08-07-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! உங்களுடைய இந்த
வாழ்க்கை மிக மிக மதிப்புமிக்கதாகும், ஏனென்றால் நீங்கள்
ஸ்ரீமத்படி உலகத்திற்கு சேவை செய்கிறீர்கள், இந்த நரகத்தை
சொர்க்கமாக்கி விடுகிறீர்கள்
கேள்வி:
குஷி மறைந்து விடுவதற்கான காரணம்
மற்றும் அதற்கான நிவாரணம் என்ன?
பதில்:
1) தேக-அபிமானத்தில் வருவதின்
காரணத்தினால், 2) மனதில் ஏதாவது சந்தேகம் வந்துவிடு கிறது
என்றால் குஷி மறைந்து விடுகிறது ஆகையினால் பாபா வழி
சொல்கின்றார், எப்போதும் ஏதாவது சந்தேகம் எழுகிறது என்றால் உடனே
பாபாவிடம் கேளுங்கள். ஆத்ம-அபிமானியாக இருப்பதற்கான பயிற்சி
செய்தீர்கள் என்றால் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
ஓம் சாந்தி.
குழந்தைகளுக்கு எதிரில் (நேரடியாக) உயர்ந்ததிலும் உயர்ந்த
பகவான் மற்றும் அவருடைய மகாவாக்கியம் சொல்லப்படுகிறது. நான்
உங்களை உயர்ந்ததிலும் உயர்ந்தவர்களாக மாற்றுகின்றேன் எனவே
குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு குஷி இருக்க வேண்டும். பாபா
நம்மை முழு உலகத்திற்கும் எஜமானர் களாக மாற்றுகின்றார் என்பதை
புரிந்து கொள்ளவும் செய் கிறீர்கள். பரமபிதா பரமாத்மா
உயர்ந்ததிலும் உயர்ந்தவர் என்று மனிதர்கள் கூறுகிறார்கள். நான்
உலகத்திற்கு எஜமானனாக ஆவதில்லை என்று பாபா தானே கூறுகின்றார்.
பகவானுடைய மகா வாக்கியம் - மனிதர்கள் என்னை உயர்ந்ததிலும்
உயர்ந்தவர்கள் என்று சொல்கிறார்கள் மற்றும் நான் என்னுடைய
குழந்தைகள் உயர்ந்ததிலும் உயர்ந்தவர்கள் என்று கூறுகின்றேன்.
நிரூபித்து கூறுகின்றார். கல்பத்திற்கு முன் போல் நாடகத்தின்படி
தான் முயற்சியும் செய்ய வைக்கின்றார். ஏதாவது புரியவில்லை
என்றால் கேளுங்கள் என்று பாபா அடிக்கடி கூறுகிறார், உலகம்
என்றால் என்ன, வைகுண்டம் என்றால் என்ன என்பது போன்ற எதுவுமே
மனிதர்களுக்குத் தெரியவில்லை. எவ்வளவு நவாபுகள், முகலாயர்கள்
போன்றவர்கள் இருந்து விட்டு சென்றுள்ளார்கள், அமெரிக்கா எவ்வளவு
தான் பணமுடையதாக இருந்தாலும் இந்த லஷ்மி - நாராயணனைப் போல்
இருக்க முடியாது. அவர்கள் வெள்ளை மாளிகை போன்றவை களை
உருவாக்குகிறார்கள் ஆனால் சத்யுகத்தில் ரத்தினங்களினால்
அலங்கரிக்கப்பட்ட பொன்னால் ஆன மாளிகை உருவாகின்றன. அதை சுகதாமம்
என்றே சொல்லப்படுகிறது. இந்த உலக நாடகச் சக்கரத்தில்
உங்களுடையது தான் கதாநாயகன் கதாநாயகி நடிப்பாகும். நீங்கள்
வைரங்களாக ஆகின்றீர்கள். சத்யுகம் இருந்தது. இப்போது கலியுகமாக
இருக்கின்றது. நீங்கள் எவ்வளவு பாக்கியசாலிகள் என்று பாபா சொல்
கின்றார்! பகவான் அவரே அமர்ந்து புரிய வைக்கின்றார் என்றால்
எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். உங்களுடைய இந்த படிப்பு
புதிய உலகத்திற்கானதாகும். உங்களுடைய இந்த வாழ்க்கை மிகவும்
மதிப்பு மிக்கதாகும் ஏனென்றால் நீங்கள் உலகத்திற்கு சேவை
செய்கிறீர்கள். நரகத்தை சொர்க்கமாக ஆக்குங்கள் என்று தான்
பாபாவை அழைக் கிறார்கள். சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யும் இறை
தந்தை என்று சொல்கிறார்கள் அல்லவா. நீங்கள் சொர்க்கத்தில்
இருந்தீர்கள் அல்லவா, இப்போது நரகத்தில் இருக்கின்றீர்கள் என்று
பாபா கூறுகின்றார். பிறகு சொர்க்கத்திற்குச் செல்வீர்கள். நரகம்
ஆரம்பமாகிறது என்றால் பிறகு சொர்க்கத்தின் விசயங்கள் மறந்து
விடுகின்றன. இது மீண்டும் நடக்கும். நீங்கள் மீண்டும்
சத்யுகத்திலிருந்து கலியுகத்திற்கு கண்டிப்பாக வர வேண்டியுள்ளது.
மனதில் ஏதாவது சந்தேகம் இருக்கிறது, அதனால் குஷி இருப்பதில்லை
என்றால் சொல்லுங்கள் என்று பாபா குழந்தைகளுக்கு அடிக்கடி
கூறுகின்றார். பாபா அமர்ந்து படிப்பிக்கின்றார் என்றால்
படிக்கவும் வேண்டும் அல்லவா. மகிழ்ச்சி இருப்பதில்லை ஏனென்றால்
நீங்கள் தேக-அபிமானத்தில் வந்து விடுகிறீர்கள். குஷி என்பது
இருக்க வேண்டும் அல்லவா. பாபா வெறும் பிரம்மாண்டத்திற்கு
மட்டும் தான் எஜமானராக இருக் கின்றார், நீங்களோ உலகத்திற்கும்
எஜமானர்களாக ஆகின்றீர்கள். பாபாவை படைப்பவர் என்று
சொல்லப்படுகிறது ஆனால் அதற்காக பிரளயம் நடந்து விடுகிறது பிறகு
புதிய உலகத்தை படைக்கின்றார் என்பது கிடையாது. நான் பழையதை
மட்டும் தான் புதியதாக்குகின்றேன் என்று பாபா கூறுகின்றார்.
பழைய உலகத்தை அழிக்கச் செய் கின்றேன். உங்களை புதிய உலகத்திற்கு
எஜமானர்களாக ஆக்குகின்றேன். நான் எதையும் செய்வதில்லை. இது கூட
நாடகத்தில் பதிவாகி யிருக்கிறது. தூய்மையற்ற உலகத்தில் தான்
என்னை அழைக்கிறார்கள். நான் பாரஸ்நாத்தாக (இரும்பு யுகத்தினரை
தங்க யுகத்தினராக) மாற்றுகின்றேன். எனவே குழந்தைகள் தாங்களாகவே
பாரஸ்புரிக்கு (சத்யுகத்திற்கு) வந்து விடுகிறார்கள்.
சத்யுகத்திற்கு என்னை ஒருபோதும் அழைப்பதே இல்லை. பாபா
பாரஸ்புரிக்கு வந்து கொஞ்சம் பார்த்துவிட்டு செல்லுங்கள் என்று
எப்போதாவது அழைக்கிறீர்களா என்ன? அழைப்பதே இல்லை. துக்கத்தில்
அனைவரும் சிந்திப்பார்கள், தூய்மையற்ற உலகத்தில் நினைவு
செய்கிறார்கள், சுகத்தில் யாரும் நினைவு செய்வதில்லை என்றும்
பாடப்பட்டுள்ளது. நினைவு செய்வதே இல்லை, அழைப்பதும் இல்லை.
வெறுமனே துவாபர யுகத்தில் கோயில் உண்டாக்கி அதில் என்னை வைத்து
விடுகிறார்கள். பூஜை செய்வதற்காக கல்லில் இல்லையென்றால்
வைரத்தில் லிங்கத்தை உருவாக்கி வைத்து விடுகிறார் கள். எவ்வளவு
அதிசயமான விசயங்களாக இருக்கிறது. நல்ல விதத்தில் காதுகளை
தீட்டிக் கொண்டு கேட்க வேண்டும். காதுகளையும் தூய்மையாக்க
வேண்டும். தூய்மைதான் முதன்மை யானதாகும். சிங்கத்தின் பால்
தங்க பாத்திரத்தில் தான் நிற்கும் என்று சொல்கிறார்கள். இதிலும்
கூட தூய்மை இருந்தால் தான் தாரணை ஏற்படும். காமம் மிகப் பெரிய
எதிரி, இதன் மீது வெற்றி அடைய வேண்டும் என்று பாபா கூறுகின்றார்.
இது உங்களுடைய கடைசி பிறவியாகும். இது அதே மகாபாரத சண்டையாகவும்
இருக்கிறது. கல்பம்-கல்பமாக எப்படி வினாசம் நடந்ததோ, அப்படியே
நாடகத்தின்படி இப்போதும் நடக்கும் என்பதையும் நீங்கள்
தெரிந்துள்ளீர்கள்.
குழந்தைகளாகிய நீங்கள் மீண்டும் சொர்க்கத்தில் தங்களுடைய
மாளிகைகளை கல்பத்திற்கு முன் போலவே உருவாக்க வேண்டும்.
சொர்க்கத்தை பாரடைஸ் என்றும் சொல்கிறார்கள். புராணங்
களிலிருந்து பாரடைஸ் என்ற வார்த்தை வந்தது. மானசரோவரில்
தேவதைகள் இருந்தார்கள் என்று கூறுகிறார்கள். அதில் யாராவது
மூழ்கி எழுந்தார்கள் என்றால் தேவதைகளாக ஆகி விடுவார்கள் என்று
சொல்கிறார்கள். உண்மையில் அது ஞான மானசரோவராகும். அதில் மூழ்கி
எழுவதின் மூலம் நீங்கள் எந்த நிலையிலிருந்து என்னவாக ஆகி
விடுகிறீர்கள். அழகானவர்களை தேவதைகள் என்று சொல்கிறார்கள்,
சிறகுகளையுடைய தேவதைகள் இருக்கிறார்கள் என்பது கிடையாது. எப்படி
பாண்டவர்களாகிய உங்களை மகாவீர் என்று சொல்லப்படுகிறது, பிறகு
அவர்கள் பாண்டவர் களுடைய பெரிய-பெரிய சித்திரங்களை குகை
ஓவியங்களாக காட்டி யுள்ளார்கள். பக்திமார்க்கத்தில் எவ்வளவு
பணத்தை அழிக்கிறார்கள். நான் குழந்தைகளை எவ்வளவு
செல்வந்தர்களாக மாற்றியிருந்தேன் என்று பாபா கூறுகின்றார்.
நீங்கள் இவ்வளவு செல்வம் அனைத்தையும் எங்கே இழந்தீர்கள். பாரதம்
எவ்வளவு செல்வம் நிறைந்ததாக இருந்தது. இப்போது பாரதத்தின் நிலை
என்னவாக இருக்கிறது. எந்த பாரதம் 100 சதவீதம் செல்வம் நிறைந்த
தாக இருந்ததோ, அது இப்போது 100 சதவீதம் திவாலாகி
விட்டிருக்கிறது. குழந்தைகளாகிய நீங்கள் இப்போது எவ்வளவு
ஏற்பாடுகள் செய்ய வேண்டும். சிறிய குழந்தைகளுக்கும் கூட
சிவபாபாவை நினைவு செய்யுங்கள், நீங்கள் கிருஷ்ணரைப் போல்
ஆவீர்கள் என்பதையே புரிய வைக்க வேண்டும். கிருஷ்ணர் எப்படி
உருவானார், என்பது யாருக்காவது தெரியுமா என்ன? முற்பிறவி யில்
சிவபாபாவை நினைவு செய்ததின் மூலம் தான் கிருஷ்ணராக ஆனார். எனவே
குழந்தை களாகிய உங்களுக்கு எவ்வளவு குஷி இருக்க வேண்டும். ஆனால்
யார் எப்போதும் மற்றவர் களுடைய சேவையில் இருக்கிறார்களோ,
அவர்களுக்குத் தான் அளவற்ற குஷி இருக்கும். முக்கியமான தாரணை,
நடத்தை மிக-மிக ராயலாக செய்ய வேண்டும். உணவுப் பழக்கம் மிகவும்
நன்றாக இருக்க வேண்டும். குழந்தைகளாகிய உங்களிடத்தில் யாராவது
வருகிறார்கள் என்றால் அவர் களுக்கு ஒவ்வொரு விதத்திலும் சேவை
செய்ய வேண்டும். ஸ்தூலத்திலும் இருக்க வேண்டும் சூட்சுமத்
திலும் செய்ய வேண்டும். ஸ்தூல மற்றும் ஆன்மீகம் இரண்டு சேவை
செய்வதின் மூலம் மிகுந்த குஷி ஏற்படும். யாராவது வந்தார்கள்
என்றால் அவர்களுக்கு நீங்கள் உண்மையான சத்திய நாராயணனுடைய கதையை
சொல்லுங்கள். சாஸ்திரங்களில் என்னென்ன கதைகளை எழுதி விட்டார்கள்.
விஷ்ணுவின் நாபியிலிருந்து பிரம்மா வந்தார் பிறகு பிரம்மாவின்
கைகளில் சாஸ்திரங்களை கொடுத்து விட்டார்கள். விஷ்ணுவின்
நாபியிலிருந்து பிரம்மா எப்படி வருகின்றார், எவ்வளவு இரகசியம்
இருக்கிறது. வேறு யாரும் இந்த விசயங்கள் எதையும் புரிந்து
கொள்ள முடியாது. நாபியிலிருந்து வருவதற்கான விசயமே இல்லை.
பிரம்மாவிலிருந்து விஷ்ணுவாகவும், விஷ்ணுவிலிருந்து
பிரம்மாவாகவும் ஆகின்றார். பிரம்மா விஷ்ணுவாக ஆவதற்கு ஒரு
வினாடி ஆகிறது. ஒரு வினாடியில் ஜிவன்முக்தி என்று
சொல்லப்படுகிறது. நீங்கள் விஷ்ணு ரூபமாக ஆகின்றீர்கள் என்று
பாபா பிரம்மா பாபாவிற்கு காட்சி காட்டினார். ஒரு வினாடியில்
நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. வினாசத்தின் காட்சி கூட ஏற்பட்டது,
இல்லையென்றால் கல்கத்தாவில் பாபா ராஜாபோல ஆடம்பரமாக இருந்தார்.
எந்த கஷ்டமும் இல்லை. மிகவும் ராயலாக இருந்தார். இப்போது பாபா
உங்களுக்கு இந்த ஞான ரத்தினங்களின் வியாபாரத்தை கற்றுக்
கொடுக்கின்றார். அந்த வியாபாரம் இதற்கு முன்னால் ஒன்றுமே இல்லை.
ஆனால் இவருடைய நடிப்பிற்கும் உங்களுடைய நடிப்பிற்கும்
வித்தியாசம் இருக்கிறது. பாபா இவருக்குள் பிரவேசித்தார் மற்றும்
இவர் உடனே அனைத்தையும் விட்டு விட்டார். பட்டி உருவாக
வேண்டியிருந்தது. நீங்களும் அனைத்தையும் விட்டு விட்டீர்கள்.
நதியை கடந்து வந்தீர்கள் பட்டியில் அமர்ந்தீர்கள். என்னென்ன
நடந்தது, எந்தக் கவலையும் இல்லை. கிருஷ்ணர் கோபியர் களை
விரட்டினார் என்று சொல்கிறார்கள்! ஏன் விரட்டினார்? அவர்களை
பட்டத்து ராணிகளாக மாற்றுவதற்காக ஆகும். குழந்தைகளாகிய உங்களை
சொர்க்கத்தின் மகாராணிகளாக மாற்றுவதற் காக இந்த பட்டியும்
உருவாக வேண்டியிருந்தது. சாஸ்திரங்களில் என்னென்ன எழுதி
விட்டார் கள், நடைமுறையில் என்னென்ன இருக்கிறது என்பதை இப்போது
நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். விரட்டுவதற்கான விசயமே இல்லை.
கல்பத்திற்கு முன்பு கூட திட்டு (நிந்தனை) கிடைத்திருந்தது.
பெயர் கெட்டுப் போயிருந்தது. இது நாடகமாகும், என்னவெல்லாம்
நடக்கிறதோ, அது கல்பத்திற்கு முன் போல நடக்கிறது.
கல்பத்திற்கு முன்னால் யாரெல்லாம் இராஜ்யத்தை அடைந்தார்களோ,
அவர்கள் கண்டிப்பாக வருவார்கள் என்பதை நீங்கள் இப்போது நல்ல
விதத்தில் தெரிந்துள்ளீர்கள். நானும் கூட கல்பம்-கல்பமாக வந்து
பாரதத்தை சொர்க்கமாக மாற்றுகின்றேன் என்று பாபா கூறுகின்றார்.
முழுமை யாக 84 பிறவிகளின் கணக்கை கூறியிருக்கின்றேன்.
சத்யுகத்தில் நீங்கள் அமரர்களாக இருக் கின்றீர்கள். அங்கே அகால
மரணங்கள் நிகழ்வதில்லை. சிவபாபா காலனின் மீது வெற்றி அடைய
வைக்கின்றார். நான் காலனுக்கெல்லாம் காலன் என்று கூறுகின்றார்.
இதைப்பற்றி கதைகள் கூட இருக்கின்றன அல்லவா. நீங்கள் காலனின்
மீது வெற்றி அடைகிறீர்கள். நீங்கள் அமர லோகத்திற்குச்
செல்கிறீர்கள். அமரலோகத்தில் உயர்ந்த பதவி அடைவதற்கு ஒன்று
தூய்மையாக ஆக வேண்டும், மற்றொன்று தெய்வீக குணங்களையும் தாரணை
செய்ய வேண்டும். தினமும் தங்களுடைய கணக்கைப் பாருங்கள்.
இராவணனின் மூலம் உங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. என் மூலமாக
உங்களுக்கு நன்மை நடக்கிறது. வியாபாரிகள் இந்த விசயங்களை நல்ல
விதத்தில் புரிந்து கொள்வார்கள். இது ஞான ரத்தினங்களாகும்.
யாராவது சில வியாபாரிகள் தான் இவற்றை வியாபாரம் செய்வார்கள்.
நீங்கள் வியாபாரம் செய்ய வந்துள்ளீர்கள். சிலர் நல்ல விதத்தில்
வியாபாரம் செய்து 21 பிறவிகளுக்கு சொர்க்கத்திற்கான வியாபாரம்
செய்து கொள்கிறார்கள். 21 பிறவிகள் என்ன 50-60 பிறவிகள் நீங்கள்
மிகவும் சுகமுடையவர்களாக இருக்கிறீர்கள். செல்வமிக்க வர்களாக (பதம்பதியாக)
ஆகின்றீர்கள். தேவதைகளின் கால்களில் தாமரை காட்டுகிறார்கள்
அல்லவா.அதனுடைய அர்த்தத்தைப் புரிந்து கொள்கிறார்களா என்ன.
நீங்கள் இப்போது செல்வ மிக்கவர்களாக ஆகின்றீர்கள். எனவே
உங்களுக்கு எவ்வளவு குஷி இருக்க வேண்டும். நான் எவ்வளவு
சாதாரணமாக இருக்கின்றேன் என்று பாபா கூறுகின்றார்.
குழந்தைகளாகிய உங்களை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல
வந்துள்ளேன். ஹே தூய்மையற்றவர் களை தூய்மை யாக்குபவரே வாருங்கள்,
வந்து தூய்மையாக்குங்கள் என்றும் அழைக்கிறீர்கள். சுகதாமத்தில்
தான் தூய்மையாக இருக்கிறார்கள். சாந்திதாமத்தின்
வரலாறு-புவியியல் எதுவும் இருக்க முடியாது. அது ஆத்மாக்களின்
மரமாகும். சூட்சுமவதனத்தின் விசயம் எதுவுமே இல்லை. மீதி இந்த
சிருஷ்டி சக்கரம் எப்படி சுற்றுகிறது என்பதை நீங்கள் தெரிந்து
கொண்டீர்கள். சத்யுகத்தில் லஷ்மி-நாராயணனுடைய இராஜ்யம் இருந்தது.
ஒரு லஷ்மி-நாராயணன் மட்டும் தான் இராஜ்யம் செய்கிறார்கள்
என்பதும் கிடையாது. இராஜ்யம் வளர்கிறது அல்லவா. பிறகு துவாபர
யுகத்தில் அவர்களே தான் பூஜிக்கத்தக்க நிலையிலிருந்து
பூஜாரியாக ஆகிறார்கள். மனிதர்கள் பரமாத்மாவை நீங்களே தான்
பூஜிக்கத்தக்கவர் நீங்களே தான் பூஜாரி என்று சொல்லி விட்டார்கள்.
பரமாத்மாவை எங்கும் நிறைந்தவர் என்று சொல்லி விடுவதைப் போலாகும்,
இந்த விசயங்களை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அரைக்கல்பமாக
உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான் என்று நீங்கள் பாடி வந்தீர்கள்
இப்போது பகவானுடைய மகாவாக்கியம் - உயர்ந்ததிலும் உயர்ந்தவர்கள்
குழந்தை களாகிய நீங்களே ஆவீர்கள். எனவே அவ்வாறு ஆக்கக்கூடிய
தந்தையின் வழிப்படி நடக்க வேண்டும் அல்லவா. குடும்ப
விவகாரங்களையும் பராமரிக்க வேண்டும். இங்கே (மதுபனில்) அனைவரும்
இருக்க முடியாது. அனைவரும் தங்க ஆரம்பித்து விட்டால் எவ்வளவு
பெரிய கட்டிடம் கட்ட வேண்டியிருக்கும். கீழிருந்து மேலே(அபு
ரோட்டிலிருந்து அபு மலை) வரை எவ்வளவு நீண்ட வரிசை தரிசிக்க
வந்துவிடும் என்பதை ஒரு நாள் நீங்கள் பார்ப்பீர்கள். இங்குள்ள
மகாத்மாவை தரிசிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்,
யாருக்காவது தரிசனம் கிடைக்கவில்லை என்றால் திட்டவும்
ஆரம்பித்து விடுகிறார்கள்..இப்போது பாபா குழந்தை களினுடையவராக
இருக்கின்றார். குழந்தை களுக்குத் தான் படிப்பிக்கின்றார்.
நீங்கள் யாருக்காவது வழி சொல்கிறீர்கள் என்றால் சிலர் நல்ல
விதத்தில் நடக்கிறார்கள், சிலரால் தாரணை செய்ய முடிவதில்லை,
எவ்வளவு பேர் கேட்கவும் செய்கிறார்கள் பிறகு வெளியில்
சென்றார்கள் என்றால் அங்கே இருக்கும் சூழ்நிலையில் இருந்து
விடுகிறார்கள், அந்த குஷி இருப்ப தில்லை, படிப்பு இல்லை,
யோகத்தில் இருப்பதில்லை. சார்ட் வையுங்கள் என்று பாபா எவ்வளவு
புரிய வைக் கின்றார். இல்லையென்றால் அதிகம் பச்சாதாபப்பட
வேண்டியிருக்கும். நாம் எந்தளவிற்கு பாபாவை நினைவு செய்கின்றோம்
என்று சார்ட்டைப் பார்க்க வேண்டும். பாரதத்தின் பழமையான
யோகத்திற்கு அதிக மகிமை இருக்கிறது. எனவே எந்தவொரு விசயமாவது
புரியவில்லை என்றால் பாபாவிடம் கேளுங்கள் என்று பாபா
கூறுகின்றார். முன்பு நீங்கள் எதையும் தெரிந்திருக்கவில்லை. இது
முட்கள் நிறைந்த காடு என்று பாபா கூறுகின்றார். காமம்
மிகப்பெரிய எதிரியாகும். இது கீதையின் வார்த்தைகளாகும். கீதையை
படித்தார்கள் ஆனால் அர்த்தத்தை புரிந்து கொண்டார்களா என்ன. பாபா
ஆயுள் முழுவதும் கீதையை படித்தார். கீதையின் மகத்துவம் மிகவும்
நன்றாக இருக்கிறது என்று புரிந்து கொண்டார். பக்தி
மார்க்கத்தில் கீதைக்கு எவ்வளவு மரியாதை இருக்கிறது. கீதை
பெரியதாகவும் இருக்கிறது, சிறியதாகவும் இருக்கிறது. கிருஷ்ணர்
போன்ற தேவதைகளுடைய சித்திரம் ஒரு பைசாவிற்கு கூட கிடைத்துக்
கொண்டிருக்கிறது, அதே சித்திரங்களுடைய பெரிய-பெரிய கோயில் களைக்
கூட உருவாக்குகிறார்கள். நீங்கள் வெற்றி மாலையின் மணியாக ஆக
வேண்டும் என்று பாபா புரிய வைக்கின்றார். இப்படிப்பட்ட இனிமை
யிலும் இனிமையான பாபாவை பாபா, பாபா என்றும் சொல்கிறார்கள்.
சொர்க்கத்தின் இராஜ்யத்தை கொடுக்கின்றார் என்றும் புரிந்து
கொள்கிறார்கள் பிறகு கேட்கிறார்கள், மற்றவர்களுக்கு
சொல்கிறார்கள் ஐயோ மாயை கைவிடச் செய்து விடுகிறது. தந்தை என்று
சொன்னீர்கள் என்றால் பாபா என்றால் பாபா அவ்வளவு தான். பக்தி
மார்க்கத்தில் கூட பதிகளுக்கெல்லாம் பதி, குருவுக் கெல்லாம்
குரு ஒருவர் தான் என்று பாடப்படுகிறது. அவர் நம்முடைய தந்தையாக
இருக்கின்றார். ஞானக்கடலாக, தூய்மை யற்றவர்களை
தூய்மையாக்குபவராக இருக்கின்றார். பாபா நாங்கள் கல்பம் கல்பமாக
தங்களிடமிருந்து ஆஸ்தியை அடைந்து வந்துள்ளோம், கல்பம் கல்பமாக
சந்தித்துள்ளோம் என்று குழந்தைகள் கூறுகிறார்கள். எல்லையற்ற
தந்தையாகிய தங்களிட மிருந்து எங்களுக்கு கண்டிப்பாக எல்லையற்ற
ஆஸ்தி கிடைக்கும். முக்கியமானது அ-அல்லா என்பதே ஆகும். அதில்
ஆ-ஆஸ்தி நிறைந்துள்ளது. அப்பா என்றாலே ஆஸ்தியாகும். அது
எல்லைக்குட்பட்டது, இது எல்லையற்றதாகும். எல்லைக்குட்பட்ட தந்தை
நிறைய பேர் இருக்கிறார்கள். எல்லைக்கப் பாற்பட்ட தந்தை ஒருவரே
ஆவார். நல்லது.
இனிமையிலும் இனிமையான 5 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும்
வந்து சந்திக்கக் கூடிய குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) ஸ்தூல மற்றும் சூட்சும சேவை செய்து அளவற்ற குஷியை அனுபவம்
செய்ய வேண்டும் மற்றும் செய்ய வைக்க வேண்டும். நடத்தை மற்றும்
உணவு பழக்கத்தில் மிகுந்த ராயல்டி வேண்டும்.
2) அமரலோகத்தில் உயர்ந்த பதவியை அடைவதற்கு தூய்மையாவதின் கூடவே
தெய்வீக குணத்தையும் தாரணை செய்ய வேண்டும். நாம் பாபாவை எவ்வளவு
நேரம் நினைவு செய்கிறோம் என்ற கணக்கைப் பார்க்க வேண்டும்.
அழிவற்ற ஞான ரத்தினங்களின் வருமானத்தை சேமித்துக்
கொண்டிருக்கிறோமா? தாரணை ஆவதற்கு காதுகள் தூய்மை யாக ஆகியுள்ளதா?
வரதானம்:
சேவை செய்து கொண்டிருக்கும் போதும் நினைவில் அனுபவங்களின்
பந்தயத்தில் முன்னேறிச் செல்லக்கூடிய சதா லயித்திருக்கும் ஆத்மா
ஆவீர்களாக.
நினைவில் இருக்கிறீர்கள்.ஆனால் நினைவு மூலமாக ஏற்படும்
பிராப்திகளின் அனுபவங்களில் முன்னேறி கொண்டே செல்லுங்கள்.
இதற்காக இப்பொழுது விசேஷமாக நேரமும் கவனமும் கொடுங்கள்.
அப்பொழுது இவர் அனுபவங்களின் கடலில் மூழ்கி இருக்கும் ஆத்மா
ஆவார் என்பது தெரிய வரட்டும். எப்படி தூய்மை, அமைதியின் வாயு
மண்டலத்தின் உணர்வு ஏற்படுகிறது. அதே போல சிறந்த யோகி
ஈடுபாட்டில் மூழ்கி இருக்கக்கூடியவர்கள் ஆவார்கள் என்ற அனுபவம்
ஏற்படட்டும். ஞானத்தின் தாக்கம் இருக்கிறது. ஆனால் யோகத்தின்
சித்தி சொரூபத்தின் தாக்கம் ஏற்படட்டும். சேவை செய்து
கொண்டிருக்கையிலும் நினைவின் அனுபவங்களில் மூழ்கி இருங்கள்.
நினைவு யாத்திரை என்ற பந்தயத்தில் முன்னேறிச் செல்லுங்கள்.
சுலோகன்:
வெற்றியை (சித்தி) ஏற்றுக் கொண்டு விடுவது என்பது வருங்கால (பிராலப்தத்தை)
வினைப்பயனை இங்கேயே முடித்து கொண்டு விடுவது.
அவ்யக்த சமிக்ஞை: எண்ணங்களின் சக்தியை சேமிப்பு செய்து சிறந்த
சேவைக்கு கருவி ஆகுங்கள்.
எந்த அளவுக்கு குழந்தைகளாகிய நீங்கள் சிறந்த எண்ணங்களின்
சக்தியில் நிறைந்தவர்கள் ஆகிக் கொண்டே செல்வீர்களோ அந்த
அளவுக்கு சிறந்த எண்ணங்களின் சக்திசாலி சேவையின் சொரூபம்
தெளிவாக தென்படும். நம்மை யாரோ கூப்பிட்டு கொண்டிருக்கிறார்கள்,
ஏதோ தெய்வீக புத்தி மூலமாக சுப சங்கல்பத்தின் அழைப்பு வந்து
கொண்டிருக்கிறது என்று ஒவ்வொருவரும் அனுபவம் செய்வார்கள். ஒரு
சிலர் பிறகு திவ்ய திருஷ்டி மூலமாக தந்தை மற்றும் இடத்தை
பார்ப்பார்கள். இரண்டு விதமான அனுபவங்கள் மூலமாக மிகவுமே தீவிர
வேகத்துடன் தங்களது சிறந்த புகலிடத்திற்கு போய் சேர்ந்து
விடுவார்கள்.