வேண்டிய
விஷயங்களாகும். இவை ஒன்றும் பக்தி மார்க்கத்தின் கட்டுக் கதைகள்
அல்ல. ஞான மார்க்கத்தின் விஷயங்களை ஒரு தந்தை மட்டுமே புரிய
வைக்கிறார். முதல்-முதலில் புரிய வைப்பவர் எல்லையற்ற தந்தை,
நிராகாராகவே உள்ளார். அவரை முழுமையாக யாரும் புரிந்து கொள்ள
முடியாது. அவரோ சர்வவியாபி எனச் சொல்- விடு கின்றனர். இது
ஒன்றும் சரியல்ல. தந்தையை அழைக் கின்றனர். மிகவும் அன்போடு
அழைக்கின்றனர். சொல்கின்றனர், பாபா, நீங்கள் எப்போது
வருகிறீர்களோ, அப்போது உங்களிடம் நாங்கள் பலியாவோம். எனக்கு
நீங்கள் மட்டுமே. வேறு யாரும் கிடையாது. ஆகவே நிச்சயமாக அவரை
நினைவு செய்ய வேண்டும். அவர் தாமே சொல்கிறார், குழந்தைகளே என்று,
ஆத்மாக் களோடு தான் பேசுகிறார். இது ஆன்மிக ஞானம் எனச்
சொல்லப்படுகின்றது. பாடப் படவும் செய்கிறது, ஆத்மா வும்
பரமாத்மாவும் நீண்டகாலமாகப் பிரிந்து இருந்து விட்டனர்..........
இதுவும் சொல்லப்பட்டுள்ள ஒரு கணக்காகும். நீண்ட காலமாக
ஆத்மாக்கள் தனியாக இருக்கிறீர்கள். நீங்கள் தான் பிறகு இச்சமயம்
தந்தையிடம் வந்திருக் கிறீர்கள். மீண்டும் தங்களின் இராஜ
யோகத்தைக் கற்பதற்காக. இந்த ஆசிரியர் சேவகராவார். ஆசிரியர்
எப்போதுமே கீழ்ப்படிதலான சேவகராக இருப்பார். பாபாவும்
சொல்கிறார், நானோ குழந்தைகள் அனைவருக்கும் சேவகன். நீங்கள்
எவ்வளவு உரிமையோடு அழைக்கிறீர்கள் - ஹே பதித-பாவனா, வந்து
எங்களைப் பாவனமாக்குங்கள் என்று. அனைவரும் பக்தர்கள். அழைக்
கின்றனர் -ஹே பகவானே வாருங்கள், எங்களை மீண்டும் பாவன
மாக்குங்கள். தூய்மையான உலகத்தை சொர்க்கம் என்றும் தூய்மையற்ற
உலகத்தை நரகம் என்றும் சொல்லப் படுகின்றது. இவையனைத்தும்
புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களாகும். இது கல்லூரி அல்லது
இறைத் தந்தையின் உலகப் பல்கலைக்கழகம். இதன் நோக்கம் குறிக்கோள்
மனிதரில் இருந்து தேவதையாக ஆவதாகும். குழந்தைகள் நிச்சயம்
செய்கின்றனர், நாம் இதுபோல் ஆக வேண்டும் என்று. யாருக்கு
நம்பிக்கை இல்லையோ? அவர்கள் பள்ளிக்கூடத்தில் அமர்வார்களா என்ன?
நோக்கம் குறிக்கோளோ புத்தியில் உள்ளது. நாம் வக்கீலாகவோ
டாக்டராகவோ ஆக வேண்டு மென்றால் படிப்போம் இல்லையா? நிச்சயம்
இல்லை என்றால் வரவே மாட்டார்கள். உங்களுக்கு நிச்சயம் உள்ளது,
நாம் மனிதரிலிருந்து தேவதையாக, நரனிலிருந்து நாராயணனாக ஆகிறோம்.
இது உண்மையிலும் உண்மையான, சத்தியமான, நரனிலிருந்து நாராயணன்
ஆவதற்கான கதை. உண்மையில் இது படிப்பு. ஆனால் இதை கதை என்று ஏன்
சொல்கின்றனர்? ஏனென்றால் 5000 ஆண்டுகளுக்கு முன்பும்
கேட்டிருக்கிறோம். நடந்து முடிந்துள்ளது. கடந்து போனதைக் கதை
எனச் சொல்வதுண்டு. இது நரனிலிருந்து நாராயணன் ஆவதற்கான கல்வி.
குழந்தைகள் மனதால் புரிந்து கொண்டுள்ளனர், புது உலகத்தில்
தேவதைகளும் பழைய உலகத்தில் மனிதர்களும் இருப்பார்கள் என்று.
தேவதைகளிடம் உள்ள குணங்கள் மனிதர்களிடம் இல்லை. அதனால் அவர்கள்
தேவதை எனச் சொல்லப் படுகின்றனர். மனிதர் கள் தேவதைகளின் முன்
தலை வணங்குகின்றனர். தாங்கள் சர்வகுண சம்பன்னமாக........
இருக்கிறீர்கள் எனச் சொல்கின்றனர். பிறகு தங்களைத் தாங்களே பாவி
என்றும் நீசர் என்றும் சொல்லிக் கொள்கின்றனர். மனிதர்கள் தான்
சொல்கின்றனர். தேவதை களுக்குச் சொல்ல மாட்டார்கள். தேவதைகள்
இருந்தது சத்யுகத்தில். கலியுகத்தில் இருக்க முடியாது. ஆனால்
தற்சமயமோ அனைவரையும் ஸ்ரீஸ்ரீ எனச் சொல்லி விடுகின்றனர். ஸ்ரீ
என்றால் சிரேஷ்டமானவர் என்று பொருள். சர்வ சிரேஷ்டமானவராகவோ
பகவான் தான் ஆக்க முடியும். சிரேஷ்டமான தேவதைகள் சத்யுகத்தில்
தான் இருந்தனர். இச்சமயம் எந்த ஒரு மனிதரும் சிரேஷ்டமானவராக
இல்லை. குழந்தைகள் நீங்கள் இப்போது எல்லையற்ற சந்நியாசம்
செய்கிறீர்கள். நீங்கள் அறிவீர்கள், இந்தப் பழைய உலகம்
முடிந்துவிடப் போகிறது.. அதனால் இவை அனைத்தின் மீதும்
வைராக்கியம் உள்ளது. அவர்களோ ஹடயோகி சந்நியாசிகள். வீடு-வாசலை
விட்டு வெளியேறிப் பிறகு மாளிகைகளில் அமர்ந்துள்ளனர். இல்லை
யென்றால் குடிசையில் இருப்ப தானால் எந்த ஒரு செலவும் கிடையாது.
தனிமைக்காகக் குடிசைகளில் அமர வேண்டி யுள்ளது, மாளிகைகளில்
அல்ல. (பிரம்மா) பாபாவுக்கும் கூட குடிசை அமைக்கப் பட்டுள்ளது.
குடிசையில் அனைத்து சுகங்களும் உள்ளன. இப்போது குழந்தைகள்
நீங்கள் புருஷார்த்தம் செய்து மனிதரில் இருந்து தேவதை ஆக
வேண்டும். நீங்கள் அறிவீர்கள், டிராமாவில் நடந்து முடிந்த
ஒவ்வொன்றும் திரும்பவும் அப்படியே நடைபெறும். அதனால் யாருக்கும்
பக்தியை விட்டுவிடுங்கள் என்று அறிவுரை தர வேண்டாம். ஞானம்
புத்தியில் வந்து விடுகிறது என்றால் புரிந்து கொள்வார்கள், நாம்
ஆத்மா, நாம் இப்போதோ எல்லையற்ற தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெற
வேண்டும். எல்லையற்ற தந்தையின் அறிமுகம் எப்போது கிடைக்கிறதோ,
அதன் பிறகு எல்லைக்குட்பட்ட விஷயங்கள் முடிந்து போகும். பாபா
சொல்கிறார், இல்லற விவகாரங்களில் இருந்து கொண்டே புத்தியோகத்தை
மட்டும் பாபாவிடம் ஈடுபடுத்த வேண்டும். சரீர நிர்வாகத்திற்காக
கர்மமும் செய்ய வேண்டும். எப்படி பக்தியிலும் கூட ஒரு சிலர்
தீவிர பக்தி செய்கின்றனர். நியமப்படி தினந்தோறும் சென்று
தரிசனம் செய்கின்றனர். தேகதாரி களிடம் செல்வது எல்லாமே சரீர
சம்மந்தமான யாத்திரையாகும். பக்தி மார்க்கத்தில் எவ்வளவு அடி
வாங்க வேண்டி உள்ளது. இங்கே கொஞ்சம் கூட அடி முதலியன வாங்க
வேண்டி இருக்காது. வருகிறார்கள் என்றால் புரிய வைப்பதற்காக அமர
வைக்கப்படுகிறார்கள். மற்றப்படி நினைவு செய்வதற்காக என்று
யாரும் ஓரிடத்திலேயே அமர்ந்துவிடக் கூடாது. பக்தி மார்க்கத்தில்
சிலர் கிருஷ்ணரின் பக்தராக உள்ளனர் என்றால் நடந்து சுற்றி வரும்
போது அவர்களால் நினைவு செய்ய முடியாது என்பதில்லை. அதனால்
எழுதப் படிக்கத் தெரிந்த மனிதர்கள் சொல்கின்றனர், கிருஷ்ணரின்
சித்திரம் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது, பிறகு நீங்கள் ஏன்
கோவில்களுக்குச் செல்கிறீர்கள்? கிருஷ்ணரின் சித்திரத்திற்குப்
பூஜை செய்ய வேண்டுமானால் நீங்கள் எங்கே வேண்டுமானாலும்
செய்யலாம். நல்லது, சித்திரத்தை வைக்க வேண்டாம், நினைவு செய்து
கொண்டே இருங்கள். ஒரு முறை ஒரு பொருளைப் பார்த்து விட்டால்
பிறகு அது நினைவிருக்கும். உங்களுக்கும் இதையே சொல்கின்றனர்,
நீங்கள் சிவபாபாவை வீட்டில் அமர்ந்தவாறே நினைவு செய்ய முடியாதா?
இதுவோ புது விஷயம். சிவபாபாவை யாரும் அறிந்து கொள்ளவில்லை.
அவருடைய பெயர், வடிவம், தேசம், காலம் பற்றித் தெரியவே தெரியாது.
சர்வவியாபி எனச் சொல்லி விடுகின்றனர். ஆத்மாவைப் பரமாத்மா என்றோ
சொல்ல முடியாது. ஆத்மாவுக்குத் தந்தையின் நினைவு வருகிறது.
ஆனால் பாபாவைத் தெரியாது என்றால் 7 நாட்களுக்குப் புரிய வைக்க
வேண்டும். பிறகு சின்னச் சின்னப் பாயின்ட்டுகளும் புரிய
வைக்கப்படுகிறது. பாபா ஞானக்கடல் இல்லையா? எவ்வளவு காலமாகக்
கேட்டே வந்திருக்கிறீர்கள்! ஏனென்றால் ஞானம் அல்லவா? புரிந்து
கொண்டிருக்கிறீர்கள், நாம் மனிதரில் இருந்து தேவதை ஆவதற்கான
ஞானம் கிடைக்கின்றது. உங்களுக்கு புதிய புதிய ஆழமான விசயங்களைக்
கூறுகிறேன் என பாபா கூறுகிறார். முரளி கிடைக்கவில்லை என்றால்
நீங்கள் எவ்வளவு கூப்பாடு போடுகிறீர்கள்! பாபா சொல்கிறார்,
நீங்கள் பாபாவையோ நினைவு செய்யுங்கள். முரளி படிக்கிறீர்கள்.
பிறகும் மறந்து விடுகிறீர்கள். முதல்-முதலிலோ இதை நினைவு செய்ய
வேண்டும் - நான் ஆத்மா, இவ்வளவு சிறிய புள்ளியாக இருக்கிறேன்.
ஆத்மாவையும் அறிந்து கொள்ள வேண்டும். சொல்கின்றனர், இவருடைய
ஆத்மா வெளியேறி இன்னொரு வருக்குள் பிரவேசமாகி விட்டது என்று.
நாம் ஆத்மா தான் பிறவி எடுத்து-எடுத்து இப்போது பதித்,
அபவித்திரமாக ஆகி விட்டிருக் கிறோம். முதலில் நீங்கள் பவித்திர
இல்லற தர்மத்தினராக இருந்தீர்கள்.
லட்சுமி-நாராயணர் இருவரும் பவித்திரமாக இருந்தனர். பிறகு
இருவருமே அபவித்திரமாக ஆயினர். மீண்டும் இருவரும்
பவித்திரமாகின்றனர் என்றால் அபவித்திர நிலையில் இருந்து
பவித்திரமானார்களா? அல்லது பவித்திர ஜென்மம் எடுத்தார்களா? பாபா
அமர்ந்து புரிய வைக்கிறார், எப்படி நீங்கள் பவித்திரமாக
இருந்தீர்கள் என்பதை. பிறகு வாமமார்க்கத்தில் செல்வதன் மூலம்
அபவித்திரமாகி இருக்கிறீர்கள். பூஜாரியை அபவித்திரமானவர்
என்றும், பூஜைக்குரியவரை பவித்திரமானவர் என்றும் சொல்வார்கள்.
முழு உலகத்தின் சரித்திர-பூகோளம் உங்கள் புத்தியில் உள்ளது.
யார்-யார் இராஜ்யம் செய்தார்கள்? எப்படி அவர்களுக்கு இராஜ்யம்
கிடைத்தது? இதை நீங்கள் அறிவீர்கள், வேறு யாருக்கும் இது
பற்றித் தெரியாது. உங்களிடமும் இதற்கு முன்பு இந்த படைப்பவர்-
படைப்பின் முதல்-இடை-கடை பற்றிய இந்த ஞானம் இருந்ததில்லை.
அப்படியானால் நாஸ்திகராக இருந்தீர்கள் என்றாகிறது. அறியாமல்
இருந்தீர்கள். நாஸ்திகர் ஆவதால் எவ்வளவு துக்கம்முடையவர்களாக
ஆகி விடுகின்றனர்! இந்த தேவதை ஆவதற்காக இப்போது நீங்கள் இங்கே
வந்திருக்கிறீர்கள். அங்கே எவ்வளவு சுகமாக இருப்பீர்கள்!
தெய்வீக குணங்களையும் இங்கே தாரணை செய்ய வேண்டும். பிரஜாபிதா
பிரம்மாவின் குழந்தைகள் சகோதர- சகோதரிகள் ஆகின்றனர் இல்லையா?
குற்றமான பார்வை செல்லக் கூடாது. இதில் தான் முயற்சி இருக்க
வேண்டும். கண்கள் மிகவும் குற்றமானவை. அனைத்து உறுப்புகளிலும்
கண்கள் குற்றமானவை யாகும். அரைக் கல்பம் குற்றமானவை யாகவும்,
அரைக்கல்பம் குற்றமற்றவையாகவும் (தூய்மை யானதாக) உள்ளன.
சத்யுகத்தில் குற்றமுள்ளதாக இருப்பதில்லை. கண்கள்
குற்றமுள்ளதாக இருந்தால் அசுரர் எனச் சொல்லப் படுவார்கள். பாபா
தாமே சொல்கிறார், நான் பதித் உலகத்தில் வருகிறேன். யார் பதீத்
ஆகி விட்டிருக்கிறார்களோ, அவர்கள் தான் பாவனமாக வேண்டும்.
மனிதர்களோ, இவர் (பிரம்மா) தம்மை பகவான் எனச் சொல்லிக்
கொள்கிறார் என்கிறார்கள். கல்பவிருட்சத்தில் பாருங்கள், இவர்
முழு தமோபிரதான உலகின் கடைசியில் (உச்சியில்) நின்று
கொண்டிருக்கிறார். அவர் தான் பிறகு தபஸ்யா செய்து
கொண்டிருக்கிறார். சத்யுகத்திலிருந்து லட்சுமி-நாராயணரின் அரச
பரம்பரை நடைபெறுகின்றது. சகாப்தமும் இந்த லட்சுமி-நாராயணரில்
இருந்து கணக்கிடப்படும். அதனால் பாபா சொல்கிறார்,
லட்சுமி-நாராயணரின் இராஜ்யத்தைக் காட்டுகிறீர்கள் என்றால் 1250
ஆண்டுகளுக்குப் பிறகு திரேதாயுகம் என எழுதி வையுங்கள்.
சாஸ்திரங்களில் பிறகு இலட்சக் கணக்கான ஆண்டுகள் என எழுதி
விட்டுள்ளனர். இரவு-பகலுக்குள்ள வேறு பாடாகிறது இல்லையா?
பிரம்மாவின் இரவு அரைக்கல்பம், பிரம்மாவின் பகல் அரைக்கல்பம்.
இந்த விஷயங்களை பாபா தான் புரிய வைக்கிறார். பிறகும்
சொல்கிறார்-இனிமை யான குழந்தைகளே, தங்களை ஆத்மா என உணருங்கள்,
தந்தையை நினைவு செய்யுங்கள். அவரை நினைவு செய்து-செய்தே நீங்கள்
பாவனமாகி விடுவீர்கள். பிறகு அந்த் மதி ஸோ கதி (கடைசியில்
உங்கள் நிலையும் அவ்வாறே ஆகிவிடும்). இங்கேயே அமர்ந்து
விடுங்கள் என்று பாபா சொல்வ தில்லை. சேவை செய்யக்கூடிய குழந்தை
களையோ ஓரிடத்தில் அமர்த்தி வைக்க மாட்டார். சென்டர்கள்,
அருங்காட்சியகங்கள் முதலியவற்றைத் திறந்து கொண்டே இருப்பார்கள்.
எவ்வளவு பேருக்கு அழைப்பு அனுப்புகின்றனர்! வந்து ஈஸ்வரிய
பிறப்புரி மையை, உலகத்தின் இராஜ பதவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
நீங்கள் தந்தையின் குழந்தை கள். தந்தை சொர்க்கத்தைப் படைப்பவர்
என்றால் உங்களுக்கும் சொர்க்கத்தின் ஆஸ்தி இருக்க வேண்டும்.
தந்தை சொல்கிறார், நான் ஒரு முறை மட்டுமே சொர்க்கத்தின் ஸ்தாபனை
செய்வதற்காக வருகிறேன். ஒரே உலகத்தின் சக்கரம் தான் சுற்றிக்
கொண்டே உள்ளது. மனிதர்களுக்கோ அநேக வழிமுறைகள், அநேக விஷயங்கள்.
வழிமுறைகள் எத்தனை உள்ளன! இது அத்வைத மத் (ஒரே வழிமுறை) எனச்
சொல்லப்படுகின்றது. மரம் எவ்வளவு பெரியதாக உள்ளது! எவ்வளவு
கிளைகள் வெளிப் படுகின்றன! எத்தனை தர்மங்கள் பரவிக்
கொண்டிருக்கின்றன! முதலிலோ ஒரே வழிமுறை, ஒரே இராஜ்யம் இருந்தது.
முழு உலகத்தின் மீதும் இவர்களின் இராஜ்யம் இருந்தது. இதுவும்
இப்போது தான் உங்களுக்குத் தெரிந்திருக் கிறது. நாம் தான் முழு
உலகத்திற்கும் எஜமானாக இருந்தோம். பிறகு 84 பிறவிகள் எடுத்து
ஏழையாக ஆகி விட்டுள்ளோம். இப்போது நீங்கள் காலன் மீது வெற்றி
கொள்கிறீர்கள். அங்கே ஒரு போதும் அகால மரணம் நிகழ்வதில்லை.
இங்கோ பாருங்கள், உட்கார்ந்தவாறே அகால மரணம் ஏற்பட்டுக் கொண்டே
இருக்கிறது. நாலாபுறமும் மரணங்கள் தான்! அங்கே இதுபோல்
நடப்பதில்லை. பாரதத்தில் தூய்மை, அமைதி, செல்வச் செழிப்பு
அனைத்தும் இருந்தது. 150 ஆண்டுகள் சராசரி ஆயுள் இருந்தது.
இப்போது எவ்வளவு ஆயுள் உள்ளது? ஈஸ்வரன் உங்களுக்கு யோகம் (இராஜயோகம்)
கற்பித்தார் என்றால் உங்களை யோகேஸ்வர் என அழைக்கிறார்கள். அங்கே
அதுபோல் சொல்ல மாட்டார்கள். இச்சமயம் நீங்கள் யோகேஸ்வர்.
உங்களுக்கு ஈஸ்வரன் இராஜயோகம் கற்பித்துக் கொண்டிருக்கிறார்.
பிறகு ராஜ-ராஜேஸ்வர் ஆகப் போகிறீர்கள். இப்போது நீங்கள்
ஞானேஸ்வர். பிறகு ராஜேஸ்வர், அதாவது ராஜாவுக்கெல்லாம் மேலான
ராஜா ஆவீர்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) கண்களைக் குற்றமற்றதாக ஆக்குவதற்கான முயற்சி செய்ய வேண்டும்.
நாம் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் சகோதர-சகோதரிகள்,
குற்றமான பார்வை வைக்க முடியாது என்பது எப்போதும் புத்தியில்
இருக்க வேண்டும்.
2) சரீர நிர்வாகத்திற்காகக் கர்மங்கள் செய்து கொண்டே புத்தியின்
நினைவை ஒரு தந்தையிடம் ஈடுபடுத்த வேண்டும். எல்லைக்குட்பட்ட
அனைத்து விசயங்களையும் விட்டு விட்டு எல்லையற்ற தந்தையை நினைவு
செய்ய வேண்டும். எல்லையற்ற சந்நியாசி ஆக வேண்டும்.
வரதானம்:
பாபா என்ற சப்தத்தின் நினைவின் மூலமாக, காரணத்தை - நிவாரணமாக
மாற்றம் செய்யக்கூடிய சதா ஆடாத, அசையாதவராக ஆகுக.
எந்த ஒரு சூழ்நிலையாக இருப்பினும் - அது எத்தனை அமைதியற்ற
சூழ்நிலையாக இருப்பினும், பாபா என்று சொல்லி-அசையாதவராக (உறுதியான
மனோநிலை உடையவராக) ஆகுங்கள். எப்பொழுது சூழ்நிலையின்
சிந்தனையில் சென்று விடுகின்றீர்களோ அப்பொழுது கஷ்டத்தின்
அனுபவம் ஏற்படுகின்றது. ஒருவேளை காரணத்திற்கு பதிலாக
நிவாரணத்தில் சென்று விடுவீர்கள் என்றால், காரணமே நிவாரணமாக
ஆகிவிடும். ஏனெனில் மாஸ்டர் சர்வ சக்திவானாகிய பிராமணர் களுக்கு
முன்னால்-சூழ்நிலை என்பது எறும்புக்கு கூட சமமானது கிடையாது.
என்ன நடந்தது, ஏன் நடந்தது என்று யோசிப்பதற்கு பதிலாக - எது
நடந்ததோ அதில் நன்மை நிறைந்திருக்கின்றது, சேவை அடங்கி
இருக்கின்றது (என்று எண்ணுங்கள்) . . . ரூபம் சூழ்நிலையாக
இருக்கலாம், ஆனால் சேவை அடங்கி இருக்கின்றது - இந்த ரூபத்தில்
பார்த்தீர்கள் என்றால் சதா ஆடாத, அசையாதவராக இருப்பீர்கள்.
சுலோகன்:
ஒரு தந்தையின் தாக்கத்தில் இருக்கக் கூடியவர்கள் எந்த ஒரு
ஆத்மாவின் தாக்கத்திலும் வர முடியாது.
அவ்யக்த சமிக்ஞை: இப்பொழுது சம்பன்னம் மற்றும் கர்மாதீத்
ஆவதற்காக ஆர்வத்துடன் செயல்படுங்கள்.
கர்மாதீத் (கர்மங்களை வென்ற) மனோநிலையை - பலனாக பெறுவதற்கு -
சதா சாட்சியாளர் ஆகி காரியங்களை செய்யுங்கள். சாட்சியாளர்
என்றால் அர்த்தம் - சதா விடுபட்ட மற்றும் அன்பான மனோநிலையில்
இருந்து காரியம் செய்யக்கூடிய - அலௌகீகமான ஆத்மாவாக
இருக்கின்றேன்... அலௌகீக அனுபவத்தை செய்யக்கூடிய, அலௌகீக
வாழ்க்கை, உயர்ந்த வாழ்க்கை வாழக் கூடிய ஆத்மாவாக இருக்கின்றேன்
- என்ற இந்த நஷா இருக்கட்டும். காரியங்கள் (கர்மங்கள்) செய்து
கொண்டே இந்த பயிற்சியை அதிகரித்துக் கொண்டே செல்லுங்கள்
அப்பொழுது கர்மாதீத் மனோ நிலையை பலனாக பெற்று விடுவீர்கள்.
|
|
|
|