05-07-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! தந்தை உங்களை அழகான தேவி - தேவதையாக ஆக்குவதற்காக கற்பிக்கின்றார், அந்த அழகின் ஆதாரம் தூய்மையாகும்.

கேள்வி:
ஆன்மீக தீபத்தில் யார் பலியாகக் கூடிய விட்டில் பூச்சிகளோ, அவர்களின் அடையாளம் என்னவாக இருக்கும்?

பதில்:
பலியாகக் கூடிய விட்டில் பூச்சிகள் எனில். 1. தீபமாக இருக்கக் கூடிய தந்தையை சரியான ரூபத்தில் புரிந்து கொண்டு மற்றும் நினைவு செய்வார்கள், 2. பலியாவது எனில் தந்தைக்குச் சமமாவது, 3. பலியாவது எனில் தந்தையைவிட உயர்ந்த இராஜ்யத்திற்கான அதிகாரியாக ஆவதாகும்.

பாடல்:
சபையின் நடுவே தீபம் (பரமாத்மா) எழுந்தது. விட்டில் பூச்சிகளுக்காக.......

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் இந்த பாடலின் வரியைக் கேட்டீர்கள். இதனை புரிய வைப்பது யார்? ஆன்மீகத் தந்தை. அவரே தீபமாகவும் இருக்கின்றார். பெயர்கள் பல விதமாக வைத்துள்ளனர். தந்தையை மிகவும் புகழ் பாடுகின்றனர். இது கூட பரமபிதா பரமாத்மாவிற்கு புகழாக இருக்கிற தல்லவா! தந்தை தீபம் போன்று விட்டில் பூச்சிகளாகிய குழந்தைகளிடம் வந்திருக்கின்றார். விட்டில் பூச்சிகள் தீபத்தைப் பார்த்து பலியாகி சரீரத்தை விடுகின்றன. நிறைய விட்டில் பூச்சிகள் தீபத்திடம் வந்து உயிர் விடு கின்றன. குறிப்பாக தீபாவளி நாளில் நிறைய தீபங்கள் ஏற்றுகின்றனர். சிறு சிறு ஜீவராசிகள் இறந்து விடுகின்றன. இப்பொழுது குழந்தைகள் புரிந்துள்ளனர், நம்முடைய பாபா மிக மேலான (சுப்ரீம்) ஆத்மாவாக இருக்கிறார். அவரை மிகவும் அழகானவர் எனக்கூறப்படுகிறது, மிகவும் அழகாக இருக்கிறார். ஏனென்றால், அவர் சதா காலமும் தூய்மையானவர். ஆத்மா சுத்தமாகி விட்டால் சரீரமும் சுத்த மானதாக, இயற்கையான அழகுடையதாகக் கிடைத்துவிடும். சாந்திதாமத்தில் ஆத்மாக்கள் தூய்மையாக இருந்தது, இங்கு வந்து நடித்து சதோபிரதானத் திலிருந்து, சதோ, ரஜோ, தமோ நிலைக்கு வந்து விடுகிறது. அழகான நிலையிலிருந்து கறுப்பாக அதாவது அசுத்த நிலை அடைகிறது. ஆத்மா தூய்மையாக இருந்தபோது அதனை சதோபிரதான, தங்கத்திற்குச் சமமான நிலை எனக்கூறப்படுகிறது. இதனால் சரீரமும் தங்கத்திற்குச் சமமானதாகக் கிடைக்கிறது. உலகமும் பழையதாக மற்றும் புதியதாக ஆகின்றது. பரமபிதா பரமாத்மாவே அழகானவராக இருக்கிறார், அவரை பக்தி மார்க்கத்தில் அழைக்கின்றனர், ஹே சிவபாபா! ஆத்மாக்களை அசுத்த நிலையிலிருந்து சுத்தமாக, அழகாக ஆக்குவதற்கு, அந்த நிராகாரமான பரமபிதா பரமாத்மா வந்திருக்கிறார். இன்றைய காலங்களில் யாராவது மிகவும் அழகாக இருந்தால், அவர்களுடைய ஆத்மா தூய்மையாக இருப்பதாகக் கூறமுடியாது. சரீரம் அழகாக இருந்தாலும் ஆத்மா தூய்மை யின்றி தான் இருக்கிறதல்லவா! வெளிநாட்டில் எவ்வளவு அழகானவராக (செயற்கையாக) மாற்று கின்றனர். இந்த இலட்சுமி-நாராயணர் சத்யுகத்தின் அழகானவர்கள், மேலும் இவர்கள் நரகத்தின் அழகானவர்கள் என புரிந்துள்ளீர்கள். மனிதர்களுக்கு இந்த விசயமெல்லாம் தெரியாது. இதெல்லாம் நரகத்தின் அழகு என குழந்தைகளுக்குத்தான் புரிய வைக்கப்படுகிறது. இப்பொழுகு நாம் சொர்க்கத்தின் இயற்கையான அழகுடையவர் களாக ஆகின்றோம். 21 பிறவிகளுக்கு நாம் அவ்வாறு அழகுடையவர்களாக ஆவோம். இங்கிருக்கும் அழகானது ஒரு பிறவிக்கானது. முழு உலகத்தைச் சேர்ந்த மனிதர்களை மட்டுமல்ல, உலகத்தையும் சேர்த்து மிக அழகானதாக ஆக்குவதற்கு பாபா இங்கு வந்திருக்கின்றார். மிகவும் அழகான தேவி, தேவதைகள் புதிய உலகம், சத்யுகத்தில் இருந்தனர், அவ்வாறு ஆவதற்கு இப்பொழுது நீங்கள் படிக்கின்றீர் கள். தந்தையை தீபம் என்றும் கூறப்படுகிறது, ஆனால் அவர் பரமாத்மாவாக இருக்கிறார். உங்களை ஆத்மா என கூறுவது போல், அவரை பரமாத்மா எனக் கூறப்படுகிறது. குழந்தைகள் தந்தைக்கு மகிமை செய்கின்றீர்கள், உங்களை என்னைவிட உயர்ந்த அந்தஸ்து உடையவராக ஆக்குகின்றேன் என தந்தையும் குழந்தைகளை மகிமை செய்கின்றார். நான் யாராக இருக்கிறேன், எப்படி இருக் கின்றேன், எவ்வாறு நான் நடிக்கின்றேன் என்பது வேறு யாருக்கும் தெரியாது. நாம் ஆத்மாக்கள் எவ்வாறு நடிப்பதற்காக பரந்தாமத்திலிருந்து வருகின்றோம் என்பதை குழந்தைகள் நீங்கள் புரிந்துள்ளீர்கள். நாம் சூத்திர குலத்தில் இருந்தோம் பிறகு பிராமண குலத்திற்கு வந்து விட்டோம். இது கூட உங்களுடைய குலமாகும், வேறு தர்மத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்த குலம் கிடையாது. அவர்களுக்கு ஒரே குலம் தான், கிறித்தவர்கள் அதே குலத்தில் தான் செல்வார்கள். ஆனால், அதிலும் சதோ, ரஜோ, தமோ நிலை ஏற்படும். மற்றபடி இந்த குலம் உங்களுக்கு மட்டும் தான். உலகமும் சதோ, ரஜோ, தமோ, நிலைக்கு வருகின்றது. இந்த உலக சக்கரத்தை எல்லையற்ற தந்தை வந்து புரிய வைக்கின்றார். அந்த தந்தை ஞானக்கடலாக, தூய்மைக்கடலாக இருக்கின்றார், நான் மறுபிறவிகள் எடுப்பதில்லையென அவரே கூறுகின்றார். சிவஜெயந்தி கொண்டாடப் பட்டாலும் அவர் எப்பொழுது வருகின்றார் என மனிதர்களுக்குத் தெரியாது. அவருடைய வாழ்க்கை வரலாறு யாருக்கும் தெரியாது. நான் யாராக இருக்கிறேன், எப்படி இருக்கிறேன், எனக்கு எப்படிபட்ட நடிப்பு இருக்கிறது, உலக சக்கரம் எப்படி சுழல்கிறது? என்பதை குழந்தைகள் உங்களுக்கு மட்டுமே ஒவ்வொரு கல்பமும் புரியவைக்கிறேன் என தந்தை கூறுகின்றார். நாம் ஏணிப்படியில் இறங்கி வந்து தமோபிரதானமாகி விட்டோம் என நீங்கள் புரிந்துள்ளீர்கள். 84 பிறவி களும் நீங்கள் தான் எடுக்கின்றீர்கள். பிற்காலத்தில் வருபவர்களும் சதோ, ரஜோ, தமோ நிலையில் வந்தாக வேண்டும். நீங்கள் தமோபிரதானமாகும் போது முழு உலகமும் தமோபிரதானமாகின்றது. பிறகு நீங்கள் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக அவசியம் ஆக வேண்டும். இந்த காலச் சக்கரம் சுழல்கிறது. இப்பொழுது கலியுகமாக இருக்கிறது, இதன் பிறகு சத்யுகம் வரும். கலியுகத்தின் ஆயுள் முடிகின்றது. மீண்டும் குழந்தைகளுக்கு இராஜயோகம் கற்றுத் தருவதற்காக, நான் சாதாரணமான உடலில் கல்பத்திற்கு முன்பு போல பிரவேசம் செய்திருக்கிறேன், என தந்தை கூறுகின்றார். இன்றைய காலத்தில் பல விதமான யோகம் இருக்கிறது. பாரிஸ்டர் யோகம், இன்ஜினியரிங் யோகம்.... வக்கீலாக ஆவதற்கு, அதற்கான கல்வி கற்க வக்கீலோடு புத்தியின் சம்மந்தத்தை ஈடுபடுத்த வேண்டும், கல்வி கற்றுத்தருவோரை நினைவு செய்கின்றனர். அவர் களுக்குத் தந்தை வேறு ஒருவராக இருப்பார்கள், குரு இருந்தால் அவரையும் நினைவு செய்வார்கள். ஆனாலும், கற்றுத்தரும் வழக்கறிஞரோடு புத்தியின் தொடர்பு இருக்கவே செய்யும். ஆத்மாதான் படிக்கிறது. ஆத்மாதான் சரீரத்தின் மூலம் நீதிபதியாக, வக்கீலாக ஆகின்றது.

இப்பொழுது குழந்தைகள் நீங்கள் ஆத்ம அபிமானி ஆவதற்கான சம்ஸ்காரத்தை தனக்குள் கொண்டு வருகின்றீர்கள். அரைக் கல்பமாக தேக அபிமானியாக இருந்தீர்கள். இப்பொழுது ஆத்ம அபிமானி ஆகுங்கள் என தந்தை கூறுகின்றார். படிப்பின் சம்ஸ்காரம் ஆத்மாவில் தான் இருக்கிறது. மனித ஆத்மாவே நீதிபதி ஆகின்றது, இப்பொழுது நாம் உலகத்தின் எஜமானராக, தேவதைகளாக ஆகின்றோம், நமக்கு பரமாத்மா - சிவபாபா படிப்பிக்கின்றார், அவரே ஞானக் கடலாக, அமைதி மற்றும் பொக்கிஷத்தின் கடலாக இருக்கின்றார். கடலிலிருந்து இரத்தினங்களின் பொக்கிஷம் வெளிப்பட்டதாக காட்டப்படுகிறது. இதெல்லாம் பக்தி மார்க்கத்தின் விசயங்களாகும். தந்தையிடம் ஆலோசனை கேட்டு காரியங்கள் செய்ய வேண்டும். இதுதான் அழியாத ஞான ரத்தினம் என தந்தை புரியவைக்கின்றார். இந்த ஞான ரத்தினங்களால் நீங்கள் மிகவும் செல்வந்த ராக ஆகின்றீர்கள். மேலும் பிறகு உங்களுக்கு நிறைய வைர, வைடூரியங்கள் கிடைக்கும். இந்த ஒவ்வொரு ரத்தினமும் இலட்சக் கணக்கான ரூபாய்க்குச் சமமானது, ஆக இது உங்களை அவ்வளவு செல்வந்தராக ஆக்கக்கூடியது. பாரதமே நிர்விகாரி உலகமாக இருந்தது என நீங்கள் புரிந்துள்ளீர்கள், அங்கே தூய்மையான தேவதைகள் இருந்தனர். இப்பொழுது கருப்பாக, தூய்மை யற்றவராக ஆகி விட்டீர்கள். ஆத்மாக்கள் மற்றும் பரமாத்மா இடையே மேளா (சந்திப்பு) ஏற்படுகிறது. ஆத்மா சரீரத்தில் இருக்கும் போது தான் கேட்க முடியும். பரமாத்மாவும் சரீரத்தில் வருகின்றார். ஆத்மாக்கள் மற்றும் பரமாத்மாவின் வீடு சாந்திதாமமாகும். அங்கே எந்த விதமான கூச்சல், சப்தமும் இல்லை. இங்கு பரமாத்ம தந்தை வந்து குழந்தைகளோடு சரீரத்தின் மூலம் சந்திக்கின்றார். அந்த வீட்டில் ஓய்வாக இருப்பார்கள். இப்பொழுது குழந்தைகள் நீங்கள் புருஷோத்தம சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். மற்றவர்கள் கலியுகத்தில் இருக்கின்றார்கள். பக்தி மார்க்கத்தில் நிறைய செலவு செய்கின்றனர், நிறைய சித்திரங்களை உருவாக்கி, பெரிய பெரிய கோவில்களை உருவாக்குகின்றனர். கிருஷ்ணருடைய சித்திரம் வீட்டில் இருந்தாலும், மலிவாக சித்திரங்கள் கிடைத்தாலும், ஏன் வெகு தூரத்தில் இருக்கும் கோவிலுக்குச் செல்கின்றனர். இதெல்லாம் பக்தி மார்க்கமாகும். சத்யுகத்தில் இந்த கோவில் ஏதும் இருக்காது. அங்கே அனைவரும் பூஜிக்கத் தகுந்தவராக இருப்பார்கள்.

கலியுகத்தில் அனைவரும் பூஜாரிகள். இப்பொழுது நீங்கள் சங்கமயுகத்தில் பூஜிக்கத்தகுந்த தேவதை ஆகின்றீர்கள். இப்பொழுது நீங்கள் பிராமணர் ஆகி விட்டீர்கள். இந்த நேரத்திற்கான உங்களுடைய கடைசிக்கால முயற்சி செய்யப்படுவதற்கான சரீரம் மிகவும் மதிப்பு வாய்ந்தது. இதன் மூலம் நீங்கள் நிறைய வருமானம் செய்கின்றீர்கள். எல்லையற்ற தந்தையோடு சேர்ந்து நீங்கள் பானங்கள் மற்றும் உணவு அருந்தவும் செய்கின்றீர்கள். அவரைத்தான் அழைத்தீர்கள். கிருஷ்ணரோடு சாப்பிடுவேன் என கூறுவதில்லை. நீங்கள் தான் தாயும், தந்தை யுமாக இருப்பதாக தந்தையை நினைவு செய்கின்றனர். குழந்தைகள் தந்தையோடு சேர்ந்து விளையாடுவார்கள். நாம் அனைவரும் கிருஷ்ணருடைய குழந்தைகள் என கூறுவதில்லை. அனைத்து ஆத்மாக்களும் பரமபிதா பரமாத்மாவின் குழந்தைகள். நீங்கள் வந்தால் நாங்கள் உங்களோடு சேர்ந்து விளையாடு வோம், சாப்பிடுவோம், அனைத்தும் செய்வோம் என ஆத்மா சரீரத்தின் மூலம் கூறுகின்றது. நீங்கள் பாப்தாதா என கூறுகின்றீர்கள், ஆக, இது உங்கள் வீடாகி விட்டது. பாப்தாதா மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். எல்லையற்ற படைப்பவராக பிரம்மா இருக்கின்றார். தந்தை இவருக்குள் பிரவேசமாகி இவரை தத்தெடுத்திருக்கிறார். நீ என்னுடையவர் என இவரிடம் கூறினார். இதுவே முக வம்சாவளியாகும். மனைவியை தத்தெடுக்கின்றனர் அல்லவா! அதுவும் முகவம்சாவளி ஆகும். நீ என்னுடையவர் என கூறுகின்றனர். பிறகு அவர்கள் விகாரத்தின் மூலம் (குக) வம்சாவளி குழந்தைகளைப் பெற்றெடுக்கின்றனர். இந்த பழக்கம் எங்கிருந்து வந்தது? நான் இவரைத் தத்தெடுத்து இருக்கிறேன் அல்லவா! இவர் மூலம் உங்களைத் தத்தெடுக்கிறேன், நீங்கள் என்னுடைய குழந்தைகள். ஆனால், இவர் ஆணாக இருப்பதால், உங்கள் அனைவரையும் பரிபாலனை செய்வதற்காக சரஸ்வதியையும் தத்தெடுத்து இருக்கிறேன். அவருக்கு மாதா என்ற பட்டம் கிடைத்தது. சரஸ்வதி நதியாகவும், மாதாவாகவும் ஆகி விட்டார். தந்தை கடலாக இருக்கிறார். இவரும் கூட கடல் மூலம் உருவானவர் ஆவார். பிரம்மாபுத்ரா நதி மற்றும் கடலுக்கும் இடையில் மிகப்பெரிய மேளா நடக்கிறது. அப்படிப்பட்ட மேளா வேறு எங்கும் நடப்ப தில்லை. மற்றபடி நதிகளுக்கான மேளா நடக்கிறது.

இங்கு ஆத்மாக்கள் மற்றும் பரமாத்மாவுக் கிடையேயான சந்திப்பாகும். அவரும் கூட சரீரத்தில் வரும்போது தான் மேளா ஏற்படுகிறது. நான் மிகவும் அழகானவராக இருக்கிறேன். நான் இவருக்குள் ஒவ்வொரு கல்பமும் பிரவேசம் செய்கிறேன் என தந்தை கூறுகின்றார். இதுவும் நாடகத்தில் பதிவாகியுள்ளது. உங்களுடைய புத்தியில் முழு காலச் சக்கரம் இருக்கிறது, இதற்கான ஆயுட்காலம் 5 ஆயிரம் ஆண்டுகளாகும். இந்த எல்லையற்ற பிலிம் மூலம் எல்லைக்குட்பட்ட திரைப்படத்தை உருவாக்குகின்றனர். எது கடந்து முடிந்ததோ அது மீண்டும் நிகழ்கிறது. நிகழ்காலம் பிறகு எதிர்காலத்தில் நடக்கும், பிறகு அது கடந்த காலமாகி விடும். கடந்த காலமாக எவ்வளவு காலமாகின்றது. புதிய உலகம் வந்து பிறகு எவ்வளவு காலமாகி விட்டது? 5 ஆயிரம் ஆண்டுகள். இப்பொழுது நீங்கள் சுயதர்சன சக்கரதாரியாக இருக்கின்றீர்கள். நாம் முதலில் பிராமணராக இருந்தோம் பிறகு தேவதையாக ஆனோம் என நீங்கள் புரிய வைக்கின்றீர்கள். குழந்தைகள் உங்களுக்கு இப்பொழுது தந்தை மூலமாக சாந்தி தாமம் மற்றும் சுகதாமத்திற்கான பிராப்தி கிடைக்கிறது. 3 தர்மத்தினை ஒரே நேரத்தில் தந்தை உருவாக்குகின்றார். மற்ற அனைத்தையும் விநாசம் செய்ய வைக்கின்றார். உங்களை வீட்டிற்குத் திரும்ப அழைத்துச் செல்ல சத்குரு தந்தை கிடைத்துள்ளார். சரீரத்தை முடித்து விடுங்கள், எங்களை சத்கதிக்கு அழைத்துச் செல்ல வாருங்கள் என அழைக்கின்றனர். அப்படிப்பட்ட யுக்தியை சொல்லுங்கள் அதாவது நாங்கள் சரீரத்தை விட்டுவிட்டு சாந்திதாமம் செல்ல வேண்டும், என கூறுகின்றனர். மனிதர்கள் குருமார்களிடம் இதற்காகத் தான் செல்கின்றனர். ஆனால் அந்த குருமார்கள் சரீரத்திலிருந்து விடுவித்து தன்னோடு கூடவே அழைத்துச் செல்ல முடியாது. ஒரு தந்தை மட்டுமே பதீத பாவனர் ஆவார். ஆகவே அவர் வரும்போது அவசியம் தூய்மையாக வேண்டும். தந்தையை மட்டுமே காலனுக்கெல்லாம் காலன், மகா காலன் எனக் கூறப்படுகிறது. அனைவரையும் சரீரத்திலிருந்து விடுவித்து தன்னோடு அழைத்துச் செல்கிறார், இவரே சுப்ரீம் வழிகாட்டியாக இருக்கிறார். இந்த கெட்டுப்போன சரீரத்தின் பந்தனத்திலிருந்து விடுபட விரும்புகின்றனர். சரீரத்தை விட்டால் பந்தனம் நீங்கும் என புரிந்துள்ளனர். இப்பொழுது உங்களை இந்த அசுர பந்தனங்களி-ருந்து விடுவித்து சுகமான தெய்வீக சம்மந்தத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என தந்தை கூறுகின்றார். நாம் சாந்திதாமம் வழியாக சுகதாமம் செல்வோம் என நீங்கள் புரிந்துள்ளீர்கள். பிறகு துக்க தாமத்திற்கு எப்படி வருகின்றோம் என்பதையும் நீங்கள் புரிந்துள்ளீர்கள். உங்களை கருப்பான நிலையிலிருந்து அழகான நிலை அடைய வைப்பதற்கு பாபா வந்திருக்கிறார். நான் உங்களுடைய கீழ்ப்படிந்த உண்மையான தந்தையாக இருக்கிறேன் என தந்தை கூறுகின்றார். தந்தை என்பவர் எப்பொழுதும் கீழ்படிந்தவராக இருப்பார்கள். சேவை நிறைய செய்வார்கள். நிறைய செலவு செய்து படிக்க வைத்து பிறகு அனைத்து செல்வம், சொத்துக்களையும் குழந்தைகளுக்குக் கொடுத்துவிட்டு, அவர்கள் சாது, சந்நியாசிகளிடம் சேர்ந்து விடுவார்கள். தன்னை விட குழந்தைகளை உயர்வாக ஆக்குவார்கள். நான் உங்களை இரட்டை எஜமானராக ஆக்குகிறேன் என தந்தையும் கூறுகின்றார். நீங்கள் உலகத்திற்கும், பிரம்மாண்டத்திற்கும் எஜமானர் ஆகின்றீர்கள். உங்களுக்கு இரட்டை பூஜையும் நடக்கிறது. ஆத்மா ரூபத்திலும், தேவதா ரூபத்திலும் பூஜை நடக்கிறது. எனக்கு சிவலிங்க ரூபத்தில் மட்டுமே பூஜை நடக்கிறது. நான் இராஜாவாக ஆவதில்லை. உங்களுக்கு எவ்வளவு சேவை செய்கிறேன். அப்படிப்பட்ட தந்தையை நீங்கள் ஏன் மறக்கின்றீர்கள்? ஹே! ஆத்மாக்களே! தன்னை ஆத்மா என புரிந்து என்னை நினைவு செய்யுங்கள், இதனால் உங்களுடைய பாவங்கள் அழியும். நீங்கள் யாரிடத்தில் வந்துள்ளீர்கள்? முதலில் தந்தை பிறகு தாதா. இப்பொழுது தந்தை பிறகு (கிரேட், கிரேட், கிராண்ட் பாதர்) உயர்ந்ததிலும் உயர்ந்த பாட்டனார், ஆதி தேவ், ஆதாம் எனவும் கூறப்படுகிறது. ஏனென்றால் மிகவும் அதிகமான வம்சம் தோன்றுகிறதல்லவா! சிவபாபாவை உயர்ந்ததிலும் உயர்ந்த பாட்டனார் என கூறுவதில்லை தானே? ஒவ்வொரு விசயத் திலும் உங்களை மிகவும் உயர்ந்தவராக ஆக்குகின்றார். அப்படிப்பட்ட பாபா கிடைத்துள்ளார் பிறகு அவரை நீங்கள் ஏன் மறக்கின்றீர்கள்? மறந்தால் எப்படி தூய்மை ஆவீர்கள். தந்தை தூய்மை யாக்குவதற்கு யுக்தி கூறுகின்றார். இந்த நினைவின் மூலமாக அழுக்கு நீங்கும். இனிமையிலும் இனிமையான அன்பான குழந்தைகளே! தேக அபிமானத்தை விட்டு ஆத்ம அபிமானி ஆக வேண்டும், தூய்மையாக வேண்டும், காமம் மகா எதிரி, இந்த ஒரு பிறவி மட்டும் எனக்காக தூய்மையாகுங்கள் என தந்தை கூறுகின்றார். எந்தவொரு கெட்ட காரியமும் செய்யாதீர்கள், எனக்கு மரியாதை செலுத்துங்கள் என லௌகீக தந்தையும் கூறுவார் அல்லவா! பரலோக தந்தையும் கூறுகின்றார், நான் தூய்மையாக்க வந்திருக்கிறேன், எனவே முகத்தை கருப்பாக ஆக்கிக் கொண்டு விடாதீர்கள், இல்லையென்றால் மரியாதையை இழப்பீர்கள். அனைத்து பிராமணர்கள் மற்றும் தந்தையின் மரியாதை களையும் இழந்து விடுவீர்கள். பாபா நாங்கள் கீழே விழுந்து விட்டோம், முகத்தை கருப்பாக்கி விட்டோம் என எழுதுகின்றனர். நான் உங்களை அழகாக ஆக்குவதற்கு வந்திருக்கிறேன், நீங்கள் முகத்தை ஏன் கருப்பாக ஆக்குகின்றீர்கள் என பாபா கூறுகின்றார். நீங்கள் சதா அழகான நிலை அடைய முயற்சி செய்ய வேண்டும். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும், ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. இந்த கடைசிக்கால முயற்சி செய்யப் பயன்படும் சரீரம் மிகவும் மதிப்பு வாய்ந்தது, இப்பொழுது நிறைய வருமானம் செய்ய வேண்டும். எல்லையற்ற தந்தையோடு சேர்ந்து சாப்பிடவேண்டும், அருந்த வேண்டும்.... அனைத்து சம்மந்தங்களையும் அனுபவம் செய்ய வேண்டும்.

2. தந்தைக்கும் மற்றும் இந்த பிராமண குடும்பத்திற்கும் இழுக்கு ஏற்படுவது போன்று எந்த காரியத்தையும் செய்யக் கூடாது. ஆத்ம அபிமானியாகி முற்றிலும் தூய்மையாக வேண்டும். நினைவின் மூலம் பழைய அழுக்குகளை (பாவங்களை) நீக்க வேண்டும்.

வரதானம்:
கேட்பதன் கூடவே சொரூபம் ஆகி மனதின் மனோரஞ்சனம் மூலம் சதா சக்திசாலி ஆத்மா ஆகுக.

தினமும் மனதில் சுயத்திற்காக மற்றும் பிறருக்காக ஊக்கம் உற்சாகம் நிறைந்த சங்கல்பத்தினை கொண்டு வாருங்கள். சுயம் தானும் அந்த சங்கல்பத்தின் சொரூபம் ஆகுங்கள் மற்றும் பிறருடைய சேவையிலும் ஈடுபடுத்துங்கள், அப்பொழுது தன்னுடைய வாழ்க்கையும் சதா காலத்திற்கும் உற்சாகமானதாக ஆகிவிடும் மற்றும் பிறருக்கும் கூட உற்சாகம் கொடுக்கக்கூடியவர்களாக ஆகி விடுவீர்கள். எவ்வாறு மனோரஞ்சனத்திற்கான (கேளிக்கைக்கான) நிகழ்ச்சி நடைபெறுகிறதோ, அவ்வாறு தினமும் மனதின் மனோரஞ்சனத்திற்கான நிகழ்ச்சியை உருவாக்குங்கள், என்ன கேட்கின்றீர்களோ, அதன் சொரூபம் ஆகுங்கள், அப்பொழுது சக்திசாலி ஆகிவிடுவீர்கள்.

சுலோகன்:
பிறரை மாற்றுவதற்கு முன்பாக தன்னை மாற்றுங்கள், இதுவே புத்திசாலித்தனம் ஆகும்.

அவ்யக்த சமிக்ஞை: எண்ணங்களின் சக்தியை சேமிப்பு செய்து சிறந்த சேவைக்கு கருவி ஆகுங்கள்.

அனைத்தையும் விட தீவிரவேக சேவைக்கான சாதனம் - சுப மற்றும் சிரேஷ்ட சங்கல்பங்களின் சக்தி ஆகும். எவ்வாறு பிரம்மா பாபா சிரேஷ்ட சங்கல்பத்தின் விதி மூலம் சேவையின் வளர்ச்சி யில் சதா சகயோகியாக இருக்கின்றார். விதி தீவிரமாக இருக்கிறது என்றால் வளர்ச்சியும் தீவிரமாக இருக்கும். அதேபோன்று, குழந்தை களாகிய நீங்களும் சிரேஷ்டமான சுப சங்கல்பங் களில் சம்பன்னம் ஆகுங்கள்.