10-09-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! பாபா உங்களை வைரம்
போன்று மாற்றுகிறார் என்றால் அவர் மீது ஒரு போதும் சந்தேகம்
ஏற்படக் கூடாது. சந்தேக புத்தி உடையவராக ஆகுதல் என்றால்
தங்களுக்கே நஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்ளுதல் ஆகும்.
கேள்வி:
மனிதனிலிருந்து தேவதையாவதற்கான
படிப்பில் தேர்ச்சி அடைய முக்கிய ஆதாரம் என்ன?
பதில்:
நிச்சயம். நிச்சயபுத்தி
உடையவராவதற்கு துணிவு (தைரியம்) வேண்டும். மாயை இந்த துணிவை
துண்டிக்கிறது. சந்தேக புத்தி உடையவராக மாற்றுகிறது. போகப்போக
படிப்பின் மீதோ, படிப்பிக்கும் சுப்ரீம் ஆசிரியர் மீதோ சந்தேகம்
வந்து விட்டால் தனக்கும் மற்றவர்களுக்கும் நஷ்டத்தை
ஏற்படுத்துகின்றனர்.
பாடல்:
நீங்கள் அன்புக் கடல்.....
ஓம் சாந்தி.
ஆன்மீகக் குழந்தைகளுக்காக வந்து சிவ பாபா புரிய வைத்துக்
கொண்டிருக்கின்றார். குழந்தை களாகிய நீங்கள், அன்புக் கடல்
நீங்கள் என தந்தையின் மகிமை செய்கிறீர்கள். அவருக்கு ஞானக் கடல்
என்று கூட கூறப்படுகிறது. ஞானக் கடல் ஒருவர் தான் என்றால்
மற்றவர்களை அஞ்ஞானி (அறியாதவர்) எனலாம். ஏனென்றால் ஞானம்
மற்றும் அஞ்ஞானத்தின் விளையாட்டா கும். பரம் பிதா பரமாத்மாவிடம்
தான் ஞானம் இருக்கிறது. இந்த ஞானத்தினால் புது உலகம் உருவாகிறது.,
யாரோ சிலர் புது உலகத்தை உருவாக்குகிறார்கள். என்பது கிடையாது.
உலகம் அழிவற்றது தான். பழைய உலகத்தை மட்டும் புதியதாக
மாற்றுகின்றார்கள். பிரளயம் எதுவும் ஏற்படாது. முழு உலகமும் ஒரு
போதும் அழிவதில்லை. பழையது தான் மாறி புதியதாகிறது. இது பழைய
வீடு. இதில் நீங்கள் வசிக்கிறீர்கள் என பாபா புரிய வைக்கிறார்.
நாம் புதிய வீட்டிற்குப் போகிறோம் என அறிகிறீர்கள். பழைய டில்லி
இருந்தது. இப்போது பழைய டில்லியை நீக்கி அதற்குப் பதிலாக
புதியதாக்க வேண்டும். இப்போது எப்படி புதியதாகிறது. முதலில்
அங்கே வசிக்கக் கூடியவர்கள் தகுதியானவர்களாக இருக்க வேண்டும்.
புது உலகில் சர்வ குணமும் நிறைந்தவர்களாக...... இருப்பார்கள்.
குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த குறிக்கோள் இருக்கிறது. பள்ளிக்
கூடத்தில் படிப்பவர்களுக்கு குறிக்கோள் இருக்கிறது அல்லவா. நான்
டாக்டர் ஆவேன், வக்கீல் ஆவேன் என படிப்பவர்களுக்குத் தெரியும்.
அவ்வாறே இங்கேயும் மனிதனிலிருந்து தேவதை ஆவதற்காக நாம்
வந்திருக்கிறோம் என நீங்கள் அறிகிறீர்கள். பள்ளிக் கூடத்தில்
குறிக்கோள் இல்லாமல் யாரும் அமர (கற்க) முடியாது. ஆனால் இது ஒரு
அதிசயமான பாட சாலை. சிலர் குறிக்கோள் புரிந்துக் கொண்டு
படித்தாலும் பிறகு படிப்பை விட்டு விடுகின்றார்கள். இது தவறான
படிப்பு என புரிந்துக் கொள்கின்றனர். இது குறிக்கோளே அல்ல,
இப்படி ஒரு போதும் இருக்க முடியாது. படிக்க வைப்பவர் மீது
சந்தேகம் வந்து விடுகின்றது. அந்த படிப்பிலோ படிக்க முடியவில்லை,
அதாவது பணம் இல்லை, தைரியம் இல்லை என்றால் படிப்பை விட்டு விடு
கின்றனர். வக்கீலுக்கான படிப்பே தவறு, படிக்க வைப்பவரே தவறு என
கூற முடியாது. இங்கே மனிதர்களுக்கு அதிசயமான புத்தி இருக்கிறது.
படிப்பில் சந்தேகம் வந்தவுடன் இது தவறானது, பகவான் படிக்க
வைக்கவில்லை, இராஜ்யம் முதலியானவைகள் கிடைப்பதில்லை...... இவை
அனைத்தும் கட்டுக்கதைகள் என்று கூறிவிடுகின்றனர். இது போன்று
நிறைய குழந்தைகள் படிப்பு படித்து பிறகு படிப்பை விட்டு
விடுகின்றனர். நீங்கள் கூறினீர்களே எங்களை பகவான் படிக்க
வைக்கின்றார். இதன் மூலமாக மனிதனிலிருந்து தேவதையாகிறோம் என்று,
பிறகு என்ன வாயிற்று என கேட்பார்கள். இல்லை, இது அனைத்தும்
கட்டுக் கதைகளாக இருந்தது. இந்த குறிக்கோள் எங்களால் புரிந்துக்
கொள்ள முடியவில்லை என்பார்கள். பல பேர் நிச்சயத்துடன்
படித்தார்கள், சந்தேகம் வந்தவுடன் படிப்பை விட்டு விட்டனர்.
நிச்சயம் எப்படி ஏற்பட்டது. பிறகு சந்தேக புத்தி உடையவராக
மாற்றியது யார்? இவர் ஒரு வேளை படித்திருந்தால் மிக உயர்ந்த
பதவி அடைந்திருக்க முடியும் என நீங்களும் கூறுவீர்கள். நிறைய
பேர் படித்து கொண்டிருக் கின்றனர். வக்கீலுக்கு படித்து படித்து
பாதியிலேயே விட்டு விடுகின்றனர். மற்றவர் படித்து வக்கீலாகி
விடுகின்றனர். சிலர் படித்து தேர்ச்சி அடைந்து விடுகின்றனர்.
சிலர் தோல்வி அடைந்து விடுகின்றனர். பிறகு சிலர் ஏதாவது
குறைந்த பதவி அடைகின்றனர். இதுவோ பெரிய பரீட்சை ஆகும். இதில்
மிகுந்த தைரியம் தேவை. முக்கியமாக நிச்சய புத்திக்கான தைரியம்
தேவை. மாயை எப்படிப்பட்டது எனில் அவ்வவ்போது நிச்சயம்,
அவ்வப்போது சந்தேக புத்தி உடையவராக்கி விடுகிறது. படிப்பதற்காக
நிறைய பேர் வருகின்றனர். ஆனால் சிலர் மந்த புத்தி உடையவராக
இருக்கின்றனர், வரிசைக் கிரமத்தில் தேர்ச்சி அடைகின்றனர் அல்லவா.
செய்தித் தாள்களிலும் பட்டியல் வெளிவருகிறது. இதுவும் அது
போன்று தான். படிப்பதற்காக நிறைய பேர் வருகின்றனர். ஒரு சிலர்
நல்ல புத்தி உடையவராகவும் ஒரு சிலர் மந்த புத்தி உடையவராக
இருக்கின்றனர். மந்த புத்தி ஆகி ஆகி பிறகு ஏதாவது ஒரு
சந்தேகத்தில் வந்து விட்டு விடுகின்றனர். பிறகு
மற்றவர்களுக்கும் கூட நஷ்டத்தை ஏற்படுத்தி விடுகின்றனர்.
சந்தேக புத்தி அழிவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. அவர்கள்
உயர்ந்த பதவி அடைய முடியாது. நிச்சயமும் உள்ளது ஆனால்
முழுயைமாக படிக்க வில்லை என்றால் தேர்ச்சி அடைவார்களா என்ன?
புத்தி எந்த வேலைக்கும் உதவாததாகி விடுகிறது. தாரணை
ஏற்படுவதில்லை. நாம் ஆத்மா என்பதை மறந்து விடுகின்றனர். நான்
ஆத்மாக்களாகிய உங்களுக்கெல்லாம் பரம்பிதா என தந்தை கூறுகின்றார்.
தந்தை வந்திருக் கின்றார் என்பது குழந்தைகளாகிய நீங்கள்
தெரிந்துக் கொண்டீர்கள். சிலருக்கு அதிக தடைகள் ஏற்படும் போது
அவர்களுக்கு சந்தேகம் வந்து விடுகின்றது. எங்களுக்கு இந்த
சகோதரி மீது நம்பிக்கை ஏற்படவில்லை என கூறகின்றார்கள். அட,
சகோதரி எப்படி இருந்தாலும் நீங்கள் படிக்க வேண்டும் அல்லவா.
டீச்சர் நன்றாக படிப்பிக்கவில்லை என்றால் கற்றுத் தருவதை விட
வைக்க வேண்டும் என யோசிப்பர். ஆனால் நீங்கள் படித்தே ஆக
வேண்டும் இல்லையா? இது தந்தை யினுடைய படிப்பாகும். படிக்க
வைக்கக் கூடியவரோ சுப்ரீம் டீச்சர் ஆவார். பிராமணிகள் கூட
அவர்களுடைய ஞானத்தை கூறுகின்றனர் என்றால் கவனம் படிப்பின் மீது
அல்லவா இருக்க வேண்டும்? படிப்பின்றி தேர்வில் தேர்ச்சி அடைய
முடியாது. ஆனால் தந்தையிடம் நிச்சயம் துண்டிக்கப்பட்டது என்றால்
படிப்பை விட்டு விடுவர். படிக்கும் போது டீச்சரின் மூலமாக பதவி
கிடைக்குமோ கிடைக்காதோ என்ற சந்தேகம் வருகிறது எனில் பிறகு
படிப்பை விட்டு விடுகின்றனர். பிறரையும் கெடுத்து விடுகின்றனர்,
நிந்தனை செய்வதினால் இன்னும் நஷ்டத்தை ஏற்படுத்துகின்றனர்.
மிகுந்த நஷ்டம் ஏற்படுகிறது. ஒரு வேளை இங்கு யாராவது பாவங்கள்
செய்தால் அவர்களுக்கு 100 மடங்கு தண்டனை ஏற்பட்டு விடும் என
தந்தை கூறுகின்றார். நிறைய பேரை கெட்டவர்களாக மாற்றுவதற்கு
ஒருவர் நிமித்தமாகி விடுகின்றனர். யாரெல்லாம் புண்ணிய
ஆத்மாக்கள் ஆகின்றார்களோ பிறகு பாவ ஆத்மாக்கள் ஆகிவிடுகிறார்கள்.
இந்த படிப்பின் மூலமாக புண்ணிய ஆத்மாக்களாகின்றனர். மேலும்
புண்ணிய ஆத்மாக்களாக மாற்றக் கூடியவர் ஒரே ஒரு தந்தை. ஒரு வேளை
யாராவது படிக்க முடியவில்லை என்றால் கண்டிப்பாக எதாவது தவறு
செய்திருப்பார்கள். அவ்வளவு தான் அதிர்ஷ்டம். இல்லை என்றால்
ஹார்ட் ஃபெயில் ஆகிவிடுகின்றனர். யார் இங்கு வந்து மறுபிறவி
எடுத்தார்களோ அவர்கள் பிறகு இராவண இராஜ்யம் சென்று மறுபிறவி
எடுத்தவராகின்றனர். வைரம் போன்ற வாழ்க்கை அமைத்துக் கொள்ள
முடியாது. மனிதர்கள் ஹார்ட் ஃபெயில் ஆகின்றனர் எனில் சென்று
மறுபிறவி எடுக் கின்றனர். இங்கு ஹார்ட் ஃபெயில் ஆகின்றனார்
எனில் அசுர சம்பிரதாயத்தில் சென்று விடு கின்றனர். இது உயிருடன்
இருந்து கொண்டே இறந்து பிறந்த வாழ்க்கை (மர்ஜீவா). புது
உலகத்திற்குச் செல்வதற்காக தந்தையினுடைவராகின்றனார். ஆத்மாக்கள்
போகும் இல்லையா. ஆத்மாக்களாகிய நாம் இந்த சரீர உணர்வை விடும்
போது இவர்கள் ஆத்ம உணர்வுடையவர் என புரிந்துக் கொள்வார்கள்.
நாம் (ஆத்மாக்கள்) வேறு பொருள், உடல் வேறு பொருள். ஒரு உடலை
விட்டு மற்றொரு உடலை எடுக்கின்றோம் என்றால் கண்டிப்பாக
தனிப்பட்ட பொருள் அல்லவா. நீங்கள் புரிந்துக் கொள்கின்றீர்கள்.
நாம் ஆத்மாக்கள் ஸ்ரீமத்படி இந்த பாரதத்தில் சொர்க்கத்தை
ஸ்தாபனை செய்துக் கொண்டிருக்கின்றோம். மனிதனிலிருந்து தேவதை
யாகக் கூடிய இந்த கலையை கற்றுக் கொள்ள வேண்டும். இதுவும்
குழந்தைகளுக்குப் புரிய வைக்கப் பட்டிருக் கிறது. சத்சங்கம்
எதுவுமே கிடையாது. உண்மையானவர் என்று ஒரேயொரு பரமாத்மாவிற்குத்
தான் கூறப்படுகிறது. அவர் பெயர் சிவன். அவர் சத்யுகத்தை ஸ்தாபனை
செய்கின்றார். கலியுத்தின் ஆயுள் கண்டிப்பாக முடிவடைய வேண்டும்.
முழு உலகத்தின் சக்கரம் எப்படி சுற்றுகின்றது, இது சக்கரத்தின்
படத்தில் தெளிவாக உள்ளது. தேவதையாவதற்காக சங்கமத்தில் தந்தை
யினுடைய வராகின்றனர். தந்தையை விட்டு விட்டார்கள் என்றால் பிறகு
கலியுகத்திற்கு சென்று விடுவர். பிராமணன் ஆவதில் சந்தேகம் வந்து
விட்டால் சூத்திர குலத்தில் சென்று விடுவார்கள். பிறகு
தேவதையாக முடியாது.
இப்போது சொர்க்கத்தின் ஸ்தாபனையின் அடித்தளம் எப்படி
போடப்படுகிறதோ அவ்வாறே அடித்தளத்திற்குப் பிறகு திறப்பு
விழாவும் நடக்கும் என பாபா புரிய வைத்திருக்கிறார். இங்கே
குப்தமாக இருக்கிறது. நாம் சொர்க்கத்திற்காக தயாராகிக்
கொண்டிருக்கிறோம் என நீங்கள் அறிகிறீர்கள். பிறகு நரகத்தின்
பெயர் இருக்காது. கடைசி வரை எங்கே வாழ வேண்டுமோ அங்கே நிச்சயம்
படிக்க வேண்டும். பதீத பாவனர் ஒரேயொரு தந்தை தான் பாவனமாக
மாற்றுகிறார்.
இப்போது குழந்தைகளாகிய நீங்கள் இது சங்கமயுகம் என புரிந்துக்
கொள்கிறீர்கள். அப்போது தான் பாபா தூய்மையாக மாற்ற வருகிறார்.
புருஷோத்தம சங்கமயுகத்தில் மனிதர்கள் நரனிலிருந்து நாராயணனாக
மாறுகிறார்கள் என எழுத வேண்டும். இது உங்களுடைய ஈஸ்வரிய
பிறப்புரிமை அதிகாரம் என்பதும் எழுதப்பட்டிருக்கிறது. பாபா
உங்களுக்கு தெய்வீக திருஷ்டியை அளிக்கிறார். நம்முடைய 84
பிறவிகளின் சக்கரம் இப்போது முடியப் போகிறது என ஆத்மாவிற்கு
தெரிகிறது. ஆத்மாக்களுக்கு பாபா வந்து புரிய வைக்கிறார். ஆத்மா
படிக்கிறது. ஆனால் தேக உணர்வு அடிக்கடி வரும். ஏனென்றால் அரைக்
கல்பமாக தேக உணர்வு இருக்கிறது அல்லவா. எனவே ஆத்ம உணர்வு
அடைவதில் தாமதம் ஆகிறது. தந்தை அமர்ந்திருக்கிறார். நேரம்
கிடைத் திருக்கிறது. பிரம்மாவின் ஆயுள் 100 வருடம் என்கிறார்கள்
அல்லது குறைவாகவும் இருக்கலாம். பிரம்மா போய் விட்டார் என்றால்
ஸ்தாபனை நடைபெறாது என்பது கிடையாது. நீங்கள் சேனைகள்
இருக்கிறீர்கள் அல்லவா. பாபா மந்திரம் கொடுத்து விட்டார்,
படிக்க வேண்டும். சிருஷ்டி சக்கரம் எப்படி சுழல்கிறது. இதுவும்
புத்தியில் இருக்க வேண்டும். நினைவு யாத்திரையில் இருக்க
வேண்டும். நினைவினால் தான் விகர்மங்கள் அழியும். பக்தி
மார்க்கத்தில் அனைவராலும் விகர்மம் நடந்திருக்கிறது. பழைய உலகம்
மற்றும் புது உலகம் இரண்டின் சக்கரமும் உங்கள் முன்பு
இருக்கிறது. பழைய உலகம் இராவண இராஜ்யம் ஒழிக, புது உலகம் ஞான
மார்க்கம் இராம இராஜ்யம் வாழ்க என நீங்கள் எழுதலாம்.
பூஜைக்குரியவராக இருந்தவர்களே பூஜாரி ஆகியிருக் கிறார்கள்.
கிருஷ்ணரும் பூஜைக்குரியவராக வெண்மையாக (அழகாக) இருந்தார்.
பிறகு இராவண இராஜ்யத்தில் கருப்பாக மாறிவிட்டார். இதை புரிய
வைப்பது எளிதாகும். முதன் முதலில் பூஜை ஆரம்பம் ஆகும் போது
பெரிய பெரிய வைரத்தினால் ஆன லிங்கங்களை உருவாக்கினார்கள்.
மிகவும் மதிப்புடையதாக இருந்தது. ஏனென்றால் பாபா எவ்வளவு
பணக்காரராக மாற்றியிருந்தார் அல்லவா. அவரே சுயம் வைரமாக
இருக்கிறார் என்றால் ஆத்மாக்களையும் வைரம் போன்று மாற்றுகிறார்
என்றால் அவரை வைரமாக உருவாக்கி வைக்க வேண்டும் அல்லவா.
எப்போதும் வைரத்தை நடுவில் வைக்கிறார்கள். புஷ்ப ராகம்
போன்றவற்றுடன் வைத்தால் அதற்கு மதிப்பில்லை. ஆகவே வைரம் நடுவில்
வைக்கப்படுகிறது. இவர் மூலமாக எட்டு ரத்தனங் களின் வெற்றி
மாலையின் மணிகள் உருவாகிறார்கள். அனைத்தையும் விட அதிகமான
மதிப்பு வைரத் திற்குத் தான். மற்றவர்கள் வரிசைக்கிரமத்தில்
உருவாகிறார்கள். பாபா தான் உருவாக்குகிறார். இந்த விசயங்கள்
அனைத்தையும் பாபாவைத் தவிர வேறு யாரும் புரிய வைக்க முடியாது.
படிக்கும் போது ஆச்சரியமடைந்து பாபா-பாபா என்று கூறுகிறார்கள்.
பிறகு சென்று விடுகிறார்கள். சிவபாபாவிற்கு பாபா என்கிறார்கள்
என்றால் அவரை ஒரு போதும் விடக் கூடாது. பிறகு அதிர்ஷ்டம்
என்கிறார்கள். யாருடைய அதிர்ஷ்டத்தில் இல்லையோ பிறகு கர்மமும்
100 மடங்கு தண்டனை அடையும் படி செய்கிறார்கள். புண்ணிய ஆத்மா
ஆவதற்காக முயற்சி செய்து பிறகு பாவம் செய்வதால் 100 மடங்கு
பாவம் ஆகிவிடுகிறது. பிறகு இடையிலேயே நின்று விடுகிறார்கள்.
வளர்ச்சி அடைவதில்லை. 100 மடங்கு தண்டனை சேருவதால் நிலைமை
சக்தியானதாக இருப்பதில்லை. யாரால் நீங்கள் வைரமாக மாறுகிறீர்களோ
அவர் மீது ஏன் சந்தேகம் ஏற்பட வேண்டும் ஏதாவது காரணத்தினால்
பாபாவை விட்டார்கள் என்றால் துர்பாக்கியசா- என்பார்கள்
எங்கிருந்தாலும் பாபாவை நினைக்க வேண்டும். அப்போது தான்
தண்டனையிலிருந்து விடு பட முடியும். இங்கே நீங்கள்
பதீதத்திலிருந்து தூய்மையாவதற்காக வருகிறீர்கள். கடந்த
காலத்தில் ஏதாவது கர்மங்கள் செய்திருந்தால் சரீரத்தில் கூட
எவ்வளவு அனுபவிக்க வேண்டியருக்கிறது. இப்போது நீங்கள் அரைக்
கல்பத்திற்கு இதிலிருந்து விடுபட வேண்டும். இப்போது உங்களை
நீங்களே பார்த்துக் (சோதித்துக்) கொள்ளுங்கள். நாம் எந்த
அளவிற்கு முன்னேறி இருக்கிறோம், மற்றவர்களுக்கு சேவை செய்கிறோமா?
லஷ்மி நாராயணனின் படத்தில் கூட மேலே உலகத்தில் அமைதியின்
இராஜ்யம் இப்போது உருவாகிக் கொண்டிருக்கிறது என எழுதலாம், இதுவே
குறிக்கோள் ஆகும். அங்கே 100 சதவீதம் தூய்மை, சுகம், சாந்தி
இருக்கிறது. இவர்களின் இராஜ்யத்தில் வேறு எந்த தர்மமும்
இருக்காது. இப்போது இத்தனை தர்மங்கள் இருக்கிறது என்றால் அவை
அனைத்தும் அழியும் அல்லவா. புரிய வைப்பதில் மிகவும் புத்தி
இருக்க வேண்டும். இல்லை என்றால் தனது நிலைக்கேற்ப புரிய
வைக்கின்றார்கள். படங்களுக்கு முன்பு அமர்ந்து சிந்திக்க
வேண்டும். விளக்கங்கள் கிடைத்திருக்கின்றது. புரிந்துக்
கொண்டீர்கள் என்றால் புரிய வைக்க வேண்டும். ஆகையால் பாபா
மியூசியம் திறந்துக் கொண்டே இருக்கின்றார். சொர்க்கத்தின்
வாயில் என்ற பெயர் கூட நன்றாக இருக்கின்றது. அது டில்லி கேட்,
இந்தியா கேட் ஆகும். இதுவோ சொர்க்கத்தின் கேட் ஆகும். இப்போது
நீங்கள் சொர்க்கத்தின் நுழை வாயிலை திறந்துக்
கொண்டிருக்கிறீர்கள். பக்தி மார்க்கத்தில் புதிர் விளையாட்டில்
குழம்புவது போல குழம்பி இருக்கிறார்கள். யாருக்கும் வழி
கிடைக்கவில்லை. அனைவரும் மாயாவின் இராஜ்யத்தில் மாட்டிக்
கொள்கிறார்கள். பிறகு தந்தை வந்து விடுவிக்கிறார். சிலருக்கு
விடுதலை பெற விருப்பம் கிடையாது. பாபா என்ன செய்வார். ஆகையால்
மிகப் பெரிய துர்பாக்கியசாலியைப் பார்க்க வேண்டும் என்றாலும்
இங்கே பாருங்கள். யார் படிப்பை விட்டு விடுகிறார்களோ அவர்களே.
சந்தேக புத்தி உடையவராகி பிறவி பிறவிக்கும் தன்னையே கொலை
செய்துக் கொள்கிறார்கள். அதிர்ஷ்டம் கெட்டு விட்டால் இவ்வாறு
நடக்கிறது. கிரகச்சாரம் பிடிப்பதால் வெண்மையாக மாறுவதற்கு
பதிலாக கருப்பாக மாறுகிறார்கள். ஆத்மா குப்தமாக படிக்கிறது.
ஆத்மா தான் சரீரத்திலிருந்து அனைத்தையும் செய்கிறது. ஆத்மா
சரீரம் இல்லாமல் எதையும் செய்ய முடியாது. ஆத்மா என்று
புரிந்துக் கொள்வதில் தான் கடின உழைப்பு இருக்கிறது ஆத்மா என்ற
நிச்சயம் இல்லை என்றால் தேக உணர்வு வந்து விடுகிறது. நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. சுப்ரீம் டீச்சரின் படிப்பு நம்மை நரனிலிருந்து நாராயணனாக
மாற்றக் கூடியதாகும். இந்த நிச்சயத்தோடு கவனம் கொடுத்து படிக்க
வேண்டும். படிக்க வைக்கக் கூடிய டீச்சரை பார்க்காதீர்கள்.
2. ஆத்ம உணர்வுடையவராவதற்கு முயற்சி செய்ய வேண்டும். உயிருடன்
வாழ்ந்து கொண்டே இறந்து வாழ்பவராக ஆகி விட்டீர்கள் எனில் (மர்ஜீவா)
சரீர உணர்வை விட்டு விட வேண்டும். புண்ணிய ஆத்மா ஆக வேண்டும்.
எந்த பாவ கர்மமும் செய்யக் கூடாது.
வரதானம்:
சுயதரிசனச் சக்கரத்தின் ஸ்மிருதி மூலம் சதா சம்பன்ன ஸ்திதியை
அனுபவம் செய்யக்கூடிய பெரும் செல்வந்தர் ஆகுக.
யார் சதா சுயதரிசனச் சக்கரதாரியாக இருக்கிறாரோ, அவர் மாயாவின்
அநேக வித சக்கரங்களில் இருந்து விடுபட்டு இருப்பார். ஒரு
சுயதரிசனச் சக்கரம் அநேக வீண் சங்கல்பங்களை அழித்து விடும்.
மாயாவை விரட்டி விடும். அதற்கு முன்னால் மாயா நிற்க முடியாது.
சுயதரிசன சக்கரதாரி குழந்தைகள் சதா நிரம்பியவராக (சம்பன்னம்)
இருக்கும் காரணத்தால் அசையாது இருப்பார்கள். தன்னை செல்வ வளம்
மிக்கவராக அனுபவம் செய்வார்கள். மாயா காலி செய்வதற்கான முயற்சி
செய்கிறது. ஆனால் அவர்கள் சதா எச்சரிக்கையாக, விழிப்புடன், சதா
ஒளிரும் ஜோதியாக இருப்பார்கள். எனவே மாயா அவர்களை எதுவும்
செய்ய இயலாது. யாரிடம் கவனம் என்ற காவலாளி விழிப்புடன்
இருக்கிறாரோ, அவர் தாம் சதா பாதுகாப்பாக இருப்பார்.
சுலோகன்:
உங்கள் வார்த்தை அந்த மாதிரி சக்திசாலியாக இருக்க வேண்டும் -
அதில் சுப மற்றும் சிரேஷ்ட பாவனை நிறைந்திருக்க வேண்டும்.
அவ்யக்த சமிக்ஞை: இப்போது ஈடுபாடெனும் அக்னியை மூட்டி யோகத்தை
ஜூவாலா ரூபமாக்குங்கள்.
சக்திசாலி நினைவுக்காக உண்மையான உளப்பூர்வ அன்பு வேண்டும்.
உண்மையான உள்ளம் கொண்டவர்கள் விநாடியில் பிந்து ஆகி, பிந்து
ரூப பாபாவை நினைவு செய்ய முடியும். உண்மையான உள்ளத்தினர்
உண்மையான பிரபுவைத் திருப்திப் படுத்தும் காரணத்தால் பாபாவின்
விசேஷ ஆசிர்வாதங்களைப் பெறுகிறார்கள். இதன் மூலம் சகஜமாகவே ஒரு
சங்கல்பத்தில் நிலைத்திருந்து ஜுவாலா ரூபத்தின் நினைவை அனுபவம்
செய்ய முடியும். சக்திசாலி வைப்ரேஷன்களைப் பரப்ப முடியும்.