08-04-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! நீங்கள் தேக
அபிமானத்தின் கதவுகளை மூடிவிட்டீர்களென்றால் மாயையின் புயல்
வருவதும் நின்றுவிடும்.
கேள்வி:
எந்த குழந்தைகளுக்கு விசாலமான
புத்தியுள்ளதோ அவர்களின் அடையாளம் என்ன?
பதில்:
1. அவர்களுக்கு முழு நாளும்
சேவைக்கான சிந்தனை ஓடிக் கொண்டேயிருக்கும். 2. அவர் களால் சேவை
செய்யாமல் இருக்க முடியாது. 3. எப்படி முழு உலகிலும் (முற்றுகையிட்டு)
தேடிக் கண்டுபிடித்து தூய்மையற்ற ஆத்மாக்களை தூய்மையாக மாற்ற
வேண்டும் என்ற எண்ணம் புத்தியில் இருக்கும். அவர்கள் உலகை
துக்க தாமத்திலிருந்து சுகதாமத்தின் வாசிகளாக ஆக்கும் சேவை
செய்து கொண்டேயிருப்பார்கள். 4. அநேகரை தனக்குச் சமமாக ஆக்கும்
சேவை செய்வார் கள்.
ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை வந்து இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்குப்
புரிய வைக்கின்றார். குழந்தைகளே, தன்னை ஆத்மா என்று புரிந்து
என்னை நினைவு செய்தீர் களென்றால் உங்களுடைய துக்கம் சதா
காலத்திற்கும் தூரம் விலகிவிடும். தன்னை ஆத்மா என்று புரிந்துக்
கொண்டு அனைவரையும் ஆத்மா சகோதரர் என்று பார்த்தால்
தேகத்தினுடைய பார்வையின் எண்ணம் மாறிவிடும். பாபா அசரீரி,
உங்கள் ஆத்மாக்கூட அசரீரியாகத்தான் உள்ளது. பாபா
ஆத்மாக்களைத்தான் பார்க்கின்றார். அனைவரும் அகால (அழிவற்ற)
சிம்மாசனத் தில் வீற்றிருக்கும் ஆத்மாக்கள். நீங்களும் கூட
ஆத்மா சகோதர- சகோதரர் என்ற திருஷ்டியில் பாருங்கள். இதில் தான்
மிகுந்த முயற்சி உள்ளது. தேக அபிமானத்தில் வருவதால் தான் மாயை
யின் புயல் வருகின்றது. இந்த தேக அபிமானத்தின் கதவை
மூடிவிடுங்கள், மாயை வருவது நின்று விடும். இந்த ஆத்ம
அபிமானியாகும் படிப்பை முழு கல்பத்திலும் இந்த புருஷோத்தம
சங்கம யுகத்தில் பாபா வந்துதான் குழந்தைகளுக்குக்
கற்பிக்கின்றார்.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள்
தெரிந்திருக்கின்றீர்கள், இப்பொழுது நாம் நரகத்தின் கரையை
விட்டு விலகி முன்னேறிச் சென்று கொண்டிருக்கின்றோம். இந்த
புருஷோத்தம சங்கமயுகம் இடைப்பட்ட யுகம், தனிப்பட்டது.
நடுக்கடலில் உங்களுடைய படகு உள்ளது. நீங்கள் கலியுகத்திலும்
இல்லை, சத்திய யுகத் திலும் இல்லை. நீங்கள் மிக உயர்ந்த
சங்கமயுக பிராமணர்கள். சங்கமயுகம் என்பது பிராமணர்களுக்காக
மட்டுமே உள்ளது. பிராமணர் கள் மிக உயர்ந்தவர்கள். இது பிராமணர்
களுடைய மிகச்சிறிய யுகமாகும். இது ஒரு பிறவிக்கான யுகமாகும்.
இதுதான் உங்களுடைய மகிழ்ச்சிக்கான யுகமாகும். மகிழ்ச்சி எந்த
விஷயத்தில் இருக்கின்றது? பகவான் நமக்கு படிப்பு
கற்பிக்கின்றார் என்பதில் தான். அப்படிப்பட்ட மாணவனுக்கு
எவ்வளவு சந்தோஷம் இருக்க வேண்டும். இப்பொழுது முழு சக்கரத்தின்
ஞானம் புத்தியில் உள்ளது. இப்பொழுது நாம் தான் பிராமணன் பிறகு
நாமே தேவதையாகின்றோம். முதலில் நம்முடைய வீடு இனிமையான
வீட்டிற்குச் செல்ல வேண்டும். பிறகு புது உலக இராஜ்யத்திற்கு
வர வேண்டும். பிராமணர்கள் நாம் தான் சுயதர்சன சக்கரதாரிகள்;
நாம் தான் இந்த கண்ணாமூச்சி விளையாட்டில் வருகின்றோம். இந்த
விராட ரூபத்தைக்கூட பிராமணர்கள் தான் தெரிந்திருக் கின்றீர்கள்.
புத்தியில் முழு நாளும் இந்த நினைவிருக்க வேண்டும்.
இனிமையான குழந்தைகளே! இது உங்களுடைய அன்பான குடும்பம். நீங்கள்
ஒவ்வொருவரும் மிக அன்பாக இருக்க வேண்டும். பாபா இனிமையானவர்
குழந்தைகளும் அப்படி இனிமையாக இருக்க வேண்டும். ஒருபோதும் யார்
மீதும் கோபம் கொள்ளாதீர்கள். மனம், வார்த்தை, செயலில்
யாருக்கும் துக்கம் கொடுக்கக்கூடாது. பாபா யாருக்கும் ஒருபோதும்
துக்கம் கொடுப்பதில்லை. எவ்வளவு பாபாவை நினைவு செய்கின்றீர்களோ
அந்தளவு இனிமையானவர் ஆகிவிடுவீர்கள். இந்த நினைவின்
மூலமாகத்தான் உங்கள் படகு கரை சேரும். இது தான் நினைவு யாத்திரை.
நினைவு செய்து செய்து சாந்திதாமத்தின் வழியாக சுகதாமத்திற்குச்
செல்ல வேண்டும். குழந்தை களை சதா சுகமானவர் ஆக்குவதற்காகத்தான்
பாபா வந்திருக்கின்றார். என்னை நினைவு செய்தீர் களென்றால்
பூதங்கள் விலகி ஓடிவிடும் என்று பூதங்களை விரட்ட பாபா வழி
கூறுகின்றார். எந்த பூதத்தையும் உடன் எடுத்து செல்லாதீர்கள்.
ஏதாவது பூதம் இருந்தால் இங்கு என்னிடம் விட்டுச் செல்லவும்.
பாபா எங்களுடைய பூதங்களை போக்கி பதீதத்திலிருந்து
பாவனமாக்குங்கள் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். பாபா எவ்வளவு
அழகானவர் ஆக்குகின்றார். பாபா மற்றும் தாதா இருவரும் இங்கு
குழந்தைகளுக்கு அலங்காரம் செய் கின்றார்கள். தாய் தந்தைதான்
குழந்தைகளுக்கு அலங்காரம் செய்வார்கள் அல்லவா? அவர்
எல்லைக்குட்பட்ட தந்தை இவர் எல்லையற்ற தந்தை. குழந்தைகளை மிக
அன்பாக நடத்தவும், அன்பாக நடக்கவும். அனைத்து விகாரங்களை தானம்
கொடுக்கவும். தானம் கொடுத்தால் கிரகணங்களிலிருந்து விடுபட
முடியும். இதில் சாக்கு போக்கிற்கான விஷயம் எதுவுமில்லை.
அன்பாக நீங்கள் யாரையும் வசப்படுத்த முடியும். அன்பாக புரிய
வையுங் கள். அன்பு என்பது மிகவும் இனிமையான பொருள். சிங்கம்,
யானை போன்ற மிருங்களைக் கூட மனிதர்கள் அன்பினால்
வசப்படுத்துகின்றார்கள். அப்படி செய்பவர்கள் கூட அசுர மனிதர்கள்
தான். நீங்கள் இப்பொழுது தேவதையாகிக் கொண்டிருக் கின்றீர்கள்.
எனவே தெய்வீக குணங் களை தாரணை செய்து இனிமையானவர் ஆக வேண்டும்.
ஒருவரை ஒருவர் ஆத்மா சகோதரர் அதாவது சகோதரன் சகோதரி என்ற
பார்வையில் பாருங்கள். ஆத்மா ஆத்மாவிற்கு ஒருபோதும் துக்கம் தர
முடியாது. நான் உங்களுக்கு இராஜ்ய பாக்கியத்தை தருவதற்காக
வந்திருக்கின்றேன் என்று பாபா கூறுகின்றார். இப்பொழுது
உங்களுக்கு என்ன வேண்டுமோ அதனை என்னிடமிருந்து பெற்றுக்
கொள்ளுங்கள். நான் உங்களை உலகத்திற்கு எஜமானன் ஆக்குவதற்கு
இரட்டை கிரீடதாரி ஆக்குவதற்கு வந்திருக்கின்றேன். ஆனால் முயற்சி
நீங்கள் தான் செய்ய வேண்டும். நான் யார் தலை மீதும் கிரீடம்
வைப்பதில்லை. நீங்கள் தான் முயற்சி செய்து இராஜ்ய திலகத்தை
அடைய வேண்டும். இப்படியெல்லாம் உலகிற்கு எஜமானன் இரட்டை
கிரீடதாரி ஆக முடியும் என்று பாபா முயற்சிக்கான யுக்திகளைக்
கூறுகின்றார். படிப்பின் மீது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
ஒருபோதும் படிப்பை விடக்கூடாது. ஏதாவது காரணத் தினால்
கோபித்துக்கொண்டு படிப்பை விட்டுவிட்டால் மிகுந்த நஷ்டம்
ஏற்படும். இலாப நஷ்டத்தை பார்த்துக் கொண்டேயிருங்கள். நீங்கள்
ஈஸ்வரிய பல்கலைகழகத்தின் மாணவர்கள். ஈஸ்வரன் பாபாவிடம்
படித்துக் கொண்டிருக்கின்றீர்கள். படித்து தேவதையாகிக்
கொண்டிருக் கின்றீர்கள். மாணவன் என்றால் ரெகுலர் (தொடர்ந்து
கற்பவர்) ஆக வேண்டும். மாணவ பருவமே சிறந்தது. எவ்வளவு
படிக்கின்றீர்களோ? கற்பிக்கின்றீர்களோ? மேலும் எந்தளவு நடத்தையை
சீர்த்திருத்திக் கொள்கின்றீர்களோ அவ்வளவு உயர்ந்தவராக முடியும்.
இனிமையான குழந்தைகளே! இப்பொழுது உங்களுடைய வீடு திரும்பும்
நேரம். எப்படி சத்திய யுகம், திரேதாயுகம், துவாபரயுகம் கலியுகம்
வரையில் கடந்து கீழே இறங்கி வந்தீர்கள். அப்படியே இப்பொழுது
நீங்கள் இரும்பு யுகத்திலிருந்து மேலே பொன் யுகம் வரை செல்ல
வேண்டும். எப்பொழுது வெள்ளி யுகம் வரை வந்துவிடு கின்றீர்களோ
அப்பொழுது கர்மேந்திரியங்களின் சஞ்சலத் தன்மை (அலை பாய்தல்)
முடிந்துவிடும். எனவே எவ்வளவு பாபாவை நினைவு செய்கின்றீகளோ
அந்தளவு அத்மாவிற்குள் இருக்கும் ரஜோ, தமோ அழுக்குகள்
விலகிவிடும். மேலும் எந்தளவு துரு நீங்குகின்றதோ அந்தளவு பாபா
என்ற காந்தத்தின் பக்கம் கவர்ந்து இழுக்கப் படுவீர்கள்.
கவர்ச்சி ஏற்பட வில்லையென்றால் ஏதோ அழுக்கு உள்ளது என்று
அர்த்தம். அழுக்கு கள் (கறை) முற்றிலும் விலகி தூய்மையான தங்கம்
ஆகிவிட்டால் கடைசி கர்மாதீத் நிலையாகி விடும்.
நீங்கள் இல்லறத்தில் இருந்து கொண்டே தாமரை மலர் போன்று
தூய்மையாக ஆக வேண்டும். இனிமையான குழந்தைகளே, வீட்டில் இல்லற
வாழ்வில் இருந்துக் கொண்டே சரீர நிர்வாகத் திற்காக தொழில்களை
செய்யுங்கள். அதன் கூடவே இந்த படிப்பையும் படியுங்கள். கைகள்
காரியம் செய்தாலும் உள்ளம் பாபாவிடம் இருக்கட்டும் என்ற பாடல்
இருக்கின்றதல்லவா? காரியங்களைச் செய்தாலும் ஒரே ஒரு நாயகன்
பாபாவை நினைவு செய்யுங்கள். நீங்கள் அரைக் கல்பத்திற்கான
நாயகிகள். தீவிர பக்தியில் கூட பாருங்கள் கிருஷ்ணரை எவ்வளவு
அன்பாக நினைவு செய்கின்றார்கள். இது தீவிர பக்தி,
கண்மூடித்தனமான பக்தி. அசைக்க முடியாத பக்தி. கிருஷ்ணருடைய
தீவிர நினைவில் இருக்கின்றார்கள் ஆனால் அதன் மூலம் யாரும்
முக்தி அடைவதில்லை. இங்கு நிரந்தரமான நினைவு செய்வதற்கான ஞானம்
உள்ளது. பதீத பாவனன் என்னை நினைவு செய்தால் உங்கள் பாவம்
அனைத்தும் அழிந்துவிடும் என்று பாபா கூறுகின்றார். ஆனால் மாயை
மிக பலசாலியாக உள்ளது. யாரையும் அது விடுவதில்லை. மாயையிடம்
அடிக்கடி தோல்வியடைந்தால் தலைகுனிந்து வருத்தப்பட நேரிடும்.
பாபா இனிமையான குழந்தை களுக்கு சிரேஷ்டமான வழி தருகின்றார்
சிரேஷ்டமாவதற்காக. பாபா பார்க் கின்றார் இவ்வளவு முயற்சி
குழந்தைகள் செய்வ தில்லை எனவே பாபாவிற்கு இரக்கம் ஏற்படுகின்றது.
இந்த பயிற்சியை இப்பொழுது செய்யவில்லையென்றால் பிறகு தண்டனை
அடைய வேண்டிவரும் மற்றும் கல்ப கல்பமாக ஒரு பைசா மதிப்பு பெறாத
பதவி கீழானதாகிவிடும்.
முக்கியமான விஷயம் இனிமையான குழந்தைகளுக்கு பாபா புரிய
வைக்கின்றார் குழந்தைகளே ஆத்ம அபிமானி ஆகுங்கள். தேக சகிதமாக
அனைத்து சம்மந்தங்களையும் மறந்து என் ஒருவனை நினைவு செய்யுங்கள்.
அவசியம் தூய்மை ஆக வேண்டும். கன்னிகைகள் தூய்மையாக இருக்கும்
பொழுது அனைவரும் அவர்களுக்கு தலை வணங்குகின்றார்கள். திருமணம்
ஆனபிறகு பூஜாரிகள் ஆகிவிடுகின்றார்கள். மாமியார் வீடு
செல்லும்போது ஆரம்பத்தில் அந்த அளவு அதிக சம்மந்தங் களின்
நினைவு வருவதில்லை. திருமணம் ஆனபிறகு தேக சம்மந்தங்கள்
அதிகமாகிவிடுகின்றது, பிறகு கணவன் குழந்தைகள் மீது மோகம்
ஏற்பட்டுவிடுகின்றது. மாமானார், மாமியார் அனைவருடைய நினைவும்
வந்துக் கொண்டேயிருக்கும். முதலில் தாய் தந்தையிடம் மட்டும்
தான் மோகம் இருக்கும். இங்கு அனைத்து சம்மந்தங்களையும் மறக்க
வேண்டியுள்ளது. ஏனென்றால் இந்த ஒருவர் மட்டுமே உங்களுக்கு
உண்மையிலும் உண்மையான தாய் தந்தை யல்லவா? இது ஈஸ்வரிய சம்மந்தம்
ஆகும். தாயும் நீயே! தந்தையும் நீயே! என்று புகழ் பாடு கின்றனர்
அல்லவா? இந்த தாய் தந்தை உங்களை விஷ்வத்திற்கு எஜமானன்
ஆக்குகின்றார். எனவே நிரந்தரமாக என்னை நினைவு செய்யுங்கள் என்று
பாபா கூறுகின்றார். எந்த வொரு தேகதாரியின் மீதும் பற்று
வைக்காதீர்கள். ஒரு பெண்ணிற்கு தன் கணவனின் நினைவு எவ்வளவு
இருக்கின்றது. அது புதை சேற்றில் தள்ளக் கூடியது. இந்த எல்லை
யற்ற தந்தை உங்களை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கின்றார்.
அப்படிப்பட்ட தந்தையை மிக அன்பாக நினைவு செய்யுங்கள். மேலும்
சுயதர்சன சக்கரத்தை சுற்றுங் கள். இந்த நினைவு பலத்தின்
மூலமாகத்தான் ஆத்மா தங்கம் ஆகி சொர்க்கத்திற்கு எஜமானன்
ஆகிவிடும். சொர்க்கம் என்ற பெயரை கேட்டவுடன் மனம்
மகிழ்ச்சியடைகின்றது. நிரந்தரமாக யார் நினைவு செய்து பிறரையும்
செய்ய வைக்கின்றார்களோ அவர்கள் சொர்க்கத்தில் உயர்ந்த
பதவியடைவார்கள். முயற்சி செய்து செய்து கடைசியில் உங்கள் நிலை
உறுதியாகிவிடும். இங்கு உலகமும் பழைய உலகம், தேகமும் பழைய தேகம்,
தேக சம்மந்தம் அனைத்தும் பழையது, இந்த அனைத்திலிருந்தும்
புத்தியை அகற்றி ஒரு பாபாவிடம் ஈடுபடுத்துங்கள். கடைசி
நேரத்தில் ஒரு பாபாவின் நினைவு மட்டும் தான் இருக்க வேண்டும்.
வேறு ஏதாவது தேகதாரிகள் நினைவு ஏற்பட்டால் கடைசியில் அந்த
நினைவுதான் வரும் பிறகு பதவி கீழானதாகிவிடும். கடைசி நேரத்தில்
யார் பாபாவினுடைய நினைவில் இருக் கின்றார்களோ அவர்களே
நரனிலிருந்து நாராயணன் ஆகின்றார்கள். பாபாவின் நினைவு இருந்தால்
சிவாலயம் தூரத்தில் இல்லை.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் பாபாவிடம் வந்திருக்
கின்றீர்கள் புத்துணர்ச்சி அடைவதற் காக. ஏனென்றால் எல்லையற்ற
தந்தையிடமிருந்து எல்லையற்ற உலகத்தின் இராஜ்யம் கிடைக்கின்றது
என்பது குழந்தைகளுக்குத் தெரியும். இதனை ஒருபோதும்
மறக்கக்கூடாது. இது சதா நினைவில் இருந்தால் குழந்தைகளுக்கு
அளவற்ற குஷி இருக்கும். இந்த பேட்ஜ் அடிக்கடி பார்த்துக் கொண்டே
இருங்கள். அதனை இருதயத்தில் வைத்துக் கொள்ளுங் கள். ஆஹா!
பகவானுடைய ஸ்ரீமத்படி நான் இவ்வாறு ஆகிக் கொண்டிருக்கின்றேன்.
பாபா! பாபா! என்று கூறிக் கொண்டி ருந்தால் சதா நினைவிருக்கும்.
நாம் பாபா மூலமாக இப்படி ஆகின்றோம். பாபாவினுடைய ஸ்ரீமத்படி
நடக்க வேண்டுமல்லவா? இனிமையான குழந்தைகளுக்கு மிகப்பெரிய பரந்த
புத்தி இருக்க வேண்டும். முழுநாளும் சேவைக்கான சிந்தனை ஓடிக்
கொண்டேயிருக்க வேண்டும். சேவையில்லாமல் இருக்க முடியாது
அப்படிப்பட்ட குழந்தைகள் தான் பாபாவிற்கு வேண்டும்.
குழந்தைகளாகிய நீங்கள் இந்த முழு உலகையும் (முற்றுகையிட) சுற்றி
வந்து சேவை செய்ய வேண்டும். அதாவது பதீத உலகை பாவனமாக்க
வேண்டும். முழ உலகையும் துக்கதாமத் திலிருந்து சுகதாமம் ஆக்க
வேண்டும். டீச்சருக்கு கற்பிப்பதில் மகிழ்ச்சி
ஏற்படுகின்றதல்லவா? நீங்கள் இப்போது உயர்ந்த
டீச்சராகிவிட்டீர்கள். நல்ல டீச்சர் என்றால் பலரை தனக்குச்
சமமாக ஆக்குவார்கள், களைப்படைய மாட்டார்கள். ஈஸ்வரிய சேவையில்
மிகுந்த குஷி இருக்கின்றது. பாபாவினுடைய உதவி கிடைக்கின்றது.
இது எல்லையற்ற வியாபாரம். வியாபாரிகள் தான் மிகுந்த செல்வந்தர்
ஆகின்றார்கள். அவர்கள் இந்த ஞான மார்க்கத்தில் அதிகம்
மகிழ்ச்சியாக ஈடுபடுகின்றார்கள். பாபா கூட எல்லையற்ற வியாபாரி
அல்லவா? வியாபாரம் முதல் தரமானது தான் ஆனால் இதற்கு
தைரியத்துடன் தாரணை வேண்டும். புது புது குழந்தைகள் கூட பழைய
குழந்தைகளைக் காட்டிலும் முன்னால் செல்ல முடியும்.
ஒவ்வொருவருடைய அதிர்ஷ்டமும் தனிப்பட்டது. எனவே முயற்சியும்
ஒவ்வொருவரும் தனியாகத்தான் செய்ய வேண்டும். தன்னை முழுமையாக
சோதனை செய்ய வேண்டும்.அப்படிப்பட்டவர்கள் இரவு பகல் முயற்சியில்
ஈடுபடுவார்கள். நான் ஏன் என் நேரத்தை வீணடிக்க வேண்டும்? என்று
கூறுவார்கள். எவ்வளவு முடியுமோ நேரத்தை பயனுள்ளதாக்குங்கள்.
தனக்குத் தானே உறுதிமொழி எடுக்கின்றார் கள் நான் ஒருபோதும்
பாபாவை மறக்கமாட்டேன். ஸ்காலர்ஷிப் (பாபாவின் உதவி) அடைந்தே
தீருவேன் என்று உறுதியாக இருப்பார்கள். அப்படிப்பட்ட
குழந்தைகளுக்கு பாபாவின் உதவியும் கிடைக் கின்றது.
அப்படிப்பட்ட புது புது முயற்சி செய்யும் குழந்தைகளையும்
நீங்கள் பார்க்கலாம். சாட்சாத் காரம் பார்த்துக் கொண்டே
யிருப்பார்கள். எப்படி ஆரம்ப காலத்தில் ஏற்பட்டதோ அப்படி
கடைசியிலும் ஏற்படும். எவ்வளவு நெருக்கத்தில் வருகின்றீர்களோ
அவ்வளவு சந்தோஷத்தில் நடனமாடுவீர்கள். இங்கு இரத்த நதி ஓடும்
விளையாட்டு நடந்துக் கொண்டு இருக்கும்.
குழந்தைகளுக்கு ஈஸ்வரிய ரேஸ் (ஓட்டம்) நடந்துக்
கொண்டிருக்கின்றது. எவ்வளவு வேகமாக முன்னோக்கி ஓடுகின்றீர்களோ
அவ்வளவு புது உலக காட்சிகள் நெருக்கத்தில் தென்படும். யாருக்கு
காட்சிகள் நெருக்கத்தில் தென்படவில்லையோ அவர்களுக்கு குஷி
இருக்காது. இப்பொழுது கலியுக உலகத்தின் மீது வைராக்கியம்,
சத்யுக உலகத்தின் மீது அன்பும் ஏற்பட வேண்டும். சிவபாபாவின்
நினைவிருந்தால் சத்திய யுகத்தின் நினைவும் இருக்கும். இப்பொழுது
நாம் சத்தியயுகத்தின் பக்கம் சென்றுக் கொண்டிருக்கின்றோம்.
கால்கள் நரகத்தின் பக்கம், முகம் சத்திய யுகத்தின் பக்கம்
இருக்க வேண்டும். இப்பொழுது சிறியவர் பெரியவர் அனைவருக்கும்
வானப்பிரஸ்த நிலையாகும். நான் சென்று பாலகிருஷ்ணன் ஆகப்
போகின்றேன் என்ற போதை பிரம்மா பாபாவிற்கு சதா இருந்தது.
அதற்காக முதலிலேயே பரிசையும் அனுப்புகின்றார்கள். யாருக்கு
முழுமையான நிச்சயபுத்தி இருக்கின்றதோ அந்த கோபிகைகள் பரிசையும்
அனுப்பு கின்றார்கள். அவர்களுக்கு அதீந்திரிய சுகத்தின் அனுபவம்
ஏற்படுகின்றது. நாம் தான் அமர லோகத்தின் தேவதையாகப் போகின்றோம்.
கல்பத்திற்கு முன்புக்கூட நாம் தான் ஆகி இருந்தோம். பிறகு 84
பிறவி எடுத்துள்ளோம். இந்த விளையாட்டு நினைவில் இருந்தால்
மிகுந்த சௌபாக்கியம் ஆகும். மிகப்பெரிய அதிர்ஷ்டம்
கிடைத்துள்ளது என்ற குஷியில் எப்பொழுதும் இருங்கள். 5000
ஆண்டுகளுக்கு முன்புகூட நான் தான் இராஜ்ய பாக்கியத்தை
அடைந்திருந்தேன் மீண்டும் நாளை அதனை அடைவேன். நாடகத்தில்
பதிவாகியுள்ளது. எப்படி கல்பத்திற்கு முன்பு பிறவி எடுத்தோமோ
அப்படி தான் எடுப்போம். அதே தாய் தந்தைதான் நமக்கு
கிடைப்பார்கள். யார் கிருஷ்ணருடைய தந்தையாக இருந்தாரோ? அவரே
மறுபடியும் ஆவார்கள். இப்படி முழுநாளும் சிந்தனை
செய்தீர்களென்றால் மிக குஷி அடைபவராக இருப்பீர்கள். ஞான சிந்தனை
செய்ய வில்லையென்றால் அவர்கள் ஆரோக்கியமற்றவர்கள் ஆவார்கள். பசு
சாப்பிட்ட பிறகு முழுநாளும் அசைப்போடுகின்றது. வாய்
அசைப்போட்டுக் கொண்டேயிருக்கும். அசைப் போடவில்லை யென்றால்
அதற்கு நோய் என்று புரிந்து கொள்கின்றார்கள். இங்கும் கூட
அப்படித்தான்.
எல்லையற்ற தந்தை மற்றும் தாதா இருவருக்கும் இனிமையான குழந்தைகள்
மீது மிகுந்த அன்புள்ளது. எவ்வளவு அன்பாக படிப்பு
கற்றுத்தருகின்றார். கருப்பிலிருந்து வெண்மையாக ஆக்குகின்றார்.
எனவே குழந்தைகளுக்கு சந்தோஷம் அதிகமாகிக் கொண்டேயிருக்க
வேண்டும். குஷி அதிகமாவது நினைவு யாத்திரை மூலமாகத்தான். பாபா
கல்ப கல்பமாக மிக அன்பாக சேவை செய்கின்றார். 5 தத்துவங்கள்
சகிதமாக அனைத்தையும் தூய்மை யாக்குகின்றார். எவ்வளவு பெரிய
எல்லையற்ற சேவையாகும். பாபா மிக அன்பாக குழந்தைகளுக்கு
படிப்பினை தருகின்றார், ஏனென்றால் குழந்தைகளை மாற்றுவது (சீர்படுத்துவது)
பாபா மற்றும் டீச்சருடைய கடமையாகும். பாபா வினுடையது தான்
ஸ்ரீமத். இதன் மூலமாகத்தான் சிரேஷ்ட நிலையை அடைகின்றோம்.
எவ்வளவு அன்பாக நினைவு செய்கின்றீர்களோ அந்தளவு சிரேஷ்டமாகி
விடுவீர்கள். இதனைக்கூட சார்ட்டில் எழுதவும். நான் ஸ்ரீமத்படி
நடக்கின்றேனா? அல்லது மன்மத்படி நடக்கின்றேனா என்று சார்ட்
எழுதவும். ஸ்ரீமத்படி நடந்தால்தான் மிகச்சரியானவராக முடியும்.
நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக்
கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய
பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) நான் என்னுடைய நேரத்தை வீணடிக்கமாட்டேன் என்று தனக்குத் தானே
உறுதிமொழி எடுக்கவும். சங்கமயுகத்தின் ஒவ்வொரு வினாடியையும்
வெற்றியுடையதாக்க வேண்டும். நாம் பாபாவை ஒருபோதும்
மறக்கக்கூடாது. ஸ்காலர்ஷிப் (தந்தையின் உதவியை) அவசியம் பெற
வேண்டும்.
2) இப்பொழுது என்னுடைய வானப்பிரஸ்த நிலை என்ற நினைவு சதா
இருக்க வேண்டும். கால்கள் நரகத்தின் பக்கம், முகம்
சொர்க்கத்தின் பக்கம் இருக்க வேண்டும். கண்ணாமூச்சி விளையாட்டை
நினைவு செய்து மிக சந்தோஷமாக இருக்க வேண்டும். ஆத்ம
அபிமானியாவதற்கு முயற்சி செய்யவும்.
வரதானம்:
தனது சர்வ சிரேஷ்ட பதவியின் மகிழ்ச்சி மூலம்
அநேக ஆத்மாக்களுக்கு நன்மை செய்யக்கூடிய அத்தாரிட்டி சொரூபம்
ஆகுக.
நாம் சர்வ சக்திவானின் அத்தாரிட்டி குழந்தைகள் - இது சர்வ
சிரேஷ்ட பதவி. இந்தப் பதவியின் மகிழ்ச்சியில் இருப்பீர்களானால்
மாயாவின் அடிமைத்தனம் முடிந்து போகும். இந்த அத்தாரிட்டி
சொரூபம் ஆவதன் மூலம் எந்த ஓர் ஆத்மாவுக்கும் நன்மை செய்ய
முடியும். யார் சதா இதே மகிழ்ச்சியில் இருக்கிறார்களோ, அவர்கள்
சதா காலத்திற்கான ராஜ்ய பாக்கியத்தை அடை கிறார்கள். இந்த
அத்தாரிட்டியை சதா நிலையாக வைத்திருப்பீர்களானால் உலகம் உங்கள்
முன் தலை வணங்கும். நீங்கள் யார் முன்பாகவும் தலை வணங்க
மாட்டீர்கள்.
சுலோகன்:
செய்விப்பவராகிய பாபாவின் ஸ்மிருதி மூலம் நான் என்பதை முடித்து
விடுங்கள்.
அவ்யக்த இஷாரா - மகான் ஆவதற்காக இனிமை மற்றும்
பணிவு என்ற குணங்களை தாரணை செய்யுங்கள்
இனிமை மூலம் பாபாவின் சமீப நிலையினுடைய சாட்சாத்காரம்
செய்வியுங்கள். உங்கள் சங்கல்பத்தில் கூட இனிமை, சொல்லில் இனிமை,
கர்மத்தில் கூட இனிமை இருக்க வேண்டும் - இதுவே பாபாவுக்கு மிக
அருகில் இருக்கும் நிலையாகும். எனவே பாபாவும் தினம் சொல்கிறார்
– இனிமையிலும் இனிமையான குழந்தைகளே. மேலும் குழந்தைகளும்
பதிலுக்கு சொல்கிறார்கள் - இனிமையிலும் இனிமையான பாபா. நாள்
தோறும் சொல்லும் இந்த இனிமையான சொல் இனிமையானவராகவே ஆக்கி
விடும்.