05.04.26 காலை முரளி
ஓம் சாந்தி 15.11.2009 பாப்தாதா,
மதுபன்
சுயராஜ்யத்தின் ரிசல்ட்டை சோதனை செய்து தன்னை மாற்றுங்கள் -
நீண்டகால இராஜ்ய அதிகாரி ஆகுங்கள்
இன்று திலாராம் தந்தை தனது அன்புச் செல்வங்களான குழந்தைகளை
சந்திக்க வந்துள்ளார். செல்ல மானவர்கள் ஏன்? நீங்கள் ஒவ்வொரு
குழந்தையுமே மூன்று ஆசனத்திற்கு அதிகாரிகள் என்பது தெரியுமா?
ஒன்று சுயராஜ்ய ஆசனம், மற்றொன்று பாப்தாதாவின் உள்ளமெனும் ஆசனம்.
மூன்றாவது நாளைய அரியாசனம் (சொர்க்கத்தின் அரியாசனம்). மூன்று
அரியணைக்கும் அதிகாரி கள் நீங்கள். நாளைய அரியணைக்கான
பயிற்சியும் இங்கேயே செய்கின்றீர்கள். நாளை அரியணைக்கான.
ஏற்பாட்டிற்கான முயற்சியும் இங்கேயே செய்கின்றீர்கள். இப்போதைய
முயற்சி அனேக பிறவிகளுக்கான இராஜ்ய அதிகாரத்தினைப் பெற்றுத்
தருகின்றது. தனது இராஜ்ய பாக்கியத்திற்கான சம்ஸ்காரத்தை இப்போதே
நடைமுறைப்படுத்துகின்றீர்கள். ஏனெனில் இன்றைய முயற்சி நாளை
இராஜ்ய அதிகாரியாக மாற்றுகின்றது. ஆகவே சோதனை செய்யுங்கள்.
இப்போதைய தனது முயற்சி யதார்த்தமாக உள்ளதா? நாளை ஒர இராஜ்யம்
இருப்பது போன்று இன்று என் மனதில் இராஜ்யம் நடைபெறுகின்றதா?
முயற்சியில் ஒரே இராஜ்யம் உள்ளதா? அல்லது மாயை இராஜ்யத்தில்
தடைபோடுகின்றதா? ஒரு இராஜ்யத்திற்கு பதிலாக மாயையின் தாக்குதல்
ஏற்படுகின்றதா? இராஜ்யம் இரண்டாக இல்லையே? ஒரே இராஜ்யமே நாளைய
இராஜ்யத் தின் சிறப்பம்சமாகும். இன்றைய முயற்சியே நாளை
நடைபெறுகின்றது. இன்று சுயராஜ்ய முள்ளதா என சோதனை செய்யுங்கள்.
சுய இராஜ்யத்தின் இடையே மாயை இடைமறிப்பதில்லை தானே? இரு
இராஜ்யம் இல்லையே? மாறாக இரு இராஜ்ய சம்ஸ்காரம் உள்ளதெனில் ஒரு
இராஜ்யத்தின் சம்ஸ்காரத்தை எப்போது தன்னுள் நிரப்புவீர்கள்?
நாளை இராஜ்யத்தின் சிறப்பம்ச மவாது ஒரு இராஜ்யம், ஒரு தர்மம்.
என்ன தர்மம்? உங்களது விசேஷ தாணை என்ன? பரிபூரண தூய்மை. ஒரு
தர்மம் உள்ளதா என சோதனை செய்யுங்கள். இடையில் பிற தர்மம்
இடைமறித்து தூய்மையை குறைப்பதில்லையே? தடையின்றி ஒரே இராஜ்யம்
நடைபெறுகின்றதா? மற்றொரு விசயம் இராஜ்யத்தில் சுகம், சாந்தி
நிலவுகின்றதா? ஆக இன்று தனது இராஜ்யத்தில் சதா சுகம், சாந்தி
உள்ளதா? அத்துடன் சட்டம் ஒழுங்கு ஒருவரிடம் உள்ளதா? மாயையும்
இடைமறிக்கிறதா? தடையின்றி ஒன்றுபட்ட இராஜ்யம் நடைபெறுகின்றதா?
மேலும் இராஜ்யத்தில் சதா சுகம், சாந்தி உள்ளதா? அவ்வாறே
இப்போதும் தனது இராஜ்யத்தில் சுகம், சாந்தி உள்ளதா? எந்த
இடையூறும் இல்லை தானே? சுய ராஜ்யத்தில் மாயை தலையிட்டு அமைதியை
குலைக்கின்றதா? சுய இராஜ்யத் தில் தீர்வும், மகிழ்வும் மாயை
தருகின்றதா என்ன? என்றென்றும் சுகம், சாந்தி, ஆனந்தம், அன்பு,
அதீந்திரிய சுகம் நிலையாக உள்ளதா? ஏனெனில் குறை உள்ளது தெரியுமா?
நாளைய வாழ்வில் சர்வ பிராப்தி, சுகம் இருப்பதாலேயே திருப்தி
உள்ளது. இன்றைய முயற்சியிலேயே குறை இருப்பின் நாளை நீண்டகால
இராஜ்யம் பெறுவது எப்படி? அனைத்திற்கும் ஆதாரம் இன்றய முயற்சியே.
இன்று ஏதேனும் ஒரு குறையிருந்தாலும் நாளை பரிபூரண இராஜ்யம் பெற
இயலாது. நீண்டகால சுயராஜ்ய பயிற்சியே நாளைய இராஜ்ய அதிகாரியாக
மாற்றுகின்றது. நீண்டகால முயற்சி இல்லையெனில் பலனும் குறைவாகவே
கிடைக்கும். எனவே நேரத்திற்கேற்ப பாப்தாதா நீண்டகால முழுமையான
பரிபூரண தன்மையில் கவனத்தை ஈர்க்கின்றார். எனவே தன்னை
பரிபூரணத்தன்மை அடையப் பெற்றவராக்குங்கள். இப்போது முயற்சி
செய்து தன்னை பரிபூரணத் ததன்மை அடைய பெற்றவராக்குங்கள். இப்போது
முயற்சி செய்கிறோம். ஆனால் ஆனால் என்று சொல்லவில்லையே. இது
நடந்து விடும், இது ஆகிவிடும். இந்த சம்ஸ்காரம் அழியாத 21
பிறவிக்கு நீண்டகால இராஜ்ய அதிகாரத்தை பெறவிடாது. பாப்தாதா
எப்போதும் கவனம் தருகின்றார், ஏதேனும் தடை புயல் போல் வந்தாலும்
அது பரிசாக மாறுகின்றதா? புயல், புயல் அல்ல, அது ஒரு பரிசு.
ஏதேனும் புயல் போரிட்டாலும் அது நம்மை அனுபவியாக ஆக்கி
முன்னேற்றுகின்றது என்ற அனுபவம் ஆகின்றதா? எனவே தனது பதிவேட்டை
தானே சோதனை செய்யுங்கள். எந்தளவு சோதனை செய்வீர்களோ, அந்தளவே
மாற்றமும் ஏற்படும். ஒவ்வொருவரும் தனது பதிவேட்டை சோதனை
செய்யுங்கள், சோதனை செய்கின்றீர்களா? தினமும் தன்னை சோதிப்பவர்
கை உயர்த்துங்கள். தினசரி சோதிப்பவர் - அவ்வப்போது அல்ல.
தினமும் சோதனை செய்து மாற்றுங் கள். ஏனெனில் நேரத்தின்
முக்கியத்து வத்தை பாப்தாதா நீண்டகாலமாகவே கூறிவருகின்றார்.
நேரத்தையும் பார்க்கின்றீர்கள், மனித மனம் அதிகமாக
புன்படுகின்றது. உங்கள் மனதில் கவலையில்லை - சிந்தனையே உள்ளது.
பிரபுவின் சிந்தனை செய்வதால் தன்னை நிமித்தமாக, பணிவுள்ளவராக
செய்பவர் செய்விப்பவர் தந்தை என உணர்கின்றீர்கள். இதனால் உங்கள்
மனதில் கவலையில்லை. செய்பவர் செய்ய வைக்கின்றார் என்ற நினைவு
சதா முன்னேற்றிக் கொண்டே செல்கின்றது.
இப்போது ஒவ்வொருவரும் முக்கியமாக இந்த சங்கமயுகத்தில் ஒவ்வொரு
நொடியும், எண்ணமும், சுபமாக உள்ளதா என சோதனை செய்யுங்கள்.
இப்போது ஒரு நொடி, ஒரு நொடி மிகவும் மதிப்பு வாய்ந்தது. சில
சமயம் 2, 4 நிமிடம் எண்ணம் சென்றது என்று குழந்தைகள்
கூறுகின்றார்கள். ஆனால் சங்கமயுகத்தில் ஒரு நிமிடம் ஒரு மணி
நேரமாகும். ஏனெனில் திடீரென்று இறுதித் தேர்வு வரும் என்று
பாப்தாதா கூறியுள்ளார். பாப்தாதாவும் எப்போது என கூறமாட்டார்,
இப்போது தனக்குத்தானே கவனம் வைத்து பரிபூரண முழுமை பெறுங்கள்.
பாப்தாதா கொடுத்துள்ள பொக்கிஷங்களை தக்க சமயத்திற்ககேற்ப
செயல்படுத்துங்கள். சொத்துக்களின் அதிகாரி. அதிகாரி யின்
சிறப்பியல்பு நேரத்திற்கேற்ப, தேவைக்கேற்ப சொத்தை
செயல்பாடுத்துவார். உள்ளடக்கும் சக்தியை வா என்றவுடன் வந்து
நிற்கிறதா? ஏனெனில் காலத்திற்கேற்ப செயலில் சக்திகளை
பயன்படுத்துபவரே அதிகாரி ஆவார். இப்போது அனைவரும் தன்மீது
அவ்வளவு கவனம் தர வேண்டும். அனைவரிடமும் மகிழ்ச்சியெனும்
பொக்கிஷம் முகத்திலும், செயலிலும் தென்பட வேண்டும்.
மகிழ்ச்சியென்பது அழிவற்ற தந்தையின் வரபிரசாதம். ஆகவே அழியாத
தந்தையின் வரபிரசாதத்தை அழியாது வைத்துக்கொள்ளுங்கள்.
மகிழ்ச்சியைப் போன்று மருந்து வேறான்று மில்லை என
சொல்லப்படுகின்றது. மகிழ்ச்சியைப் போன்ற சொத்தும் வேறில்லை.
யாரிடம் உள்ளத்தில் என்றென்றும் மகிழ்ச்சியிருக்குமோ அவரது
கண்கள், முகம், நடத்தை அனைத்திலும் மகிழ்ச்சி தென்படும்.
பாப்தாதாவின் வரதானம் சதா குஷியாக இருங்கள். எப்போதும் குஷியை
பகிர்ந்து அளியுங்கள். ஏனெனில் கொடுக்கக் கொடுக்க அதிகரிக்கும்.
மற்ற சொத்துக்கள் கொடுப்பதால் குறையும். ஆனால் மகிழ்ச்சி
என்றுமே குறையாது. எவ்வளவு கொடுப்பீர்களா அவ்வளவு அதிகரிக்கும்.
ஆகவே மகிழ்ச்சி எனும் பொக்கிஷம் சதா அழியாமல் உள்ளதா? சோதனை
செய்யுங்கள்.
இப்போது உள்நாடு மற்றும் அயல் நாட்டு குழந்தைகள் அனைவருக்கும்
பாப்தாதா விசேஷமாக ஒரு விசயத்திற்காக வாழ்த்து தருகின்றார்.
என்ன விசயம் அது? உள்நாடு மற்றும் வெளிநாடு குழந்தைகள் அனைவருமே
ஊக்கம், உற்சாகத்துடன் ஆத்மாக்களுக்கு தந்தையின் செய்தியைத்
தருகின்றனர். எல்லோரும் மகிழ்ச்சியுடன் நிகழ்ச்சிகள்
செய்தீர்கள். அதற்கான பலன் ஆயிரம் மடங்கு பிராப்தமாகின்றது.
இனிவரும் காலம் மிகவும் கடுமையானது. யாருமே தந்தை வந்தது
தெரியவில்லையே என்ற புகார் செய்யக்கூடாது. இதுவே பாப்தாதாவின்
சங்கல்பம். இதற்காக அனைவரும் ஊக்கம் உற்சாகத்துடன்,
தைரியத்துடன் அவரவர் விதிப்படி செயல்பட்டீர்கள். இதுவரை செய்தது
நல்லதே. இனியும் எந்த ஒரு மூலையிலும் தந்தை வந்த செய்தி சென்று
சேராமல் நின்று விடக்கூடாது. இதில் தனக்கான சுய முயற்சியும்
முன்னேற்றமும் அடைகின்றது. உலக ஆத்மாக்களுக்கும் நன்மை
ஏற்படுகின்றது. அனைவருக்கும் இந்த நிகழ்ச்சி பிடித்துள்ளது
அல்லவா? பிடித்துள்ளதா! அனைவர் மீதும் இரக்கம் வையுங்கள் என்றே
மீண்டும் மீண்டும் பாப்தாதா கூறுகின்றார். இப்போதெல்லாம்
துக்கம், அமைதியின்மையால் அனைவரும் மனதால் கூறுகின்றனர்
இருப்பவர் அனைவருக்கும் இரக்கம் காட்டுங்கள், கருணை செய்யுங்கள்
என்று. குழந்தைகளாகிய நீங்களே தந்தையின் துணையாவீர்கள். உங்கள்
மூலமாகவே ஒவ்வொரு வரையும் கருணை உள்ளம் கொண்டவராக பாபா பார்க்க
விரும்புகின்றார். இந்த துக்கமயமான உலகம் சுகமயமாக மாற வேண்டும்
என்பது தானே உங்கள் விருப்பம். சுகமயமான உலகம் வருவதற்கு
துக்கம் அசாந்தி விநாசம் ஆக வேண்டும். ஆதனால் சூழ்நிலை
அனைத்தும் மாற்றமடைகின்றது. இன்றைய செய்தி பாபா தருவது இதுவே.
நினைவில் வையுங்கள். மனம், சொல், செயல், நடத்தையில் சேவையின்
வேகம் துரிதமடையட்டும். தனது இராஜ்யத்தை அருகே கொண்டு வாருங்கள்.
நல்லது.
இப்போது முதன் முறையாக பாப்தாதாவை சந்திக்க வந்துள்ளவர்கள் கை
உயர்த்துங்கள். மிக நல்லது. அனைவரும் எழுந்து நில்லுங்கள்.
வாழ்த்துக்கள். முடிவிற்கு முன்பே வந்து விட்டீர்கள். புதிய
பிறவி எடுத்துள்ளீர் கள். அனைவர் சார்பாகவும் பாப்தாதா மற்றும்
குழந்தைகள் அனைவரது வாழ்த்துக்களும், வாழ்த்துக்கள். பிராமண
பரிவாரத்தைப் பார்த்து மகிழ்ச்சி வருகிறதா? இப்போது
வந்திருப்பவர்களுக்கு பாப்தாதா கூறுவது இதுவே தான். அதிக காலம்
கடந்து விட்டது. மீதம் இருப்பது சிறிது காலம். எனவே முயற்சியை
தீவிரப்படுத்த வேண்டும். தீவிர முயற்சியாளர்கள் முன்னேறிச்
செல்வார்கள். நடப்பதல்ல, பறக்க வேண்டும். பறக்கும் கலையில்
முயற்சி செய்தால் இறுதியாக வந்திருந்தாலும் தந்தையின் ஆஸ்தியை
முழுமையாக பெறும் உரிமை உள்ளது. ஒவ்வொரு நொடியும்
மகிழ்ந்திடுங்கள். அனைவருக்கும் செய்தியை தருங்கள். நல்லது.
இன்று பாப்தாதா கூறிய சுய ராஜ்ய அதிகாரி ஆகி சுய ராஜ்யத்தின்
ரிசல்டை சோதனை செய்வதால் நீண்டகால மாற்றம் செய்ய முடியும்.
ஏனெனில் நீண்டகால இராஜ்யம் நடத்த இது மிக அவசியம் ஆகும்.
நீண்டகால முயற்சியே நீண்டகால பலனைப் பெறும். அதிகாரியாக
மாற்றும், நீண்டகால முயற்சி என்பதனை அடிக்கோடிட்டு வையுங்கள்.
சோதனை செய்து மாற்றுங்கள்.
நாலாபுறமும் உள்ள பாப்தாதாவின் உள்ளமெனும் ஆசனத்தில்
உறைந்துள்ள குழந்தைகள் ஒவ்வொரு வருக்கும் பாப்தாதா தினமும்
அமிர்தவேளையில் சிறப்பான சக்திகளை வழங்கு கின்றார்.
அமிர்தவேளையில் சிறப்பாக வரதானமும் சக்தியும் தருகின்றார்.
அமிர்தவேளையில் விசேஷ சக்திகளை வரதானமாக பெறுபவர்கள் தீவிர
முயற்சியாளர் ஆகின்றனர். அமிர்த வேளையின் மகிமை புரிந்து
பாப்தாதாவின் உள்ளமெனும் ஆசனத்தில் அமர்ந்திடுங்கள். விசேஷ மாக
கவனம் வைக்கின்ற குழந்தைகளுக்கு பாப்தாதா தினமும் ஆஹா
குழந்ûதாய் ஆஹா என்றும் சான்றிதழும் தருகின்றார்.
நாலாபுறமும் உள்ள தீவிர முயற்சியாளர்கள், ஒவ்வொரு நேரமும்
பாப்தாதாவை தன் துணையாக வைத்து இணைந்திருக்கும் பயிற்சி
செய்யும் குழந்தைகளுக்கு பாப்தாதா சிறப்பு வரதானம் தருகின்றார்.
சதா பறந்து கொண்டேயிருங்கள், பிறருக்கும் பறப்பதற்கான
ஒத்துழைப்பு கொடுத்து பறக்க வையுங்கள். அனைவரும் வெற்றியாளரே.
வெற்றிக்கான பலன் பாப்தாதா என்றென்றும் ஆசிகளாக வழங்கிக்
கொண்டிருக்கின்றார். அமரராகி அனைவருக்கும் அமிர்தம் வழங்கிக்
கொண்டேயிருங்கள். நாலாபுறமும் உள்ள குழந்தைகளும் பாப்தாதாவிற்கு
எதிரில் உள்ளனர். ஒவ்வொரு குழந்தையிடம் பாப்தாதாவிற்கு
உள்ளப்பூர்வமான அன்பு உள்ளது. ஏனெனில் ஒவ்வொரு குழந்தையிடமும்
ஏதேனும் ஒரு சிறப்பு அம்சம் உள்ளது. இப்போது அனேக விசேஷத்
தன்மைகளால் தன்னை விசேஷ ஆத்மாவாக மாற்றிக் கொண்டு முன்னேறிக்
கொண்டே யிருங்கள். பாப்தாதாவின் ஒவ்வொரு குழந்தைகளுக்கும்
தனித்தனியே பன்மடங்கு அன்பு நினைவுகள் உரித்தாகுக. நல்லது.
சந்தித்துக் கொண்டே இருப்போம். நமஸ்தே.
தாதிமார்களுடன்:
அனைவரும் நன்றாக சுற்றி வலம் வந்தீர்கள். இன்றை உலகில்
அமைதியின்மை அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றது. எனவே நாள்
முழுவதும் மன உளைச்சலில் இருக்கின்றனர். உங்களது அமைதியான
வைப்ரேஷன் அமைதி தருகின்றது. மகிழ்கின்றனர். களைத்துப்போனால்
அரை மணி நேரம் ஓய்வு கிடைத்தாலும் மகிழ்வர். நன்றாக செய்தீர்கள்.
சிறிய பெரிய அனைத்து இடங்களிலும் அனைவரும் நன்றாகவே செய்தீர்கள்.
ஊக்கம் இருக்கும் இடத்தில் செலவு என்பது பொருட்டல்ல. இத்தனை
ஆத்மாவிற்கு செய்தி கிடைத்து. உங்களது புகார் முடிந்து விடும்.
நல்லது. இவ்வாறு இடையிடையே நிகழ்ச்சிகளை நடத்துங்கள். அவரவர்
இடத்திற்கேற்ப எப்படி செய்தாலும் சரியே.
இரட்டை அயல் நாட்டு மூத்த சகோதரிகளுடன்:
பாப்தாதாவிற்கு குழு குழுவாக அழைத்து புத்துணர்ச்சி செய்வது
நன்றாக பிடித்துள்ளது. ஏனெனில் அவர்கள் வெகு தொலைவில் உள்ளனர்.
அருகே வரும்போது ஒவ்வொருவரின் குணம் தெரிகின்றது. தொலைவில்
தெரிவதில்லை. ஒருவருக்கொருவர் பார்க்கும் போது ஊக்கம்
எழுகின்றது. அபுவில் இந்த நிகழ்ச்சி நன்றாக உள்ளது.
ஒருவருக்கொருவர் ஊக்கம், உற்சாகம் நிரம்பும் இந்த குழு
உறுதியானது. நல்லது. சரியே. அனைத்தும் நன்றாகவே நடைபெறுகின்றது.
ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு தருவதால் முன்னேற்றம்
ஏற்படுகின்றது. தனது சேவையை விடுத்து உளமாற தனது நேரமும்
தருகின்றீர் கள். தனது செயல் பூர்த்தியாகி, வெற்றியடைந்து
செல்லுங்கள். இப்போது அனைவரும் நன்றாக உதவி செய்தீர்கள். அயல்
நாட்டிலும், இந்தியாவிலும் அனைவரும் செய்தனர்.
உத்திரபிரதேச சேவாதாரிகளுடன்:
பாப்தாதா அனைத்து மண்டலத்திற்கும் கூறுகின்றார். ஒவ்வொருவரும்
தனது மண்டலத்தில் அனைத்து துறையினரும் உள்ள ஒரு குழுவை
உருவாக்குங்கள். ஒவ்வொரு துறையினரும் அவரவர் துறைக்கு சேவை
செய்யும் வகையில். ஒவ்வொரு இடத்திலும் இருக்க வேண்டும்.
சேவையில் அந்தந்த துறைக்கு சிறப்பான வகையில் செய்திகளை
தரவேண்டும். அழைப்பிதலும் தரலாம். எந்த துறையினும் எங்களுக்கு
செய்தி கிடைக்கவில்லையே என்று புகார் செய்யக்கூடாது. சேவையும்
அதிகரிக்கும். அனுபவமும் பெறலாம். இந்த ஞானத்தால் என்ன லாபம்
கிடைத்து என்பதையும் பகிரலாம். ஒவ்வொரு மண்டலத்திலும் அத்தகைய
சேவை குழுவை தயார் செய்யுங்கள். சொற்பொழிவு செய்ய நேரமில்லை
யென்றாலும் அவர்களை பின் வரிசையில் அமர்த்தி மேடையின்
ஒருங்கிணைப் பாளரே அவர்களைப் பற்றி அறிமுகம் தரலாம். ஒரிருவர்
தனது அனுபவத்தையும் முன் வைக்கலாம். தனது சேவையில், வாழ்வில்
ஏற்பட்ட மாற்றம் என்ன, நேரமிருந்தால் அனுபவம் கூறுவதற்கு
வாய்ப்பு கொடுக்கலாம். அத்தகைய சிறப்பான முக்கிய பிரமுகர்களை
மைக்காக மாற்றுங்கள். சேவை நடந்து கொண்டேயிருக்கும்.
நல்லது. உத்திரபிரதேசத்தினர் சிறப்பாக பிரம்மா பாபாவின் பாலனை
பெறும் அதிகாரம் பெற்றனர். உத்திரபிரதேசத்தில் பிரம்மாவின்
நினைவு சின்னம் கூட உள்ளது. உத்திர பிரதேசத்தின் பாக்கியம்
பிரம்மா பாபா மற்றும் ஜகதம்பா பாலனை கொடுத்துள்ளனர். பாலனை
கிடைத்த பூமியாகும். பாக்கியத்தின் நட்சத்திரம் மற்றும் ஜகம்பா
இருவருமே உத்திர பிரதேசத்திற்கு வரதானங்களை கொடுத்துள்ளனர்.
நல்லது. இப்போது நாளுக்கு நாள் சேவை நிலையங்கள், உப சேவை
நிலையங்கள், கீதா பாடசாலைகள் யாவும் முன்பை விட நன்றாக வளர்ச்சி
அடைந்துள்ளது. இதற்காக பாப்தாதா மகிழ்ச்சி அடைகின்றார்.
வளர்ந்துக் கொண்டே செல்லுங்கள். அதிகமாக விருத்தி அடைவதிலும்,
செய்தி கொடுப்பதிலும் நம்பர் ஒன்றில் வாருங்கள்.
ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள். வளர்ந்துக் கொண்டே
இருக்கின்றீர்கள். இதைவிடவும் மிக அதிகமாக வளர்ந்து கொண்டே
செல்லுங்கள்.
ஆசீர்வாதம்:
குழுவில் ஒத்துழைப்பு மூலம் வெற்றி பெற்று அனைவர்மீதும் சுப
சிந்தனையாளர் ஆகுக.
குழுவில் ஒருவருக்கொருவர் உதவி செய்து சுப சிந்தனை செய்வதால்
ஒத்துழைப்பு எனும் கோட்டை நல்ல விந்தை செய்யும்.
ஒருவருக்கொருவர் மீது சுப சிந்தனை யெனும் ஒத்துழைப்பு இருந்தால்
மாயைக்கு கோட்டைக்கு உள்ளே வரும் தைரியம் இல்லாது போகும். ஆனால்
அதற்காக குழுவில் ஒத்துழைப்பு சக்தி வரவேண்டுமெனில் எத்தனை
விசயங்கள் வந்தாலும், எவ்வளவு பொருத்துக் கொள்ள
வேண்டியிருந்தாலும் எதிர் கொண்டு வெற்றி அடைந்து காண்பிப்பேன்
என்ற திட எண்ணம் வேண்டும்.
சுலோகன்:
எந்த ஒரு ஆசையும் நம்மை நல்லவராக ஆக விடாது. எனவே ஆசை என்றாலே
என்னவென்று தெரியாதவர் ஆகுக.
அவ்யக்த இஷாரா - மகான் ஆவதற்காக இனிமை மற்றும் பணிவு என்ற
குணங்களை தாரணை செய்யுங்கள்
இனிப்பு உண்பதால், வழங்குவதால் சிறிது நேரம் வாய் இனிமையாகும்.
மனம் மகிழும். அவ்வாறே தானே இனிமையாக ஆகிவிடுங்கள். சதா
வார்த்தைகளை இனிமையாகப் பேசுங்கள். அத்தகைய இனிய வார்த்தை
தன்னையும் மகிழச் செய்யும், பிறரையும் மகிழச் செய்யும். இந்த
விதிப்படி எப்போதும் எல்லோர் வாயும் இனிப்பாக்கிக்
கொண்டேயிருங்கள். என்றென்றும் இனிய பார்வை, இனிய வார்த்தை,
இனிய செயல் அமையட்டும்.