09.06.24    காலை முரளி            ஓம் சாந்தி  15.02.20      பாப்தாதா,   மதுபன்


மனதை சுத்தமாக புத்தியை தெளிவாக வைத்து டபுள் லைட் பரிஸ்தா நிலையை அனுபவம் செய்யுங்கள்.

இன்று பாப்தாதா தனது சுயராஜ்ய அதிகாரி குழந்தைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார். சுயராஜ்யம் என்பது பிராமண வாழ்வின் பிறப்புரிமையாகும். பாப்தாதா ஒவ்வொரு பிராமணர் களையும் சுய ராஜ்ய ஆசனதாரியாக மாற்றியுள்ளார். சுயராஜ்யத்தின் அதிகாரமென்பது பிறவி யிலேயே ஒவ்வொரு பிராமண ஆத்மாக்களுக்கும் கிடைதுள்ளது நிலைத்து இருப்பீர்களோ அந்தளவிற்கு தனக்குள் ஒளியும் சக்தியும் (லைட் மைட்) அனுபவம் செய்வீர்கள்.

பாப்தாதா இன்று ஒவ்வொரு குழந்தையின் நெற்றியிலும் ஒளிக் கிரீடத்தைப் பார்க்கின்றார். எந்தளவு தன்னுள் சக்தியை கடைபிடித்திருப்பீர்களோ அந்தளவே வரிசைக்கிரமமாக ஒளிக் கிரீடம் மின்னுகின்றது. பாப்தாதா குழந்தைகள் அனைவருக்குமே அனைத்து சக்திகளையும் அதிகாரத்தில் கொடுத்துள்ளார். ஒவ்வொருவருமே மாஸ்டர் சர்வசக்திவான் தான், ஆனால் தாரணை செய்வதில் வரிசைக்கிரமமாக உள்ளனர். பாப்தாதா பார்க்கின்றபொழுது சர்வ சக்திகளின் ஞானமும் அனைவரிடமும் உள்ளது, தாரணையும் உள்ளது. ஆயினும் ஒரு விசயத்தில் வேறுபாடு உள்ளது. எந்த ஒரு பிராமண ஆத்மாவை கேட்டாலும் ஒவ்வொரு சக்தியைப் பற்றியும் மிக அழகாகவே வர்ணனையும் செய்வார்கள் பிராப்திகளைப் பற்றியும் அழகாகவே வர்ணனை செய்வார்கள். ஆனால் வேறுபாடு யாதெனில் எந்த சமயத்தில் எந்த சக்தி தேவையோ அந்த சமயத்தில் அந்த சக்தியை செயலில் பயன்படுத்துவதில்லை. நேரம் முடிந்த பிறகு இந்த சக்திகளுக்கு கூறுகின்றார். சர்வ சக்திகளின் ஆஸ்தியென்பது உங்க சக்தி உங்களுக்கு முன்னால் எந்த இன்னலையும் வர விடாது அந்தளவிற்கு சக்தி வாயந்தது. இன்னலற்றவராக ஆகி விடலாம். அந்த சக்திகள் அனைத் தையும் நிலைவில் மட்டும் கவனமாக வைத்திருந்தாலே போதும் தக்க சமயத்தில் செயல்படுத் தலாம் இதற்காக தன் புத்தியை தெளிவாக வையுங்கள் எந்தளவிற்கு புத்தி லைன் தெளிவாக சுத்தமாக இருக்குமோ அந்தளவிற்கு தீர்வு காணும் சக்தி தீவிரமடைவதால் தக்க சமயத்தில் தேவையான சக்தியை செயல்படுத்த முடியும். ஏனெனில் பாப்தாதா ஒவ்வொரு குழந்தையும் தடைகளற்றவராக இன்னலற்றவராக முற்றிலும் கடின உழைப்பற்றவராக பார்க்க விரும்புகின்றார். அனைவருமே அப்படித்தான் பார்க்க விரும்புகின்றார் அதற்கு நீண்ட கால பயிற்சி தேவை.

பிரம்மா பாபாவின் முக்கிய சம்ஸ்காரத்தைப் பார்த்தீர்களா உடனடி தானம் மகா புண்ணியம் வாழ்வின் ஆரம்ப காலத்தொட்டே ஒவ்வொரு செயலிலும் தானமும் உடனடி, செயலும் உடனடி செய்தார் பிரம்மா பாபாவிடம் தீர்மானம் செய்யும் சக்தி எப்போதுமே விரைவாக இருந்தது. பாப்தாதா ரிசல்ட்டை பார்க்கின்றார். அனைவரையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும். பாப்தாதாவுடன் செல்பவர்கள் தானே அல்லது பின்னால் பின்னால் வருபவர்களா? உடன் சென்றே ஆக வேண்டுமெனில் பிரம்மா பாபாவை பின் பற்றுங்கள். செயலில் பிரம்மாவையும், மனோ நிலையில் நிராகாரி சிவ தந்தையையும் பின்பற்றுங்கள். பின்பற்றத் தெரியுமா? இரட்டை அயல் நாட்டவருக்கு பின்பற்றத் தெரியுமா? பின்பற்றுவது சுலபம் தானே. பின்பற்றத்தான் வேண்டும் எனும்போது ஏன், எதற்கு, எப்படி.... என்பதுதான். தந்தையை பின்பற்றுவதால் இவை யாவும் முடிந்து போகும். எப்படி என்பதில்லை, இப்படி. புத்தி உடனடியாக இப்படி செய், இப்படி செய் என முடிவெடுக்கின்றது. ஆக இன்று பாப்தாதா முதன் முறை வந்தவராயினும் பழையவராயினும் அனைவருக்கும் தரும் அறிவுரை இதுதான், தன் மனதை தூய்மையாக வையுங்கள். அனேகரின் மனதில் இப்போதும் கூட வீணான, எதிர்மறை யான சிறிய, பெரிய கறைகள் உள்ளது, இதன் காரணமாக முயற்சியில் உயர்ந்த வேகம், தீவிர முன்னேற்றத்தில் தடை ஏற்படுகின்றது. பாப்தாதா எப்போதுமே ஒவ்வொரு ஆத்மாவிற்காகவும் நல்லாசை, நல் விருப்பங்களை வையுங்களென ஸ்ரீமத் தருகிறார். இதுவே தூய மனம், அபகாரியின் மீது உபகாரம் எனும் உணர்வு வையுங்கள். இதுவே தூய மனம், தனக்கும் பிறருக்கும் வீண் எண்ணம் வருவது. இது தூய மனம் அல்ல. எனவே தூய மனம், தெளிவான சுத்தமான புத்தி, தீர்வு செய்யுங்கள், தன்னைத்தானே கவனமாக பாருங்கள் மனமும் புத்தியும் தெளிவாக உயர்வாக உள்ளதா? மேலோட்டமாக கிடையாது. சரியா சரியா யோசனை செய்து சொல்லுங்கள் மனம் மற்றும் புத்தி தெளிவாக உள்ளதா? அப்போதே டபுள் லைட் மன நிலை ஏற்படும். பாப்சமான் மன நிலை அமைய இதுவே எளிய சாதனம், இந்த பயிற்சி இறுதியில் அல்ல, நீண்ட காலம் தேவை. சோதனை செய்ய தெரியுமா? தன்னை சோதனை செய்க, பிறரை அல்ல. பாப்தாதா முன்பு கூட சிரிப்பிற்கான விசயம் கூறியுள்ளார். குழந்தை களுக்கு கிட்டப்பார்வையை விட தூரப் பார்வையே பிரகாசமாக உள்ளது. கிட்டப்பார்வை பலவீனமாக உள்ளது எனவே பிறரை கணிப்பதில் மிகவும் புத்திசாலியாகின்றனர். தன்னை சோதிப்பதில் பலவீனமடையாதீர்கள்.

பாப்தாதா முன்பு கூட கூறியுள்ளார் இப்போது நான் பிரம்மாகுமார், பிரம்மா குமாரி என்பது உறுதி யாகிவிட்டது. நடக்கும்போதும், சுற்றும்போது, யோசிக்கும் போதெல்லாம் நான் பிரம்மா குமாரி பிராமண ஆத்மா, இவ்வாறே இயல்பு தன்மையாக இயற்கையாக வேண்டும் நான் ஃபரிஸ்தா அமிர்தவேளை எழுந்த மாத்திரமே நான் ஃபரிஸ்தா பரமாத்மா ஸ்ரீமத்படி இந்த உடலில் வந்துள்ளேன், அனைவருக்கும் செய்தி தர உயர்ந்த செயலை செய்ய நாளை என்பதில்லை உங்களது உணர்வு பிறரையும் மெல்ல மெல்ல பரிஸ்தாவாக மாற்றிவிடும். உயர்ந்த எண்ணத்தில் சென்று விடுங்கள். ஒருவரையொருவர் பரிஸ்தாவாக பாருங்கள். செயல் முடிந்தவுடன் தனது அமைதிக்கு சென்று விடுங்கள். உங்களது உணர்வு பிறர் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். நாம் ஃபரிஸ்தா என்பது உறுதியாக உள்ளதா? பரிஸ்தா பவ எனும் வரதானம் அனைவருக்கும் கிடைத்துள்ளதா? ஒரு நொடியில் பரிஸ்தா டபுள் லைட் ஆக முடியுமா? ஒரு நொடியில், நிமிடமல்ல, 10 நொடியுமல்ல? யாரெல்லாம் ஒரு நொடியில் ஆக முடியுமோ, இரு நொடியல்ல ஒரு நொடியில் ஆக முடியுமெனில் அவர்கள் ஒரு கை தட்டுங்கள், ஆக முடியுமா? அப்படியே கை உயர்த்த வேண்டாம் இரட்டை அயல் நாட்டவர் உயர்த்தவில்லையே அவர்களும் கை உயர்த்துங்கள். (அனேகர் கை உயர்த்தினர்) நல்லது, இறுதி நேரத்தை தான் (பரீட்சை) ஒரு நொடியில் வரும் பிறகென்ன செய்வீர்கள்? திடீரென வரும், நொடியில் வரும். கை உயர்த்தினீர்கள், பரவாயில்லை உணர்ந்தீர்கள் இதுவும் மிக நல்லது. ஆனால் பயிற்சி செய்யத்தான் வேண்டும் செய்ய வேண்டுமே என்பதல்ல, செய்தே ஆக வேண்டும் இந்த பயிற்சி மிக மிக மிக அவசியம். சரி பாப்தாதா சிறிது நேரம் தருகின்றார். எவ்வளவு நேரம் வேண்டும்? இரண்டாயிரம் வரை வேண்டுமா 21 ஆம் நூற்றாண்டு என்று நீங்களே உறுதி செய்தீர்கள் தண்டோரா அடித்தீர்கள், நினைவுள்ளதா? உறுதி செய்தீர்கள் பொன்னுலகம் வரும் சூழலை அமைப்போம் உறுதி செய்தீர்கள் தானே. இதுவே அதிக நேரமாயிற்று தனக்கு எவ்வளவு கவனம் தர முடியும், தர முடியாது என்பதல்ல, தர வேண்டும் தேக உணர்வில் வர எவ்வளவு நேரம் ஆகிறது. இரு நொடியா? விரும்பாத பொழுதும் தேக உணர்வில் வந்து விடுகிறீர்கள். எவ்வளவு நேரம் ஆகிறது? ஒரு நொடியா அதைவிட குறைவா தெரிவதில்லை தேக உணர்வில் வந்து விட்டோமென்பது வந்து விடுகிறோம். அவ்வாறே பயிற்சி செய்யுங்கள் என்ன ஆனாலும் என்ன செய்தாலும் தனக்கே தெரியாமல் ஆத்ம உணர்வில் சக்தி சாலி நிலையில் இயல்பாகி விட்டேன் என்றாக வேண்டும், பரிஸ்தா நிலையும் இயல்பாக வேண்டும். எந்தளவு தனனிலையை பரிஸ்தா ஆக்குவீர்களோ அப்போது இயற்கையே மனோநிலையை இயல்பாக்கி விடும். பாப்தாதா எவ்வளவு நேரம் கழித்து கேட்கலாம்? எவ்வளவு நேரம் வேண்டும் ? ஜெயந்தி சொல்லுங்கள். எவ்வளவு காலம் வேண்டும். அயல்நாட்டவருக்காக நீங்கள் சொல்லுங்கள்.அயல் நாட்டவருக்கு எவ்வளவு காலம் வேண்டும்? ஜனக் சொல்லுங்கள் (தாதி ஜி இன்று என்பது இன்றே ஆகும்.) இன்று என்பது இன்றே என்றால் எல்லோரும் பரிஸ்தா ஆகிவிட்டீர்கள்? ஆகிவிடுவோம். என்பதல்ல ஆவோமென்றால் எதுவரை ? இன்று பாப்தாதா பிரம்மா பாபாவின் எந்த சம்ஸ்காரத்தைப் பற்றி கூறினார்? உடனடி தானம் மகா புண்ணியம்.

பாப்தாதாவிற்கு ஒவ்வொரு குழந்தையின் மீதும் அன்பு உள்ளது. பாபா ஒரு குழந்தையும் சாதாரண குழந்தை கிடையாது என்று நினைக்கின்றார். வரிசையாக வருவது ஏன்? அனைவருமே முதல் நம்பர் என்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் நல்லது.

ஆட்சித்துறையின் சகோதர சகோதரிகளுடன் :- ஒன்று சேர்ந்து என்ன நிகழ்ச்சி செய்கின்றீர்கள் வெகு விரைவிலேயே உயர்ந்த ஆத்மாக்களான உங்களது கையில் இந்த காரியம் வர வேண்டும் அந்தளவு தீவிர முயற்சிக்கான திட்டம் தீட்டினீர்களா. உலக மாற்றம் வர வேண்டுமெனில் ஆட்சி முழுவதும் மாற வேண்டும். இதனை எவ்வளவு சுலபமாக்குவது, பரப்புவது, சிந்தியுங்கள் எங்கெல்லாம் குறைந்தபட்சம் பெரிய பெரிய நகரங்களில் உள்ள முக்கிய தலைவர்களெல்லாம் நேராக சந்தித்து செய்தி தர திட்டம் அமைத்தீர்கள், குறைந்த பட்சம் இந்த ஆன்மீகத்தின் மூலம் மாற்றம் நிகழும், நிகழவேண்டும் என புரிந்து கொள்ள வேண்டும். தனது துறையினரை எழுப்புங்கள் அதற்காகவே இந்த துறை அமைக்கப்பட்டது. பாப்தாதாவிற்கு துறையினரின் சேனையைப் பார்த்து மகிழ்ச்சியே இருப்பினும் ரிசல்ட் பார்க்க வேண்டும், ஒவ்வொரு துறை யினரும் எந்தளவிற்கு செய்தி பரப்பியுள்ளீர்கள் சற்று அதிகமே எழுப்பியுள்ளீர்களா, துணையாக் கினீர்களா? சகயோகி துணையாக்கினீர்களா? பிரம்மா குமார் ஆக்கவில்லை ஆயினும் ஒத்துழைப்பு தருபவராக துணையாக்கினீர்களா?

அனைத்துத் துறைகளுக்கும் பாப்தாதா கூறுகின்றார் அனைத்து தர்ம தலைவர்களும் வந்துள்ளார்கள், முதல் நம்பராக இல்லையெனினும் ஒரு மேடையில் ஒன்றாகி அனைவரும் ஆன்மீக சக்தியை பரப்ப வேண்டும் என்று கூறுகிறார்கள். வந்துள்ள அனைத்து துறையினரும் ஒவ்வொரு துறையிலும் செய்தியை எவ்வளவு தூரம் கொண்டு சென்றுள்ளார்கள். மேலும் இரண்டாவதாக ஆன்மீகம் தேவை, நாமும் அதற்கு உதவி செய்ய வேண்டும் என்ற ரிசல்ட் வர வேண்டும். தினசரி மாணவராகாவிட்டாலும் ஒத்துழைப்பு தர வேண்டும். இப்போது செய்தது போலவே ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு துறையினருக்கும் செய்யுங்கள். முதலில் இந்தியாவிலும் பிறகு அகிலமெங்கும் செய்யுங்கள். விதவிதமான துறையினைச் சார்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து அனுபவம் செய்ய வேண்டும். இதுவரை நாம் எவ்வளவு ஒத்துழைப்பு தந்துள்ளோம். அடுத்து என்ன திட்டம்? ஏனெனில் ஒவ்வொரு துறையினரும் லட்சியத்துடன் ஒன்று சேர்ந்து செயல்படுவார்கள். மேலும் மிகப் பெரிய குழுவை அமைப்பார்கள், ஒருவரை யொருவர் பார்த்து ஊக்கம் உற்சாகம் வரும்., இப்போது நகரமெங்கும் பல பிளவுகளாக உள்ளது. நல்லவர்களும் உள்ளார்கள். இருப்பினும் முதலில் குழுவை சேருங்கள். பிறகு அனைவரையும் மதுபனில் ஒன்று சேர்க்கலாம். இது போன்ற திட்டம் அமைத்தீர்களா? அவசியம் செய்திருப்பீர்கள். அயல்நாட்டவருக்கும் செய்தி அனுப்பப்பட்டது அனேகம் பிளவுபட்டுள்ளது. பாரதத்திலேயே கூட பார்க்கும் போது ஒத்துழைப்பு செய்பவர்கள் ஆங்காங்கே மறைமுகமாக உள்ளார்கள். அவர்களை ஒன்று சேர்த்து முக்கிய நிகழ்ச்சிகளை செய்து அனுபவங்களை பகிர வைத்தால் மாற்றம் நிகழும் அநேகர் வருவார்கள். ஒவ்வொரு துறையிலும் 5, 8, 25, 30, என்று இருப்பார்கள் குழுவில் வருவதால் முன்னேற்றம் நிகழும். ஊக்கம் உற்சாகம் அதிகரிக்கும். இதுவரையில் நடைபெற்ற அனைத்து துறையில் ரிசல்ட்டை பார்க்க வேண்டும் அனைத்து துறையினரும் கேட்கின்றீர்கள்? இன்று குறிப்பாக அதற்கெனவே வந்தவர்கள் கை உயர்த்துங்கள். அதிகம் உள்ளனர், இப்போது ரிசல்ட் தர வேண்டும் யார் எத்தனை, எத்தனை சதவிகிதம் சகயோகி ஆனார்கள், பிறகு அவர்களுக்காக நல்ல நிகழ்ச்சிகளை வைக்கலாம் சரியா !

மதுபனில் இருப்பவர்கள் சேவை இல்லாமல் இருக்க கூடாது, பிசியாக இருக்க விரும்புகிறீர்களா? அல்லது களைத்து விடுகின்றீர்களா? இடையிடையே 15 நாட்கள் ஓய்வு கிடைக்கிறது அப்படி இருக்க வேண்டும். ஆனால் நிகழ்ச்சிக்கிடையே ஊக்கம் உற்சாகமும் வேண்டும். இல்லையெனில் சேவையில்லாதபோது தாதி ஒரு புகார் செய்கிறார் அது என்ன தெரியுமா? எல்லோரும் அவரவரது கிராமம் செல்ல விரும்புகிறார்கள், ஊருக்கு போய் விட்டு வர எண்ணுகிறார்கள் சேவைக்காக சென்று வருவதால் முனைப்புடன் ஈடுபடுங்கள் வீண் பேச்சு இருக்காது. மதுபன் வாசிகளிடம் உள்ள ஒரு சிறப்பம்சம் குறித்து பாப்தாதா பன்மடங்கு வாழ்த்து தருகிறார். 100 மடங்கு இல்லை, பன் மடங்கு அது எந்த விசயம்? யாரேனும் வந்து விட்டால் சேவையில் ஈடுபட்டு விடுகிறார்கள், உள்ளே என்ன இருந்தாலும் மறைந்து விடுகிறது. ஆன்மீகமே தென்படுகின்றது களைப்பற்ற நிலை தெரிகிறது. இங்கே அனைவரும் பரிஸ்தாக்களாகவே தென்படுகிறார்கள் என கருத்தை தெரிவித்துச் செல்கிறார்கள். இந்த விசேஷ தன்மை அதிகம் உள்ளது. அந்த சமயத்தில் வில்பவர் வந்து விடுகின்றது. சேவையின் பளபளப்பே தென்படுகின்றது. இந்த சான்றிதழ் பாப்தாதா தருகின்றார். வாழ்த்துக்கள் மதுபன் வாசிகள் கை தட்டுங்கள் நல்லது. அப்போது பாப்தாதாவும் சந்திப்பார்கள் வலம் வருகின்றார் உங்களுக்கு தெரிவதில்லை இந்த சிறப்பம்சம் மேலும் அதிகரிக்கும் நல்லது !

ஊடகத்துறை : அயல் நாட்டிலும் ஊடகத்துறை ஆரம்பமானது இப்பொழுதெல்லாம் ஊடகத்தின் முயற்சி நன்றாக இருப்பதை பாப்தாதா பார்க்கின்றார். செய்தித்தாளிலும் செய்திகள் வர ஆரம்பித்து விட்டது. மிக அன்பாக தருகிறார்கள். முயற்சிக்கான பலன் கிடைத்துவிட்டது. அனைவருக்கும் செய்திகள் மிக நல்ல அனுபவம் ஏற்படுகின்றது. இவ்வாறு செய்தித்தாளில் வரும், கொஞ்சம் சமயம் தந்துள்ளார். தினமும் ஒரு நிலையான இடத்தை ஒதுக்கி ஆன்மீக சக்தியை அதிகரிக்க ............. உள்ளது. இவ்வாறு முயற்சி செய்யுங்கள் வெற்றியும் உள்ளது, தொடர்பும் நன்கு அதிகரிக்கின்றது. இப்போத செய்தித்தாள் மூலம் விந்தை செய்து காண்பியுங்கள். செய்ய முடியுமா? குழு செய்ய முடியுமா? கை உயர்த்துங்கள். ஆம் செய்வோம் ஊக்கம் உற்சாகம் இருந்தால் வெற்றியும் இருக்கும் ஏன் முடியாது இனி வரும் காலங்களில் அனைத்து சாதனங் களும் உங்களக்கு பயன்படும், தானே முன் வந்து வழங்குவார்கள், செய்தி கொடுங்கள், கொடுங்கள், எங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என கேட்பார்கள். இப்போது நீங்கள் சொல்ல வேண்டி உள்ளது. ஒத்துழைப்பு தாருங்கள் என்று, பிறகு அவர்கள் சொல்வார்கள் எங்களை பயன்படுத்துங் கள் இதனை மட்டும் உறுதியாக வையுங்கள் பரிஸ்தா பரிஸ்தா பரிஸ்தா பிறகு பாருங்கள் உங்கள் வேலை எவ்வளவு விரைவாக முடியும். நீங்கள் யார் பின்னாலும் செல்ல வேண்டியதில்லை. ஆனால் நிழல் போன்று அவர்கள் உங்களை பின் தொடர்வார்கள். உங்களது மனோநிலையாலேயே நின்றுள்ளது. எவரெடி ஆகி விடுங்கள் பிறகு பட்டனை அழுத்த வேண்டியதே மீதம், அவ்வளவு தான் . நன்றாக செய்கிறீர்கள் மேலும் செய்வீர்கள்.

நாலாபுறமும் உள்ள உன்நாடு வெளிநாடு எங்கும் நேர்முகமாகவும், மறைமுகமாகவும் சந்திப்பை கொண்டாடிக் கொண்டிருக்கின்ற அனைத்து சுயராஜ்யதிகாரி ஆத்மாக்களுக்கு எப்போதும் இந்த உயர்ந்த அதிகாரத்தை தனது முகம் மற்றும் நடத்தையில் வெளிப்படுத்தும் விசேஷ ஆத்மாக் களுக்கு, என்றென்றும் பாப்தாதாவின் ஒவ்வொரு அடியையும் பின்பற்றி சதா மனதை சுத்தமாக புத்தியை தெளிவாக வைத்து இயல்பாகவே தீவிர முயற்சி செய்யும் ஆத்மாக்களுக்கு எப்போதும் உடனிருந்து உடன் செல்கின்ற டபுள் லைட் குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்

வரதானம்:
சாதனங்களை பற்றற்று விலகியிருந்து செயலில் பயன்படுத்தும் எல்லையில்லா வைராகி ஆகுக!

எல்லையில்லா வைராக்கி என்றாலே எதன் மீதும் பற்றற்றவர் எப்போதும் தந்தைக்கு பிரிய மானவர். இந்த அன்பே விலகியிருக்கச் செய்கிறது தந்தைக்கு அன்பானவராக இல்லை யெனில் விலகியும் இருக்க முடியாது. பற்றில் வந்து விடுபவர்கள் தந்தைக்குப் பிரியமான ஒருவரே அனைத்து ஈர்ப்பிலிருந்தும் விலகியிருப்பார். இதனை பல பற்றற்ற நிலை என்பர். எந்தவிதமான ஈர்ப்பிலும் ஈர்க்கப்படாதவர் படைப்பில் விலகியிருந்து சாதனங்களை செயலில் பயன்படுத்துங்கள். இவ்வாறான எல்லையில்லாத வைராக்கியமே இராஜரிஷி ஆவர்.

சுலோகன்:
உள்ளத்தில் உண்மையும் தூய்மையும் இருந்தால் தந்தை மகிழ்ச்சி அடைவார்.