07-07-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! நீங்கள் மிக ராயலான (அரசனாகக் கூடிய) மாணவர்கள், நீங்கள் தந்தை, ஆசிரியர் மற்றும் சத்குருவின் நினைவில் இருக்க வேண்டும், அலௌகீக சேவை செய்ய வேண்டும்.

கேள்வி:
யார் தன்னை எல்லையற்ற நடிகன் என்று புரிந்து கொண்டு நடக்கிறார்களோ அவர்களது அடையாளத்தை கூறுங்கள்?

பதில்:
அவர்களது புத்தியில் எந்த சூட்சும மற்றும் ஸ்தூல தேகதாரியின் நினைவும் இருக்காது. அவர்கள் ஒரு தந்தையை மற்றும் சாந்திதாம் வீட்டை நினைவு செய்து கொண்டே இருப்பார்கள். ஏனெனில் ஒருவரிடத்தில் பலியாகியிருப்பார்கள். எவ்வாறு தந்தை முழு உலகிற்கும் சேவை செய் கின்றாரோ, பதீதமானவர்களை பாவனம் ஆக்குகின்றாரோ, அதே போன்று குழந்தைகளும் தந்தைக்குச் சமமாக உதவியாளர்களாக ஆகிவிடுகின்றனர்.

ஓம் சாந்தி.
முதன் முதல் தந்தை குழந்தைகளுக்கு எச்சரிக்கை கொடுக்கின்றார். இங்கு அமர்ந்திருக்கிறீர்கள் எனில் தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு தந்தையின் முன் அமர்ந்திருக்கிறீர்களா? நான் தந்தையின் முன் அமர்ந்திருக்கிறேன், ஆசிரியரின் முன் அமர்ந்திருக் கிறேன் என்பதையும் புத்தியில் கொண்டு வாருங்கள். முதல் விசயம் - நான் ஆத்மா, தந்தையும் ஆத்மா தான், ஆசிரியரும் ஆத்மா தான், குருவும் ஆத்மா தான். ஒரே ஒருவர் அல்லவா! இந்த புது விசயத்தை நீங்கள் கேட்கிறீர்கள். பாபா, நாம் கல்ப கல்பமாக இதை கேட் கிறோம் என்று நீங்கள் கூறுவீர்கள். ஆக புத்தியில் தந்தை கற்பிக்கின்றார், ஆத்மாவாகிய நான் இந்த கர்மேந்திரி யங்கள் மூலம் கேட்கிறேன் என்பது நினைவில் இருக்க வேண்டும். இந்த ஞானம் இந்த நேரத்தில் தான் உயர்ந்ததிலும் உயர்ந்த பகவானின் மூலம் குழந்தைகளாகிய உங்களுக்கு கிடைக்கிறது. அவர் அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தை ஆவார், அவர் ஆஸ்தி கொடுக்கின்றார். எந்த ஞானம் கொடுக்கின்றார்? அனைவருக்கும் சத்கதி அளிக்கின்றார், அதாவது வீட்டிற்கு அழைத்துச் செல் கின்றார். எத்தனை பேரை அழைத்துச் செல்வார்? போன்ற அனைத்தையும் நீங்கள் அறிவீர்கள். கொசுக்களைப் போன்று அனைத்து ஆத்மாக்களும் செல்ல வேண்டும். சத்யுகத்தில் ஒரே ஒரு தர்மம், தூய்மை, சுகம், சாந்தி அனைத்தும் இருக்கும். குழந்தைகளாகிய நீங்கள் சித்திரங்களின் மூலம் புரிய வைப்பது மிகவும் எளிதாகும். குழந்தைகளும் வரைபடத்தின் (மேப்) மூலம் புரிந்து கொண்டு விடுவர் அல்லவா! இது இங்கிலாந்து, பிறகு அது நினைவில் நின்று விடுகிறது. இதுவும் அது போன்று தான். ஒவ்வொரு மாணவருக்கும் புரிய வைக்க வேண்டியிருக்கிறது. மகிமையும் ஒரே ஒருவருக்குத் தான் - சிவாய நமஹ: உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான். படைக்கும் தந்தை வீட்டில் பெரியவராக இருப்பார் அல்லவா! அது எல்லைக்குட்பட்டது, இது முழு எல்லையற்ற வீட்டின் தந்தை ஆவார். பிறகு இவர் ஆசிரியராகவும் இருக்கின்றார். உங்களுக்கு கற்பிக்கின்றார். ஆக குழந்தைகளாகிய உங்களுக்குள் மிகுந்த குஷியிருக்க வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் ராயலானவர்கள். நான் சாதாரண சரீரத்தில் வருகின்றேன் என்று தந்தை கூறுகின்றார். பிரஜாபிதா பிரம்மாவும் அவசியம் இங்கு தான் தேவை. அவரின்றி காரியம் எப்படி நடைபெறும்? மேலும் வயோதிகரும் தேவை அல்லவா! ஏனெனில் தத்தெடுக்கப்பட்டவர் அல்லவா! ஆக வயோதிகர் தேவைப்படுகிறார். குழந்தைகளே, குழந்தைகளே என்று கிருஷ்ணர் கூற முடியாது. வயதானவர்கள் கூறும் பொழுது அழகாக இருக்கிறது. குழந்தையை யாரும் பாபா என்று கூறமாட்டார்கள். ஆக நான் யார் முன் அமர்ந்திருக்கிறேன்? என்பது குழந்தைகளின் புத்தியில் வர வேண்டும். உள்ளுக்குள் குஷி ஏற்பட வேண்டும். மாணவர்கள் எங்கு அமர்ந்திருந்தாலும் அவர்களது புத்தியில் தந்தையின் நினைவு வருகிறது. ஆசிரியரும் நினைவிற்கு வருகிறது. அவர்களுக்கு தந்தை ஒருவராக, ஆசிரியர் வேறு ஒருவராக இருப்பர். உங்களுக்கு ஒருவரே தந்தை, ஆசிரியர், குருவாக இருக்கின்றார். இந்த பாபாவும் மாணவராக இருக்கின்றார். படித்துக் கொண்டிருக்கின்றார். கடனாக ரதத்தை (சரீரத்தை) கொடுத்திருக்கின்றார், அவ்வளவு தான், வேறு எந்த வித்தியாசமும் கிடையாது. மற்றபடி உங்களைப் போன்று தான் இருக்கின்றார். நீங்கள் என்ன புரிந்திருக்கிறீர்களோ அதைத் தான் இவரது ஆத்மாவும் புரிந்திருக்கிறது. முழுமையாக பலி ஆவது அந்த ஒருவருக்குத் தான். அவரைத் தான் பிரபு, ஈஸ்வரன் என்று கூறுகின்றனர். தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு ஒரு பரமாத்மாவை நினைவு செய்யுங்கள், மற்ற அனைத்து சூட்சும அல்லது ஸ்தூல தேகதாரி களை மறந்து விடுங்கள் என்றும் கூறுகின்றார். நீங்கள் சாந்திதாமத்தில் வசிக்கக் கூடியவர்கள். நீங்கள் எல்லையற்ற நடிப்பு நடிக்கக் கூடியவர்கள். இந்த விசயங்களை வேறு யாரும் அறியவில்லை. உலகில் யாருக்கும் தெரியாது, இங்கு யார் வருகிறார்களோ அவர்கள் அறிந்து கொள்கின்றனர். மேலும் தந்தையின் சேவைக்காக வந்து செல்கின்றனர். ஈஸ்வரனின் உதவி யாளர்களாக ஆகிவிடுகின்றனர் அல்லவா! தந்தையும் உதவி செய்வதற்காக வந்திருக்கின்றார். பதீதமானவர்களை பாவனம் ஆக்கும் உதவி செய்கின்றார். இராஜ்யத்தை இழந்து பிறகு எப்பொழுது துக்கமானவர்களாக ஆகிறீர்களோ அப்பொழுது தந்தையை அழைக்கிறீர்கள். யார் இராஜ்யம் கொடுத்திருந்தாரோ அவரைத் தான் அழைப்பர்.

தந்தை சுகதாமத்திற்கு எஜமானர்களாக ஆக்குவதற்காக வந்திருக்கின்றார் என்பதை குழந்தை களாகிய நீங்கள் அறிவீர்கள். உலகில் இது யாருக்கும் தெரியாது. பாரதவாசிகள் அனைவரும் ஒரே தர்மத்தைச் சார்ந்தவர்கள் தான். இது தான் முக்கிய தர்மம் ஆகும். ஆக எப்பொழுது அது இல்லாமல் போய் விடுகிறதோ அப்பொழுது தான் தந்தை வந்து ஸ்தாபனை செய்கின்றார். எந்த பகவானை முழு உலகமும் அல்லா, இறைவன் என்று கூறி அழைக்கிறார்களோ, அவர் இங்கு நாடகப்படி முந்தைய கல்பத்தைப் போன்று வந்திருக்கின்றார். இது கீதையின் நாடகத்தின் ஒரு பாகமாகும். இதில் தந்தை வந்து ஸ்தாபனை செய்கின்றார். பிராமணன் மற்றும் தேவி தேவதா ..... என்றும் பாடப்படுகிறது, சத்திரியர் என்று கூறுவது கிடையாது. பிரமாணன் தேவி தேவதாய நமஹ என்று கூறுகின்றனர். ஏனெனில் சத்திரியர்கள் இரண்டு கலைகள் குறைந்தவர்களாக ஆகிவிடு கின்றனர் அல்லவா! புது உலகம் தான் சொர்க்கம் என்று கூறப்படுகிறது. திரேதாவை புது உலகம் என்று கூறுவது கிடையாது. முதன் முதலில் சத்யுகத்தில் முற்றிலும் புது உலகமாக இருந்தது. இது பழையதிலும் பழைய உலகமாகும். பிறகு புதிய திலும் புதிய உலகிற்குச் செல்வீர்கள். நாம் இப்பொழுது அந்த உலகிற்குச் செல்கிறோம், அதனால் நாம் நரனிலிருந்து நாராயணனாக ஆகின்றோம் என்று குழந்தைகள் கூறுகிறீர்கள். நாம் சத்திய நாராயணன் கதையைக் கேட்கிறோம். இளவரசர் ஆகக் கூடிய கதை என்று கூறுவது கிடையாது. சத்திய நாராயணனின் கதையாகும். நாராயணன் தனிப்பட்டவர் என்று அவர்கள் நினைக்கின்றனர். ஆனால் நாராயணனின் வாழ்க்கைச் சரித்திரம் என்று ஏதுமில்லை. ஞான விசயம் அதிகம் இருக்கிறது அல்லவா! அதனால் தான் 7 நாட்கள் கொடுக்கப்படுகிறது. 7 நாட்கள் பாடம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் இங்கேயே இருந்து விட வேண்டும் என்பது கிடையாது. இல்லையெனில் பட்டி என்று சாக்கு கூறி பலர் வந்து விடுவர். படிப்பு அதிகாலை மற்றும் மாலை யில் நடைபெறுகிறது. மதிய நேரம் வாயுமண்டலம் நன்றாக இருப்பது கிடையாது. இரவிலும் 10 மணி முதல் 12 மணி வரை முற்றிலும் கெட்ட நேரமாகும். இங்கு குழந்தைகளாகிய நீங்களும் நினைவில் இருந்து சதோ பிரதானம் ஆவதற்கான முயற்சி செய்ய வேண்டும். அங்கு முழு நாளும் காரியம், தொழிலில் இருக்கின்றீர்கள். தொழில் போன்றவை செய்தாலும் மிக நல்ல வேலை பெறுவதற்காக படிக்கவும் செய்கின்றனர். இங்கும் நீங்கள் படிக்கிறீர்கள், படிப்பு கற்பிக்கும் ஆசிரியரை நீங்கள் நினைவு செய்ய வேண்டும். ஆசிரியர் என்று புரிந்து கொண்டு நினைவு செய்தாலும் மூவரும் ஒன்றாக நினைவிற்கு வந்து விடுவர் - தந்தை, ஆசிரியர், குரு. உங்களுக்கு மிகவும் எளிது, ஆகையால் உடனேயே நினைவிற்கு வந்து விட வேண்டும். இவர் நமது பாபா வாகவும் இருக்கின்றார், ஆசிரியர் மற்றும் குருவாகவும் இருக் கின்றார். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் தந்தை ஆவார், அவர் மூலம் நாம் சொர்க்கத்தின் ஆஸ்தி அடைந்து கொண்டிருக்கிறோம். நாம் அவசியம் சொர்க்கத்திற்கு செல்வோம். அவசியம் சொர்க்கம் ஸ்தாபனை ஏற்பட வேண்டும். உயர்ந்த பதவி அடைவதற்காகத் தான் நீங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். இதையும் நீங்கள் அறிவீர்கள். மனிதர்களுக்கும் தெரியவரும், உங்களது ஞான ஒலி பரவிக் கொண்டே இருக்கும். பிராமணர்களாகிய உங்களது அலௌகீக தர்மம் - ஸ்ரீமத் படி அலௌகீக சேவைக்கு தயாராக இருப்பதாகும். நீங்கள் ஸ்ரீமத் மூலம் எவ்வளவு உயர்ந்த காரியங்களை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதும் மனிதர்களுக்கு தெரிந்து விடும். உங்களைப் போன்று அலௌகீக சேவை யாரும் செய்ய முடியாது. பிராமண தர்மத்தைச் சார்ந்த நீங்கள் தான் இப்படிப்பட்ட காரியம் செய்கிறீர்கள். ஆக அப்படிப்பட்ட காரியத்தில் ஈடுபட்டு விட வேண்டும், இதிலேயே பிசியாக இருக்க வேண்டும். தந்தையும் பிசியாக இருக்கின்றார் அல்லவா! நீங்கள் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் பஞ்சாயத்துக்களை சேர்த்து பாலனை செய்து கொண்டிருக்கின்றனர். இங்கு நீங்கள் குப்த வேடத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் குப்தமான, யாருக்கும் தெரியாத, அகிம்சை போர்வீரர்களாக இருக்கிறீர்கள், இதன் பொருளையும் யாரும் புரிந்து கொள்வது கிடையாது. நீங்கள் இரட்டை அகிம்சை சேனைகளாக இருக்கிறீர்கள். மிகப் பெரிய இம்சை இந்த விகாரமாகும், அது தூய்மையை இழக்க வைக்கிறது. . இதைத் தான் வெல்ல வேண்டும். பகவானின் மகாவாக்கியம் - காமம் மிகப் பெரிய எதிரி. இதை வெல்வதன் மூலம் தான் நீங்கள் உலகை வெல்ல முடியும். இந்த லெட்சுமி நாராயணன் உலகை வென்றவர்கள் அல்லவா! பாரதம் ஜெகத்ஜீத் ஆக இருந்தது. இவர்கள் உலகிற்கு எஜமானர்களாக எப்படி ஆனார்கள்? இதையும் வெளியில் உள்ளவர்கள் புரிந்து கொள்ள முடியாது. இதை புரிந்து கொள்வதற்கு புத்தி மிகவும் விசாலமாக இருக்க வேண்டும். பெரிய பெரிய தேர்விற்காகப் படிப்பவர்களது புத்தி விசாலமாக இருக்கும் அல்லவா! நீங்கள் ஸ்ரீமத் மூலம் தங்களது இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கிறீர்கள். உலகில் அமைதி இருந்தது அல்லவா! வேறு எந்த இராஜ்யமும் அப்பொழுது இல்லை என்பதை நீங்கள் யாருக்கு வேண்டுமென்றாலும் புரிய வைக்க முடியும். சொர்க்கத்தில் அசாந்தி இருக்கவே முடியாது. சொர்க்கத்தை தான் அல்லாவின் பூந்தோட்டம் என்று கூறுகின்றனர். பூந்தோட்டம் மட்டுமே இருக்காது. மனிதர்களும் தேவை அல்லவா! நாம் பூந்தோட்டத்திற்கு எஜமானர்களாக ஆகிக் கொண்டிருக் கிறோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு போதை இருக்க வேண்டும்! மேலும் உயர்ந்த சிந்தனைகள் இருக்க வேண்டும்! நீங்கள் வெளி யிலுள்ள எந்த சுகத்தையும் விரும்புவது கிடையாது. இந்த நேரத்தில் நீங்கள் முற்றிலும் எளிமையாக இருக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் மாமியார் வீட்டிற்குச் செல்கிறீர்கள். இது தாய்வீடாகும். இங்கு உங்களுக்கு இரண்டு தந்தைகள் கிடைத்திருக்கின்றனர். ஒருவர் நிராகார மானவர், உயர்ந்ததிலும் உயர்ந்தவர். மற்றொருவர் சாகாரமானவர், (பிரம்மா) அவரும் உயர்ந்த திலும் உயர்ந்தவர் ஆவார். இப்பொழுது நீங்கள் மாமியார் வீடாகிய விஷ்ணுபுரிக்கு செல்கிறீர்கள். அதை கிருஷ்ணபுரி என்று கூறுவது கிடையாது. குழந்தைக்கென்று புரி (நகரம்) இருக்காது. விஷ்ணுபுரி என்றால் லெட்சுமி நாராயணன் புரி (இராஜ்யம்) ஆகும். உங்களுடையது இராஜயோகமாகும். ஆக அவசியம் நரனிலிருந்து நாராயணனாக ஆவீர்கள்.

குழந்தைகளாகிய நீங்கள் இறைவனின் உண்மையிலும் உண்மையான உதவியாளர்கள். குறைந்த திலும் குறைந்தது 8 மணி நேரம் ஆத்ம அபிமானியாக இருப்பதற்கான முயற்சி செய்பவர்களைத் தான் உண்மையான இறை உதவியாளர்கள் என்று பாபா கூறுகின்றார். எந்த கர்மபந்தனமும் இருக்கக் கூடாது, அப்பொழுது தான் உதவியாளர் ஆக முடியும், மேலும் கர்மாதீத நிலை ஏற்படும். நரனிலிருந்து நாராயணன் ஆக வேண்டுமென்றால் கர்மாதீத நிலை அவசியம் தேவை. கர்மபந்தனம் இருந்தால் அவசியம் தண்டனை அடைய வேண்டியிருக்கும். நினைவிற்கான முயற்சி மிகவும் கடுமையானது என்று குழந்தைகள் சுயம் நினைக்கின்றனர். யுக்தி மிகவும் எளிதானது, தந்தையை மட்டும் நினைவு செய்தால் போதும். பாரதத்தின் பழமையான யோகா மிகவும் பிரபலமானது. யோகாவிற்கானது தான் ஞானமாகும், அதை தந்தை வந்து கற்றுக் கொடுக் கின்றார். கிருஷ்ணர் யோகா கற்றுக் கொடுப்பது கிடையாது. பிறகு கிருஷ்ணருக்கு சுயதரிசன சக்கரத்தை கொடுத்து விட்டனர். அந்த சித்திரமும் தவறானது. இப்பொழுது நீங்கள் எந்த சித்திரத்தையும் நினைவு செய்யக் கூடாது. அனைத்தையும் மறந்து விடுங்கள். யாரிடத்திலும் புத்தி செல்லக் கூடாது, லைன் (புத்தி) தெளிவாக இருக்க வேண்டும். இது படிப்பிற்கான நேரமாகும். உலகை மறந்து தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்ய வேண்டும், அப்பொழுது தான் பாவங்கள் அழியும். தந்தை கூறுகின்றார் - நீங்கள் முதன் முதலில் அசரீரியாக வந்தீர்கள், மீண்டும் நீங்கள் செல்ல வேண்டும். நீங்கள் ஆல்ரவுண்டர்களாக இருக்கிறீர்கள். அவர்கள் எல்லைக்குட்பட்ட நடிகர்கள், நீங்கள் எல்லையற்றவர்கள். நாம் பலமுறை நடிப்பு நடித்திருக்கிறோம் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். பலமுறை நீங்கள் எல்லை யற்ற எஜமானர்களாக ஆகியிருக்கிறீர்கள். இந்த எல்லையற்ற நாடகத்தில் சிறிய சிறிய நாடகங் களும் பலமுறை நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. சத்யுகத்திலிருந்து கலியுகம் வரை என்னவெல்லாம் நடந்ததோ அது திரும்பவும் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. மேலே இருந்து கடைசி வரைக்கும் உங்களது புத்தியில் இருக்கிறது. மூலவதனம், சூட்சுமவதனம் மற்றும் சிருஷ்டிச் சக்கரம், அவ்வளவு தான். வேறு எந்த தாமத்திலும் (வதனம்) உங்களுக்கு வேலை கிடையாது. உங்களது தர்மம் மிகவும் சுகம் கொடுக்கக் கூடியது. அதற்கான நேரம் வரும் பொழுது அது வந்து விடும். வரிசைக்கிரமமாக எப்படியெல்லாம் வந்தீர்களோ அதே போன்று வருவீர்கள். நான் மற்ற தர்மத்தினரைப் பற்றி என்ன வர்ணணை செய்வது? உங்களுக்கு ஒரு தந்தையின் நினைவு மட்டுமே இருக்க வேண்டும். சித்திரங்கள் போன்ற அனைத் தையும் மறந்து ஒரு தந்தையை நினைவு செய்ய வேண்டும். பிரம்மா, விஷ்ணு, சங்கரையும் அல்ல, ஒருவரை மட்டுமே (நினைக்க வேண்டும்) ! பரமாத்மா லிங்க வடிவத்தில் இருப்பதாக அவர்கள் நினைக்கின்றனர். லிங்க வடிவத்தில் ஏதாவது ஒரு பொருள் எப்படி இருக்க முடியும்? அவர் ஞானம் எப்படி கூற முடியும்? நாம் கேட்பதற்காக பிரேரணை என்ற ஸ்பீக்கர் மூலம் கூறுவாரா என்ன? பிரேரணையின் மூலம் எதுவும் நடக்காது. சங்கருக்கு பிரேரணை கொடுக்கிறார் என்பதும் கிடையாது. இவை யனைத்தும் நாடகத்தில் முன்கூட்டியே பதிவாகி யிருக்கிறது. விநாசம் ஏற்பட்டே ஆக வேண்டும். எவ்வாறு ஆத்மாக்களாகிய நீங்கள் சரீரத்தின் மூலம் பேசுகிறீர் களோ, அதே போன்று பரமாத்மாவும் குழந்தைகளாகிய உங்களிடம் பேசுகின்றார். அவரது பாகமே தெய்வீகமானது, அலௌகீகமானது. பதீதமானவர்களை பாவனம் ஆக்கக் கூடியவர் ஒரே ஒரு தந்தை ஆவார். எனது பாகம் அனைவரையும் விட தனிப்பட்டது என்று கூறுகின்றார். கல்பத்திற்கு முன்பு யார் வந்தார்களோ அவர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். எதுவெல்லாம் கடந்து முடிந்ததோ, நாடகம். இதில் சிறிதும் மாற்றம் கிடையாது. முயற்சிக்கான எண்ணம் இருந்தால் போதும். நாடகப்படி தான் நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் என்றால் பிறகு பதவியும் குறைந்து விடும். முயற்சியை தீவிரப்படுத்த வேண்டும். நாடகம் என்று விட்டு விடக் கூடாது. தனது சார்ட்டை பார்த்துக் கொண்டே இருங்கள். அதிகப்படுத்திக் கொண்டே இருங்கள். எனது சார்ட் முன்னேற் றத்தில் செல்கிறதா? குறையவில்லை தானே? என்று குறிப்பெடுங்கள். மிகவும் எச்சரிக்கையுடன் தேவை. இங்கு உங்களுக்கு பிராமணர்களின் சகவாசம் கிடைக்கிறது. வெளியில் அனைத்தும் கெட்ட சகவாசமாகும். அவர்கள் அனைத்தும் தலைகீழாகத் தான் கூறுவார்கள். இப்பொழுது தந்தை உங்களை கெட்ட சகவாசத்திலிருந்து நீக்குகின்றார்.

மனிதர்கள் கெட்ட சகவாசத்தில் வந்து தனது பழக்க வழக்கம், நடைமுறை போன்ற அனைத்தை யும் மாற்றியமைத்து விட்டனர். தேசம், வேடத்தை மாற்றி விட்டனர். இதுவும் தனது தர்மத்தை நிந்தனை செய்வது போன்றதாகும். எப்படியெல்லாம் முடிவெட்டிக் கொள்கின்றனர் என்பதைப் பாருங்கள்! தேக அபிமானம் ஏற்பட்டு விடுகிறது. முடிவெட்டிக் (சிகை அலங்காரம்) கொள்வதற்காக 100-150 ரூபாய் கொடுக்கின்றனர். இது தான் அதிகமான தேக அபிமானம் என்று கூறப்படுகிறது. பிறகு அவர்களால் ஒருபொழுதும் ஞானம் பெற முடியாது. மிகவும் எளிமையாக இருங்கள் என்று பாபா கூறுகின்றார். விலையுர்ந்த சேலை கட்டிக் கொள்வதாலும் தேக அபிமானம் வந்து விடுகிறது. தேக அபிமானம் நீக்குவதற்காக அனைத்தையும் லேசாக (எளிமையாக) ஆக்கிக் கொள்ள வேண்டும். நல்ல நவீன பொருட்கள் தேக அபிமானத்தில் கொண்டு வருகின்றன. நீங்கள் இந்த நேரத்தில் வனவாசத்தில் இருக்கிறீர்கள் அல்லவா! ஒவ்வொரு பொருளின் மீதும் இருக்கும் பற்றுதலை நீக்க வேண்டும். மிக சாதாரணமாக இருக்க வேண்டும். திருமணம் போன்றவைகளில் கலர் ஆடையை அணிந்து செல்லுங்கள், பெயரளவிற்கு (ஆடம்பரம் இல்லாமல்) அணிந்து கொள்ளுங்கள், வீட்டிற்கு வந்ததும் மாற்றி விடுங்கள். நீங்கள் சப்தங்களை கடந்து செல்ல வேண்டும். வானபிரஸ்திகள் வெள்ளை ஆடையுடன் இருப்பர். சிறியவர்கள், பெரியவர்கள் ஒவ்வொருவரும் வானபிரஸ்திகளாக இருக்கிறீர்கள். சிறிய குழந்தைக்கும் சிவபாபாவின் நினைவு தான் ஏற்படுத்த வேண்டும். இதில் தான் நன்மை இருக்கிறது. நாம் இப்பொழுது சிவபாபாவிடம் செல்ல வேண்டும், அவ்வளவு தான். நல்லது.

இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) எனது எந்த நடத்தையும் தேக அபிமானமுடையதாக இருக்கக் கூடாது என்பதில் சதா கவனமுடன் இருக்க வேண்டும். மிக எளிமையாக இருக்க வேண்டும். எந்த பொருளின் மீதும் பற்று வைக்கக் கூடாது. கெட்ட சகவாசத்திலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

2) நினைவிற்கான முயற்சியின் மூலம் அனைத்து கர்மபந்தனங்களையும் நீக்கி கர்மாதீத நிலை அடைய வேண்டும். குறைந்ததிலும் குறைந்தது 8 மணி நேரம் ஆத்ம அபிமானியாக இருந்து உண்மையிலும் உண்மையான இறை உதவியாளர்களாக ஆக வேண்டும்.

வரதானம்:
விசாலமான புத்தி, விசாலமான உள்ளத்துடன் நம்மவர் எனும் அனுபவத்தை செய்விக்கும் மாஸ்டர் படைப்பாளர் ஆகுக

மாஸ்டர் படைப்பாளரின் முதல் படைப்பு - இந்த தேகம் யார் இந்த தேகத்தின் தலைவனாகி முழு வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள் தனது அன்பான தொடர்பின் மூலமாக அனைவருக்கும் இவர் நம்மபவர் எனும் அனுபவத்தை செய்விப்பார். அந்த ஆத்மாவின் தொடர்பால் சுகம் வள்ளல் தன்மை, அமைதி, அன்பு, ஆனந்தம், ஒத்துழைப்பு, தைரியம், ஊக்கம், உற்சாகம் எனும் ஏதேனும் ஒரு சிறப்புகள் அனுபவம் செய்வார்கள். அவர்களையே விசாலமான புத்தி, விசாலமான உள்ளம் கொண்டவர் என்று சொல்லப்படும்.

சுலோகன்:
ஊக்கம், உற்சாகம் எனும் சிறகுகள் மூலமாக சதா பறக்கும் கலையினை அனுபவம் செய்து கொண்டே செல்லுங்கள்

அவ்யக்த சமிக்ஞை: எண்ணங்களின் சக்தியை சேமிப்பு செய்து சிறந்த சேவைக்கு கருவி ஆகுங்கள்.

தன்னை உயர்ந்த எண்ணங்களால் முழுமை பெறச் செய்வதில் டிரஸ்டி ஆகுங்கள். டிரஸ்டி ஆவதெனில், டபுள் லைட் பரிஸ்தா ஆவதாகும். அவ்வாறான குழந்தைகளின் உயர்ந்த எண்ணம் ஒவ்வொன்றும் பயனுள்ளதாகும். குழந்தைகளின் உயர்ந்த ஒரு எண்ணம் ஆயிரம் உயர்ந்த எண்ணங்களின் பலனை தந்தை மூலமாக பெறச் செய்யும். ஒன்றுக்கு ஆயிரம் மடங்கு கிடைக்கப்பெறும்.