05-09-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! உங்கள் உறுதிமொழி-
எதுவரை நான் தூய்மையாகவில்லையோ, அதுவரை பாபாவை நினைவு செய்து
கொண்டே இருப்பேன். ஒரு பாபாவிடம் மட்டுமே அன்பு செலுத்துவேன்
என்பதாகும்.
கேள்வி:
புத்திசாலிக் குழந்தைகள்
சமயத்தைப் பார்த்து எந்த மாதிரி புருஷார்த்தம் செய்வார் கள்?
பதில்:
கடைசியில் சரீரம் விடும்போது ஒரு
தந்தையின் நினைவு மட்டுமே இருக்க வேண்டும். வேறு எந்த ஒரு
நினைவும் வரலாகாது. அந்த மாதிரிப் புருஷார்த்தத்தை புத்திசாலிக்
குழந்தைகள் இப்போதிருந்தே செய்து கொண்டிருப்பார்கள். ஏனெனில்
கர்மாதீத் ஆகிச் செல்ல வேண்டும். அதற்காக இந்தப் பழைய
சரீரத்தின் மீது வைத்த மோகத்தை நீக்கிக் கொண்டே செல்லுங்கள்.
அவ்வளவு தான், நான் பாபாவிடம் சென்று கொண்டே இருக்கிறேன்.
பாடல்:
அவரும் நம்மை விட்டுப் பிரிய
மாட்டார்..........
ஓம் சாந்தி.
பாபா வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். எல்லையற்ற
தந்தையிடம் குழந்தை கள் உறுதிமொழி தருகின்றனர், பாபா, நான்
உங்களுடையவனாக ஆகியுள்ளேன். கடைசி வரை, எப்போது நான்
சாந்திதாமம் போய்ச் சேர்கிறேனோ, அதுவரை உங்களை நினைவு செய்வதன்
மூலம் என்னுடைய தலை மீது உள்ள பல பிறவிகளின் பாவங்கள் எரிந்து
போகும். இதுவே யோக அக்னி எனச் சொல்லப்படுகின்றது. வேறு எந்த ஓர்
உபாயமும் கிடையாது. பதீத-பாவனர் அல்லது ஸ்ரீ ஸ்ரீ 108 ஜெகத்குரு
என ஒருவர் தான் சொல்லப் படுகிறார். அவரே உலகத்திற்கே தந்தை,
உலகத்திற்கே ஆசிரியர், உலகத்திலுள்ள அனைவருக்கும் குரு.
படைப்பின் முதல்-இடை-கடை பற்றிய ஞானத்தை பாபா தான் தருகிறார்.
இது பதீத் உலகம். இதில் தூய்மையானவர் ஒருவர் கூட இருப்பதென்பது
இயலாத ஒன்றாகும். பதீத-பாவனர் தந்தை தான் அனைவருக்கும் சத்கதி
அளிக்கிறார். நீங்களும் கூட அவருடைய குழந்தை ஆகியிருக்கிறீர்கள்.
நீங்கள் கற்றுக் கொண்டி ருக்கிறீர்கள், உலகத்தைத்
தூய்மையாக்குவது எப்படி? என்று சிவனுக்கு உதவி புரிய
திரிமூர்த்தி அவசியம் வேண்டும். இதையும் எழுத வேண்டும் -
தெய்வீக இராஜ்யம் உங்கள் பிறப்புரிமை. அதுவும் இப்போது
கல்பத்தின் சங்கம யுகத்தில் தெளிவாக எழுதாமல் மனிதர்கள் எதையும்
புரிந்து கொள்ள முடியாது. மேலும் இன்னொரு விஷயம், பி.கே. பெயர்
இருக்குமிடத்தில் பிரஜாபிதா பிரம்மா என்ற வார்த்தையும் அவசியம்.
ஏனெனில் பிரம்மா என்ற பெயரும் கூட அநேகருக்கு உள்ளது. பிரஜாபிதா
பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயா என எழுத வேண்டும்.
நீங்கள் அறிவீர்கள், கல் போன்ற உலகினை, தூய தங்கமாக ஒரு தந்தை
மட்டுமே உருவாக்குவார். இச்சமயம் ஒருவர் கூட தூய்மையானவர்
கிடையாது. அனைவரும் ஒருவர் மற்றவரோடு சண்டை யிட்டுக் கொண்டு,
நிந்தனை செய்து கொண்டே இருக்கின்றனர். தந்தை பற்றியும்
சொல்கின்றனர் - கச்ச மச்ச (ஆமை, மீனாக) அவதாரம் என்று. அவதாரம்
எனச் சொல்லப்படுவது எது என்பதைக் கூடப் புரிந்து கொள்ளவில்லை.
அவதாரமோ ஒருவருக்கு மட்டுமே உள்ளது. அவரும் கூட அலௌகீக ரீதியாக
சரீரத்தில் பிரவேசமாகி, உலகை தூய்மை ஆக்குகிறார். மற்ற
ஆத்மாக்களோ தத்தமது சரீரத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். ஆனால்
ஞானத்தின் கடல் என்றால் அவர் ஞானத்தை எப்படிக் கொடுப்பார்?
அதற்காக சரீரம் வேண்டும் இல்லையா? இவ்விசயங்களை உங்களைத் தவிர
வேறு யாரும் அறிந்து கொள்ளவில்லை. இல்லற விவகாரங்களில் இருந்து
கொண்டு தூய்மையாக ஆவதென்பது தைரியமான காரியமாகும். மகாவீர்
என்றால் வீரத்தைக் காட்டுவார். இதுவும் வீரம் தான் - எந்த ஒரு
காரியத்தை சந்நியாசிகளால் செய்ய இயலாதோ, அதை நீங்கள் செய்ய
முடியும். பாபா ஸ்ரீமத் தருகிறார் - நீங்கள் இதுபோல் இல்லற
விவகாரங் களில் இருந்து கொண்டு தாமரை மலருக்கு சமமாக
தூய்மையாகுங்கள். அப்போது தான் உயர்ந்த பதவி பெற முடியும்.
இல்லையென்றால் உலகின் ராஜபதவி எப்படிக் கிடைக்கும்? இதுவே
நரனிலிருந்து நாராயணன் ஆவதற்கான படிப்பு. இது பாட சாலையாகும்.
அநேகர் படிக்கின்றனர். அதனால் எழுதுங்கள் - ஈஸ்வரிய விஷ்வ
வித்யாலயம் என்று. இதுவோ முற்றிலும் சரியான வார்த்தையாகும்.
பாரதவாசிகள் அறிவார்கள், நாம் உலகின் எஜமானராக இருந்தோம் - இது
நேற்றைய விசயம். இதுவரையிலுமே ராதா-கிருஷ்ணன் அல்லது
லட்சுமி-நாராயணனரின் கோவிலைக் கட்டிக் கொண்டே உள்ளனர். அநேகரோ
தூய்மையற்ற மனிதர்களுக்கும் கூடக் கோவில் கட்டுகின்றனர்.
துவாபரயுகம் தொடங்கி தூய்மை இழந்த மனிதர்களாக உள்ளனர்.
சிவனுக்கு, மற்றும் தேவிகளுக்குக் கோவில் கட்டுவது உண்டு அதே
போல இந்தப் தூய்மையற்ற மனிதர்களுக்குக் கூட கட்டுகின்றனர்!
இவர்கள் தேவதை யல்ல. ஆக, பாபா புரிய வைக்கிறார் - இவ்விசயங்கள்
பற்றி சரியான படி விசார் சாகர் மந்தன் செய்ய வேண்டும். பாபாவோ
புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார் - நாளுக்கு நாள் எழுதியது
மாற்றமடைந்து கொண்டே போகின்றது. முதலிலேயே ஏன் உருவாக்கவில்லை
எனக் கேட்கக் கூடாது. முதலிலேயே ஏன் மன்மனாபவ என்பதன்
அர்த்தத்தைப் புரிய வைக்கவில்லை எனக் கேட்கக் கூடாது. அட,
முதலிலேயே இதுபோல் நினைவில் நிலைத்திருக்க முடியாதே! மிகச்சில
குழந்தைகள் தான் ஒவ்வொரு விசயத்திற்கும் முழுமையாக சரியான பதிலை
தர முடியும். அதிர்ஷ்டத்தில் உயர்ந்த பதவி இல்லை என்றால்
ஆசிரியரும் கூட என்ன செய்வார்? ஆசிர்வாதத்தினால் உயர்ந்தவராக
ஆக்கிவிடுவார் என்பதல்ல. தன்னைத் தான் பார்க்க வேண்டும் - நாம்
எப்படி சேவை செய்கிறோம்? விசார் சாகர் மந்தன் செய்ய வேண்டும்.
கீதையின் பகவான் யார்? - இந்தச் சித்திரம் மிகவும்
முக்கியமானதாகும். பகவான் நிராகார் (சரீரமற்றவர்). அவர்
பிரம்மாவின் சரீரம் இன்றி பேச முடியாது. அவர் வருவதே
பிரம்மாவின் உடலில், சங்கமயுகத்தில் தான். இல்லையென்றால்
பிரம்மா-விஷ்ணு-சங்கர் எதற்காக? வாழ்க்கை வரலாறு வேண்டும்
இல்லையா? யாருக்கும் இது தெரியாது. பிரம்மா பற்றிச்
சொல்கின்றனர் - 100 புஜங்கள் கொண்ட பிரம்மாவிடம் செல்லுங்கள்,
1000 புஜங்கள் கொண்டவரிடம் செல்லுங்கள் என்பதாக. இதைப்
பற்றியும் ஒரு கதை உருவாக்கப் பட்டுள்ளது. பிரஜாபிதா
பிரம்மாவுக்கு இவ்வளவு ஏராளமான குழந்தைகள் உள்ளன அல்லவா?
பவித்திரமாவதற்காக இங்கே வருகின்றனர். பல பிறவிகளாக தூய்மை
அற்றவர்களாக இருந்துள்ளனர். இப்போது முழு தூய்மையாக வேண்டும்.
ஸ்ரீமத் கிடைக் கின்றது - என்னை மட்டுமே நினைவு செய்யுங்கள்
என்று. ஒரு சிலரோ, இன்று வரையும் கூட எதையும் புரிந்து கொள்ள
முடிய வில்லை - நாம் எப்படி நினைவு செய்வது என்று.
குழப்பமடைந்து விடுகின்றனர். பாபாவுடையவர் ஆகிப் பிறகும்
விகர்மங்களை வெல்ல முடியவில்லை, பாவங்கள் நீங்கவில்லை, நினைவு
யாத்திரையில் இருக்கவில்லை என்றால் அவர்கள் என்ன பதவி
பெறுவார்கள்? சமர்ப் பணமானவர் என்றாலும் அதனால் என்ன நன்மை?
எதுவரை புண்ணிய ஆத்மா ஆகி மற்றவர் களையும் ஆக்கவில்லை என்றால்
உயர்ந்த பதவி பெற இயலாது. எவ்வளவு குறைவாக என்னை நினைவு
செய்கிறார்களோ, அந்த அளவுக்குக் குறைந்த பதவியே பெறுவார்கள்.
இரட்டைக் கிரீடதாரியாக எப்படி ஆவார்கள்? பிறகு நம்பர்வார்
புருஷார்த்தத்தின் அனுசாரம் தாமதமாக வருவார்கள். நாம்
அனைத்தையும் சமர்ப்பணம் செய்து விட்டோம், அதனால் டபுள்
கிரீடதாரி ஆகிவிடுவோம் என்பதல்ல. முதலில் தாச-தாசிகளாக
ஆகி-ஆகியே பிறகு கடைசியில் கொஞ்சம் கிடைக்கும். தாச-தாசிகள்
ஒன்றும் கிருஷ்ண ரோடு கூட ஊஞ்சலாட முடியாது. சிலருக்கு நான்
சமர்ப்பணம் ஆகிவிட்டேன் என அகம்பாவம் உள்ளது. ஆனால் நினைவில்
இல்லாமல் என்ன ஆக முடியும்.? தாச தாசி ஆவதைவிட செல்வந்தரான
பிரஜை ஆவது மேல். இவை மிகவும் புரிந்துக் கொள்ள வேண்டிய
விசயங்களாகும். இதில் மிகவும் முயற்சி செய்ய வேண்டும். கொஞ்சம்
கிடைத்தால் போதும் என மகிழ்ச்சியடைந்து விடக் கூடாது. நானும்
ராஜாவாக ஆவேன். அப்படி யானால், ஏராளமான ராஜாக்கள்
உருவாகிவிடுவார்கள். பாபா சொல்கிறார், முதல் முக்கிய விசயம்
நினைவின் யாத்திரை. யார் நல்லபடியாக நினைவில் இருக்கின்றனரோ,
அவர்களுக்குக் குஷி இருக்கும். பாபா புரிய வைக்கிறார், ஆத்மா
ஒரு சரீரம் விட்டு வேறொன்று எடுக்கின்றது. சத்யுகத் தில்
குஷியோடு ஒரு சரீரத்தை விட்டு வேறொன்றை எடுக்கின்றனர். இங்கே
அழத் தொடங்கி விடுகின்றனர். சத்யுகத்தின் விசயங்களையே
மறந்துவிடுகின்றனர். அங்கோ சரீரத்தை விட்டு விடுகின்றனர்,
பாம்பின் உதாரணம் போல. இந்தப் பழைய சரீரத்தை விட்டுவிடத்தான்
வேண்டும். புத்திசாலிக் குழந்தைகள் யார் பாபாவின் நினைவில்
இருக்கின்றனரோ, அவர்களோ சொல் கின்றனர், பாபாவின் நினைவிலேயே
சரீரத்தை விட்டுவிட வேண்டும். பிறகு போய் பாபாவோடு சந்திக்க
வேண்டும். எந்த ஒரு மனிதருக்கும் இது தெரியாது - எப்படி அவரைச்
சந்திக்க முடியும் என்று. குழந்தைகளாகிய உங்களுக்கு வழி
கிடைத்து விட்டது. இப்போது புருஷார்த்தம் செய்து
கொண்டிருக்கிறீர்கள். உயிருடன் வாழ்ந்து கொண்டே இறந்து
விட்டீர்களானால் ஆத்மா தூய்மை யாகவும் ஆகிவிடும் இல்லையா?
தூய்மையாக ஆகி, பிறகு இந்தப் பழைய சரீரத்தை விட்டுச் செல்ல
வேண்டும். புரிந்து கொண்டுள்ளனர், எப்போது கர்மாதீத் நிலை
ஆகிவிடுமோ, அப்போது சரீரம் விடுபட்டுப் போகும். அவ்வளவு தான்
நாம் பாபாவோடு சென்று அமர்ந்துவிடுவோம். இந்தப் பழைய சரீரத்தின்
மீது வெறுப்பு வந்துவிடுகின்றது. பாம்புக்குப் பழைய தோல் மீது
வெறுப்பு வந்திருக்கும் இல்லையா? உங்களுக்குப் புதிய தோல் (சரீரம்)
தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆனால் எப்போது கர்மாதீத் நிலை
ஆகிறதோ, கடைசியில் உங்களுடைய நிலை அதுபோல் ஆகிவிடும். அவ்வளவு
தான். இப்போது நாம் போய்க்கொண்டே இருக்கிறோம். யுத்தத்திற்கான
ஏற்பாடுகளும் முழுமையாகத் தயாராகிவிடும். விநாசத்திற்கான முழு
ஆதாரம் உங்களுக்குக் கர்மாதீத் நிலை ஏற்படுவதில் தான் உள்ளது.
கடைசியில் கர்மாதீத் நிலையை நம்பர்வார் அனைவரும் பெறுவார்கள்.
எவ்வளவு நன்மை உள்ளது! நீங்கள் உலகத்தின் எஜமானர் ஆகிறீர்கள்
என்றால் பாபாவை எவ்வளவு நினைவு செய்ய வேண்டும்! நீங்கள்
பார்ப்பீர்கள், அநேகர் இது போலவும் வெளிப் படுவார்கள் - அமரும்
போதும் எழுந்திருக்கும் போதும் பாபாவை நினைவு செய்து கொண்டே
இருப்பார்கள். மரணம் முன்னாலேயே உள்ளது. செய்தித் தாள்களில்
அதுபோல் காட்டுகின்றனர் - அவ்வப்போது யுத்தம் மூளப்போவதாக.
பெரிய யுத்தம் மூண்டு விட்டால் வெடி குண்டுகள் விழும். இதில்
தாமதம் ஏற்படாது. புத்திசாலிக் குழந்தைகள் புரிந்து
கொண்டுள்ளனர். புத்தியற்றவர்கள் எதையும் புரிந்து கொள்வதில்லை.
ஒரு சிறிதும் தாரணை ஆவதில்லை. ஆம்-ஆம் என்று அவர்கள் சொல்லிக்
கொண்டே இருக்கலாம். ஆனால் எதையும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை.
நினைவில் இருப்பதில்லை. யார் தேக அபிமானத்தில் உள்ளனரோ,
யாருக்கு இந்த உலகம் நினைவில் இருக்கிறதோ, அவர்கள் எதைப்
புரிந்து கொள்ள முடியும்? இப்போது பாபா சொல்கிறார், ஆத்ம
அபிமானி ஆகுங்கள். தேகத்தை மறந்துவிட வேண்டும். கடைசியில்
நீங்கள் மிகுந்த முயற்சி செய்வதில் ஈடுபடுவீர்கள். இப்போது
நீங்கள் புரிந்து கொள்வதில்லை. கடைசியில் மிக-மிகப்
பச்சாதாபப்படுவீர்கள். பாபா சாட்சாத்காரமும் செய்விப்பார்.
இந்த-இந்தப் பாவங்களைச் செய்திருக்கிறீர்கள். இப்போது தண்டனையை
அனுபவி யுங்கள். கிடைக்கப் போகும் பதவியும் பாருங்கள்.
ஆரம்பத்திலும் கூட இதுபோல் சாட்சாத்காரம் பார்த்தனர். பிறகு
கடைசியிலும் கூட சாட்காத்காரம் பார்ப்பீர்கள்.
பாபா சொல்கிறார், தனது கௌரவத்தை இழக்காதீர்கள். படிப்பில்
ஈடுபட்டிருப்பதற்கான முயற்சி செய்யுங்கள். தன்னை ஆத்மா என
உணர்ந்து என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். அவரே பதித-பாவனர்.
உலகில் வேறு யாரும் பதித-பாவனர் கிடையாது. சிவபகவான் வாக்கு -
அனைவருக்கும் சத்கதி அளிப்பவர், பதித-பாவனர் ஒருவரே எனச்
சொல்கின்றனர். அவரையே அனைவரும் நினைவு செய்கின்றனர். ஆனால்
எப்போது தன்னை ஆத்மா - புள்ளி என உணர்கிறீர்களோ, அப்போது
பாபாவின் நினைவு வரும். நீங்கள் அறிவீர்கள், ஆத்மாவாகிய
நமக்குள் 84 பிறவிகளின் பார்ட் அடங்கியுள்ளது. அது ஒருபோதும்
விநாசமாகாது. இதனைப் புரிந்து கொள்வது ஒன்றும் சித்தி வீடல்ல (சாதாரண
விசயமல்ல). மறந்து விடுகின்றனர். அதனால் யாருக்கும் புரிய
வைக்க முடிவதில்லை. தேக அபிமானம் முற்றிலும் அனைவரையும் இறந்து
போக செய்துவிட்டது. இது மரண உலக மாக ஆகி விட்டது. அனைவரும்
அகால மரணம் அடைந்து கொண்டே இருக் கின்றனர். எப்படி மிருகங்கள்,
பறவைகள் இறந்து விடுகின்றனவோ, அதுபோல் மனிதர்களும் இறந்து
விடுகின்றனர். எந்த வேறுபாடும் இல்லை. லட்சுமி-நாராயணரோ, அமர
உலகின் எஜமானர் கள் அல்லவா? அகால மரணம் அங்கே நடை பெறுவதில்லை.
துக்கம் என்பதே இருக்காது. இங்கோ துக்கம் ஏற்பட்டால் போய்
இறந்து விடுகின்றனர். அகால மரணத்தைத் தானாகவே உருவாக்கிக்
கொள்கின்றனர் (தற்கொலை) அமர லோக எஜமானன் ஆவது என்ற குறிக்கோள்
மிக உயர்ந்தது. ஒரு போதும் கண்கள் குற்றமுள்ளதாக ஆகக் கூடாது.
இதில் முயற்சி வேண்டும். இவ்வளவு உயர்ந்த பதவி பெறுவது ஒன்றும்
சித்தி வீடு கிடையாது. துணிச்சல் வேண்டும். இல்லை யென்றால் சிறு
விசயத்திலேயே பயந்து விடுகின்றனர். யாராவது (போக்கிரி) தீய
நோக்கத்துடன் உள்ளே நுழைந்து,, கை வைத்து விட்டால் தடியாலடித்து
விரட்டி விட வேண்டும். பயந்தாங் கொள்ளி ஆகக் கூடாது. சிவசக்தி
பாண்டவசேனை பாடப்பட்டுள்ளது இல்லையா? அவர்கள் சொர்க்கத்தின்
கதவைத் திறப்பவர்கள். பெயர் பெற்றவர்கள் என்றால் பிறகு இதுபோல்
துணிச்சலைக் காட்டவும் வேண்டும். எப்போது சர்வசக்திவான்
பாபாவின் நினைவில் இருக்கிறீர் களோ, அப்போது சக்தி உங்களுக்குள்
பிரவேசமாகும். தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையை நினைவு செய்ய
வேண்டும். இந்த யோக அக்னி மூலம் தான் விகர்மங்கள் விநாசமாகும்.
பிறகு விகர்மாஜீத் ராஜா ஆகி விடுவீர்கள். நினைவு செய்வதில்
முயற்சி வேண்டும். யார் செய்கிறார்களோ, அவர்கள் அடைவார்கள்.
மற்றவர்களையும் எச்சரிக்கை செய்ய வேண்டும். நினைவு யாத்திரை
மூலம் தான் துன்பம் விலகும். படிப்புக்கு யாத்திரை எனச் சொல்லப்
படுவ தில்லை. அது சரீர சம்மந்தமான யாத்திரை. இது ஆன்மிக
யாத்திரை. நேராக சாந்திதாமம், தனது வீட்டுக்குச் சென்று
விடுவீர்கள். பாபா கூட அதே வீட்டில் தான் இருக்கிறார். என்னை
நினைவு செய்து-செய்தே நீங்கள் வீடு போய்ச் சேர்ந்து விடுவீர்கள்.
இங்கே அனைவரும் தனது பாகத்தை நடித்தாக வேண்டும். டிராமாவோ
அவிநாசியாக நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. குழந்தை களுக்கு
பாபா புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார் - ஒன்று பாபாவின்
நினைவில் இருங்கள். மேலும் பவித்திரமாகுங்கள். தெய்வீக குணங்களை
தாரணை செய்யுங்கள். மேலும் எவ்வளவு சேவை செய்கிறீர்களோ, அவ்வளவு
உயர்ந்த பதவி பெறுவீர்கள். கல்யாண்காரியாக அவசியம் ஆக வேண்டும்.
நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) சதா நினைவிருக்கட்டும் - சர்வ சக்திவான் தந்தை நம்மோடு
இருக்கிறார். இந்த நினைவின் மூலம் சக்தி உங்களுக்குள்
பிரவேசமாகும். விகர்மங்கள் பஸ்மமாகும். சிவசக்தி பாண்டவ சேனை
என்ற பெயர் உள்ளது. ஆகவே துணிச்சலைக் காட்ட வேண்டும்.
பயப்படுபவர்களாக ஆகக் கூடாது.
2) உயிருடன் வாழ்ந்து கொண்டே இறந்த நிலையை அடைந்த பின் - நானோ
சமர்ப்பணம் ஆனவன் என்ற இந்த அகங்காரம் வரக்கூடாது. சமர்ப்பணமாகி
புண்ணியாத்மா ஆகி மற்றவர்களையும் ஆக்க வேண்டும். இதில் தான்
நன்மை உள்ளது.
வரதானம்:
தடையற்ற ஸ்திதியின் மூலம் தனது அஸ்திவாரத்தை உறுதியானதாக ஆக்கக்
கூடிய நேர்மையுடன் தேர்ச்சி பெறுபவர் ஆகுக.
எந்தக் குழந்தைகள் நீண்ட காலம் தடையற்ற ஸ்திதியின் அனுபவியாக
இருக்கிறார்களோ, அவர்களது அஸ்திவாரம் உறுதியானதாக இருக்கின்ற
காரணத்தினால் தானும் சக்திசாலியாக இருப்பார்கள், மற்றவர்களையும்
சக்திசாலியாக ஆக்குவார்கள். நீண்ட காலம் சக்திசாலி, தடையற்ற
ஆத்மா கடைசியிலும் தடையற்றவர் ஆகி நேர்மையுடன் தேர்ச்சி
பெறுபவராக ஆகிவிடுவார் அல்லது முதல் டிவிசனில் வந்து விடுவார்.
எனவே சதா இந்த இலட்சியம் இருக்க வேண்டும் - நீண்ட காலம்
தடையற்ற ஸ்திதியின் அனுபவம் அவசியம் செய்ய வேண்டும்.
சுலோகன்:
ஒவ்வொரு ஆத்மாவின் மீதும் சதா உபகாரம் அதாவது சுப விருப்பம்
வைக்கும் போது தானாகவே ஆசிர்வாதம் பலனாக கிடைக்கும்.
அவ்யக்த சமிக்ஞை: இப்போது ஈடுபாடெனும் அக்னியை மூட்டி யோகத்தை
ஜூவாலா ரூபமாக்குங்கள்.
யோகா என்றால் அமைதி சக்தியாகும். இந்த அமைதி சக்தியானது மிகவும்
எளிதாக தன்னையும், பிறரையும் மாற்றி விடும். இதன் மூலம்
மனிதர்களும் மாறி விடுவார்கள், இயற்கையும் மாறிவிடும்.
மனிதர்களுக்கு வாயின் மூலம் பாடம் எடுத்து விடுகிறீர்கள். ஆனால்
இயற்கையை மாற்றுவதற்கு அமைதி சக்தி அதாவது யோக பலம் தேவை.
|
|
|