10-04-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! தந்தை பாரதத்தை
மீட்பதற்காக வந்துள்ளார். குழந்தைகளாகிய நீங்கள் இச்சமயத்தில்
தந்தைக்கு உதவியாளர்களாக ஆகிறீர்கள்.
கேள்வி:
உயர்ந்த குறிக்கோளில் தடைகள்
ஏற்படுத்தக் கூடிய சிறு சிறு விஷயங்கள் யாவை?
பதில்:
சிறிதளவு கூட ஏதாவது இச்சைகள்
உள்ளன, எனில் பற்றற்ற உள்ளுணர்வு இல்லை. நல்ல நல்ல ஆடைகளை
அணிவதில் மற்றும் உணவு உட்கொள்வதில் புத்தி அலைந்து கொண்டே
இருக்கிறது.. .. என்றால் இந்த விஷயங்கள் உயர்ந்த குறிக்கோளை
அடைவதில் தடைகளை ஏற்படுத்துகின்றன. எனவே குழந்தைகளே வனவாசத்தில்
இருங்கள் என்று பாபா கூறுகிறார். நீங்கள் எல்லாவற்றையும் மறக்க
வேண்டும். இந்த சரீரம் கூட நினைவில் இருக்கக் கூடாது.
ஓம் சாந்தி.
இந்த பாரதம் தான் அழிவற்ற கண்டமாகும். மேலும் இதனுடைய உண்மையான
பெயரே பாரத கண்டம் ஆகும். ஹிந்துஸ்தான் என்ற பெயர் பின்னால்
ஏற்பட்டதாகும். பாரதத்திற்கு ஆன்மீக கண்டம் என்று கூறப்படுகிறது.
இது பழமையான கண்டம் ஆகும். புது உலகத்தில் பாரத கண்டம்
இருக்கும்பொழுது வேறு எந்த கண்டமும் இருக்கவில்லை. முக்கியமாக
இருப்பவர்களே இஸ்லாமியர்கள், பௌத்தியர்கள் மற்றும்
கிறிஸ்த்தவர்கள். இப்பொழுதோ நிறைய கண்டங்கள் ஆகிவிட்டுள்ளன.
பாரதம் அவினாஷி கண்டமாகும். அதற்குத் தான் சொர்க்கம், ஹெவென்
என்று கூறுகிறார்கள். புது உலகத்தில் புதிய கண்டம் ஒரு பாரதம்
மட்டுமே ஆகும். புதிய உலகத்தை படைப்பவர் பரமபிதா பரமாத்மா
சொர்க்கத்தின் படைப்பு கர்த்தா-ஹெவென்லி காட் ஃபாதர் ஆவார்.
இந்த பாரதம் அழியாத கண்டம் ஆகும் என்பதை பாரதவாசிகள்
அறிந்துள்ளார்கள். பாரதம் சொர்க்கமாக இருந்தது யாராவது இறந்தால்
சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டார் என்று கூறுகிறார் கள்.
சொர்க்கம் எங்கோ மேலே உள்ளது என்று நினைக்கிறார்கள். தில்வாலா
கோவிலில் கூட வைகுண்டத்தின் சித்திரத்தை கூரையில்
காண்பித்துள்ளார்கள். பாரதம் தான் சொர்க்கமாக இருந்தது.
இப்பொழுது இல்லை என்பது யாருடைய புத்தி யிலும் வருவதில்லை.
இப்பொழுதோ நரகமாக உள்ளது. எனவே இதுவும் அஞ்ஞானமே! ஞானம் மற்றும்
அஞ்ஞானம் - இரண்டு பொருட் கள் ஆகிறது. ஞானத்திற்கு பகல் என்றும்
அஞ்ஞானத்திற்கு இரவு என்றும் கூறப்படுகிறது. மிகவும் பிரகாசமான
வெளிச்சம் மற்றும் கோரமான இருள் என்று கூறப்படுகிறது. வெளிச்சம்
என்றால் உயர்ச்சி, இருள் என்றால் வீழ்ச்சி. மனிதர்கள் சூரிய
அஸ்தமனத்தைப் பார்ப்பதற்காக (சன்செட்) சூரியன் மறையும் காட்சி
தெரியும் இடத்திற்குச் செல்கிறார்கள். இப்பொழுது அதுவோ எல்லைக்
குட்பட்ட விஷயமாகும். இதற்கு பிரம்மாவின் பகல், பிரம்மாவின்
இரவு என்று கூறப் படுகிறது. இப்பொழுது பிரம்மாவோ பிரஜாபிதா
ஆவார். எனவே அவசியம் பிரஜைகளின் தந்தை ஆகிறார். ஞானம் என்ற மையை
சத்குரு அளிக்கிறார். அப்பொழுது அறியாமை என்ற இருள் அழிந்து
விடுகிறது. இந்த விஷயங்களை உலகத்தில் யாருமே புரிந்து
கொள்வதில்லை. இவை புதிய உலகத்திற்கான புதிய ஞானமாகும்.
ஹெவெனுக்காக ஹெவென்லி காட் ஃபாதர்-ன் ஞானம் வேண்டும். ஃபாதர்
இஸ் நாலேஜ் ஃபுல் (தந்தை ஞானம் நிறைந்தவர்) என்றும்
பாடுகிறார்கள். எனவே ஆசிரியர் ஆகிறார். ஃபாதர்-க்குக் கூறப்
படுவதே பதீத பாவனர் என்று. வேறு யாரையுமே பதீத பாவனர் என்று
கூற முடியாது. ஸ்ரீ கிருஷ்ணருக்குக் கூட கூற முடியாது. தந்தையோ
அனை வருக்கும் ஒருவரே ஆவார். ஸ்ரீ கிருஷ்ணரோ அனைவருக்கும் தந்தை
கிடையாது. அவரோ பெரிய வராகி திருமணம் செய்தார் என்றால் ஓரிரண்டு
குழந்தைகளுக்குத் தந்தை ஆகிவிடுவார். இராதை கிருஷ்ணருக்கு
இளவரசர் இளவரசி என்று கூறப்படுகிறது. எப்பொழுதாவது சுயவரம் கூட
ஆகி இருக்கக்கூடும். திருமணத்திற்குப் பின்னர் தான் தாய் தந்தை
ஆக முடியும். அவரை ஒரு பொழுதும் யாருமே வர்ல்டு காட் ஃபாதர்
என்று கூற முடியாது. வர்ல்டு காட் ஃபாதர் என்று ஒரே ஒரு
நிராகார தந்தைக்குக் கூறப்படுகிறது. கிரேட் கிரேட் கிராண்டு ஃபாதர்
என்று சிவ பாபாவிற்குக் கூற முடியாது. பிரஜாபிதா பிரம்மா கிரேட்
கிரேட் கிராண்டு ஃபாதர் ஆவார். அவரிடமிருந்து வம்சாவளி
வெளிப்படுகிறது. அவர் இன் கார்போரியல் காட் ஃபாதர்-நிராகார
ஆத்மாக்களின் நிராகார் தந்தை ஆவார். நிராகார ஆத்மாக்கள் இங்கு
சரீரத்தில் இருக்கும்பொழுது, அப்பொழுது பக்தி மார்க்கத்தில்
முறை யிடுகிறார்கள். இந்த அனைத்து புதிய விஷயங்களை நீங்கள்
கேட்கிறீர் கள். சரியான முறையில் எந்த சாஸ்திரத்திலும் இல்லை.
நான் நேரிடையாக வந்து குழந்தை களாகிய உங்களுக்குப் புரிய
வைக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். பிறகு இந்த ஞானம் முழுவதுமே
மறைந்துவிடுகிறது. பிறகு தந்தை வரும்பொழுது தான் அவர் வந்து
சரியான ஞானத்தைக் கூற முடியும். குழந்தைகளுக்குத் தான்
நேரிடையாக புரிய வைத்து ஆஸ்தியை அளிக்கிறார். பிறகு பின்னால்
சாஸ்திரங்கள் உருவாகின்றன. சரியானதாக அமைய முடியாது. ஏனெனில்
உண்மையான உலகமே முடிந்து போய் பொய்யான கண்டமாக ஆகிவிடுகிறது.
எனவே பொய்யான பொருள் தான் இருக்கும். ஏனெனில் இறங்கும் கலை தான்
நடக்கிறது. பிறகு சத்தியத்தின் மூலம் ஏறும் கலை ஏற்படுகிறது.
இந்த பக்தி என்பது இரவு. இருளில் கால் இடறி விழ வேண்டி
இருக்கும். தலையை முட்டிக் கொண்டே இருப்பார்கள். அப்பேர்ப்பட்ட
கோரமான இருள்! மனிதர்களுக்கோ எதுவுமே தெரிய வருவதில்லை.
வாசலுக்கு வாசல் அலைந்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த சூரியன்
கூட உதிக்கிறது மற்றும் மறைகிறது. அதை குழந்தைகள் போய்
பார்க்கிறார்கள். இப்பொழுதோ குழந்தைகளாகிய நீங்கள் ஞான சூரியன்
உதயமாவதைப் பார்க்க வேண்டும். பாரதத்தின் உயர்வு மற்றும்
பாரதத்தின் வீழ்ச்சி. சூரியன் எப்படி மூழ்குகிறதோ அப்படியே
பாரதம் மூழ்குகிறது. பாரதத்தின் படகு கீழே சென்றுவிடுகிறது.
பின் தந்தை வந்து அதை மீட்கிறார் என்று சத்திய நாராயணரின்
கதையில் காண்பிக் கிறார்கள். நீங்கள் இந்த பாரதத்தை மீண்டும்
மீட்கிறீர்கள். இதை குழந்தைகளாகிய நீங்கள் தான்
அறிந்துள்ளீர்கள். நீங்கள் அழைப்பும் விடுக்கிறீர்கள். புதிய
படைப்பின் கண்காட்சி என்ற பெயரும் சரியாக உள்ளது. புது உலகம்
எப்படி ஸ்தாபனை ஆகிறது, அதற்கான கண்காட்சி. படங்கள் மூலமாக
விளக்கவுரை அளிக்கப்படுகிறது. எனவே அதே பெயர் வந்து
கொண்டிருந்தால் நல்லது. புதிய உலகம் எப்படி ஸ்தாபனை ஆகிறது
அல்லது உயர்வு எப்படி ஆகிறது என்பதை நீங்கள் காண்பிக்கிறீர்கள்.
அவசியம் பழைய உலகத்தின் வீழ்ச்சி நிகழ்கிறது. அப்பொழுது தான்
மீண்டும் உயர்வு எப்படி ஆகிறது என்பதைக் காண்பிக்கிறார்கள். இது
கூட ஒரு கதை ஆகும் - ஆட்சியைப் பெறுவது மற்றும் இழப்பது. 5
ஆயிரம் வருடங்களுக்கு முன்பு என்ன இருந்தது? சூரிய
வம்சத்தினரின் இராஜ்யம் இருந்தது என்று சொல்வார்கள். பிறகு
சந்திர வம்சத்தினரின் இராஜ்யம் ஸ்தாபனை ஆகியது. அவர்களே
ஒருவரிடமிருந்து ஒருவர் ஆட்சி பெறுகிறார்கள். இன்னாரிடமிருந்து
இராஜ்யத்தை அடைந்தார்கள் என்று காண்பிக் கிறார்கள். அவர்கள்
ஒன்றும் ஏணிப்படியைப் புரிந்து கொள்வதில்லை. இதனை தந்தைப்
புரிய வைக்கிறார் - நீங்கள் தங்க யுகத்திலிருந்து வெள்ளி
யுகத்திற்குச் சென்றீர்கள். படி இறங்கிக் கொண்டே வந்தீர்கள்.
இது 84 பிறவிகளின் ஏணிப்படி ஆகும். ஏணியிலிருந்து இறங்க வேண்டி
யிருக்கிறது. பிறகு ஏற வேண்டியுமிருக்கிறது. வீழ்ச்சி பற்றிய
இரகசியம் கூட புரிய வைக்க வேண்டியுள்ளது. பாரதத்தின் வீழ்ச்சி
எவ்வளவு காலம் மற்றும் உயர்வு எவ்வளவு காலம்? பாரதவாசிகளின்
வீழ்ச்சி மற்றும் எழுச்சி. ஞான மனனம் செய்ய வேண்டி யுள்ளது.
மனிதர்களின் ஆர்வத்தை எவ்வாறு தூண்டி விடலாம்? பிறகு அழைப்பும்
கொடுக்க வேண்டும். சகோதரர்களே, சகோதரிகளே வந்துப் புரிந்து
கொள்ளுங்கள். தந்தையைப் பற்றிய மகிமையை முதலில் கூற வேண்டும்.
சிவபாபா மகிமையின் ஒரு போர்டு (பலகை) இருக்க வேண்டும். பதீத
பாவனர், ஞானக் கடல், தூய்மை, சுகம், சாந்தியின் கடல்,
செல்வங்களின் கடல், அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல்,
ஜகத்பிதா, ஜகத்தின் ஆசிரியர், ஜகத் குரு சிவபாபாவிடமிருந்து
வந்து தங்களது சூரிய வம்சம் சந்திர வம்சத்தின் ஆஸ்தி பெறுங்கள்.
அப்பொழுது மனிதர் களுக்கு தந்தையைப் பற்றி தெரிய வரும்.
தந்தையின் மகிமை மற்றும் ஸ்ரீ கிருஷ்ணரின் மகிமை தனித்தனியாகும்.
இது குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் பதிந்துள்ளது. சேவை
செய்யக் கூடிய குழந்தைகள் நாள் முழுவதும் ஓடியாடிக் கொண்டே
இருக்கின்றர்.. தங்களுடைய லௌகீக சர்வீஸ் இருக்கும்பொழுது கூட
விடுமுறை பெற்று சேவையில் ஈடுபட்டு விடுகிறார்கள். இது இருப்பதே
ஈஸ்வரிய அரசாங்கமாக. குறிப்பாக பெண் குழந்தைகள் இப்பேர்ப்பட்ட
சேவையில் ஈடுபட்டு விட்டார்கள் என்றால் நிறைய பெயர் வாங்க
முடியும். சேவை செய்யக் கூடிய குழந்தைகளின் பாலனையோ நல்ல
முறையில் ஆகிக் கொண்டி ருக்கிறது. ஏனெனில் சிவபாபாவின்
களஞ்சியம் நிரம்பியுள்ளது. எந்த பண்டாராவிலிருந்து
சாப்பிட்டார்களோ அந்த பண்டாரா நிரம்பியதாக இருக்கும். கஷ்டம்
துக்கம் நீங்கிப் போய்விடும்.
நீங்கள் சிவ வம்சத்தினர் ஆவீர்கள். அவர் படைப்பவர் ஆவார். இது
படைப்பு ஆகும். பாபுல் - (தந்தை) என்ற வார்த்தை மிகவும்
இனிமையானது ஆகும். சிவன் மண மகன் கூட ஆவார் அல்லவா? சிவபாபாவின்
மகிமையே தனி ஆகும். நிராகாரமானவர் என்ற வார்த்தை எழுதுவதால்
அவருக்கு எந்த ஒரு ஆகாரம் - (உருவம்) இல்லை என்று
நினைக்கிறார்கள். மிகவுமே அன்பிற் குரிய (பிலவட் மோஸ்ட்)
சிவபாபா ஆவார். பரமபிரிய என்று எழுத வேண்டும். இச்சமயம் யுத்த
மைதானம் அவர்களுடையதும் இருக்கிறது. பின் உங்களுடையதும்
இருக்கிறது. சிவசக்திகள் அஹிம்சையினர் என்று பாடல் பாடு
கிறார்கள். ஆனால் படங்களில் தேவிகளுக்கு கூட ஆயுதங் களைக்
கொடுத்து ஹிம்சை செய்வதாகக் காண்பித்துள்ளார்கள். உண்மையில்
நீங்கள் யோகம் அல்லது நினைவின் பலத்தால் உலக அரசாட்சி
பெறுகிறீர்கள். ஆயுதங்கள் ஆகியவற்றின் விஷயமே கிடையாது. கங்கை
யினுடைய பிரபாவம் (தாக்கம்) நிறைய இருக்கிறது. அநேகருக்கு
சாட்சாத் காரம் (காட்சிகள் தெரிதல்) கூட கிடைக்கக்கூடும். பக்தி
மார்க்கத்தில் கங்கை ஜலம் கிடைத்தால் முன்னேற்றம் ஆகும் என்று
நினைக்கிறார்கள். அதனால் மறைமுகமான கங்கை என்று கூறிக் கொண்டே
இருக்கிறார்கள். கூறுகிறார்கள், அம்பு எய்த உடனேயே கங்கை வெளிப்
பட்டது. கௌமுக் (பசுவின் வாயிலிருந்து) கங்கையை காண்பிக்கிறார்
கள். நீங்கள் கேட்டீர்கள் என்றால் மறைமுகமான கங்கை வெளிப்பட்டு
கொண்டிருக் கிறது என்று கூறுவார்கள். திரிவேணி யில் கூட
சரஸ்வதியை மறைமுகமாகக் காண்பித் துள்ளார்கள். மனிதர்களோ நிறைய
விஷயங் களை உருவாக்கி விட்டுள்ளார்கள். இங்கோ ஒரே ஒரு விஷயம்
தான். அல்ஃப் (தந்தை) மட்டும், அவ்வளவே! அல்லா வந்து (பஹிஷ்த்)
சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கிறார். குதா, ஹெவென் (சொர்க்கம்)
ஸ்தாபனை செய்கிறார். இறைவன் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கிறார்.
உண்மை யில் இறைவனோ ஒருவர் ஆவார். இதுவோ அவரவர் மொழிகளில்
பல்வேறு பெயர்கள் வைத்துள்ளனர். ஆனால் அல்லாவிடமிருந்து அவசியம்
சொர்க்கத்தின் அரசாட்சி கிடைக்கும் என்று புரிந்துள்ளார்கள்.
இங்கோ மன்மனாபவ என்று தந்தை கூறுகிறார். தந்தையை நினைவு
செய்வதால் அவசியம் ஆஸ்தி நினைவிற்கு வரும். படைப்பவரினுடைய
படைப்பே சொர்க்கம் ஆகும். இராமர் நரகத்தை படைத்தார் என்று
கூறுவார்களா என்ன? நிராகார மானவரான படைப்புக் கர்த்தா யார்
என்பது பாரதவாசிகளுக்குத் தெரியவே தெரியாது. நரகத்தை படைப்பவன்
இராவணன் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இராவணனை
எரிக்கிறார்கள். இராவண இராஜ்யத்தில் பக்தி மார்க்கத்தின் நாற்று
எவ்வளவு பெரியதாக உள்ளது. இராவணனினுடைய உருவத்தைக் கூட மிகவுமே
பயங்கரமாக அமைத்துள்ளனர். இராவணன் நம்முடைய எதிரி என்றும்
கூறுகிறார்கள். தந்தை அர்த்தத்தைப் புரிய வைத்துள்ளார் -
விஸ்தாரம் பெரியதாக இருக்கும்பொழுது இராவணனி னுடைய சரீரத்தையும்
பெரியதாக அமைக் கிறார்கள். சிவபாபாவோ புள்ளி (பிந்து) ஆவார்.
ஆனால் படத்தை பெரியதாக அமைத்துள்ளனர். இல்லையென்றால்
பிந்துவிற்கு எப்படி பூஜை செய்வது? பூசாரியோ ஆக வேண்டியுள்ளது
அல்லவா? ஆத்மாவிற்கோ புருவ மத்தியில் பிரகாசிக்கும் அதிசய மான
நட்சத்திரம் என்று கூறுகிறார் கள். பிறகு ஆத்மாவே பரமாத்மா
என்றும் கூறுகிறார்கள். பிறகு ஆயிரம் சூரியனை விட அதிகமான
பிரகாசம் எப்படி இருக்க முடியும்? ஆத்மாவின் வர்ணனையோ செய்
கிறார்கள். ஆனால் புரிந்திருப்பதில்லை. ஒருவேளை பரமாத்மா ஆயிரம்
சூரியனை விட பிரகாசமாக இருக்கிறார் என்றால் பின்னர்
ஒவ்வொருவருக்குள்ளும் எப்படி பிரவேசம் செய்வார்? எவ்வளவு தவறான
விஷயங்கள் ஆகும். அவற்றை கேட்டு என்னவாக ஆகிவிட்டுள்ளார்கள்.
ஆத்மாவே பரமாத்மா என்று கூறுகிறார்கள். ஆக தந்தையின் ரூபம் கூட
அவ்வாறே இருக்கும் அல்லவா? ஆனால் பூஜைக்காக பெரியதாக
அமைத்துள்ளார்கள். கல்லினால் எவ்வளவு பெரிய, பெரிய சித்திரங்களை
அமைக்கிறார்கள். எப்படி குகையில் பெரிய பெரிய பாண்டவர்களைக்
காண்பித்துள்ளார்கள். ஆனால் ஒன்றும் அறியாமல் உள்ளார்கள். இது
கல்வி யாகும். தொழில் மற்றும் படிப்பு தனித்தனி யாகும். பாபா
கற்பிக்கவும் செய்கிறார். மேலும் தொழிலும் கற்பிக்கிறார்.
போர்டில் கூட முதலில் தந்தையின் மகிமை இருக்க வேண்டும். தந்தை
யின் முழு மகிமையை எழுத வேண்டும். இந்த விஷயங்கள்
குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் கூட வரிசைக் கிரமமான
முயற்சிக்கேற்ப வருகின்றன. எனவே மகாரதி, குதிரைப்படை என்று
கூறப்படு கிறது. ஆயுதங்கள் பற்றிய எந்த விஷயமும் கிடையாது.
தந்தை புத்தியின் பூட்டை திறந்து விடுகிறார். இந்த காட்ரெஜ்
பூட்டை யாருமே திறக்க முடியாது. தந்தையிடம் சந்திக்க
வரும்பொழுது இதற்கு முன்பு எப்பொழுது சந்தித்துள்ளீர்கள் என்று
பாபா குழந்தைகளிடம் கேட்கிறார். இந்த இடத்தில் இந்த நாளன்று
எப்பொழுது சந்தித்துள்ளீர்கள். பின் குழந்தைகள் ஆம் பாபா 5
ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் சந்தித்துள்ளோம் என்று
கூறுகிறார்கள். இப்பொழுது இந்த விஷயங்களை இது போல வேறு யாரும்
கேட்க முடியாது. எவ்வளவு ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டிய
விஷயங்கள் ஆகும். எவ்வளவு ஞானத்தின் யுக்திகளை பாபா புரிய
வைக்கிறார். ஆனால் தாரணை வரிசைக் கிரமமாக ஆகிறது. சிவபாபாவின்
மகிமை தனி! பிரம்மா விஷ்ணு சங்கரனின் மகிமை தனி! ஒவ்வொருவருடைய
பார்ட்டும் தனித்தனியாகும். ஒருவரைப் போல மற்றவரது இருக்காது.
இது அனாதி நாடகம் ஆகும். அதுவே மீண்டும் திரும்ப நடைபெறும்.
நாம் எப்படி மூலவதனத்திற்குச் செல்கிறோம் பிறகு நமது பாகத்தை
நடிக்க வருகிறோம் என்பது உங்களுடைய புத்தியில் பதிந்துள்ளது.
செல்லும்பொழுது சூட்சும வதனம் வழியாக செல்கிறீர்கள்.
வரும்பொழுது சூட்சும வதனம் இருக்காது. சூட்சும வதனத் தினுடைய
சாட்சாத்காரம் ஒருபொழுதும் யாருக்கும் ஆவதே இல்லை.
சூட்சுமவதனத்தின் சாட்சாத்காரம் செய்வதற்காக யாரும் தவம் செய்வ
தில்லை. ஏனெனில் அது பற்றி யாருக்குமே தெரியாது.
சூட்சுமவதனத்தில் பக்தர் யாராவது இருப்பாரா என்ன? சூட்சும
வதனத்தை இப்பொழுது தான் படைக்கிறார். சூட்சும வதனம் வழியாகச்
சென்ற பிறகு புது உலகத்தில் வருவீர்கள். இச்சமயம் நீங்கள் அங்கு
போவதும் வருவதுமாக இருக்கிறீர்கள். உங்களுக்கு நிச்சயதார்த்தம்
ஏற்பட்டுள்ளது. இது பிறந்த வீடு ஆகும். விஷ்ணுவைப் பிதா என்று
கூறமாட்டார்கள். அது புகுந்த வீடு ஆகும். ஒரு கன்னிகை புகுந்த
வீடு செல்லும் பொழுது பழைய ஆடைகள் எல்லாவற்றையும் விட்டு
விட்டுச் செல்கிறார். நீங்கள் பழைய உலகத்தையே விட்டு
விடுகிறீர்கள். உங்களுடைய மற்றும் அவர் களுடைய வன வாசத்தில்
எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது. நீங்கள் கூட மிகவும்
பற்றற்றவராக இருக்க வேண்டும். தேக அபிமானத்தைத் துண்டிக்க
வேண்டும். உயர்ந்த தரமான சேலை அணிந்தீர்கள் என்றால் உடனே தேக
அபிமானம் வந்துவிடும். நான் ஆத்மா என்பது மறந்துவிடும்.
இச்சமயம் நீங்கள் இருப்பதே வனவாசத்தில். வனவாசம் மற்றும்
வானப்பிரஸ்தம் - விஷயம் ஒன்றே ஆகும். சரீரத்தையே விட வேண்டி
இருக்கு ம்பொழுது சேலையை விட மாட்டீர்களா என்ன? குறைந்த தரமான
சேலை கிடைக்கும் பொழுது இதயம் (மனம்) சுருங்கிவிடுகிறது. இதிலோ
மகிழ்ச்சி அடைய வேண்டும் - குறைந்த தரமான ஆடை கிடைத்தது
நல்லதாகிவிட்டது என்று. நல்ல பொருட்களைப் பாதுகாக்க
வேண்டியிருக்கும். இந்த அணிவது, சாப்பிடுவது போன்ற சிறு சிறு
விஷயங்கள் கூட உயர்ந்த குறிக்கோளை அடைவதில் தடையை
ஏற்படுத்திவிடுகின்றன. குறிக் கோள் மிகவும் உயர்ந்தது. கதையில்
கூட கூறுகிறார்கள் அல்லவா - இந்த கைத்தடியைக் கூட விட்டு விடு
என்று கணவனுக்குக் கூறினாராம். இந்த பழைய ஆடை, பழைய உலகம்
எல்லாமே முடியப் போகிறது என்று தந்தை கூறுகிறார். எனவே இந்த
முழு உலகத்திலிருந்து புத்தி யோகத்தை துண்டிக்க வேண்டும்.
இதற்கு எல்லையில்லாத சந்நியாசம் என்று கூறப்படுகிறது.
சந்நியாசிகளோ எல்லைக்குட்பட்ட சந்நியாசம் செய்துள்ளார்கள்.
இப்பொழுதோ அவர்கள் உள்ளே வந்துவிட்டுள்ளார்கள். இதற்கு முன்பு
அவர்களிடம் மிகுந்த சக்தி இருந்தது. இறங்குபவர்களின் மகிமை
என்னவாக இருக்க முடியும்? புதுப்புது ஆத்மாக்கள் கூட கடைசி வரை
பாகத்தை ஏற்று நடிக்க வந்து கொண்டே இருப்பார்கள். அவர்களிடம்
என்ன வலிமை இருக்க முடியும். நீங்களோ முழுமையாக 84 பிறவிகள்
எடுக்கிறீர்கள். இவை அனைத்தையும் புரிந்து கொள்வதற்கு எவ்வளவு
நல்ல புத்தி வேண்டும். சேவையில் ஆர்வமுள்ள குழந்தைகள் சேவையில்
துள்ளிக் கொண்டே (அதிக மகிழ்ச்சியில்) இருப்பார்கள். எப்படி
பாபாவிற்கு துடிப்பு இருக்கிறதோ அதே போல ஞானக் கடலின்
குழந்தைகள் சொற்பொழிவு நிகழ்த்த வேண்டும். இதில் பயப்படக்
கூடாது. நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக்
கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய
பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. புத்தி மூலமாக எல்லையில்லாத சந்நியாசம் செய்ய வேண்டும்.
இப்பொழுது வீடு திரும்புவதற்கான நேரம் ஆகும். எனவே பழைய உலகம்
மற்றும் பழைய சரீரத்தின் மீது பற்று இல்லாதவராக இருக்க வேண்டும்.
2. நாடகத்தின் ஒவ்வொரு காட்சியையும் பார்த்தபடியே எப்பொழுதும்
மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்.
வரதானம்:
பாப்தாதாவை தனது துணைவனாக நினைத்து இரட்டை
தூண்டுதலுடன் காரியம் செய்யக் கூடிய சகஜயோகி ஆகுக.
எந்த காரியம் செய்தாலும் பாப்தாதாவை தனது துணைவனாக ஆக்கிக்
கொண்டால் இரட்டை தூண்டுதலுடன் காரியம் நடைபெறும். மேலும்
நினைவும் எளிதாக இருக்கும். ஏனெனில் யார் சதா கூடவே
இருக்கிறார்களோ, அவரது நினைவு தானாகவே இருந்து கொண்டிருக்கும்.
ஆக இப்படிப் பட்ட துணைவன் இருப்பதனால் அல்லது புத்தியின் மூலம்
நிரந்தரமாக சத்தியத்தித்துடன் தொடர்பு வைப்பதனால் சகஜயோகி
ஆகிவிடுவீர்கள். மேலும் சக்திசா-யான தொடர்பின் காரணத்தினால்
ஒவ்வொரு காரியத்திலும் உங்களுக்கு இரட்டை தூண்டுதல் கிடைக்கும்,
அதன் மூலம் ஒவ்வொரு காரியத்திலும் வெற்றியின் அனுபவம் ஏற்படும்.
சுலோகன்:
மாயாவின் பிரபாவம் துளியளவும் பிரவேசிக்க விடாமல்
இருப்பவர்கள் தான் மகாரதிகள் ஆவர்.
அவ்யக்த இஷாரா - மகான் ஆவதற்காக இனிமை மற்றும்
பணிவு என்ற குணங்களை தாரணை செய்யுங்கள்
இனிமை தான் பிராமண வாழ்க்கையின் மகான் நிலையாகும். எங்கு இனிமை
இருக்கிறதோ, அங்கு தூய்மை இருக்கும். தூய்மையின்றி இனிமை வர
முடியாது. எந்த அளவிற்கு புத்தியில் போதை இருக்கிறதோ, அந்த
அளவிற்கு தான் செய-ல் பணிவு மற்றும் வார்த்தைகளில் இனிமை
இருக்கும். இவ்வாறு போதையில் இருப்பதன் மூலம் ஒருபோதும் நஷ்டம்
ஏற்படாது. வெற்றி அடையக் கூடியவர் - சுயம் பணிவானவர்,
பொறுப்பானவர், ஒவ்வொரு விசயத்திலும் தன்னைத் தான் குணத்தை
கிரஹிக்கக் கூடியவர் மற்றும் இனிமை யானவராக ஆக்கிக் கொள்வார்.