09-04-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! இப்பொழுது நீங்கள்
சத்ய தந்தையின் மூலமாக உண்மையான விஷயங்களை கேட்டு வெளிச்சத்தில்
வந்துள்ளீர்கள் அதனால் உங்களின் கடமை அனைவரையும் இருளிலிருந்து
வெளிச்சத்திற்கு கொண்டு வருதல் ஆகும்.
கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள்
மற்றவர்களுக்கு ஞானம் சொல்லும்போது எந்த ஒரு விஷயத்தை நிச்சயம்
நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்?
பதில்:
அடிக்கடி வாயிலிருந்து பாபா பாபா
என்று கூறிக் கொண்டே இருங்கள். இதனால் தன்னுடையது என்பது
முடிந்து போகும். சொத்தும் நினைவிருக்கும். பாபா என்று
கூறுவதால் சர்வ வியாபி என்ற ஞானம் முதலிலேயே அழிந்துவிடுகிறது.
ஒரு வேளை யாராவது பகவான் சர்வ வியாபி என்று கூறினால் தந்தை
அனைவருக்குள்ளும் எப்படி இருக்க முடியும் என்று கேளுங்கள்.
பாடல்:
இன்று இருளில் இருக்கிறான் மனிதன்.....
ஓம் சாந்தி.
குழந்தைகள் என்ன கூறினார்கள்? யாரை அழைத்தார்கள்? ஓ, ஞானக் கடலே
மற்றும் ஓ, ஞான சூரியன் பாபா..... பகவானுக்கு அப்பா என்று
கூறப்படுகிறது அல்லவா! பகவான் தந்தை என்றால் நீங்கள் அனைவரும்
குழந்தைகள். நாங்கள் இருளில் இருக்கிறோம் என்று குழந்தைகள்
கூறுகிறார்கள். தாங்கள் எங்களை வெளிச்சத்திற்கு கொண்டு
செல்லுங்கள் அப்பா என்று கூறுவ தால் தந்தையை அழைக்கிறார்கள்
எனத் தெளிவாகிறது. பாபா என்று கூறுவதால் அன்பு வருகிறது.
ஏனேனில் தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைந்துக் கொண்டிருக்கிறோம்,
வெறுமனே ஈஸ்வரா அல்லது பிரபு என்று கூறுவதால் ஆஸ்தியின் இரசனை
வராது, தந்தையே, பாபா என்று கூறுவதினால் ஆஸ்தியின் நினைவு
வருகிறது. பாபா நாங்கள் இருளில் வந்துவிட்டோம் என்று அவரை
அழைக்கின்றீர்கள். இப்போது தாங்கள் மீண்டும் ஞானத்தினால்
எங்களுடைய தீபங் களை ஏற்றி வையுங்கள். ஏனென்றால் ஆத்மாக்களின்
தீபம் அணைந்து போய் இருக் கிறது. மனிதர்கள் இறந்துவிட்டால் 12
நாட்கள் தீபத்தை ஏற்றுகிறார்கள். ஒருவர் தீபம் அணையாமல் இருக்க
எண்ணெய் ஊற்றுவதற்காக அமர்ந்திருக் கிறார். பாரதவாசியாகிய
நீங்கள் வெளிச்சத்தில் அதாவது பகலில் இருந்தீர்கள். இப்போது
இரவில் இருக்கிறீர்கள் என்று பாபா புரிய வைக்கிறார். 12 மணி
நேரம் பகல், 12 மணி நேரம் இரவு. அது எல்லைக்குட்பட்ட விஷயம்
ஆகும். இது எல்லைக் கப்பாற்பட்ட பகல் மற்றும் எல்லை யற்ற இரவு.
சத்யுகம், திரேதாயுகம் பிரம்மாவின் பகல், துவாபர் கலியுகம்
பிரம்மாவின் இரவு என்று கூறப்படுகிறது. இரவில் இருள்
ஏற்படுகிறது. மனிதர்கள் ஏமாற்றம் அடைந்துக் கொண்டே
இருக்கிறார்கள். பகவானை தேடுவதற்காக நாலாபுறமும் சுற்றி அலைந்து
கொண்டே இருக்கிறார்கள். ஆனால் பரமாத்மாவை அடைய முடியவில்லை.
பரமாத்மாவை அடைவதற்காகக் தான் பக்தி செய்கிறார்கள்.
துவாபரயுகத்திலிருந்து பக்தி ஆரம்பமாகிறது. அதாவது இராவண
இராஜ்யம் ஆரம்பம் ஆகிறது. தசராவைப் பற்றி கூட ஒரு கதை
உருவாக்கப்பட்டிருக்கிறது. கதைகளை எப்போதும் மனதை கவரும்
வகையில் உருவாக்கு கிறார்கள். எப்படி சினிமா, நாடகம் போன்றவைகளை
உருவாக்குகிறார்களோ அவ்வாறே. ஸ்ரீமத் பகவத்கீதை தான் உண்மையானது.
பரமாத்மா குழந்தை களுக்கு இராஜயோகத்தை கற்பித்தார், இராஜ்யம்
கொடுத்தார். பிறகு பக்தி மார்க்கத்தில் அமர்ந்து கதைகளை
உருவாக்குகிறார்கள். வியாசர் கீதையை உருவாக்கினார், அதாவது
கதையை உருவாக்கினார். உண்மையான விஷயத்தை பாபா மூலமாக இப்போது
நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். எப்போதும் பாபா, பாபா
என்று கூற வேண்டும். பரமாத்மா நம்முடைய பாபா (தந்தை) ஆவார்.
புது உலகை படைப்பவர். எனவே நிச்சயம் அவரிடமிருந்து நமக்கு
சொர்க்கத்தின் சொத்து கிடைக்க வேண்டும். இப்போதோ 84 பிறவிகள்
அனுபவித்து நாம் நரகத்தில் வந்திருக்கிறோம். குழந்தைகளே!
பாரதவாசி களாகிய நீங்கள் சூரிய வம்சத்தினராக சந்திர
வம்சத்தினராக இருந்தீர்கள். உலகத்திற்கே அதிபதி யாக
இருந்தீர்கள், வேறு எந்த தர்மமும் இல்லை. அதற்கு சொர்க்கம்
அல்லது கிருஷ்ணபுரி என்று கூறப்படுகிறது என பாபா புரிய
வைக்கிறார். இதுவோ கம்சபுரியாகும். இலஷ்மி நாராயணனின் இராஜ்யம்
இருந்தது என பாப்தாதா நினைவுப்படுத்துகிறார். பாபாதான் ஞானக்
கடல், அமைதியின் கடல், பதீத பாவனர், நீரால் ஆன கங்கை கிடையாது.
அனைத்து மணப்பெண்களுக்கும் ஒரேயொரு பகவான் மணவாளன் ஆவார். இது
மனிதர் களுக்குத் தெரியாது. ஆகவே ஆத்மாக்களின் தந்தை யார் என
கேட்கப்படுகிறது, கேட்டால் குழம்பி போகிறார்கள். எங்களுக்குத்
தெரியாது எனக் கூறுகிறார்கள். அட, ஆத்மா நீங்கள் உங்களுடைய
தந்தையைப் பற்றி அறிய வில்லையா? இறைதந்தை என கூறுகிறார்கள்.
அவருடைய பெயர், ரூபம் என்ன? இறைவனை அறிந்திருக் கிறீர்களா?
என்று கேட்கப்படுகிறது. சர்வவியாபி என்று கூறுகிறார்கள், அட,
குழந்தைகளின் தந்தை எப்போதாவது சர்வவியாபியாக இருப்பாரா என்ன?
இராவணனின் அசுர வழிப்படி எவ்வளவு முட்டாளாகி விடுகிறார்கள்.
தேக உணர்வு நம்பர் ஒன்னாகும்.. தன்னை ஆத்மா என்று உறுதிப்
படுத்திக் கொள்ளவில்லை. நான் இன்னார் என்று கூறிக்
கொள்கிறார்கள். இது சரீரத்தின் விஷயம் ஆகிவிட்டது. உண்மையில்
தான் யார் என்பதை அறியவில்லை. நான் நீதிபதி, நான் இது......
நான், நான் என்று கூறிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இது
தவறாகும். நான் மற்றும் என்னுடையது என்பது இரண்டு விஷயங்கள்
ஆகும். ஆத்மா அழிவற்றது, உடல் அழியக் கூடியது. பெயர், உடலுக்கு
தான் வைக்கப்படுகிறது. ஆத்மாவிற்கு எந்தப் பெயரும்
வைக்கப்படவில்லை. என்னுடைய பெயர் சிவன் தான் என்று பாபா
கூறுகின்றார். சிவஜெயந்தி கூட கொண்டாடுகிறார்கள். இப்போது
நிராகாரரின் ஜெயந்தி எப்படி இருக்க முடியும். அவர் யாருக்குள்
வருகிறார். இது யாருக்கும் தெரியவில்லை. அனைத்து ஆத்மாக்களின்
பெயர் ஆத்மா தான் ஆகும். பரமாத்மாவின் பெயர் சிவன் ஆகும். மற்ற
அனைவரும் சாலிகிராம் ஆவார்கள். ஆத்மாக்கள் குழந்தைகள் ஆவர். ஒரு
சிவன் தான் அனைத்து ஆத்மாக் களின தந்தை ஆவார். அவரே எல்லை யற்ற
தந்தை. அவரை அனைவரும் எங்களை தூய்மையாக்க வாருங்கள் என
அழைக்கிறார்கள். நாங்கள் துக்கத்தில் இருக்கிறோம். ஆத்மா
அழைக்கிறது. துக்கத்தில் தான் அனைத்து ஆத்மாக் களும்
நினைக்கிறார்கள். மேலும் இதே குழந்தைகள் சுகத்தில் இருக்கும்
போது யாரும் நினைப் பதில்லை. இராவணன் தான் துக்கமுடையவராக
மாற்றி இருக்கிறான்.
இந்த இராவணன் தான் உங்களுடைய பழைய எதிரி என பாபா புரிய
வைக்கிறார். இவ்வாறு நாடகத்தில் விளையாட்டு
உருவாக்கப்பட்டிருக்கிறது. எனவே, இப்போது அனைவரும் இருளில்
இருக்கிறார்கள். ஆகவே ஞான சூரியனே வருங்கள், எங்களை
வெளிச்சத்திற்குக் கொண்டு செல்லுங்கள் என அழைக்கிறார்கள் பாரதம்
சுகதாமமாக இருந்தது. அப்போது யாரும் அழைக்க வில்லை. கிடைக்காத
பொருள் என்று எதுவும் இல்லை. இங்கேயோ ஓ, சாந்தி தேவா என்று
கதறிக் கொண்டிருக்கிறார்கள். உங்களுடைய சுய தர்மமே அமைதி என்று
பாபா வந்து புரிய வைக்கிறார். அது கழுத்தின் மாலையாகும். ஆத்மா
சாந்தி தாமத்தில் வசிக்கக் கூடியதாகும். சாந்திதாமத்திலிருந்து
சுக தாமத்திற்கு போகிறது. அங்கேயோ சுகமே சுகமாகும். நீங்கள்
கதற வேண்டியதில்லை. துக்கத்தில் தான் இரக்கம் காட்டுங்கள்,
துக்கத்தை நீக்கி சுகம் அளிக்கும் தந்தையே வாருங்கள் என்று
அழைக் கிறார்கள். சிவபாபா, இனிமையான பாபா மீண்டும் வாருங்கள்
என்கிறார் கள். நிச்சயமாக வருகிறார். அப்போது தான் சிவஜெயந்தி
கொண்டாடு கிறார்கள். ஸ்ரீகிருஷ்ணரோ சொர்க்கத்தின் இளவரசன் ஆவார்.
அவருடைய ஜெயந்தியும் கொண்டாடுகிறார்கள். ஆனால் கிருஷ்ணர்
எப்போது வந்தார் என்பது யாருக்கும் தெரிய வில்லை. இராதை
கிருஷ்ணர் தான் சுயம்வரத்திற்கு பின் இலஷ்மி நாராயணன்
ஆகிறார்கள். இரு யாருக்கும் தெரியவில்லை. ஓ, இறை தந்தையே......
என மனிதர்கள் தான் அழைத்துக் கொண்டி ருக்கிறார்கள். சரி,
அவருடைய பெயர், உருவம் என்ன என்றால் பெயர் ரூபத்திலிருந்து விடு
பட்டவர் என்கிறார்கள். அட, நீங்கள் இறை தந்தை என்கிறீர்கள்.
பிறகு பெயர் உருவத்திலிருந்து விடுபட்டவர் என்று சொல்கிறீர்கள்.
ஆகாயம் துருவமாகும். அதற்கு கூட ஆகாயம் என்று பெயர் இருக்கிறது.
நாங்கள் பாபாவின் பெயர் ரூபத்தை அறியவில்லை என்று நீங்கள்
கூறுகிறீர்கள். சரி, தன்னை பற்றி அறிகிறீர்களா? ஆம், நாங்கள்
ஆத்மா சரி, ஆத்மாவின் பெயர் ரூபத்தை தெரிவியுங் கள் என்றால்
ஆத்மாவே பரமாத்மா என்று கூறிவிடுகிறார்கள். ஆத்மா பெயர்
ரூபத்திலிருந்து விடுபட்டதாக இருக்க முடியாது. ஆத்மா ஒரு புள்ளி,
நட்சத்திரம் போன்றதாகும். புருவ மத்தியில் இருக்கிறது. இந்த
சிறிய ஆத்மாவில் 84 பிறவிகளின் பாகம் பதிவாகி இருக்கிறது. இது
மிகவும் புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம் ஆகும். ஆகவே தான் 7
நாட்கள் பட்டி என்று பாடப் பட்டிருக்கிறது. துவாபர
யுகத்திலிருந்து இராவண இராஜ்யம் ஆரம்ப மாகியது. அப்போதிலிருந்து
தான் விகாரங்கள் பிரவேசம் ஆகியது. ஏணிப்படியில் இறங்கிக் கொண்டே
வந்தீர்கள். இப்போது அனைவருக்கும் கிரகணம் பிடித்திருக்கிறது.
கருப்பாகி விட்டீர்கள். ஆகவே, ஞான சூரியனே வாருங்கள்! என
பாடுகிறார்கள். வந்து எங்களை வெளிச்சத்திற்கு கொண்டு
செல்லுங்கள். ஞான மை சத்குரு கொடுத்தார். அஞ்ஞான இருள்
அழிந்துவிட்டது..... புத்தியில் பாபா வருகிறார். ஞான மையை குரு
கொடுத்தார்...... என்பது கிடையாது. நிறைய குருமார்கள்
இருக்கிறார்கள். அவர்களுக்குள் ஞானம் எங்கே இருக்கிறது.
அவர்களின் புகழ் பாடப்படவும் இல்லை. ஞான கடல், பதீத பாவனர்,
அனைவருக்கும் சத்கதி கொடுக்கக் கூடிய வள்ளல் ஒரு தந்தை தான்
ஆவார். பிறகு மற்றவர்கள் எப்படி ஞானம் கொடுப்பார்கள். பகவானை
அடைவதற்கு பல வழிகள் இருக்கிறது என்று சாதுக்கள்
கூறிவிட்டார்கள். சாஸ்திரங்களை படித்தல், யாகம், தவம்
போன்றவைகளை செய்தலே பகவானை அடைவதற்கான வழியாகும். ஆனால்
பதீதர்கள் மீண்டும் பரிசுத்தமான உலகத்திற்கு எப்படி போக
முடியும்? நானே வருகிறேன் என்று பாபா கூறகிறார். பகவான் ஒருவரே
ஆவார். பிரம்மா, விஷ்ணு, சங்கரர் கூட தேவதைகள் ஆவர். அவர்களை
பகவான் என்று கூற முடியாது. அவர் களுடைய தந்தை சிவன் ஆவார்.
பிரஜாபிதா பிரம்மா இங்கே தான் இருப்பார் அல்லவா? பிரஜைகள் இங்கே
இருக்கிறார்கள். பிரஜா பிதா பிரம்மா குமாரிகளின் அமைப்பு என்று
பெயர் கூட எழுதப்படுகிறது. எனவே, குழந்தைகள் ஆகிவிட்டனர்.
நிறைய பி.கே இருக்கிறார்கள். சொத்து சிவனிடமிருந்து கிடைக்கிறது.
பிரம்மாவிடம் கிடையாது. சொத்து தாத்தாவிடமிருந்து கிடைக்கிறது.
பிரம்மா மூலமாக அமர்ந்து சொர்க்கத்திற்கு செல்வதற்காக தகுதி
ஆக்குகின்றார். பிரம்மா மூலமாக குழந்தைகளை தத்தெடுக்கின்றார்.
பாபா! நாங்கள் உங்களுடையவர்களே தான், உங்களிடமிருந்து ஆஸ்தி
அடைகின்றோம் எனக் குழந்தைகளும் கூறுகின்றனர். பிரம்மா மூலம்
விஷ்ணுபுரி ஸ்தாபனை ஆகிறது. சிவபாபா இராஜயோகம் சொல்-த்
தருகிறார். ஸ்ரீமத், அதாவது உயர்ந்ததிலும் உயர்ந்த பகவானுடைய
கீதையாகும். பகவான் ஒருவரே நிராகார் ஆவார். குழந்தை களாகிய
நீங்கள் 84 பிறவிகள் எடுத்தீர்கள் என்று பாபா புரிய வைக்கிறார்.
ஆத்மா, பரமாத்மா நீண்ட காலமாக பிரிந்திருந்தது......
நீண்டகாலமாக பாரதவாசிகள் தான் பிரிந்திருந்தனர். வேறு எந்த
தர்மமும் கிடையாது. அவர்களே முதன் முதலில் பிரிந்தனர்.
தந்தையிடமிருந்து பிரிந்து இங்கே நடிப்பதற்காக
வந்திருக்கிறார்கள். ஓ, ஆத்மாக்களே! இப்போது தந்தை யாகிய என்னை
நினையுங்கள் என பாபா கூறுகின்றார். இதுவே நினைவு யாத்திரை
அல்லது யோக அக்னி ஆகும். உங்களின் தலை மீது இருக்கக் கூடிய
பாவங்களின் சுமை இந்த யோக அக்னியால் தான் எரிந்து போகும். ஓ,
இனிய குழந்தைகளே! நீங்கள் பொன் யுகத்திலிருந்து, இரும்பு
யுகத்திற்கு வந்து விட்டீர்கள். இப்போது என்னை நினையுங்கள். இது
புத்தியின் வேலை அல்லவா? தேகம் உட்பட தேகத்தின் அனைத்து
உறவுகளையும் விட்டு விட்டு என்னை நினையுங்கள். நீங்கள் ஆத்மா
அல்லவா! இது உங்களுடைய உடல் ஆகும். நான், நான் என ஆத்மா
கூறுகிறது. உங்களை இராவணன் அழுக்காக்கி விட்டான். இவ்வாறு
விளையாட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. தூய்மை யான பாரதம்
மற்றும் தூய்மையற்ற பாரதம். தூய்மை இழக்கும்போது தந்தையை அழைக்
கிறார்கள். இராம இராஜ்யம் வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால்
பொருளை புரிந்துக் கொள்ள வில்லை. ஞானம் அளிக்கக் கூடியவர் ஞானக்
கடல் ஒரேயொரு தந்தை தான் ஆவார். தந்தை தான் வந்து ஒரு நொடியில்
சொத்து அளிக்கிறார். இப்போது நீங்கள் பாபாவினுடையவராகி
விட்டீர்கள். பாபாவிடமிருந்து சூரிய வம்சம், சந்திர வம்சத்தின்
சொத்து அடைய வேண்டும். பிறகு சத்யுகம் திரேதாவில் நீங்கள்
அமரராகி விடுகிறீர்கள். அங்கே இன்னார் இறந்துவிட்டார்கள் என்று
கூறமாட்டார்கள். சத்யுகத்தில் அகால மரணம் என்பது கிடையாது.
நீங்கள் காலன் மீது வெற்றி பெறுகிறீர்கள். துக்கத்தின் பெயர்
கிடையாது. அதற்கு சுகதாமம் என்று பெயர் ஆகும். நான் உங்களுக்கு
சொர்க்கத்தின் இராஜ்ய பதவியை அளிக்கிறேன் என பாபா கூறுகிறார்.
அங்கே நிறைய பொருட்கள் இருக்கின்றது. பக்தி மார்க்கத்தில்
கோவில்களை கட்டுகிறார்கள் என்றால் அச்சமயம் கூட எவ்வளவு செல்வம்
இருந்தது. பாரதம் எப்படி இருந்தது. மற்ற அனைத்து ஆத்மாக்களும்
நிராகார உலகத்தில் இருந்தன. உயர்ந்ததிலும் உயர்ந்த பாபா இப்போது
சொர்க்கத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என குழந்தைகள்
அறிந்துக் கொண்டீர்கள். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் சிவபாபா,
பிறகு பிரம்மா, விஷ்ணு, சங்கர் சூட்சுமவதனவாசி ஆவர். பிறகு
இந்த உலகம்.
ஞானத்தினால் குழந்தைகளாகிய உங்களுக்கு சத்கதி கிடைக்கிறது.
ஞானம், பக்தி மற்றும் வைராக்கியம் என்று பாடப்படுகிறது. பழைய
உலகத்தின் மீது வைராக்கியம் வருகிறது. ஏனென்றால் சத்யுகத்தின்
இராஜ்ய பதவி கிடைக்கிறது. இப்போது குழந்தை களே என்னை மட்டும்
நினையுங்கள் என பாபா கூறுகிறார். என்னை நினைவு செய்தால் நீங்கள்
என்னிடம் வந்துவிடுவீர்கள். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக்
கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய
பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தலைமீது இருக்கும் பாவங்களின் சுமையை யோக அக்னியினால்
எரித்து விட வேண்டும். புத்தியினால் தேகம் உட்பட தேகத்தின்
அனைத்து உறவுகளையும் விட்டு விட்டு ஒரு தந்தையை நினைக்க
வேண்டும்.
2. அழைப்பதற்கு அல்லது கூச்சலிடுவதற்குப் பதிலாக தங்களுடைய
அமைதியான சுய தர்மத்தில் நிலைத்திருங்கள். அமைதி கழுத்தின்
மாலையாகும். தேக உணர்வில் வந்து ''நான் மற்றும் எனது'' என்ற
வார்த்தைகளை கூறக் கூடாது. தன்னை ஆத்மா என்று உறுதிபடுத்திக்
கொள்ள வேண்டும்.
வரதானம்:
தன்னுடைய சதோகுண (தூய்மையான) திருஷ்டி மூலமாக மற்ற ஆத்மாக்களின்
திருஷ்டி மற்றும் விருத்தியை (எண்ணப்போக்கை) மாற்றக்கூடிய
சாக்ஷாத்கார மூர்த்தி (தரிசனம் தரக்கூடியவர்) ஆகுக.
திருஷ்டி மூலமாக சிருஷ்டி மாறும் என்பது பழமொழி. உங்கள்
திருஷ்டி (பார்வை) எவ்வளவு தூய்மையாக இருக்க வேண்டும் என்றால்,
அது எத்தகைய தமோகுண அல்லது ரஜோகுண ஆத்மாவையும் மாற்றிவிட
வேண்டும். உங்கள் முன்னால் வருபவர்கள், உங்கள் பார்வையின்
மூலமாகவே மூன்று உலகங்களின் ஞானத்தையும், தங்கள் முழு வாழ்க்கை
வரலாற்றையும் உணர வேண்டும்-இதுவே பார்வையால் பலனளிக்கச் செய்தல்
என்பதாகும். இறுதியில், ஞானத்தின் சேவை எப்பொழுது நடைபெறாதே (சொல்லால்
சேவை செய்ய முடியாதோ) அப்பொழுது, இந்தப் சேவை நடைபெறும்.
சுலோகன்:
தூய்மையின் நடைமுறைச் சொரூபம் - சத்தியத்தா (உண்மையாக இருத்தல்),
அதாவது தெய்வீகத்தன்மை என்பதாகும்.
அவ்யக்த இஷாரா - மகான் ஆவதற்காக இனிமை மற்றும்
பணிவு என்ற குணங்களை தாரணை செய்யுங்கள்
இனிமை மற்றும் பணிவு என்ற குணங்கள் நமக்குத் தலைவணங்கக்
கற்றுக்கொடுக்கிறது. இப்பொழுது - நீங்கள் உங்கள்
சமஸ்காரங்களிலும், எண்ணங்களிலும் எவ்வளவு தூரம் பணிகிறீர் களோ,
அவ்வளவு தூரம் உலகம் உங்கள் முன்னால் பணியும். . பணிவது என்றால்
பணிய வைப்பது என்பதாகும். சமஸ்காரங்களிலும் பணியக்
கற்றுக்கொள்ளுங்கள் மற்றவர்களும் என் முன்னால் கொஞ்சம்
பணியட்டும் என்ற எண்ணம் கூட வரக்கூடாது. நாம் பணிந்தால் அனை
வரும் பணிவார்கள். யார் உண்மையான சேவாதாரிகளோ, அவர்கள்
அனைவருக்கும் முன்னால் பணியும்போது தான் சேவை செய்ய முடியும்.