06-09-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! நாம் எப்படி
அனைவருக்கும் சுகதாமம் செல்வதற்கான வழி சொல்வது என்ற கவலை
உங்களுக்கு இருக்க வேண்டும். இது தான் புருஷோத்தமர் ஆவதற்கான
சங்கமயுகம் என்று அனைவருக்கும் தெரிய வேண்டும்.
கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள்
ஒருவருக்கொருவர் என்ன வாழ்த்துச் செய்தி கொடுக் கின்றீர்கள்?
மனிதர்கள் எப்போது வாழ்த்து சொல்கிறார்கள்?
பதில்:
யாரேனும் பிறக்கின்றார் அல்லது
வெற்றி அடைகின்றார் அல்லது திருமணம் செய்கின்றார் அல்லது
ஏதேனும் முக்கிய நாளாக இருக்கிறது என்றால் மனிதர்கள் வாழ்த்து
தெரிவிக்கிறார்கள், ஆனால் அது உண்மையான வாழ்த்து அல்ல.
குழந்தைகளாகிய நீங்கள் ஒருவருக்கொருவர் தந்தை யினுடையவராக
ஆவதற்கான வாழ்த்து சொல்கின்றீர்கள். நாங்கள் எவ்வளவு
அதிர்ஷ்டசாலிகள், அனைத்து துக்கங்களிலிருந்தும் விடுபட்டு
சுகதாமம் செல்கின்றோம் என்று நீங்கள் சொல் கின்றீர்கள். உங்கள்
மனதில் மகிழ்ச்சி நிரம்பி இருக்கிறது.
ஓம் சாந்தி.
எல்லைக்கப்பாற்பட்ட தந்தை வந்து எல்லைக்கப்பாற்பட்ட
குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். எல்லைக்கப்பாற்பட்ட தந்தை
யார்? என்ற கேள்வி இப்பொழுது எழுகிறது. அனை வருடைய தந்தை ஒருவர்,
அவரை பரமபிதா என்று அழைக்கப்படுகிறார் என்பதை தெரிந்திருக்
கிறீர்கள். லௌகீக தந்தையை பரமபிதா என்று சொல்வதில்லை. பரமபிதா
ஒரே ஒருவர் தான், அவரை அனைத்து குழந்தைகளும் மறந்து விட்டனர்.
ஆகையினால் துக்கத்தை நீக்கி சுகத்தைக் கொடுக்கும் பரமபிதா
பரமாத்மாவை குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். தந்தை
நம்முடைய துக்கத்தை எப்படி நீக்கிக் கொண்டிருக்கிறார், பிறகு
சுகம், சாந்தியில் சென்று விடுவோம் என்பதை நீங்கள்
தெரிந்துள்ளீர்கள். அனைவரும் சுகத்தில் செல்வதில்லை. சிலர்
சுகத்தில், சிலர் சாந்தியில் சென்று விடுகிறார்கள். சிலர்
சத்யுகத்தில் பாகத்தை நடிக்கிறார்கள், சிலர் திரேதா யுகத்தில்,
சிலர் துவாபர யுகத்தில் பாகத்தை நடிக்கிறார்கள். நீங்கள்
சத்யுகத்தில் இருக்கும்போது மற்ற அனைவரும் முக்தி தாமத்தில்
இருப்பார்கள். அதை ஈஸ்வரனுடைய வீடு என்று சொல்வோம். இப்போது
இந்த மனிதர்களுக்கு தந்தை சுகம் சாந்தியின் ஆஸ்தியைக்
கொடுத்துக் கொண்டிருக் கிறார் என்று எப்படி வழி காட்டுவது?
உலகத்தில் அமைதி எப்படி ஏற்படுகிறது? அமைதி எப்போது இருந்தது?
இதை அவர்களுக்கு எப்படி புரிய வைப்பது? சேவாதாரி குழந்தைகள்
வரிசைக் கிரமமான முயற்சியின்படி இதை சிந்தனை செய்வார்கள்.
நீங்கள் பிரம்மா முகவம்சாவளி பிராமணர்கள், உங்களுக்குத் தான்
தந்தை தன்னுடைய அறிமுகத்தைத் தந்துள்ளார். முழு உலகத்தில் உள்ள
மனிதர்களின் பாகத்தை பற்றியும் அறிமுகம் கொடுத்துள்ளார்.
இப்போது நாம் மனிதர்களுக்கு தந்தை மற்றும் படைப்பினுடைய
அறிமுகத்தை எப்படி கொடுப்பது? பாபா அனைவருக்கும் சொல்கிறார் -
தன்னை ஆத்மா என உணர்ந்து என்னை நினைவு செய்தால் இறைவனின்
வீட்டிற்குச் சென்று விடுவீர்கள். தங்கயுகம் அதாவது
சொர்க்கத்திற்கு அனைவரும் செல்ல மாட்டார்கள். அங்கு இருப்பதே
ஒரேயொரு தர்மம். மற்ற அனைவரும் சாந்தி தாமத்தில் இருப்பார் கள்.
இதில் கோபப்படுவதற்கான விசயம் ஏதும் இல்லை. மனிதர்கள் அமைதி
கேட்கிறார்கள். அது அல்லாவினுடைய அதாவது இறை தந்தையின் வீட்டில்
கிடைக்கிறது. ஆத்மாக்கள் அனைவரும் சாந்திதாமத்திற்கு
வருகிறார்கள். எப்போது நாடகம் முழுமை அடையுமோ அப்போது அங்கே
செல்கிறார்கள். பாபா வருவதே தூய்மையற்ற உலகத்திலிருந்து
அனைவரையும் அழைத்துச் செல்வதற்காகத் தான்!
இப்போது நாம் சாந்தி தாமத்திற்குச் செல்கிறோம். பிறகு நாம்
சுகதாமத்திற்கு வருவோம் என்று குழந்தைகளின் புத்தியில் உள்ளது.
இது புருஷோத்தம சங்கமயுகம். புருஷோத்தம் அதாவது உத்தமத்திலும்
உத்தமமான ஆத்மா! (புருஷ்) எதுவரை ஆத்மா தூய்மை அடையவில்லையோ
அதுவரை உத்தமமான ஆத்மாவாக ஆக முடியாது. இப்போது பாபா உங்களிடம்
சொல்கிறார் - என்னை நினைவு செய்யுங்கள் மற்றும் சிருஷ்டியைத்
தெரிந்து கொள்ளுங்கள். கூடவே தெய்வீக குணங்களையும் தாரணை
செய்யுங்கள். இந்த நேரம் அனைத்து மனிதர்களின் நடத்தையும்
மோசமாக உள்ளது. புதிய உலகத்தில் நடத்தை மிகவும் முதல் தரமாக
இருக்கும். பாரதவாசிகள் தான் உயர்ந்த நடத்தை அதாவது பண்பு
நிறைந்தவர்களாக ஆகிறார்கள். அந்த உயர்ந்த நடத்தையினருக்கு
கீழான நடத்தையுடையவர்கள் தலை வணங்குகிறார்கள். அவர்களுடைய
குணங்களை மகிமை பாடுகிறார்கள். இதை குழந்தைகளாகிய நீங்கள் தான்
புரிந்து கொள்கிறீர்கள். இப்போது மற்றவர்களுக்குப் புரிய
வைப்பது எப்படி? எப்படிப்பட்ட சகஜமான யுக்தியை உருவாக்கு வது?
இது ஆத்மாக்களின் மூன்றாம் கண்ணை திறக்கும் விசயம் ஆகும்.
பாபாவினுடைய ஆத்மாவில் ஞானம் இருக்கிறது. என்னிடம் ஞானம் இல்லை
என்று மனிதர்கள் சொல்கிறார்கள். இது தேக அபிமானம் ஆகும், இதில்
ஆத்ம அபிமானி ஆக வேண்டும். சந்நியாசிகளிடம் சாஸ்திரங் களின்
ஞானம் இருக்கிறது. பாபாவுடைய ஞானத்தை, பாபா எப்போது வருகிறாரோ
அப்போது கொடுக்கிறார். யுக்தியோடு புரிய வைக்க வேண்டும். அந்த
மனிதர்கள் கிருஷ்ணரை பகவான் என்று நினைக்கிறார்கள். பகவானை
தெரிந்து கொள்ளவே இல்லை. ரிஷி, முனி போன்றவர்கள் எங்களுக்குத்
தெரியாது என்று கூறி விடுகிறார்கள். மனிதர்கள் பகவான் ஆக
முடியாது என்று நினைக்கிறார்கள். நிராகார பகவான் தான் படைப்பவர்
ஆவார். ஆனால் அவர் எப்படி படைக்கிறார்? அவருடைய பெயர், ரூபம்,
தேசம், காலம் என்ன? பெயர் ரூபத்திற்கு அப்பாற்பட்டவர் என்று
சொல்லி விடுகிறார்கள். பெயர் ரூபத்திற்கு அப்பாற்பட்ட ஒரு
பொருளே கிடையாது, அப்படி இருக்க முடியாது என்பதைக் கூட புரிந்து
கொள்வதில்லை. கல்லிலும், முள்ளிலும், கச்ச மச்ச அவதாரம்
அனைத்திலும் இருக்கிறார் என்றால், அது பெயர் ரூபம் ஆகி
விடுகிறது. ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு விதமாக கூறிக் கொண்டே
இருக்கிறார்கள். மனிதர்களுக்கு எப்படி புரிய வைப்பது என்று
குழந்தைகளுக்கு இரவும் பகலும் சிந்தனை ஓட வேண்டும். இது
மனிதரிலிருந்து தேவதை ஆகக்கூடிய புருஷோத்தம சங்கமயுகம் ஆகும்.
மனிதர்கள் தேவதைகளை வணங்குகிறார்கள். மனிதர்கள் மனிதர்களை
வணங்குவதில்லை. மனிதர்கள் பகவானை அதாவது தேவதைகளை வணங்க
வேண்டியிருக்கிறது, பாபா ஞானக்கடலைக் கடைவதற்கான யுக்தியை
குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கிறார். இந்த நேரம் அனைவரும்
இரும்பு யுகத்தில் தமோபிரதானமாக இருக்கிறார்கள். கண்டிப்பாக ஏதோ
ஒரு காலத்தில் தங்கயுகம் இருந்திருக்கும். தங்கயுகத்தை
தூய்மையானது என்று சொல்லப்படுகிறது. தூய்மையானது மற்றும்
தூய்மையற்றது, தங்கத்தில் கலப்படம் ஆகிறது அல்லவா? ஆத்மா கூட
முதலில் தூய்மையாக சதோபிரதானமாக இருக்கிறது, பிறகு அதில் துரு
பிடிக்கிறது. எப்போது தமோபிரதானம் ஆகிவிடுகிறதோ அப்போது தந்தை
வருகிறார். தந்தை வந்து தான் சதோபிரதானமான சுகதாமத்தை
உருவாக்குகிறார். சுகதாமத்தில் பாரதவாசிகள் மட்டும் தான்
இருப்பார்கள். மற்ற அனைவரும் சாந்திதாமம் சென்றுவிடுவார்கள்.
சாந்திதாமத்தில் அனைவரும் தூய்மையாக இருக்கிறார்கள். பிறகு
இங்கே வந்து மெது மெதுவாக தூய்மையற்றவர்களாக ஆகி விடுகிறார்கள்.
ஒவ்வொரு மனிதரும் சதோ, ரஜோ, தமோவாக கண்டிப்பாக ஆகிறார்கள்.
நீங்கள் அனைவரும் அல்லாவின் வீட்டிற்குச் சென்று சேர முடியும்
என்று எப்படி சொல்லி புரிய வைப்பது. தேகத்தின் அனைத்து
சம்பந்தங்களையும் மறந்து தன்னைத் தான் ஆத்மா என்று புரிந்துக்
கொள்ள வேண்டும். இது பகவானுடைய மகா வாக்கியம் ஆகும். என்னை
நினைவு செய்வதன் மூலம் இந்த 5 பூதங்களும் விலகி விடும்.
குழந்தைகளாகிய உங்களுக்கு இரவும்-பகலும் இந்த சிந்தனை இருக்க
வேண்டும். பாபாவிற்குக் கூட சிந்தனை வந்தது, அப்போது நான்
சென்று அனைவரையும் சுக மானவர்களாக ஆக்குவேன் என்ற எண்ணம் வந்தது.
கூடவே குழந்தைகளும் உதவியாளராக ஆக வேண்டும். தனியாக பாபா என்ன
செய்வார்? ஆக ஞானக்கடலைக் கடையுங்கள். இது புருஷோத்தம
சங்கமயுகம் என்று மனிதர்கள் உடனே புரிந்து கொள்ளும்படியான
அப்படிப்பட்ட வழியைக் கண்டு பிடியுங்கள். இந்த நேரம் தான்
மனிதர்கள் புருஷோத்தமர் ஆக முடியும். முதலில் உயர்ந்தவர்களாக
இருக்கிறார்கள் பிறகு கீழே விழுந்து விடுகிறார்கள்.
ஆரம்பத்திலேயே விழுந்து விடுவதில்லை. சிருஷ்டிக்கு வந்ததுமே தமோ
பிரதானம் ஆவதில்லை. ஒவ்வொரு பொருளும் முதலில் சதோபிரதானமாக
பிறகு சதோ-ரஜோ-தமோவில் வருகிறது. குழந்தைகள் இவ்வளவு
கண்காட்சிகள் செய்கிறார்கள், ஆனாலும் மனிதர்கள் எதையும்
புரிந்து கொள்வதில்லை. ஆக வேறு என்ன வழி கண்டு பிடிப்பது? வித
விதமான வழிகளைக் கண்டு பிடிக்க வேண்டி யிருக்கிறது. அதற்கு
நேரமும் கிடைத்திருக்கிறது. உடனடியாக யாரும் சம்பூர்ணம் ஆகி
விட முடியாது. நிலா மெது மெதுவாக வளர்ந்து கடைசியில் சம்பூர்ணம்
ஆகிறது. நாம் கூட தமோபிர தானம் ஆகி விட்டோம், பிறகு சதோபிரதானம்
ஆவதில் நேரம் பிடிக்கிறது. அது ஜடம் இதுவோ சைத்தன்யம் ஆகும்.
ஆக நாம் எப்படி புரிய வைப்பது? நாம் மகிழ்ச்சியான செய்தி
சொல்கிறோம். யாரேனும் வெற்றி அடைந்தால் வாழ்த்து சொல்கிறார்கள்,
யாரேனும் திருமணம் செய்தால் கூட வாழ்த்து தெரிவிக்கிறார்கள் -
சதா சுகமாக இருங்கள். இப்போது பாபா உங்களுக்குப் புரிய
வைக்கிறார் - நாம் ஒருவருக்கொருவர் எப்படி வாழ்த்து தெரிவிப்பது,
இந்த நேரம் நாம் எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடமிருந்து
முக்தி-ஜீவன் முக்தியின் ஆஸ்தியை பெற்றுக் கொண்டிருக்கிறோம்.
உங்களுக்கு வாழ்த்து கிடைத்துக் கொண்டிருக்கிறது. பாபா புரிய
வைக்கின்றார் - உங்களுக்கு வாழ்த்துகள். நீங்கள் 21
பிறவிகளுக்கு கோடான கோடிகளுக்கு அதிபதி ஆகி விடுவீர்கள்.
இப்போது அனைத்து மனிதர்களும் எப்படி பாபாவிடமிருந்து ஆஸ்தி
பெறுவார் கள், அனைவரும் வாழ்த்து பெற வேண்டும். இப்போது நீங்கள்
தெரிந்து கொண்டீர்கள். ஆனால் உங்களுக்கு மனிதர்கள் வாழ்த்து
தெரிவிக்க முடியாது. அவர்கள் உங்களைத் தெரிந்து கொள்ளவே இல்லை.
வாழ்த்து தெரிவித்தார்கள் என்றால், கண்டிப்பாக தானும்
வாழ்த்தினைப் பெறுவதற்கு தகுதி அடைவார்கள். நீங்கள் மறைமுகமாக
இருக்கிறீர்கள். ஒருவருக்கொருவர் வாழ்த்துக் கூற முடியும்.
நீங்கள் எல்லைக்கப்பாற்பட்ட தந்தையினுடையவர் களாக
ஆகியுள்ளீர்கள், அதற்காக வாழ்த்துகள்! நீங்கள் எவ்வளவு
அதிர்ஷ்டசாலிகள், ஏதேனும் லாட்டரி கிடைக்கிறது அல்லது குழந்தை
பிறக்கிறது என்றால் வாழ்த்து கூறுகிறார்கள். குழந்தை தேர்ச்சி
அடைந்தாலும் வாழ்த்து தெரிவிக்கிறார்கள். உங்களின் மனதிற்குள்
மகிழ்ச்சி இருக்கிறது, தனக்கு தான் வாழ்த்து சொல்கிறீர்கள்.
நமக்கு பாபா கிடைத்திருக்கிறார், அவரிடமிருந்து ஆஸ்தியைப்
பெற்றுக் கொண்டிருக்கிறோம்.
பாபா புரிய வைக்கிறார் - ஆத்மாக்களாகிய நீங்கள் துர்கதியை
அடைந்தீர்கள், இப்போது நீங்கள் சத்கதியை அடைகிறீர்கள்.
அனைவருக்கும் ஒரே வாழ்த்து கிடைக்கிறது. கடைசியில் அனைவருக்கும்
தெரிய வரும். யார் உயர்ந்தவரிலும் உயர்ந்தவராக ஆகின்றார்களோ
அவர் களுக்கு கீழே இருப்பவர்கள் வாழ்த்து தெரிவிப்பார்கள்.
நீங்கள் சூரியவம்ச குலத்தில் மகாராஜா மகாராணி ஆகின்றீர்கள்.
யார் வெற்றி மாலையின் மணி ஆகிறார்களோ அவர்களுக்கு கீழே
இருப்பவர்கள் வாழ்த்து தெரிவிப்பார்கள். யார் தேர்ச்சி
அடைவார்களோ, அவர்களுக்கு வாழ்த்து கிடைக்கும். அவர்களுக்கு பூஜை
நடக்கும். உயர்ந்த பதவி அடையும் ஆத்மாவுக்கு வாழ்த்து
கிடைக்கிறது. பிறகு பக்தி மார்க்கத்தில் அவர்களுக்குத் தான்
பூஜையும் நடக்கிறது. ஏன் பூஜை செய் கிறார்கள் என்று
மனிதர்களுக்குத் தெரிவதில்லை. ஆக குழந்தைகளுக்கு இதே கவலை
இருக்கிறது - எப்படி புரியவைப்பது? நாம் தூய்மை ஆகிவிட்டோம்,
மற்றவர்களை எப்படி தூய்மை ஆக்குவது? உலகம் மிகப்பெரியது அல்லவா!
என்ன செய்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் செய்தி போய்ச்சேரும்?
நோட்டீஸ் போடுவதால் அனை வருக்கும் செய்தி கிடைப்பதில்லை. இந்த
செய்தி ஒவ்வொருவரின் கைக்கும் போய்ச் சேர வேண்டும். ஏனெனில்
தந்தையிடம் போய் சேர்வது எப்படி என்று அவர்களுக்கு முற்றிலும்
தெரியாது. அனைத்தும் பரமாத்மாவை அடைவதற்கான வழிகளே என்று
கூறிவிடுகிறார்கள். ஆனால் பாபா சொல்கிறார் - இந்த பக்தி,
தான-புண்ணியம் பல பிறவிகளாக செய்து வந்தீர்கள். ஆனால் வழி
கிடைக்கவில்லை. இவை அனைத்தும் முதலும் முடிவுமற்றதாக
நடந்துவருகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் எப்போது ஆரம்பமானது?
முதலும் முடிவுமற்றது என்பதன் அர்த்தத்தைப் புரிந்து
கொள்ளவில்லை. உங்களிலும் கூட வரிசைக்கிரமமான முயற்சியின்படி
புரிந்துக் கொள்கிறார்கள். ஞானத்தின் பலன் 21 பிறவி களுக்குக்
கிடைக்கிறது. அது சுகம், பிறகு துக்கம் ஏற்படுகிறது. யார் அதிக
பக்தி செய்தார்கள் என்று குழந்தைகளாகிய உங்களுக்கு இந்தக்
கணக்கு புரிய வைக்கப்படுகிறது. இது போன்ற சிக்கலான விசயங்களை
ஒவ்வொருவருக்கும் புரிய வைக்க முடியாது. என்ன செய்வது, ஏதேனும்
செய்தித்தாளில் போடலாம், நேரம் பிடிக்கும். அனைவருக்கும்
அவ்வளவு சீக்கிரம் செய்தி போய் சேராது. அனைவரும் முயற்சி செய்ய
ஆரம்பித்துவிட்டால் பிறகு சொர்க்கத்திற்கு வந்துவிடு வார்கள்.
இது நடக்கவே முடியாது. நீங்கள் சொர்க்கம் செல்வதற்காக முயற்சி
செய்கின்றீர்கள். இப்போது நமது தர்மத்தினரை வெளிக்கொண்டு வருவது
எப்படி? யார் யார் வேறு தர்மத்திற்கு மாறிச்
சென்றிருக்கிறார்கள் என்று எப்படித் தெரியும்? இந்து
தர்மத்தினர் உண்மையில் தேவி தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்கள்,
இது கூட யாருக்கும் தெரிவதில்லை. பக்கா இந்துவாக இருந்தால்
தன்னுடைய ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தை ஏற்றுக்கொள்வார்கள்.
இந்த நேரம் அனைவரும் தூய்மையற்று இருக்கிறார்கள். பதீத பாவனா
வாருங்கள் என்று அழைக் கிறார்கள். எங்களை தூய்மையான உலகத்திற்கு
அழைத்துச் செல்லுங்கள் என்று நிராகாரத் தந்தையைத் தான் நினைவு
செய்கிறார்கள். இவர்கள் இவ்வளவு பெரிய ராஜ்ஜியத்தை எப்படிப்
பெற்றார்கள்? வெற்றி பெற்று ராஜ்யத்தை பெறக்கூடியவாறு
பாரதத்தில் இந்த நேரம் எந்த ராஜ்யமும் இல்லை. அவர்கள்
சண்டையிட்டு ராஜ்யத்தைப் பெறுவதில்லை. மனிதரிலிருந்து தேவதையாக
எப்படி மாற்றப்படுகிறது? யாருக்கும் தெரிவதில்லை. உங்களுக்கும்
கூட இப்போது தந்தை மூலம் தெரிய வருகிறது. இதை மற்றவர்களுக்கு
எப்படி கூறுவது? அதன்மூலம் அவர்கள் முக்தி-ஜீவன் முக்தி அடையக்
கூடும். முயற்சி செய்ய வைப்பவர் வேண்டுமல்லவா!. அல்லாவின்
குழந்தைகள் நீங்களும் ஆத்மாக்கள் தான். நாம் அல்லாவிடம் செல்ல
வேண்டும் என்று ஆத்மா விரும்புகிறது. ஆத்மா முன்பு தூய்மையாக
இருந்தது. இப்போது தூய்மை இழந்துவிட்டது. இதை சொர்க்கம் என்று
சொல்ல முடியாது. அனைத்து ஆத்மாக்களும் தூய்மை யற்றவர்கள்.
எப்படி தூய்மையாகி அல்லாவின் வீட்டுக்குச் செல்வது? அங்கே
விகார ஆத்மாக்கள் இருப்பதில்லை. விகாரமற்ற வர்களாக இருக்க
வேண்டும். ஆத்மா உடனே சதோபிரதானம் ஆகிவிடுவதில்லை.
இவையனைத்தையும் பற்றி சிந்தனைக் கடலை கடைய வேண்டியிருக்கிறது.
பாபா சிந்தனைக் கடலை கடைகிறார், பிறகு புரிய வைக்கிறார்.
யாருக்கு எப்படி புரிய வைப்பது என்ற யுக்திகளை உருவாக்க
வேண்டும். நல்லது
இனிமையிலும் இனிமையான காணாமல் சென்று கண்டெடுக்கப்பட்ட
குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கங்கள். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. நான் சென்று குழந்தைகளை துக்கத்திலிருந்து விடுவித்து
சுகமுடையவர்களாக ஆக்குவேன் என்று எப்படி பாபாவுக்கு எண்ணம்
வந்ததோ, அதுபோல தந்தைக்கு உதவியாளர் ஆகவேண்டும். வீடு வீடாக
செய்தியைக் கொண்டுபோய் சேர்ப்பதற்கு யுக்திகளை உருவாக்க
வேண்டும்.
2. அனைவருடைய வாழ்த்துகளைப் பெறுவதற்கு வெற்றி மாலையின் மணி
ஆவதற்கான முயற்சி செய்ய வேண்டும். பூஜைக்குரியவர் ஆக வேண்டும்.
வரதானம்:
செய்பவர் மற்றும் செய்விப்பவர் என்ற நினைவினால் ஒளி கிரீடதாரி
ஆகுக.
நான் நிமித்தமான கர்மயோகி, செய்பவர் ஆவேன், செய்விப்பவர் தந்தை
- ஒருவேளை இந்த நினைவு இயல்பாக இருந்தது என்றால் சதா ஒளி
கிரீடதாரி மற்றும் கவலையற்ற சக்கரவர்த்தி ஆகிவிடுவீர்கள். தந்தை
மற்றும் நான் அவ்வளவுதான், மூன்றாவது எவரும் இல்லை - இந்த
அனுபவம் சகஜமாக கவலையற்ற சக்கரவர்த்தி ஆக்கிவிடுகிறது. யார்
அப்பேற்பட்ட சக்கரவர்த்தி ஆகின்றார்களோ, அவர்கள் தான் மாயாவை
வென்றவர்களாக, கர்மேந்திரியங்களை வென்றவர் களாக மற்றும்
இயற்கையை வென்றவர்களாக ஆகிவிடுகின்றார்கள். ஆனால், ஒருவேளை
தவறுதலாகக் கூட ஏதாவது வீணானதின் சுமையை தன்மீது வைத்துக்
கொண்டால் கிரீடத்திற்கு பதிலாக கவலையின் அனேகக் கூடைகள் தலை
மீது வந்துவிடுகின்றன.
சுலோகன்:
அனைத்து பந்தனங்களில் இருந்தும் விடுபடுவதற்காக தேகத்தின்
உறவுகளிடம் இருந்து மோகத்தை வென்றவர் ஆகுங்கள்.
அவ்யக்த சமிக்ஞை: இப்போது ஈடுபாடெனும் அக்னியை மூட்டி யோகத்தை
ஜூவாலா ரூபமாக்குங்கள்.
யோகத்தில் எப்பொழுது மற்ற அனைத்து எண்ணங்களும் சாந்தம்
ஆகிவிடுகின்றனவோ, தந்தை மற்றும் நான் என்ற இந்த ஒரே எண்ணம்
இருக்கின்றதோ, அப்பொழுதே ஜூவாலை ரூப நினைவு என்று கூறலாம், இதன்
மூலமே மாற்றம் ஏற்படுகிறது.