10-05-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! ஞானத்தின் விசயங்களை நினைவில் வைத்தால் மகிழ்ச்சி ஏற்படும், நீங்கள் இப்பொழுது சொர்க்கத்தின் வாசலில் நிற்கின்றீர்கள், பாபா முக்தி, ஜீவன் முக்திக்கான வழி காட்டுகின்றார்.

கேள்வி:
தனது ரெஜிஸ்டரை (பதிவேட்டை) நன்றாக வைத்துக் கொள்வதற்காக எப்படிப்பட்ட கவனத்தை அவசியம் வைக்க வேண்டும்?

பதில்:
மனம், சொல், கர்மத்தின் மூலம் யாருக்காவது துக்கம் கொடுத்தேனா? என்பதில் கவனம் வைக்க வேண்டும். தனது சுபாவம் மிகவும் நன்றாகவும், இனிமையாகவும் இருக்க வேண்டும். மாயா காது, மூக்கைப் பிடித்து வசமாக்கி பிறருக்கு துக்கம் ஏற்படுவது போல எந்தக் காரியத்தை யும் செய்ய வைக்கக் கூடாது. ஒருவேளை துக்கம் கொடுத்தால் மிகவும் வருத்தப்பட வேண்டி யிருக்கும், ரெஜிஸ்டர் கெட்டுப் போய்விடும்.

பாடல்:
பார்வையில்லாதவர்களுக்கு வழி காட்டுங்கள் பிரபுவே!

ஓம் சாந்தி.
தந்தை வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். சகஜமான பாதையைப் புரிய வைத்தாலும் குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். தந்தை நமக்கு கற்பிக்கின்றார், சாந்திதாமத் திற்கான வழி காட்டுகின்றார், என இங்கு அமர்ந்திருக்கும் போது புரிந்துள்ளனர், மிகவும் சகஜமாக இருக்கிறது. இரவு பகலாக எவ்வளவு முடியுமோ நினைவில் இருங்கள் என தந்தை கூறுகின்றார், பக்தி மார்க்கத்திற்கான யாத்திரை கால்களின் மூலம் செய்யப்படுவதால், மிகவும் களைப்படை கின்றனர். இங்கு நீங்கள் அமர்ந்து கொண்டே நினைவு யாத்திரையில் இருக்கின்றீர்கள். தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டுமெனவும் தந்தை புரிய வைக்கின்றார். அசுர அவகுணங் களை அழித்து விடுங்கள். எந்த விதமான அசுர காரியமும் செய்யக் கூடாது, இதன் மூலம் பாவ கர்மம் ஏற்படும். குழந்தைகள் உங்களை சதா சுகமாக்குவதற்கு தந்தை வந்திருக்கிறார். இராஜா வின் குழந்தைக்கு தனது தந்தை மற்றும் இராஜ்யத்தைப் பார்த்து மகிழ்ச்சி ஏற்படுமல்லவா! இராஜ்யம் இருந்தாலும் சரீரத்திற்கு நோய் ஏற்படுகிறதல்லவா! சிவபாபா வந்திருக்கிறார், அவரே நமக்கு கற்பிக்கின்றார் என்ற நம்பிக்கை குழந்தைகள் உங்களுக்கு இருக்கின்றது. மீண்டும் நாம் சொர்க்கத்திற்குச் சென்று இராஜ்யம் செய்வோம், அங்கு எந்தவிதமான துக்கமும் ஏற்படாது. உங்களுடைய புத்தியில் படைப்பவர் மற்றும் படைப்பின் மூன்று கால ஞானம் இருக்கிறது. இந்த ஞானம் வேறு எந்த மனிதர்களின் புத்தியிலும் இல்லை. இதற்கு முன் நம்மிடத்தில் இந்த ஞானம் இல்லை எனவும் இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள், தந்தையை நாம் அறியாமல் இருந்தோம். மனிதர்கள் பக்தியை மிகவும் உயர்வாகப் புரிந்துள்ளனர், பல விதமான பக்தி செய்கின்றனர், அவை அனைத்தும் ஸ்தூல விசயங்களாகும். சூட்சுமான விசயம் ஏதுமில்லை. இப்போது அமர்நாத் யாத்திரைக்கு ஸ்தூலமாகச் செல்கின்றனர், அங்கும் லிங்கம் தான் இருக்கின்றது. யாரிடத்தில் செல்கிறோம் என்பதும் மனிதர்களுக்குத் தெரியவில்லை. இப்போது நீங்கள் குழந்தைகள் வேறெங்கும் அலைந்து சிரமப்படமாட்டீர்கள். புதிய உலகிற்காக நாம் படிக்கின்றோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அங்கே, சத்யுகத்தில் இந்த வேதம், சாஸ்திரம், பக்தி போன்றவை இருக்காது, அங்கு சுகம் மட்டுமே இருக்கும். எங்கே பக்தி இருக்கிறதோ அங்கு துக்கம் இருக்கும். இந்த காலச் சக்கரத்தின் சித்திரம் மிகவும் நன்றாக இருக்கிறது. சொர்க்கத்தின் வாசல் இதில் தெளிவாக இருக்கிறது, இந்த விசயம் புத்தியில் இருக்க வேண்டும். இப்போது நாம் சொர்க்கத்தின் வாசலில் அமர்ந்திருக்கிறோம், மிகவும் மகிழ்ச்சி இருக்க வேண்டும். ஞானத்தின் விசயங்களை நினைவில் வைத்து குழந்தைகள் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருக்க முடியும். இப்பொழுது நாம் சொர்க்கத்தின் வாசலில் சென்று கொண்டிருக்கிறோம், அங்கே மிகவும் குறைவான மனிதர்கள் இருப்பார்கள். இங்கு நிறைய மனிதர்கள் உள்ளனர். எவ்வளவு அலைந்து முயற்சி செய்கின்றனர். தானம், புண்ணியம் செய்வது, சாதுக்களின் பின்னால் அலைவது, இவ்வாறு செய்தும் கூட, ஹே பிரபுவே! கண்கள் இழந்த எங்களுக்கு வழி காட்டுங்கள், என அழைக்கின்றனர். முக்தி, ஜீவன் முக்திக்கான பாதையை விரும்புகின்றனர். இது பழைய துக்கமான உலகம், என்பதையும் நீங்கள் புரிந்துள்ளீர்கள். மனிதர்களுக்கு இந்த விசயம் தெரியாது. கலியுகத்தின் ஆயுட்காலம் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் என சொன்னதால் அப்பாவி மனிதர்கள் இருட்டில் வந்து விட்டனர். நடை முறையில் நமது பாபா நமக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார் எனப் புரிந்து கொள்வதில் உங்களில் கூட வரிசைப்படி தான் உள்ளனர். வக்கீல், இன்ஜீனியர் போன்றோர் அத்துறையைச் சேர்ந்தவர் களிடம் புத்தியை வைத்திருப்பார்கள். படிப்பவர்கள் டீச்சரை நினைவு செய்வார்கள். வக்கீல் சம்மந்தப்பட்ட கல்வியின் மூலம் மனிதர்கள் வக்கீல் ஆகின்றனர். ஆனால் இது இராஜயோக மாகும். நமது புத்தியின் தொடர்பு பரமபிதா பரமாத்மாவிடம் இருக்கிறது. இவ்விசயத்தில் மகிழ்ச்சி யானது முற்றிலும் அதிகரிக்க வேண்டும். மிகவும் இனிமையாக வேண்டும். சுபாவம் மிகவும் நன்றாக இருக்க வேண்டும். உங்களால் யாருக்கும் துக்கம் ஏற்படக்கூடாது. நம்மால் யாருக்கும் துக்கம் ஏற்படக்கூடாது என விரும்பினாலும் மாயா காது, மூக்கைப்பிடித்து வசமாக்கி தவறு செய்ய வைத்து விடுகிறது. பிறகு நாம் தேவையில்லாமல் துக்கம் கொடுத்து விட்டோம் என உள்ளுக்குள் வருந்துகின்றனர். ஆனாலும், ரெஜிஸ்டர் கெட்டுப்போய் விடுகிறதல்லவா! யாருக்கும் மனம், வார்த்தை, கர்மத்தால் துக்கம் ஏற்படக்கூடாது என அவ்வாறு முயற்சி செய்ய வேண்டும். தந்தை நம்மை அப்படிப்பட்ட தேவதையாக ஆக்குவதற்கு வந்திருக்கிறார். இவர் எப்பொழுதாவது யாருக்காவது துக்கம் தருகின்றாரா? லௌகீக டீச்சர் கல்வி தருவார், துக்கம் தருவதில்லை அல்லவா! ஆனால், குழந்தைகள் சரியாகப் படிக்கவில்லையென்றால் ஏதாவது தண்டனை கொடுப் பார்கள். இன்றைய காலங்களில் அடிப்பதற்கான விதிமுறை களையும் நீக்கி விட்டனர். நீங்களும் ஆன்மீக டீச்சர் ஆவீர்கள்,, உங்களுடைய வேலை படிக்க வைப்பது மற்றும் கூடவே நன்னடத்தை களையும் கற்றுத் தருவதாகும். நன்கு படித்து, எழுதி வந்தால் உயர்ந்த பதவி அடைவீர்கள். படிக்கவில்லையெனில் தேர்ச்சி பெற மாட்டீர்கள். இந்த தந்தையும் தினமும் வந்து கற்பிக்கின்றார், நல்ல நன்னடத்தையும் கற்றுத்தருகின்றார். கற்றுத் தருவதற்காகவே கண்காட்சி போன்ற ஏற்பாடு களும் செய்யப் பட்டிருக்கிறது. அனைவரும் கண்காட்சி மற்றும் புரொஜெக்டர் போன்றவற்றை கேட்கின்றனர். புரொஜெக்டரும் ஆயிரக்கணக்கில் தேவைப்படும். ஒவ்வொரு விசயத்தையும் தந்தை மிகவும் சுலபமாகக் கூறுகின்றார். அமர்நாத்தில் சேவை செய்வதும் சுலபமானதாகும். சித்திரங்கள் மூலமாகவும் நீங்கள் புரிய வைக்க முடியும். ஞானம் மற்றும் பக்தி என்பது என்ன? இந்தப்பக்கத்தில் ஞானமும், அந்தப் பக்கத்தில் பக்தியும் இருக்கிறது. ஞானத்தின் மூலம் சொர்க்கமும், பக்தியின் மூலம் நரகமும் ஏற்படுகிறது என்பது தெளிவாக இருக்கிறது. குழந்தைகள் இப்பொழுது படிப்பது மிகவும் சகஜமானதாகும், நன்றாகப் பிறருக்கு படிப்பிக்கவும் முடியும், ஆனால் நினைவு யாத்திரை எவ்வளவு செய்கின்றீர்கள்? இவை அனைத்தும் புத்தி சம்மந்தமான விசயங் களாகும். நாம் தந்தையை நினைவு செய்ய வேண்டும், இதில் தான் மாயா தொல்லை செய்கின்றது. ஒரேயடியாக புத்தியோகத்தைத் துண்டித்து விடுகிறது. நீங்கள் அனைவரும் யோகத்தில் மிகவும் பலஹீனமாக இருக்கின்றீர்கள். மிகவும் நல்ல மகாரதிகள் கூட பலஹீனமாகத்தான் இருக் கின்றனர். இன்னாரிடம் ஞானம் நன்றாக உள்ளது எனவே இவர்கள் மகாரதிகள் என நினைக் கின்றனர், ஆனாலும் அவர்களை குதிரைப்படை, காலாட்படை என பாபா கூறுகின்றார். யார் நினைவில் நன்றாக இருக்கின்றனரோ அவர்கள்தான் மகாரதிகள்; எழுந்தாலும், அமர்ந்தாலும் நினைவில் இருப்பதனால் பாவங்கள் அழியும், பாவனமாவீர்கள். இல்லையெனில் தண்டனை அடைய வேண்டியிருக்கும், தாழ்ந்த பதவி ஏற்படும். எனவே சார்ட் எழுதினால் உங்களுக்கே நன்கு தெரியும். நானும் கூட முயற்சி செய்து வருகிறேன் என பாபாவும் கூறுகின்றார். அடிக்கடி புத்தி வேறு பக்கம் சென்று விடுகிறது. பாபாவுக்கு நிறைய கவலைகள் இருக்கிறதல்லவா! நீங்கள் மிகவும் வேகமாக முன்னேறிச் செல்ல முடியும். மேலும் தனது நடத்தை களையும் திருத்திக் கொள்ள வேண்டும். தூய்மையாக இருந்து பிறகு விகாரத்தில் விழுந்து விட்டால் வருமானத்தில் நஷ்டம் ஏற்படும். யார் மீதாவது கோபப்பட்டாலோ, உப்புத் தண்ணீர் போன்று ஆனாலோ, அசுரராக ஆகி விடுவார்கள். பல விதமாக மாயா வருகின்றது. இன்னும் யாரும் சம்பூர்ணமாகவில்லை. பாபா முயற்சி செய்ய வைக்கின்றார். குமாரிகளுக்கு மிகவும் சகஜமாக இருக்கும், இதில் தனது மன உறுதி வேண்டும், மனதுக்குள் சத்தியமாக இருக்க வேண்டும். ஒருவேளை வேறு யாரிடத் திலாவது மனம் வசமானால் பிறகு முயற்சி செய்ய முடியாது. குமாரிகளும், தாய்மார்களும் பாரதத்தை சொர்க்கமாக்கும் சேவையில் ஈடுபட வேண்டும், இதில் தான் உழைப்பு இருக்கிறது. உழைப்பின்றி எதுவும் கிடைக்காது. உங்களுக்கு 21 பிறவிகளுக்கு இராஜ்யம் கிடைக்கிறது, எனில் எவ்வளவு உழைப்பு செய்ய வேண்டும்! மிகவும் பக்காவாக ஆகும் வரை, அந்தக் கல்வியையும் பாபா கற்கச் செய்கின்றார். இரண்டு பக்கமும் உறுதி இல்லாமல் ஆகி விடக்கூடாது. பிறருடைய பெயர், தோற்றத்தில் மாட்டிக் கொண்டு இறந்து விட்டால் எல்லாம் முடிந்து போய்விடும்.

அதிர்ஷ்டசாலி குழந்தைகள் மட்டுமே சரீர உணர்வை மறந்து தன்னை அசரீரி எனப் புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்வதற்கான முயற்சி செய்ய முடியும். குழந்தைகளே, நீங்கள் சரீர உணர்வை விட்டு விடுங்கள் என தினந்தோறும் தந்தை புரிய வைக்கின்றார். நாம் அசரீரி ஆத்மாக்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும், இந்த சரீரத்தை இங்கேயே விட வேண்டும். எனவே, நிரந்தரமாக தந்தையின் நினைவில் இருந்து கர்மாதீத் நிலை அடைந்தால்தான் அவ்வாறு சரீரத்தை விடுவார்கள். இது புத்திக்கான விசயமாகும், ஆனால் அதிர்ஷ்டம் இல்லையெனில் முயற்சி எப்படி செய்ய முடியும்? நாம் அசரீரியாகத் தான் வந்தோம், பிறகு சுகமாக கர்மத்தின் சம்மந்தத்தில் வந்து பிறகு இராவண இராஜ்யத்தில் விகாரமான பந்தனத்தில் மாட்டிக் கொண்டோம் என்ற விசயம் புத்தியில் இருக்க வேண்டும். இப்பொழுது மீண்டும் அசரீரியாகிச் செல்ல வேண்டும் என தந்தை கூறுகின்றார். தன்னை ஆத்மா எனப் புரிந்து கொண்டு என்னை நினைவு செய்யுங்கள், ஆத்மாதான் பதீதமாகி விட்டது. ஹே! பதீத பாவனரே வாருங்கள் என ஆத்மா கூறுகின்றது. இப்பொழுது நீங்கள் பதீத நிலையிலிருந்து பாவனமாவதற்கான யுக்தியும் சொல்லித்தரப்படுகிறது. ஆத்மா மட்டுமே அழியாததாகும். நீங்கள் ஆத்மாக்கள், இங்கு சரீரத்தில் வந்து தனது பங்கை நடிக்கின்றீர்கள். யாருக்கு கல்பத்திற்கு முன்பாக புரிய வைக்கப்பட்டதோ அவர்களே மீண்டும் இங்கு வருவார்கள் என்பதையும் தந்தை புரிய வைக்கின்றார். கலியுக சம்மந்தங்களை மறந்து விடுங்கள் என இப்பொழுது தந்தை கூறுகின்றார். இப்பொழுது வீடு திரும்ப வேண்டும், இந்த உலகமே முடியப்போகின்றது. இந்த உலகில் எந்த சாரமும் இல்லை, ஆகவே அலைந்து சிரமப்படுகின்றனர். பகவானை அடைய பக்தி செய்கின்றனர், பக்தி செய்வது மிகவும் நல்லது. அதிகமாக பக்தி செய்தால் பகவான் கிடைப்பார் மற்றும் சத்கதிக்கு அழைத்துச் செல்வார் என நினைத்துள்ளனர். இப்பொழுது உங்களுடைய பக்தி முடிகின்றது. ஹே இராமா, ஹே பகவானே! என்ற பக்திக்கான வார்த்தைகள் உங்களுடைய வாயிலிருந்து வரக் கூடாது, இந்த விசயத்தை நிறுத்த வேண்டும்.

என்னை நினைவு செய்யுங்கள் என்று மட்டுமே தந்தை கூறுகின்றார். இந்த உலகமே தமோபிரதான மாக இருக்கிறது. சத்யுகம் சதோபிரதானமாக இருக்கும். சத்யுகம் ஏறும் கலையில் இருந்து பிறகு இறங்கும் கலையில் வரும். திரேதாயுகத்தைக் கூட நடைமுறையில் சொர்க்கம் எனக் கூறுவதில்லை. சத்யுகம் மட்டுமே சொர்க்கம் எனக் கூறப்படுகிறது. குழந்தைகள் உங்களுடைய புத்தியில் மூன்று கால ஞானம் இருக்கிறது. ஆதி என்றால் ஆரம்ப நிலை, மத்தியம் என்றால் இடைப்பட்ட நிலை, பிறகு கடைசி நிலையாகும். மத்தியில் இராவண இராஜ்யம் ஆரம்பமாகின்றது. பாரதத்தில் தான் தந்தை வருகின்றார். பாரதமே பதீதமாகவும், பாவனமாகவும் ஆகின்றது. பாரதவாசிகள் தான் 84 பிறவிகள் எடுக்கின்றனர். பிறகு வரிசைப்படியாக மற்ற தர்மத்தினர் வரு கின்றனர். கல்ப மரம் வளர்ச்சியடையும், அந்தந்த நேரப்படி வருவார்கள். இந்த விசயங்கள் வேறு யாருடைய புத்தியிலும் இருக்காது. உங்களில் கூட அனைவரும் தாரணை செய்ய முடியவில்லை. இந்த 84 பிறவிச் சக்கரம் புத்தியில் இருந்தாலே மகிழ்ச்சி இருக்கும். நம்மை அழைத்துச் செல்ல இப்பொழுது பாபா வந்திருக்கிறார். உண்மையான அன்பான நாயகன் வந்திருக்கிறார், யாரை நாம் பக்தி மார்க்கத்தில் மிகவும் நினைவு செய்து வந்தோமோ, அவரே நம்மை அழைத்துச் செல்ல வந்திருக்கிறார். அமைதி என்றால் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. ஆத்மாவின் சொரூபமே அமைதியாகும். இந்த சரீரம் ஆத்மாவிற்குக் கிடைத்த பிறகு கர்மம் செய்கின்றது. அமைதிக் கடலாக தந்தை இருக்கின்றார், அவர் அழைத்துச் செல்கின்றார், அப்பொழுது தான் அனைவருக்கும் அமைதி கிடைக்கின்றது. சத்யுகத்தில் உங்களுக்கு அமைதியும், சுகமும் இருக்கும். மற்ற அனைத்து ஆத்மாக்களும் சாந்திதாமம் சென்று விடும். தந்தை மட்டுமே அமைதிக்கடல் எனக் கூறப்படுகிறார் தேக அபிமானத்தில் இருப்பதால் இதைக் கூட குழந்தைகள் மறந்து விடுகின்றனர், ஆத்ம அபிமானியாக ஆகவில்லை.

தந்தை அனைவருக்கும் அமைதியைத் தருகின்றார். சித்திரத்தில் சங்கமயுகத்தைப் பற்றி காட்டுங்கள். இந்த நேரம் அனைவரும் அசாந்தியாக இருக்கின்றனர். சத்யுகத்தில் இவ்வளவு தர்மங்கள் இருப்பதில்லை. மற்றவர்கள் சாந்தியில் சென்று விடுவார்கள். பரந்தாமத்தில் மிகுந்த அளவில் அமைதி கிடைக்கும். உங்களுடைய இராஜ்யத்தில் அமைதியும், சுகமும் இருக்கும். உங்களுக்கு சத்யுகத்தில் தூய்மை, சுகம், அமைதி இவையனைத்தும் இருக்கும். இனிமையான வீடு தான் முக்திதாமம் எனக் கூறப்படுகிறது. அங்கே பதீதமான, துக்கமான ஆத்மாக்கள் இருக்க மாட்டார்கள். துக்கம், சுகத்திற்கான விசயம் அங்கு இல்லை, ஆக அமைதியின் அர்த்தம் புரிய வில்லை. இராணியின் கழுத்து மாலை பற்றிய உதாரணமும் கொடுக்கப்படுகிறது. இப்பொழுது அமைதி, சுகத்தை அடையுங் கள் என தந்தை கூறுகின்றார். ஆயுஸ்வான் பவ... அங்கே விதிமுறைப்படி குழந்தைகள் கிடைப்பார்கள், குழந்தைகள் கிடைப்பதற்கு எந்த விதமான முயற்சி யும் செய்ய வேண்டியதில்லை. சரீரம் விடும் நேரத்தில் சாத்சாட்காரம் ஏற்படும், மேலும் மகிழ்ச்சி யுடன் சரீரத்தை விடுவார்கள். சரீரத்தை விட்டு விட்டு நான் இவ்வாறு ஆவேன், இப்பொழுது படிக்கின்றேன் என்ற மகிழ்ச்சி (பிரம்மா) பாபாவுக்கு இருக்கிறதல்லவா! நாம் சத்யுகத்திற்குச் செல்வோம் என உங்களுக்கும் தெரியும். சங்கமயுகத்தில்தான் உங்களுடைய புத்தியில் இந்த விசயம் இருக்கிறது, ஆகவே எவ்வளவு மகிழ்ச்சி இருக்க வேண்டும்! எந்தளவு உயர்ந்த படிப்போ அவ்வளவு மகிழ்ச்சி இருக்க வேண்டும். நமக்கு பகவான் கற்பிக்கின்றார். இலட்சியம், குறிக்கோள் எதிரில் இருக்கிறது, ஆனாலும் நாளடைவில் கீழே விழுகின்றனர்.

எப்பொழுது குமாரிகள் சேவைக்களத்திற்கு வருகின்றார்களோ அப்பொழுது உங்களுடைய சேவை வளர்ச்சியடையும். தங்களுக்குள் ஒருவருக்கொருவர் உப்பு தண்ணீர் போன்று ஆகாதீர்கள். அங்கு சிங்கமும், ஆடும் ஒன்று சேர்ந்து தண்ணீர் குடிக்கும், அங்கே ஒவ்வொரு பொருளையும் பார்த்தாலே உள்ளம் மகிழ்ச்சி யடையும், ஆக நாம் அப்படிப்பட்ட உலகிற்குச் செல்கிறோம் என்பதும் உங்களுக்குத் தெரியும். பெயரே சொர்க்கமாகும். இப்பொழுது நாங்கள் அங்கே செல்வதற்குத் தயாராகின்றோம், ஆகவே, அவசியம் தூய்மையாக வேண்டும் என குமாரிகள் லௌகீக தாய், தந்தை யிடம் கூற வேண்டும். காமம் மகா (பெரிய) எதிரி என தந்தை கூறுகின்றார். இப்பொழுது நான் யோகியாக ஆகின்றேன், எனவே பதீத நிலை அடைய மாட்டேன் என தைரியமாகச் சொல்ல வேண்டும். அப்படிபட்ட குமாரிகள் உருவாகி விட்டால் அதன் பிறகு சேவை எவ்வளவு சீக்கிரமாக நடக்கும் என நீங்களே பாருங்கள்! ஆனால் நஷ்டமோஹா ஆக வேண்டும். ஒருமுறை பழைய உலகத்தில் இறந்து விட்டால் பிறகு ஏன் நினைவு வர வேண்டும்? ஆனாலும் நிறைய பேருக்கு வீடு, குழந்தைகள் நினைவு வருகின்றது, பிறகு தந்தையிடம் புத்தியின் தொடர்பு எவ்வாறு இணைய முடியும்? நாம் பாபாவுடையவராகி விட்டோம் என்பது மட்டுமே புத்தியில் இருக்க வேண்டும். இந்தப் பழைய உலகம் முடிந்தே ஆகும். என்னை நினைவு செய்யுங்கள் என தந்தை கூறுகின்றார். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும், ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தனது உயர்ந்த அதிர்ஷ்டத்தை உருவாக்குவதற்காக, எவ்வளவு முடியுமோ அவ்வளவு அசரீரி ஆவதற்கான பயிற்சி செய்ய வேண்டும். சரீரத்தின் உணர்வு முற்றிலும் நீங்க வேண்டும், யாருடைய பெயர், தோற்றமும் நினைவில் வரக் கூடாது, இதற்காக உழைக்க வேண்டும்.

2. தனது நடத்தையைப் பற்றிய சார்ட் வைக்க வேண்டும், ஒரு பொழுதும் அசுர நடத்தை இருக்கக் கூடாது. உள்ளத்தின் சத்தியத்தன்மை மூலம் நஷ்டமோஹாவாகி பாரதத்தை சொர்க்கமாக்கும் சேவையில் ஈடுபட வேண்டும்.

வரதானம்:
மாயாவின் இராயல் ரூபத்தின் பந்தனத்திலிருந்து விடுப்பட்டு, உலகத்தை வென்ற, பூமியை வென்றவர் ஆகுக.

என்னுடைய முயற்சி, என்னுடைய கண்டுபிடிப்பு, என்னுடைய சேவை, என்னுடைய தோன்றுவது, என்னுடைய குணங்கள் நன்றாக இருக்கிறது. என்னுடைய நிர்ணய சக்தி (பகுத்தறியும்) சக்தி நன்றாக இருக்கிறது, இந்த என்னுடைய என்ற தன்மை தான் இராயலான மாயாவின் ரூபம் ஆகும். மாயா அப்படிபட்ட தந்திரம் செய்துவிடுகிறது, அது உன்னுடையதையும் என்னுடையதாக மாற்றி விடுகிறது. ஆகையால் இப்பொழுது அப்படிப்பட்ட பலவிதமான பந்தனங்களிலிருந்து விடுப்பட்ட வராகி, ஒரு பாபாவின் தொடர்பில் வந்துவிட்டால் மாயாஜீத் ஆகிவிடலாம். மாயாஜீத் ஆவது தான் இயற்கையை வென்றவர் ஆவது. உலகத்தை வென்றவர் மற்றும் பூமியை வென்றவர் ஆகிறார்கள். அவர்கள் ஒரு நொடியில் ஆசரீரி ஆகுக என்ற கட்டளையை எளிதாகவும் இயல்பாகவே செயலில் ஈடுபடுத்த முடியும்.

சுலோகன்:
யார் எதிர்மறையானவற்றை நேர்மறையாக மாற்றிவிடுகிறார்களோ, அவர்கள் தான் உலகத்தை மாற்றம் செய்பவர்.

அவ்யக்த இஷாரா: ஆன்மீக இராயல்டி மற்றும் தூய்மையின் பர்ஸ்னாலிட்டி தாரணை செய்யுங்கள்.

உங்களுடைய சுய சொரூபம் தூய்மையாகும். சுய தர்மம் என்றால் ஆத்மாவின் முதன்மையான தாரணை தூய்மையாகும். சுய தேசம் தூய்மையான தேசமாகும். சுய இராஜ்யம் தூய்மையான இராஜ்யம் ஆகும். சுயத்தின் நினைவு சின்னம் மிகவும் தூய்மையான பூஜ்ய நிலையாகும். கர்மேந் திரியங்களின் அநாதி (பரந்தாம நிலை) சுபாவம் சுகம் தரக்கூடிய செயலாகும். இதை மட்டுமே எப்பொழுதும் நினைவில் வைத்தீர்கள் என்றால் கடின உழைப்பு மற்றும் முயற்சியிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். தூய்மையை வரதானத்தின் ரூபத்தில் தாரணை செய்து விடுவீர்கள்.