06-05-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! நினைவில்
இருப்பதற்கான முயற்சி செய்யுங்கள் அப்போது பாவனம் ஆகிக் கொண்டே
செல்வீர்கள், இப்பொழுது தந்தை உங்களுக்கு படிப்பு கற்பித்துக்
கொண்டிருக்கின்றார், பிறகு தன் கூடவே அழைத்துச் செல்வார்.
கேள்வி:
எந்த செய்தியை நீங்கள்
அனைவருக்கும் கொடுக்க வேண்டும்?
பதில்:
இப்பொழுது வீட்டிற்குச் செல்ல
வேண்டும், ஆகையால் தூய்மையாகுங்கள். பதீத பாவனனாகிய தந்தை
கூறுகின்றார் - என்னை நினைவு செய்தால் பாவனம் ஆகிவிடுவீர்கள்,
இந்த செய்தியை அனைவருக்கும் கொடுங்கள். தந்தை தனது அறிமுகத்தை
குழந்தைகளாகிய உங்களுக்குக் கொடுத்திருக்கின்றார், இப்பொழுது
தந்தையை வெளிப்படுத்துவது உங்களது கடமை யாகும். குழந்தைகள்
தந்தையை வெளிப்படுத்துவர் என்றும் கூறப்படுகிறது.
பாடல்:
உன் மடியில் தான் இறக்க வேண்டும்
........
ஓம் சாந்தி.
குழந்தைகள் பாட்டின் பொருளைக் கேட்டீர்கள் - பாபா, நாங்கள்
உங்களது ருத்ர மாலை யில் வருவோம். இந்தப் பாட்டு
பக்திமார்க்கத்தில் உருவாக்கப்பட்டது, உலகிலுள்ள சடங்குகளாகிய
ஜபம், தவம், பூஜை, பாட்டு போன்ற அனைத்தும்
பக்திமார்க்கத்தினுடையது. பக்தி என்றால் இராவண இராஜ்யம், ஞானம்
என்றால் இராம இராஜ்யம். ஞானத்தை படிப்பு என்று கூறப்படுகிறது.
பக்தியை படிப்பு என்று கூறப்படுவது கிடையாது. நாம் என்ன ஆவோம்?
என்ற இலட்சியம் அதில் கிடையாது. பக்தி என்பது படிப்பு அல்ல.
இராஜயோகம் கற்றுக் கொள்வது படிப்பாகும். படிப்பு ஒரே இடத்தில்,
பள்ளிக்கூடத்தில் கற்பிக்கப்படும். பக்தியில் அலைந்து அலைந்து
ஏமாற்றம் அடை கின்றனர். படிப்பு என்றால் படிப்பு தான். ஆக
படிப்பை முழுமையான முறையில் படிக்க வேண்டும். நாம் மாணவர்கள்
என்பதைக் குழந்தைகள் அறிவீர்கள். பலர் தங்களை மாணவன் என்றும்
புரிந்து கொள்வது கிடையாது. ஏனெனில் படிப்பதே கிடையாது.
தந்தையையும் தந்தை என்று புரிந்து கொள்ளவில்லை, சிவபாபாவையும்
சத்கதி கொடுக்கும் வள்ளல் என்று புரிந்து கொள்வது கிடையாது.
புத்தியில் எதுவும் அமருவதும் கிடையாது, இப்படியும்
இருக்கின்றனர், இராஜ்யம் ஸ்தாபனை ஆகிறது அல்லவா! அதில் அனைத்து
தரப்பினரும் இருப்பர். பதீதமானவர்களை பாவனம் ஆக்குவதற்காக தந்தை
வந்திருக்கின்றார். ஹே பதீத பாவனனே! வாருங்கள் என்று தந்தையை
அழைத்தீர்கள். இப்பொழுது பாவனம் ஆகுங்கள் என்று தந்தை
கூறுகின்றார். தந்தையை நினைவு செய்யுங்கள். ஒவ்வொருவருக்கும்
தந்தையின் செய்தியைக் கூற வேண்டும். இந்த நேரத்தில் பாரதம்
வைஷ்யாலயமாக (விஷம் நிறைந்து) இருக்கிறது. முன்பு பாரதம் தான்
சிவாலயமாக இருந்தது. இப்பொழுது இரண்டு கிரீடங்களும் கிடையாது.
இதையும் குழந்தை களாகிய நீங்கள் மட்டுமே அறிவீர்கள். இப்பொழுது
பதீத பாவனாகிய தந்தை கூறுகின்றார் - என்னை நினைவு செய்தால்
நீங்கள் பதீதத்திலிருந்து பாவனம் ஆகிவிடுவீர்கள். நினைவில் தான்
முயற்சி இருக்கிறது. மிகச் சிலர் மட்டுமே நினைவில்
இருக்கின்றனர். மிகச் சிலருக்குத் தான் பக்த மாலை
உருவாக்கப்பட்டிருக்கிறது அல்லவா! பக்தர் தன்னா, நாரதர், மீரா
போன்றவர்களின் பெயர்கள் உள்ளன. இங்கும் அனைவரும் வந்து படிக்க
மாட்டார்கள். கல்பத்திற்கு முன்பு யார் படித்தார்களோ அவர்களே
வருவார்கள். பாபா, நாம் உங்களை கல்பத்திற்கு முன்பும்
சந்தித்திருந்தோம், படிப்பதற்கும், நினைவு யாத்திரை கற்றுக்
கொள்வதற்காக வந்திருந்தோம் என்று கூறுகிறீர்கள். குழந்தைகளாகிய
உங்களை அழைத்துச் செல்வதற்காக இப்பொழுது தந்தை
வந்திருக்கின்றார். உங்களது ஆத்மா பதீதமாக இருக்கிறது, அதனால்
தான் வந்து பாவனம் ஆக்குங்கள் என்று அழைக்கிறீர்கள். என்னை
நினைவு செய்யுங்கள், தூய்மையாக ஆகுங்கள் என்று இப்பொழுது தந்தை
கூறுகின்றார். தந்தை கற்பிக்கவும் செய்கின்றார், பிறகு கூடவே
அழைத்தும் செல்கின்றார். குழந்தைகளுக்குள் மிகுந்த குஷி ஏற்பட
வேண்டும். தந்தை கற்பிக் கின்றார், கிருஷ்ணரை தந்தை என்று
கூறுவது கிடையாது. கிருஷ்ணரை பதீத பாவன் என்று கூற மாட்டார்கள்.
தந்தை என்று யாரைக் கூறுகிறோம்? அவர் எவ்வாறு ஞானம்
கூறுகின்றார்? என்பது யாருக்கும் தெரியாது. இதை நீங்கள் மட்டுமே
அறிந்திருக்கிறீர்கள். தந்தை தனது அறிமுகத்தை குழந்தைகளுக்குத்
தான் கொடுக்கின்றார். புதியவர்கள் யாரையும் தந்தை சந்திப்பது
கிடையாது. குழந்தைகள் தந்தையை வெளிப்படுத்துவர் என்று தந்தை
கூறுகின்றார். குழந்தைகள் தான் தந்தையை வெளிப்படுத்துவர்.தந்தை
யாரையும் சந்திக்கவோ, உரையாடல் செய்வதோ கிடையாது. இவ்வளவு காலம்
பாபா புதியவர்களை சந்தித்துக் கொண்டிருந்தார், நாடகத்தில்
இருந்தது, பலர் வந்தனர். மிலிட்டரியில் உள்ளவர்களுக்கும் பாபா
புரிய வைத்திருக்கின்றார் - அவர்களையும் முன்னேற்ற வேண்டும்,
அவர்களும் அவர்களது காரியத்தை செய்தே ஆக வேண்டும். இல்லை யெனில்
எதிரிகள் யுத்தம் செய்து விடுவர். தந்தையை மட்டும் நினைவு
செய்தால் போதும். யார் யுத்த மைதானத்தில் சரீரம் விடுவார்களோ
அவர்கள் சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்று கீதையில் உள்ளது.
ஆனால் இவ்வாறு சென்று விட முடியாது. சொர்க்கத்தை ஸ்தாபனை
செய்யக் கூடியவர் வரும் பொழுது தான் செல்ல முடியும். சொர்க்கம்
என்றால் என்ன? என்பது கூட யாருக்கும் தெரியாது. இப்பொழுது
குழந்தைகளாகிய நீங்கள் 5 விகாரங்கள் என்ற இராவணனிடம் யுத்தம்
செய்கிறீர்கள், அசரீரி ஆகுங்கள் என்று தந்தை கூறுகின்றார்.
தன்னை ஆத்மா என்று நிச்சயம் செய்து என்னை நினைவு செய்யுங்கள்.
வேறு யாரும் இவ்வாறு கூற முடியாது.
சர்வசக்திவான் என்று ஒரு தந்தையைத் தவிர வேறு யாரையும் கூற
முடியாது. பிரம்மா, விஷ்ணு, சங்கரையும் கூற முடியாது. சர்வசக்தி
வாய்ந்தவர் ஒரே ஒரு தந்தை ஆவார். உலகிலேயே சர்வசக்தி வாய்ந்தவர்,
ஞானக் கடலானவர் என்று ஒரு தந்தை தான் கூறப்படுகின்றார். இந்த
சாது, சந்நியாசி போன்றவர்கள் சாஸ்திரங் களின் சக்தியுடையவர்கள்
ஆவர். பக்தியின் சக்தியுடையவர் கள் என்றும் கூற முடியாது.
சாஸ்திரங்களின் சக்தி யுடையவர்கள், அவர்களுக்கு முழு ஆதாரமாக
இருப்பது சாஸ்திரங்களாகும். பக்தியின் பலன் பகவான் கொடுப்பார்
என்று நினைக்கின்றனர். பக்தி எப்பொழுது ஆரம்பமானது? எப்பொழுது
முடிவடையும்? என்பது தெரியாது. பக்தியின் மூலம் பகவான்
மகிழ்ச்சி அடைவார் என்று பக்தர்கள் நினைக்கின்றனர். பகவானை
சந்திக்க வேண்டும் என்ற இச்சை இருக்கிறது, ஆனால் அவர் யாருடைய
பக்தியைப் பார்த்து மகிழ்ச்சி அடைவார்? அவசியம் அவரை பக்தி
செய்தால் தான் அவர் மகிழ்ச்சி அடைவார் அல்லவா! நீங்கள் சங்கரை
பக்தி செய்தால் தந்தை எப்படி மகிழ்ச்சி அடைவார்? அனுமானை பக்தி
செய்தால் தந்தை மகிழ்ச்சி அடைவாரா என்ன? காட்சி கிடைத்து
விடுகிறது, மற்றபடி அடைவது எதுவும் கிடையாது. தந்தை
கூறுகின்றார் - நான் சாட்சாத்காரம் ஏற்படுத்துகிறேன், ஆனால்
என்னை வந்து சந்திப்பார்கள் என்பது கிடையாது. ஆனால் நீங்கள்
என்னை சந்திக்கிறீர்கள். பக்தர்கள் பகவானை சந்திப்பதற்காக பக்தி
செய்கின்றனர். பகவான் எந்த ரூபத்தில் வந்து சந்திப்பார் என்பது
தெரியவில்லை என்று கூறுகின்றனர். அதனால் தான் அதற்கு குருட்டு
நம்பிக்கை என்று கூறப்படுகிறது. இப்பொழுது நீங்கள் தந்தையை
சந்திக்கிறீர்கள். நிராகார தந்தை எப்பொழுது சரீரத்தை தாரணை
செய்கிறாரோ அப்பொழுது தான் நான் உங்களது தந்தை என்ற அறிமுகத்தை
கொடுக்க முடியும் என்பதை அறிந்திருக்கிறீர்கள். 5 ஆயிரம்
ஆண்டிற்கு முன்பும் உங்களுக்கு இராஜ்ய பாக்கியம் கொடுத்
திருந்தேன், பிறகு நீங்கள் 84 பிறவிகள் எடுக்க வேண்டியிருந்தது.
இந்த சிருஷ்டிச் சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது.
துவாபரத்திற்குப் பிறகு தான் மற்ற தர்மங்கள் வருகின்றன. வந்து
அவரவர் களது தர்மத்தை ஸ்தாபனை செய்கின்றனர். இதில் எதுவும்
உயர்ந்தது கிடையாது. யாரும் உயர்ந்த வர்கள் கிடையாது. எப்பொழுது
தந்தை வந்து பிரவேசம் செய்கிறாரோ அப்பொழுது தான் பிரம்மா
விற்கும் புகழ் கிடைக்கிறது. இல்லையெனில் இவர் தொழில் செய்து
கொண்டிருந்தார். இவருக்கும் என்னிடத்தில் பகவான் வருவார் என்பது
தெரியாது. நான் எப்படி இவரிடத்தில் பிரவேசம் செய்தேன்? என்பதை
தந்தை பிரவேசித்து புரிய வைத்திருக்கின்றார். எனது எல்லாம் உனது,
உனது எல்லாம் எனது என்று எப்படி ஆனது என்பதை இவருக்குக்
காண்பித்தார். நீங்கள் தனது உடல், மனம், பொருள் மூலமாக எனக்கு
உதவியாளர்களாக ஆகிறீர்கள், அதற்குப் பலனாக இது உங்களுக்கு
கிடைக்கும். தந்தை கூறுகின்றார் - நான் சாதாரண உடலில், அதாவது
யார் தனது பிறப்புகளைப் பற்றி அறியவில்லையோ அவரிடத்தில்
பிரவேசம் செய்கிறேன். ஆனால் நான் எப்பொழுது வருவேன்? எப்படி
வருவேன்? என்பது யாருக்கும் தெரியாது. சாதாரண உடலில் தந்தை
வந்திருப்பதை இப்பொழுது நீங்கள் பார்க்கிறீர்கள். இவர் மூலமாக
நமக்கு ஞானம் மற்றும் யோகம் கற்பித்துக் கொண்டிருக்கின்றார்.
ஞானம் மிகவும் எளிது. நரகத்தின் வாசல் மூடப்பட்டு, சொர்க்க
வாசல் எப்படி திறக்கப்படுகிறது? என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
துவாபரயுகத்தில் இராவண இராஜ்யம் ஆரம்பமாகிறது, அதாவது நரகத்தின்
வாசல் திறக்கப்படுகிறது. புதிய மற்றும் பழைய உலகம் பாதிப்
பாதியாக பிரிக்கப்படுகிறது. ஆக இப்பொழுது தந்தை கூறுகின்றார் –
குழந்தை களாகிய உங்களுக்கு பதீதத்திலிருந்து பாவனம் ஆவதற்கான
யுக்தியை நான் கூறுகிறேன். தந்தையை நினைவு செய்தால் பல
பிறவிகளின் பாவங்கள் அழிந்து விடும். இந்தப் பிறவிகளின்
பாவங்களையும் கூற வேண்டும். என்ன பாவம் செய்தேன்? என்ன என்ன
தானம், புண்ணியம் செய்திருக்கிறேன்? என்ற நினைவு இருக்கிறது
அல்லவா! இவருக்கு தனது சிறு வயதின் நினைவு இருக்கும் அல்லவா!
கிருஷ்ணரின் பெயர் சியாம், சுந்தர் ஆகும். இதன் பொருள்
ஒருபொழுதும் யாருடைய புத்தியிலும் வருவது கிடையாது. சியாம்
சுந்தர் என்று பெயர் இருப்பதால் சித்திரங் களில் நீல நிறமாகக்
(கருப்பாக) காண்பித்து விட்டனர். இரகுநாத் கோயிலிலும் கருப்பாக
காண்பித் திருப்பதைப் பார்க்கலாம், ஹனுமானின் கோயிலையும்
பாருங்கள், அனைவரையும் கருப்பாக ஆக்கிவிட்டனர். இது பதீதமான
உலகமாகும். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்குள் நான்
கருப்பிலிருந்து வெள்ளையாக வேண்டும் என்ற கவலை இருக்கிறது.
அதற்காக நீங்கள் தந்தையின் நினைவில் இருக்கிறீர்கள். இது
கடைசிப் பிறவி என்று தந்தை கூறுகின்றார். என்னை நினைவு செய்தால்
பாவங்கள் அழிந்து விடும். தந்தை அழைத்துச் செல்ல
வந்திருக்கின்றார் என்பதை அறிவீர்கள். ஆக அவசியம் சரீரத்தை
இங்கேயே விடுவீர்கள். உடலோடு அழைத்துச் செல்லமாட்டார். பதீத
ஆத்மாக்கள் செல்ல முடியாது. ஆனால் பாவனம் ஆவதற்கான யுக்தியை
தந்தை அவசியம் கூறுவார். என்னை நினைவு செய்தால் விகர்மங்கள்
விநாசம் ஆகும் என்று கூறுகின்றார். பக்தி மார்க்கத்தில்
இருப்பது குருட்டு நம்பிக்கையாகும். சிவ காசி என்று
கூறுகின்றனர். பிறகு சிவன் கங்கையைக் கொண்டு வந்தார் என்றும்
கூறுகின்றனர். பகீரதன் மூலம் கங்கை வெளிப்பட்டது. தண்ணீர்
எப்படி தலையிலிருந்து வெளிப்படும்? பகீரதன் மலை மீது
அமர்ந்திருக்கிறாரா என்ன? அவரது தலை முடியிலிருந்து கங்கை
வெளிவருவதற்கு! மழை நீர் கடலிலிருந்து உருவாக்கப்படுகிறது,
அந்த நீர் முழு உலகிற்கும் செல்கிறது. அனைத்து இடங்களிலும்
நதிகள் உள்ளன. மலைகளில் தண்ணீர் உறைந்து கட்டிகளாக ஆகிவிடுகிறது,
அதுவும் தண்ணீராக வந்து கொண்டே இருக்கிறது. மலைகளின்
குகைகளுக்குள்ளும் தண்ணீர் இருக்கிறது, அது கிணற்று நீராக
வருகிறது, அதுவும் மழையின் ஆதாரத்தில் தான் வருகிறது. மழை
பெய்யவில்லையெனில் கிணறும் காய்ந்து விடும்.
பாபா, நம்மை பாவனம் ஆக்கி சொர்க்கத்திற்கு அழைத்துச்
செல்லுங்கள் என்றும் கூறுகின்றனர். சொர்க்கத்தின்,
கிருஷ்ணபுரிக்கான ஆசை வைக்கின்றனர். ஆனால் விஷ்ணுபுரி பற்றி
யாருக்கும் தெரியவில்லை. கிருஷ்ணரின் சீடன் எங்கு பார்த்தாலும்
கிருஷ்ணர் தென்படுவதாகக் கூறுவார். அரே, பரமாத்மா சர்வவியாபி
எனில் எங்கு பார்த்தாலும் பரமாத்மா தான் தென்படுகின்றார் என்று
ஏன் கூறுவது கிடையாது? பரமாத்மாவின் சீடனாக இருப்பவர்கள்
இவையனைத்தும் பரமாத்மா வின் ரூபங்கள் என்று கூறுகின்றனர். அவர்
தான் இந்த அனைத்து லீலைகளும் செய்து கொண்டி ருக்கின்றார். லீலை
செய்வதற்கு பரமாத்மா ரூபத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆக
இப்பொழுது அவசியம் லீலை செய்வார் அல்லவா! பரமாத்மாவின்
உலகமாகிய சொர்க்கத்தைப் பாருங்கள், அங்கு அசுத்தத்திற்கான
விசயம் எதுவும் கிடையாது. இங்கு அசுத்தமோ அசுத்தம் தான்
இருக்கிறது. பிறகு பரமாத்மா சர்வவியாபி என்று கூறுவிடுகின்றனர்.
பரமாத்மா தான் சுகம் கொடுக்கின்றார். குழந்தை பிறந்தால் சுகம்
ஏற்படுகிறது, இறந்து விட்டால் துக்கம் ஏற்படுகிறது. அரே,
பரமாத்மா உங்களுக்கு ஒரு பொருள் கொடுக்கின்றார், பிறகு
எடுத்துக் கொள்ளும் பொழுது இதில் அழுவதற்கான என்ன அவசியம்
இருக்கிறது! சத்யுகத்தில் அழுவது போன்ற துக்கம் எதுவும்
கிடையாது. மோகத்தை வென்ற அரசரின் உதாரணம்
காண்பித்திருக்கின்றனர். இவையனைத்தும் பொய்யான உதாரணங்களாகும்.
அதில் எந்த சாரமும் கிடையாது. சத்யுகத்தில் ரிஷி, முனிவர்கள்
கிடையாது. மேலும் இங்கும் இப்படிப்பட்ட விசயங்கள் இருக்க
முடியாது. இவ்வாறு மோகத்தை வென்ற இராஜா யாரும் கிடையாது.
பகவானின் மகாவாக்கியம் - யாதவர்கள், கௌரவர்கள், பாண்டவர்கள்
என்ன செய்து விட்டுச் சென்றனர்? உங்களது யோகா (தொடர்பு)
தந்தையிடத்தில் இருக்கிறது. குழந்தைகளாகிய உங்கள் மூலமாக நான்
பாரதத்தை சொர்க்கமாக ஆக்குகிறேன் என்று தந்தை கூறுகின்றார்.
இப்பொழுது யார் தூய்மையாக ஆகிறார்களோ அவர்கள் தூய்மையான
உலகிற்கு எஜமானர்களாக ஆவார்கள். யாரை சந்தித்தாலும் அவர்களுக்கு
இதைக் கூறுங்கள் - என்னை நினைவு செய்யுங்கள் என்று பகவான் கூறு
கின்றார். என் மீது அன்பு செலுத்துங்கள், வேறு யாரையும் நினைவு
செய்யாதீர்கள். இது தான் கலப்படமற்ற நினைவாகும். இங்கு யாரும்
அபிஷேகம் செய்ய வேண்டியதில்லை. பக்தி மார்க்கத்தில் தான் இது
போன்ற காரியங்கள் செய்வர், நினைவு செய்தனர் அல்லவா! குருக்களும்
கூறுகின்றனர் - என்னை நினைவு செய்யுங் கள், உங்களது
கணவன்மார்களை நினைக்காதீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு
எவ்வளவு விசயங்களைப் புரிய வைக்கின்றார்! மூல விசயம்
அனைவருக்கும் செய்தி கொடுங்கள் - என்னை நினைவு செய்யுங்கள்
என்று பாபா கூறுகின்றார். பாபா என்றால் பகவான். பகவான்
நிராகாராக இருக்கின்றார். கிருஷ்ணரை அனைவரும் பகவான் என்று
கூறமாட்டார்கள். கிருஷ்ணர் குழந்தை ஆவார். சிவபாபா இவரிடத்தில்
இல்லையெனில் நீங்கள் எப்படி யிருந்தீருப்பீர்கள்? சிவபாபா இவர்
மூலமாக உங்களை தத்தெடுத்திருக்கின்றார், தன்னுடையவர்களாக
ஆக்கியிருக் கின்றார். இவர் தாயாகவும் இருக்கின்றார்,
தந்தையாகவும் இருக்கின்றார். சாகாரத்தில் தாய் வேண்டும் அல்லவா!
அவர் தந்தையாக இருக்கின்றார். ஆக இப்படிப்பட்ட விசயங்களை நல்ல
முறையில் தாரணை செய்யுங்கள்.
குழந்தைகளாகிய நீங்கள் ஒருபொழுதும் எந்த விசயத்திலும்
குழப்பமடையக் கூடாது. ஒருபொழுதும் படிப்பை விட்டு விடக்கூடாது.
சில குழந்தைகள் கெட்ட சகவாசத்தில் வந்து கோபித்துக் கொண்டு
அவர்களாகவே பாடசாலையை திறந்து விடுகின்றனர். தங்களுக்குள் சண்டை
யிட்டுக் கொண்டு தனியாக பாடசாலை திறந்தால் இது
மூர்க்கத்தனமாகும். கோபித்துக் கொள்கிறீர் கள் எனில் பாடசாலை
திறப்பதற்கு தகுதியற்றவர்களாக ஆகிவிடு கிறீர்கள். உங்களது தேக
அபிமானம் வெகு நாட்களுக்கு நீடிக்காது, ஏனெனில் புத்தியில்
பகைமை இருப்பதால் நினைவு வந்து கொண்டே இருக்கும். யாருக்கும்,
எதுவும் புரிய வைக்க முடியாது. இவ்வாறும் நடக்கத் தான்
செய்கிறது - யாருக்கு ஞானம் கொடுக்கிறீர்களோ அவர்கள் வேகமாக
சென்று விடுகின்றனர், தான் கீழே விழுந்து விடுகின்றனர். என்
மனநிலையை விட இவர்களது மனநிலை நன்றாக இருக்கிறது என்று தானும்
புரிந்து கொள்கின்றனர். படிக்கிறவர்கள் இராஜா ஆகிவிடுகின்றனர்,
மேலும் கற்பிப்பவர்கள் தாச, தாசி களாக ஆகிவிடுகின்றனர்.
இவ்வாறும் நடக்கின்றன. முயற்சி செய்து தந்தையின் கழுத்தில்
மாலையாக ஆக வேண்டும். பாபா, நான் உயிருடன் இருந்து உன்னுடைய
வனாக ஆகிவிட்டேன். தந்தையின் நினைவின் மூலம் தான் கவலைகள்
நீங்கும். நல்லது.
இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) ஒருபொழுதும் எந்த விசயத்திலும் குழப்பமடையக் கூடாது.
தங்களுக்குள் கோபித்துக் கொண்டு படிப்பை விட்டு விடக் கூடாது.
விரோதம் ஏற்படுத்துவதும் தேக அபிமானம் ஆகும். கெட்ட
சகவாசகத்திலிருந்து தன்னை மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள
வேண்டும். பாவனம் ஆக வேண்டும், தனது நடத்தையின் மூலம் தந்தையை
வெளிப்படுத்த வேண்டும்.
2) அன்பான புத்தியுடையவராகி ஒரு தந்தையின் கலப்படமற்ற நினைவில்
இருக்க வேண்டும். உடல், மனம், பொருள் மூலம் தந்தையின்
காரியத்தில் உதவியாளர்களாக ஆக வேண்டும்.
வரதானம்:
விலகிய மற்றும் அன்பானவர் ஆக மாறுவதற்கான ரகசியத்தை தெரிந்து
கொண்டு திருப்தியாக இருக்கக்கூடிய சமநிலையில் இருப்பவர் ஆகுக
எந்தக் குழந்தைகள் இல்லற மார்க்கத்தில் இருந்து கொண்டே விலகிய
மற்றும் அன்பானவராக மாறுவதற்கான ரகசியத்தை தெரிந்திருக்கிறாரோ
அவர் எப்பொழுதும் சுயம் தானும் சுயத்தின் மீது திருப்தியாக
இருக்கிறார் மற்றும் குடும்பத்தையும் திருப்தியாக வைத்துக்
கொள்கிறார். கூடவே உண்மையான இதயம் உடையவராக இருக்கின்ற
காரணத்தால் பகவானும் அவர் மீது திருப்தியாக இருக்கிறார். இப்படி
திருப்தியாக இருக்கக்கூடிய நல்லிணக்கம் உடைய குழந்தைகளுக்கு
தனக்காகவும் அல்லது பிறருக்காகவும் எவரையும் வக்கீல்
ஆக்குவதற்கான அவசியம் இல்லை. ஏனென்றால் அவர் தனக்கான
தீர்மானத்தை தானே எடுக்கின்றார். எனவே அவருக்கு வேறு எவரையும்
நீதிபதியாகவோ வக்கீலாகவோ ஆக்க வேண்டிய அவசியம் இல்லை.
சுலோகன்:
சேவை மூலமாக ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றது - அந்த ஆசீர்வாதங்கள்
தான் ஆரோக்கியத்திற்கான ஆதாரம் ஆகும்.
அவ்யக்த சமிக்ஞை : ஆன்மீக ராயல் தன்மை மற்றும் பவித்திரதாவின்
(தூய்மையின்) ஆளுமையை நடைமுறையில் கொண்டு வாருங்கள்.
எப்படி பௌதீக உடலில் விசேஷமாக சுவாசம் இருப்பது மிகவும்
அவசியமாக உள்ளதோ, சுவாசம் இல்லை எனில் வாழ்க்கை இல்லையோ, இதே
போல் பிராமண வாழ்க்கையின் சுவாசம் பவித்திரதா ஆகும். 21
பிறவிகளின் பிராலப்தத்தின் (பாக்கியத்தின்) ஆதாரம் பவித்திரதா
ஆகும். ஆத்மா மற்றும் பரமாத்மாவின் சந்திப்பிற்கான ஆதாரம்
பவித்திர புத்தி ஆகும். சங்கமயுக பலன் களின் ஆதாரம் மற்றும்
எதிர்காலத்தில் பூஜைக்குரிய நிலையின் பதவியின் ஆதாரம்
பவித்திரத்தா ஆகும். எனவே பவித்திரத்தாவின் ஆளுமையை வரதானத்தின்
ரூபத்தில் நடைமுறைப் படுத்துங்கள்.