09-05-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! தன்னை யாரென
உணர்ந்து கொள்வதற்காக நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள்.
நீங்கள் தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு பரமாத்மா தந்தை
கூறுவதை கேளுங்கள், ஆத்ம அபிமானியாக இருப்பதற்கான பயிற்சி
செய்யுங்கள்.
கேள்வி:
நீங்கள் ஆத்மாவின் சாட்சாத்காரம்
செய்திருக்கிறீர்களா? என்று குழந்தைகளிடம் அடிக்கடி சிலர்
கேட்கின்றனர், நீங்கள் அவர்களுக்கு என்ன பதில் கொடுப்பீர்கள்?
பதில்:
ஆம் என்று கூறுங்கள். நாங்கள்
ஆத்மாவின் சாட்சாத்காரம் செய்திருக்கிறோம். ஆத்மா ஜோதி
பிந்துவாக இருக்கிறது. ஆத்மாவில் தான் நல்ல அல்லது கெட்ட
சம்ஸ்காரம் இருக்கிறது. ஆத்மாவின் முழு ஞானமும் இப்போது நமக்கு
கிடைத்திருக்கிறது. எதுவரை ஆத்மாவின் சாட்சாத் காரம்
செய்யவில்லையோ அதுவரை தேக அபிமானத்தில் இருந்தோம். இப்போது
நமக்கு பரமாத்மாவின் மூலம் இறை உணர்வு மற்றும் சுய உணர்வு
ஏற்பட்டிருக்கிறது.
பாடல்:
அவர் நம்மை விட்டுப்
பிரியமாட்டார் .......
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிய ஆன்மீகக் குழந்தைகள் இந்த பாட்டு கேட்டீர்கள்.
இந்த சரீரத்தின் மூலம் ஆன்மீகக் குழந்தைகளே என்று கூறுகின்றார்.
சாது, சந்நியாசியிடம் பலி ஆகி விடுவோம் என்று யாரும்,
ஒருபொழுதும் கூறுவது கிடையாது. நாம் அவருடன் (பாபாவுடன்) செல்ல
வேண்டும், இந்த சரீரத்தை விட்டு விட வேண்டும் என்பதை குழந்தைகள்
அறிவீர்கள். அதனால் தான் இந்த சரீரத்தை விடுத்து நாம் தந்தையின்
கூடவே சென்று விடுவோம் என்று கூறுகிறீர்கள். தன்னுடன் அழைத்துச்
செல்வதற்காகவே தந்தை வந்திருக்கின்றார். இது மிகவும் புரிந்து
கொள்ள வேண்டிய விசயமாகும். பதீதமாகிய எங்களை பாவனம் ஆக்குவதற்கு
வாருங்கள் என்ற குழந்தைகள் அழைக்கிறீர்கள். பிறகு என்ன செய்வேன்?
இங்கேயே விட்டு விட்டு சென்று விடமாட்டேன். இந்த முழு உலகமும்
பதீதமாக இருக்கிறது, இந்த பதீத உலகிலிருந்து பாவன உலகிற்கு
அழைத்துச் செல்ல தந்தை வந்திருக்கின்றார். ஆத்மாக்களாகிய நம்மை
கூடவே அழைத்துச் செல்வார். இந்த முழு உலகமும் விகாரமானதாக
இருக்கிறது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். நீங்கள் யாரையாவது
விகாரி, பதீதமானவர் என்று கூறிவிட்டால் சண்டைக்கு வந்து விடுவர்.
மனிதர்களுக்கு மிகுந்த யுக்தியுடன் புரிய வைக்க வேண்டும். ஒரு
தந்தையின் மகிமை செய்ய வேண்டும். இப்போது குழந்தைகளாகிய
உங்களுக்கு ஞானம் கிடைத்திருக்கிறது. மிகவும்
புத்திசாலித்தனமாக பேச வேண்டும். கேள்வி, பதிலுக்கான நிகழ்ச்சி
நடைபெறுகிறது எனில் நான் இப்போது பக்குவமற்று இருக்கிறேன்,
பெரிய சகோதரி வந்து பதிலுரைப்பார் என்று கூறுங்கள்.
சிவபாபா புரிய வைக்கின்றார் என்று நீங்கள் கூறுகிறீர்கள்.
பகவானின் மகாவாக்கியம் - மனிதர்கள் அனைவரும் பதீதமாக
இருக்கின்றனர். பகவான் ஒருபோதும் பதீதமானவராக ஆக முடியாது.
பதீத பாவனனை அழைக்கின்றனர், ஏனெனில் பதீதமாக இருக்கின்றனர்.
தேகதாரிகளை பகவான் என்று கூற முடியாது. பகவான் என்று நிராகார
சிவன் கூறப்படுகின்றார். சிவனின் கோயில்களும் அதிகம் உள்ளன. ஒரு
தந்தையைப் புரிந்து கொண்டால் மட்டுமே நிலைத்து இருக்க முடியும்.
சிவ பகவானின் மகாவாக்கியம் - என் ஒருவனை நினைவு செய்யுங்கள்
என்று சிவபாபா கூறுகின்றார் என்பதை முதலில் கூறுங்கள்.
அவருக்கென்று சரீரம் கிடையாது. பிரம்மா, விஷ்ணு, சங்கருக்கும்
சூட்சும சரீரம் இருக்கிறது. பார்க்க முடிகிறது. இவரை பார்க்க
முடியாது. அவர் தான் பரம்பிதா பரமாத்மா என்று
அழைக்கப்படுகின்றார். ஆத்மாக்களாகிய நாமும் ஒரு சரீரத்தை
விடுத்து மற்றொன்றை எடுக்கிறோம் என்று நீங்களும் கூறுவீர்கள்.
நீங்கள் தனது ஆத்மாவின் சாட்சாத் காரம் செய்திருக்கிறீர்கள்.
பக்தி மார்க்கத்தில் சாட்சாத்காரத்திற்காக தீவிர பக்தி
செய்கின்றனர். ஆனால் பக்தி செய்பவர்கள் ஒரு போதும்
சாட்சாத்காரம் செய்தது கிடையாது. அது எப்படிப்பட்டது? என்பதை
முற்றிலும் அறியாமல் இருக்கின்றனர். அது நிராகாரமாக இருக்கிறது
என்று கூறுவ துடன் சரி, அவ்வளவு தான். ஆத்மா தான் உரையாடல்
செய்கிறது. சம்ஸ்காரமும் ஆத்மாவில் தான் இருக்கிறது. ஆத்மா
விடுபட்டு விட்டால் ஆத்மாவினாலும் பேச முடியாது, சரீரத்தினாலும்
பேச முடியாது. ஆத்மாவின்றி சரீரம் ஒன்றும் செய்ய முடியாது.
முதலில் ஆத்மாவை புரிந்து கொள்ள வேண்டும், மேலும் தந்தையின்
மூலம் தான் தந்தையைப் புரிந்து கொள்ள முடியும். தன்னையே
அறியாமல் மற்றும் பார்க்க முடியாமல் இருக்கும் போது,
ஆத்மாவிற்கு பரம்பிதா பரமாத்மாவின் சாட்சாத்காரம் எப்படி
ஏற்படும்? ஆத்மா நட்சத்திரம் போல ஜொலிக்கிறது என்று மட்டும்
சொல்கின்றனர். ஆனால் ஆத்மாவில் 84 பிறவிகளின் பார்ட்
பதிவாகியுள்ளது என்பது தெரியவில்லை. மனிதர்கள் முற்றிலும் தேக
அபிமானத்தில் இருக்கின்றனர். ஆத்ம அபிமானி ஆகுங்கள் என்று
இப்போது தந்தை கூறுகின்றார். தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு
பிறகு நான் கூறுவதைக் கேளுங்கள். கேட்கக் கூடியது ஆத்மா ஆகும்,
ஆத்மாவிற்கு கூறுவதற்கு பரமாத்மா தேவை. மனிதர்களுக்குப் புரிய
வைப்பவர் மனிதராகத் தான் இருப்பார். இந்த ஆத்மாவின் ஞானம்
யாரிடத்திலும் கிடையாது, அதனால் தான் முதலில் ஆத்மாவைப்
புரிந்து கொள்ளுங்கள் என்று கூறப்படுகிறது. தன்னைத்தான்
உணருங்கள். ஆத்மாவை நாம் எப்படி உணருவது? என்று ஆத்மாவே சுயம்
கூறுகிறது. ஆத்மாவில் எவ்வாறு முழு நடிப்பும் நிறைந்திருக்
கிறது? என்பது யாருக்கும் தெரியாது. சாது, சந்நியாசி போன்று
யாரும் கூற முடியாது. தந்தை வந்து தான் குழந்தைகளுக்கு தன்னை
உணர வைக்க வேண்டியிருக்கிறது. தன்னை ஆத்மா என்று உணர்ந்து
நிராகார பரம்பிதா பரமாத்மாவாகிய நான் கூறுவதைக் கேளுங்கள் என்று
தந்தை கூறு கின்றார். ஆத்மா மற்றும் பரமாத்மா எப்போது
சந்திக்கிறார்களோ அப்போது தான் இந்த விசயங்கள் நிகழும்.
பரம்பிதா பரமாத்மா எப்போது வருவார்? வந்து எப்படி புரிய
வைப்பார்? என்பது உலகத்தினருக்கு தெரியாது. அறியாத காரணத்தினால்
தான் கருத்து வேறுபாடுகளில் வந்து விடு கின்றனர். அவர்கள்
அனைவருக்கும் ஆதாரம் சாஸ்திரத்தில் இருக்கிறது. அதன் மூலம்
நீங்கள் என்னையும் உணர முடியாது, தன்னையும் உணர முடியாது. ஆத்மா
தான் பரமாத்மா என்று அவர்கள் கூறிவிடுகின்றனர். இப்படி
கூறுவதனால் என்ன நடக்கிறது? நம்மை பதீதத்திலிருந்து பாவனமாக
யார் ஆக்குவது? திரிகாலதர்சியாக யார் ஆக்குவது? யாரும் ஆத்மா
மற்றும் பரமாத்மா வின் ஞானம் கொடுக்க முடியாது. அதனால் தான்
எந்த ஆத்மா தனது தந்தையை அறிய வில்லையோ அவர்கள் நாஸ்திகர்கள்
என்று நீங்கள் கூறுகிறீர்கள். பக்தி செய்யாதவர்கள் தான்
நாஸ்திகர்கள் என்று அவர்கள் கூறிவிடுகின்றனர். இப்போது
குழந்தைகளாகிய நீங்கள் பக்தி செய்வது கிடையாது. உங்களிடத்தில்
நல்ல சித்திரங்கள் பல உள்ளன. சித்திரங்களினால் தான் புரிய
வைக்கப்படுகிறது. யாராவது உலக வரைபடத்தை பார்க்க வேயில்லை எனில்
இலண்டன் எங்கிருக்கிறது? அமெரிக்கா எங்கிருக்கிறது? என்று
அவருக்கு எப்படி தெரியும். எதுவரை ஆசிரியர் அமர்ந்து வரைபடைத்தை
வைத்து புரிய வைக்க வில்லையோ ..... ஆகையால் நீங்கள் இந்த
சித்திர ங்களை உருவாக்கியிருக்கிறீர்கள். ஆனால் விளக்கமாக
யாரும் புரிந்து கொள்ள முடியாது. சூரிய வம்சத்தினர்கள் இந்த
இராஜ்யத்தை எங்கிருந்து அடைந்தனர்? பிறகு சந்திர வம்சத்தினர்
எப்படி அடைந்தனர்? சூரியவம்சத்தினரிடம் சண்டையிட்டார்களா என்ன?
அனைவருக்கும் ஒரு தந்தை யிடமிருந்து தான் ஆஸ்தி கிடைக்கிறது
என்பதை நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். சூரியவம்சத்தினர்,
சந்திர வம்சத்தினர்கள் உலகிற்கு எஜமானர்கள் ஆவர். வேறு எந்த
தர்மமும் இருக்காது எனும் போது சண்டைக்கான விசயமும் கிடையாது.
நாம் உலகிற்கு எஜமானர்களாக ஆகிறோம் என்பதை இப்போது நீங்கள்
புரிந்து கொள்கிறீர்கள். சூரியவம்சத்தினர்களை சந்திரவம்சத்தினர்
வெற்றி அடைந்தனர், அல்லது யுத்தம் நடைபெற்றது என்பது கிடையாது.
தனித் தனி வம்சமாகும்.
இப்போது உங்களது புத்தியில் இந்த சித்திரங்களின் முழு ஞானமும்
இருக்கிறது. பள்ளியிலும் மாணவர்கள் படிக்கின்றனர் எனில்
புத்தியில் முழு ஞானமும் வந்து விடுகிறது. சிறு குழந்தை களுக்கு
புத்தகத்தில் இது யானை, இது ..... என்று காண்பிக்கப்படுகிறது.
இப்போது நீங்கள் இந்த நாடகத்தை அறிந்து கொண்டீர்கள். இந்த முழு
சக்கரமும் புத்தியில் இருக்கிறது. இவை அனைத்தும் புது
விசயங்களாகும், மேலும் இந்த விசயங்களை பிராமண குலத்தினர்
மட்டுமே புரிந்து கொள்வர். மற்றவர்கள் அமர்ந்து தவறான
வாக்குவாதம் செய்வர். அனைவருக்கும் ஒன்றாக புரிய வைக்க முடியும்
என்பதும் கிடையாது. தனித் தனியாக புரிய வைக்க வேண்டி
யிருக்கிறது. முதலில் தந்தையையும், ஆத்மாவைப் பற்றியும் புரிய
வைக்க வேண்டும் என்பது நியமம் ஆகும். பிறகு வகுப்பில் அமரும்
பொழுது புரிந்து கொள்வர், இல்லையெனில் புரிந்து கொள்ளவே
மாட்டார்கள். சந்தேகம் எழுப்பிக் கொண்டே இருப்பர். பகவான் ஒரே
ஒருவர் தான், அவர் உயர்ந்ததிலும் உயர்ந்தவர் என்பதை நீங்கள்
புரிய வைக்க வேண்டும். தேவதைகளையும் பகவான் என்ற கூற முடியாது.
ஆத்மாவின் ஞானமும் இப்போது உங்களுக்கு கிடைத்திருக்கிறது.
கர்மத்தின் பலனை ஆத்மா தான் அனுபவிக்கிறது. சம்ஸ்காரம்
ஆத்மாவில் தான் இருக்கிறது. ஆத்மா இந்த கர்மேந்திரியத்தின்
மூலம் கேட்கிறது. பகவான் தந்தை ஒரே ஒருவர், அவரிடமிருந்து ஆஸ்தி
கிடைக்கிறது. நீங்கள் உங்களை ஆத்மா என்று நிச்சயம் செய்யுங்கள்,
மேலும் புத்தியோகத்தை தந்தையிடம் செலுத்துங்கள் என்று பாபா
புரிய வைத்திருக்கின்றார். ஜென்ம ஜென்மங்களாக பக்தி செய்து
வந்தீர்கள். ஹனுமானின் பூஜாரியாக இருந்தால் ஹனுமானைத் தான்
நினைவு செய்வர் அல்லது கிருஷ்ணரின் பூஜாரியாக இருந்தால்
கிருஷ்ணரைத் தான் நினைவு செய்வர். நீங்கள் ஆத்மாக்கள் என்று
இப்போது உங்களுக்குப் புரிய வைக்கப்படுகிறது. உங்களது பரம பிதா
பரமாத்மா ஆவார். அவரை நினைவு செய்வதன் மூலம் தந்தையின் ஆஸ்தி
கிடைக்கும். அந்த தந்தை தான் சொர்க்கத்தை படைக்கிறார் எனில்
நாமும் அவசியம் சொர்க்கத்தில் இருக்க வேண்டும். பாரதம்
சொர்க்கமாக இருந்தது. இப்போது சொர்க்கத்தின் இராஜ்யம் கிடையாது.
நரகத்தில் இராவணனின் இராஜ்யம் இருக்கிறது. நமது இராஜ்யம் எப்படி
நடைபெற்றது? பிறகு எப்படி வீழ்ச்சி அடைந்தது? என்று எதுவும்
அறியவில்லை. மறுபிறப்பு எடுத்து எடுத்து நாம் கீழே இறங்கி வந்தே
ஆக வேண்டும் என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். என்னை நினைவு
செய்தால் நீங்கள் பாவனமாக ஆகிவிடுவீர்கள் என்ற இப்போது மீண்டும்
தந்தை கூறுகின்றார். சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைக்கும். நாம்
தந்தையினுடையவராக ஆகும் பொழுது தந்தையின் ஆஸ்தி கிடைக்கிறது.
ஆனால் எதுவரை தமோ பிரதானத்திலிருந்து சதோ பிரதானமாக ஆக வில்லையோ,
யோகா மூலம் பாவனமாக ஆகவில்லையோ அது வரை ஆஸ்தி அடைய முடியாது.
என்னை நினைவு செய்தால் உங்களது விகர்மங்கள் விநாசம் ஆகும்,
விகர்மாஜீத் ஆவீர்கள், இது உத்திரவாதம் ஆகும் என்று தந்தை
கூறுகின்றார். புரிய வைக்க வேண்டியிருக்கிறது. சிலர் புரிந்து
கொள்கின்றனர், சிலர் வேகமான புத்தியுடையவர்களாக இருக்கின்றனர்
எனில் நன்றாக கூக்குரல் எழுப்புகின்றனர். ஏதாவது தடை
போடுபவர்களாக ஆகி விடுகின்றனர். யாராவது பிரச்சனை செய்தால்
ஏகாந்தத்தில் (தனியாக) வந்து புரிந்து கொள்ளுங்கள் என்ற கூறி
விட வேண்டும். 7 நாட்கள் பாடம் கேட்டு புரிந்து கொள்ள வேண்டும்
என்பது தான் இங்கிருக்கும் நியமமாகும். ஏனெனில் இந்த ஞானம்
புதுமையாக இருக்கின்ற காரணத்தினால் மனிதர்கள் குழப்பமடை
கின்றனர். ஏதாவது புதிதாக சென்டர் திறக்கப்படுகிறது எனில்
அனைவருக்கும் புரிய வைக்கும் அளவிற்கு புத்திசாலிகள் அங்கு
இருக்க வேண்டும். அனைவருக்கும் பகவான் ஒரே ஒருவர் தான். அனைத்து
ஆத்மாக்களும் சகோதர, சகோதரர்கள் ஆவர். பரமாத்மா அனைவருக்கும்
தந்தை ஆவார். பதீத பாவன் வாருங்கள் என்று அழைக்கின்றனர் எனில்
அவசியம் அவர் பாவனமானவர் ஆவார், அவர் ஒருபொழுதும் பதீதம் ஆவது
கிடையாது. தந்தை வந்து தான் பதீதமானவர்களை பாவனமாக ஆக்குவார்.
சத்யுகத்தில் அனைவரும் பாவனமானவர்கள். கலியுகத்தில் அனைவரும்
பதீதமானவர்கள். பதீதமானவர் கள் அதிகம் இருப்பர், பாவனமானவர்கள்
குறைவாக இருப்பர். அனைவரும் சத்யுகத்திற்கு சென்று
விடமாட்டார்கள். யார் பதீதத்திலிருந்து பாவனமாக ஆகிறார் களோ
அவர்கள் தான் பாவன உலகிற்கு செல்வர். மற்ற அனைவரும் நிர்வாண
உலகிற்கு சென்று விடுவார்கள். முழு உலகமும் வந்து போதனைகளை பெற
மாட்டார்கள் என்பதையும் அறிந்திருக் கிறீர்கள். முழு உலகிற்கும்
நீங்கள் போதனை கொடுப்பது கடினமாகும். இது அனைவருக்கும் கடைசி
நேரமாகும். அனைவரும் அழிந்தே ஆக வேண்டும். அவர்கள் அமைதியாக
அமர்ந்து கேட்க வேண்டும், தொந்தரவு செய்யாத அளவிற்கு மிகுந்த
யுக்திடன் புரிய வைக்க வேண்டும். முதன் முதலில் தந்தையின்
அறிமுகம் கொடுக்க வேண்டும். சிவபாபா தான் பதீத பாவன் ஆவார்.
அவர் தான் புரிய வைக்கின்றார். கீதையிலும் பிரபலமான வாக்கியம்
இருக்கிறது. என்னை நினைவு செய்தால் உங்களது விகர்மங்கள் விநாசம்
ஆகிவிடும் என்று பதீத பாவனாகிய தந்தை தான் கூறுகின்றார். இந்த
வார்த்தை கீதையுடன் தான் தொடர்பு படுத்துகின்றனர். என்னை நினைவு
செய்யுங்கள் என்று சிவபாபா கூறியிருக்கின்றார். நான்
சர்வசக்திவான், பதீத பாவன் ஆவேன். கீதை ஞானம் கொடுக்கும் வள்ளல்,
ஞானக் கடல் ஆவேன். கீதையின் வாக்கியம் இருக்கிறது அல்லவா! ஆனால்
அவர்கள் கிருஷ்ண பகவானின் மகாவாக்கியம் என்று கூறிவிட்டனர்.
நீங்கள் சிவ பகவானின் மகாவாக்கியம் என்று கூறுகிறீர்கள். பகவான்
நிரகாராக இருக்கின்றார். அவர் ஒரு பொழுதும் பிறப்பு, இறப்பில்
வருவது கிடையாது. அலௌகீக தெய்வீக பிறப்பு எடுக்கின்றார். நான்
சாதாரண வயோதிக சரீரத்தில் வருகிறேன், அவரைத் தான் பகீரதன் என்று
அழைக்கிறீர்கள் என்று அவர் சுயம் புரிய வைக்கின்றார்.
பிரம்மாவின் மூலம் தான் படைப்புகளை படைக்கின்றார். ஆக
மனிதனுக்கு பிரம்மா என்ற பெயர் வைக்கப்படுகிறது. வியக்த (சரீரமுடைய)
பிரம்மாவிலிருந்து பிறகு பாவனமான, அவ்யக்த (சரீரமில்லா) ஃபரிஸ்தா
ஆகிவிடுகின்றார். பதீத மானவர்களை பாவனம் ஆக்குவதற்காகவே தந்தை
வருகின்றார். ஆக அவசியம் பதீத உலகில் பதீத சரீரத்தில் தான்
வருவார். இது விரிவான விளக்கமாகும். கல்பத்திற்கு முன்பு போன்று
என்னை நினைவு செய்தால் உங்களது விகர்மங்கள் விநாசம் ஆகிவிடும்,
பதீதத்திலிருந்து பாவனம் ஆகுங்கள் என்று முதலில் புரிய வைக்க
வேண்டும். ஹே பதீத பாவனனே வாருங்கள்! என்று பாடவும் செய்
கின்றனர். கங்கை கிடையாது. நீங்கள் அழைக்கிறீர்கள் எனில்
அவசியம் எங்கிருந்தோ வருவார். பதீதமானவர்களை பாவனம்
ஆக்குவதற்கான நடிப்பு நடிப்பதற்காக பதீத பாவன் வருகின்றார்.
நீங்கள் பாவனமாக இருந்தீர்கள், பிறகு உங்களிடத்தில் கறை படிந்து
விட்டது, அது யோக பலத்தின் மூலம் தான் நீங்கும் என்று தந்தை
கூறுகின்றார். நீங்கள் தூய்மையாக ஆகிவிடுவீர்கள், பிறகு
தூய்மையான உலகில் தான் வருவீர்கள். பதீத உலகம் விநசாம்
ஆகிவிடும். என்ன புரிய வைக்கப்படுகிறதோ அதை நல்ல முறையில் தாரணை
செய்ய வேண்டும். நாம் உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையின் மகிமை
மட்டுமே செய்கிறோம். நீங்கள் 84 பிறவிகளுக்கான நடிப்பு நடித்து
நடித்து எவ்வளவு பதீதமாக ஆகிவிட்டீர்கள் என்பதை எல்லையற்ற தந்தை
புரிய வைக்கின்றார். முதலில் பாவனமாக இருந்தீர்கள், இப்பொழுது
பதீதமாக ஆகிவிட்டீர்கள். மீண்டும் நினைவு யாத்திரையில்
இருப்பதன் மூலம் நீங்கள் பாவனமாக ஆகிவிடுவீர்கள். பக்தி
மார்க்கத்திலிருந்து நீங்கள் ஏணியில் இறங்கியே வந்தீர்கள். இது
முற்றிலும் எளிய விசயமாகும். இது குழந்தைகளின் புத்தியில் அமர
வேண்டும். அதிகாலையில் எழுந்து ஞானச் சிந்தனை செய்ய வேண்டும்,
பிறகு யார் வந்தாலும் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
முரளியின் முக்கிய கருத்துக் களை குறிப் பெடுத்துக் கொண்டு
பிறகு அதை திரும்பவும் படிக்க வேண்டும். அது மனதில் நன்றாக
பதிந்து விடும்.
தந்தையை நினைவு செய்வது தான் முதல் முக்கிய விசயமாகும்.
மன்மனாபவ, என்னை நினைவு செய்தால் விகர்மங்கள் அழிந்து விடும்
என்று தந்தை தான் கூறுகின்றார். செய்வது, செய்யாமல் இருப்பது
உங்களது விருப்பமாகும். தந்தையின் கட்டளை கிடைத்து விட்டது.
பாவன உலகிற்குச் செல்ல வேண்டும் என்றால் பதீத உலகின் பக்கம்
புத்தி யோகம் செல்லக் கூடாது. விகாரத்தில் செல்லக் கூடாது.
அதிக விசயங்கள் புரிய வைக்கப்படுகிறது. நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) அதிகாலையில் எழுந்து ஞானச் சிந்தனை செய்ய வேண்டும். தந்தை
என்ன கூறுகின்றாரோ அதை குறிப்பெடுத்துக் கொண்டு பிறகு
திரும்பவும் படிக்க வேண்டும், மற்றவர்களுக்கு கூற வேண்டும்.
அனைவருக்கும் முதலில் தந்தையின் அறிமுகம் தான் கொடுக்க வேண்டும்.
2) பாவன உலகம் செல்வதற்கு இந்த பதீத உலகிலிருந்து புத்தியின்
தொடர்பை நீக்கி விட வேண்டும்.
வரதானம்:
நம்பர் ஒன் வியாபாரியாகி ஒரு ஒரு நொடி மற்றும்
எண்ணத்தில் வருமானத்தை சேமிக்கக்கூடிய கோடீஸ்வரர் ஆகுக.
யார; தன்னை பிஸியாக வைத்துக் கொள்வதற்கான வழியை
அறிந்திருக்கின்றார;களோ அவர;களே நம்பர் ஒன் வியாபாரி ஆவார்கள்.
யாருடைய ஒரு எண்ணம் கூட வீணாகுவ தில்லையோ, ஒவ்வொரு எண்ணத்திலும்
வருமானம் செய்கின்றார்களோ அவர்களே வியாபாரி. எவ்வாறு ஒரு
வியாபாரி ஒரு ஒரு பைசாவையும் காரியத்தில் ஈடுபடுத்தி
பன்மடங்காக ஆக்கு கின்றாரோ, அது போல நீங்களும் ஒரு ஒரு நொடி
மற்றும் எண்ணத்தில் வருமானம் செய்து காட்டுங்கள், அப்பொழுது
கோடீஸ்வரன் ஆகுவீர்கள். இதனால் புததி அலைபாய்வது நின்று விடும்
மற்றும் வீண் எண்ணங்களைப் பற்றிய புகாரும் முடிந்துவிடும்.
சுலோகன்:
யார் வேண்டும் என்று கேட்கின்றார்களோ அவர்கள்
குஷி என்ற பொக்கிஷத்தில் நிரம்பியவர் ஆக முடியாது.
அவ்யக்த இஷாரா - சதா ஆடாத, அசையாத, ஒரே சமநிலையின்
ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்
சதா மாஸ்டர் சர்வ சக்திவான் என்ற ஆசனத்தில் அமர்ந்திருப்பவர்கள்
தான் ஆடாமல் அசையாமல் இருக்கின்றார்கள்;. குழந்தைகளே சரீரமே
போனால் போகட்டும், ஆனால் உங்களுடைய மகிழ்ச்சி போகக்கூடாது என்று
பாப்தாதா கூறுகின்றார்கள். பணமோ அதற்கு முன்பு ஒன்றுமே கிடையாது.
யாரிடம் குஷி என்ற பொக்கிஷம் உள்ளதோ, அவர்களுக்கு முனனால்
எதுவும் பெரிய விசயம் அல்ல. மேலும் சதா சகயோகி சேவாதாரி
குழந்தைகளுடன் பாப்தாதா இருக்கின்றார், ஆகையால் பயப்படுவதற்கான
விசயம் எதுவுமில்லை.