08-05-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! (தேஹீ அபிமானி)
ஆத்ம உணர்வுடையவராக ஆகி தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால்
நினைவின் பலம் சேமிப்பு ஆகும். நினைவின் பலத்தின் மூலம் நீங்கள்
முழு உலகத்தின் இராஜ்யத்தைப் பெற முடியும்.
கேள்வி:
குழந்தைகளாகிய உங்களுடைய
எண்ணத்திலும் கனவிலும் கூட இல்லாத எந்த ஒரு விஷயம் இப்பொழுது (பிராக்டிகல்)
நடைமுறையில் ஆகி உள்ளது?
பதில்:
நாங்கள் பகவானிடம் இராஜயோகம்
கற்றுக் கொண்டு உலகத்தின் அதிபதி ஆகி விடுவோம்,
இராஜ்யத்திற்காக படிப்பை படிப்போம் என்பது உங்களுடைய
எண்ணத்திலும் கனவிலும் கூட இருக்கவில்லை. சர்வ சக்திவான்
தந்தையிடமிருந்து பலம் பெற்று நாங்கள் சத்யுகத்தின் சுயராஜ்ய
அதிகாரி ஆகிறோம் என்ற எல்லை கடந்த குஷி இப்பொழுது உங்களுக்கு
உள்ளது.
ஓம் சாந்தி.
இங்கு பெண் குழந்தைகள் (சகோதரிகள்) பயிற்சி செய்விப்பதற்காக
அமருகிறார்கள். உண்மையில் யார் ஆத்ம உணர்வுடையவராக (தேஹீ
அபிமானி) ஆகி தந்தையின் நினைவில் அமருகிறார்களோ அவர்கள் தான்
இங்கு (கதியில்) அமர வேண்டும். நினைவில் அமரவில்லை என்றால் அவரை
ஆசிரியர் (டீச்சர்) என்று கூற முடியாது. நினைவில் சக்தி
இருக்கும். ஞானத்தில் சக்தி இல்லை. இதற்கு நினைவின் பலம் என்றே
கூறப்படுகிறது. யோக பலம் என்பது சந்நியாசி களின் வார்த்தை ஆகும்.
தந்தை கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை. குழந்தை களே!
இப்பொழுது தந்தையை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார்.
எப்படி சிறிய குழந்தைகள் தாய் தந்தையை நினைவு செய்கிறார்கள்
அல்லவா? அவர்களோ தேகதாரி ஆவார்கள். குழந்தைகளாகிய நீங்களோ
விசித்திரமானவர்கள் (தேகமற்றவர்கள்). இந்த சித்திரம் (உடல்)
இங்கு உங்களுக்கு கிடைக்கிறது. நீங்கள் விசித்திர தேசத்தில் (பரந்தாமம்)
இருப்பவர்கள் ஆவீர்கள். அங்கு சித்திரம் (உடல்) இருப்பது இல்லை.
முதன் முதலில் நாமோ ஆத்மா ஆவோம் என்பதைப் பக்குவப்படுத்த
வேண்டும். எனவே குழந்தைகளே (தேஹீ அபிமானி) ஆத்ம உணர்வுடையவர்
ஆகுங்கள் என்று தந்தை கூறுகிறார். தன்னை ஆத்மா என்று நிச்சயம்
செய்யுங்கள். நீங்கள் நிர்வாண தேசத்திலிருந்து வந்துள்ளீர்கள்.
அது ஆத்மாக்களாகிய உங்கள் அனைவரின் வீடு ஆகும். உங்கள் பாகத்தை
நடிக்க இங்கு வருகிறீர்கள். முதன் முதலில் யார் வருகிறார்கள்.
இதுவும் உங்களுடைய புத்தியில் உள்ளது. உலகத்தில் யாருக்குமே
இந்த ஞானம் கிடையாது. இப்பொழுது சாஸ்திரங்கள் போன்ற என்னென்ன
படிக்கிறீர்களோ அவை அனைத்தையுமே மறந்து விடுங்கள் என்று தந்தை
கூறுகிறார். கிருஷ்ணருடைய மகிமை, இன்னாருடைய மகிமை எவ்வளவு
செய்கிறார்கள். காந்திக்குக் கூட எவ்வளவு மகிமை செய்கிறார்கள்.
ஏதோ அவர் இராமராஜ்யம் ஸ்தாபனை செய்து விட்டு போயிருக்கிறார்
என்பது போல. ஆனால் சிவபகவான் கூறுகிறார் - ஆதி சநாதன இராஜா
இராணியின் விதி முறை இருந்தது. தந்தை இராஜயோகத்தைக் கற்பித்து
இராஜா ராணி ஆக்கினார். அந்த ஈஸ்வரிய பழக்க வழக்கத்தைக் கூட
உடைத்து விட்டார். எங்களுக்கு இராஜாவின் ஆட்சி வேண்டாம்.
பிரஜைகளின் பிரஜைகள் மீது ராஜ்யம் (குடியரசு) வேண்டும் என்றார்.
இப்பொழுது அதனுடைய நிலைமை என்ன ஆயிற்று? துக்கமே துக்கம் !
சண்டையிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அநேக வழிகள்
ஏற்பட்டுள்ளன. இப்பொழுது குழந்தை களாகிய நீங்கள் ஸ்ரீமத் படி
இராஜ்யத்தைப் பெறுகிறீர்கள். எந்த அளவு உங்களிடம் பலம்
இருக்கும் என்றால் அங்கு படைகள் ஆகியவை இருக்காது. பயப்பட
வேண்டிய எந்த விஷயமும் கிடையாது. இந்த இலட்சுமி நாராயணரின்
இராஜ்யம் இருக்கும் பொழுது அத்வைத (ஒரே) இராஜ்யமாக இருந்தது.
கை தட்ட வேண்டிய வகையில் இரண்டு என்று இருக்கவே இல்லை. அதற்கு
அத்வைத இராஜ்யம் என்றே கூறப்பட்டது. குழந்தைகளாகிய உங்களை தந்தை
தேவதையாக ஆக்குகிறார். பிறகு "த்வைதம்" இரண்டும் பிரியும்
பொழுது இராவணன் மூலமாக மூன்றாவதாக அசுரர் ஆகி விடுகிறீர்கள்.
பாரதவாசிகளாகிய நாங்கள் முழு உலகிற்கு அதிபதியாக இருந்தோம்
என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
உங்களுக்கு உலகத்தின் இராஜ்யம் நினைவின் பலத்தினால் மட்டுமே
கிடைத்திருந்தது. இப்பொழுது மீண்டும் கிடைத்துக் கொண்டிருக்
கிறது. நினைவின் பலத்தினால் மட்டுமே கல்ப கல்பமாக கிடைத்துக்
கொண்டிருக்கிறது. படிப்பில் கூட பலம் உள்ளது. எப்படி வழக்கறிஞர்
ஆகிறார்கள் என்றால் பலன் உள்ளது அல்லவா? அது ஒரு பைசாவின் பலன்.
நீங்கள் யோக பலத்தினால் உலகத்தின் மீது ஆட்சி புரிகிறீர்கள்.
சர்வ சக்திவான் தந்தையிடமிருந்து பலம் கிடைக்கிறது. பாபா
நாங்கள் கல்ப கல்பமாக உங்களிட மிருந்து சத்யுகத்தின்
சுயராஜ்யத்தைப் பெறுகிறோம் மற்றும் இழக்கிறோம், மீண்டும்
பெறுகிறோம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். உங்களுக்கு முழுமையான
ஞானம் கிடைத்துள்ளது. இப்பொழுது நாம் ஸ்ரீமத்படி முதன்மையான
உலக இராஜ்யத்தைப் பெறுகிறோம். உலகம் கூட சிறந்ததாக ஆகி
விடுகிறது. இந்த படைப்பவர் மற்றும் படைப்பின் ஞானம் உங்களுக்கு
இப்பொழுது உள்ளது. நாம் இந்த இராஜ்யத்தை எப்படி பெற்றோம் என்ற
ஞானம் இந்த இலட்சுமி நாராயணருக்குக் கூட இருக்காது. இங்கு
நீங்கள் படிக்கிறீர்கள். பின் சென்று அரசாட்சி புரிகிறீர்கள்.
யாராவது ஒருவர் நல்ல செல்வந்தர் வீட்டில் ஜென்மம் எடுக்கிறார்
என்றால் இவர் முந்தைய பிறவியில் நல்ல கர்மம் செய்துள்ளார், தான
புண்ணியம் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது அல்லவா? எப்படி
கர்மமோ அப்படி பிறவி கிடைக்கிறது. இப்பொழுதோ இது இருப்பதே
இராவண இராஜ்யமாக. இங்கு என்ன செயல் செய்தாலும் அது விகர்மமாக
ஆகி விடுகிறது. படி இறங்க வேண்டி உள்ளது. சதோ, இரஜோ மற்றும்
தமோவில் வர வேண்டி உள்ளது. ஒவ்வொரு பொருளும் கூட புதிய
திலிருந்து பழையதாக ஆகிறது. எனவே இப்பொழுது குழந்தைகளாகிய
உங்களுக்கு அளவற்ற குஷி இருக்க வேண்டும். நாம் உலகிற்கு அதிபதி
ஆகிறோம் என்பது உங்களுடைய எண்ணத்திலும் கனவிலும் கூட
இருக்கவில்லை. இந்த இலட்சுமி நாராயணரின் இராஜ்யம் முழு
உலகத்தின் மீது இருந்தது என்பதை பாரதவாசிகள் அறிந்துள்ளார்கள்.
பூஜிக்கத்தக்க இருந்தவர்களே பூசாரி என்று பாடவும் படுகிறது.
இப்பொழுது உங்களுடைய புத்தியில் இது இருக்க வேண்டும். இந்த
நாடகமோ மிகவும் அதிசயமானது ! எப்படி நாம் 84 பிறவிகள்
எடுக்கிறோம் என்பது யாருக்கும் தெரியாது. சாஸ்திரங்களில் 84
லட்சம் பிறவிகள் என்று போட்டு விடுகிறார்கள். இவை எல்லாமே பக்தி
மார்க்கத்தின் பொய்யான விஷயங்கள் ஆகும் என்று தந்தை கூறுகிறார்.
இராவண இராஜ்யம் ஆகும் அல்லவா? ராம இராஜ்யம் மற்றும் இராவண
இராஜ்யம் எப்படி ஆகிறது என்பது குழந்தை களாகிய உங்களைத் தவிர
வேறு யாருடைய புத்தியிலும் இல்லை. இராவணனை ஒவ்வொரு வருடமும்
எரிக்கிறார்கள். எனவே எதிரி ஆனார் அல்லவா? 5 விகாரங்கள்
மனிதனின் எதிரி ஆகும். இராவணன் யார். எதற்காக எரிக்கிறோம் - இது
யாருக்குமே தெரியாது. யார் தங்களை சங்கம யுகத்தினர் என்று
நினைக்கிறார்களோ அவர்களுடைய நினைவில் நாங்கள் இப்பொழுது
புருஷோத் தமராக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பது நினைவில்
இருக்கும். பகவான் நமக்கு இராஜயோகம் கற்பித்து நரனிலிருந்து (மனிதர்)
நாராயணராக, இழிந்த நிலையிலிருந்து (ப்ரஷ்டாச்சாரி) உயர்ந்த
நிலையினராக (சிரேஷ்டாச்சாரி) ஆக்குகிறார். நமக்கு உயர்ந்ததிலும்
உயர்ந்த நிராகாரமான பகவான் கற்பிக்கிறார்! என்பதை
குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். எவ்வளவு அளவற்ற குஷி
இருக்க வேண்டும்! நாம் (ஸ்டூடண்ட்) மாணவர்கள் ஆவோம் என்பது
பள்ளிக் கூடத்தில் மாணவர்களின் புத்தியில் இருக்கிறது அல்லவா?
அங்கோ சாதாரண ஆசிரியர் படிப் பிக்கிறார். ஆனால் இங்கோ
உங்களுக்கு பகவான் கற்பிக்கிறார். படிப்பினால் இவ்வளவு உயர்ந்த
பதவி கிடைக்கிறது என்று எண்ணும் பொழுது எவ்வளவு நன்றாகப்
படிக்க வேண்டும்? பாடம் மிகவுமே சுலபமானது ! காலையில் அரை மணி
நேரம் முக்கால் மணி நேரம் படிக்க வேண்டும் அவ்வளவே! நாள்
முழுவதும் தொழில் ஆகியவையில் நினைவு மறந்து விடுகிறது. எனவே
இங்கு அதிகாலை வந்து நினைவில் அமருகிறீர்கள். பாபாவை மிகவும்
அன்புடன் நினைவு செய்யுங்கள் என்று கூறப் படுகிறது - பாபா
நீங்கள் எங்களுக்கு கற்ப்பிக்க வந்துள்ளீர்கள். நீங்கள் 5
ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு வந்து கற்ப்பிக்கிறீர்கள் என்பது
இப்பொழுது நமக்கு தெரிய வந்துள்ளது. பாபாவிடம் குழந்தைகள் வரும்
பொழுது பாபா "இதற்கு முன்பு எப்பொழுது சந்தித்துள்ளீர்கள்"
என்று கேட்பார். இது போன்ற கேள்வி எந்த ஒரு சாது சந்நியாசி
ஆகியோர் கேட்க முடியாது. அங்கோ சத்சங்கத் தில் யார்
வேண்டுமானாலும் போய் அமருகிறார்கள். நிறைய பேர் இருப்பதைப்
பார்த்து எல்லோரும் உள்ளே நுழைந்து விடுகிறார்கள். நாம் கீதை
இராமாயணம் ஆகியவற்றை எவ்வளவு குஷியுடன் போய் கேட்டு
கொண்டிருந்தோம் என்பதை நீங்களும் இப்பொழுது புரிந்துள்ளீர்கள்.
எதுவுமே புரியாமல் தான் இருந்தீர்கள். அவை எல்லாமே
பக்தியினுடைய குஷி ஆகும். மிகவுமே குஷியில் நடனமாடிக் கொண்டு
இருப்பார்கள். ஆனால் பிறகு கீழே இறங்கிக் கொண்டே வருகிறார்கள்.
பலவிதமான ஹடயோகம் ஆகியவை செய்கிறார்கள். ஆரோக்கியத்திற்காகவே
எல்லாம் செய்கிறார்கள். எனவே இவை எல்லாமே பக்தி மார்க்கத்தின்
பழக்க வழக்கங்கள் ஆகும் என்பதை தந்தை புரிய வைக்கிறார்.
படைப்பவர் மற்றும் படைப்பு பற்றி யாருக்குமே தெரியாது. வேறு
என்ன தான் இருக்கிறது? படைப்பவர் மற்றும் படைப்பை அறிந்து
கொள்வதால் நீங்கள் என்னவாக ஆகிறீர்கள். மேலும் தெரியாமல்
இருக்கும் பொழுது நீங்கள் என்னவாக ஆகி விடுகிறீர்கள். நீங்கள்
அறிந்து கொள்வதால் செழிப்புடையவர்கள் ஆகிறீர்கள். தெரியாமல்
இருக்கும் பொழுது அதே பாரதவாசிகள் (இன்சால்வெண்ட்) திவால் ஆகி
விட்டுள்ளார்கள். பொய் கூறிக் கொண்டே இருக்கிறார்கள். உலகத்தில்
என்னவெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது! எவ்வளவு பணம், தங்கம்
ஆகியவற்றை கொள்ளை அடித்துச் செல்கிறார்கள். அங்கோ நாங்கள் தங்க
மாளிகை கட்டுவோம் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள்
அறிந்துள்ளீர்கள். சட்டவியல் (பேரிஸ்டரி) ஆகியவை படிக்கிறார்கள்
என்றால், நாங்கள் கூட தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பின் இது
செய்வோம், வீடு கட்டுவோம் என்று உள்ளுக்குள் இருக்கும் அல்லவா?
நாம் சொர்க்கத்தின் இளவரசர், இளவரசி ஆவதற்காகப் படித்துக்
கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்கு ஏன் புத்தியில் வருவதில்லை?
எவ்வளவு குஷி இருக்க வேண்டும்? ஆனால் வெளியில் சென்ற உடனேயே
குஷி மறைந்து விடுகிறது. சிறிய சிறிய பெண் குழந்தைகள் இந்த
ஞானத்தில் ஈடுபட்டு விடுகிறார்கள். ஆனால் உறவினர்கள் ஒன்றும்
புரிந்து கொள்வதில்லை. மந்திர ஜாலம் என்று கூறி விடுகிறார்கள்.
படிக்க விடமாட்டோம் என்பார்கள். இந்த நிலைமையில் சிறியவர் களாக
(18 வயதிற்குட்பட்டவர்களாக) இருக்கும் வரை தாய் தந்தையர்
கூறியதை ஏற்க வேண்டி இருக்கும். நாம் ஏற்று கொள்ள முடியாது.
நிறைய பூசல் ஏற்பட்டு விடுகிறது. ஆரம்பத்தில் எவ்வளவு சச்சரவு
ஏற்பட்டன.! பெண் குழந்தை நான் 18 வயதினர் என்று கூற, தந்தை
இல்லை. 16 வயது தான், என்று கூறி சண்டை போட்டு, கூட்டிச் சென்று
விடுவார்கள். இளைஞர் (மைனர்) என்றாலே தந்தையின் கட்டளைப்படி
நடக்க வேண்டும். வாலிபர் (மேஜர்) என்றால், பின் எது
விரும்பினாலும் செய்யலாம். சட்டம் கூட இருக்கிறது அல்லவா?
நீங்கள் தந்தையிடம் வரும் பொழுது தங்களது லௌகீகத் தந்தையிடம்
சம்மதக் கடிதம் வாங்கிக் கொண்டு வாருங்கள் என்ற சட்டம் உள்ளது
என்று பாபா கூறுகிறார். பிறகு (மேனர்ஸ்) நடத்தை கூட பார்க்க
வேண்டி உள்ளது. (மேனர்ஸ்) நடத்தை சரி இல்லை என்றால் திரும்பிப்
போக வேண்டி வரும். விளையாட்டில் கூட அவ்வாறு ஆகிறது. சரியாக
விளையாடவில்லை என்றால் அவர்களை வெளியில் போய் விடு, மதிப்பை
இழக்குமாறு செய்கிறீர்கள் என்று கூறுவார்கள். இப்பொழுது நாம்
போர்க்களத்தில் இருக் கிறோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள்
அறிந்துள்ளீர்கள். கல்ப கல்பமாக தந்தை வந்து நம்மை மாயை மீது
வெற்றி அடையுமாறு செய்விக்கிறார். முக்கியமான விஷயமே பாவனமாக
ஆவதற்கானதாகும். விகாரத்தினால் (தூய்மையற்றவராக) பதீதமாக
ஆனீர்கள். காமம் மகா எதிரி ஆகும் என்று தந்தை கூறுகிறார். அது
முதல், இடை, கடை, துக்கம் அளிக்கக் கூடியது ஆகும். யார்
பிராமணர்களாக ஆகிறார்களோ அவர்களே தேவி தேவதா தர்மத்தில்
வருவார்கள். பிராமணர் களில் கூட வரிசைக்கிரமமாக இருக்கிறார்கள்.
மீது விட்டில் பூச்சிகள் வருகின்றது. ஒரு சில எரிந்து இறந்து
விடும். ஒரு சில சுற்றி விட்டுப் போய் விடும். இங்கும்
வருகிறார்கள். ஒரு சிலரோ ஒரேயடியாக சமர்ப்பணம் ஆகி
விடுகிறார்கள். ஒரு சிலர் கேட்டு விட்டு பின் போய் விடு
கிறார்கள். முன்பெல்லாமோ இரத்தத்தில் கூட "பாபா நாங்கள்
உங்களுடையவர் ஆவோம்" என்று எழுதி கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
பிறகும் மாயை தோற்கடித்து விடுகிறது. அந்த அளவு மாயையின்
யுத்தம் நடக்கிறது. இதற்குத் தான் போர்க்களம் என்று
கூறப்படுகிறது. இதையும் நீங்கள் புரிந்துள்ளீர்கள். பரமபிதா
பரமாத்மா பிரம்மா மூலமாக அனைத்து வேதங்கள், சாஸ்திரங் களின்
சாரத்தைப் புரிய வைக்கிறார். படங்களோ ஏராளமாக தயாரித்துள்ளார்
அல்லவா? நாரதருடைய உதாரணம் கூட இந்த நேரத்தினுடையது ஆகும்.
எல்லோருமே "நாங்கள் இலட்சுமி அல்லது நாராயணர் ஆகி விடுவோம்"
என்று கூறுகிறார்கள். தந்தை கூறுகிறார்- "நாம் தகுதி
யுடையவர்களாக இருக்கிறோமா" என்று உங்களை நீங்களே பாருங்கள்
என்று தந்தை கூறுகிறார். நம்மிடம் எந்த ஒரு விகாரமும் இல்லையே?
ஒரு நாரத பக்தர்களோ எல்லோரும் ஆவார்கள் அல்லவா? இது ஒரு உதாரணம்
எழுதியுள்ளார்கள்.
நாங்கள் ஸ்ரீலட்சுமியை மணம் முடிக்க முடியுமா என்று பக்தி
மார்க்கத்தினர் கூறுகிறார்கள். தந்தை கூறுகிறார், இல்லை. ஞானம்
கேட்டால் தான் சத்கதியை அடைய முடியும். பதீத பாவனரான நான் தான்
அனைவருக்கும் சத்கதி செய்பவன் ஆவேன். தந்தை நம்மை இராவண
இராஜ்யத்திலிருந்து விடுவித்து (லிபரேட்) கொண்டிருக்கிறார்
என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். அது ஸ்தூல
யாத்திரை ஆகும். மன்மனாபவ என்று பகவான் கூறுகிறார். அவ்வளவே!
இதில் அடி வாங்க வேண்டிய விஷயம் இல்லை. அவை எல்லாமே பக்தி
மார்க்கத் தின் அடிகள். அரைக் கல்பம் பிரம்மாவின் பகல்.
அரைக்கல்பம் பிரம்மாவின் இரவு. பி.கே.க் களாகிய நமக்கு
இப்பொழுது அரைக்கல்பம் பகலாக இருக்கும் என்பதை நீங்கள்
புரிந்துள்ளீர்கள். நாம் சுகதாமத்தில் இருப்போம். அங்கு பக்தி
இருக்காது. நாம் எல்லோரையும் விட செல்வந்தராக ஆகிறோம் என்பதை
இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். எனவே
எவ்வளவு குஷி இருக்க வேண்டும். நீங்கள் எல்லோரும் முதலில்
முரட்டு கற்களாக இருந்தீர்கள். இப்பொழுது தந்தை பட்டை தீட்டி
வைரமாக்கிக் கொண்டிருக்கிறார். பாபா வைர வியாபாரியும் ஆவார்
அல்லவா? நாடக திட்டப்படி பாபா இரதம் கூட அனுபவம்
நிறைந்தவருடையதை எடுத்திருக்கிறார். கிராமத்து பையன் என்ற பாடல்
கூட உள்ளது. கிருஷ்ணர் கிராமத்து பையன் எவ்வாறு ஆக
முடியும்?அவரோ சத்யுகத்தில் இருந்தார். அவரையோ ஊஞ்சல்களில்
ஊஞ்சலாட்டு கிறார்கள். கிரீடம் அணிவிக்கிறார்கள். பிறகு ஏன்
கிராமத்து சிறுவன் என்று கூறுகிறார்கள்? கிராமத்து சிறுவர்கள்
(ஷியாம்) கருமையானவர்கள். இப்பொழுது (சுந்தர்) அழகானவராக ஆக
வந்துள்ளீர்கள். தந்தை ஞானத்தின் கழுவிலேற்றுகிறார் அல்லவா?
இந்த சத்தியத்தின் (சங்) தொடர்பு கல்ப கல்பமாக கல்பத்தில் ஒரு
முறை தான் கிடைக்கிறது. மற்றது எல்லாமே பொய் யான தொடர்பு ஆகும்.
எனவே ஹியர் நோ ஈவில் தீயதைக் கேட்காதீர்கள் என்று தந்தை
கூறுகிறார். எனக்கும் உங்களுக்கும் நிந்தனை செய்து கொண்டே
இருக்கக் கூடிய அப்பேர்ப்பட்ட விஷயங்களைக் கேட்காதீர்கள்.
ஞானத்தில் வரும் குமாரிகளோ எங்களுக்கு தந்தையின் சொத்தில் பங்கு
உள்ளது என்று கூறலாம். ஏன் நாங்கள் அவற்றின் மூலம் பாரதத்தின்
சேவையின் பொருட்டு சென்டர் திறக்கக் கூடாது? கன்யா தானமோ
கொடுக்க வேண்டியே உள்ளது. அந்த பங்கை எனக்கு கொடுங்கள், நாங்கள்
பின் சென்டர் திறப்போம். நிறைய பேருக்கு நன்மை உண்டாகும். இது
போன்ற யுக்தி கையாள வேண்டும். இது உங்களுடைய ஈசுவரிய (மிஷன்)
சேவை ஆகும். நீங்கள் கல்புத்தியை தங்க புத்தியாக ஆக்குகிறீர்கள்.
யார் நமது தர்மத்தினராக இருப்பார்களோ அவர்கள் நிச்சயம் வருவார்
கள். ஒரு வீட்டில் ஒரே தேவி தேவதா தர்மத்தின் மலராக
வெளிப்படுவார். மற்றவர்கள் வர மாட்டார்கள். உழைப்பு
தேவைப்படுகிறது அல்லவா? தந்தை அனைத்து ஆத்மாக்களையும் பாவன மாக
ஆக்கி அனைவரையும் அழைத்துச் செல்கிறார். எனவே சங்கமத்தின்
படத்திடம் கூட்டி வாருங்கள் என்று பாபா புரிய வைத்திருந்தார்.
இந்த பக்கம் இருப்பது கலியுகம். அந்தப் பக்கம் இருப்பது
சத்யுகம்.சத்யுகத்தில் இருப்பவர்கள் தேவதைகள். கலியுகத்தில்
இருப்பவர்கள் அசுரர்கள். இதற்கு புருஷோத்தம சங்கம யுகம் என்று
கூறப்படுகிறது. தந்தை தான் புருஷோத்தமராக ஆக்கு கிறார். யார்
படிக்கிறார்களோ அவர்கள் சத்யுகத்தில் வருவார்கள். மற்றவர்கள்
எல்லோரும் முக்தி தாமத்திற்குச் சென்று விடுவார்கள். பிறகு
அவரவர் நேரத்தில் வருவார்கள். இந்த கால சக்கரத்தின் படம்
மிகவும் நன்றாக உள்ளது. குழந்தைகளுக்கு சேவையில் ஆர்வம் இருக்க
வேண்டும். நாம் இது போல சேவை செய்து ஏழைகளையும் முன்னேற்றச்
செய்து அவர்களை சொர்க்கத்திற்கு அதிபதியாக ஆக்கி விடுவோம்.
நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து
கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தாய் தந்தை பாப்தாதாவின்
அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. நாம் ஸ்ரீலட்சுமி ஸ்ரீநாராயணருக்கு சமமாக ஆக முடியுமா?
நமக்குள் எந்த ஒரு விகாரமும் இல்லையே? சுற்றி வரும் விட்டில்
பூச்சியா? இல்லை சமர்ப்பணம் ஆகுபவர்களா? தந்தையின் மதிப்பை
இழக்குமாறு செய்யும் வகையில் அப்பேர்ப்பட்ட நடத்தை ஒன்றும்
இல்லையே? என்று நம்மையே நாம் பார்க்க வேண்டும்.
2. அளவற்ற மகிழ்ச்சியுடன் இருப்பதற்காக அதிகாலை அன்புடன்
தந்தையை நினைவு செய்ய வேண்டும் மற்றும் கல்வியைக் கற்க வேண்டும்.
பகவான் நமக்குக் கற்பித்து புருஷோத்த மராக ஆக்கிக்
கொண்டிருக்கிறார். நாம் சங்கமயுகத்தினர் ஆவோம் என்ற இந்த
போதையில் இருக்க வேண்டும்.
வரதானம்:
அனைத்து குணங்களின் அனுபவத்தின் மூலமாக தந்தையை
வெளிப்படுத்தக்கூடிய (பிரத்யக்ஷம் செய்யக்கூடிய) அனுபவங்களின்
மூர்த்தியாக ஆகுக.
தந்தையின் எந்த குணங்களை மகிமை பாடுகின்றீர்களோ, அந்த சர்வ
குணங்களின் அனுபவ மூர்த்தி ஆகுங்கள்; தந்தை ஆனந்த கடல் என்பதால்
அந்த கடலின் அலைகளில் சதா அசைந்தாடிக் கொண்டே இருங்கள். யார்
உங்களுடைய தொடர்பில் வந்தாலும், அவர்களுக்கு ஆனந்தம், அன்பு,
சுகம்... என்ற அனைத்து குணங்களின் அனுபவத்தினை கொடுங்கள்.
அப்படி அனைத்து குணங்களின் அனுபவ மூர்த்தியாக ஆகுங்கள்
அப்பொழுது உங்கள் மூலம் தந்தையின் முகம் வெளிப்படும், ஏனெனில்
மகான் ஆத்மாக்களாகிய நீங்கள் தான் பரமாத்மாவை தன்னுடைய அனுபவ
மூர்த்தி நிலையின் மூலம் வெளிப்படுத்த முடியும்.
சுலோகன்:
காரணத்தை நிவாரணமாக மாற்றம் செய்து அசுபமான (நன்மையற்ற)
விசயங்களிலிருந்தும் கூட சுபமானதை (நன்மையானதை) எடுங்கள்.
அவ்யக்த சமிக்கை: ஆன்மீக ராயல்டி (தெய்வீகத்தன்மை) மற்றும்
ப்யூரிட்டி(தூய்மை) என்ற பெர்சனாலிடியை (ஆளுமையை) தாரணை
செய்யுங்கள்
பிராமணர்களுடைய வாழ்க்கையில், வாழ்வின் உயிர் நாடி என்பது
பவித்ரதா. ஆதி அனாதி சொரூபம் பவித்ரதா. எப்பொழுது - நான்
ஆதியிலும், அனாதியிலும் பவித்ரமாக இருந்த ஆத்மா என்பது
நினைவுக்கு வந்து விட்டதோ, அதனுடைய அர்த்தம் பவித்ரதாவின் சக்தி
நிறைந்த நிலைக்கு வருவதாகும். நினைவு சொரூபம், சக்தி சுவரூபமான
ஆத்மாக்கள் என்பவர்கள் உண்மை யான பவித்ர சன்ஸ்காரத்தை
உடையவர்கள். எனவே தனது உண்மையான சன்ஸ்காரங்களை வெளியே கொண்டு
வந்து, இந்த பவித்ரதாவின் பெர்சனாலிடியை (ஆளுமையை) தாரணை
செய்யுங்கள்.