08-08-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! நான் 84 பிறவிச் சக்கரத்தை முடித்து விட்டேன், இப்பொழுது எனது வீட்டிற்குச் செல்கிறேன், இன்னும் சிறிது காலம் தான் இந்த கர்ம கணக்குகள் இருக்கின்றன என்ற குஷியில் சதா இருங்கள்.

கேள்வி:
விகர்மாஜீத் (பாவ செயல்களின் மீது வெற்றி) ஆகக் கூடிய குழந்தைகள் விகர்மங் களிலிருந்து (தீமை விளைவிக்கும் காரியங்களிலிருந்து) பாதுகாப்பாக இருப்பதற்கு எந்த விசயத்தின் மீது மிகுந்த கவனம் கொடுக்க வேண்டும்?

பதில்:
அனைத்து விகர்மங்களுக்கும் வேராக இருக்கக் கூடியது தேக அபிமானம் ஆகும். அந்த தேக அபிமானத்தில் ஒருபொழுதும் வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். இதற்கு அடிக்கடி ஆத்ம அபிமானியாகி தந்தையை நினைவு செய்ய வேண்டும். நல்லதோ, கெட்டதோ அதன் பலன் அவசியம் கிடைக்கும். கடைசியில் மனம் உறுத்தும். ஆனால் இந்த பிறவியின் பாவச் சுமையிலிருந்து விடுபடுவதற்கு தந்தையிடம் உண்மையை கூற வேண்டும்.

ஓம் சாந்தி.
நினைவு தான் உயர்ந்ததிலும் உயர்ந்த இலட்சியமாகும். பலருக்கு சொல்வதில் தான் அதிக ஆர்வம் இருக்கிறது. ஞானத்தை புரிந்துக் கொள்வது மிகவும் எளிது. 84 பிறவிச் சக்கரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும், சுயதரிசன சக்கரதாரி ஆக வேண்டும். அதிகப்படியாக ஒன்றும் கிடையாது. நாம் அனைவரும் சுயதரிசன சக்கரதாரிகள் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். சுயதரிசன சக்கரம் யாருடைய கழுத்தையும் துண்டிப்பது கிடையாது. கிருஷ்ணரை அவ்வாறு காண்பித்திருக்கின்றனர். இந்த லெட்சுமி நாராயணன் விஷ்ணுவின் இரண்டு ரூபமாகும். அவர்களிடத்தில் சுயதரிசன சக்கரம் இருக்குமா? பிறகு கிருஷ்ணரிடம் ஏன் சக்கரம் காண்பிக்கின்றனர்? ஒரு பத்திரிக்கை வெளி வருகிறது, அதில் இவ்வாறு கிருஷ்ணரின் பல சித்திரங்களை காண்பிக்கின்றனர். தந்தை வந்து உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார், சக்கரத்தின் மூலம் அசுரர்களை வதம் செய்வது கிடையாது. யாரிடம் அசுர சுபாவம் இருக்கிறதோ அவர்கள் தான் அசுரர்கள் என்று கூறப்படு கின்றனர். மற்றபடி மனிதர்கள் மனிதர்களாகத் தான் இருக்கின்றனர் அல்லவா! சுயதரிசன சக்கரத்தின் மூலம் அனைவரையும் வதம் செய்தார் என்பது கிடையாது. பக்தி மார்க்கத்தில் என்ன என்ன சித்திரங்களை வந்து உருவாக்கியிருக்கின்றனர். இரவு பகல் வித்தியாசம் இருக்கிறது. குழந்தைகளாகிய நீங்கள் இந்த சிருஷ்டிச் சக்கரம் மற்றும் முழு நாடகத்தையும் அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அனைவரும் நடிகர்களாக இருக் கிறீர்கள். அந்த எல்லைக்குட்பட்ட நடிகர்கள் நாடகத்தை அறிந்திருக்கின்றனர். இது எல்லையற்ற நாடக மாகும். இதை விரிவாக புரிந்து கொள்ள முடியாது. அது 2 மணி நேரத்திற்கான நாடகமாகும். நடிக்க வேண்டிய பாகத்தை விரிவாக அறிந்திருப்பர். இங்கு 84 பிறவிகளை அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

நான் பிரம்மாவின் ரதத்தில் பிரவேசிக்கிறேன் என்று தந்தை புரிய வைத்திருக்கின்றார். பிரம்மாவிற்கும் 84 பிறவிகளின் கதை தேவை. மனிதர்களின் புத்தியில் இந்த விசயங்கள் வரவே முடியாது. 84 லட்சம் பிறவிகளா? அல்லது 84 பிறவிகளா? என்பதையும் புரிந்து கொள்வது கிடையாது. உங்களது 84 பிறவியின் கதையை கூறுகிறேன் என்று தந்தை கூறுகின்றார். 84 லட்சம் பிறவிகள் எனில் எவ்வளவு ஆண்டுகள் என்பதை கூற வேண்டியிருக்கும்! நீங்கள் விநாடியில் புரிந்து கொண்டு விடுகிறீர்கள் - இது 84 பிறவிகளின் கதையாகும். நாம் 84 பிறவிச் சக்கரத்தில் எப்படி வந்தோம்? 84 லட்சம் பிறவிகள் எனில் விநாடியில் புரிந்து கொள்ள முடியாது. 84 லட்சம் பிறவிகள் கிடையாது. குழந்தைகளாகிய உங்களுக்குள் குஷியிருக்க வேண்டும். நமது 84 பிறவிச் சக்கரம் முடிவடைந்து விட்டது. இப்பொழுது நாம் வீட்டிற்குத் திரும்புகின்றோம். இன்னும் சிறிது காலம் தான் இந்த கர்ம கணக்குகள் அனுபவிக்க வேண்டியிருக்கும். விகர்மங்களை அழித்து கர்மாதீத நிலை எப்படி அடைவது? என்ற யுக்தி கூறப்படுகிறது. மற்றபடி இந்த பிறவியில் எந்த விகர்மங்கள் செய்திருந்தாலும் அதை எழுதிக் கொடுத்து விட்டால் இலேசாகி விடுவீர்கள் என்று புரிய வைக்கப்படுகிறீர்கள். பல பிறவிகளின் விகர்மங் களை யாரும் எழுதிக் கொடுக்க முடியாது. விகர்மங்கள் ஏற்பட்டுக் கொண்டு வந்தன. எப்பொழுது இராவண இராஜ்யம் ஆரம்பமானதோ அப்பொழுதிலிருந்தே விகர்மம் ஏற்பட ஆரம்பித்து விட்டன. சத்யுகத்தில் கர்மம் அகர்மமாக இருக்கும். பகவானின் மகாவாக்கியம் - உங்களுக்கு கர்மம், அகர்மம், விகர்மத்தின் ரகசியங் களைப் புரிய வைக்கிறேன். விகர்மாஜீத்தின் வம்சம் லெட்சுமி நாராயணனின் இராஜ்யத்திலிருந்து ஆரம்ப மாகிறது. ஏணியில் தெளிவாக இருக்கிறது. சாஸ்திரங்களில் இந்த விசயங்கள் எதுவும் கிடையாது. சூரியவம்சம், சந்திர வம்சத்தின் ரகசியத்தையும் குழந்தைகளாகிய நீங்கள் தான் புரிந்திருக்கிறீர்கள், நாம் தான் அவ்வாறு இருந்தோம். விராட ரூப சித்திரத்தையும் அதிகம் உருவாக்குகின்றனர், ஆனால் அர்த்தம் எதுவும் அறிந்து கொள்வது கிடையாது. தந்தையைத் தவிர வேறு யாரும் புரிய வைக்க முடியாது. இந்த பிரம்மாவிற்கும் மேலே யாராவது இருக்க வேண்டும், அவர் தான் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும். ஒருவேளை யாராவது ஒரு குரு கற்றுக் கொடுத்திருந்தால் அந்த குருவிற்கு ஒரே ஒரு சீடர் மட்டும் இருந்திருக்க முடியாது. தந்தை கூறுகின்றார் - குழந்தைகளே! நீங்கள் தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையடைவது, தூய்மையிலிருந்து துய்மையற்ற நிலை அடைந்தே தீர வேண்டும். இதுவும் நாடகத்தில் பதிவாகியிருக்கிறது. பலமுறை இந்த சக்கரத்தில் சுற்றியே வந்திருக்கிறீர்கள். சுற்றிக் கொண்டே இருப்பீர்கள். நீங்கள் ஆல் ரவுண்ட் நடிகர்களாக இருக்கிறீர்கள். ஆரம்பத்திலிருந்து கடைசி வரைக்கும் வேறு யாருக்கும் பாகம் கிடையாது. உங்களுக்குத் தான் தந்தை புரிய வைக்கின்றார். பிறகு நீங்கள் இதையும் புரிந்து கொள்கிறீர்கள், அதாவது மற்ற தர்மத்தைச் சார்ந்தவர்களும் இந்த இந்த நேரத்தில் வருகின்றனர். உங்களது பாகம் ஆல் ரவுண்ட் பாகமாகும். சத்யுகத்தில் கிறிஸ்தவர்கள் இருந்தார்கள் என்று கூறமாட்டோம். அவர்கள் துவாபரத்திலும் கூட நடுவில் வருகின்றனர். இந்த ஞானம் குழந்தைகளாகிய உங்களது புத்தியில் தான் இருக்கிறது. மற்றவர்களுக்குப் புரிய வைக்கவும் முடியும். வேறு யாரும் சிருஷ்டியின் முதல், இடை, கடையை அறியவில்லை. படைப்பவரையே அறியவில்லையெனும் பொழுது படைப்புகளை எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்? எது சரியான விசயமோ அதை அச்சடித்து விமானத்திலிருந்து தூவ (நாலா புறமும் போடுதல்) வேண்டும் என்று பாபா புரிய வைத்திருக்கின்றார். அந்த கருத்து அல்லது தலைப்புகள் பற்றி அமர்ந்து எழுத வேண்டும். வேலை இல்லை என்று குழந்தைகள் கூறுகின்றனர். இந்த சேவை அதிகம் இருக்கிறது என்று பாபா கூறுகின்றார். இங்கு தனிமையில் அமர்ந்து இந்த காரியம் செய்யுங்கள். பெரிய பெரிய இயக்கங்கள், கீதா பாடசாலைகள் போன்ற அனைத்தையும் விழிப்படையச் செய்ய வேண்டும். அனைவருக்கும் செய்தி கொடுக்க வேண்டும். இது புருஷோத்தம சங்கமயுகமாகும். யார் புத்திசாலிகளாக இருப்பார்களோ அவர்கள் உடனேயே புரிந்து கொள்வார்கள் - அவசியம் சங்கமயுகத்தில் தான் புது உலகின் ஸ்தாபனை மற்றும் பழைய உலகின் விநாசம் ஏற்படும். சத்யுகத்தில் புருஷோத்தம மனிதர்கள் இருப்பர். இங்கு அசுர சுபாவமுடைய பதீத மனிதர்கள் உள்ளனர் என்பதையும் பாபா புரிய வைத்திருக்கின்றார். கும்ப மேளா போன்றவைகள் நடைபெறு கிறது, குளிப்பதற்கு அதிக மனிதர்கள் செல்கின்றனர். ஏன் குளிக்க செல்கின்றனர்? தூய்மை ஆக விரும்புகின்றனர். ஆக எங்கெல்லாம் மனிதர்கள் குளிக்கச் செல்கிறார்களோ அங்கு சென்று சேவை செய்ய வேண்டும். மனிதர்களுக்கு புரிய வைக்க வேண்டும், இந்த தண்ணீர் தூய்மை ஆக்குவது கிடையாது. உங்களிடம் சித்திரங்களும் உள்ளன. கீதா உபதேசம் நடக்கும் இடங்களுக்குச் சென்று இந்த நோட்டீஸ் கொடுக்க வேண்டும். குழந்தைகள் சேவை கேட்கின்றனர். கீதையின் பகவான் பரம்பிதா பரமாத்மா சிவன், கிருஷ்ணர் அல்ல என்பதை எழுதுங்கள். பிறகு அவர்களது வாழ்க்கை யின் மகிமையை எழுதுங்கள். சிவபாபாவின் சரித்திரத்தை எழுதுங்கள். பிறகு அவர்களே முடிவெடுத்துக் கொள்வார்கள். தூய்மை ஆக்குபவர் என்ற கருத்தும் எழுத வேண்டும். பிறகு சிவன், சங்கருக்கும் உள்ள வேறுபாடும் காண்பிக்க வேண்டும். சிவன் தனி, சங்கர் தனி. கல்பம் 5 ஆயிரம் ஆண்டிற்கானது என்பதையும் பாபா புரிய வைத்திருக் கின்றார். மனிதர்கள் 84 பிறவிகள் எடுக்கின்றனர், 84 லட்சம் பிறப்புகள் அல்ல. இவ்வாறு முக்கிய முக்கிய விசயங்களை சுருக்கமாக எழுத வேண்டும். அதை விமானத்திலிருந்தும் தூவ வேண்டும், புரிய வைக்கவும் வேண்டும். இந்த சக்கரத்தின் சித்திரத்தில் இந்த இந்த தர்மத்தைச் சார்ந்தவர்கள் இந்த இந்த கால கட்டத்தில் ஸ்தாபனை ஆகிறது. ஆக இந்த காலச் சக்கரமும் இருக்க வேண்டும், ஆகையால் முக்கியமாக 12 சித்திரங்களின் காலண்டர்களும் அச்சடிக்க வேண்டும். அதில் முழு ஞானமும் வந்து விட வேண்டும், மேலும் சேவை எளிதாகி விட வேண்டும். இந்த சித்திரங்கள் மிகவும் அவசியமானது. எந்த சித்திரம் உருவாக்க வேண்டும்? என்ன என்ன கருத்துகள் எழுத வேண்டும்? என்பதை அமர்ந்து எழுதிக் கொள்ளுங்கள்.

நீங்கள் குப்தமான வேடத்தில் இந்த பழைய உலகை மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். குப்த போர் வீரர்களாக இருக்கிறீர்கள். உங்களை யாரும் அறியவில்லை. பாபாவும் குப்தமாக இருக்கின்றார், ஞானமும் குப்தமாக இருக்கிறது. இது எந்த சாஸ்திரமாகவும் ஆவது கிடையாது. மற்ற தர்மத்தைச் சார்ந்தவர்களுடையது பைபிள் போன்று அச்சடிக்கப்படுகிறது, அதை படித்துக் கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு தர்மத்தினருடையதும் அச்சடிக்கப்படுகிறது. உங்களுடையது பிறகு பக்தி மார்க்கத்தில் அச்சடிக்கப்படுகிறது. இப்பொழுது அச்சடிக்கப் படுவது கிடையாது, ஏனெனில் இப்பொழுது இந்த சாஸ்திரம் போன்ற அனைத்தும் அழிந்து போய் விடும். இப்பொழுது நீங்கள் புத்தியில் நினைவு செய்தால் போதும். தந்தையின் புத்தியிலும் ஞானம் இருக்கிறது அல்லவா! எந்த சாஸ்திரம் போன்றவைகளும் படிப்பது கிடையாது. அவர் ஞானம் நிறைந்தவர் ஆவார். ஞானம் நிறைந்தவர் என்பதன் பொருள் அனைவரின் உள்ளத்தையும் அறிந்தவர் என்று மனிதர்கள் நினைக்கின்றனர். பகவான் பார்ப்பதால் தான் கர்மத்தின் பலன் கொடுக்கின்றார். இது நாடகத்தில் பதிவாகியிருக்கிறது என்று தந்தை கூறுகின்றார். யார் விகர்மங்களை (பாவ காரியங்களை) செய்கிறார்களோ அவர்களுக்கு நாடகப்படி தண்டணை கிடைத்து விடுகிறது. நல்ல அல்லது கெட்ட காரியத்தின் பலன் கிடைத்து விடுகிறது. அதற்கு எழுத்து வடிவம் எதுவும் கிடையாது. காரியத்தின் பலன் அவசியம் அடுத்த பிறவியில் கிடைக்கும் என்று மனிதர்கள் நினைக்கின்றனர். கடைசி நேரத்தில் விவேகம் (உள் மனம்) அதிகம் உறுத்திக் கொண்டே இருக்கும் - நான் இந்த இந்த பாவங்களைச் செய்தேன். அனைத்தும் நினைவிற்கு வரும். செயல்கள் எப்படியோ அப்படி பிறப்பு கிடைக்கும். இப்பொழுது நீங்கள் விகர்மாஜீத் ஆகிறீர்கள் எனில் எந்த விகர்மும் செய்யக் கூடாது. மிகப் பெரிய விகர்மம் தேக அபிமானியாக ஆவதாகும். ஆத்ம அபிமானியாகி தந்தையை நினைவு செய்யுங்கள், தூய்மையாக இருந்தே ஆக வேண்டும் என்று பாபா அடிக்கடி கூறுகின்றார். காமத்தில் செல்வது தான் மிகப் பெரிய பாவமாகும். இது தான் முதல், இடை, கடை துக்கம் வரை கொடுக்கக் கூடியது. அதனால் தான் காக்கை எச்சத்திற்கு சமமான சுகம் என்று சந்நியாசிகளும் கூறுகின்றனர். அங்கு துக்கத்தின் பெயரே இருக்காது. இங்கு துக்கமோ துக்கம் தான், அதனால் தான் சந்நியாசி களுக்கு வைராக்கியம் ஏற்படுகிறது. ஆனால் அவர்கள் காட்டிற்குச் சென்று விடுகின்றனர். அவர் களுடையது எல்லைக்குட்பட்ட வைராக்கியம், உங்களுடையது எல்லை யற்ற வைராக்கியம். இந்த உலகமே சீ சீ ஆனது. பாபா, வந்து நமது துக்கத்தை நீக்கி சுகம் கொடுங்கள் என்று அனைவரும் கூறுகின்றனர். தந்தை தான் துக்கம் நீக்கி சுகம் கொடுப்பவர் ஆவார். புது உலகில் இந்த தேவதைகளின் இராஜ்யம் இருந்தது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தான் புரிந்திருக்கிறீர்கள். அங்கு எந்த வகையான துக்கமும் கிடையாது. யாராவது சரீரம் விட்டு விட்டால் சொர்க்கவாசி ஆகிவிட்டார் என்று மனிதர்கள் கூறுகின்றனர். ஆனால் நாம் நரகத்தில் இருக்கிறோம் என்பதை சிறிதும் புரிந்து கொள்வது கிடையாது. நாம் எப்பொழுது இறப்போமோ அப்பொழுது தான் சொர்க் கத்திற்குச் செல்ல முடியும். ஆனால் அவர் சொர்க்கத்திற்குச் சென்றாரா? அல்லது நரகத்திற்கு வந்து விட்டாரா? என்பதையும் புரிந்து கொள்வது கிடையாது. குழந்தைகளாகிய நீங்கள் 3 தந்தைகளின் ரகசியத்தையும் அனைவருக்கும் புரிய வைக்க முடியும். இரண்டு தந்தைகளை அனைவரும் புரிந்திருக்கின்றனர் - லௌகீகம் மற்றும் பரலௌகீகம். ஆனால் இந்த அலௌகீக பிரஜாபிதா பிரம்மா, பிறகு இங்கு இந்த சங்கமயுக பிரம்மாவும் தேவை அல்லவா! உலாகாய பிராமணர்கள் பிரம்மா முகவம் சாவளி கிடையாது. பிரம்மா இருந்தார் என்பதை அறிந்திருக் கின்றனர், அதனால் தான் பிரம்மா தேவி தேவதாய நம: என்று கூறுகின்றனர். யாரைக் கூறு கிறோம்? என்பதை அறியவில்லை. பிராமணர்கள் யார்? நீங்கள் புருஷோத்தம சங்கமயுக பிராமணர்கள். அவர்கள் கலியுகத்தைச் சார்ந்தவர்கள். இது புருஷோத்தம சங்கமயுகம். இதில் தான் நீங்கள் மனிதனிலிருந்து தேவதைகளாக ஆகிறீர்கள். தேவி தேவதா தர்மம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. ஆக குழந்தைகள் அனைத்து கருத்துகளையும் தாரணை செய்ய வேண்டும், பிறகு சேவை செய்ய வேண்டும். பூஜை செய்வதற்கும், பித்துருக்களின் உணவு சாப்பிடுவதற்கும் பிராமணர்கள் வருகின்றனர். அவர்களிடத்திலும் நீங்கள் கலந்துரையாடல் செய்து உண்மையான பிராமணர்களாக நீங்கள் ஆக்கி விட முடியும். இப்பொழுது புராட்டாசி மாதம் வருகிறது, அனைவரும் பித்துருக்களுக்கு படைப்பர். அதுவும் யுக்தியாக செய்ய வேண்டியிருக் கிறது, இல்லையெனில் பிரம்மா குமாரிகளிடத்தில் சென்று அனைத்தையும் விட்டு விட்டனர் என்று கூறுவர். கோபம் ஏற்படும் படியாக எதுவும் செய்து விடக் கூடாது, யுக்தியாக நீங்கள் ஞானம் கூற வேண்டும். அவசியம் பிராமணர்கள் வருவார்கள், அப்பொழுது தான் ஞானம் கொடுக்க முடியும் அல்லவா! இந்த மாதத்தில் நீங்கள் பிராமணர்களுக்கு அதிகமாக சேவை செய்திட முடியும். பிராமணர்களாகிய நீங்கள் பிரஜாபிதா பிரம்மாவின் வம்சத்தினர்கள். பிராமண தர்மத்தை ஸ்தாபனை செய்தது யார்? என்று கேளுங்கள். வீட்டில் அமர்ந்து கொண்டே நீங்கள் அவர்களுக்கு நன்மை செய்திட முடியும். எவ்வாறு அமர்நாத் யாத்திரைக்கு செல்கின்ற பொழுது அவர்கள் அங்கு எழுதியிருப்பதை வைத்து அந்த அளவிற்கு புரிந்து கொள்ள முடியாது. அங்கு அமர்ந்து புரிய வைக்க வேண்டும். நாம் உங்களுக்கு உண்மையான அமரக்கதையை கூறுகிறோம். அமர்நாத் என்று ஒரே ஒருவர் தான் கூறப்படுகின்றார். அமர்நாத் என்றால் அமரபுரியை ஸ்தாபனை செய்யக் கூடியவர். அது சத்யுகம் ஆகும். இவ்வாறு சேவை செய்ய வேண்டும். அங்கு நடந்து செல்ல வேண்டியிருக்கும். யார் நல்ல நல்ல பெரிய மனிதர்களாக இருக்கிறார்களோ அவர்களுக்கு சென்று புரிய வைக்க வேண்டும். சந்நியாசிகளுக்கும் நீங்கள் ஞானம் கொடுத்திட முடியும். நீங்கள் முழு உலகிற்கும் நன்மை செய்யக் கூடியவர்கள். ஸ்ரீமத் மூலம் நாம் உலகிற்கு நன்மை செய்து கொண்டி ருக்கிறோம் - புத்தியில் இந்த போதை இருக்க வேண்டும். நல்லது.

இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நன்ஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்பொழுது ஏகாந்தத்தில் அமர்ந்து ஞானத்தின் நல்ல நல்ல கருத்துகளை சிந்தனை செய்து எழுத வேண்டும். அனைவருக்கும் செய்தி கொண்டு செல்லக் கூடிய அல்லது அனைவருக்கும் நன்மை செய்யக் கூடிய யுக்தி உருவாக்க வேண்டும்.

2) விகர்மங்களிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு ஆத்ம அபிமானியாகி தந்தையை நினைவு செய்ய வேண்டும். இப்பொழுது எந்த விகர்மமும் செய்யக் கூடாது. இந்த பிறவியில் செய்த விகர்மங்களை (பாவ காரியங்களை) பாப்தாதாவிடம் உண்மையை கூற வேண்டும்.

வரதானம்:
நிச்சயிக்கப்பட்டதை அறிந்திருந்தும் சிரேஷ்ட காரியத்தை பிரத்ட்ச ரூபத்தில் கொடுக்கக் கூடிய சதா சக்திசாலி ஆகுக.

புதிய சிரேஷ்ட உலகம் உருவாவது நிச்சயிக்கப்பட்டது என்பதை அறிந்திருந்தும் சக்திசாலி பவ என்ற வரதானம் அடைந்த குழந்தைகள் காரியம் மற்றும் பலன், முயற்சி மற்றும் பிராப்தி, நிமித்தம் மற்றும் பணிவு என்ற கர்ம தத்துவத்தின் படி நிமித்தமாகி காரியம் செய்வார்கள். உலகத்தினருக்கு நம்பிக்கை தென்படாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் கூறுகிறீர்கள் - இந்த காரியம் பல முறை நடந்திருக்கிறது, இப்பொழுதும் நடந்தே விட்டது. ஏனெனில் சுய மாற்றத்தின் நடைமுறை நிரூபனத்தின் முன் வேறு எந்த நிரூபனமும் அவசியமில்லை. கூடவே பரமாத்மாவின் காரியத்தில் சதா வெற்றியே.

சுலோகன்:
சொல்வது குறைவாக, செய்வது அதிகமாக இருக்க வேண்டும் - இந்த சிரேஷ்ட இலட்சியம் மகானாக ஆக்கி விடும்.

அவ்யக்த சமிக்கை: சகஜயோகி ஆக வேண்டும் என்றால் பரமாத்ம அன்பின் அனுபவி ஆகுங்கள்

சேவையில் அல்லது தனது முன்னேறும் கலையில் வெற்றி பெறுவதற்கு முக்கிய ஆதாரம் - ஒரு தந்தையின் மீது உறுதியான அன்பு. தந்தையைத் தவிர வேறு எதுவும் தென்படக் கூடாது. சங்கல்பத்திலும் பாபா, வார்த்தையிலும் பாபா, செயலிலும் தந்தையின் துணை, இவ்வாறு அன்பில் மூழ்கிய ஸ்திதியில் இருந்து ஒரு வார்த்தை கூறினாலும் அந்த அன்பான வார்த்தை மற்ற ஆத்மாக்களையும் அன்பில் கட்டி விடும். இவ்வாறு அன்பில் மூழ்கிய ஆத்மாவின் ஒரு பாபா என்ற வார்த்தையே சூ மந்திரம் போன்று வேலை செய்யும்.