07.06.26 காலை முரளி
ஓம் சாந்தி 31.03.2010 பாப்தாதா,
மதுபன்
பூர்வஜ் (மூதாதையர்) மற்றும் பூஜைக்குரியவர் என்ற சுவமானில் (சுயமரியாதையில்)
இருந்து, மனதின் மூலமாக அனைவரையும் பாலனை (பராமரிப்பு)
செய்யுங்கள், முழு விருட்சத்திற்கும் (மனித குலத்திற்கும்)
சக்தியை கொடுங்கள்
இன்று பாப்தாதா தனது நாலாபுறங்களிலும் உள்ள பூர்வஜ் மற்றும்
பூஜைக்குரிய ஆத்மாக்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்.
நீங்கள் தங்களை பூர்வஜ் ஆத்மாக்கள் என்று புரிந்து கொள்கின்றீர்
கள் தானே? பூஜைக்குரிய ஆத்மாக்களின் இருப்பிடம் எங்கே
இருக்கின்றது? தங்களுடைய (மனித குல) மரத்தை முன்னால் கொண்டு
வாருங்கள், அதில் உங்களுடைய இடம் எங்கே என்று பாருங்கள்.
பூர்வஜ் ஆத்மாக்களாகிய உங்களுடைய இடம் வேரில் இருக்கிறது என்பதை
அறிவீர் கள். நீங்கள் வேரிலும் இருக்கின்றீர்கள், தண்டுப்
பகுதியிலும் இருக்கின்றீர்கள். வேரின் மூலமாகத் தான் முழு
மரத்திற்கும் பராமரிப்பு கிடைக்கின்றது. எனவே, நீங்கள் இந்த
முழு மரத்தின் கிளைகள் மற்றும் இலைகளைப் பராமரிக்கும், சக்தியை
(ஒளியை) கொடுக்கும் பூர்வஜ் (மூதாதையர் கள்) ஆவீர்கள். பூர்வஜ்
ஆக இருப்பதன் கூடவே நீங்கள் பூஜைக்குகுரியவர்களாகவும்
இருக்கின்றீர்கள். தண்டுப் பகுதியின் மூலமாக கடைசி இலைக்கும்
கூட சக்தி கிடைக்கின்றது. எனவே, தங்களை முழு மரத்திற்கும்
சக்தியை கொடுப்பவர்களாக உணர்கின்றீர்களா? பூர்வஜ்
ஆத்மாக்களாகிய நாங்கள் அனைத்து ஆத்மாக்களாகிய கிளைகளுக்கும்,
இலைகளுக்கும் சக்தியை கொடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்ற நஷா
இருக்கின்றதா! எப்படி பிரம்மா பாபாவை 'கிரேட் கிரேட் கிராண்ட்
ஃபாதர்' என்று சொல்லப்படுகின்றதோ, அதே போல், அவருடைய
துணைவர்களாகிய குழந்தைகள் நீங்களும் 'மாஸ்டர் கிரேட் கிரேட்
கிராண்ட் ஃபாதர்' ஆவீர்கள். முழு மரத்தில் உள்ள ஆத்மாக்களின்
ஈர்ப்பு பூர்வஜ் (மூதாதையர்) ஆத்மாக்களாகிய உங்கள் பக்கமே
இருக்கின்றது. பூர்வஜ் ஆத்மாக்களாகிய நீங்கள் அவர்களுக்கு
சக்தியின் மூலமாக பராமரிப்பு செய்கின்றீர்கள். பூர்வஜ்
ஆத்மாக்களாகிய உங்கள் அனைவருக்குமான பராமரிப்பை (வளர்ப்பை)
தந்தை செய்தார் எனில் தந்தை எப்படி செய்தார்? சக்திகளின்
மூலமாக. அதேபோல், பூர்வஜ் என்ற முறையில், சக்திகளின் மூலமாக
நீங்கள் அவர்களுக்கு (மனித குலத்திற்கு) வளர்ப்பை
கொடுக்கக்கூடியவர்கள். இன்று அனைத்து ஆத்மாக்களும் துக்கத்தில்
இருப்பதை நீங்கள் பார்க்கின்றீர்கள், கூக்குரல் இட்டுக்கொண்டு
இருக்கின்றார்கள், தங்கள் தங்களுடைய தேவதைகளை நோக்கி "வாருங்கள்,
வந்து எங்களை ரட்சிப்பு செய்யுங்கள், எங்களுக்கு சாந்தியை
கொடுங்கள், சக்தியை கொடுங்கள். "ஓ மன்னிப்பின் கடலாகிய
மூதாதையர்களே, எங்களுக்கு பாலனை கொடுங்கள்". எனவே, இந்தச்
சத்தம் பூர்வஜ் ஆத்மாக்களாகிய உங்கள் காதுகளில் விழுகின்றதா?
நாம் தான் அந்த பூர்வஜ் (மூதாதையர்கள்) என்று அனுபவம்
செய்கின்றீர்களா? முழு மரத்தில் பிற மதத்தைச் சார்ந்த
ஆத்மாக்களும் இருக்கின்றார்கள் (ஆனால்) அவர்கள் அதே மரத்தின்
கிளைகளாக இருப்பதால், அவர்களும் கூட உங்களை அதே (மூதாதையர்
என்ற) பார்வையிலேயே பார்க்கின்றார்கள். அவர் களுக்கும்
மூதாதையர் நீங்களே. நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்த ஆத்மாக்களைச்
சந்தித்தாலும், அவர்களும் நமது மரத்தின் கிளைகளே என்று புரிந்து
கொள்ளுங்கள். அவர்களும் உங்களைச் சந்திக்கும் போது "இவர்கள்
நம்முடையவர்கள்" என்று புரிந்து கொள்கின்றார்கள். அந்த 'தன்னவர்'
என்ற உணர்வு அந்த ஆத்மாக்களுக்கும் ஏற்படுகின்றது, ஏற்பட
வேண்டும். எனவே, இத்தனை நஷா மற்றும் இத்தனை ஆழமான இரக்கம்
உங்களுக்குள் அவர்கள் மீது வருகின்றதா? அவர்கள் "இரக்கம்
காட்டுங்கள்" என்று கதறிக்கொண்டு இருக்கின்றார்கள்... எனவே
இப்போது காலத்தின் தேவைக்கேற்ப, பூர்வஜ் ஆத்மாக்களகிய நீங்கள்
அனைவரும் மனதின் மூலமாக அவர்களுக்குச் சக்திகளைப் வழங்கிப்
பராமரித்தல் (காத்தருளுதல்) வேண்டும். அவர்களுக்கு அது தேவையாக
இருக்கின்றது. நீங்கள் எந்த அளவிற்கு பூர்வஜ் என்ற போதையில்
இருக்கின்றீர்களோ, அந்த அளவிற்கு உங்கள் மூலம் அவர்களுக்குப்
பராமரிப்பு கிடைக்கும். பொதுவாகவே பாருங்கள், லௌகீக
வாழ்க்கையிலும் கூட சிறியவர்களுக்குப் பராமரிப்பு என்பது
பெரியவர்களிடமிருந்தே கிடைக்கின்றது. அவர்கள் உடல் ரீதியான -
உணவு, கல்வி மற்றும் வருமானத்திற்கான ஆதாரங்களுக்கு ஏற்பாடு
செய்கின்றார்கள். எனவே எப்படி தந்தை குழந்தைகளாகிய உங்கள்
ஒவ்வொருவருக்கும் பல்வேறு சக்திகள் மூலம் பராமரித்தாரோ, அதேபோல
இப்போது மனித குல மரத்தின் கிளைகள் மற்றும் இலைகளைப்
பராமரிப்பது உங்கள் கடமையாகும். பூர்வஜ் ஆத்மாக்களாகிய
உங்களுக்கு அத்தகைய ஆர்வம் வருகின்றதா? நஷா இருக்கின்றதா?
நீங்கள் பூஜைக்குரியவர்களாகவும் இருக்கின்றீர்கள். பாருங்கள்,
இந்த நாடகத்தில் உங்களைப் போன்ற ஆத்மாக்களுக்கு முறைப்படி
நடக்கும் பூஜை போல எந்த ஒரு மகாத்மாவிற்கோ அல்லது மதத்
தலைவருக்கோ (தர்ம பிதாவிற்கோ) நடப்பதில்லை. உங்களுக்கான பூஜை
என்பது விதிமுறைப்படி - ஆராத்தி எடுப்பது, போக் (உணவு)
சமர்ப்பிப்பது என அமைகின்றது; வேறு எவருக்கும் இப்படி
நடப்பதில்லை. உங்களின் புகழ் பாடல்கள் முறைப்படி
கீர்த்தனைகளாகப் பாடப்படுகின்றன. நாடகத்தில் உங்களைப் போன்ற
பூஜையும் புகழும் வேறு எவருக்கும் கிடையாது.
இத்தகைய பூஜைக்குரிய மற்றும் பூர்வஜ் ஆத்மாக்களாகிய உங்களைக்
கண்டு பாப்தாதா எவ்வளவு குஷி அடைகின்றார்! தந்தையின்
இதயத்திலிருந்து மீண்டும் மீண்டும் இந்த பாடல் ஒலிக்கின்றது -
"ஆஹா! எனது மனித குல மரத்தின் பூர்வஜ் மற்றும் பூஜைக்குரிய
ஆத்மாக்களே ஆஹா!" தற்போது பாப்தாதா உங்கள் ஒவ்வொரு
குழந்தையையும் உங்கள் சுயமரியாதைக்கேற்ப (சுவமான்), தந்தைக்கே
நிகரான (பாப்சமான்) நிறைவான (சம்பன்ன) மற்றும் முழுமையான (சம்பூர்ண)
நிலையில் பார்க்க விரும்புகின்றார். அதற்காக குழந்தைகள் ஒரு
விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். குழந்தைகள் அனைவரும்
புருஷார்த்தம் நன்றாகவே செய்கின்றீர் கள் என்பதை பாப்தாதா
பார்த்தார், ஆனால் "சதா" (எப்போதும்) என்ற வார்த்தையை ஒவ்வொரு
வரும் தங்கள் புருஷார்த்தத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதில் கவனம் செலுத்த வேண்டும். பாப்தாதா உங்களைச் சிறந்த
சுயமரியாதை கொண்ட ஆத்மாக்களாகப் (அதாவது சுவமான் தாரியாக)
பார்ப்பது போல, நீங்களும் உங்களை அத்தகைய சுயமரியாதை
கொண்டவர்களாகக் கருதுகின்றீர்களா? என்று பாப்தாதா கேட்கிறார்.
குழந்தைகளும் இப்போது நமது ராஜ்யத்திற்குச் செல்ல வேண்டும்
என்று விரும்புவதை பாப்தாதா பார்த்தார். " இப்போது வீட்டிற்குச்
செல்ல வேண்டும்" என்ற பாடலையும் மனதில் பாடிக்கொண்டே
இருக்கின்றார்கள் - இப்போது வீட்டிற்குச் செல்ல வேண்டும்,
இப்போது திரும்புவதற்கான பயணம் செய்ய வேண்டும். இதற்காக, முழு
நேரமும் உங்களை ஏதாவது ஒரு சேவையில் பிஸியாக வைத்துக்
கொள்ளுங்கள் என்று பாப்தாதா முன்னரே கூறியுள்ளார். சேவையில்
ஆர்வமும், உற்சாகமும் இப்போதும் குழந்தைகளிடம் இருப்பதை
பாப்தாதா பார்த்தார். நல்ல சேவையைப் பற்றிய செய்திகளையும்
பாப்தாதா கேட்கின்றார். ஆனால் தீவிர வேகத்தில் முன்னேறிச்
செல்வ தற்காகக் குழந்தைகளுக்கு ஒரு விசேஷ கவனத்தை பாப்தாதா
ஈர்க்கின்றார் - அதாவது, வெறும் பேச்சின் மூலம் மட்டும் சேவை
செய்யாதீர்கள்; சேவை செய்யும்போது ஒரே நேரத்தில் மூன்று
சேவைகளையும் இணைத்துச் செய்யுங்கள் - மனதின் மூலமாக சக்தியை
கொடுங்கள், வார்த்தை களின் மூலமாக ஞானத்தை கொடுங்கள் மேலும்
செயல் அதாவது தங்களுடைய தொடர்பின் மூலமாக, சம்பந்தத்தின் (உறவின்)
மூலமாக, முகத்தின் மூலமாக அப்படிப்பட்ட சேவை செய்யுங் கள்
அதாவது அதனுடைய தாக்கம் என்பது சேவையில் ஏற்பட வேண்டும். ஒரே
நேரத்தில் மூன்று சேவைகளையும் இணைத்துச் செய்யுங்கள், ஏனெனில்
இப்போது ஆத்மாக்கள் சேவையை விரும்புகின்றார்கள், ஏதாவது ஒரு
மாற்றம் ஏற்பட வேண்டும், ஏதுவாது மாற வேண்டும் என்று
நினைக்கின்றார்கள். எனவே ஒரே நேரத்தில் உங்களால் மூன்று
சேவைகளையும் செய்ய முடியுமா? செய்ய முடியுமா? நீங்கள்
வார்த்தைகளின் மூலம் சேவை செய்யும்போது அதே நேரத்தில் மனதின்
மூலமும், செயல் அதாவது தொடர்பு-உறவு மூலமும் சேவை நடக்கின்றதா
என்று சரிபார்க்கின்றீர்களா? அவை ஒன்றாக நடக்கின்றதா? ஒரே
நேரத்தில் நாங்கள் மூன்று சேவை களையும் செய்கின்றோம் என்று
நினைப்பவர்கள் கைகளை உயர்த்துங்கள். ஒரே நேரத்தில் மூன்று சேவை.
எனவே இப்போது கவனியுங்கள் (அட்டேன்ஷன் ப்ளீஸ்).
'சில நேரங்களில்' என்பது அல்ல. என்ன நடக்கின்றது? சேவை
செய்கின்றீர்கள் ஆனால் சேவையுடன் சேர்ந்து உங்களுக்குள்ளும்
உங்கள் சகாக்களிடமும் (துணைவர்களிடமும்) திருப்தி இருக்கின்றதா,
ஏனெனில் சேவையின் பலன் என்பது திருப்தி மற்றும் மகிழ்ச்சி ஆகும்.
எனவே சரிபார்க்கவும், சேவை செய்கின்றீர்கள் ஆனால் சேவையின்
மகிழ்ச்சி எப்போது கிடைக்கும் என்று ஏற்கனவே சொல்லப்பட்டது,
அதாவது - (1) நீங்கள், (2) உங்கள் சகாக்கள் (சேவையின்
துணைவர்கள்) மற்றும் (3)சூழ்நிலை (வளிமண்டலம்) - அனைத்தும்
திருப்தியான அதிர்வலைகளில் இருக்க வேண்டும். சேவையின்
வெற்றிக்கான மூன்று விசேஷ விஷயங்கள் சொல்லப்பட்டன, அவை
நினைவிருக்கும். முதல் விஷயம் - சேவை எனில் அர்த்தம் 'நிமித்த
பாவ்' (கருவி என்ற உணர்வு). இரண்டாவது - 'நிர்மாண பாவனை' (பணிவான
எண்ணம்). மூன்றாவது - 'நிர்மல் வாணி' (தூய்மை யான பேச்சு). பாவ்,
பாவனை மற்றும் சுபாவம் - இவை அனைத்தும் சேவையுடன் இருந்தால்,
நீங்களும் திருப்தியாக இருப்பீர்கள், சகாக்களும் திருப்தியாக
இருப்பார்கள் மற்றும் யாருக்காகச் சேவை செய்கின்றீர்களோ
அவர்களும் முன்னேறிச் செல்வார்கள். நிமித்த பாவ் கொண்டவர்கள்
தந்தையுடன் (பாபாவுடன்) உறவை ஏற்படுத்துவார்கள். நிமித்த பாவ்
இல்லை என்றால் தந்தைக்கு அவ்வளவு அருகில் வரமாட்டார்கள். எனவே
எப்போது சேவை செய்தாலும், பாவ், பாவனை மற்றும் சுபாவம் சரியாக
இருந்ததா என்று சரிபார்க்கவும். மேலும் தற்போது பாப்தாதா ஒரு
முக்கிய விஷயத்தைக் கவனித்தார், அதாவது ஒவ்வொருவரும் தாங்கள்
எங்கே சேவைக்குச் சென்றாலும், சகாக்கள் திருப்தியாக
இருக்கின்றார்களா என்று சரிபார்க்கவும். ஏனெனில் சேவையின்
வெற்றி என்பது - திருப்தி என்ற பலனைப் பெறுவதாகும்,
மகிழ்ச்சியைப் பெறுவதாகும். அதனுடன் ஒரு விஷயத்தை பாப்தாதா
குறிப்பிடுகின்றார், அதாவது நடமாடும்போதும், குழுவில்
இருக்கும்போதும் யாராவது ஒருவரின் துணை சேவையில் இருக்கத்தான்
செய்கிறது, எனவே ஒருவரை ஒருவர் ஆத்மாவாகப் பாருங்கள்.
ஆத்மாவாகப் பார்க்கின்றீர்கள், பயிற்சியும் செய்கின்றீர்கள்,
ஆனால் ஆத்மாவாகப் பார்க்கும்போது ஆத்மாவின் அசல்
சன்ஸ்காரங்களுடன் (குணங்களுடன்) பார்க் கின்றீர்களா? அல்லது
கலப்பு சன்ஸ்காரங்களும் தெரிகிறதா? ஆத்மாவைப் பாருங்கள், இதில்
தேர்ச்சி பெறுங்கள், ஆனால் எந்த சன்ஸ்காரத்துடன்
பார்க்கின்றீர்கள்? ஆத்மாவின் அசல் (உண்மை யான)
சன்ஸ்காரங்களுடன் தொடர்பு கொள்கின்றீர்களா? அல்லது தற்போதைய
சன்ஸ்காரங்களும் முன்னே வருகிறதா? தந்தை கூறுகிறார்,
இன்றிலிருந்து யாரையும் ஆத்மா ரூபத்தில் பாருங்கள் ஆனால்
ஆத்மாவின் அசல் சன்ஸ்காரங்கள் எவையோ அந்த ரூபத்தில் பாருங்கள்.
அப்போது உங்களுக்குள் எப்போதாவது ஏற்படும் மனஸ்தாபங்கள்
ஏற்படாது. இப்போது ஆத்மா ரூபத்தில் பார்க்கின்றீர்கள், ஆனால்
கூடவே தற்போதைய சம்ஸ்காரங்களும் (குறைகளும்) முன்னே
வந்துவிடுகின்றன. அதனால் உங்களுக்குள் இருக்க வேண்டிய
முழுமையான நிலையில் ஒரு இடைவெளி ஏற்பட்டுவிடுகின்றது. எனவே,
அசல் சன்ஸ்காரங்களைக் கொண்ட ஆத்மாவாக பாருங்கள். அப்போது
தற்போது குழுவில் ஏற்படும் தடைகள் என்பது நீங்கிவிடும்.
இந்த பிராமணக் குடும்பம் ஒரு மிகச்சிறந்த குடும்பம்.
குடும்பத்திற்கு என்று ஒரு பெரிய மகிமை இருக் கின்றது. இந்த
ஈஸ்வரிய குடும்பம் மீண்டும் மீண்டும் கிடைக்காது. ஒரு
கல்பத்தில் ஒரே ஒரு முறைதான் இந்த ஈஸ்வரிய குடும்பம்
கிடைக்கின்றது, இவ்வளவு பெரிய குடும்பம் முழுக் கல்பத்திலும்
வேறு எங்கும் கிடைக்காது. குடும்பத்தின் சிறப்பை அறிந்து
குடும்பத்தோடு இணைந்து நடப்பது என்பது ஒரு பெரிய விஷயம். முன்பே
சொல்லப்பட்டது போல, இந்த ஞானத்தின் அஸ்திவாரம் என்பது 'நம்பிக்கை'
ஆகும். அந்த நம்பிக்கையில் நான்கு விஷயங்கள் உள்ளன. தந்தை (பாபா),
தாதா (பிரம்மா) நம்முடன் இருக்கத்தான் செய்கின்றார்கள் (நம்பிக்கை
இருக்கின்றது), இதன் கூடவே ஞானத்தின் மீது, நாடகத்தின் மீது
மற்றும் குடும்பத்தின் மீது என்று - இவை அனைத்திலும் நம்பிக்கை
இருக்க வேண்டும். எனவே, நிச்சயபுத்தி (நம்பிக்கை) இருந்தால்,
சகஜ புருஷார்த்தி ஆகிவிடுவீர்கள். நீங்கள் எதையாவது பேக்
செய்யும்போது என்ன செய்வீர்கள்? நான்கு பக்கங்களிலும்
இறுக்கமாகக் கட்டுவீர்கள் தானே, ஒரு பக்கம் சரியாகக் கட்டவில்லை
என்றாலும் உள்ளே இருப்பவை அசையும். அதுபோலவே தந்தை, ஞானம்,
விசேஷமாக நாடகம் மற்றும் குடும்பம் ஆகிய நான்கிலும் நம்பிக்கை
வலுவாக இல்லையென்றால் தடைகள் வரும். தடைகளைக் கடக்கக் கவனம்
தேவை, எனவே குடும்பத்தை அறிந்து கொள்வது, குடும்பத்தின் மீது
அன்பு, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது என்பது மிகவும் அவசியம்.
நீங்கள் பூர்வஜ் மற்றும் பூஜைக்குரியவர் என்றால், இந்த
விஷயங்களை உங்களுக்குள்ளும் உங்கள் சகாக்களிடமும் (துணைவர்களிடமும்)
கொண்டு வர வேண்டும். என்ன நடந்தாலும், நாம் வரிசைக்
கிரமமாகத்தானே (நம்பர் வாரியாக) இருக்கின்றோம்! ஆனால் பிராமணக்
குடும்பத்தின் விசேஷ பணி 'ஆசிர்வாதம் கொடுப்பது மற்றும்
ஆசிர்வாதம் பெறுவது' ஆகும். பல குழந்தைகள் சொல்கின்றார்கள், "மற்றவர்
கோபப்படுகிறார், அவரிடமிருந்து இப்போது எப்படி ஆசிர்வாதங்களைப்
பெறுவது? அவர் ஆசிர்வாதம் கொடுக்க மாட்டார், கோபம் தான் படுவார்"
என்று. பாப்தாதா கூறு கின்றார், "நல்லது, சன்ஸ்காரத்திற்கு
வசப்பட்டு அவர் சாபம் கொடுக்கின்றார், நீங்கள் ஆசிர்வாதம்
கொடுக்க விரும்புகின்றீர்கள் ஆனால் அவர் சாபம் கொடுக்கின்றார்;
அவர் சாபம் கொடுத்தார், ஆனால் அதை வாங்குபவர் யார்? வாங்குபவர்
நீங்களா அல்லது அவரா? அவர் கொடுப்பவர், நீங்கள் வாங்குபவர்.
அப்படியென்றால் அவருடைய சாபத்தை நீங்கள் ஏன் வாங்கினீர்கள்?
நீங்கள் ஆத்மாவை அதன் அசல் சன்ஸ்காரங்களுடன் பார்த்தால்,
உங்களுக்கு அவர் மீது இரக்கம் வரும்." தானும் கூட பாதுகாப்பாக
இருங்கள், சாபத்தினை எடுக்காதீர்கள், எடுக்கக்கூடியவர்கள்
நீங்கள் தான். கொடுக்கவும் வேண்டாம், எடுக்கவும் வேண்டாம்.
பாப்தாதா இன்று அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரு வீட்டுப்பாடம்
(ஹோம்வொர்க்) கொடுக் கின்றார்: எப்போதும் எல்லோரையும் ஆத்மா
ரூபத்தில் பாருங்கள், அவர்களின் தற்போதைய சன்ஸ்காரங்களின் (குணங்களின்)
அடிப்படையில் பார்க்காதீர்கள். ஆத்மா என்று சொல்லும்போது, அந்த
ஆத்மாவின் அசல் சன்ஸ்காரங்கள் எவையோ அந்த அசல் சன்ஸ்காரங்களின்
அடிப்படை யில் உறவு கொள்ளுங்கள் மற்றும் அதே திருஷ்டியுடன்
பாருங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், உங்களுடைய தீவிர
புருஷார்தத்திற்கு தடைகளாக இருப்பவை நீங்கும், உங்களுடைய
விருத்தி (உள்ளுணர்வு) மாறும், திருஷ்டி மாறும் எனும் போது
விஷயங்கள் (மனஸ்தாபங்கள்) முடிந்துவிடும். யாரைப் பற்றி எதைப்
பார்த்தாலும், பாப்தாதா ஏற்கனவே கூறியது போல, பிராமணக்
குடும்பத்தின் ஒவ்வொருவரின் கடமை - சுப பாவ்னா (நல்ல எண்ணங்கள்),
சுப காம்னா (நல்வாழ்த்துக்கள்) கொடுப்பது மற்றும் சுப பாவ்னா,
சுப காம்னா பெறுவது ஆகும். அந்த சன்ஸ்காரத்துடன் பாருங்கள்
மற்றும் செயல்படுங்கள். மற்றொரு விஷயத்தையும் கூறுகிறார் -
ஏற்கனவே கூறியது போல, சில நேரங்களில் குழுவில் மற்றவர்களின்
குறைகளைப் பார்ப்பது (பரதர்ஷன்), மற்றவர்களைப் பற்றிச்
சிந்திப்பது (பரசிந்தன்) மற்றும் பிறருடைய கருத்துக்களால்
ஈர்க்கப்படுவது (பரமத்) போன்றவை நடக்கின்றன. இப்போது இந்த
மூன்றையும் வெட்டிவிட்டு, ஒன்றின் மீது மட்டும் கவனம்
செலுத்துங்கள் - அதுதான் "பிறருக்கு நன்மை செய்தல்" (பர உபகார்).
பிறருக்கு உபகாரம் செய்யுங்கள், உபகாரியாக இருங்கள்.
பிராமணர்களின் இயல்பே பிறருக்கு உபகாரம் செய்வதுதான்.
மற்றவர்களின் குறைகளைப் பார்ப்பதை விட்டுவிடுங்கள். இந்த
மூன்றும் (பரதர்ஷன், பரசிந்தன், பரமத்) மிகுந்த நஷ்டத்தை
ஏற்படுத்துகின்றன. எனவே, "நான் ஒரு பிராமண ஆத்மா, என்னுடைய
சுவமான் என்பது பிறருக்கு உபகாரம் செய்வது தான்" என்பதை
எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
அடுத்த சீசனில் பாப்தாதா ஒவ்வொரு குழந்தையிடமும் இந்த
மாற்றத்தைக் காண விரும்பு கின்கிறார். இது சாத்தியமா? பாப்தாதா
வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றார், ஒருவருக்கொருவர் இதில் கவனமாக
இருக்க உதவுங்கள். என்ன செய்ய வேண்டும்? தினமும் இரவு
தூங்குவதற்கு முன் பாப்தாதாவிற்கு 'குட் நைட்' சொல்வதற்கு
முன்பாக, உங்கள் நாள் முழுவதையும் கணக்காக அவரிடம்
சமர்ப்பியுங்கள். நல்லது செய்தீர்களா அல்லது கெட்டது
செய்தீர்களா? எது செய்திருந் தாலும் அதைத் தந்தையிடம் கணக்காகக்
கொடுத்துவிட்டு, உங்கள் புத்தியை காலி செய்து விட்டு, 'குட்
நைட்' சொல்லிவிட்டு, தந்தையின் நினைவிலேயே தூங்கிவிடுங்கள்.
அப்போது உங்கள் உறக்கம் மிகவும் நன்றாக இருக்கும். முதலில்
உங்கள் புத்தியை காலி செய்யுங்கள், புத்தியில் எந்த
விஷயத்தையும் வைத்துக்கொள்ளாதீர்கள். தந்தையிடம் கணக்கை
உண்மையான இதயத் தோடு சமர்ப்பித்து விட்டால், நீங்கள்
தர்மராஜபுரியின் தண்டனைக்குச் செல்ல வேண்டிய அவசிய மிருக்காது.
உண்மையான இதயத்தைக் கண்டால் இறைவன் மகிழ்ச்சி அடைவார். எனவே
வீட்டுப் பாடம் கிடைத்துவிட்டது! ஒன்று, உங்கள் பூர்வஜ் மற்றும்
பூஜைக்குரிய ரூபத்தின் மூலம் நடமாடும் போதே சேவை செய்ய முடியும்.
பாப்தாதா பார்த்தார், ஜனக் குழந்தை (ஜானகி தாதி) தனது உடல்நிலை
சரியில்லாத போதும், கராச்சியின் (தற்போது பாகிஸ்தானில் உள்ள
இடம்) சேவையின் போது ஆத்மாக்களுக்கு விசேஷமாக மனதின் மூலம்
சக்திகளை கொடுத்தார். நிமித்தமாக யார் இருந்தாலும், அவர் அதை
நடைமுறைப்படுத்திக் காட்டினார். அங்குள்ள ஆத்மாக் களுக்கு சக்தி
கிடைத்தது, மேலும் அவர்கள் உற்சாகத்துடன் முன்னேறி
வருகின்றார்கள். பாப்தாதா ஒரு நடைமுறை உதாரணத்தைக் கண்டார்.
எனவே நீங்கள் அனைவரும் கூட இதைச் செய்ய முடியும். துக்கத்தில்
இருப்பவர்களுக்கும், கதறுபவர்களுக்கும் மகிழ்ச்சியின் அலையை
உங்களால் கொண்டு செல்ல முடியும். உங்கள் பக்தர்கள் உங்களைத்தான்
அழைக்கின்றார்கள் - "எங்கள் தேவி, எங்கள் தேவதா எப்போது வந்து
எங்களுக்கு இரக்கம் காட்டுவீர்கள்?" என்று.அவர்களின் குரல்
உங்களுக்குக் கேட்காமல் இருக்கலாம், ஆனால் தந்தைக்கு நன்றாகக்
கேட்கின்றது. ஒவ்வொரு வரும் தங்களுடைய இஷ்ட தெய்வத்தை
அழைக்கின்றார்கள். உங்கள் பக்தர்கள் யார் என்று உங்களுக்குத்
தெரியாமல் இருக்கலாம், ஆனால் பக்தர்களுக்குத் தெரியும். அவர்கள்
அழைக் கின்றார்கள், நீங்கள் ஒவ்வொரு பிராமண ஆத்மாவும்
அவர்களுக்கு தெய்வமாக இருக்கின்றீர்கள். நீங்கள் பலவீனமாக
இருந்தாலும் சரி அல்லது புத்திசாலியாக இருந்தாலும் சரி, நீங்கள்
(மனித குல மரத்தின்) வேரில் அமர்ந்திருப்பதால் உங்களுக்கும்
பக்தர்கள் இருக்கின்றார்கள், எனவே அவர்களுக்கு சக்தியை
கொடுப்பது உங்கள் பங்காகும். எனவே இப்போது மனசா சேவையை
அதிகரியுங்கள். இதில் நீங்கள் எவ்வளவு பிஸியாக இருக்கின்றீர்களோ,
அவ்வளவு தடைகளற்றவர்களாக இருப்பீர்கள். இதை உங்களால் செய்ய
முடியும் தானே! மனசா சேவை செய்வது உங்களுக்குத் தெரியும் தானே!
இதை முறைப்படி செய்கின்றீர்களா அல்லது 'சில நேரங்களில்' மட்டும்
செய்கின்றீர்களா?. ஒருவேளை 'சில நேரங்களில்' மட்டும் செய்து
கொண்டிருந்தால், அதைத் தொடர்ந்து செய்யுங்கள்; குறைவாகச் செய்து
கொண்டிருந்தால் அதை அதிகரியுங்கள், ஏனெனில் முழுக் கல்பத்தின்
அஸ்திவாரமும் இப்போது நீங்கள் செய்யும் சேவையின் பலனைப்
பொறுத்தே அமையும். நீங்கள் பூஜாரியாக (பூஜை செய்பவர்) ஆனாலும்
சரி, அல்லது ராஜ்ய அதிகாரியாக ஆனாலும் சரி, இரண்டிற்கும்
அடிப்படை - இப்போது நீங்கள் செய்யும் சேவை, இப்போதைய நிலை,
இப்போதைய பேச்சு மற்றும் இப்போதைய தொடர்பு - உறவுதான். எனவே,
இப்போது நீங்கள் எந்த அளவில் (சகவிகிதம்) இருக்கின்றீர்களோ, அது
இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று பாப்தாதா விரும்புகின்றார்.
பாப்தாதா எப்போதும் கூறுவது போல - எதைச் செய்வதாக இருந்தாலும்
இப்போதே செய்யுங்கள், 'பிறகு பார்த்துக்கொள்ளலாம்' என்பது
வேண்டாம். பாப்தாதாவிற்கு 'பிறகு' (கபி) என்ற (சாக்கு போக்கு)
பாடல்களைக் கேட்பதில் விருப்பமில்லை. 'இப்போதே' (அபி) செய்வோம்
என்ற பாடல் களே அவருக்குப் பிடித்திருக்கின்றது. உடனடி தானமே
மகா புண்ணியம். எனவே இப்போது என்ன செய்ய வேண்டும் என்று
புரிந்து கொண்டீர்கள் தானே? நல்லது.
நாலா புறங்களிலும் உள்ள குழந்தைகளைக் கண்டு பாப்தாதா மகிழ்ச்சி
அடைகின்றார், ஏனெனில் பாப்தாதா குழந்தைகள் இல்லாமல் எதையும்
தான் தனியாகச் செய்ய விரும்புவதில்லை, அதனால் ஒவ்வொரு நாளும்
குழந்தைகளை அழைத்துக்கொண்டே இருக்கின்றார். தீவிர முயற்சி
செய்யும் குழந்தைகளே, இனிமையான குழந்தைகளே, அன்பான குழந்தைகளே,
இப்போது புறப்படுங்கள் என்று. நல்லது.
நாலா புறங்களிலும் உள்ள குழந்தைகளைப் பார்த்து, அவர்கள்
நேரடியாக முன்னால் அமர்ந்திருந் தாலும் அல்லது எங்கே
அமர்ந்திருந்தாலும் சரி, அவர்கள் அனைவருக்கும் தந்தை நினைவில்
இருக்கின்றார். தந்தைக்கு யாரெல்லாம் நினைவில் இருக்கின்றார்கள்?
நாலா புறங்களிலும் உள்ள குழந்தைகள் நினைவில் இருக்கின்றார்கள்,
ஏனெனில் ஒவ்வொரு குழந்தையும் தந்தைக்கு நிகராக (பாப்சமான்)
ஆகியே தீர வேண்டும் என்பது தந்தையின் ஆசை. ஒவ்வொரு
குழந்தையிடமும் தந்தை வைத்துள்ள ஆசை, எதிர்பார்ப்புகள்
வரிசைக்கிரமமாக (நம்பர் வாரியாக) இருப்பதை அவர் அறிவார்,
இருந்தாலும் ஒவ்வொருவரும் தங்கள் வரிசைக்கு ஏற்ப முழுமை அடைய
வேண்டும். ஒவ்வொருவரின் புருஷார்த்தம் மற்றும் அவர்கள் என்ன
செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் பார்க்கும்போது,
தந்தைக்கு மிகுந்த அன்பு வருகிறது, குழந்தைகள் எப்பொழுது உழைக்
கின்றார்களோ, அப்பொழுது உழைப்பிலிருந்து அவர்கள் விடுபட்டு,
அன்பில் மூழ்கி விடட்டும் என்று (பாப்தாதாவிற்கு) மிகுந்த அன்பு
வருகின்றது. அன்பில் பெரும்பான்மையினர் தேர்ச்சி
பெற்றுள்ளீர்கள், ஆனால் ஏதாவது விஷயங்களில் (காரியங்களில்)
வரும்போது தந்தையை மறந்து விடுகின்றீர்கள்.
நாலா புறங்களிலும் உள்ள குழந்தைகளுக்கு பாப்தாதாவின்
கோடிக்கணக்கான மடங்கு அன்பும், இதய பூர்வமான ஆசிர்வாதங்களும்
உரித்தாகட்டும். எஜமானர் குழந்தைகளாகிய உங்கள் அனை வருக்கும்
தந்தை லட்சக்கணக்கான மடங்கு வாழ்த்துகளைக் கொடுத்துக் கொண்டு
இருக்கின்றார். பறந்து கொண்டே செல்லுங்கள், மற்றவர்களையும்
பறக்க வையுங்கள். நல்லது.
ஆசீர்வாதம்:
சுயத்தின் நிலையின் (சுவ-ஸ்திதி) மூலமாக அனைத்துச்
சூழ்நிலைகளையும் கடந்து செல்லும் 'நிராகாரி' (உருவமற்றவர்)
மற்றும் 'அலங்காரி' (குணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்) ஆகுக.
யார் அலங்காரியாக இருக்கின்றார்களோ, அவர்கள் ஒருபோதும் உடல்
அகந்தை கொண்டவர்களாக ஆக முடியாது. நிராகாரியாகவும், (சக்திகளின்)
அலங்காரியாகவும் இருப்பதே 'மன்மனாபவ' (மனதால் ஒரு தந்தையை
நினைவு செய்வது) மற்றும் 'மத்யாஜிபவ' (ஆஸ்தியை நினைவு செய்வது)
என்பதாகும். இத்தகைய சுயத்தின்-நிலையில் எப்போதும்
நிலைத்திருக்கும் போது, அனைத்துச் சூழ்நிலைகளையும் மிக எளிதாகக்
கடந்து விடலாம், இதன் மூலம் பல பழைய சுபாவங்கள் முடிவுக்கு
வரும். தன்னைப் 'ஆத்மா' என்ற உணர்வில் பார்ப்பதன் மூலம் சுபாவம்
தொடர்பான விஷயங்கள் நீங்கிவிடும் மற்றும் எதிர்கொள்வதற்கான
அனைத்துச் சக்திகளும் தானாகவே வந்துவிடும்.
சுலோகன்:
சங்கல்பத்தின் ஒரு அடி உங்களுடையதாக இருக்கும்போது, சகயோகம்
செய்வதற்கான ஆயிரம் அடி என்பது தந்தையுடையதாக இருக்கும்.
அவ்யக்த சமிக்ஞை : எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்
என்றால் தங்களது சுபாவத்தை சரளமானதாக ஆக்கிக் கொள்ளுங்கள்,
சகிப்புத்தன்மை உடையவர் ஆகுங்கள்.
யார் தங்களின் அல்லது மற்றவர்களின் கடந்த காலத்தைப் பார்க்காமல்,
ஒரு நொடியில் 'ஃபுல் ஸ்டாப்' (முற்றுப் புள்ளி) வைக்கின்றார்களோ,
அவர்களே சரளத்தன்மை கொண்டவர்கள். அத்தகை யவர்களின் கண்கள்,
முகம் மற்றும் நடத்தையில் இனிமையும், மகிழ்ச்சியும்
வெளிப்படையாகத் தெரியும். இத்தகைய சரளத்தன்மை நிலையில்
இருப்பவர்கள் மற்றவர்களையும் சரளத்தன்மை உடையவர்களாக
மாற்றிவிடுவார்கள். சரளத்தன்மை என்பது ஒரு விஷயத்தைக் கேட்டாலோ,
பார்த்தாலோ அல்லது செய்தாலோ, அதிலுள்ள சாரத்தை மட்டும்
எடுத்துக்கொள்வதாகும்.