05-05-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! சுகம் சாந்தியின்
வரதானம், ஒரு தந்தையிடமிருந்து மட்டுமே கிடைக்கிறது. எந்த
தேகதாரியிடமிருந்தும் கிடைக்காது. பாபா உங்களுக்கு முக்தி,
ஜீவன் முக்தியின் வழியை காண்பிக்க வந்துள்ளார்.
கேள்வி:
தந்தையுடன் கூடவே செல்வதற்கும்,
பின் சத்யுக ஆரம்பத்தில் வருவதற்குமான முயற்சி என்ன?
பதில்:
தந்தையின் கூடவே செல்ல வேண்டும்
என்றால், முழுமையாக தூய்மையாக வேண்டும். சத்யுக ஆரம்பத்தில் வர
வேண்டும் என்றால் மற்ற தொடர்புகளிலிருந்து புத்தியோகத்தைத்
துண்டித்து, ஒரு தந்தையின் நினைவில் இருக்க வேண்டும். ஆத்ம
உணர்வுடையவராக அவசியம் ஆக வேண்டும். ஒரு தந்தையின் வழிப்படி
நடந்தீர்கள் என்றால் உயர்ந்த பதவிக்கான உரிமை கிடைத்து விடும்.
பாடல்:
கண்ணில்லாதவருக்கு வழி
காண்பியுங்கள் ....
ஓம் சாந்தி.
இந்த பாடலை பாடியது யார்? குழந்தைகள். ஏனெனில் தந்தையோ ஒரே
ஒருவர் ஆவார். அவருக்குத் தான் (படைப்பவர்) என்று கூறப்படுகிறது.
படைப்புக்கள் படைப்பவரை கூப்பிடுகிறார்கள். பக்தி மார்க்கத்திலோ
உங்களுக்கு இரண்டு தந்தைகள் இருக்கிறார்கள் என்று பாபா புரிய
வைத்துள்ளார். ஒன்று லௌகீக தந்தை, மற்றொருவர் பரலௌகீக தந்தை
ஆவார். அனைத்து ஆத்மாக்களின் தந்தை ஒரே ஒருவர் ஆவார். ஒரு தந்தை
ஆகும் பொழுது, அனைத்து ஆத்மாக்களும் தங்களை சகோதரர்கள் என்று
கூறுகிறார்கள். அந்த தந்தையை "ஓ ! காட் ஃபாதர்"" ஓ ! பரமபிதா
கருணை புரியுங்கள், மன்னித்து விடுங்கள் என்று அழைக் கிறார்கள்.
பக்தர்களைக் காப்பவர் ரட்சகர் ஒரு பகவான் மட்டுமே ஆவார். நமக்கு
இரண்டு தந்தையர் இருக்கிறார்கள் என்பதை முதன் முதலில் புரிய
வைக்க வேண்டும். இப்பொழுது பரலோகத் தந்தையோ அனைவருக்கும் ஒருவர்
ஆவார். மற்றபடி லௌகீக தந்தை ஒவ்வொருவருக்கும் தனித் தனி ஆவார்.
இப்பொழுது லௌகீக தந்தை பெரியவரா? அல்லது பரலௌகீக தந்தை பெரியவரா?
லௌகீக தந்தையை, ஒரு பொழுதும் பகவான் அல்லது பரமபிதா என்று
கூறமாட்டார்கள். ஆத்மாவின் தந்தை, ஒரே ஒரு பரமபிதா பரமாத்மா
ஆவார். ஆத்மாவின் பெயர், ஒரு பொழுதும் மாறுவதில்லை. சரீரத்தின்
பெயர் மாறுகிறது. ஆத்மா பல்வேறு சரீரங்கள் எடுத்து பாகம்
நடிக்கிறது. அதாவது (புனர்ஜென்மம்) மறுபிறவி எடுக்கிறது.
கடைசியில் எவ்வளவு பிறவிகள் கிடைக்கிறது என்பதையும் தந்தை தான்
வந்து புரிய வைக்கிறார். குழந்தைகளே நீங்கள் உங்கள் பிறவிகள்
பற்றி அறியாமல் உள்ளீர்கள். தந்தை பாரதத்தில் தான் வருகிறார்.
அவரது பெயர் சிவன் என்பதாகும் சிவன் பரமாத்மா ஆவார் என்பதையும்
புரிந்துள்ளீர்கள். சிவஜெயந்தி அல்லது சிவராத்திரி கூட
கொண்டாடுகிறார்கள். அவர் நிராகாரமானவர் ஆவார். எப்படி ஆத்மா
கூட நிராகாரமானது, நிராகார நிலையிலிருந்து பாகத்தை
நடிப்பதற்காக சாகாரத்தில் வருகிறது. இப்பொழுது நிராகார சிவனோ
சரீரமின்றி பாகத்தை நடிக்க முடியாது. மனிதர்கள், இந்த விஷயங்களை
சிறிதும் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். கண்ணில்லாமல்
இருக்கிறார்கள். இந்த சரீரத்தினுடைய இரண்டு கண்களோ,
அனைவருக்கும் உள்ளது. மூன்றாவது ஞானக்கண் ஆத்மாவிற்கு இல்லை.
அதற்கு திவ்ய திருஷ்டி என்றும் கூறுகிறார்கள். ஆத்மா தன்னுடைய
தந்தையை மறந்து விட்டுள்ளது. எனவே கண்ணில்லாதவருக்கு வழி
கூறுங்கள் என்று கூப்பிடுகிறார்கள். எங்கு செல்வதற்கான வழி?
சாந்திதாமம் மற்றும் சுகதாமத்திற்கான வழி. அனைவருக்கும் சத்கதி
அளிக்கும் வள்ளல், சத்குரு ஒரே ஒருவர் ஆவார். மனிதர்கள், மனிதர்
களுக்கு குருவாகி சத்கதி அளிக்க முடியாது. தானும் சத்கதி
அடைவதில்லை. மற்றவர்களுக்கு அளிப்பதும் இல்லை. ஒரு தந்தை தான்
அனைவருக்கும் சத்கதி அளிக்கிறார். அந்த அல்ஃப் தந்தையைத் தான்
நினைவு செய்ய வேண்டும். எந்த ஒரு மனிதனும் சதாகாலத்திற்கு
முக்தி, ஜீவன் முக்தி, சாந்தி மற்றும் சுகத்தை அளிக்க முடியாது
என்று பாபா புரிய வைக்கிறார். சுகம் சாந்தியின் வரதானத்தை ஒரு
தந்தை தான் அளிக்க முடியும். மனிதர்கள், மனிதர்களுக்குக்
கொடுக்க முடியாது. பாரதவாசிகள் சதோபிரதானமாக இருக்கும் பொழுது
சத்யுகத்தினராக சொர்க்கவாசியாக இருந்தார்கள். ஆத்மா தூய்மையாக
இருந்தது. ஆத்மாக்கள் தூய்மையாக, சதோபிரதானமாக இருந்த பொழுது
பாரதம் சொர்க்கம் என்று அழைக்கப்பட்டது.
உண்மையில் இன்றிலிருந்து 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்னால்
பாரதம் சொர்க்கமாக, சதோபிரதானமாக இருந்தது என்பதை நீங்கள்
அறிந்துள்ளீர்கள். இந்த இலட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருந்தது.
இப்பொழுது கலியுகத்தில் கடைசி ஆகும். இதற்கு நரகம் என்று
கூறப்படு கிறது. இதே பாரதம் சொர்க்கமாக இருக்கும் பொழுது
மிகவுமே செல்வந்தராக இருந்தது. வைர, வைடூரியங்களின் அரண்மனை
இருந்தது. தந்தை குழந்தைகளுக்கு நினைவூட்டு கிறார். சத்யுக
ஆரம்பத்தில் இந்த இலட்சுமி, நாராயணரின் அரசாட்சி இருந்தது.
அதற்கு சொர்க்கம், வைகுண்டம் என்று கூறப்படுகிறது. இப்பொழுதோ
சொர்க்கம் இல்லை என்பதை தந்தை புரிய வைக்கிறார். பாபா
பாரதத்தில் தான் வருகிறார். நிராகார சிவனுக்கு ஜெயந்தியும்
கொண்டாடுகிறார்கள். ஆனால் அவர் என்ன செய்கிறார் என்பது
யாருக்குமே தெரியாது. ஆத்மாக்களாகிய நமது தந்தை சிவன் ஆவார்.
அவருக்கு நாம் ஜெயந்தி கொண்டாடுகிறோம். தந்தையின்
சரித்திரத்தையும் அறியாமல் உள்ளார்கள். துக்கத்தில் அனைவரும்
நினைவு செய்கிறார்கள் என்று பாடவும் படுகிறது. ஓ காட்ஃபாதர்
கருணை புரியுங்கள் என்று அழைக்கிறார்கள். நாங்கள் மிகவும்
துக்கமுடையவர்களாக இருக்கிறோம். ஏனெனில் இது இராவண இராஜ்யம்
ஆகும். வருடா வருடம் இராவணனை எரிக்கிறார்கள் அல்லவா? ஆனால் 10
தலைகள் உடைய இராவணன் என்பது என்ன பொருள் என்று யாருக்குமே
தெரியாது. நாம் ஏன் அவனை எரிக்கிறோம்? அவனது கொடும்பாவி செய்து
எரிக்கும் வகையில், அவன் எப்பேர்ப்பட்ட எதிரி ஆவான்? என்று
பாரத வாசிகள் முற்றிலும் அறியாமல் இருக்கிறார்கள். ஏனெனில்
ஞானத்தின் மூன்றாவது கண் இல்லை. அதனால் தான் இராம இராஜ்யத்தை
வேண்டுகிறார்கள். 5 விகாரங்கள் பெண்ணிடமும், 5 விகாரங்கள்
ஆணிடமும் உள்ளது. எனவே இதற்கு இராவண சம்பிரதாயம் என்று
கூறப்படுகிறது. இந்த இராவணன் என்ற 5 விகாரங்கள் தான்
பெரியதிலும், பெரிய எதிரிகள் ஆகும். இதற்கு கொடும்பாவி செய்து
எரிக்கிறார்கள். இராவணன் யார், எதற்காக எரிக்கிறோம் என்பது
பாரதவாசிகளுக்கு தெரிவதில்லை. இராவண இராஜ்யம், 5 விகாரங்கள்
எப்பொழுதிலிருந்து ஆரம்பமாகியது என்பது கூட யாருக்குமே தெரியாது.
இராம இராஜ்யம் என்பது சத்யுகம் திரேதா, இராவண இராஜ்யம் என்பது
துவாபர கலியுகம் என்பதை தந்தை புரிய வைக்கிறார். சத்யுகத்தில்
இந்த இலட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருந்தது. இவர்களுக்கு இந்த
இராஜ்யம் எங்கிருந்து, எப்படி கிடைத்தது என்பது யாருக்கும்
தெரியாது. இவை புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும். இதில்
கவனம் கொடுக்க வேண்டியிருக்கிறது. மிகவுமே அன்பிற்குரிய தந்தை
ஆவார். அதனால் தான் அவரை பக்தி மார்க்கத்தில் கூட
அழைக்கிறார்கள். பாரதத்தில் இவர்களுடைய (இலட்சுமி நாராயணரின்)
இராஜ்யம் இருக்கும் பொழுது துக்கத்தின் பெயர் இருக்கவில்லை.
இப்பொழுது துக்கதாமம் ஆகும். எவ்வளவு அநேக தர்மங்கள் உள்ளன.
சத்யுகத்தில் ஒரு தர்மம் இருந்தது. இத்தனை ஆத்மாக்கள் எல்லோருமே
எங்கே சென்று விடுவார்கள் என்பது யாருக்குமே தெரியாது. ஏனெனில்
கண்ணில்லாதவர்களாக இருக்கிறார்கள். சாஸ்திரங்களினால் ஞானத்தின்
மூன்றாவது கண் யாருக்குமே கிடைப்ப தில்லை. ஞானக் கண்ணை ஞானக்
கடலான பரமபிதா பரமாத்மா தான் அளிக்கிறார். ஆத்மாவிற்கு
மூன்றாவது கண் கிடைக்கிறது. நான் எவ்வளவு பிறவிகள்
எடுத்துள்ளேன் என்பதை ஆத்மா மறந்து விட்டுள்ளது. சத்யுகத்தில்
இருந்த தேவி தேவதைகளின் இராஜ்யம் எங்கு போய் விட்டது? மனிதர்கள்
84 பிறவிகள் எடுக்கிறார்கள் என்றும் பாடுகிறார்கள். 84ன்
சக்கரம் என்று கூறுகிறார்கள். ஆனால் எந்த ஆத்மா 84 பிறவிகள்
எடுக்கிறார்? யார் முதலில் பாரதத்தில் வருகிறார்களோ அவர்கள்
தேவி தேவதைகளாக இருந்தார்கள். பிறகு 84 பிறவிகள் அனுபவித்து,
கடைசியில் பதீதமாக ஆகி விடுகிறார்கள். ஹே பதீத பாவனரே என்றும்
பாடுகிறார்கள். எனவே நாம் பதீதமானவர்கள் என்பதை நிரூபித்து
கொள்கிறார்கள். எனவே ஹே பதீத பாவனரே எங்களை பாவனமாக ஆக்க
வாருங்கள் ! என்று அழைக்கிறார்கள். யார் தாங்களே பதீதமாக
இருக்கிறார்களோ, அவர்கள் பின் மற்றவர்களை எப்படி பாவனமாக
ஆக்குவார்கள்? அரை கல்பமாக பக்தி மார்க்கத்தில் இராவண இராஜ்யம்,
5 விகாரங்கள் இருக்கும் காரணத்தால் இந்த அளவு துக்கத்தை
அடைந்துள்ளது என்பதை தந்தை புரிய வைக்கிறார். 84 பிறவிகளோ
எடுக்கவே எடுக்கிறார்கள். அதனுடைய கணக்கையும் புரிய வைக்க
வேண்டும். முதன் முதலில் சத்யுகத்தில் இருப்பவர்கள்
சதோபிரதானமானவர்கள், பிறகு திரேதாவில் இருப்பவர்கள் சதோ ..
ஆத்மாவில் துரு படிகிறது. தந்தை வருவதே பாரதத்தில் தான்.
சிவஜெயந்தி ஆகும் அல்லவா? மற்ற அனைத்து ஆத்மாக்களோ கர்ப்பத்தில்
ஜென்மம் எடுக்கிறார்கள். நான் சாதாரண, வயோதிக உடலில் பிரவேசம்
செய்கிறேன் என்று தந்தை கூறுகிறார். இது அவருடைய அநேக
பிறவிகளின் கடைசி பிறவி ஆகும். இந்த விளக்கவுரை யாரோ ஒருவருக்கு
மட்டும் அளிக்கப்படுவதில்லை. இது கீதா பாடசாலை ஆகும்.மனிதனை
தேவதையாக ஆக்குவதற்காக இந்த ராஜயோகம் கற்பிக்கப்படுகிறது.
சொர்க்கத்தின் அரசாட்சியை பெறுவதற்காக நீங்கள் இங்கு
வந்துள்ளீர்கள். இதை தந்தை தான் கொடுக்க முடியும். கீதை
படிப்பதால் யாரும் ராஜாவாக ஆவதில்லை. இன்னுமே ஏழை ஆகிக் கொண்டே
போகிறார்கள். தந்தை கீதையின் ஞானத்தை கூறி ராஜாவாக ஆக்குகிறார்.
மற்றவர்கள் மூலமாக கீதை கேட்பதால் ஏழை ஆகி விட்டுள்ளார்கள்.
பாரதத்தில் இந்த இலட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருக்கும் பொழுது
தூய்மை, சுகம், சாந்தி இருந்தது. தூய்மையான இல்லற ஆசிரமமாக
இருந்தது. அங்கே ஹிம்சை என்ற பெயரே இருக்கவில்லை. பிறகு துவாபர
யுகத்தி-ருந்து ஹிம்சை ஆரம்பமாகியுள்ளது. காமவாளை செலுத்தி,
செலுத்தி உங்களுடைய நிலைமை இவ்வாறு ஆகி விட்டுள்ளது.
சத்யுகத்தில் 100 சதவிகிதம் செழிப்புடன் இருந்தார்கள். சதோ
பிரதானமாக இருந்தார்கள். இந்த ரகசியம் பற்றி எந்த ஒரு மனிதரோ
சாது, சந்நியாசியோ அறியாமல் உள்ளார்கள். ஞானக் கடலாக, பதீத
பாவனராக இருக்கும் தந்தையே வந்து சதோபிரதானமாக ஆவதற்கான
யுக்தியை கூறுகிறார். இராவணனின் வழிப்படி நடப்பதால் மனிதர்களின்
நிலைமை என்னவாக ஆகி விட்டுள்ளது. ராஜாக்கள் கூட, தூய்மையாக
வாழ்ந்து போயிருக்கும் ராஜாக்களின் பாதங்களை வணங்குகிறார்கள்.
மேலும் நீங்கள் சர்வகுண சம்பன்னமானவர் கள், நாங்கள் நீசர்,
பாவிகள் என்று மகிமை பாடுகிறார்கள். எங்களுக்குள் எந்த குணமும்
இல்லை. பிறகு நீங்களே இரக்கம் காட்டுங்கள் என்று கூறுகிறார்கள்.
நீங்கள் வந்து எங்களை கோவிலுக்கு தகுதி யுடையவராக ஆக்குங்கள்.
தந்தை வந்து எப்படி மீண்டும் தேவி, தேவதா தர்மத்தினை ஸ்தாபனை
செய்விக்கிறார் என்பது யாருக்குமே புரிய வருவதில்லை. நாமே தான்
தேவி, தேவதா தர்மத் தினராக இருந்தோம் என்பதை இப்பொழுது நீங்கள்
புரிந்துள்ளீர்கள். நாமே தான் க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர்
ஆனோம். இத்தனை பிறவிகள் எடுத்தோம். இப்பொழுது 84 பிறவிகள்
முடிந்து விட்டுள்ளது. மீண்டும் உலகத்தின் சக்கரம் சுற்ற வேண்டி
உள்ளது. எனவே மீண்டும் நீங்கள் இங்கு தான் பாவனமாக ஆக வேண்டும்.
பதீதமானவர்களோ சுகதாமம், சாந்தி தாமத்திற்கு செல்ல முடியாது.
சதோபிரதானமாக இருந்த நீங்கள் தமோபிரதானமாக ஆகி விட்டுள்ளீர்கள்
என்று தந்தை புரிய வைக்கிறார். தங்கயுகத்திலிருந்து பிறகு
இரும்பு யுகத்தில் வந்துள்ளீர்கள். பிறகு தங்க யுகத்தினர் ஆக
வேண்டும். அப்பொழுது தான் முக்தி தாமம், சுகதாமத்திற்கு செல்ல
முடியும். பாரதம் சுகதாமமாக இருந்தது. இப்பொழுது துக்கதாமமாக
உள்ளது. கண்ணில்லாத எங்களுக்கு வழி கூறுங்கள் என்று பாடலிலும்
கேட்டீர்கள் - நாங்கள் எப்படி எங்களுடைய சாந்திதாமத்திற்கு
செல்வது? அவர்களோ பரமாத்மா சர்வவியாபி ஆவார், இந்த அவதாரம்,
பரசுராம அவதாரம் எடுக்கிறார் என்கிறார்கள். இப்பொழுது தந்தை
பரசுராமராக ஆகி யாரையாவது கொன்றிருப்பாரா என்ன? அவ்வாறு ஆகி
இருக்க முடியாது. நீங்கள் இந்த சக்கரத்தில் எப்படி 84 பிறவிகள்
எடுத்துள்ளீர்கள் என்பதை தந்தை புரிய வைக்கிறார். இப்பொழுது
தந்தையாகிய (அல்லா) என்னை நினைவு செய்யுங்கள். ஹே ஆத்மாக்களே
ஆத்ம உணர்வுடையவராக ஆகுங்கள். தேக அபிமானியாக ஆகி நீங்கள்
முற்றிலுமே துக்கமுடையவர்களாக, ஏழைகளாக, நரகவாசியாக ஆகி
விட்டுள்ளீர்கள். சொர்க்கவாசி ஆக வேண்டும் என்றால் அவசியம்
ஆத்ம உணர்வுடையவராக ஆக வேண்டும். ஆத்மா தான் ஒரு சரீரத்தை
விடுத்து, மற்றொன்று எடுக்கிறது. இப்பொழுது 84 பிறவிகள்
முடிந்து விட்டுள்ளன. மீண்டும் சத்யுக ஆரம்பத்திற்கு செல்ல
வேண்டும். இப்பொழுது என்னை நினைவு செய்யுங்கள், மற்ற
தொடர்புகளிலிருந்து புத்தி யோகத்தை துண்டியுங்கள். தாராள மாக
இல்லற விவகாரங்களில் இருங்கள். தங்களை ஆத்மா என்று நம்பிக்கை
கொள்ளுங்கள். ஆத்மா ஒரு சரீரத்தை விடுத்து, மற்றொன்றை
எடுக்கிறது. இப்பொழுது ஆத்ம உணர்வுடையவர் ஆக வேண்டும். என்னை
நினைவு செய்தீர்கள் என்றால் துரு அனைத்தும் எரிந்து போய் விடும்.
நீங்கள் தூய்மையாக ஆகி விடுவீர்கள். பின் நான் அனைத்து
குழந்தைகளையும் அழைத்து செல்வேன். எனது வழிப்படி நடக்கவில்லை
என்றால் இந்த அளவு உயர்ந்த பதவியை அடைய முடியாது. இந்த இலட்சுமி
நாராயணரினுடைய பதவி உயர்ந்தது ஆகும். இவர்களுடைய இராஜ்யம்
இருந்த பொழுது வேறு எந்த தர்மமும் இருக்கவில்லை. துவாபர
முதற்கொண்டு மற்ற தர்மங்கள் வருகின்றன. சத்யுகத்தில்
மனிதர்களும் குறைவாக இருப்பார்கள். இப்பொழுதோ நிறைய தர்மங்கள்
ஆகி விட்டிருக்கும் காரணத்தால், எவ்வளவு துக்கமுடையவர்களாக ஆகி
விட்டுள்ளார்கள். அதே தேவதா தர்மத்தினர் இப்பொழுது மீண்டும்
பதீதமாக ஆகி இருக்கும் காரணத்தால் தங்களை தேவதை என்று
கூறுவதில்லை. ஹிந்து என்ற பெயர் வைத்து விட்டுள்ளார்கள். ஹிந்து
என்பது ஒன்றும் தர்மம் கிடையாது. இராவணன் உங்களை இது போல ஆக்கி
விட்டுள்ளான் என்று தந்தை புரிய வைக்கிறார். நீங்கள்
தகுதியுடைய தேவி தேவதைகளாக இருந்த பொழுது, முழு உலகத்தின் மீது
ஆட்சி இருந்தது.எல்லோருமே சுகமாக இருந்தார்கள். இப்பொழுது
துக்க முடையவர்களாக ஆகி விட்டுள்ளார்கள் .பாரதம் சொர்க்கமாக
இருந்தது. அது இப்பொழுது நரகமாக ஆகி விட்டுள்ளது. பின் நரகத்தை,
சொர்க்கமாக தந்தையை தவிர வேறு யாரும் ஆக்க முடியாது.
தேவதைகளுக்கு சம்பூர்ண நிர்விகாரி என்று கூறப்படுகிறது. இங்கு
இருக்கும் மனிதர்களோ சம்பூர்ண விகாரி ஆவார்கள்.இவர்களுக்கு
பதீதமானவர்கள் என்று கூறப் படுகிறது.பாரதம் சிவாலயமாக இருந்தது.
சிவபாபாவினால் ஸ்தாபனை செய்யப்பட்டதாக இருந்தது .தந்தை
சொர்க்கத்தை உருவாக்குகிறார். பிறகு இராவணன் நரகத்தை
உருவாக்குகிறார். இராவணன் சாபம் கொடுக்கிறான். தந்தை 21
பிறவிகளுக்கு ஆஸ்தி கொடுக்கிறார். இப்பொழுது நீங்கள்
ஒவ்வொருவரும் தந்தையை மட்டுமே நினைவு செய்யுங்கள். எந்த ஒரு
தேகதாரியையும் அல்ல. தேகதாரிக்கு பகவான் என்று கூறப்படுவது
இல்லை. பகவானோ ஒரே ஒருவர் ஆவார். தந்தையோ எல்லையில்லாத ஆஸ்தி
அளிக்கிறார். பிறகு இராவணன் சாபத்திற்குள்ளவராக ஆக்கி
விடுகிறான். இச்சமயம் பாரதம் சாபத்திற்குள்ளாகி
இருக்கிறது.மிகவுமே துக்கமுடையதாக இருக்கிறது. இப்பொழுது இந்த
இராவணன் மீது வெற்றி அடை யவேண்டும். தானம் கொடுத்தால் கிரகணம்
விட்டு போகும் என்றும் பாடப்படுகிறது. அந்த கிரகணம் பிடிப்பது
என்பது பூமியின் நிழல் ஆகும். இப்பொழுது தந்தை கூறுகிறார் -
உங்கள் மீது 5 விகாரங்கள் என்ற இராவணனின் கிரகணம் உள்ளது. இந்த
5 விகாரங்களை தானமாக கொடுத்து விட வேண்டும். நாம் ஒரு பொழுதும்
விகாரத்தில் செல்ல மாட்டோம் என்று முதல் தானம் கொடுங்கள். இந்த
காமவாள் தான் மனிதனை பதீதமாக ஆக்குகிறது. நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக்
கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய
பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தந்தை அளிக்கும் ஞானத்தை முழு கவனம் கொடுத்து படிக்க
வேண்டும். ஞானத்தின் மூன்றாவது கண் மூலமாக, தங்களது 84 பிறவிகளை
அறிந்து இப்பொழுது இந்த கடைசி பிறவியில் பாவனமாக வேண்டும்.
2. இராவணனினுடைய சாபத்திலிருந்து தப்பித்து இருக்க, ஒரு
தந்தையின் நினைவில் இருக்க வேண்டும். 5 விகாரங்களை தானமாக
கொடுத்து விட வேண்டும். ஒரு தந்தையின் வழிப்படி நடக்க வேண்டும்.
வரதானம்:
கிரீடம் மற்றும் திலகம் அணிந்து பாப்தாதாவின் உதவியாளராகி
தந்தையின் உள்ளம் எனும் ஆசனத்தில் உறைந்தவர் ஆகுக
ஒருவர் அரியணையின் அமரும் போது திலகமும், கிரீடமும் அவர்களின்
அடையளமாகிறது. அவ்வாறே தந்தையின் உள்ளத்தில் இடம்
பிடித்தவர்களின் நெற்றியில் எப்போதும் அழியாத ஆத்ம திலகம்
தொலைவிலிருந்தே பளிச்சென்று தென்படுகின்றது. அவர்களது
முகத்திலும், கண்களிலும் அனைத்து ஆத்மாக்களுக்கும் நன்மை
நிறைந்த பாவனை தென்படுகிறது. அவர்களது ஒவ்வொரு எண்ணம், சொல்,
செயல் யாவும் தந்தைக்கு நிகராகின்றது.
சுலோகன்:
சரளமான நினைவிற்காக சரளத்தன்மை எனும் குணத்தை கையாளுங்கள்,
சம்ஸ்காரங்களை சரமாக வையுங்கள்.
அவ்யக்த இஷாரே: எப்போதும் ஆடாத, அசையாத
ஒரே சீரான மனோநிலையினை அனுபவம் செய்யுங்கள்.
யாரொருவர் டிராமா எனும் ஞான சக்தியை நடைமுறை வாழ்வில்
கையாளுவாரோ அவர் ஒருபோதும் பதட்டத்தில் வரமுடியாது. எப்போதும்
ஒரே சீரான, ஆடாத, அசயாதை நிலை பெறச் செய்யும் சிறப்பான
சக்தியாகும் டிராமா எனும் ஞானம். இதனை சக்தியாக
பயன்படுத்துபவர்கள் ஒருபோதும் தோல்வி அடைய முடியாது. இந்த
மங்களகரமான நாடகத்தில் ஒவ்வொரு காட்சி யிலும் ஏதேனும் ஒரு நன்மை
அடங்கியுள்ளது. பொறுமையுடன் பார்வையாளராகும் பயிற்சியை
மேற்கொண்டால் ஆடாது, அசையாது இருப்பீர்கள்.