07-08-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! அழியாத ஞான
ரத்தினங்களை தாரணை (நடைமுறையில் கடைபிடித்து) செய்து இப்பொழுது
நீங்கள் ஏழையிலிருந்து செல்வந்தர் ஆக வேண்டும். ஆத்மாவாகிய
நீங்கள் (ரூப் பஸந்த்) ஞானயோகம் உடையவர்கள் ஆவீர்கள்.
கேள்வி:
எந்த ஒரு சுபபாவனை வைத்து
புருஷார்த்தத்தில் (முயற்சி) எப்பொழுதும் ஈடுபட்டிருக்க
வேண்டும்?
பதில்:
ஆத்மாக்களாகிய நாம் சதோபிரதானமாக
இருந்தோம். நாமே தான் தந்தையிடமிருந்து சக்தியின் ஆஸ்தி
எடுத்திருந்தோம். இப்பொழுது மீண்டும் எடுத்து கொண்டிருக்கிறோம்
என்ற இதே சுபபாவனையை எப்பொழுதும் வைக்க வேண்டும். இதே
சுபபாவனையுடன் புருஷார்த்தம் செய்து சதோபிரதானமாக ஆக வேண்டும்.
எல்லோரும் சதோபிரதானமாக ஆகி விடுவார்களா என்ன என்று அது போல
யோசிக்கக் கூடாது. நினைவு யாத்திரையில் இருப்பதற்கான
புருஷார்த்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும். சேவை மூலம் பலம்
(சக்தி) பெற வேண்டும்.
பாடல்:
இந்த பாவங்களின் உலகத்திலிருந்து..
.. .. ..
ஓம் சாந்தி.
இது படிப்பாகும். ஒவ்வொரு விஷயத்தையும் புரிந்துக் கொள்ள
வேண்டும். மற்ற சத்சங்கங்கள் ஆகியவை எல்லாமே பக்தியினுடையது
ஆகும். பக்தி செய்து செய்து ஏழை ஆகி விட்டுள்ளார்கள். அந்த
ஏழைகள் பிச்சைக்காரர்கள் வேறு விதமானவர்கள். நீங்கள் வேறு
விதமான ஏழைகள் ஆவீர்கள். நீங்கள் செல்வந்தர்களாக இருந்தீர்கள்.
இப்பொழுது ஏழைகளாக ஆகி விட்டுள்ளீர்கள். நாம் செல்வந்தர்களாக
இருந்தோம் என்பது யாருக்குமே தெரியாது. நாம் உலகிற்கு
அதிபதியாக செல்வந்தர்களாக இருந்தோம் என்பதை பிராமணர்களாகிய
நீங்கள் அறிந்துள்ளீர்கள். அமீர்சந்த்-லிருந்து (செல்வந்தர்) ஃபகீர்சந்த்
(ஏழையாக) ஆகியுள்ளீர்கள். இப்பொழுது இது படிப்பு ஆகும். இதை
நல்ல முறையில் படிக்க வேண்டும். தாரணை செய்ய வேண்டும் மற்றும்
தாரணை செய்விப்பதற்கான முயற்சி செய்ய வேண்டும். அவினாஷி (அழியாத)
ஞான ரத்தினங்களை தாரணை செய்ய வேண்டும். ஆத்மா (ரூப்-பஸந்த்)
ஞானம் மற்றும் யோகமுடையது ஆகும் அல்லவா? ஆத்மா தான் தாரணை
செய்கிறது. சரீரமோ அழியக் கூடியதாகும். வேலைக்குதவாத பொருட்கள்
எரிக்கப்படுகிறது. சரீரம் கூட பயன்படாததாக ஆகி விட்டால் அதை
நெருப்பில் எரிக்கிறார்கள். ஆத்மாவை எரிப்பதில்லை. நாம்
ஆத்மாக்கள்!. இராவண இராஜ்யம் ஆனது முதற் கொண்டு மனிதர்கள் தேக
அபிமானத்தில் வந்து விட்டுள்ளார்கள். நான் சரீரம் என்பது உறுதி
ஆகி விடுகிறது. ஆத்மாவோ (அமரர்) அழியாதது. அமரநாத் தந்தை வந்து
ஆத்மாக்களை அமரராக ஆக்குகிறார். அங்கோ தங்களுடைய நேரத்தில்
தங்களுடைய சுய விருப்பப்படி ஒரு சரீரத்தை விட்டு மற்றொன்றை
எடுப்பார்கள். ஏனெனில், ஆத்மா எஜமானனாகும். எப்பொழுது வேண்டுமோ
சரீரத்தை விடுவார்கள். அங்கு சரீரத்தின் ஆயுள் நீண்டதாக
இருக்கும். பாம்பின் உதாரணம் உள்ளது. இது உங்களுடைய அநேக
பிறவிகளின் கடைசி ஜன்மத்தின் பழைய சட்டை (ஆடை) ஆகும் என்பதை
இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். 84 பிறவிகள் முழுமையாக
எடுத்துள்ளீர்கள். ஒரு சிலருக்கு 60-70 பிறவிகள் கூட இருக்கும்.
ஒரு சிலருக்கு 50 இருக்கும். திரேதாவில் அவசியம் ஆயுள் கொஞ்ச
நஞ்சம் குறைந்து விடுகிறது. சத்யுகத்தில் முழு ஆயுள் இருக்கும்.
இப்பொழுது நாம் முதன் முதலில் சத்யுகத்தில் வர வேண்டும்
என்பதற்காக புருஷார்த்தம் (முயற்சி) செய்ய வேண்டும். அங்கு
வலிமை இருக்கும். எனவே அகால மரணம் ஆவது இல்லை. சக்தி குறைந்து
விடும் பொழுது ஆயுள் கூட குறைந்து விடுகிறது. இப்பொழுது எப்படி
தந்தை சர்வ சக்திவான் ஆவாரோ உங்களுடைய ஆத்மாவை கூட சக்திவான்
ஆக்குகிறார். ஒன்று தூய்மையாக ஆக வேண்டும், அடுத்து
நினைவி-ருக்க வேண்டும். அப்பொழுது சக்தி கிடைக்கிறது.
தந்தையிடமிருந்து சக்தியின் ஆஸ்தி பெறுகிறீர்கள். பாவ ஆத்மாவோ
சக்தி எடுக்க முடியாது. புண்ணிய ஆத்மாவாக ஆகும் பொழுது சக்தி
கிடைக்கிறது. நமது ஆத்மா சதோபிரதானமாக இருந்தது என்பதை சிந்தனை
செய்யுங்கள். எப்பொழுதும் சுப பாவனை வைக்க வேண்டும். அப்படி
யின்றி எல்லோரும் சதோபிரதானமாக இருப்பார்களா என்ன, ஒரு சிலரோ
சதோவாக கூட இருக்க கூடும் அல்லவா? அப்படி அல்ல.. நாம் முதன்
முதலில் சதோபிரதானமாக இருந்தோம் என்று தங்களை உணர்ந்திருக்க
வேண்டும். நிச்சயத்தினால் தான் சதோபிரதானமாக ஆவீர்கள். அப்படி
யின்றி நாங்கள் எப்படி சதோபிரதானமாக ஆக முடியும் என்பதல்ல.
பிறகு நழுவி விடுகிறார்கள். நினைவு யாத்திரையில் இருப்பதில்லை.
கூடுமானவரையும் புருஷார்த்தம் (முயற்சி) செய்ய வேண்டும். தன்னை
ஆத்மா என்று உணர்ந்து சதோபிரதானமாக ஆக வேண்டும். இச்சமயம் எல்லா
மனிதர்களும் தமோபிரதானமாக உள்ளார்கள். உங்களுடைய ஆத்மா கூட
தமோபிரதானமாக உள்ளது. ஆத்மா இப்பொழுது தந்தையின் நினைவின்
மூலமாக சதோபிரதானமாக ஆக வேண்டும். கூடவே சேவையும் செய்தீர்கள்
என்றால் பலன் கிடைக்கும். உதாரணமாக யாராவது சென்டர்
திறக்கிறார்கள் என்றால் அநேகருடைய ஆசீர்வாதங்கள் அவர்களுடைய தலை
மீது வரும். மனிதர் கள் யார் வந்தாலும் ஓய்வெடுக்கட்டும்
என்பதற்காக சத்திரம் கட்டுகிறார்கள். ஆத்மா குஷி அடையும் அல்லவா?
இருப்பவர்களுக்கு ஓய்வு கிடைக்கிறது என்றால் அதனுடைய ஆசீர்வாதம்
சத்திரம் கட்டுபவர்களுக்கு கிடைக்கிறது. பிறகு விளைவு என்னவாக
இருக்கும். அடுத்த பிறவியில் அவர் சுகமாக இருப்பார். ஹாஸ்பிடல்
திறந்து கொடுத்திருந்தார் என்றால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
யுனிவர்சிட்டி திறந்து கொடுத்திருந்தார் என்றால் படிப்பு
நன்றாக இருக்கும். சொர்க்கத் திலோ ஆஸ்பத்திரிகள் ஆகியவை
இருக்காது. இங்கு நீங்கள் புருஷார்த்தத் தினால் 21 பிறவி
களுக்கான (பிராலப்தத்தை) பாக்கியத்தை அடைகிறீர்கள். மற்றபடி
அங்கு ஆஸ்பத்திரி, கோர்ட், போலீஸ் ஆகிய எதுவுமே இருக்காது.
இப்பொழுது நீங்கள் சுகதாமத்திற்குச் செல்கிறீர்கள். அங்கு
மந்திரி கூட இருப்பதில்லை. யார் சுயம் உயர்ந்ததிலும் உயர்ந்த
மகாராஜா மகாராணி ஆகிறார் களோ அவர்கள் மந்திரியின் ஆலோசனையைப்
பெறுவார்களா என்ன? நடைமுறை அறிவு இல்லாத பொழுது, விகாரங்களில்
விழும் பொழுது, அப்பொழுது தான் ஆலோசனை கிடைக்கிறது. இராவண
இராஜ்யத்தில் முற்றிலுமே அறிவற்றவர்களாக அல்ப புத்தி
உள்ளவர்களாக ஆகி விடுகிறார்கள். எனவே விநாசத்திற்கான வழி தேடிக்
கொண்டே இருக்கிறார்கள். நாங்கள் உலகத்தை மிகவும் உயர்ந்ததாக
ஆக்குகிறோம் என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் இது இன்னுமே
கீழே விழுந்து கொண்டே செல்கிறார்கள். இப்பொழுது விநாசம்
எதிரிலேயே உள்ளது.
நாம் வீடு செல்ல வேண்டும் என்பதை குழந்தைகளாகிய நீங்கள்
அறிந்துள்ளீர்கள். நாம் பாரதத்திற்கு சேவை செய்து தெய்வீக
ராஜ்யத்தை ஸ்தாபனை செய்கிறோம். பிறகு நாம் ஆட்சி புரிவோம் (ஃபாலோ
ஃபாதர்) தந்தையைப் பின்பற்றுங்கள் என்று பாடவும் படுகிறது .ஃபாதர்
ஷோஸ் ஸன், சன் ஷோஸ் ஃபாதர் - தந்தை குழந்தைகளை
வெளிப்படுத்துகிறார். குழந்தைகள் தந்தையை
வெளிப்படுத்துகிறார்கள். இச்சமயம் சிவபாபா பிரம்மாவின் உடலில்
வந்து கற்பிக்கிறார் என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள்.
அவ்வாறே தான் புரிய வைக்க வேண்டும். நாங்கள் பிரம்மாவை பகவான்
அல்லது தேவதை ஆகியோர் என்று ஏற்றுக் கொள்வதில்லை. இவரோ பதீதமாக
(தூய்மையற்றவராக) இருந்தார். தந்தை தூய்மையற்ற சரீரத்தில்
பிரவேசித்துள்ளார். விருட்சத்தில் பாருங்கள் மேலே உச்சியில்
நின்றுள்ளார் அல்லவா? பதீதமாக இருக்கிறார். பிறகு கீழே பாவன
மாக ஆவதற்காக தபஸ்யை செய்து பிறகு தேவதை ஆகிறார். தபஸ்யா
செய்பவர்கள் பிராமணர் கள் ஆவார்கள். பிரம்மா குமார்
குமாரிகளாகிய நீங்கள் அனைவரும் இராஜயோகம் கற்றுக்
கொண்டிருக்கிறீர்கள். எவ்வளவு தெளிவாக உள்ளது. இதில் மிகவும்
நல்ல யோகம் வேண்டும். நினைவில் இருக்கவில்லை என்றால் முரளியில்
கூட அந்த பலம் இருப்பதில்லை. பலம் (சக்தி) கிடைப்பதே
சிவபாபாவின் நினைவில் இருக்கும் பொழுதுதான். நினைவினால் தான்
சதோபிர தானமாக ஆவீர்கள். இல்லையென்றால் தண்டனைகள் வாங்கி பிறகு
குறைவான பதவி அடைந்து விடுவீர்கள். முக்கியமான விஷயம்
நினைவினுடையது ஆகும். அதற்குத் தான் பாரதத்தின் பழைமையான யோகம்
என்று கூறப்படுகிறது. ஞானம் பற்றி யாருக்குமே தெரியாது. இதற்கு
முன்பு ரிஷி முனிவர்கள் படைப்பவர் மற்றும் படைப்பின் முதல் இடை
கடை பற்றி எங்களுக்குத் தெரியாது என்று கூறி கொண்டிருந்தார்கள்.
நீங்கள் கூட இதற்கு முன்பு ஒன்றும் அறியாமல் இருந்தீர்கள்.
இந்த 5 விகாரங்கள் தான் உங்களை முற்றிலுமே ஒரு காசுக்கும்
உதவாதவர்களாக ஆக்கி விட்டுள்ளது. இப்பொழுது இந்த பழைய உலகம்
எரிந்து முற்றிலுமே முடிந்து போக போகிறது. எதுவுமே இருக்க
போவதில்லை. நீங்கள் அனைவருமே வரிசைக்கிரமமாக புருஷார்த்தப்படி
பாரதத்தை சொர்க்கமாக ஆக்குவதற்காக உடல், மனம், பொருளால் சேவை
செய்கிறீர்கள். கண்காட்சியில் கூட உங்களைக் கேட்கும் போது.
அப்பொழுது கூறுங்கள் - பி.கேக்களாகிய நாங்கள் எங்களுடைய உடல்
மனம் பொருளால் ஸ்ரீமத்படி சேவை செய்து இராம இராஜ்யம் ஸ்தாபனை
செய்து கொண்டிருக்கிறோம். காந்தி யடிகள் கூட ஸ்ரீமத் படி
நாங்கள் ராமராஜ்யம் ஸ்தாபனை செய்கிறோம் என்று கூறவில்லை. இங்கோ
இவருக்குள் ஸ்ரீஸ்ரீ 108 - தந்தை அமர்ந்துள்ளார். 108-னுடைய
மாலை கூட உருவாக்குகிறார்கள். மாலையோ பெரியதாக அமைகிறது. அதில்
8-108 பேர் நல்ல உழைப்பு செய்கிறார்கள். நன்றாக உழைப்பவர்கள்
வரிசைக் கிரமமாகவோ நிறைய பேர் உள்ளார்கள். ருத்ர யக்ஞம்
நடக்கும் பொழுது சாலிகிராமங்களுக்கும் பூஜை நடக்கிறது. அவசியம்
கொஞ்சம் சேவை செய்துள்ளார்கள். அதனால் தான் பூஜை ஆகிறது.
பிராமணர்களாகிய நீங்கள் ஆன்மீக சேவாதாரி ஆவீர்கள். அனைவருடைய
ஆத்மாக்களையும் விழிப்படைய செய்கிறார்கள். நான் ஆத்மா ஆவேன்.
இதை மறந்து விடுவதால் தேக அபிமானம் வந்து விடுகிறது. நான்
இன்னார் ஆவேன் என்று நினைக்கிறார்கள். நான் ஆத்மா ஆவேன்.
குறிப்பிட்ட இந்த பெயர் இந்த சரீரத்தினுடையது என்பது
யாருக்காவது தெரியுமா என்ன? ஆத்மாவாகிய நாம் எங்கிருந்து
வருகிறோம் என்பது பற்றி சிறிதளவும் யாருக்கும் சிந்தனை இல்லை.
இங்கு பாகம் ஏற்று நடித்து நடித்து சரீர உணர்வு உறுதிப்பட்டு
விட்டுள்ளது. குழந்தைகளே ! இப்பொழுது அலட்சியத் தன்மையை
விடுங்கள் என்று தந்தை புரிய வைக்கிறார். மாயை மிகவுமே வலிமை
வாய்ந்தது. நீங்கள் யுத்த மைதானத்தில் உள்ளீர்கள். நீங்கள்
ஆத்ம அபிமானி (ஆத்ம உணர்வுடையவராக) ஆகுங்கள். ஆத்மாக்கள்
மற்றும் பரமாத்மாவின் இந்த மேளா (சந்திப்பு) ஆகும். ஆத்மாக்கள்
பரமாத்மா வெகுகாலமாக பிரிந்திருந்தார்கள் என்ற பாடல் உள்ளது.
இதனுடைய பொருள் கூட அவர்களுக்குத் தெரியாது. ஆத்மாக்களாகிய நாம்
தந்தை யுடன் கூட இருப்பவர்கள் என்பதை இப்பொழுது நீங்கள்
அறிந்துள்ளீர்கள். அது ஆத்மாக்களின் வீடாகும் அல்லவா? தந்தையும்
இங்கே இருக்கிறார். அவருடைய பெயர் சிவன் என்பதாகும். சிவ
ஜெயந்தி கூட பாடப்படுகிறது. வேறு எந்த பெயரும் கொடுக்கவே கூடாது.
என்னுடைய உண்மை யான பெயர் கல்யாணகாரி சிவன் என்பதாகும் என்று
தந்தை கூறுகிறார். கல்யாணகாரி ருத்ரன் என்று கூற மாட்டார்கள்.
கல்யாணகாரி சிவன் என்று கூறுகிறார்கள். காசியில் கூட சிவனின்
கோயில் உள்ளது அல்லவா? அங்கு சென்று சாதுக்கள் மந்திரம்
ஜபிக்கிறார்கள். சிவகாசி விஷ்வநாத் கங்கா. காசி கோவிலில்
அமர்த்தி இருக்கும் சிவனுக்கு விஷ்வநாத் என்று கூறு கிறார்கள்
என்று இப்பொழுது தந்தை புரிய வைக்கிறார். இப்பொழுது நானோ
விஷ்வத்திற்கு (உலகத்திற்கு) நாதன் (தலைவன்) கிடையாது.
விஷ்வத்திற்கு நாதன் நீங்கள் ஆகிறீர்கள். நான் ஆவதே இல்லை.
பிரம்ம தத்துவத்தின் நாதன் கூட நீங்கள் ஆகிறீர்கள். அது
உங்களுடைய வீடாகும். அது ராஜதானி ஆகும். என்னுடைய வீடோ ஒரே ஒரு
பிரம்ம தத்துவம் ஆகும். நான் சொர்க்கத்தில் வருவதில்லை. நான்
நாதனும் ஆவதில்லை. சிவபாபா என்று என்னை அழைக் கிறீர்கள்.
என்னுடைய பார்ட்டே பதீதர்களை பாவனமாக ஆக்குவதுதான்.
சீக்கியர்கள் கூட அசுத்தமான துணிகளை துவைப்பவர்.. என்று
கூறுகிறார்கள். ஆனால் அர்த்தம் புரியாமல் உள்ளார்கள். ஏக்
ஓங்கார்.. என்று மகிமையும் பாடுகிறார்கள். அஜோனி என்றால்
பிறப்பு இறப்பு அற்றவர். நானோ 84 பிறவிகள் எடுப்பதில்லை. நான்
இவருக்குள் பிரவேசம் செய்கிறேன். மனிதர் கள் 84 பிறவி கள்
எடுக்கிறார்கள். பாபா என்னுடன் கூட அமர்ந்துள்ளார் என்பதை
இவருடைய ஆத்மா அறிந்துள்ளது. இருந்தாலும் அடிக்கடி நினைவு
மறந்து விடுகிறது. எனக்கு நிறைய உழைக்க வேண்டி உள்ளது என்று,
இந்த தாதாவின் ஆத்மா கூறுகிறது. என் கூடவே அமர்ந்துள்ளார்
என்றாலும் கூட எனது நினைவு நன்றாக இருக்கிறது என்று ஒன்றும்
கிடையாது. ஒன்றாகவே இருக்கிறோம். என் பக்கத்தில் இருக்கிறார்
என்று அறிந்திருக் கிறேன். இந்த சரீரத்திற்கு அவர் எஜமானன் போல
ஆவார். பிறகும் மறந்து விடுகிறேன். பாபாவிற்கு இருப்பதற்காக
இந்த சரீரம் என்ற வீட்டைக் கொடுத்துள்ளேன். மற்றபடி ஒரு
மூலையில் நான் அமர்ந்துள்ளேன். பெரிய மனிதர் ஆவார் அல்லவா?
சிந்தனை செய்கிறேன், பக்கத்தில் எஜமானன் அமர்ந்துள்ளார். இந்த
ரதம் அவருடையது ஆகும். அவர் இதை பராமரிக்கிறார். எனக்கு சிவபாபா
உணவு கூட ஊட்டுகிறார். நான் அவருடைய ரதம் ஆவேன். கொஞ்சமாவது
உபசாரம் செய்வார். இந்த குஷியில் சாப்பிடு கிறேன். இரண்டு -
நான்கு நிமிடங்களுக்குப் பின்னால் மறந்து விடுகிறேன். அப்பொழுது
தான் நினைக்கிறேன். குழந்தைகளுக்கு எவ்வளவு உழைப்பு
தேவைப்படக்கூடும் என்று, எனவே பாபா புரிய வைத்துக் கொண்டே
இருக்கிறார் - கூடுமானவரை தந்தையை நினைவு செய்யுங்கள். மிக மிக
லாபம் உள்ளது. இங்கோ சிறிய விஷயத்தில் கூட தொல்லை அடைந்து
விடுகிறார்கள். பிறகு படிப்பை விட்டு விடுகிறார்கள். பாபா பாபா
என்று கூறி கை விட்டு விடுகிறார்கள். தந்தையை தன்னுடையவராக
ஆக்கிக் கொள்கிறார்கள். ஞானம் கூறுகிறார்கள், கேட்கிறார்கள்.
திவ்ய திருஷ்டி மூலமாக சொர்க்கத்தைப் பார்க்கிறார்கள்.
நடனமாடுகிறார்கள். அகோ! என்னுடைய மாயையே, என்னை கை விட்டு
விடுகிறார்கள். ஓடிப் போய் விடுகிறார்கள். யார் உலகிற்கு
அதிபதியாக ஆக்குகிறாரோ அவரை கை விட்டு விடுகிறார்கள். பெரிய
பெரிய பெயர்-புகழ் உடையவர்கள் கூட கை விட்டு விடுகிறார்கள்.
இப்பொழுது உங்களுக்கு வழி கூறப்படுகிறது. அப்படியின்றி கையால்
பிடித்துக் கொண்டு கூட்டிச் செல்வார் என்பதல்ல. இந்த கண்களால்
ஒன்றும் குருடர் அல்லவே? ஆம் ! ஞானத்தின் மூன்றாவது கண்
உங்களுக்குக் கிடைக்கிறது. நீங்கள் சிருஷ்டியின் முதல் இடை
கடையை அறிந்துள்ளீர்கள். இந்த 84ன் சக்கரம் புத்தியில் சுற்ற
வேண்டும். உங்களுடைய பெயர் சுயதரிசன சக்கரதாரி என்பதாகும். ஒரு
தந்தையை மட்டுமே நினைவு செய்ய வேண்டும். வேறு யாருடைய நினைவும்
இருக்கக் கூடாது. கடைசியில் இந்த நிலை இருக்க வேண்டும். எப்படி
மனைவிக்கு கணவன் மீது அன்பு இருக்கிறது? அவர்களுடையது சரீர
அடிப்படையிலான அன்பு. இங்கு உங்களுடையது ஆன்மீக அன்பு. நீங்கள்
எழுந்தாலும் அமர்ந்தாலும் கணவர்களுக்கெல்லாம் கணவன், தந்தைகளுக்
கெல்லாம் தந்தையை நினைவு செய்ய வேண்டும். உலகத்தில் கணவன் மனைவி
மற்றும் குடும்பம் தங்களுக்குள் மிகவும் அன்புடன் இருக்கக்
கூடிய வீடுகள் கூட நிறைய இருக்கின்றன. 5-6 குழந்தைகள் ஒன்றாக
இருப்பார்கள். அதிகாலையில் சீக்கிரம் எழுந்து பூஜையில்
அமருவார்கள். எந்த ஒரு சண்டை ஆகியவை வீட்டில் இருக்காது. ஒரே
ரசனையுடன் இருப்பார்கள். ஒரு சில இடங்களிலோ ஒருவர் ராதா
சுவாமியின் சிஷ்யராக இருப்பார், இன்னொருவர் தர்மத்தையே ஏற்று
கொள்ளாதவராக இருப்பார். சிறிய விஷயங்களில் கோபித்து கொள்ள
முற்படுவார்கள். எனவே தந்தை கூறுகிறார் - இந்த கடைசி பிறவியில்
முழுமையான புருஷார்த்தம் (முயற்சி) செய்ய வேண்டும். தங்களுடைய
பணத்தைக் கூட பயனுள்ளதாக ஆக்கி, தங்களுக்குத் தாங்களே நன்மை
செய்யுங்கள். பின் பாரதத்திற்கும் கூட நன்மை ஆகும். நாம்
நம்முடைய ராஜதானியை ஸ்ரீமத் படி மீண்டும் ஸ்தாபனை செய்கிறோம்
என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். நினைவின் யாத்திரை யினால்
மற்றும் சிருஷ்டியின் முதல் இடை கடையை அறிந்து கொள்வதாலேயே
நீங்கள் சக்கரவர்த்தி ராஜா ஆகி விடுவீர்கள். பிறகு இறங்குவது
ஆரம்பமாகி விடும். பிறகு கடைசியில் பாபாவிடம் வந்து விடுவீர்கள்.
ஸ்ரீமத்படி நடப்பதாலேயே உயர்ந்த பதவி அடைவீர்கள். தந்தை ஒன்றும்
தூக்கிலிடுவதில்லை. ஒன்றோ தூய்மை ஆகுங்கள் என்று கூறுகிறார்.
மேலும் தந்தையை நினைவு செய்யுங்கள். சத்யுகத்தில் யாருமே
பதீதமாக (தூய்மையற்றவராக) இருப்பதில்லை. தேவி தேவதைகள் கூட
மிகவும் குறைவாகவே இருப்பார்கள். பிறகு மெல்ல மெல்ல எண்ணிக்கை
கூடுகிறது. தேவதைகளினுடையது சிறிய செடி ஆகும். பிறகு எவ்வளவு
வளர்ந்து விடுகிறது ! ஆத்மாக்கள் எல்லாம் வந்து கொண்டே
இருப்பார்கள். இது அமைந்த அமைக்கப்பட்ட நாடகம் ஆகும்.நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து
கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தாய் தந்தை பாப்தாதாவின்
அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. ஆன்மீக சேவாதாரி ஆகி ஆத்மாக்களை விழித்தெழ செய்யவதற்கான சேவை
செய்ய வேண்டும். உடல் மனம் பொருளால் சேவை செய்து ஸ்ரீமத்படி
இராம இராஜ்யத்தை ஸ்தாபனை செய்வதற்கு (கருவி) நிமித்தமாக ஆக
வேண்டும்.
2. சுயதரிசன சக்கரதாரி ஆகி 84 பிறவிகளின் சக்கரத்தை புத்தியில்
சுற்ற வேண்டும். ஒரு தந்தையை மட்டுமே நினைவு செய்ய வேண்டும்.
வேறு யாருமே நினைவிற்கு வரக் கூடாது. ஒரு பொழுதும் எந்தவொரு
விஷயத்தாலும் வருத்தமடைந்து படிப்பை விட்டு விடக் கூடாது.
வரதானம்:
குழுவில் (எல்லோருடனும்) இருந்து கொண்டே, லட்சியம் மற்றும்
லட்சணத்தை சமமாக ஆக்கக்கூடிய சதா சக்திசாலி ஆத்மா ஆகுக.
குழுவில் ஒருவர் மற்றவரைப் பார்க்கும் போது - ஊக்கம் உற்சாகமும்
வருகின்றது, சோம்பேறித் தனமும் வருகின்றது. யோசிக்கின்றார்கள்
- இவர்களே இதை செய்கின்றார்கள், நாமும் கூட இதை செய்தால் என்ன
ஆகிவிடப் போகின்றது - எனவே, குழுவில் உயர்ந்தவராக ஆகுவதற்கான
சகயோகத்தை (உதவியை) எடுங்கள். ஒவ்வொரு செயலை செய்வதற்கு
முன்பும், இந்த ஒரு விசேஷமான கவனம் அல்லது லட்சியத்தை வையுங்கள்
- அதாவது நான் என்னை சம்பன்னம் (நிறைவானவராக) ஆக்கி சேம்பிள் (உதாரணமாக)
ஆக வேண்டும். நான் செய்து பிறரை செய்விக்க வேண்டும். பிறகு
மீன்டும் மீன்டும் இந்த லட்சியத்தை வெளிக்கொண்டு வாருங்கள்.
லட்சியம் மற்றும் லட்சணத்தை ஒன்றினைத்து செல்லுங்கள், அப்பொழுது
சக்திசாலியாக ஆகி விடுவீர்கள்.
சுலோகன்:
கடைசி கால கட்டத்தில், வேகமாக செல்ல வேண்டும் என்றால் - சாதாரண
மற்றும் வீணான எண்ணங்களில் நேரத்தை வீணடிக்காதீர்கள்.
அவ்யக்த சமிக்கை: சகஜயோகி ஆக வேண்டும் என்றால் பரமாத்ம அன்பின்
அனுபவி ஆகுங்கள்
யார் (நமக்கு) அன்பானவர்களோ, அவர்களை நாம் நினைவு செய்வதில்லை,
அவர்களின் நினைவு நமக்கு தானாகவே வருகின்றது. அதற்கு அந்த
அன்பானது - உள்ளத்தின் அன்பாக இருக்க வேண்டும், உண்மையான,
சுயநலமற்ற அன்பாக இருக்க வேண்டும். எப்பொழுது - என்னுடைய பாபா,
அன்பான பாபா என்று சொல்கின்றீர்களோ - அப்பொழுது அந்த அன்புக்கு
உரியவரை மறக்க முடியாது மேலும் சுயநலமற்ற அன்பு பாபாவை தவிர
வேறு எந்த ஆத்மாவிடமிருந்தும் கிடைக்க முடியாது. எனவே ஒருபோதும்
ஏதேனும் ஓர் நோக்கத்திற்காக நினைவு செய்யாதீர்கள், சுயநலமற்ற
அன்பில் மூழ்கி இருங்கள்.
முக்கிய அறிவிப்பு : பாபாவின் ஸ்ரீமத் அனுசாரம், முரளி என்பது
பாபாவின் குழந்தைகளுக்காக மட்டுமே, இராஜயோகம் கோர்ஸ் (7 நாள்
பாடம்) முடிக்காதவர்களுக்கு அல்ல. எனவே, அனைத்து நிமித்தமான
ஆசிரியர்கள் மற்றும் சகோதரன், சகோதரிகளுக்கும் பணிவான
வேண்டுகோள் என்னவென்றால் - சாகார முரளியின் வீடியோ (காணொளி)
மற்றும் ஆடியோ (கேட்பொலி) -க்களை யூ ட்யுப், பேஸ் புக்,
இன்ஸ்டாக்ராம் மற்றும் வாட்ஸ்அப் குரூப்களில் வெளியிடாதீர்கள்.