07.09.25 காலை முரளி
ஓம் சாந்தி 31.12.2006 பாப்தாதா,
மதுபன்
உறுதித்தன்மை மற்றும் மாற்றும் சக்தி மூலம் காரணம் அல்லது
பிரச்சினை என்ற வார்த்தைக்கு விடை கொடுத்து நிவாரணம் மற்றும்
தீர்வு சொரூபம் ஆகுங்கள்
இன்று புதுயுகத்தைப் படைப்பவர் பாப்தாதா தம்முடைய நாலாபுறம்
உள்ள குழந்தைகளுக்கு, புத்தாண்டு மற்றும் புது யுகம்
இரண்டுக்குமான வாழ்த்துகளைத் தெரிவிக்க வந்துள்ளார். நாலா புறம்
உள்ள குழந்தைகளும் கூட வாழ்த்துகள் சொல்வதற்காக வந்து
சேர்ந்துள்ளனர். புத்தாண்டு வாழ்த்துகள் சொல்வதற்காக மட்டும்
வந்திருக்கிறீர்களா, அல்லது புது யுகத்திற்கும் வாழ்த்துகள்
சொல்ல வந்திருக்கிறீர்களா? எப்படி புத்தாண்டின் குஷி இருக்கிறது
மற்றவர்களுக்கும் குஷிகளைக் கொடுக்கிறீர்கள். ஆக, பிராமண
ஆத்மாக்கள் உங்களுக்குப் புது யுகமும் கூட அந்த அளவு
நினைவிருக்கிறதா? புது யுகம் கண்களுக்கு முன்னால் வந்து விட்டதா?
எப்படி புது வருடத்திற்காக மனதில் வந்து கொண்டிருக்கிறது - அது
இப்போது வந்தே விட்டது! அது போலவே தங்கள் புது யுகத்திற்காக
அவ்வளவு அனுபவம் செய்கிறீர்களா - அது வந்தே விட்டது என்று?
அந்தப் புது யுகத்தின் நினைவு அவ்வளவு சமீபமாக வருகிறதா? அந்த
சரீர ரூப ஆடை ஜொலிப்புடன் முன்னால் காணப்படுகிறதா? பாப்தாதா
இரட்டை வாழ்த்துகள் சொல்கிறார். குழந்தைகளின் மனதில், கண்களில்
புது யுகத்தின் காட்சிகள் வெளிப்படையாக உள்ளன. தங்களின் புது
யுகத்தில் உடல்-மனம்-செல்வம்-மக்கள் (உறவுகள்) எவ்வளவு
சிரேஷ்டமாக இருக்கிறது! சர்வ பிராப்திகளும் எவ்வளவு நிறைந்த
பொக்கி‘ங்களாக உள்ளன என்ற அந்தக் காட்சிகளெல்லாம் குழந்தைகளின்
மனதிலும் கண்களிலும் தெளிவாக உள்ளன. இன்று பழைய உலகில்
இருக்கிறோம். இப்போதே நம் ராஜ்யத்தில் இருப்போம் என்ற குஷியும்
உள்ளது. உங்கள் ராஜ்யம் நினைவிருக்கிறதா? எப்படி இன்று இரட்டைக்
காரியத்திற்காக வந்திருக்கிறீர்கள் - பழைய வருடத்திற்கு விடை
கொடுப்ப தற்காக மற்றும் புது வருடத்தை வரவேற்பதற்காக
வந்திருக்கிறீர்கள். ஆக, பழைய வருடத்திற்கு விடை கொடுப்பதற்காக
மட்டுமே வந்திருக்கிறீர்களா, அல்லது பழைய உலகத்தின் பழைய
சம்ஸ்காரங்கள், பழைய சுபாவங்கள், பழைய நடத்தைக்கும் விடை
கொடுப்பதற்காகவும் வந்திருக் கிறீர்களா? பழைய வருடத்திற்கு விடை
கொடுப்பதோ சுலபம் தான். ஆனால் பழைய சம்ஸ்காரங் களுக்கு விடை
கொடுப்பதும் கூட அவ்வளவு சுலபமாக உள்ளதா? என்ன நினைக்கிறீர்கள்?
மாயாவுக்கும் விடை கொடுப்பதற்காக வந்திருக்கிறீர்களா அல்லது
வருடத்திற்கு விடை கொடுப் பதற்காக வந்திருக்கிறீர்களா? விடை
கொடுக்க வேண்டும் இல்லையா? அல்லது மாயாவிடம் கொஞ்சம் அன்பு
உள்ளதா? கொஞ்சம்-கொஞ்சம் வைத்துக் கொள்ள விரும்புகிறீர்களா?
பாப்தாதா இன்று நாலாபுறம் உள்ள குழந்தைகளை பழைய
சம்ஸ்கார-சுபாவங்களுக்கு விடை கொடுக்க வைக்க விரும்புகிறார்.
விடை கொடுக்க விரும்புகிறேன் என்று தைரியம் உள்ளதா? ஆனால் பிறகு
மாயா வந்து விடுகிறது. இன்றைய தினம் திட சங்கல்பத்தின் சக்தி
மூலம் பழைய சம்ஸ்காரங்களுக்கு விடை கொடுத்து, புது யுகத்தின்
சம்ஸ்காரங்களுக்கு, புது வாழ்க்கைக்கு வாழ்த்து சொல்வதற்கான
தைரியம் உள்ளதா? தைரியசாலிகளா? யார் புரிந்திருக்கிறார்களோ,
முடியும், முடியும், அல்லது முடிந்தே ஆக வேண்டும் என்ற தைரியம்
உள்ளதா? முடியும் என்று யார் புரிந்து கொண்டிருக்கிறார்களோ,
அவர்கள் கை உயர்த்துங்கள். தைரியம் உள்ளதா? நல்லது, யார் கை
உயர்த்தவில்லையோ, அவர்கள் யோசிக்கிறார்களா? இரட்டை
வெளிநாட்டினர் கை உயர்த்தினார்கள், யாருக்கு தைரியம் உள்ளதோ,
அவர்கள் கை உயர்த்துங்கள். அனைவரும் இல்லை. நல்லது, இரட்டை
வெளிநாட்டினரோ திறமைசாலிகள், இரட்டை நஷா இருப்பதால்.
பார்க்கலாம், பாப்தாதா ஒவ்வொரு மாதமும் ரிசல்ட்டைப் பார்ப்பார்.
பாப்தாதாவுக்குக் குஷி உள்ளது - தைரியசாலிக் குழந்தைகள்.
சாமர்த்தியமாக பதிலளிக்கும் குழந்தைகள். ஏன்? ஏனென்றால்
அறிந்திருக்கிறார்கள் - ஓரு அடி நாம் தைரியத்தோடு எடுத்து
வைத்தால், பாபாவின் உதவியின் ஆயிரம் அடி கிடைத்தே ஆக வேண்டும்.
உரிமையுள்ளவர்கள் நீங்கள். தைரியத்தை அசைப்பதற் காகத் தான் மாயா
முயற்சி செய்கிறது. பாப்தாதா பார்க்கிறார் - நன்கு தைரியம்
வைக்கிறார்கள் பாப்தாதா மனப்பூர்வமாக வாழ்த்தும் சொல்கிறார்.
ஆனால் தைரியம் வைத்து விட்டுப் பிறகு அதோடு கூடவே தனக்குள் வீண்
சங்கல்பங்களை உருவாக்கி விடுகிறார்கள் - செய்து கொண்டு தான்
இருக்கிறோம், நடக்கத் தான் வேண்டும், அவசியம் செய்யத் தான்
செய்வோம், தெரியவில்லை தெரியவில்லை என்ற சங்கல்பம் வருவது
என்பது தைரியத்தை பலவீனமாக்கி விடுகிறது. வோ, வோ (தோ-தோ) வந்து
விடுகிறது இல்லையா? செய்யவோ செய்கிறோம், செய்யவோ வேண்டும்
முன்னால் பறக்கவோ வேண்டும் இது தைரியத்தை பலவீனமாக்கி விடுகிறது.
வோ என்று யோசிக்காதீர்கள். செய்தே ஆக வேண்டும். ஏன் நடக்காது?
பாபா துணையில் இருக்கும் போது பாபாவின் துணையில் தோ-தோ வர
முடியாது.
ஆக, இந்தப் புது வருடத்தில் என்ன புதுமையைச் செய்யப்
போகிறீர்கள்? தைரியத்தின் காலை உறுதி யாக்குங்கள். மாயா தானே
அசைந்து விட வேண்டும், ஆனால் கால் அசையக் கூடாது - அந்த மாதிரி
தைரியத்தின் காலை வலுவுள்ளதாக ஆக்குங்கள். ஆக, புது வருடத்தில்
புதுமையைக் கொண்டு வருவீர்களா அல்லது சில நேரம் அசைந்து
கொடுப்பதும், சில நேரம் வலிமையுடன் இருப்பதுமாக அந்த மாதிரி
செய்ய மாட்டீர்கள் தானே? உங்கள் அனைவரின் கடமை அல்லது தொழில்
எது? தன்னைப் பற்றி என்ன சொல்லிக் கொள்கிறீர்கள்? நினைவு
செய்யுங்கள். விஷ்வ கல்யாணி (உலக நன்மை செய்பவர்), உலகை
மாற்றுபவர் - இது உங்கள் தொழில் இல்லையா? அப்போது
பாப்தாதாவுக்கு அவ்வப்போது இனிமையிலும் இனிமையான சிரிப்பு
வருகிறது. உலகை மாற்றுபவர் என்ற டைட்டிலோ இருக்கிறது இல்லையா?
உலகை மாற்றுபவராக இருக்கிறீர்களா? அல்லது லண்டனை மாற்றுபவர்,
இந்தியாவை மாற்றுபவரா? நீங்கள் அனைவரும் உலகை மாற்றுபவர்கள்
இல்லையா? கிராமத்தில் இருந்தாலும் சரி, லண்டனில் இருந்தாலும்,
அமெரிக்கா வில் இருந்தாலும் சரி, உலக நன்மை செய்பவர் இல்லையா?
அப்படியானால் தலையை அசையுங் கள். பக்கா தானே? அல்லது 75
சதவிகிதம் தானா? 75 சதவிகிதம் உலக நன்மை மற்றும் 25 சதவிகிதம்
மன்னிப்பு, அப்படியா? உங்கள் சவால் என்ன? இயற்கைக்கும் சவால்
விட்டிருக்கிறீர்கள். எப்பொழுதாவது தனக்காகவும் யோசிக்கிறீர்கள்
- செய்யவோ வேண்டும் தான், ஆனால் ஆகி விடுகிறது. ஆக உலகை
மாற்றுபவர், இயற்கையை மாற்றுபவர், தன்னை மாற்றுபவராக ஆக
முடியாதா? சக்தி சேனை என்ன நினைக்கிறீர்கள்? இந்த ஆண்டில்
தங்களின் தொழில் உலகை மாற்றுபவர் என்பதை நினைவில் வைக்க
வேண்டும். தன்னை அல்லது தன் பிராமணப் பரிவாரத்தையும் கூட
மாற்றுபவர் ஆக வேண்டும். ஏனென்றால் முதலிலோ தர்மம்
வீட்டிலிருந்து தொடங்க வேண்டும் இல்லையா? ஆக, தனது தொழிலின்
நடைமுறை சொரூபத்தைப் பிரத்தியட்சம் செய்வீர்கள் இல்லையா? சுய
மாற்றத்தைத் தானும் விரும்புகிறீர்கள் மற்றும் பாப்தாதாவும்
விரும்புகிறார், அறிவீர்கள் இல்லையா? பாப்தாதா கேட்கிறார் -
குழந்தை களாகிய உங்கள் அனைவரின் லட்சியம் என்ன? அப்போது
பெரும்பாலோர் ஒரே பதிலைத் தான் சொல்கிறார்கள் - பாபாவுக்கு
சமமாக ஆக வேண்டும். சரி தான் இல்லையா? பாப் சமான் ஆகத் தான்
வேண்டும் இல்லையா? அல்லது பார்க்கிறேன், யோசிக்கிறேன்! ஆக
பாபாவும் இதைத் தான் விரும்புகிறார் - இந்தப் புது வருடத்தில்,
70 வருடங்கள் முடிவடைகின்றன (2006-இல்) இப்போது 71-வது
வருடத்தில் ஏதேனும் அற்புதம் செய்து காட்டுங்கள். அனைவரும்
இவ்வளவு சேவையின் ஊக்கத்தில் பல்வேறு புரோகிராம்கள் உருவாக்கிக்
கொண்டே இருக்கிறீர்கள். வெற்றியும் கிடைத்துக் கொண்டே
இருக்கிறது. பாப்தாதாவுக்குக் குஷியும் ஏற்படுகிறது - செய்கிற
முயற்சிக்கு வெற்றியும் கிடைக்கிறது. வீணாகப் போவதில்லை. ஆனால்
சேவை எதற்காகச் செய்கிறீர்கள்? அப்போது என்ன பதில்
சொல்கிறீர்கள்? பாபாவைப் பிரத்தியட்சம் செய்வதற்காக. ஆக, பாபா
இன்று குழந்தைகளிடம் கேட்கிறார் - பாபாவைப் பிரத்தியட்சமோ
செய்யத் தான் வேண்டும். நிச்சயமாகச் செய்வீர்கள். ஆனால்
பாபாவைப் பிரத்தியட்சம் செய்வதற்கு முன்னால் தன்னைப்
பிரத்தியட்சம் செய்யுங்கள். சொல்லுங்கள், சிவசக்திகள் இந்த
வருடம் சிவசக்தி ரூபத்தில் தங்களைப் பிரத்தியட்சம் செய்வீர்களா?
செய்வீர்களா? ஜனக் (ஜானகி தாதி) சொல்லுங்கள். செய்வீர்களா? (செய்தே
ஆக வேண்டும்) கூட இருப்பவர்கள் முதல் வரிசையில். இரண்டாவது
வரிசையில் அமர்ந்துள்ள டீச்சர்கள் கை உயர்த்துங்கள் - யார்
இந்த வருடம் செய்தே காட்டுவோம் என்பவர்கள். செய்வோம் இல்லை,
செய்து காட்டத் தான் வேண்டும். டீச்சர்கள் அனைவரும் கை
உயர்த்தினார் களா அல்லது யாராவது உயர்த்தவில்லையா?
நல்லது. மதுபன் வாசிகள்? செய்தே ஆக வேண்டும். செய்ய
வேண்டியதிருக்கும். ஏனென்றால் மதுபனோ அருகில் உள்ளது இல்லையா?
தேதியைக் குறித்துக் கொள்ள வேண்டும். 31-ஆம் தேதி. நேரத்தையும்
குறிக்க வேண்டும். (9 மணி 20 நிமிடம்) பிறகு பாண்டவ சேனை.
பாண்டவர்கள் என்ன காண்பிக்க வேண்டும்? வெற்றி பெற்ற பாண்டவர்கள்.
எப்போதாவது வெற்றி பெறுபவர்கள் இல்லை. வெற்றிப் பாண்டவர்கள்!
அப்படித் தானே? ஆக, இந்த ஆண்டில் அந்த மாதிரி ஆகிக் காட்ட
வேண்டுமா அல்லது என்ன செய்வோம் என்று சொல்வீர்களா? மாயா வந்து
விட்டது இல்லையா? விரும்பவில்லை, ஆனால் வந்து விட்டது. பாப்தாதா
இதற்கு முன்பும் சொல்லியிருக்கிறார் - மாயா தனது கடைசி நேரம்
வரை வருவதை நிறுத்தாது. ஆனால் மாயாவின் வேலை வருவது, உங்கள்
வேலை என்ன? வெற்றியாளர் ஆவது. எனவே இதை யோசிக்காதீர்கள் -
விரும்பவில்லை ஆனால் மாயா வந்து விடுகிறது இப்போது பாப்தாதா
இந்த வருடத்தோடு இந்த வார்த்தைகளுக்கு விடை கொடுக்குமாறு செய்ய
விரும்புகிறார். 12 மணிக்கு இந்த வருடத்திற்கு விடை
கொடுப்பீர்கள் இல்லையா? மணி அடிப்பீர்கள் இல்லையா? இன்றைக்கு
மணி அடிப்பீர்கள் என்றால் எதற்காக மணி அடிப்பீர்கள்? இந்த
நாளுக்கா, வருடத்திற்கா? மாயாவுக்கு விடை கொடுப்பதற்கான மணி
அடிக்க வேண்டும். இரண்டு விஷயங்கள் - ஒன்று மாற்றும் (பரிவர்த்தன்)
சக்தி. அது பலவீனமாக உள்ளது. பிளான்கள் மிக நன்றாக
உருவாக்குகிறீர்கள். அப்படிச் செய்வோம், இப்படிச் செய்வோம்,
அப்படிச் செய்வோம் பாப்தாதாவும் குஷி அடைகிறார். மிக நல்ல
பிளான்களை உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால் மாற்றும் சக்தி
குறைவாக இருக்கும் காரணத்தால் கொஞ்சம் மாற்றம் ஏற்படுகிறது,
கொஞ்சம் இருந்து விடுகிறது. மற்றும் அடுத்த குறை உறுதி பற்றியது.
நல்ல-நல்ல சங்கல்பங்கள் செய்கிறீர்கள். இன்றும் பாருங்கள்,
எத்தனை கார்டுகள், எத்தனை முடிவுகள், எத்தனை உறுதி மொழிகள்,
பாப்தாதா பார்த்தார். நிறைய நல்ல-நல்ல கடிதங்கள் வந்துள்ளன (கார்டுகள்,
கடிதங்கள் முதலியன மேடையில் அலங்காரமாக வைக்கப்பட்டுள்ளன) ஆக,
செய்வோம், காட்டுவோம், நடந்தே ஆக வேண்டும், ஆகத் தான் வேண்டும்.
பல கோடி மடங்கு அன்பு நினைவுகள், அனைத்தும் பாப்தாதாவுக்கு
வந்து சேர்ந்துள்ளன. முன்னால் அமர்ந்துள்ள உங்களுடைய மனதின்
சப்தமும் பாபாவிடம் வந்து சேர்ந்தது. ஆனால் பாப்தாதா இந்த
இரண்டு சக்திகள் மீதும் அண்டர்லைன் செய்ய வைக்கிறார். ஒன்று,
உறுதியின் குறை வந்து விடுகிறது. குறைக்கான காரணம் கவனக் குறைவு,
மற்றவர்களைப் பார்ப்பதற்கானது. ஆகி விடும், செய்து கொண்டோ
இருக்கிறோம், செய்வோம், அவசியம் செய்வோம்.
பாப்தாதா இதைத் தான் விரும்புகிறார் - இந்த வருடம் ஒரு
வார்த்தைக்கு சதா காலத்திற்கும் விடை கொடுத்து விடுங்கள். அது
என்ன வார்த்தை? சொல்லட்டுமா? கொடுக்க வேண்டி இருக்கும். இந்த
வருடம் பாப்தாதா காரணம் என்ற வார்த்தைக்கு விடை கொடுக்கச்
செய்ய வேண்டும் என விரும்புகிறார். நிவாரணம் ஆகி விட்டால்
காரணம் முடிந்தது. பிரச்சினை முடிந்தது, தீர்வு சொரூபம். அது
தனது காரணமாக இருக்கலாம், அனைவரது காரணமாக இருக்கலாம். குழுவின்
காரணமாக இருக்கலாம், ஏதேனும் சூழ்நிலையின் காரணமாக இருக்கலாம்,
பிராமணர்களின் அகராதியில் காரணம் என்ற சொல், பிரச்சினை என்ற
சொல் மாற்றமடைந்து, தீர்வு மற்றும் நிவாரணம் ஆகிவிட வேண்டும்.
ஏனென்றால் அநேகர் இன்று அமிர்த வேளையிலும் கூட பாப்தாதா வுடனான
ஆன்மிக உரையாடலில் இதைத் தான் சொன்னார்கள் -- புது வருடத்தில்
ஏதேனும் புதுமையைக் கொண்டுவர வேண்டும். ஆக, பாப்தாதா
விரும்புகிறார் - இந்தப் புது வருடத்தை அந்த மாதிரி
கொண்டாடுங்கள் - இந்த இரண்டு சொற்களும் முடிந்து போக வேண்டும்.
பரோபகாரி ஆகுங்கள். சுயம் காரணமாகி இருக்கலாம், அல்லது
வேறொருவர் காரணமாகி இருக்கலாம். ஆனால் பரோபகாரி ஆகி,
இரக்கமுள்ள ஆத்மா ஆகி, சுப பாவனை, சுப விருப்பத்தின் உள்ளம்
கொண்டவராகி சகயோகம் கொடுங்கள், அன்பைப் பெறுங்கள்.
ஆக, இந்தப் புது வருடத்திற்கு என்ன பெயர் கொடுப்பீர்கள்? முன்பு
ஒவ்வொரு வருடத்திற்கும் பெயர் கொடுத்திருந்தோம். நினைவுள்ளது
இல்லையா? ஆக, பாப்தாதா இந்த வருடத்தை சிரேஷ்ட சுப சங்கல்பம்,
திட சங்கல்பம், அன்பு சகயோக சங்கல்ப வருடம் - இது பெயரன்று,
ஆனால் அது போல் பார்க்க விரும்புகிறார். உறுதியின் சக்தி,
மாற்றக்கூடிய சக்தியை சதா துணையாக்கிக் கொள்ளுங்கள். யாராவது
எவ்வளவு தான் எதிர்மறையானவற்றைத் தந்தாலும், எப்படி நீங்கள்
மற்றவர்களுக்குக் கோர்ஸ் எடுக்கிறீர்களோ, அது போல் எதிர்மறையை
நேர்மறையாக மாற்றி விடுங்கள். ஆக, நீங்கள் தாமாகவே எதிர்மறையை
நேர்மறையாக மாற்ற முடியாதா? மற்றவர் பர்வஷ் (மாயா வசமாகி)
விடுகிறார். வேறு வசமானவர் மீது இரக்கம் வைக்கப் படுகிறது.
உங்களது ஜட சித்திரம் உங்களுடைய சித்திரம் தான் இல்லையா?
பாரதத்தில் வெளிநாட்டினரின் சித்திரங்களும் உள்ளன இல்லையா? அவை
பூஜிக்கப் படுகின்றன. தில்வாலா கோவிலிலோ உங்கள் சித்திரங்களைப்
பார்த்திருக் கிறீர்கள் இல்லையா? மிக நன்று. எப்போது உங்கள் ஜட
சித்திரங்கள் இரக்கமனமுள்ளனவாக உள்ளனவோ, எந்த ஒரு சித்திரத்தின்
முன்பாகவும் போனால் என்ன வேண்டுகிறார்கள்? தயா செய்யுங்கள்,
கிருபை செய்யுங்கள், இரக்கம் கொள்ளுங்கள், மெர்சி, மெர்சி
அப்போது முதலில் தங்கள் மீது இரக்கம் வையுங்கள். பிறகு பிராமணப்
பரிவாரத்தின் மீது இரக்கம் வையுங்கள். யாராவது வேறு வசமாகி
இருந்தால் சம்ஸ்கார வசமாகியிருந்தால் பலவீனமாக இருந்தால்
அச்சமயம் புத்தியற்றவராகி விட்டிருந்தால், கோபம் கொள்ளாதீர்கள்.
கோபத்தின் ரிப்போர்ட் அதிகம் வருகிறது. கோபம் இல்லையென்றால்
அதன் குழந்தை-குட்டி களிடம் அதிக அன்பு உள்ளது. ஆவேசம் வருகிறது.
இந்த ஆவேசம் கோபத்தின் குழந்தையாகும். ஆக, எப்படி பரிவாரத்தில்
நடக்கிறது இல்லையா, பெரிய குழந்தைகளிடம் அன்பு குறைந்து
விடுகிறது மற்றும் பேரக்குழந்தைகளிடம் அன்பு அதிகமாகி விடுகிறது.
ஆக, கோபம் தந்தை, மேலும் ஆவேசம், தலைகீழான நஷா, நஷாவும் பல்வேறு
விதமாக உள்ளது - புத்தியின் நஷா, கடமையின் நஷா, சேவையின்
ஏதேனும் விசேஷ காரியத்தின் நஷா, இது ஆவேசம் ஆகிறது. எனவே தயாளு
(இரக்கம் உள்ளவர்) ஆகுங்கள், கிருபாளு (கருணை உள்ளவர்) ஆகுங்கள்.
பாருங்கள், புது வருடத்தில் ஒருவர் மற்றவரின் வாயை
இனிப்பாக்கவும் செய்கிறார்கள். வாழ்த்து சொல்வார்கள் என்றால்
வாயை இனிப்பாக்கவும் செய்வர்கள் இல்லையா? ஆக, முழு வருடமும்
கடுமையைக் காட்டக்கூடாது. அவர்கள் வாயை இனிப்பாக் குகிறார்கள்.
நீங்கள் வெறுமனே வாயை மட்டும் இனிப்பாக்குவதில்லை. ஆனால் உங்கள்
முகமும் இனிமையைக் காண்பிக்க வேண்டும். சதா தனது முகம்
ஆன்மிகத்தின் அன்பினுடையதாக இருக்க வேண்டும். புன்முறு வலுடன்
கூடியதாக இருக்க வேண்டும். கடுமை இருக்கக் கூடாது.
பெரும்பாலானோர் பாப்தாதா வுடன் ஆன்மிக உரையாடல் செய்யும் போது
தங்களின் உண்மையான விஷயத்தைச் சொல்லி விடுகிறார்கள். வேறொன்றும்
சொல்வதில்லை. எனவே பெரும்பாலோர் ரிசல்ட்டில் மற்ற விகாரங்களை
விட கோபம் அல்லது கோபத்தின் குழந்தை-குட்டிகள் பற்றிய
ரிப்போர்ட் அதிகமாக உள்ளது.
ஆக, பாப்தாதா இந்தப் புது வருடத்தில் இந்தக் கடுமைத் தன்மையை
நீக்கிவிட வேண்டும் என விரும்பு கிறார். அநேகர் தங்கள்
உறுதிமொழியையும் எழுதியிருக்கிறார்கள் - விரும்புவதில்லை, ஆனால்
வந்து விடுகிறது. பாப்தாதா காரணம் சொன்னார் - உறுதித் தன்மை
குறைவாக உள்ளது. பாபாவுக்கு முன்னால் சங்கல்பத்தின் மூலம்
உறுதிமொழியும் சொல்கிறார்கள். ஆனால் திடத் தன்மை என்பது
அத்தகைய ஒரு சக்தி - உலகத்தவர்களும் சொல்கிறார்கள் - சரீரமே
போய் விட்டாலும் உறுதிமொழி போகக் கூடாது. சாக வேண்டியதாக
இருக்கலாம், வளைந்து கொடுக்க வேண்டி வரலாம், மாற
வேண்டியதிருக்கலாம், சகித்துக் கொள்ள வேண்டியதிருக்கலாம். ஆனால்
உறுதிமொழியில் வலிமையுடன் இருப்பவர்கள் ஒவ்வோரடியிலும் வெற்றி
மூர்த்திகள். ஏனென்றால் திடதா என்பது வெற்றிக்கான சாவி. இந்தச்
சாவி அனைவரிடமும் உள்ளது. ஆனால் சமயத்தில் மறைந்து விடுகிறது.
ஆக, என்ன நினைக்கிறீர்கள்?
புத்தாண்டில் புதுமையைச் செய்தே ஆக வேண்டும் -தன்னுடைய,
சகயோகிகளின், மற்றும் உலகத்தின் மாற்றத்திற்காக. பின்னால்
இருப்பவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா? ஆக, செய்ய வேண்டும்
இல்லையா? முதலிலோ பெரியவர்கள் செய்வார்கள் இல்லையா, நாமோ
சிறியவர்கள் என்று அந்த மாதிரி யோசிக்கக் கூடாது. சிறியவர்கள்
பாபாவுக்கு சமமானவர்கள். ஒவ்வொரு குழந்தையும் தந்தைக்கு அதிகாரி
தான். முதல் தடவையாக வந்திருந்தாலும் சரி, ஆனால் என்னுடைய பாபா
என்று சொல்லி விட்டால் அதிகாரி தான். ஸ்ரீமத் படி நடப்ப தற்கும்
அதிகாரி மற்றும் சர்வ பிராப்திகளுக்கும் அதிகாரி. டீச்சர்கள்
தங்களுக்குள் புரோகிராம் தயார் செய்ய வேண்டும் வெளிநாட்டினரும்
தயார் செய்ய வேண்டும். பாரதவாசிகளும் சேர்ந்து தயார் செய்ய
வேண்டும். பாப்தாதா பரிசு தருவார். எந்த ஜோன், வெளிநாடாக
இருந்தாலும் சரி, இந்தியாவாக இருந்தாலும் சரி, எந்த ஜோன் நம்பர்
ஒன் பெறுகிறதோ, அவர்களுக்குத் தங்கக்கோப்பை தருவோம். தன்னை
மட்டும் தயார் செய்தால் போதாது. துணையிலிருப்பவர்களையும்
உருவாக்க வேண்டும். ஏனென்றால் பாப்தாதா பார்த்துள்ளார் --
குழந்தைகளின் மாற்றம் இல்லாமல் உலகின் மாற்றமும் கூட மந்தமாகிக்
கொண்டுள்ளது. மேலும் ஆத்மாக்கள் புதுப்புது விதமான
துக்கங்களுக்கு ஆளாகிக் கொண்டுள்ளனர். துக்கம் அசாந்திக்குப்
புதுப்புதுக் காரணங்கள் உருவாகிக் கொண்டுள்ளன. எனவே பாப்தாதா
இப்போது குழந்தைகளின் துக்கத்தின் கூக்குரல் கேட்டு மாற்றத்தை
விரும்புகிறார். எனவே ஹே மாஸ்டர் சுகம் தரும் வள்ளலின்
குழந்தைகளே, துக்கத்தில் இருப்பவர்கள் மீது இரக்கம் கொள்ளுங்கள்.
பக்தர்களும் கூட பக்தி செய்து செய்து களைத்துப் போய் விட்டனர்.
பக்தர் களுக்கும் முக்தியின் ஆஸ்தி கிடைக்கச் செய்யுங்கள்.
இரக்கம் வருகிறதா, இல்லையா? உங்களுடைய சேவையிலேயே, உங்களுடைய
தினச்சரியாவிலேயே பிஸியாக இருக்கிறீர்களா? நிமித்தமாக
இருக்கிறீர்கள். பெரியவர்கள் தாம் நிமித்தம் என்று அப்படி இல்லை.
யார் மேரா பாபா சொன்னாரோ. ஏற்றுக் கொண்டிருக்கிறாரோ. அந்த
ஒவ்வொரு குழந்தையும், அனைவருமே நிமித்தம் தான். ஆக, புது
வருடத்தில் ஒருவர் மற்றவர்க்கு கிஃப்ட் கூட கொடுக்கிறார்கள்
இல்லையா? எனவே நீங்கள் பக்தர்களின் ஆசையை நிறைவேற்றுங்கள்.
அவர்களுக்கு கிஃப்ட் கிடைக்கச் செய்யுங்கள். துக்கத்தில்
இருப்பவர்களை துக்கத்திலிருந்து விடுவியுங்கள். முக்தி
தாமத்தில் சாந்தி கிடைக்கச் செய்யுங்கள். அவர்களுக்கு இந்த
லிஃப்ட்டைக் கொடுங்கள். பிராமணப் பரிவாரத்தில் ஒவ்வோர்
ஆத்மாவுக்கும் மனதின் அன்பு மற்றும் சகயோகத்தின் கிஃப்ட்
கொடுங்கள். உங்களிடம் கிஃப்ட்டுகளின் ஸ்டாக் உள்ளதா? அன்பு
உள்ளதா? சகயோகம் உள்ளதா? முக்தி கிடைக்கச் செய்வதற்கான சக்தி
உள்ளதா? யாரிடம் ஸ்டாக் அதிகம் உள்ளதோ, அவர்கள் கை
உயர்த்துங்கள். ஸ்டாக் உள்ளதா? ஸ்டாக் குறைவாக உள்ளதா? முதல்
லைனில் இருப்பவர்களுக்கு ஸ்டாக் குறைவாக உள்ளதா என்ன? இந்த
பிரிஜ்மோகன் கை உயர்த்தாமல் இருக்கிறார். ஸ்டாககோ இருக்கிறது
தானே? ஸ்டாக் இருக்கிறதா? அனைவரும் உயர்த்தினீர்களா? ஸ்டாக்
உள்ளதா? அப்போது ஸ்டாக்கை வைத்துக் கொண்டு என்ன செய்து
கொண்டிருக்கிறீர்கள்? சேமித்து வைத்திருக் கிறீர்களா? டீச்சர்ஸ்,
ஸ்டாக் இருக்கிறது தானே? அப்போது கொடுங்களேன். பரந்த மனம்
உள்ளவர் ஆகுங்கள். மதுபன் காரர்கள் என்ன செய்வீர்கள்? ஸ்டாக்
உள்ளதா? மதுபனில் உள்ளதா? மதுபனிலோ நாலாபுறமும் ஸ்டாக்
நிரம்பியுள்ளது. ஆக, இப்போது கொடுக்கும் வள்ளல் ஆகுங்கள்.
கொடுத்துக் கொண்டே செல்லுங்கள். சரி தானா? நல்லது.
இப்போது ஒவ்வொருவரும் தன்னை மனதின் மாலிக்காக அனுபவம் செய்து
ஒரு விநாடியில் மனதை ஒருமுகப் படுத்த முடியுமா? கட்டளையிட
முடியுமா? ஒரு விநாடியில் தனது இனிய வீட்டிற்குச் சென்று
சேர்ந்து விடுங்கள். மனம் உங்கள் கட்டளையை ஏற்று நடக்கிறதா
அல்லது குழப்பம் செய்கிறதா? மாலிக் தகுதி யானவராக இருந்தால்
சக்திவானாக இருந்தால், மனம் ஏற்க வில்லை என்பது நடக்க முடியாது.
ஆக, இப்போது அப்பியாசம் செய்யுங்கள் - ஒரு விநாடியில் அனைவரும்
தங்கள் இனிய வீட்டிற்குப் போய்ச் சேர்ந்து விடுங்கள். இந்த
அப்பியாசத்தை நாள் முழுவதிலும் இடையிடையே செய்வதற்கான கவனம்
வையுங்கள். மனதின் ஒருமுகத்தன்மை தன்னையும் மற்றும்
வாயுமண்டலத்தையும் கூட சக்திசாலி ஆக்கி விடும். நல்லது.
நாலாபுறமுள்ள அனைவருக்கும் மிக அன்பான, சகயோகி சிரேஷ்ட
ஆத்மாக்களுக்கு, நாலாபுறம் உள்ள வெற்றியாளர்களாகிய
குழந்தைகளுக்கு, நாலாபுறம் உள்ள பரிவர்த்தன் சக்திவான் குழந்தை
களுக்கு, நாலாபுறம் உள்ள சதா தன்னைப் பிரத்தியட்சம் செய்து,
பாபாவைப் பிரத்தியட்சம் செய்யக் கூடிய குழந்தைகளுக்கு, சதா
தீர்வு சொரூப, உலக மாற்றம் செய்யும் குழந்தைகளுக்கு பாப்தாதா
வின் அன்பு நினைவுகள் மற்றும் மனதின் ஆசிர்வாதங்களை ஏற்றுக்
கொள்ளவும். அதோடு அனைத்துக் குழந்தைகளுக்கும், யார்
பாபாவுக்கும் தலைக்கிரீடமாக இருக்கிறார்களோ, அத்தகைய சிர்த்தாஜ்
குழந்தைகளுக்கு பாப்தாதாவின் நமஸ்தே.
ஆசீர்வாதம்:
முரளீதரின் முரளி மீது அன்பு வைக்கக்கூடிய சதா சக்திசாலி ஆத்மா
ஆகுக.
எந்தக் குழந்தைகளுக்குப் படிப்பு, அதாவது முரளி மீது அன்பு
உள்ளதோ, அவர்களுக்கு சதா சக்திசாலி பவ என்ற வரதானம் கிடைத்து
விடுகிறது. அவர்களுக்கு முன்னால் எந்த ஒரு விக்னமும் நிற்க
முடியாது. முரளீதரிடம் அன்பு வைப்பது என்றால் அவரது முரளி மீது
அன்பு வைப்பதாகும். யாராவது சொல்கிறார்கள் - முரளீதர் மீதோ
எனக்கு மிகுந்த அன்பு உள்ளது, ஆனால் படிப்பதற்கு எனக்கு
நேரமில்லை என்றால் பாபா அதை ஏற்றுக் கொள்வதில்லை. ஏனென்றால்
எங்கே ஈடுபாடு உள்ளதோ, அங்கே எந்த ஒரு சாக்குப்போக்கும்
இருக்காது. படிப்பு மற்றும் பரிவாரத்தின் அன்பு கோட்டையாக ஆகி
விடுகிறது. அதனால் அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.
சுலோகன்:
ஒவ்வொரு பரிஸ்திதியிலும் தன்னை மோல்டு (மாற்றம்) செய்து
கொள்வீர்களானால் உண்மையான தங்கம் (ரியல் கோல்டு) ஆகி
விடுவீர்கள்.
அவ்யக்த சமிக்ஞை: இப்போது ஈடுபாடெனும் அக்னியை மூட்டி யோகத்தை
ஜூவாலா ரூபமாக்குங்கள்.
யோகத்தை ஜுவாலா ரூப சக்திசாலி ஆக்குவதற்காக யோகத்தில் அமரும்
போது உள்ளடக்கும் சக்தியைப் பயன்படுத்துங்கள். சேவையின்
சங்கல்பமும் கூட உள்ளடங்கி விட வெண்டும். அவ்வளவு சக்தி இருக்க
வேண்டும் - ஸ்டாப் என்று சொன்ன உடன் நின்று விட வேண்டும். முழு
பிரேக் போட வேண்டும். தளர்ச்சி யான பிரேக் இருக்கக் கூடாது. ஒரு
விநாடிக்கு பதிலாக அதிக சமயம் ஆகி விட்டால் உள்ளடக்கும் சக்தி
பலவீனமாக உள்ளது எனச் சொல்வார்கள்.