06.07.25    காலை முரளி            ஓம் சாந்தி  18.01.2006      பாப்தாதா,   மதுபன்


சங்கல்பம், சமயம் மற்றும் சொல் ஆகியவற்றில் சேமிப்புத்திட்டம் மூலமாக வெற்றி விழா கொண்டாடுங்கள். நம்பிக்கையிழந்து விட்ட ஆத்மாக்களில் நம்பிக்கை தீபம் ஏற்றுங்கள்

இன்று சிநேகத்தின் நாள். நாலா பக்கங்களிலுமுள்ள எல்லா குழந்தைகளும் சிநேக சாகரத்தில் மூழ்கியிருக்கின்றனர். இந்த சிநேகம் சகஜயோகி ஆக்கக்கூடியதாகும். சிநேகம், மற்ற எல்லா ஆகர்ஷணங்களிலிருந்தும் விலக்கக்கூடியதாகும். சிநேகம் என்னும் வரதானம் பிராமண குழந்தைகள் அனைவருக்கும் ஜன்மத்தின் வரதானமாகும். சிநேகத்தில், பரிவர்த்தனை செய்யக் கூடிய சக்தி இருக்கிறது. இன்றைய தினம் நாலா பக்கங்களிலுமுள்ள குழந்தைகள் இரண்டு விதமானவர்களாக இருந்ததைப் பார்த்தோம். எல்லா குழந்தைகளுமே அன்பு நிறைந்தவர்களாகவே இருந்தார்கள். ஆனால் ஒரு சில குழந்தைகள் அன்பானவர்களாகவும் (லவ்-) வேறு சில குழந்தை கள் ஆழ்ந்த அன்பில் மூழ்கி யிருப்பவர்களாகவும் (லவ்லீன்) இருந்தார்கள். அன்பில் மூழ்கி யிருக்கும் குழந்தை கள், ஒவ்வொரு சங்கல்பம், ஒவ்வொரு சுவாசம், ஒவ்வொரு சொல் மற்றும் ஒவ்வொரு கர்மத்திலும் இயல்பாகவே பாபா சமானமாக எளிதாகவே இருக்கிறார்கள், ஏன்? குழந்தைகளுக்கு தந்தை சமர்த் பவ (சக்திசாலி ஆகுக) என்னும் வரதானம் கொடுத்திருக்கின்றார். இன்றைய தினத்தை ஸ்மிருதி ஸோ சமர்த் (நினைவு மூலம் சக்திசாலி) என்று சொல்வது, ஏன்? தந்தை இன்றைய தினம் தன்னை முதுகெலும்பாக ஆக்கினார். மேலும் அன்பில் மூழ்கியிருக்கும் குழந்தை களை உலக அரங்கில் பிரத்யக்க்ஷம் செய்தார். ஸ்தூலத்தில் குழந்தைகளை பிரத்யக்க்ஷம் செய்தார். மேலும் சுயம், அவ்யக்த ரூபத்தில் துணைவன் (தோழன்) ஆனார்.

இன்றைய இந்த ஸ்மிருதி ஸோ சமர்த் தினம், குழந்தைகளை, பாலக் ஸோ மாலிக் ஆக்கி சர்வசக்திவான் தந்தை மாஸ்டர் சர்வசக்திவான் ஆக்கி பிரத்யக்க்ஷம் செய்யக்கூடிய காரியத்தைக் கொடுத்தார். மேலும் (யதா-யோக்-ததா-சக்தி) எவ்வளவு யோகமோ, அவ்வளவு சக்தி நிறைந்த எல்லா குழந்தைகளும் தந்தையை பிரத்யக்க்ஷம் செய்ய வேண்டும். அதாவது விஷ்வ கல்யாணம் செய்து, விஷ்வ பரிவர்த்தனை செய்யும் காரியத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்த்து, தந்தை குஷி அடைகின்றார். தந்தையிடமிருந்து, சர்வசக்தி கள் என்னும் ஆஸ்தி எவ்வளவு கிடைத்ததோ, அதனை தனக்காகவும், உலக ஆத்மாக்களுக்காகவும் காரியத்தில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். பாப்தாதாவும் கூட, அப்படிப்பட்ட மாஸ்டர் சர்வசக்திவான், பாப்சமான் ஆர்வம், ஊக்கம், உற்சாகத்தில் இருக்கக்கூடிய ஆல்ரவுண்டு சேவாதாரி, நிஷ்வார்த் சேவாதாரி (தன்னலமற்ற) பேகத் சேவாதாரி குழந்தைகளுக்கு ஆயிரமாயிரம் மடங்கு உள்ளன்புடன் கூடிய நல்வாழ்த்துக்களை அளிக்கின்றார். முபாரக் ஹோ! முபாரக் ஹோ! உள்நாடு-வெளிநாடு. உள்நாட்டுக் குழந்தைகளும் கூட குறைந்தவர்கள் அல்ல. மேலும் வெளி நாட்டுக் குழந்தைகளும் கூட ஒன்றும் குறைந்தவர்கள் அல்ல. பாப்தாதா இப்படிப்பட்ட குழந்தைகளை உள்மனதிலிருந்து மகிமை செய்கின்றார். மேலும் வாஹ் குழந்தைகளே! வாஹ்! என்று புகழ் பாடுகின்றார். நீங்கள் எல்லோரும் வாஹ்! வாஹ்! (ஆகா! ஆகா!) குழந்தைகள் தானே! கையசைத்துக் காட்டுகிறார்கள். மிகவும் நன்று. பாப்தாதாவுக்குப் பெருமிதமாக இருக்கிறது. குழந்தைகளைப் பற்றிப் பெருமிதமாக இருக்கிறது. முழு கல்பத்திலும், அப்படிப்பட்ட எந்த ஒரு தந்தையும் இல்லை. யாருக்கு தனது ஒவ்வொரு குழந்தையும் சுயராஜ்ய அதிகாரி இராஜா. நீங்கள் எல்லோருமே சுய இராஜ்ய அதிகாரி இராஜா தானே? பிரஜா இல்லை தானே! அநேக குழந்தைகள் ஆன்மீக உரையாடல் செய்யும் போது, (ரூஹ்-ரிஹான்) நாங்கள் எதிர்காலத்தில் என்னவாக இருப்போம், அந்த சித்திரத்தை எங்களுக்குக் காட்டுங்கள் என்று கூறுகிறார்கள். பாப்தாதா என்ன கூறுகின்றார்? பழைய குழந்தைகள், ஜகதம்பா, மம்மா எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சித்திரம் கொடுப்பது வழக்கம் என்று கூறுகின்றார்கள். அதுபோல, எங்களுக்கும் கூட சித்திரம் கொடுங்கள் என்று கேட்கின்றனர். பாப்தாதா கூறுகின்றார்: ஒவ்வொரு குழந்தைக்கும் தந்தை ஒரு விசித்திரமான கண்ணாடி கொடுத்திருக்கின்றார். அந்தக் கண்ணாடியில் உங்களுடைய வருங்கால சித்திரத்தைப் பார்க்க முடியும். நான் யார்? அறிவீர்களா? அந்தக் கண்ணாடி உங்களிடம் இருக்கின்றதா? எப்படிப்பட்ட கண்ணாடி என்று தெரியுமா? முதல் வரிசையில் அமர்ந்திருப்பவர்களுக்குத் தெரியுமல்லவா? தெரியுமா? அந்தக் கண்ணாடி, தற்சமயத் தில் சுய ராஜ்ய ஸ்திதியாகிய கண்ணாடி. இப்போது எவ்வளவு சுயராஜ்ய அதிகாரியாக இருக்கிறீர் களோ, அதன்படி விஷ்வத்திற்கு இராஜ்ய அதிகாரி ஆவீர்கள். இப்போது தங்களுக்குத் தாங்களே சதா சுய இராஜ்ய அதிகாரியாக இருக்கிறீர்களா என்று கண்ணாடியில் பாருங்கள்? அல்லது சிலசமயம் அடிமை, சில சமயம் அதிகாரி, அப்படியா? சில சமயம் அடிமையாகவும், சில சமயம் அதிகாரியாகவும் ஆகின்றீர்கள். அதாவது சில சமயம் கண்கள் ஏமாற்றுகிறது. சில சமயம் மனம் ஏமாற்றுகிறது. சில சமயம் வாய் ஏமாற்றுகிறது. சில சமயம் காதும் கூட ஏமாற்றிவிடுகிறது. வீணான விஷயங்களைக் கேட்பதில் ஆர்வ முள்ளதாகிவிடுகிறது. ஒரு வேளை ஏதாவதொரு கர்மேந்திரியம் ஏமாற்றிவிடுகிறது. அடிமை யாக்கிவிடுகிறது என்றால், இதன் மூலமாக பாபாவிட மிருந்து எந்த சர்வ சக்திகள் வரதானமாகக் கிடைத்திருக்கிறதோ, அல்லது ஆஸ்தியாகக் கிடைத்திருக் கிறதோ, அந்த கன்ட்ரோலிங்பவர், ரூலிங்பவர் இல்லை என்பது உறுதியாகிறது. ஆகவே சிந்தித்துப் பாருங்கள். யார் தன்மீது ஆட்சி செய்ய முடியவில்லையோ, அவர் உலகை எப்படி ஆள முடியும்? உங்களுடைய இப்போதையை ஸ்திதியின் சுய இராஜ்ய அதிகாரத்தை கண்ணாடியில் சோதித்துப் பாருங்கள். கண்ணாடி எல்லோருக்கும் கிடைத்திருக்கிறதல்லவா? கண்ணடி கிடைத்திருக்கிறது என்றால் கை உயர்த்துங்கள். கண்ணாடியில் ஏதாவது கீறல் விழ வில்லை தானே? தெளிவாக இருக்கிறதா கண்ணாடி?

பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்கும் சுய இராஜ்ய அதிகாரத்திற்கான ஸ்வமான் கொடுத்திருக் கின்றார். மாஸ்டர் சர்வ சக்திவான் என்ற டைட்டில் எல்லா குழந்தைகளுக்கும் பாபாவிடமிருந்து கிடைத்திருக்கிறது. மாஸ்டர் சக்திவான் அல்ல. சர்வசக்திவான். அநேக குழந்தைகள் ஆன்மீக உரையாடலின் போது இதுவும் கூட கூறுகிறார்கள். பாபா! நீங்கள் சர்வ சக்திகள் கொடுத்தீர்கள். ஆனால் இந்த சக்திகள் அவ்வப்போது அவசியமான நேரத்தில் வேலை செய்வதில்லை. ரிப்போர்ட் செய்கிறார்கள். வேண்டிய சமயத்தில் எமர்ஜ் (எழுச்சி யடைதல்) ஆவதில்லை. காலம் கடந்து விட்டபிறகு எமர்ஜ் ஆகிறது என்று. காரணம் என்ன? எந்த சமயத்தில், எந்த சக்திக்கு ஆர்டர் கொடுக் கிறீர்களோ, அந்த சமயத்தில் சோதித்துப் பாருங்கள். நான் மாலிக் ஆகி (அதிகாரி) ஆசனத்தில் அமர்ந்திருக்கிறேனா? ஒரு வேளை, யாராவது ஆசனத்தில் அமர்ந்திருக்கவில்லை எனில், ஆசனத்தில் அமர்ந்திருக்காதவர்கள் இடும் கட்டளைக்கு யாரும் கீழ்ப்படியமாட்டார்கள். நான் சுய இராஜ்ய அதிகாரி, மாஸ்டர் சர்வசக்திவான், பாபாவிடமிருந்து பெற்ற ஆஸ்தி மற்றும் வரதானத்திற்கு அதிகாரியாக இருக்கிறேன் என்ற இந்த சீட்டில் (ஆசனம்) சரியாக அமர்ந்து கொண்டு, பிறகு ஆர்டர் கொடுங்கள். என்ன செய்வது? எப்படி செய்வது? நடப்பதில்லை என்றும் ஆசனத்தை விட்டு கீழே அமர்ந்து கொண்டு அல்லது ஆசனத்தை விட்டு கீழிறங்கி ஆர்டர் கொடுத்தீர் களானால் எப்படி கீழ்ப்படிவார்கள்? இந்தக்கால சம்பிரதாயப்படியும் கூட யாராவது பிரைம் மினிஸ்டர் சீட்டில் அமர்ந்திருக்கிறார். அவர் சீட்டிலிருந்து கீழிறங்கிவிட்டால் யாராவது அவர் சொல்லைக் கேட்பார்களா? ஆதலால், நான் ஆசனத்தில் சரியாக அமர்ந்திருக்கிறேனா? என்று சோதியுங்கள். அதிகாரி நிலையிலிருந்து ஆர்டர் கொடுக்கிறேனா? தந்தை ஒவ்வொரு குழந்தைக் கும் அத்தாரிட்டி (உரிமை) கொடுத்திருக்கின்றார். அது பரமாத்ம அத்தாரிட்டி. ஏதோ ஒரு ஆத்மா விடமிருந்து கிடைத்த அத்தாரிட்டி அல்ல. மகாத்மாவிடமிருந்து கிடைத்த அதாரிட்டியும் அல்ல. பரமாத்ம அத்தாரிட்டி. ஆதலால் அத்தாரிட்டி மற்றும் அதிகாரம் என்ற இந்த ஸ்திதியில் நிலைத்திருந்து, எந்த ஒரு சக்திக்கும் ஆர்டர் செய்யுங்கள். அது ஜிஹஜூர், ஜிஹஜூர் என்று தயாராக இருக்கும். (இதோ வந்துவிட்டேன்) சர்வ சக்திகளின் முன்னே, இந்த மாயை, தத்துவம், சம்ஸ்காரம், சுபாவம் எல்லாம் தாஸியாகிவிடும். (அடிமையாகிவிடும்) எஜமானர்களாகிய (மாலிக்) உங்களை எதிர்பார்த்து காத்திருக்கும். எஜமானரே, ஏதாவது கட்டளை இடுங்கள். தங்கள் கட்டளைக்குக் காத்திருக்கிறேன் என்று சொல்லும்.

சக்திசாலி நாள் அல்லவா! ஆதலால் குழந்தைகளிடம் என்னென்ன சக்திகள் உள்ளன என்பதை தந்தை நினை வூட்டுகின்றார். கோடிட்டுக் காட்டுகின்றார். வேண்டிய சமயத்தில் ஏன் பலவீன மாகிவிடுகிறார்கள்? பாப்தாதா பார்த்தார். மெஜாரிட்டி குழந்தைகளிடம் லீக்கேஜ் இருக்கிறது. சக்திகள் லீக்கேஜ் ஆகி விடுவதன் காரணமாக சக்திகள் குறைந்து விடுகின்றன. லீக்கேஜ் இரண்டு விˆயங்களில் ஆகின்றது. அந்த இரண்டு விஷயங்கள் - சங்கல்பமும், சமயமும் வீணாகிக் கொண்டிருக்கிறது. கெடுவ தில்லை, ஆனால் வீணாகிறது, வேண்டும் போது கெட்ட காரியம் செய்ய வில்லையானாலும், சேமிப்பும் செய்வதில்லை. இன்று கெடுதி செய்யவில்லை என்பதை மட்டுமே பார்க்கின்றார்களே தவிர, நல்லது எதாவது சேமித்தோமா? என்று பார்ப்பதில்லை, இழக்கவில்லை, ஆனால் சம்பாதித்தோமா? துக்கம் கொடுக்கவில்லை, ஆனால் சுகம் எத்தனை பேருக்கு கொடுத் தோம்? யாருக்கும் அசாந்தி உண்டாக்கவில்லை தான். ஆனால் சாந்தியின் வைப்ரேˆனை எவ்வளவு பரப்பினோம்? சாந்தி தூதனாகி எத்தனை பேருக்கு சாந்தி கொடுத்தோம்? வாயுமண்டலம் மூலமாக அல்லது வாய்மொழி மூலமாக, வைப்ரேˆன் மூலமாக சாந்தி கொடுத்தோமா? ஏனெனில் நேரம் குறைவாக இருக்கிறது என்பதை அறிவீர்கள். புருúˆôத்தம கல்யாணகாரி ஆவதற்கான நேரமாகும். இப்போதில்லையேல், எப்போதுமில்லை. இது ஒவ்வொரு கணமும் நினைவில் இருக்க வேண்டும். ஆகிவிடும்... செய்துவிடுவோம்.... இப்போது இல்லையேல், எப்போது மில்லை. பிரம்மா பாபாவிற்கு இது தான் தீவிரகதி புருஷார்த்தமாக இருந்தது. ஆதலாலேயே, நம்பர் ஒன் இலக்கை சென்ற டைந்தார். ஆகவே, தந்தை எந்த ஒரு திறமைகளைக் கொடுத்திருக்கின்றாரோ அது இன்றைய சக்திசாலி நாளில் நினைவுக்கு வந்ததல்லவா? சேமிப்பதற்கான திட்டம் தயாரியுங்கள். சங்கல்பத்தை சேமிப்பது. சமயத்தை சேமிப்பது, பேச்சை சேமிப்பது, அதாவது எது யதார்த்தமான பேச்சு இல்லையோ, அந்த யதார்த்த மில்லாத வீணான பேச்சு பேசாமலிருப்பதன் மூலமான சேமிப்பு.

பாப்தாதா எல்லா குழந்தைகளுக்கும் சதா அதாரிட்டியின் சீட்டில், செட்டாகி சுய இராஜ்ய அதிகாரி இராஜா ரூபத்தில் பார்க்க விரும்புகின்றார். பிடித்தமானதாக இருக்கிறதா? இந்த ரூபம் விருப்ப முள்ளதாக இருக்கிறதல்லவா? எப்போது வேண்டுமானாலும் பாப்தாதா எந்த ஒரு குழந்தையையும் டி.வி.யில் பார்க்கும்போது, இந்த ரூபத்தையே பார்க்க வேண்டும். பாப்தாதாவிடம் இயற்கையான டி.வி. இருக்கிறது, ஸ்விட்ச் போட வேண்டிய அவசிய மில்லை. ஒரே சமயத்தில் நாலா பக்கமும் பார்க்க முடியும். ஒவ்வொரு குழந்தையையும், மூலை முடுக்கில் இருப்பவர்களையும் பார்க்க முடியும். தயாராக இருக்க முடியுமா? நாளை முதல் டி.வியைத் திறந்தால், என்ன தெரியும்? பரிஷ்தா உடை. பரிஷ்தா டிரஸ் என்பது பிரகாசமான டிரஸ். ஒளிமயமான டிரஸ், இந்த சரீர பந்தமுள்ள, மண்ணாலான டிரஸ் அணிந்திருக்கக்கூடாது. பிரகாசமாக ஒளி வீசக்கூடிய டிரஸ் ஆக இருக்க வேண்டும். வெற்றி நட்சத்திரமாக ஒளிவீச வேண்டும். இப்படிப்பட்ட மூர்த்தியாக, ஒவ்வொருவரையும் பாப்தாதா பார்க்க விரும்புகின்றார். சரிதானா? மண்ணாலான உடையை அணிந்தீர்களானால், மண்ணுக்குரியவராகி விடுவீர்கள். (மண்ணாகி விடுவீர்கள்). எப்படி தந்தை அசரீரியாக இருக்கின்றார். பிரம்மா தந்தை பிரகாச ஒளி பொருந்திய டிரஸ் அணிந்திருக்கின்றார், பரிஷ்தாவாக இருக்கின்றார். ஃபாலோ ஃபாதர். ஸ்தூலமாக பாôத்தீர்களானால், யாராவது உங்கள் உடையை மண்ணாக்கி விட்டால், கறைப் படுத்திவிட்டால் என்ன செய்கிறீர்கள்? உடையை மாற்றி விடுகிறீர்கள் அல்லவா? இதேபோல சோதியுங்கள். சதா ஒளிமயமான பரிஷ்தா டிரஸ் அணிந்திருக் கிறேனா? தந்தைக்கு தனது ஒவ்வொரு குழந்தையும், ராஜா குழந்தையாக இருக்க வேண்டும் என்ற பெருமிதம் இருக்கிறது. ஆதலால் அதே சொரூபத்தில் இருங்கள். இராஜாவாக இருங்கள். இந்த மாயை இருக்கிறதல்லவா, அது உங்களுக்கு அடிமையாகிவிடும். மேலும் விடைபெற்றுக் கொள்ள வரும். அரைக்கல்பத்திற்கு விடை பெறுவதற்காக வரும். போராடாது. பாப்தாதா சதா கூறுகின்றார், பாபாவிடம் தன்னை அர்ப்பணித்து விட்டவர்கள் ஒருபோதும் தோல்வி அடைய முடியாது. ஒருவேளை தோல்வி யடைந்தால், அர்ப்பணிக்க வில்லை என்பதாகும்.

இப்போது உங்கள் எல்லோருக்கும் மீட்டிங் நடக்க விருக்கிறதல்லவா? மீட்டிங் தேதி குறித்திருக் கிறீர்கள் அல்லவா? இந்த முறை மீட்டிங்கில் சேவைக்கான திட்டம் போடுவதை பாப்தாதா பார்க்கவிரும்பவில்லை. சேவைத் திட்டம் போடுங்கள். ஆனால் மீட்டிங்கில் வெற்றிவிழா கொண்டாடுவதற்கான திட்டம் போடுங்கள். நிறைய விழாக்கள் கொண்டாடி விட்டீர்கள். இனி வெற்றி விழாவுக்கான தேதி நிர்ணயம் செய்யுங்கள். எல்லோரும் எப்படியிருப்பார்கள் என்று பாருங்கள். பாப்தாதா கூறுகின்றார்: குறைந்த பட்சம் 108 ரத்தினங்களாவது வெற்றி மூர்த்திகள் ஆகும் விழா கொண்டாடவேண்டும். உதாரணமாக இது நடக்க முடியுமல்லவா? சொல்லுங்கள். முதல் வரிசையில் அமர்ந்திருப்பவர்கள் கூறுங்கள், ஆக முடியுமா? பதில் சொல்வதற்கான தைரியம் இல்லை. செய்ய முடியுமா? செய்ய முடியாதா? என்று யோசிக்கிறார்கள். தைரியம் இருந்தால், எல்லாமே செய்ய முடியும். தாதி கூறட்டும், 108 வெற்றி மூர்த்திகள் ஆக முடியுமா? (ஆம் நிச்சயமாக ஆக முடியும், வெற்றி விழா கொண்டாட முடியும்) பாருங்கள். தாதியிடம் தைரியம் இருக்கிறது. உங்கள் எல்லோரு டைய சார்பிலும், தாதி தைரியம் வைத்திருக்கின்றார். ஆகவே ஒத்துழைக்க வேண்டும். இனி மீட்டிங் செய்ய விருக்கிறீர்கள் அல்லவா? அப்போது பாப்தாதா ரிப்போர்ட் வாங்குவார். பாண்டவர்கள் கூறுங்களேன், ஏன் மௌனமாக இருக்கிறீர்கள்? ஏன் தைரியம் வைக்கமால் இருக்கிறீர்கள்? செய்து காண்பிப்பீர்களா? இப்படி? நல்லது. தைரியம் வைக்க முடியுமல்லவா? தைரியம் வைத்து, செய்து காண்பிப்போம் என்று நினைப்பவர்கள் கை உயர்த்துங்கள். செய்வீர்களா? எந்த ஒரு சம்ஸ்காரமும் இருக்காதா? எந்த ஒரு பலவீனமும் இருக்காதா? நல்லது. மதுபன் காரர்களும் கை உயர்த்துகிறார்கள். ஆஹா! வாழ்த்துக்கள், வாழ்த்துக் கள்! நல்லது. பிறகென்ன, 108 எளிதாகவே ஆகிவிடும். இவ்வளவு பேர் கை உயர்த்தியிருக்கிறார்கள் என்றால் 108, என்ன பெரிய விஷயம்? டபுள் ஃபாரினர்ஸ் என்ன செய்வீர்கள்? ஆம், தாதி ஜானகி கேட்டுக் கொண்டிருக்கின்றார். நான் சொல்லலாமா என்று அவருக்கு ஆர்வமாக இருக்கிறது. ஃபாரின் மாலையையும் பார்க்கலாம். சரிதானா? கை உயர்த்துங்கள், சரிதானா? நல்லது. இன்றைக்கு எவ்வளவு பேர் அமர்ந்திருக்கிறீர்கள்? (200 பேர்) இதிலிருந்து 108 பேர் தயாராகி விடுவார்கள். சரிதானா? இதில் முதலில் நான் என்பது இருக்க வேண்டும். இதில் அடுத்தவரைப் பார்க்கக் கூடாது. முதலில் நான். வேறுவிதமான நான்... நான்... என்பது இருக்கக் கூடாது. 108 ஆவதில், நான் என்று அவசியம் சொல்லுங்கள். இன்னொரு வேலையும் பாப்தாதா கொடுக்கின்றார்.

இன்று சக்திசாலி நாள் (சமர்த் திவஸ்) ஆதலால் சக்திசாலிகளாக இருக்கிறார்கள் (சமர்த்தி) பாப்தாதா ஒரு விசித்திரமான தீபாவளி கொண்டாட விரும்புகின்றார். நீங்களோ, தீபாவளி அநேக முறை கொண்டாடியிருக்கிறீர்கள். ஆனால் பாப்தாதா விசித்திர தீபாவளி கொண்டாட விரும்பு கின்றார். சொல்லட்டுமா? சொல்லட்டுமா? சொல்லட்டுமா? நல்லது. இப்போதையை நிலை மையைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறீர்கள். நாளுக்கு நாள் நாலா பக்கமும் மனித ஆத்மாக்களிடம் அவ நம்பிக்கை அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. ஆதலால் மனசா சேவை செய்யுங்கள். வாய் மொழியாக சேவை செய்யுங்கள். சம்மந்தம், தொடர்பில் உள்ளவர்களுக்கு செய்யுங்கள், ஆனால் பாப்தாதா நம்பிக்கை இழந்து விட்ட மனிதர்களுக்குள்ளே நம்பிக்கை தீபம் ஏற்றப்படுவதைப் பார்க்க விரும்புகின்றார். நாலா பக்கமுமுள்ள மனிதர்களுடைய மனதில் நம்பிக்கை தீபம் பிரகாசிக்கட்டும். இந்த தீபாவளியை, நம்பிக்கை ஒளி வீசும் தீபங்களாக பாப்தாதா பார்க்க விரும்புகின்றார். ஆக முடியுமா? வாயு மண்டலத்தில் குறைந்த பட்சம் இந்த நம்பிக்கை தீபம் ஒளி வீசினால், விஷ்வ பரிவர்த்தனை என்பது ஆகிவிட்டது போல் தான். பொற்காலம் உதயமாகி விட்டது போலத்தான் (கோல்டன் சவேரா) இந்த அவநம்பிக்கை முடிந்து போகட்டும். எதுவும் நடக்க வேண்டாம். எதுவும் நடக்க வேண்டியதில்லை. நம்பிக்கை தீபம் ஒளி வீசட்டும். செய்ய முடியுமல்லவா? இது மிகவும் சுலபம் தானே? கஷ்டமா? சகஜமா? யார் செய்வார் களோ, அவர்கள் கை உயர்த்துங்கள். செய்வீர்களா? இவ்வளவு பேர் தீபம் ஒளி வீசும்படி செய்வார்கள் என்றால், தீபமாலை ஆகிவிடுமல்லவா? வைப்ரேˆன் சக்திசாலியாக (பவர்ஃபுல்) செய்யுங்கள். எதிரில் வந்து சேர மாட்டார்கள். ஆனால் லைட் ஹவுஸ், மைட் ஹவுஸ் ஆகி வெகு தூரம் வரை வைப்ரேஷன் பரப்புங்கள். எப்படி சயின்ஸ் லைட் ஹவுஸ் மூலமாக, வெகு தூரம் வரை ஒளி கொடுக்க முடிகிறதல்லவா, அப்படியிருக்கும் போது, நீங்கள் வைப்ரேˆன் பரப்ப முடியாதா? திட சங்கல்பம் மட்டும் செய்யுங்கள். செய்யத்தான் வேண்டும். இதில் சுறுசுறுப்பாகி விடுங்கள். மனதை சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டால், தனக்கும் லாபம், மற்ற ஆத்மாக்களுக்கும் கூட லாபம். இங்குமங்கும் சென்று கொண்டிருந்தாலும், விஷ்வ கல்யாணம் செய்தேயாக வேண்டும் என்ற இதே உள்ளுணர்வு (விருத்தி) வைத்திருங்கள். இந்த விருத்தி வாயுமண்டலத்தில் பரவும். ஏனென்றால், நேரம் திடீரென நடக்கக் கூடியதாக இருக்கிறது. இப்படியாகக் கூடாது. அதாவது உங்களுடைய சகோதர, சகோதரிகள், எங்களுக்குச் சொல்லவே இல்லையே என்று குற்றம் சுமத்தும் படியாக இருந்துவிடக் கூடாது. மேலும் எங்களுக்குக் கொஞ்சம் முன்னதாகவே சொல்லி யிருந்தால், நாங்களும் கூட கொஞ்சமாவது செய்திருப்போமே என்று குற்றம் சொல்லக் கூடாது. ஆதலால் ஒவ்வொரு சங்கல்பத்திலும், பாப்தாதாவின் நினைவில் லைட் (ஒளி) பெற்றுக் கொண்டே இருங்கள். லைட் ஹவுஸ் ஆகி லைட் கொடுத்துக் கொண்டே யிருங்கள். நேரத்தை வீணாக்காதீர் கள். பாப்தாதா பார்க்கும் போதெல்லாம், மிகவும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பாப்தாதாவுக்கு பிடித்தமானதாக இல்லை. மாஸ்டர் சர்வசக்திவான் என்று சொல்லிக் கொண்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள்! ஆகவே ராஜா ஆகுங்கள். வெற்றி மூர்த்தி ஆகுங்கள். அவ நம்பிக்கையை சமாப்தி செய்துவிட்டு, நம்பிக்கை தீபம் ஏற்றுங்கள். நல்லது.

எல்லா பக்கங்களிலுமிருக்கும் குழந்தைகளிடமிருந்து, சிநேகம் நிறைந்த நினைவு மாலைகள் வந்து சேர்ந்து விட்டன. பாப்தாதா, நினைவுகளை அனுப்பியவர்களுக்கு நேரில் பார்த்தபடியே நினைவிற்கு, நினைவை, உள்ளத்தின் ஆசிகளை உள்ளன்பை அளிக்கின்றார். நல்லது. இனி என்ன செய்ய வேண்டும்?

முதல் தடவை வந்திருப்பவர்கள் கை உயர்த்துங்கள். நல்லது. ஒவ்வொரு டர்னிலும் பார்த்தால் பெரும்பாலோர் புதியவர்களாக இருக்கிறார்கள். ஆக, சேவை அதிகரித்துள்ளது இல்லையா? இவ்வளவு பேருக்கு செய்தி கொடுத்திருக் கிறீர்கள். எப்படி உங்களுக்கெல்லாம் செய்தி கிடைத்ததோ, அதே போல் நீங்களும் கூட மேலும் இரு மடங்கு, இரு மடங்கு செய்தி கொடுங்கள். நன்று. ஒவ்வொரு பாடத்திலும் மேலும் ஊக்கம்-உறசாகத்தோடு முன்னேறிச் செல்லுங்கள். நல்லது.

நல்லது - இப்போது லட்சியம் வையுங்கள் - நடமாடும் போதும் சுற்றி வரும் போதும் மனதாலோ, சொல்லாலோ, செயலாலோ சேவை இல்லாமல் இருக்கக் கூடாது. மேலும் நினைவு இல்லாமலும் இருக்கக் கூடாது. நினைவு மற்றும் சேவை சதா கூடவே இருக்கின்றன. அந்த அளவு தன்னை பிஸியாக வைத்திருங்கள் - நினைவிலும் கூட, சேவையிலும் கூட. காலியாக இருப்பீர்களானால் மாயா வருவதற்கு வாய்ப்பு கிடைத்து விடும். அவ்வளவு பிஸியாக இருங்கள் - தூரத்திலிருந்தே மாயா வருவதற்கு தைரியம் வைக்காமல் இருக்க வேண்டும். பிறகு பாபாவுக்கு சமமாக ஆவதற்கு என்ன லட்சியம் வைத்திருக்கிறீர்களோ, அது சுலபமாகி விடும். உழைப்பு தேவைப்படாது. சிநேகி சொரூபமாக இருப்பீர்கள். நல்லது.

பாப்தாதாவின் கணகளில் நிறைந்துள்ள கண்ணின் மணியாகிய குழந்தைகள், பாபாவின் அனைத்து ஆஸ்திகளுக்கும் அதிகாரிகளாகிய சிரேஷ்ட ஆத்மா குழந்தைகளுக்கு, ஒரு பாபா மட்டுமே உலகம் என்ற ஈடுபாட்டில் மூழ்கி இருக்கும் லவ்லீன் குழந்தைகளுக்கு, லவ்லீன் ஆவது என்றால் பாபாவுக்கு சமமாக சகஜமாக ஆவது. ஆக லவ்லி மற்றும் லவ்லீன் இரண்டு குழந்தைகளுக்கும் மிகமிக பல கோடி மடங்கு அன்பு நினைவு மற்றும் நமஸ்தே.

ஆசீர்வாதம்:
தனது ஒவ்வொரு கர்மம் மற்றும் விசேஷத் தன்மை மூலம் வள்ளலைப் போல் சமிக்ஞை செய்யக்கூடிய உண்மையான சேவாதாரி ஆகுக.

உண்மையான சேவாதாரி எந்த ஓர் ஆத்மாவுக்கும் சகயோகம் கொடுத்து, தன்னிடம் சிக்க வைக்க மாட்டார்கள். அவர்கள் அனைவரின் தொடர்பையும் பாபாவோடு இணைப்பார்கள். அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் பாபாவை நினைவு படுத்துவதாக இருக்கும். அவர்களின் ஒவ்வொரு கர்மத்தின் மூலம் பாபா தென்படுவார். அவர்களுக்கு இந்த சங்கல்பமும் கூட வராது - அதாவது எனது விசேஷத் தன்மையின் காரணத்தால் இவர் என்னுடைய சகயோகி ஆகியிருக்கிறார். உங்களைப் பார்த்தார், பாபாவைப் பார்க்கவில்லை என்றால் நீங்கள் சேவை செய்யவில்லை. பாபாவை மறக்க வைத்திருக்கிறீர்கள். உண்மையான சேவாதாரி சத்தியத்தின் பக்கம் அனைவரின் சம்பந்தத்தையும் இணைப்பார்கள். தன்னோடு அல்ல.

சுலோகன்:
எந்த விதமான விண்ணப்பத்தையும் (வேண்டுகோள்) வைப்பதற்கு பதிலாக சதா திருப்தியாக இருங்கள்.


அவ்யக்த சமிக்ஞை: எண்ணங்களின் சக்தியை சேமிப்பு செய்து சிறந்த சேவைக்கு கருவி ஆகுங்கள்.

சிரேஷ்ட பாக்கியத்தின் ரேகையை வரைந்து கொள்வதற்கான ஆதாரம் - சிரேஷ்ட சங்கல்பம் மற்றும் சிரேஷ்ட கர்மம். டிரஸ்டி ஆத்மாவாக இருந்தாலும், சேவாதாரி ஆத்மாவாக இருந்தாலும், இருவருமே இதே ஆதாரத்தில் நம்பர் பெற முடியும். இருவருக்குமே பாக்கியத்தை அமைத்துக் கொள்வதற்கான முழு வாய்ப்பு உள்ளது. ஒருவர் எவ்வளவு பாக்கியத்தை அமைத்துக் கொள்ள விரும்புகிறாரோ, அமைத்துக் கொள்ள முடியும்.