10.05.26 காலை முரளி
ஓம் சாந்தி 30.01.2010 பாப்தாதா,
மதுபன்
நான்கு பாடங்களிலும் சுயமரியாதையின் அனுபவ சொரூபமாகி
அனுபவத்தின் ஆதிகாரத்தை (அத்தாரிட்டி) செயலில் ஈடுபடுத்துங்கள்
இன்று பிராமண உலகின் படைப்பாளரான பாப்தாதா நாலாபுறமும் உள்ள
தனது பிராமண உலகை பார்த்துக் கொண்டிருக்கின்றார். ஒவ்வொரு
பிராமணரும் முழு உலகிலும் விசேஷ ஆத்மாக்களே! கோடியில் ஒருவரே!
ஏனெனில் சாதாரண உடலில் வந்துள்ள தந்தையை தெரிந்துக் கொண்டனர்.
பாப்தாதாவும் உள்ளத்தில் உறைந்துள்ள குழந்தைகளுக்கு உளமார்ந்த
அன்பினைத் தருகின்றார். ஒவ்வொரு குழந்தையும் தந்தையின் அன்பில்
முழ்கியவராக, உள்ளத்தில் தந்தையை வைத்த வராக அனுபவம்
செய்கின்றனர். தந்தையை பொருத்த மட்டில் ஒவ்வொரு குழந்தையும்
மிகப் பிரியமானவரே, அனைவருக்கும் அன்பானவரே, குழந்தைகளான
நீங்கள் அனைவரும் நாங்கள் யோகி வாழ்க்கை வாழ்பவர்கள் என்று
அனைவருக்கும் சவால் விடுகின்றீர்கள். யோகம் செய்பவர் மட்டுமல்ல,
யோக வாழ்க்கையை வாழ்பவர்கள். வாழ்க்கை என்பது இரண்டு மணி நேரமோ,
நான்கு மணி நேரமோ அல்ல. வாழ்க்கை சதா காலத்திற்குமானது.
நடமாடும் பொழுதும் செயல் புரியும் போதும் யோகி யாக வாழும்
நிரந்தர யோகி. யோகத்தில் அமர்ந்தாலும், எந்த செயல் செய்தாலும்
கர்மயோகி ஆவர். சதா யோகியாவதே வாழ்வின் இலட்சியமாகும். அத்தகைய
யோகியாக இயல் பான யோகியாக தனது வாழ்வை அனுபவம் செய்கின்றீர்களா?
பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் நெற்றியிலும் மின்னுகின்ற
பாக்கியத்தைப் பார்க்கின்றார். என்ன பார்க்கின்றார்? எனது
ஒவ்வொரு குழந்தையும் சுயமரியாதையுடன் சுயராஜ்ய அதிகாரிகளா? ஏன்?
ஏனெனில் சுயமரியாதை உள்ள இடத்தில் தேக உணர்வு வரமுடியாது. ஆதி
முதல் அந்திமம் வரையிலும் இதுவரையிலும் பாப்தாதா ஒவ்வொரு
குழந்தைக்கும் விவிதமான சுயமரியாதை (சுவமான்) கொடுத்துள்ளார்.
இப்போது கூட சுயமரியாதைகளை நினைவு செய்தால் ஒவ்வொரு
சுயமரியாதையின் மாலையை உருட்டினால் அனேக சுயமரியாதையின்
சொரூபமாகி, சுயமரியாதையின் அன்பில் மூழ்கி விடுவீர் கள். ஆனால்
பாப்தாதாவிற்கு இன்று வரையிலும் குழந்தைகளிடம் ஒரு விசயம்
பிடிக்கவில்லை, அது என்ன தெரியுமா? யாரேனும் குழந்தைகள் பாபா
சுயமரியாதையில் நிலை பெற விரும்பு கின்றேன், ஆனால் அவ்வப்போது
நிலை பெறுவது கடினமாகிறது. விரும்புகின்றேன், ஆனால் முயற்சி
அதிகம் தேவைப்படுகின்றது எனும் போது சர்வ சக்திவான் தந்தை
குழந்தைகளின் கடின உழைப்பை பார்க்க முடியவில்லை. ஏனெனில் அன்பு
உள்ள இடத்தில் கடினம் ஏற்படாது. எங்கு கடினமோ அங்கு அன்பு
குறைவென்பதாகும்.
இன்று அமிர்தவேளையில் பாப்தாதா உள்நாடு, வெளிநாடு எங்குமுள்ள
பிராமண குழந்தைகளைப் பார்க்க வலம் வந்தார். அப்போது என்ன
பார்த்தார்? சில குழந்தைகள் சுயமரியாதையில் அமர்ந் திருந்தனர்.
நான் பாப்தாதாவின் மனம் எனும் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும்
(தில் தக்த் நசீன்) ஆத்மா என்று யோசிக்கின்றனர். சிந்தனையும்
செய்கின்றனர். சுயமரியாதையில் நிலை பெற முயற்சியும்
செய்கின்றனர். ஆனால் குறை தெரிந்தது? சிந்திக்கின்றனர், ஆனால்
சொரூபமாகி அனுபவ மூர்த்தியாகி அனுபவத்தின் அத்தாரிட்டி ஆவதில்
குறைவு தென்படுகின்றது. ஏனெனில் அத்தாரிட்டி அனேகம் உள்ளது,
ஆனால் அனைத்திலும் உயர்ந்த அனுபவமெனும் அத்தாரிட்டி இந்த சுய
மரியாதையின் அனுபவத்தினை சர்வ சக்திவான் (ஆல் மைட்டி
அத்தாரிட்டி) இறைவனே கொடுத்தது. முயற்சி செய் கின்றார்கள்.
ஆனால் அனுபவ சொரூபம் ஆவதில்லை. பாப்தாதா பார்க்கின்றார் -
அமருகின்றனர், சிந்திக்கின்றனர் ஆனால் அனுபவ சொரூபம் ஒருசிலரே
ஆகின்றனர். அனுபவத்தின் எந்தவிதமான தேக அபிமானமும் சிறிதளவு தன்
வசம் ஈர்க்க முடியாது. இவ்வாறு அனுபவம் சொரூபமாவது, செயல்
செய்யும் போது கர்மயோகியாக அனுபவத்தில் மூழ்கி விடுதல். இதுவே
இப்போது அவசியமானது. சொரூபத்தில் நிலை பெறுவது ஒவ்வொரு
விசயத்திலும் நான்கு பாடங்களிலும் அனுபவி ஆவது. ஞானம், யோகம்,
தாரணை, சேவை அனைத்திலும் அனுபவி ஆக வேண்டும். அனுபவியை மாயை
அசைக்க முடியாது. ஆகவே பாப்தாதா இன்று குழந்தைகள் அனைவரையும்
அனுபவி மூர்த்தியாக பார்க்க விரும்பு கின்றார். கேட்பதில்,
சிந்திப்பதில் வேறு பாடு உண்டு. ஆனால் அனுபவி சொரூபமாவது தான்
சிந்தித்தது போன்ற சுயமரியாதையில் நிலைத்திருந்து அனுபவ
சொரூபத்தில் நிலைத்திருப்பது. அனுபவியை எவரும் அசைத்து
விடமுடியாது. எப்படி இருளில் விளக்கின் பட்டன் தட்டியவுடன்
இருள் தானாகவே ஓடிவிடுகின்றது, இருளை விரட்ட, இருளை அகற்ற எந்த
உழைப்பும் தேவைப்படுவதில்லை. அவ்வாறே சுய மரியாதை எனும்
இருக்கையில் அனுபவம் எனும் பட்டன் தட்டினால் விதவிதமான தேக
உணர்வும் உள்ளது, சுய மரியாதையும் உள்ளது. சுய மரியாதை களை
தெரிந்துள்ளீர்கள். ஆனால் முயற்சியும் சென்கின்றீர்கள்,
அனுபவத்தின் முயற்சி செய்வது, அனுபவி சொரூபம் ஆவது இவற்றில்
வேறுபாடு உண்டு. எனவே கடும் உழைப்பு தேவைப்படுகின்றது.
பாப்தாதாவிற்கு பாப்சமான் ஆக வேண்டிய நேரத்தில் லட்சியத்தில்
முழுமை பெற வேண்டிய நேரத்தில் கடும் உழைப்பு என்பது நன்றாக
இருப்பதில்லை. ஒவ்வொரு வரும் நான் கர்மயோகி வாழ்க்கை வாழ்பவன்
என்று சோதனை செய்க. வாழ்க்கை என்பது இயல்பானது, நீண்ட காலமானது,
அவ்வப்போது அல்ல. அத்தகைய அனுபவி சொரூபமாகுங்கள், யோகி வாழ்க்கை
அனுபவ மூர்த்தி யெனும் இலட்சியம் யாவும் பூர்த்தியானதா? சதா
மின்னுகின்ற ஒளியை தானும் அனுபவம் செய்து அந்த சொரூபத்தில்
நிலைபெற்று நினைவில் சொரூபம் . சொரூபத்திற்கான முயற்சியில்
நினைவின் சொரூபம் என்பதன் பலன் எங்கே - நினைவின் அனுபவ சொரூபமோ
சக்தி வாய்ந்த செயல் செய்யும் போது அனுபவம் ஆகும். செய்யும்
செயல் விதவிதமாயினும் அனுபவ சொரூப நிலை விதவிதமாக அல்ல. ஒரே
நிலையாகும். இன்று பாப்தாதா பார்க்கின்றார் - கடின உழைப்பு ஏன்
செய்ய வேண்டியுள்ளது. அனுபவ சொரூபம் ஆவதில் வரிசைக்கிரமமாக
பார்த்தார். பாப்தாதாவிற்கு ஒவ்வொரு குழந்தை மீதும் அளவிட
முடியாத அன்பு உள்ளது. அன்பானவர் கஷ்டப்படுவதை பார்க்க முடியாது.
எந்த பாடத்தின் உழைப் பாயினும் அவ்வப்போது என சொல்ல
நேரிட்டாலும் இதன் காரணம் அனுபவி சொரூபமாவதில் குறைவே.
முயற்சியாளர் தான் ஆனால் சொரூபம் அல்ல. ஒரு நொடியில் நான்கு
பாடத்திலும் தனது சுயமரியாதையின் அனுபவி சொரூபம் அனுபவம் ஆக
வேண்டும். அங்கே தேக அபிமானம் அனுகாத நிலை வேண்டும்.
வெளிச்சத்திற்கு முன்னால் இருள் நிற்காது, அகற்ற வேண்டியதில்லை.
இயல்பாகவே எங்கு இருள் இருக்குமோ அங்கு ஒளி குறைவா இல்லையா
என்பதல்ல. எனவே மிகப்பெரிய அத்தாரிட்டி என அனுபவமே சொல்லப்படும்.
நீங்கள் சர்க்கரை யின் இனிப்பு என்ன வென்று அனுபவம்
செய்துள்ளீர்கள். அனுபவத்தை ஆயிரம் பேர் சேர்ந்து மாற்ற
முற்பட்டாலும் மாற்ற முடியாது. முடியுமா? ஆகவே ஞானம், யோகம்,
தாரணை, சேவை நான்கு பாடத்திலும் ஏதேனும் ஒன்றில் குறை என்றாலும்,
கடினம் என்றாலும் அவசியம் அனுபவம் குறைவு என்பதே ஆகும்.
சேவையின் வெற்றி, தாரணை, சேவை நான்கு பாடங்களிலும் ஒன்றி லாவது
உழைப்பு தேவைப்பட்டால் அவசியம் அனுபவம் குறைவே ஆகும். சேவையின்
வெற்றி, தாரணையில் சுபாவ சம்ஸ்கார மாற்றம், யோகத்தில் நிலை
பெறுவது யோகி வாழ்வினை அனுபவம் செய்வதில் ஏதேனும் கடின உழைப்பு
அவ்வப்போது என சொல்வோமேயானால் அதன் அர்த்தம் அந்த பாடத்தில்
அனுபவ மூர்த்தி ஆகவில்லை என்பதாகும். அனுபவம் என்பது அவ்வப்போது
இருக்காது, இயல்பாக, இயற்கையாக இருக்கும். இப்போது கேட்டீர்களா
– உழைப் பிற்கான காரணம் என்ன? உங்களுக்கு அனுபவம் இருக்கும்.
அனுபவமெனும் இருக்கையில் அமரும்போது ஏதேனும் வரதான சொரூபத்தில்
அனுபவி ஆகி அனுபவம் செய்யும் போது உழைப்பு தேவைப்படுவதில்லை.
இயல்பாகவே ஆகிவிடுகின்றது. எனவே சமயத்திற்கேற்ப அனைத்தும்
எதிர்பாராது நடக்கும். சொல்லிவிட்டு வராது. இப்போது எப்படி
நிலநடுக்கம் ஏற்பட்டது, சிறிது நேரத்திலேயே லட்சக்கணக்கான
ஆத்மாக்கள் போய்விட்டார்கள். அவர்களுக்கு தெரியுமா நாளை நாம்
இருப்போமோ, இல்லையா என்று? இவ்வாறாக அனேக விபத்துக்கள் பல்வேறு
இடங்களில் எதிர்பாராது நடந்த வண்ணம் உள்ளது, ஆரம்பமாகிவிட்டது.
கூட்டம் கூட்டமாக ஒரே நேரத்தில் சீட்டுக்கள் கிழிப்படுகின்றது
(இறந்து விடுவார்கள்). அத்தகைய நேரத்ல் நீங்கள் எப்போதும்
தயாராக உள்ளீர்களா? அப்போது நான் முயற்சி செய்து
கொண்டிருக்கின்றேன் என்று சொல்ல மாட்டீர்களே? எவரெடி என்றாலே
எந்த ஒரு வரதானமோ, சுயமரியாதையோ நினைத்த வுடன் அதன் சொரூபமாவது
- எனவே பாப்தாதா இன்று இந்த விசயத்தின் மீது கவனத்தை
திருப்புகின்றார். எந்த ஒரு வரதானத்தையும் பலன் நிறைந்ததாக
சுயமரியாதையின் சொரூபத்தின் அனுபவி ஆக முடியுமா? ஆகியே தீர
வேண்டும். முயற்சி செய்கிறேன் என்பதல்ல, அப்படி முயற்சியே
செய்தாலும் இப்போதிருந்தே நீண்டகால பயிற்சியே தக்க சமயத்தில்
உதவி செய்யும். முயற்சியாளர் அல்ல, அனுபவி ஏனெனில் அனுபவமெனும்
அத்தாரிட்டியை உங்களை அனை வருக்கும் அல்மைட்டி அத்தாரிட்டியே (சர்வ
சக்திவான்) கொடுத்துள்ளார். தேக உணர்வின் அனுபவிகள் நான்
இன்னார் என்று தானே தேக உணர்வை நினைவு செய்ய வேண்டியுள்ளதா?
உங்களது உடலுக்கு பெயர் கிடைத்துள்ளது. நான் இன்னார் என்ற தேக
உணர்வு வந்து விட்டது. ஆயிரம் பேர் ஒன்று சேர்ந்து உங்களை வேறு
பெயரில் அழைத்தாலும் நீங்கள் ஏற்பீர்களா? தனது பெயரை
மறப்பீர்களா? பிறந்தவுடன் கிடைத்த பெயர் அந்த தேக உணர்வு
எவ்வளவு உறுதியாக, இயல்பாக உள்ளது. உங்களது பெயர் கொண்டே வேறு
ஒருவரை யாரோ அழைத்தாலும் பெயரை கேட்ட கனமே கவனம் செல்லும் தானே,
யாரோ என்னை அழைக்கிறார்கள். ஆக தேக உணர்வு அவ்வளவு உறுதியானது.
அவ்வாறே ஆத்மா அபிமானி சுயமரியாதையுள்ளவர், சுயராஜ்ய அதிகாரி
உறுதியாக உள்ளதா! எனது வாழ்க்கை மாறியது என்பீர்கள் - என்ன
மாறியது? தேக உணர்வை விட்டு சுயமரியாதை, சுயராஜ்ய அதிகாரி
ஆனீர்களா? ஞான சொரூபமாக என தன்னை சோதனை செய்யுங்கள். அல்லது
ஞானம் சொல்வதும், கேட்பதுமாக உள்ளதா? ஞானம் என்றால் அறிவு,
ஞானத்தின் நடைமுறை வடிவம், ஞானமே சக்தி என்பார்கள், ஆக ஞான
சொரூபம் என்றால் எந்த செயல் செய்தாலும் லேசாக, சக்தியாக
இருக்கும். யதார்த்தமாக இருக்கும். இதையே ஞான சொரூபம் என்று
சொல்லப்படும். ஞானம் சொல்பவர் அல்ல. ஞானதின் நடைமுறை சொரூபமான
வர்கள். யோக சொரூபம் என்றால் கர்மேந்திரியங்களை வெற்றிக்
கொள்வது. ஒவ்வொரு கர்மேந் திரியத்தின் மீதும் சுயராஜ்ய அதிகாரி
ஆவது. இது தான் யோகம் அதாவது யுக்தி யுக்த் வாழ்க்கை என்பதாகும்.
இவ்வாறு ஞானம், யோகம் நடைமுறையனால் ஒவ்வொரு குணமும் தானாகவே
தாரணை ஆகும். எங்கே யோகம், ஞானம் யோக யுக்த் நிலையோ அங்கு
குணங்களின் செயல் முறை தானே நடைபெறும். சேவையும் தானாகவே
நடைபெறும். நேரத்திற்கேற்ப மனம்-சொல்-செயல் தொடர்பில் சேவை
இடைவிடாது நடந்துக் கொண்டேயிருக்கும். சம்பந்தம் தொடர்பிலும்
சேவை நடைபெறும். உங்களது பிராமண குடும்பத்திலேயே உங்களது
சகோதரன், சகோதரி ஒருவர் மனமுடைந்து உள்ளார், முயற்சியில் சிறிது
கவன குறைவாக உள்ளார், ஒருவர் சம்ஸ்காரத்திற்கு வசமாகியுள்ளார்,
அப்படிப்பட்டவருக்கும் தொடர்பில் உள்ள நீங்கள் ஊக்கம், உற்சாகம்
கொடுத் தீர்கள், ஒத்துழைப்பு கொடுத்தீர்கள், அன்பு
கொடுத்தீர்கள். இதுவும் சேவையின் புண்ணியம் உங்கள் கணக்கில்
சேமிப்பாகும். விழுந்தவரை தூக்கி விடுவது புண்ணியக் கணக்கில்
சேரும். இவ்வாறு தொடர்பில் உள்ளவருக்கு சேவை செய்வது உண்மையான
சேவதாரியின் செயலாகும். சேவை கிடைத்தால் செய்வேன், கொடுத்தால்
செய்வேன் என்பதல்ல. மனம்-சொல்- செயல்-தெடர்பால் தானாகவே சேவை
நடந்துக் கொண்டேயிருக்க வேண்டும். சில சமயம் பாப்தாதா
பார்க்கின்றார், தொடர்பில் சில குழந்தைகள் சுபாவ சம்ஸ்காரத்தால்
பின் தங்கி இருந்தாலும், பார்த்தும் பாராதவராக இவர்
இப்படித்தான், இவர் மாறவே மாட்டார், இவருக்கு சேவை செய்வது வீண்
என்று நினைக்கிறார்கள். இது சரியா? நாங்கள் இயற்கையையும்
மாற்றுபவர்கள் எனும் போது தனது சகோதரரான பிராமண ஆத்மாக்களை தனது
தொடர்பில் உள்ளவர்களை மாற்ற முடியாதா? உண்மையான சேவாதாரி ஒருவர்
தனது சேவையில் புண்ணிய கணக்கை சேமிப்பதில் சம்பாதிப் பதில்
சுபபாவனை அவசியம் வைப்பார். இவர் இப்படி தான், இவர் மாறவே
மாட்டார் என்ப தெல்லாம் சுபபாவனை அல்ல. சூட்சுமமான வெறுப்பே
ஆகும். இருப்பினும் அந்த சகோதரன், சகோதரி மேரா பாபா என்று
சொல்கிறார்கள் அல்லவா. ஆக உண்மையான சேவாதாரியானவர் சுபபாவனை
வைக்கும் சேவையிலும் புண்ணியம் சம்பாதிப்பார். கீழே விழுந்வரை
தள்ளிடலாகாது, தூக்கிவிட வேண்டும். ஒத்துழைப்பு தரவேண்டும்.
இவர்களையே உண்மையான சேவாதாரி,, புண்ணிய ஆம்ô என்பர். ஆக
அந்தளவிற்கு சேவையில் ஊக்கம்-உற்சாகம் உள்ளதா? என தன்னை சோதனை
செய்யுங்கள். அப்போதே அனுபவதின் அத்தாரிட்டியானவர் என
சொல்லப்படும். பாப்தாதாவின் விருப்பம் இதுவே. அனுபவி மூர்த்தி
ஆகுங்கள், அனுபவ அத்தாரிட்டியை செயல் படுத்துங்கள்.
நான்கு பாடங்களிலும் தன்னை அனுபவி சொரூபமாக்கி அனுபவ
அத்தாரிட்டியை செயல்படுத்து பவர்கள், குறையை அகற்றி, நிறைவு
செய்வதில் கவனம் கொடுப்பவர்கள் கை உயர்த்துங்கள். மனதின் கை
உயர்த்துங்கள். ஏனெனில் பாப்தாதா சிவராத்திரியில் ரிசல்ட்
பார்ப்பார். தன் மனதில் பிறரைப்பற்றிய குறைகள் தன் சுபபாவனையை
குறைத்துவிடக்கூடாது. அவரது சம்ஸ்காரம் பலவீனமானது, ஆனால் அது
அவ்வளவு சக்தி வாய்ந்தது உங்களுடைய சுபபாவனையை குறைத்து விடும்.
எனவே பிரம்மா பாபாவைப் பாருங்கள். அவர் பார்க்காது, கேட்காதது
என்ன, பொறுப்பில் இருந்தும் இறுதியில் நல்லாசை,
நல்விருப்பங்களுடன் மூன்று வரதானத்தை அறிவுரையாக கொடுத்து
சென்றார். நினைவு உள்ளதா? மூன்று வார்த்தை நினைவு உள்ளதா?
தானும் நிராகாரி, (சரீரமற்ற நிலை) நிர் அகங்காரி, (அகங்காரமற்ற
நிலை) நிர்விகாரி (விகாரமற்ற நிலை) இந்த நிலையிலேயே
அவ்யக்தமானார். (இந்த பழைய உடலை விட்டு பிரிந்தார்) யாருக்குமே
கர்ம வினையெனும் உணர்வை தரவில்லை. யாரேனும் கர்மவினை முடிந்தது
என உணர்ந்தீர்களா? என்ன ஆயிற்று, அவ்யக்தமாக விட்டார், அவ்வாறே
பிரம்மா பாப்சமான் பரிஸ்தா பவ எனும் வரதானத்தை செய்தே
காண்பித்தார். பிரம்மா பாபாவைப் பின்பற்றுங்கள். நீங்கள் மேரா
பாபா (என்னுடைய பாபா) என்கின்றீர்கள், பாபா என்ன சொல்கிறார்
எனது குழந்தைகளே! அவ்வாறே சுபபாவனை இறை குடும்பத்திலும்
ஒருவருக்கொருவர் மீது இருப்பது அவசியமாகும். சுபாவதை
பாராதீர்கள். சுபாவத்தில் ஏற்ற தாழ்வு இருக்கும் என்று
பாபாவிற்கும் தெரியும். அன்பை குறைத்துவிடக்கூடாது. உறவை
முறித்துவிடக்கூடாது. செயலின் வெற்றியை குறைத்து விடக் கூடாது.
இது சரியல்ல. நமது குடும்பம் அல்லவா! என்ன குடும்பம்! பிரபு
பரிவாரம். நான் இறை குடும்பதைச் சார்ந்தவன், குடும்பம் என்றால்
அன்பு. குடும்பத்தில் அன்பு இல்லையெனில் அது குடும்பம் அல்ல.
இந்த பரமாத்மா பரிபாரம் கல்பத்தில் ஒரே ஒரு முறை கிடைக்கின்றது.
இவ்வாறு பெரிய குடும்பம் பாரமாத்மாவை அன்றி வேறெங்கும் கிடையாது.
சோதனை செய்யுங்கள். ஏனெனில் இதுவும் முயற்சியில் தடையாகும்.
தடைகளற்றவராகும் போதே அனுபவி ஆகி, அனுபவ அதிகாரத்தின் மூலம்
அனைவரையும் அனுபவி ஆக்குவீர்கள். நல்லது.
பாப்தாதா நாலாபுறமும் உள்ள குழந்தைகளைப் பார்த்து ஆஹா குழந்கைளே
ஆஹா என மகிழ்ந்து பாடுகின்றார். ஒவ்வொரு குழந்தையின்
உள்ளத்திலும் தந்தை உள்ளார். தந்தையின் உள்ளத்தில் ஒவ்வொரு
குழந்தையும் உள்ளனர். இங்கே மதுபனில் இவவ்ளவு பெரிய பரிவாரதை
பார்த்து ஆஹா என்று மதுபன் நிவாசிகளும் மகிழ்கின்றனர். அனைவரின்
புகழிடமும் மதுபனே. எனவே மதுபனிற்கு ஒடோடி வந்து விடுகின்றனர்.
இப்போது பாபாவின் ஆசையை விரைவாக பூர்த்தி செய்ய வேண்டும்.
நான்கு பாடங்களிலும் அனுபவி சொரூபமாகியேத் தீரவேண்டும் பாப்தாதா
உள்நாடு, வெளிநாடு எங்கிலும் அமர்ந்துள்ள குழந்கைளைப் பார்த்
மகிழ்கின்றார். இந்த அறிவியல் சாதனம் இப்போதே முன்னேற்றத்தை
நோக்கி செல்கிறது. உலகில் புத்தம் புதிய கண்டுபிடிப்புகள்
யாவும் உங்களுக்கு பயன் உள்ள வகையில் நல்ல நல்ல சாதனங்கள்
உருவாகின்றன. தொலை வில் இருந்தாலும் அருகில் உள்ளீர்கள். எனவே
இத்தகைய சாதனைங்களைப் படைத்த விஞ்ஞானி களுக்கும் வாழ்த்துக்கள்.
நல்லது. உள்நாடு, வெளிநாடு எங்குமுள்ள குழந்தைகள் அனைவருக்கும்
உளமார்ந்த அன்பு நினைவுகள் மற்றும் விசேஷமான குழந்தைகளுக்கு
நமஸ்காரம்.
ஆசீர்வாதம்:
ஞான வெளிச்சத்தால் முயற்சிக்கான பாதையை சுலபமாகவும் தெளிவாகவும்
அமைத்துக் கொண்டு பிரிஸ்தா சொரூபம் ஆகுக.
பரிஸ்தாவின் வாழ்வில் ஒளியும், சக்தியும் தெளிவாக தென்படும்.
ஆனால் ஒளியும் சக்தியும் நடைமுறை சொரூபமாக சிந்தனை சக்தியும்
பொறுமை சக்தியும் தேவை. மனதிற்காக சிந்தனை சக்தி சொல்லுக்கும்
பொறுமை சக்தியை கையாண்டால் உங்களது சொல்லும், செயலும்
விரும்பியே படியே செயல்படும். இவ்விரு சக்திகளும் ஒரு வரிடம்
இருந்தால் முயற்சிக்கான வழி சுலபமாக, தெளிவாக அமையும்.
சுலோகன்:
வீண் வார்த்தை பேசுவது அனேகரை தொந்ரவு செய்வதாகும்.
அவ்யக்த இஷாரா - சதா ஆடாத, அசையாத, ஒரே சமநிலையின்
ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்
குழந்தைகளான நீங்கள் மாஸ்டர் இயற்கையின் அதிபதிகள். இந்த
இயற்கையின் விளையாட்டைப் பார்த்து மகிழ்ந்து கொண்டேயிருங்கள்.
இயற்கை ஆரவாரம் செய்தாலும் ஆழகான விளையாட்டை காண்பித்தாலும்
இரண்டிலும் இயற்கையின் அதிபதியானவர்கள். பார்வையாளராக
விளையாட்டை காண்பார்கள். விளையாட்டில் ஆனந்தம் அடைவார்கள்.
பயப்படமாட்டார்கள். எனவே பாப்தாதா தபஸ்யா மூலமாக சாட்சியாளர்
எனும் ஆசனத்தில் உறுதியாக இருப்பதற்கான முக்கிய பயிற்சியை
செய்ய வைக்கின்றார்.