08-12-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! எதுவரை
வாழ்கிறீர்களோ அதுவரை பாபாவை நினைவு செய்ய வேண்டும், நினைவின்
மூலம் தான் ஆயுள் அதிகரிக்கும், படிப்பின் சாரமே நினைவாகும்
கேள்வி:
குழந்தைகளாகிய உங்களுடைய
அதீந்திரிய சுகம் பாடப்பட்டுள்ளது, ஏன்?
பதில்:
ஏனென்றால் நீங்கள் எப்போதுமே
பாபாவின் நினைவில் மகிழ்ச்சியை கொண்டாடுகிறீர்கள், இப்போது
உங்களுக்கு எப்போதுமே கிற்ஸ்மஸ் ஆகும். உங்களுக்கு பகவான்
படிப்பிக்கின்றார், இதைவிட பெரிய மகிழ்ச்சி வேறு என்ன இருக்கும்,
இது ஒவ்வொரு நாளுக்குமான குஷியாகும் ஆகையினால் உங்களுடைய
அதீந்திரிய சுகம் தான் மகிமை பாடப்பட்டுள்ளது.
பாடல்:
கண்ணில்லாதவர்களுக்கு வழி
காட்டுங்கள் பிரபு..........
ஓம் சாந்தி.
ஞானத்தின் மூன்றாவது கண்ணை கொடுக்கக் கூடிய ஆன்மீகத் தந்தை
ஆன்மீகக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். ஞானத்தின்
மூன்றாவது கண்ணை பாபாவைத் தவிர வேறு யாரும் கொடுக்க முடியாது.
எனவே இப்போது குழந்தைகளுக்கு ஞானத்தின் மூன்றாவது கண்
கிடைத்திருக்கிறது. பக்தி மார்க்கமே இருட்டு வழி என்று பாபா
இப்போது புரிய வைத்துள்ளார். எப்படி இரவில் வெளிச்சம்
இருப்பதில்லை எனும் போது மனிதர்கள் ஏமாற்றம் அடைகிறார்கள்.
பிரம்மாவின் இரவு, பிரம்மாவின் பகல் என்று பாடப்படுகிறது.
எங்களுக்கு வழி காட்டுங்கள் என்று சத்யுகத்தில்
சொல்லமாட்டார்கள், ஏனென்றால் இப்போது உங்களுக்கு வழி கிடைத்துக்
கொண்டி ருக்கிறது. பாபா வந்து முக்திதாமம் மற்றும் ஜீவன்முக்தி
தாமத்திற்கான வழியை சொல்லிக் கொண்டிருக்கிறார். நீங்கள் இப்போது
முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். உலகம் மாறப் போகிறது,
இன்னும் கொஞ்ச காலம் தான் இருக்கிறது என்பதை தெரிந்துள்ளீர்கள்.
உலகம் மாறப்போகிறது........ என்ற பாடல் கூட
உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் பாவம் மனிதர்களுக்கு, உலகம்
எப்போது மாறப்போகிறது, எப்படி மாறப்போகிறது, யார்
மாற்றுகிறார்கள் என்பது தெரிய வில்லை, ஏனென்றால் ஞானம் எனும்
மூன்றாவது கண் இல்லை. இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு
மூன்றாவது கண் கிடைத்திருக்கிறது, அதன்மூலம் நீங்கள் இந்த
சிருஷ்டி சக்கரத்தின் முதல்-இடை-கடைசியை தெரிந்து கொண்டீர்கள்.
மேலும் இந்த ஞானம் எனும் சேக்ரின்(மிகவும் இனிப்பான பொருள்)
உங்களுடைய புத்தியில் இருக்கிறது. எப்படி கொஞ்ச சேக்ரின் கூட
மிகவும் இனிப்புள்ளதாக இருக்கிறதோ அதுபோல் ஞானத்தின் இந்த
இரண்டு சொற்கள் மன்மனாபவ......, இவை தான் அனைத்திலும் இனிமையான
பொருள்களாகும், பாபாவை நினைவு செய்யுங்கள், அவ்வளவு தான்.
பாபா வருகின்றார், வந்து வழி சொல்கின்றார். எங்கே செல்வதற்கான
வழியைக் கூறுகின்றார்? சாந்திதாமம் மற்றும் சுகதாமம்
செல்வதற்கான வழியாகும். எனவே குழந்தை களுக்கு மகிழ்ச்சி
ஏற்படுகிறது. மகிழ்ச்சி எப்போது கொண்டாடப்படுகிறது என்பதை உலகம்
தெரிந்திருக்கவில்லை. மகிழ்ச்சி என்பது புதிய உலகத்தில்
கொண்டாடப்படுகிறது அல்லவா. இது முற்றிலும் சாதாரண விசயமாகும்,
பழைய உலகத்தில் மகிழ்ச்சி எங்கிருந்து வந்தது? பழைய உலகத்தில்
மனிதர்கள் ஐயோ- ஐயோ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்
ஏனென்றால் தமோபிரதானமாகும். தமோபிரதான உலகத்தில் மகிழ்ச்சி
எங்கிருந்து வந்தது? சத்யுகத்தைப் பற்றிய ஞானம் யாரிடத் திலும்
இல்லை, ஆகையினால் பாவம் இங்கே குஷியை கொண்டாடிக்
கொண்டிருக்கிறார்கள். பாருங்கள், கிறிஸ்துமஸ் பண்டிகையை எவ்வளவு
மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறார்கள். பாபா கூறுகின்றார், ஒருவேளை
மகிழ்ச்சியைப் பற்றி கேட்க வேண்டும் என்றால் என்னுடைய
குழந்தைகளிடத்தில் கேளுங்கள், ஏனென்றால் பாபா மிகவும் சகஜமான
வழியை கூறிக் கொண்டிருக்கிறார். குடும்ப விவகாரங்களில் இருந்து
கொண்டே, தங்களுடைய தொழில் போன்ற கடமைகளைச் செய்து கொண்டே தாமரை
மலருக்குச் சமமாக இருங்கள் மற்றும் என்னை நினைவு செய்யுங்கள்.
எப்படி பிரியதர்ஷன் - பிரியதர்ஷினிகள் இருக்கிறார்கள் அல்லவா,
அவர் களும் கூட தொழில் போன்றவற்றை செய்து கொண்டே ஒருவர்-மற்றவரை
நினைவு செய்து கொண்டிருக்கிறார்கள். லைலா-மஜ்னு ஹீரா -
ராஞ்சாவைப் போல் அவர்களுக்குக் காட்சி கூட ஏற்படுகிறது, அவர்கள்
விகாரத் திற்காக ஒருவர் மற்றவருடைய பிரியமானவர்களாக ஆவதில்லை.
அவர்களுடைய அன்பு பாடப்பட்டுள்ளது. அதில் ஒருவர்-மற்றவருக்கு
பிரியமானவர்களாக ஆகிறார்கள். ஆனால் இங்கே அப்படிப்பட்ட விசயம்
இல்லை. இங்கே நீங்கள் பிறவி-பிறவி களுக்கும் அந்த
பிரியமானவருக்கு பிரியதரிஷினிகளாக இருக்கின்றீர்கள். அந்த
பிரியதர்ஷன் உங்களுக்கு பிரியதர்ஷினி கிடையாது. ஹே பகவானே
கண்ணில்லாதவர்களுக்கு வந்து வழி காட்டுங்கள் என்று நீங்கள் அவரை
இங்கே வருமாறு அழைக்கிறீர்கள். நீங்கள் அரைக்கல்பம்
அழைத்தீர்கள். எப்போது துக்கம் அதிகமாகிறதோ அப்போது அதிகமாக
அழைக்கிறீர்கள். அதிக துக்கத்தில் அதிகமாக நினைவு செய்பவர்களும்
இருக்கிறார்கள். இப்போது நினைவு செய்பவர்கள் எவ்வளவு அதிமாக
இருக்கிறார்கள் என்று பாருங்கள். துக்கத்தில் அனைவரும் நினைவு
செய்வார்கள்.......... என்று பாடப்பட்டுள்ளது அல்லவா. காலம்
செல்லச்செல்ல அதிகம் தமோபிர தானம் ஆகிக் கொண்டே செல்கிறது. ஆக
நீங்கள் உயர்ந்து கொண்டே செல்கிறீர்கள், அவர்கள் இன்னும்
இறங்கிக் கொண்டே செல்கிறார்கள், ஏனென்றால் எதுவரை வினாசம் ஆகும்
வரையிலும் தமோபிரதானம் வளர்ந்து கொண்டே இருக்கும். நாளுக்கு-
நாள் மாயையும் தமோபிரதானமாக, வளர்ந்து கொண்டே செல்கிறது. இந்த
சமயத்தில் பாபாவும் சர்வசக்திமானாக இருக்கின்றார், என்றால்
மாயையும் இந்த சமயத்தில் சர்வசக்திமானாக இருக்கிறது. அதுவும்
பலசாலியாக இருக்கிறது.
குழந்தைகளாகிய நீங்கள் இந்த சமயத்தில் பிரம்மாவின் வாய்வம்சாவழி
பிராமண குலத்தின் அலங்காரங் களாவீர்கள். உங்களுடையது
அனைத்தையும் விட உத்தமமான குலமாகும், இதனை உயர்ந்ததிலும்
உயர்ந்த குலம் என்று சொல்லப்படுகிறது. இந்த சமயத்தில்
உங்களுடைய இந்த வாழ்க்கை மிகவும் மதிப்பு மிக்கதாகும் ஆகையினால்
இந்த சரீரத்தை பாதுகாக்கவும் வேண்டும், ஏனென்றால் ஐந்து
விகாரங்களின் காரணத்தினால் சரீரத்தின் ஆயுள் கூட குறைந்து
கொண்டே செல்கிறது அல்லவா. எனவே பாபா கூறுகின்றார், இந்த
சமயத்தில் ஐந்து விகாரங்களை விட்டு விட்டு யோகத்தில்
இருந்தீர்கள் என்றால் ஆயுள் அதிகரிக்கும். ஆயுள் அதிகரித்து-
அதிகரித்து எதிர் காலத்தில் ஆயுள் 150 ஆண்டுகளாகி விடும்.
இப்போது இல்லை, ஆகையினால் தான் பாபா கூறுகின்றார், இந்த
சரீரத்தைக் கூட மிகவும் பாதுகாப்பாக வைக்க வேண்டும். இந்த
சரீரம் ஒன்றிற்கும் உதவாது, மண்ணினால் ஆன பொம்மை என்று
சொல்லப்படுகிறது. எதுவரை வாழ்கிறோமோ அது வரை பாபாவை நினைவு
செய்ய வேண்டும், என்ற புரிதல் இப்போது குழந்தை களாகிய
உங்களுக்கு கிடைக்கிறது. ஆத்மா பாபாவை ஏன் நினைவு செய்கிறது?
ஆஸ்திக்காக ஆகும். நீங்கள் தங்களை ஆத்மா என்று புரிந்து கொண்டு
பாபாவை நினைவு செய்யுங்கள் மற்றும் தெய்வீக குணங்களை தாரணை
செய்தீர்கள் என்றால் நீங்கள் லஷ்மி-நாராயணனைப் போல் ஆகி
விடுவீர்கள், என்று பாபா கூறுகின்றார். எனவே குழந்தைகள் படிப்பை
நல்ல விதத்தில் படிக்க வேண்டும். படிப்பில் சோம்பல் படக்கூடாது,
இல்லையென்றால் தேர்ச்சி பெறாமல் போய் விடுவீர்கள். மிகவும்
குறைந்த பதவியை அடைவீர்கள். படிப்பில் முக்கியமான விசயம்,
பாபாவை நினைவு செய்யுங்கள் என்பதாகும், இதைத்தான் படிப்பின்
சாரம் என்று சொல்லப்படுகிறது. கண் காட்சியிலோ அல்லது செண்டரிலோ
யாராவது வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு முதலில் பாபாவை
நினைவு செய்யுங்கள், ஏனென்றால் அவர் தான் உயர்ந்ததிலும்
உயர்ந்தவர் என்று புரிய வையுங்கள். எனவே உயர்ந்ததிலும் உயர்ந்த
வரைத் தான் நினைவு செய்ய வேண்டும், அவரை விட குறைந்தவர்களை
நினைவு செய்ய வேண்டுமா என்ன! உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான்
என்று சொல்லப்படுகிறது. பகவான் தான் புதிய உலகத்தை ஸ்தாபனை
செய்பவர் ஆவார். பாருங்கள், பாபாவும் கூட, நான் தான் புதிய
உலகத்தை ஸ்தாபனை செய்கின்றேன், ஆகையினால் என்னை நினைவு
செய்தீர்கள் என்றால் உங்களுடைய பாவங்கள் அழிந்து விடும் என்று
கூறு கின்றார். எனவே இதை உறுதியாக நினைவில் வைத்துக்
கொள்ளுங்கள் ஏனென்றால் பாபா தூய்மையற்றவர் களை தூய்மையாக்குபவர்
அல்லவா. நீங்கள் என்னை தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவர் என்று
சொல்கிறீர்கள் என்றால் நீங்கள் தமோபிர தானமானவர்களாக இருக்
கின்றீர்கள், மிகவும் தூய்மையற்றவர்களாக இருக்கிறீர்கள்,
இப்போது தூய்மையாகுங்கள் என்று தான் கூறுகின்றார்.
உங்களுடைய சுகத்தின் நாட்கள் வரப்போகிறது, துக்கத்தின் நாட்கள்
முடிந்து விட்டது, என்று பாபா வந்து குழந்தைகளுக்குப் புரிய
வைக்கின்றார், துக்கத்தைப் போக்கி சுகத்தை வழங்கும் வள்ளலே
என்றும் என்னை அழைக்கிறீர்கள். எனவே சத்யுகத்தில் அனைவரும்
சுகமோ சுகமுடையவர்களாக இருக்கிறார்கள் என்பதை
தெரிந்திருக்கிறீர்கள் அல்லவா. எனவே அனைவரும் சாந்திதாமம்
சுகதாமத்தை நினைவு செய்து கொண்டே இருங்கள் என்று பாபா
குழந்தைகளுக்கு கூறுகின்றார். இது சங்கமயுகமாகும், படகோட்டி
உங்களை அக்கரைக்கு அழைத்துச் செல்கின்றார். மற்றபடி இதில் எந்த
படகோட்டியோ அல்லது படகினுடைய விசயமோ இல்லை. படகை கரை சேருங்கள்
என்று மகிமை பாடிவிடுகிறார்கள் அவ்வளவு தான். ஒருவருடைய படகை
மட்டும் கரை சேர்ப்பது இல்லை அல்லவா. முழு உலகத்தின் படகையும்
கரை சேர்க்க வேண்டும். இந்த முழு உலகமும் ஒரு பெரிய கப்பலைப்
போன்றதாகும், இதை கரை சேர்க்கின்றார். எனவே குழந்தைகளாகிய
நீங்கள் அதிக குஷியை கொண்டாட வேண்டும் ஏனென்றால் உங்களுக்கு
எப்போதுமே குஷியாகும், எப்போதுமே கிறிஸ்மஸ் ஆகும். எப்போது
உங்களுக்கு பாபா கிடைத்தாரோ, அப்போதிலிருந்து உங்களுக்கு
எப்போதும் கிறிஸ்துமஸ் ஆகும் ஆகையினால் தான் அத்தீந்திரிய சுகம்
பாடப் பட்டுள்ளது. பாருங்கள், இவர் (பிரம்மா பாபா) எப்போதும்
குஷியாக இருக்கின்றார், ஏன்? அட எல்லையற்ற தந்தை
கிடைத்திருக்கின்றார்! அவர் நமக்கு கல்வி கற்பித்துக்
கொண்டிருக்கின்றார். எனவே இது ஒவ்வொரு தினத்திற்குமான குஷியாக
இருக்க வேண்டும் அல்லவா. ஆஹா எல்லையற்ற தந்தை கல்வி கற்பித்துக்
கொண்டிருக்கின்றார். எப்போதாவது யாராவது கேள்வி
பட்டிருக்கிறீர்களா? கீதையில் கூட பகவானுடைய மகாவாக்கியம்
இருக்கிறது, நான் உங்களுக்கு இராஜயோகம் கற்றுக் கொடுக்கின்றேன்,
எப்படி அவர்கள் வக்கீல் மற்றும், டாக்டர் ஆவதற்கான கல்வி
கற்றுக் கொடுக்கிறார்களோ, அதுபோல் நான் ஆன்மீக குழந்தைகளாகிய
உங்களுக்கு இராஜ யோகத்தை கற்றுக் கொடுக்கின்றேன். நீங்கள் இங்கே
வருகிறீர்கள் என்றால் இராஜயோகம் கற்றுக் கொள்வதற்கு
வருகிறீர்கள் அல்லவா. இதில் குழப்பமடை வதற்கான அவசியமே இல்லை.
எனவே இராஜயோகத்தை முழுமையாகக் கற்றுக் கொள்ள வேண்டும். விட்டு
விட்டு ஓடி விடக்கூடாது. படிக்கவும் வேண்டும், நல்ல விதத்தில்
தாரணையும் செய்ய வேண்டும். தாரணை செய்வதற் காகவே டீச்சர்
படிப்பிக்கின்றார்.
ஒவ்வொருவருக்கும் அவரவருடைய புத்தி இருக்கிறது - சிலருடைய
உத்தமமானதாக இருக்கிறது, சிலருடையது மத்திமமானதாக இருக்கிறது,
சிலருடையது கீழானதாக இருக்கிறது. எனவே என்னுடைய புத்தி
உத்தமமானதா, மத்திமமானதா அல்லது கீழானதா என்று தன்னிடத்தில்
கேட்க வேண்டும்? தங்களை தாங்களே பகுத்தறிய வேண்டும், நான்
உயர்ந்த திலும் உயர்ந்த தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்ந்த
பதவியை அடைவதற்கு தகுதியானவனா? நான் சேவை செய்கிறேனா? பாபா
கூறுகின்றார் - குழந்தைகளே, சேவாதாரியாக ஆகுங்கள், பாபாவை
பின்பற்றுங்கள் ஏனென்றால் நானும் சேவை செய்கின்றேன் அல்லவா.
சேவை செய்வதற்காகவே வந்துள்ளேன், தினம் தினம் சேவை செய்கிறேன்
ஏனென்றால் அதற்காகவே ரதத்தையும் எடுத்திருக்கின்றேன் அல்லவா.
ரதமும் உறுதியானதாக இருக்கிறது, நன்றாக இருக்கிறது, இவருடையது
எப்போதும் சேவையாகும். பாப்தாதா இவருடைய ரதத்தில் எப்போதும்
இருக்கின்றனர். இவருடைய சரீரம் நோயுறலாம், இருந்தாலும் நான்
அமர்ந்திருக்கின்றேன் அல்லவா. எனவே நான் இவருக்குள் அமர்ந்து
கொண்டு எழுதவும் செய்கின்றேன், ஒருவேளை இவர் வாயின் மூலம் பேச
முடிய வில்லை என்றால் நான் எழுத முடியும். முரளி ஒருபோதும்
தவறுவதில்லை. எதுவரை அமர முடியுமோ, எழுத முடியுமோ, அதுவரை முரளி
வாசிக்கின்றேன், குழந்தைகளுக்கு எழுதி அனுப்பி விடுகின்றேன்
ஏனென்றால் சேவாதாரி அல்லவா. எனவே நீங்கள் தங்களை ஆத்மா என்று
புரிந்து கொண்டு நிச்சயபுத்தியுடையவர்களாகி சேவையில்
ஈடுபடுங்கள் என்று பாபா வந்து புரிய வைக்கின்றார். பாபாவினுடைய
சேவை, இறை தந்தையின் சேவை ஆகும். எப்படி அவர்கள் மகாராஜாவின்
சேவையில் என்று எழுதுகிறார்கள் அல்லவா. நீங்கள் என்ன
சொல்வீர்கள்? இது மகாராஜாவின் சேவையை விடவும் உயர்ந்த
சேவையாகும் ஏனென்றால் மகாராஜாவாக ஆக்கு கின்றார். நாம்
உலகத்திற்கு எஜமானர்களாக ஆகின்றோம் என்பதையும் நீங்கள் புரிந்து
கொள்ள முடியும்.
குழந்தைகளாகிய உங்களில் யார் நல்ல விதத்தில் முயற்சி
செய்கிறார்களோ, அவர்களைத் தான் மகாவீர் என்று சொல்லப்படுகிறது.
எனவே யார் மகாவீர், யார் பாபாவின் டைரக்ஷன் படி என்று சோதனை
செய்ய வேண்டும். குழந்தைகளே தங்களை ஆத்மா என்று புரிந்து
கொள்ளுங்கள், சகோதர-சகோதரர்கள் என்றே பாருங்கள் என்று பாபா
புரிய வைக்கின்றார். பாபா தன்னை சகோதரர்களின் தந்தை என்றே
புரிந்து கொள்கிறார் மற்றும் சகோதரர்களையே (ஆத்மாக்களையே)
பார்க்கின்றார். அனைவரையும் பார்ப்பதில்லை. இது ஞானமாகும், இதை
சரீரம் இல்லாமல் யாரும் கேட்க முடியாது, பேசவும் முடியாது. நான்
இங்கே சரீரத்தில் வந்துள்ளேன் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள்
அல்லவா. நான் இந்த சரீரத்தை கடனாக எடுத்துள்ளேன். அனைவருக்கும்
சரீரம் இருக்கிறது, ஆத்மா சரீரத்தோடு இங்கே படித்துக்
கொண்டிருக்கிறது. எனவே இப்போது பாபா நமக்கு கல்வி கற்பித்துக்
கொண்டிருக்கிறார் என்று ஆத்மாக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பாபா எங்கே அமர்ந்திருக்கின்றார். அழிவற்ற சிம்மாசனத்தில்.
ஒவ்வொரு ஆத்மாவும் அழிவற்ற மூர்த்தி என்று பாபா புரிய
வைத்திருக்கிறார், அது ஒருபோதும் அழிவதில்லை, ஒருபோதும் எரிவ
தில்லை, வெட்டுபடுவதில்லை, மூழ்குவது மில்லை. சிறியதாகவோ,
அல்லது பெரியதாகவோ ஆவது மில்லை. சரீரம் சிறியது-பெரியதாக ஆகிறது.
ஆக உலகத்தில் இருக்கின்ற மனிதர்கள் அனைவருக் குள்ளும்
இருக்கின்ற ஆத்மாக்களின் அழிவற்ற சிம்மாசனம் இந்த புருவ
மத்தியாகும். சரீரம் வெவ்வேறாக இருக்கிறது. சிலரது அழிவற்ற
சிம்மாசனம் ஆணினுடையதாகவும், சிலருடையது பெண்ணினுடையதாகவும்,
சிலருடையது குழந்தையினுடையதாகவும் இருக்கிறது. எனவே
எப்போதெல்லாம் யாரிடமும் பேசுகிறீர்கள் என்றால் நான் ஆத்மா,
என்னுடைய சகோதரனிடம் பேசுகின்றேன் என்று புரிந்து கொள்ளுங்கள்.
சிவபாபாவை நினைவு செய்தீர்கள் என்றால் ஆத்மாவில்
படிந்திருக்கின்ற துரு நீங்கி விடும் என்று தந்தையின்
அறிமுகத்தை அளியுங்கள். எப்படி தங்கத்தில் வேறு உலோகத்தின்
கலப்பு செய்துவிட்டால் அதனுடைய மதிப்பு குறைந்து விடுகிறது,
அதுபோல் உங்களுடைய மதிப்பும் கூட குறைந்து விட்டது. இப்போது
முற்றிலும் மதிப்பற்றவர்களாக ஆகி விட்டீர்கள். நம்மை
திவாலானவர்கள் என்றும் சொல்லப் படுகிறது. பாரதம் எவ்வளவு
செல்வந்தர் நாடாக இருந்தது, இப்போது கடன் வாங்கிக் கொண்டிருக்
கிறார்கள். வினாசத்தின் போது அனைவருடைய பணமும் அழிந்து விடும்.
கொடுக்கக் கூடியவர் கள், வாங்கக் கூடியவர் கள் அனைவரும் அழிந்து
விடுவார்கள் மற்றபடி யார் அழிவற்ற ஞான ரத்தினங்களை எடுக்கக்
கூடியவர்கள் இருக்கிறார்களோ, அவர்கள் வந்து பிறகு தங்களுடைய
பாக்கியத்தை அடைவார்கள். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) பாபாவைப் பின்பற்றி பாபாவிற்குச் சமமாக சேவை செய்யக்
கூடியவர்களாக ஆக வேண்டும் நான் உயர்ந்ததிலும் உயர்ந்த தேர்வில்
தேர்ச்சி பெற்று உயர்ந்த பதவியை அடைவதற்கு தகுதியானவனாக
இருக்கின்றேனா? என்று தங்களை தாங்களே மதிப்பிட வேண்டும்.
2) பாபாவின் அறிவுரையின் படி (டைரக்ஷன்) நடந்து மகாவீராக ஆக
வேண்டும், எப்படி பாபா ஆத்மாக்களைப் பார்க்கின்றாரோ,
ஆத்மாக்களுக்குப் படிப்பிக்கின்றாரோ, அதுபோல் ஆத்மா
சகோதர-சகோதரர்களைப் பார்த்து பேச வேண்டும்.
வரதானம்:
உயர் தன்மையின் ஆதாரத்தில் அருகான்மையை கொணர்வதன் மூலமாக
கல்பத்தின் மிக உயர்ந்த பலனை பெறுபவராகி சிறப்பான நடிகராகுக !
இந்த பிறவியின் வாழ்வின் உயர்தன்மைக்கு ஆதாரம் இரு
விசயங்களாகும் 1. சதா பரோபகாரியாக இருப்பது. 2 பால
பிரம்மச்சாரியாக இருப்பது. எந்த குழந்தைகள் இவ்விரு
விசங்களிலும் ஆரம்பம் முதல் இறுதி வரையிலும் தொடர்ந்து
இருப்பார்களோ, எந்த விதமான தூய்மைக்கும் அடிக்கடி பங்கம்
ஏற்படாமல் உலகிற்காகவும் பிராமண குடும்பத்திற்காகவும்
என்றென்றும் உபகாரியாக இருப்பார்களோ அத்தகைய விசேஷ நடிகர்களே
பாப்தாதாவின் அருகே எப்போதுமும் இருப்பார் கள். அவர்களுக்கான
பலனும் முழு கல்பத்திற்கும் உர்வாகவே அமைகின்றது.
சுலோகன்:
எண்ணம் வீணானால் மற்ற அனைத்து பொக்கிஷங்களும் வீணே ஆகும்.
அவ்யக்த சமிக்ஞை: இப்பொழுது சம்பன்னம் மற்றும் கர்மாதீத்
ஆவதற்காக ஆர்வத்துடன் செயல்படுங்கள்.
கர்மாதீத் நிலையை அனுபவம் செய்ய ஞானம் கேட்பது, சொல்வது கூடவே
இப்போது பிரம்மா பாப்சமான் விலகிய அசரீரி நிலையின் பயிற்சில்
விசேஷ கவனம் தருக. பிரம்மா பாபா வாழ்நாளில் இருக்கும் போதே
கர்மாதீத் நிலையை அடைவதற்கு முன்பே நடைமுறை வாழ்வில் அன்பாகவும்
விலகியும் இருந்து நேருக்கு நேராக அனுபவம் செய்ய வைத்தார்.
சேவையையோ, எந்த செயலையோ விட்டு விடவில்லை, ஆனால் இறுதி நாள்
கூட குழந்தைகளின் சேவை யனைத்தையும் செய்து முடித்தார். அவ்வாறே
தந்தையை பின்பற்றுங்கள்.