05-08-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! இந்த விகார உலகத்தை சிவாலயமாக மாற்றுவதற்காக பாபா வந்திருக்கின்றார், விலை மாதர்களுக்கு கூட ஈஸ்வரிய செய்தி கொடுத்து அவர்களுக்கும் நன்மை செய்வது உங்களுடைய கடமையாகும்

கேள்வி:
எந்த குழந்தைகள் தங்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி கொள்கிறார்கள்?

பதில்:
யார் ஏதாவதொரு காரணத்தால் முரளியை தவற விடுகிறார்களோ, அவர்கள் தங்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். நிறைய குழந்தைகள் தங்களுக்குள் கோபித்துக் கொள்கின்ற காரணத்தினால் வகுப்பிற்கே வருவதில்லை. ஏதாவதொரு காரணத்தை உருவாக்கிக் கொண்டு வீட்டிலேயே உறங்கி விடுகிறார்கள், இதன் மூலம் அவர்கள் தனக்கே தான் நஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள் ஏனென்றால் பாபா தினம்தோறும் ஏதாவதொரு புதிய யுக்திகளை சொல்லிக் கொண்டே இருக்கின்றார், கேட்கவே இல்லை என்றால் எவ்வாறு நடை முறையில் கொண்டு வருவார்கள்.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகள் நாம் உலகத்திற்கு எஜமானர்களாக ஆவதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் என்பதை தெரிந்திருக்கிறார்கள்.ஆனால் மாயை யும் மறக்கச் செய்து விடுகிறது. சிலரை முழு நாளும் மறக்கச் செய்து விடுகிறது. குஷி ஏற்படுவதற்கு ஒருபோதும் நினைவே செய்வதில்லை. நமக்கு பகவான் படிப்பிக்கின்றார் என்பதையே மறந்து விடுகிறார்கள். மறந்து விடுகின்ற காரணத்தினால் வேறு எந்த சேவையும் செய்ய முடிவதில்லை. மோசத்திலும் மோசமாக இருக்கக் கூடிய விலை மாதர்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்று இரவு பாபா புரிய வைத்தார். விலை மாதர்களுக்கு நீங்கள் அறிவியுங்கள், நீங்கள் தந்தையின் இந்த ஞானத்தை தாரணை செய்வதின் மூலம் சொர்க்கத்தின் உலகத்தின் மகாராணியாக ஆக முடியும், செல்வந்தர்கள் அப்படி ஆக முடியாது. அவர்களுக்கு ஞானம் கொடுப்பதற்கு யார் படித்தவர்களோ, அவர்கள் ஏற்பாடு செய்யலாம், பாவம் அவர்கள் மிகவும் குஷி அடைவார்கள் ஏனென்றால் அவர்களும் அபலைகளாவர், அவர்களுக்கு நீங்கள் புரிய வைக்கலாம். நிறைய யுக்திகளை பாபா புரியவைத்துக் கொண்டே இருக்கின்றார். நீங்கள் தான் உயர்ந்ததிலும் உயர்ந்தவர்களாகவும், கீழானதிலும் கீழானவர்களாகவும் ஆகியுள்ளீர்கள் என்று சொல்லுங்கள். உங்களுடைய பெயரை வைத்து தான் பாரதம் வேசியாலயமாக ஆகியிருக்கிறது. நீங்கள் இந்த முயற்சி செய்வதின் மூலம் சிவாலயத்திற்கு (சொர்க்கத்திற்கு) செல்ல முடியும். நீங்கள் இப்போது பணத்திற்காக எவ்வளவு மோசமான செயலை செய்கிறீர்கள். இப்போது இதை விட்டு விடுங்கள். இப்படி புரிய வைப்பதின் மூலம் அவர்கள் மிகுந்த குஷியடைவார்கள். உங்களை யாரும் தடுக்க முடியாது. இது நல்ல விசயம் அல்லவா. பகவான் ஏழைகளினுடையவர் ஆவார். பணத்திற் காகவே இப்படி மோசமான காரியத்தை செய்கிறார்கள். இது அவர்களுடைய தொழிலைப் போல் நடக்கிறது. சேவையை எப்படி அதிகரிப்பது என்று யுக்திகளை உருவாக்கு வோம் என்று குழந்தை கள் கூறுகிறார்கள். சில குழந்தைகள் ஏதாவதொரு விசயத்தில் கோபித்துக் கொள்ளவும் செய் கிறார்கள். படிப்பையும் விட்டு விடுகிறார்கள். நாம் படிக்கவில்லை யென்றால் நமக்கு தான் நஷ்டம் என்பதையும் புரிந்து கொள்வதில்லை. கோபித்துக் கொண்டு இருந்து விடுகிறார்கள். இன்னார் இப்படி சொன்னார், அப்படி சொன்னார் ஆகையினால் வருவதில்லை என்று சொல்கிறார் கள். வாரத்திற்கு ஒரு முறை கஷ்டப்பட்டு வருகிறார்கள். பாபா முரளிகளில் அவ்வப்போது வழிகளை சொல்லிக் கொண்டே இருக்கின்றார். முரளியை கேட்க வேண்டும் அல்லவா. வகுப்பிற்கு வந்தால் தான் கேட்க முடியும். ஏதாவதொரு காரணம் காட்டி சாக்கு- போக்கு சொல்லி உறங்கி விடக்கூடியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நல்லது, இன்றைக்கு செல்லவில்லை. பாபா அப்படிப்பட்ட நல்ல நல்ல பாயிண்டுகளை கூறுகின்றார். சேவை செய்தால் உயர்ந்த பதவி கூட அடைவார்கள். இது படிப்பாகும். பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் போன்றவற்றில் சாஸ்திரங் கள் நிறைய படிக்கிறார்கள். வேறு எந்த வேலையும் இல்லையென்றால் சாஸ்திரங்களை மனனம் செய்து கொண்டு சத்சங்கத்தை ஆரம்பித்து விடு கிறார்கள். அதில் குறிக்கோள் எதுவுமே இல்லை. இந்த படிப்பின் மூலம் அனைவருடைய துக்கமும் தூரம் போகிறது. எனவே குழந்தைகளாகிய நீங்கள் இப்படிப்பட்ட மோசமானவர்களுக்கு சேவை செய்ய வேண்டும். இங்கே இப்படிப்பட்டவர்கள் வருவதை செல்வந்தர்கள் பார்த்தார்கள் என்றால் அவர்களுக்கு வருவதற்கு மனம் வராது. தேக-அபிமானம் இருக்கிறது அல்லவா. அவர்களுக்கு வெட்கம் வரும். நல்லது, அவர்களுக்கு தனி பள்ளியை திறந்து கொள்ளுங்கள். அந்தப் படிப்பு ஒரு பைசாவிற்கு ஒப்பான, சரீர நிர்வாகத்திற் கான படிப்பாகும். இது 21 பிறவிகளுக்கானதாகும். எவ்வளவு பேருக்கு நன்மை நடக்கும். குறிப்பாக தாய்மார்கள், பாபா வீட்டில் கீதா பாடசாலை திறக்கலாமா என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு ஈஸ்வரிய சேவையின் ஆர்வம் இருக்கிறது. ஆண்கள் இங்கே-அங்கே என்று கிளப்புகளுக்கு சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். செல்வந்தர்களுக்கு இங்கேயே சொர்க்கமாகும். எவ்வளவு பேஷன் போன்ற வைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் தேவதைகளுக்கு இயற்கையான அழகு எப்படி இருக்கிறது என்று பாருங்கள். எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது. அதுபோல் இங்கே உங்களுக்கு உண்மை சொல்லிக் கொடுக்கப்படுகிறது எனும்போது எவ்வளவு குறைவானவர்கள் வருகிறார் கள். அதுவும் ஏழைகள் தான் வருகிறார்கள். ஆனால் அந்தப் பக்கம் உடனே சென்று விடுகிறார்கள். அங்கேயும் அலங்காரம் போன்றவை களை செய்து கொண்டு செல்கிறார்கள். குருமார்கள் நிச்சயம் கூட செய்து வைக்கிறார்கள். இங்கே யாருக்காவது நிச்சயம் செய்து வைக்கப்படுகிறது என்றாலும் கூட காப்பாற்றுவதற்காகவே ஆகும். காம சிதையில் ஏறுவதிலிருந்து காப்பாற்றப்படட்டும். ஞான சிதையில் அமர்ந்து கோடி மடங்கு பாக்கியசாலியாக ஆகி விடட்டும் என்பதற்காக ஆகும். இந்த விணான காரியங்களை விட்டு விட்டு சொர்க்கத்திற்குச் செல்லுங்கள் என்று தாய் - தந்தையருக்கு சொல்லப்படுகிறது. என்ன செய்வது, இந்த உலகம் குலத்தின் பெயரை கெடுக்கிறீர்கள், திருமணம் செய்யாமல் இருப்பது விதிமுறைக்கு எதிரானது என்று எங்கள் மீது கோபித்துக் கொள்கிறார்கள் என்று சொல்கிறார்கள். உலக வழக்கம், குலமரியாதையை விடுவதே இல்லை. என்னுடையவர் ஒருவரே, வேறு யாரும் இல்லை என்று பக்தி மார்க்கத்தில் பாடுகிறார்கள். மீராவின் பாடல் கூட ஒன்று உள்ளது. பெண்களில் நம்பர் ஒன் பக்த மீரா ஆவார், ஆண்களில் நாரதர் என்று பாடப் பட்டுள்ளது. நாரதருடைய கதை கூட ஒன்று உள்ளது அல்லவா. நான் லஷ்மியை மணம் புரிய முடியுமா என்று புதியவர்கள் யாராவது உங்களிடம் கேட்டால், நான் தகுதி யுடையவனா என்று பாருங்கள் என்று சொல்லுங்கள். தூய்மையான சர்வகுணங்களிலும் நிறைந்தவனாக இருக்கிறேனா.......? இது விகாரம் நிறைந்த தூய்மையற்ற உலகமாகும். அதிலிருந்து நீக்கி தூய்மை யாக்குவதற்காக பாபா வந்துள்ளார். தூய்மையாக ஆனீர்கள் என்றால் தான் லஷ்மியை மணம் புரிய தகுதியானவர்களாக ஆக முடியும். இங்கே பாபாவிடம் வந்து சத்தியம் செய்கிறார்கள் பிறகு வீட்டிற்குச் சென்று விகாரத்தில் விழுகிறார்கள். இப்படியெல்லாம் செய்திகள் வருகின்றன. இப்படிப்பட்டவர்களை எந்த பிராமணி அழைத்து வருகின்றாரோ, அவர் மீது கூட இதனுடைய தாக்கம் ஏற்பட்டு விடுகிறது என்று பாபா கூறுகின்றார். இந்திர சபையின் கதை கூட இருக்கிறது அல்லவா. எனவே அழைத்து வருபவர்களுக்கு கூட தண்டனை ஏற்பட்டு விடுகிறது. அரைகுறை யானவர்களை அழைத்து வராதீர்கள் என்று பாபா எப்போதும் பிராமணிகளுக்கு கூறுகின்றார். உங்களுடைய நிலையும் இறங்கி விடும் ஏனென்றால் விதிக்கு புறம்பாக அழைத்து வருகிறீர்கள். உண்மையில் பிராமணியாக ஆவது மிகவும் சகஜமாகும். 10-15 நாட்களில் ஆகி விட முடியும். யாருக்கும் மிகவும் சகஜமாக புரிய வைப்பதற்கான யுக்தியை பாபா கூறுகின்றார். பாரதவாசி களாகிய நீங்கள் ஆதி சனாதன தேவி-தேவதா தர்மத்தவர்களாக இருந்தீர்கள், சொர்க்கவாசிகளாக இருந்தீர்கள். இப்போது நரகவாசிகளாக இருக்கின்றீர்கள் மீண்டும் சொர்க்கவாசிகளாக ஆக வேண்டும் என்றால் இந்த விகாரத்தை விட்டு விடுங்கள். பாபாவை மட்டும் நினைவு செய்தீர்கள் என்றால் விகர்மங்கள் வினாசம் ஆகி விடும். எவ்வளவு சகஜமானதாக இருக்கிறது. ஆனால் சிலர் முற்றிலும் புரிந்து கொள்வதே இல்லை. தாங்களே புரிந்து கொள்ள வில்லை என்றால் மற்றவர்களுக்கு என்ன புரிய வைப்பார்கள். வானப்பிரஸ்த நிலையிலும் கூட பற்றின் ஈர்ப்பு இருந்து விடுகிறது. இன்றைக்கு வானப்பிரஸ்த நிலைக்கு அவ்வளவாக செல்வதே இல்லை. தமோபிரதானமாக இருக்கிறது அல்லவா. இங்கேயே மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். முன்பு பெரிய-பெரிய வானப்பிரஸ்திகளின் ஆசிரமம் இருந்தது. இன்றைக்கு அவ்வளவாக இல்லை. 80-90 வயதாகி விடுகிறது எனும்போது வீட்டை விடுவதே இல்லை. சப்தங்களை கடந்து செல்ல வேண்டும், ஈஸ்வரனை நினைவு செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்வதே இல்லை. பகவான் யார், இவையனைத்தையும் தெரிந்திருக்கவில்லை. சர்வ வியாபி என்று சொல்லி விட்டால் யாரை நினைவு செய்வது. நாம் பூஜாரிகள் என்பதையும் புரிந்து கொள்வதில்லை. பாபா உங்களை பூஜாரியிலிருந்து பூஜிக்கத் தக்கவர்களாக மாற்றுகின்றார், அதுவும் 21 பிறவிகளுக்கு ஆகும். அதற்கு முயற்சியும் செய்ய வேண்டி யிருக்கும்.

இந்த பழைய உலகம் முடியப்போகிறது என்பதை பாபா புரிய வைத்திருக்கின்றார். இப்போது நாம் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற ஈடுபாடே இருக்க வேண்டும். அங்கே குற்றமான விசயங்கள் இருப்பதே இல்லை. பாபா வந்து அந்த தூய்மையான உலகத்திற்கான ஏற்பாடுகளை செய்ய வைக்கின்றார். சேவாதாரி செல்லக் குழந்தைகளை கண்களில் அமர்த்தி அழைத்துச் செல்கின்றார். எனவே மோசமானவர்களை கடைத் தேற்றுவதற்கு தைரியம் வேண்டும், அந்த அரசாங்கத்தில் பெரிய-பெரிய குழு இருக்கிறது. படித்தவர்கள் டிப்டாப்பாக செல்கிறார்கள். இங்கே நிறைய பேர் ஏழைகள் சாதாரணமானவர்களாவர். பாபா அமர்ந்து அவர்களை அந்தளவிற்கு உயரே உயர்த்து கின்றார். நடத்தையும் மிக ராயலாக இருக்க வேண்டும். பகவான் படிப்பிக்கின்றார். அந்த படிப்பில் யாராவது பெரிய தேர்வில் தேர்ச்சி பெற்று விடுகின்றார் என்றால் எவ்வளவு டிப்டாப்பாகி விடுகிறார்கள். இங்கே பாபா ஏழைப்பங்காளனாக இருக்கின்றார். ஏழைகள் தான் ஏதாவது அனுப்பி வைக்கிறார்கள். ஒன்று-இரண்டு ரூபாய்க்கு கூட மணி-ஆர்டர் அனுப்புகிறார்கள். நீங்கள் மகான் பாக்கியசாலிகள் என்று பாபா கூறுகின்றார். அதற்குப் பதிலாக நிறைய கிடைத்து விடுகிறது. இது கூட ஒன்றும் புதிய விசயம் கிடையாது. சாட்சியாக இருந்து நாடகத்தைப் பார்க்கின்றார். குழந்தை களே நல்ல விதத்தில் படியுங்கள். இது ஈஸ்வரிய யக்ஞமாகும், என்ன வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் இங்கே எடுத்தீர்கள் என்றால் அங்கே குறைந்து விடும். சொர்க்கத்தில் அனைத்தும் கிடைக்கும். பாபாவிற்கு சேவையில் மிகுந்த சுறுசுறுப்பான குழந்தைகள் வேண்டும். சந்தேஷியை போல், மோகினியைப் போல் சேவையில் ஊக்கமுடையவர்களாக இருக்க வேண்டும். உங்களுடைய பெயர் புகழ்பெற்று விடும். பிறகு உங்களுக்கு அதிக மரியாதை அளிப்பார்கள். பாபா அனைத்து வழிகளையும் கொடுத்துக் கொண்டே இருக்கின்றார். குழந்தைகளுக்கு இங்கே எவ்வளவு நேரம் கிடைக்கிறதோ நினைவில் இருங்கள் என்று பாபா கூறுகின்றார். தேர்வு நாள் நெருங்கும் போது தனிமையில் சென்று படிக்கிறார்கள். தனியாக டீச்சரைக் கூட அமர்த்திக் கொள் கிறார்கள். நம்மிடம் நிறைய டீச்சர்கள் இருக்கிறார்கள், படிப்பதற்கு ஆர்வம் மட்டும் வேண்டும். பாபா மிகவும் சகஜமாக புரிய வைக்கின்றார். தங்களை ஆத்மா என்று மட்டும் நிச்சயம் செய்து கொள்ளுங்கள். இந்த சரீரம் அழியக்கூடியதாகும். ஆத்மாக்களாகிய நீங்கள் அழிவற்றவர்களா வீர்கள். இந்த ஞானம் ஒரு முறை தான் கிடைக்கிறது பிறகு சத்யுகத்திலிருந்து கலியுக கடைசி வரை யாருக்கும் கிடைப்பதே இல்லை. உங்களுக்குத் தான் கிடைக்கிறது. நான் ஆத்மா என்பதை உறுதியாக நிச்சயம் செய்து கொள்ளுங்கள். தந்தையிடமிருந்து நமக்கு ஆஸ்தி கிடைக்கிறது. பாபாவின் நினைவின் மூலம் தான் விகர்மங்கள் வினாசம் ஆகும். அவ்வளவு தான். இதை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருந்தால் கூட அதிக நன்மை உண்டாகும். ஆனால் சார்ட் வைப்பதே இல்லை. எழுதி எழுதி களைப்படைந்து விடுகிறார்கள். பாபா மிகவும் சுலப மாக்கி புரிய வைக்கின்றார். ஆத்மாவாகிய நான் சதோபிரதானமாக இருந்தேன், இப்போது தமோபிர தானமாக ஆகியுள்ளேன். இப்போது பாபா கூறுகின்றார், என்னை நினைவு செய்தீர்கள் என்றால் சதோபிரதானமாக ஆகி விடுவீர்கள். எவ்வளவு சகஜமானதாக இருக்கிறது இருந்தாலும் மறந்து விடுகிறார்கள். எவ்வளவு நேரம் அமரு கிறீர்களோ, தங்களை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள். ஆத்மாவாகிய நான் பாபாவின் குழந்தையாக இருக்கின்றேன். பாபாவை நினைவு செய்வதின் மூலம் சொர்க்கத்தின் இராஜ்யம் கிடைக்கும். பாபாவை நினைவு செய்வதின் மூலம் அரைக் கல்பத்தின் பாவங்கள் பஸ்மமாகி விடும். எவ்வளவு சகஜமான யுக்தியை கூறுகின்றார். குழந்தை கள் அனைவரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த பாபா(பிரம்மா) அவரே கூட பயிற்சி செய்கின்றார் ஆகையினால் தான் கற்றுக் கொடுக்கிறார் அல்லவா. நான் பாபாவினுடைய ரதமாக இருக்கின்றேன், பாபா எனக்கு ஊட்டுகின்றார். குழந்தைகளாகிய நீங்களும் கூட அவ்வாறே புரிந்து கொள்ளுங்கள். சிவபாபாவை நினைத்துக் கொண்டே இருந்தால் எவ்வளவு நன்மை ஏற்பட்டு விடும். ஆனால் மறந்து விடுகிறார்கள். மிகவும் சகஜமானதாகும். தொழிலில் வாடிக்கையாளர்கள் யாரும் இல்லையென்றால் நினைவில் அமர்ந்து விடுங்கள். நான் ஆத்மா, பாபாவை நினைவு செய்ய வேண்டும். நோய்வாய்ப்பட்டிருந்தாலும் கூட நினைவு செய்யலாம். பாந்தோலிகளாக (கட்டுப்பாட்டில்) இருந்தால் அங்கே அமர்ந்து கொண்டே நினைவு செய்து கொண்டே இருந்தால் 10-20 வருடங்களாக இருப்பவர்களை விடவும் உயர்ந்த பதவியை அடையலாம். நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) சேவையில் மிக மிக சுறு சுறுப்பானவராக ஆக வேண்டும். எவ்வளவு நேரம் கிடைக்கிறதோ அதில் தனிமையில் அமர்ந்து பாபாவை நினைவு செய்ய வேண்டும். படிப்பில் ஆர்வம் வைக்க வேண்டும். படிப்பில் கோபித்துக் கொள்ளக் கூடாது.

2) தங்களுடைய நடத்தையை மிக-மிக ராயலாக வைத்துக் கொள்ள வேண்டும், அவ்வளவு தான் இப்போது வீட்டிற்குச் செல்ல வேண்டும், பழைய உலகம் முடியப் போகிறது ஆகையினால் பற்றின் கயிற்றை (பந்தனத்தை) அறுத்து விட வேண்டும். சப்தங்களை கடந்த நிலையில் (வானபிரஸ்தி) இருப்பதற்கான பயிற்சி செய்ய வேண்டும். மோசமான வர்களைக் கடைத்தேற்றுவதற்கான சேவை செய்ய வேண்டும்.

வரதானம்:
அபவித்ரதாவின் பெயர் அடையாளத்தைக் கூட சமாப்தி செய்து புனிதமானவர் என்ற பட்டத்தைப் பெறக்கூடிய தூய அன்னப்பறவை ஆகுக.

எவ்வாறு அன்னம் ஒருபொழுதும் கல்லை கிரஹிப்பதில்லை, இரத்தினங்களை கிரஹிக் கின்றதோ, அதுபோல் தூய அன்னப்பறவையாக இருப்பவர்கள் ஒருபோதும் அவகுணத்தை அதாவது கல்லை தாரணை செய்யமாட்டார்கள். அவர்கள் வீணானவை மற்றும் சக்திசாலி யானவற்றை பிரித்து வீணானவற்றை விட்டுவிடு கின்றார்கள், சக்திசாலியானதை தனதாக்கிக் கொள்கின்றார்கள். அப்பேற்பட்ட தூய அன்னப்பறவை தான் பவித்ரமான சுத்த ஆத்மாக்கள் ஆவார்கள், அவர்களுடைய ஆகாரம், நடத்தை போன்ற அனைத்தும் சுத்தமாகி விடுகின்றது. எப்பொழுது அசுத்தம் அதாவது அபவித்ரதாவின் பெயர் அடையாளம் கூட சமாப்தி ஆகிவிடு கின்றதோ, அப்பொழுதே எதிர்காலத்தில் புனிதமானவர் என்ற பட்டம் கிடைக்கின்றது, ஆகையினால், ஒருபொழுதும் தவறுதலாகக்கூட யாருடைய அவகுணத்தையும் தாரணை செய்ய வேண்டாம்.

சுலோகன்:
யார் பழைய சுபாவ சமஸ்காரத்தின் வம்சத்தையும் தியாகம் செய்கின்றார்களோ, அவர்களே சர்வம்ச தியாகி ஆவார்கள்.

அவ்யக்த சமிக்ஞை : சகஜயோகி ஆகவேண்டும் என்றால் பரமாத்ம அன்பின் அனுபவி ஆகுங்கள்

எந்தவொரு காரியம் செய்தாலும் தந்தையின் நினைவில் லவ்லீன் (அன்பில் மூழ்கியிருத்தல்) ஆகியிருங்கள். எந்தவொரு விசயத்தின் விஸ்தாரத்தில் செல்லாமல், விஸ்தாரத்திற்கு புள்ளி வைத்து, புள்ளியில் கரைத்துவிடுங்கள், புள்ளி ஆகிவிடுங்கள், புள்ளி வைத்துவிடுங்கள், அப்பொழுது முழு விஸ்தாரமும், முழு வலையும் ஒரு நொடி யில் கரைந்துவிடும் மற்றும் சமயம் சேமிப்பாகி விடும், உழைப்பில் இருந்து விடுபட்டுவிடுவீர்கள். புள்ளி ஆகி புள்ளியில் லவ்லீன் ஆகிவிடுவீர்கள்.

விசேஷ அறிவிப்பு:
பாபாவினுடைய ஸ்ரீமத்படி முரளி பாபாவின் குழந்தைகளுக்காக மட்டுமே உள்ளதே அன்றிஇராஜ யோகத்தின் பாடமுறை கூட படிக்காத மற்ற ஆத்மாக்களுக்காக அல்ல. எனவே அனைத்து நிமித்த டீச்சர்கள் மற்றும் சகோதர சகோதரிகளிடம் பணிவுடன் வேண்டி கொள்வதாவது சாகார முரளியின் ஆடியோ, வீடியோவை யு-டியூப், பேஸ் புக், இன்ஸ்டாகிராம் அல்லது எந்த ஒரு வாட்ஸ் அப் குரூப்பிற்கோ போஸ்ட் செய்ய வேண்டாம்.