10-10-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! உங்களுக்கு ஒரு
தந்தையிடமிருந்து ஒரு வழிமுறை கிடைக்கின்றது. அதை அத்வைத் (மாற்றமில்லாத
ஒரே ஒரு) மத் (வழி) எனச் சொல்கின்றனர். இந்த அத்வைத் மத் மூலம்
தான் நீங்கள் தேவதை ஆக வேண்டும்.
கேள்வி:
மனிதர்கள் இந்த (பூல்-பூலையா)
மறதி விளையாட்டில் அனைத்திலும் எந்த முக்கிய விசயத்தை மறந்து
விட்டுள்ளனர்?
பதில்:
நமது வீடு எங்கே உள்ளது? அதற்கான
வழியையே இந்த விளையாட்டில் வந்து மறந்து விட்டோம். வீட்டுக்கு
எப்போது போக வேண்டும், எப்படிப் போக வேண்டும் என்பது தெரியாது.
இப்போது தந்தை வந்துள்ளார், உங்கள் அனைவரையும் அழைத்துச்
செல்வதற்காக. சப்தத்திற்கு அப்பாற்பட்ட இனிய வீட்டுக்குச்
செல்வதற்கு இப்போது முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்.
பாடல்:
இரவு நேரப் பயணிகளே களைத்துப்
போகக் கூடாது..........
ஓம் சாந்தி.
பாடலின் பொருளை நாடகத்தின் படி வேறு யாரும் புரிந்து கொள்ள
இயலாது. சில பாடல்கள் மனிதர்களால் இதுபோல் உருவாக்கப்பட்டுள்ளன,
அவை உங்களுக்கு உதவி செய் கின்றன. குழந்தைகள் புரிந்து
கொண்டுள்ளனர், இப்போது நாம் தேவி-தேவதையாக ஆகிக் கொண்டி
ருக்கிறோம். எப்படி அந்தப் படிப்பைப் படிக்கிறவர்கள்
சொல்வார்கள், நாம் இந்த படிப்பினால் டாக்டராக, வக்கீலாக ஆகிக்
கொண்டிருக்கிறோம். உங்களுடைய புத்தியில் உள்ளது, நாம் தான்
தேவதா ஆகிக் கொண்டிருக்கிறோம், புது உலகத்திற்காக. உங்களுக்கு
மட்டுமே இந்தச் சிந்தனை வருகிறது. புது உலகம், சத்யுகம் தான்
அமரலோகம் எனச் சொல்லப் படுகின்றது. இப்போதோ சத்யுகமும் இல்லை,
தேவதை களின் இராஜ்யமும் இல்லை. இங்கே அது இருக்கவும் முடியாது.
நீங்கள் அறிவீர்கள், இந்தச் சக்கரத்தைச் சுற்றி வந்து, இப்போது
நாம் கலியுகத்தின் கடைசியில் வந்து சேர்ந்திருக்கிறோம். வேறு
யாருடைய புத்தியிலும் இந்த சக்கரம் நினைவுக்கு வராது. அவர்களோ
சத்யுகத்துக்கு இலட்சம் வருடங்கள் கொடுத்து விடுகின்றனர்.
குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த நிச்சயம் உள்ளது - நிச்சயமாக
இந்த 5000 ஆண்டு களுக்குப் பிறகு சக்கரம் சுற்றிக் கொண்டே
உள்ளது. மனிதர்கள் 84 பிறவிகள் தான் எடுக்கின்றனர். கணக்கு
உள்ளது அல்லவா? இந்த தேவி-தேவதா தர்மம் அத்வைத் (பிளவு படாத ஒரே)
தர்மம் என்றும் சொல்லப் படுகின்றது. அத்வைத் சாஸ்திரமும் கூட
ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதுவும் ஒன்று தான். மற்றப்படியோ
அநேக தர்மங்கள் உள்ளன. சாஸ்திரங்களும் அநேகம். நீங்கள் எல்லாம்
ஒன்று தான். ஒருவர் மூலமாக ஒரே வழிமுறை கிடைக்கின்றது. அது
அத்வைத் மத் எனச் சொல்லப் படுகின்றது. இந்த அத்வைத் மத்
உங்களுக்குக் கிடைக்கின்றது. தேவி-தேவதா ஆவதற்காகத்தான் இந்தப்
படிப்பு, அதனால் பாபா ஞானக்கடல், ஞானம் நிறைந்தவர் எனச்
சொல்லப்படுகின்றார். குழந்தைகள் புரிந்து கொண்டுள்ளனர், புது
உலகத்திற்காக, நமக்கு பகவான் கற்பிக்கிறார். இதை மறக்கக் கூடாது.
பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் எப்போதாவது ஆசிரியரை மறக்கிறார்களா
என்ன? கிடையாது. இல்லறத்தில் இருப்பவர்களும் கூட பெரிய பதவி
பெறுவதற்காகப் படிக்கின்றனர். நீங்களும் கூட இல்லறத்தில்
இருந்தவாறு படிக்கிறீர்கள், தங்களுடைய முன்னேற்றத்தை
உருவாக்கிக் கொள்வதற்காக. மனதில் இது வர வேண்டும் - நாம்
எல்லையற்ற தந்தையிடம் படித்துக் கொண்டிருக்கிறோம். சிவபாபாவும்
பாபா, பிரஜாபிதா பிரம்மாவும் பாபா. பிரஜாபிதா பிரம்மா ஆதி தேவர்
என்ற பெயர் அனைவரும் அறிந்தது. கடந்த காலத்தில் வாழ்ந்திருந்து
சென்றுள்ளார், அவ்வளவு தான். எப்படி காந்தியும் கூட முன்பு
இருந்து சென்றுள்ளார். அவரை பாபுஜி எனச் சொல்கின்றனர். ஆனால் (அர்த்தம்)
புரிந்து கொள்ளாமல் இப்படியே சொல்லி விடுகின்றனர். இந்த சிவபாபா
உண்மையிலும் உண்மையாகவே இருக்கிறார். பிரம்மா பாபாவும்
உண்மையிலும் உண்மையாகவே உள்ளார். லௌகிக் தந்தையும் உண்மையாகவே
உள்ளார். மற்றப்படி மேயர் முதலானவர்களையோ வெறுமனே தந்தை
எனச்சொல்லி விடுகின்றனர். அதெல்லாம் செயற்கையானது. இது தான்
உண்மையானது. பரமாத்மா தந்தை வந்து ஆத்மாக் களைப் பிரஜாபிதா
பிரம்மா மூலம் தம்முடையவர்களாக ஆக்குகிறார். இவருக்கோ
நிச்சயமாக ஏராளமான குழந்தைகள் இருப்பார்கள். சிவபாபாவுக்கு
அனைவருமே குழந்தைகள். அவரை அனைவரும் நினைவு செய்கின்றனர்.
பிறகும் கூட ஒரு சிலர் அவரை ஏற்றுக் கொள்வதில்லை, பக்கா
நாஸ்திகர்களாக உள்ளனர் - அவர்கள் சொல்கின்றனர், இது
சங்கல்பத்தின் (எண்ணத்தினால்) உலகம் உருவாகியுள்ளது என்று.
இப்போது உங்களுக்குத் தந்தை புரிய வைக்கிறார். இதை புத்தியில்
நினைவு வையுங்கள் - நாம் படித்துக் கொண்டிருக்கிறோம். படிப்பு
சொல்லித் தருபவர் சிவபாபா. இதை இரவும் பகலும் நினைவில் வைக்க
வேண்டும். இதைத் தான் மாயா அடிக்கடி மறக்கச் செய்கிறது. அதனால்
நினைவு செய்ய வேண்டியுள்ளது. தந்தை, ஆசிரியர், குரு மூவரை யும்
மறந்து விடுகின்றனர். அந்த மூவருமே ஒருவர் தான் என்றாலும்
மறந்து விடுகின்றனர். இராவணனோடு யுத்தம் என்பது இதனால் தான்.
பாபா சொல்கிறார் - ஹே ஆத்மாக்களே, நீங்கள் சதோபிரதானமாக
இருந்தீர்கள். இப்போது தமோபிரதானமாக ஆகி விட்டீர்கள். சாந்தி
தாமத்தில் இருந்த போது பவித்திரமாக இருந்தீர்கள்.
தூய்மையில்லாமல் எந்த ஓர் ஆத்மாவும் மேலே இருக்க முடியாது.
அதனால் ஆத்மாக்கள் அனைவரும் பதீத-பாவனர் பாபாவை அழைத்துக்
கொண்டே இருக்கின்றனர். எப்போது அனைவரும் பதீத் தமோபிரதானமாக ஆகி
விடுகின்றனரோ, அப்போது பாபா வந்து சொல்கிறார், நான் உங்களை
சதோபிரதானமாக ஆக்குகிறேன். நீங்கள் எப்போது சாந்திதாமத்தில்
இருந்தீர்களோ, அப்போது அனைவரும் பவித்திரமாக இருந்தனர்.
அபவித்திர ஆத்மாக்கள் யாரும் அங்கே இருக்க முடியாது. அனைவரும்
தண்டனைகள் அனுபவித்து அவசியம் பவித்திரமாக வேண்டும்.
பவித்திரமாகாமல் யாரும் திரும்பிச் செல்ல இயலாது. சிலர்
சொல்லலாம், பிரம்மத்தில் ஐக்கியமாகி விட்டார், இன்னார் ஜோதியோடு
ஜோதி யாகக் கலந்து விட்டார் என்று. இவை யனைத்தும் பக்தி
மார்க்கத்தின் அநேக வழிமுறைகள். உங்களுடைய இந்த வழி அத்வைத் மத்
(ஒரே ஒரு வழிமுறை) ஆகும். மனிதரில் இருந்து தேவதாவாகவோ ஒரு பாபா
மட்டுமே ஆக்க முடியும். கல்ப-கல்பமாக பாபா படிப்பு சொல்லித்
தருவதற்காக வருகிறார். அவருடைய நடிப்பு அப்படியே கல்பத்திற்கு
முன் போலவே நடை பெறுகின்றது. இது ஆரம்பம், முடிவு இல்லாத
உருவாக்கப்பட்ட டிராமா இல்லையா? சிருஷ்டிச் சக்கரம் சுற்றிக்
கொண்டே உள்ளது. சத்யுகம், திரேதா, துவாபரயுகம், கலியுகம், பிறகு
இந்த சங்கமயுகம். இந்த தெய்வீக தர்மம், இஸ்லாமிய தர்மம், புத்த
தர்மம், கிறிஸ்துவ தர்மம், ஆகியவை முக்கிய தர்மங்களாகும். அதில்
இராஜ்யம் நடை பெறுகின்றது. பிராமணர்களுக்கு இராஜ்யம் கிடையாது.
கௌரவர்களுக்கும் இராஜ்யம் கிடையாது. இப்போது குழந்தை கள்
நீங்கள் எல்லையற்ற தந்தையை அடிக்கடி நினைவு செய்ய வேண்டும்.
நீங்கள் பிராமணர்களுக்கும் கூடப் புரிய வைக்க முடியும். பாபா
அநேக தடவைகள் புரிய வைத்துள்ளார் - முதல்-முதலில் பிராமணர்
களாகிய குடுமி உயர்ந்தவர்கள். பிரம்மாவின் வம்சாவளி நீங்கள்
தான். இதை நீங்கள் அறிவீர்கள். பிறகு பக்தி மார்க்கத்தில் நாம்
தான் பூஜைக்குரிய நிலையில் இருந்து பூஜாரி ஆகிறோம். மீண்டும்
இப்போது நாம் பூஜைக்குரியவராக ஆகிக் கொண்டிருக்கிறோம். அந்த
பிராமணர்கள் இல்லற வாசிகளாக உள்ளனர். சந்நியாசிகள் அல்ல.
சந்நியாசியாக இருப்பவர்கள் ஹடயோகிகள். வீடு-வாசலை விட்டுச்
செல்வது ஹடம் (பிடிவாதத்துடன் கடைபிடித்தல்) இல்லையா? ஹடயோகி
களும் அநேக விதமான யோகங்களைக் கற்றுத் தருகின்றனர்.
ஜெய்ப்பூரில் ஹடயோகிகளின் மியுசியமும் உள்ளது. இராஜ யோகத்தின்
சித்திரங்கள் இல்லை. இராஜயோகத்தின் சித்திரங்கள் இங்கே
தில்வாடாவில் உள்ளன. இவர்களின் மியுசியமோ இல்லை. ஹடயோக
சம்மந்தமான மியுசியங்கள் எத்தனை உள்ளன! இராஜயோகத்தின் கோவில்
இங்கே பாரதத்தில் தான் உள்ளது. இது சைதன்யமானது. மனிதர்களுக்கு
சொர்க்கம் எங்கே உள்ளது என்பது பற்றி எதுவும் தெரியாது.
தில்வாடா கோவிலில் கீழே தபஸ்யாவில் அமர்ந்துள்ளனர். முழுமையான
ஞாபகார்த்தமாக உள்ளது. நிச்சயமாக சொர்க்கத்தை மேலே தான் காட்ட
வேண்டும். இந்த காலச் சக்கரம் சுற்றிக் கொண்டே தான் இருக்கிறது.
அரைக்கல்பத்திற்குப் பிறகு சொர்க்கம் கீழே போய்விடும். அதன்
பின் அரைக்கல்பத்திற்குப் பிறகு சொர்க்கம் மேலே வரும். இதன்
ஆயுள் எவ்வளவு என்பது பற்றி யாருக்கும் தெரியாது. உங்களுக்கு
பாபா சக்கரம் முழுவதையும் புரிய வைத்துள்ளார். நீங்கள்
ஞானத்தைப் பெற்றுக் கொண்டு மேலே செல்கிறீர்கள். சக்கரம் முடிவடை
கின்றது, பிறகு மறுபடியும் சக்கரம் சுற்ற ஆரம்பமாகும். இது
புத்தியில் ஓட வேண்டும். எப்படி அவர்கள் (சாஸ்திரங் கள்
சம்மந்தப்பட்ட) ஞானத்தைப் படிக்கின்றனர் என்றால் புத்தியில்
புத்தகம் முதலிய அனைத்தும் நினைவிருக்கிறது இல்லையா? இதுவும்
படிப்பு தான். இது முழுமையாக நிறைந்து இருக்க வேண்டும். மறக்கக்
கூடாது. இந்தப் படிப்பைப் படிப்பதற்கு முதியவர், இளைஞர்கள்,
குழந்தைகள் முதலான அனைவரும் படிப்பதற்கு உரிமை உள்ளது. அலஃப் (தந்தை)
பற்றி அறிந்து கொண்டால் போதும். தந்தையை அறிந்து கொண்டால்
தந்தையின் ஆஸ்தியும் புத்தியில் வந்து விடும். மிருகங்களுக்கும்
அவற்றின் பிள்ளைகள் முதலியன பற்றி புத்தியில் உள்ளது.
காட்டுக்குப் போய்விட்டாலும் கூட வீடு, பிள்ளைகள் நினைவு வந்து
கொண்டே இருக்கும். தாமாகவே தேடிக் கொண்டு வந்து விடும். இப்போது
பாபா சொல்கிறார், குழந்தைகளே, என்னை மட்டுமே நினைவு செய்யுங்கள்,
மேலும் தங்களின் வீட்டை நினைவு செய்யுங்கள். அங்கிருந்து தான்
நீங்கள் பார்ட்டை நடிப்பதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள்.
ஆத்மாவுக்கு வீடு மிகவும் பிரியமானது. எவ்வளவு நினைவு
செய்கின்றனர், ஆனால் வழியை மறந்து விட்டனர். உங்களுடைய
புத்தியில் உள்ளது, நாம் வெகு துôரத்தில் வசிப்பவர்கள். ஆனால்
அங்கே எப்படிப் போவது, நாம் ஏன் அங்கே செல்ல முடியாது, எதுவும்
தெரியாது. அதனால் பாபா சொல்லியிருந்தார் - பூல்-புலையா (மறதியின்)
விளையாட்டையும் உருவாக்குகின்றனர், எங்கிருந்து சென்றாலும்
வாசல் அடைக்கப் பட்டுள்ளது. இப்போது நீங்கள் அறிவீர்கள், இந்த
யுத்தத்திற்குப் பிறகு சொர்க்கத்தின் வாசல் திறக்கும். இந்த
மரண உலகத்திலிருந்து அனைவரும் சென்று விடுவார்கள். இவ்வளவு
மனிதர்கள் அனைவரும் நம்பர்வார் அவரவர் தர்மத்தின் அனுசாரம்
மற்றும் நடிப்பின் பாகத்திற்கேற்றபடி போய் சாந்தி தாமத்தில்
இருப்பார்கள். உங்களுடைய புத்தியில் இந்த அனைத்து விஷயங்களும்
உள்ளன. மனிதர்கள் பிரம்ம தத்துவத்தில் செல்வதற்காக எவ்வளவு
கஷ்டப்படுகிறார்கள்! சப்தத்திற்கு அப்பால் செல்ல வேண்டும்.
ஆத்மா சரீரத்திலிருந்து வெளியேறி விட்டால் பிறகு சப்தம் இருப்ப
தில்லை. குழந்தைகள் அறிவார்கள், அதுவோ நம்முடைய இனிமையான வீடு.
பிறகு தேவதை களுடையது இனிமையான இராஜதானி, அத்வைத் (பிளவில்லாத)
இராஜதானி.
பாபா வந்து இராஜயோகம் கற்பிக்கிறார். ஞானம் முழுவதையும் புரிய
வைக்கிறார். அவற்றையே பிறகு பக்தியில் சாஸ்திரங்கள் முதலியவற்றை
அமர்ந்து உருவாக்கியுள்ளனர். இப்போது நீங்கள் இந்த சாஸ்திரம்
முதலான வற்றைப் படிக்க வேண்டியதில்லை. அந்தப் பள்ளிக்கூடங்களில்
வயது முதிர்ந்த மாதாக்கள் முதலியவர்கள் படிப்பதில்லை. இங்கோ
அனைவரும் படிக்கின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் அமரலோகத்தில்
தேவதை ஆகி விடுகிறீர்கள். அங்கே யாரையும் நிந்தனை செய்கிற
மாதிரி எந்த ஒரு வார்த்தையும் பேசப் படுவதில்லை. இப்போது
நீங்கள் அறிவீர்கள், சொர்க்கம் முன்பு இருந்து கடந்து விட்டது,
அதற்கு மகிமை உள்ளது. எத்தனைக் கோவில்கள் கட்டுகின்றனர்!
அவர்களிடம் கேளுங்கள் - இந்த லட்சுமி-நாராயணர் எப்போது இருந்து
சென்றுள்ளனர்? எதுவும் தெரியாது. இப்போது நீங்கள் அறிவீர்கள்,
நாம் நம்முடைய வீட்டுக்குச் செல்ல வேண்டும். குழந்தைகளுக்குப்
புரிய வைக்கப் பட்டுள்ளது - ஓம் என்பதன் அர்த்தம் வேறு, மற்றும்
ஹம் ஸோ என்பதன் அர்த்தம் வேறு. அவர்கள் பிறகு ஓம், ஸோ ஹம் ஸோ -
இரண்டின் அர்த்தமும் ஒன்று என ஆக்கி விட்டனர். ஆத்மாக்கள்
நீங்கள் சாந்திதாமத்தில் வசிப்பவர்கள். பிறகு பார்ட்டை
நடிப்பதற்காக வருகிறீர்கள். தேவதா, சத்திரிய, வைசிய,
சூத்திரராக ஆகிறீர்கள். ஓம் என்றால் நாம் ஆத்மா. எவ்வளவு
வேறுபாடு! அவர்கள் பிறகு இரண்டையும் ஒன்றாக்கி விடுகின்றனர்.
இவை புத்தி மூலம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களாகும்.
யாராவது முழுமையாகப் புரிந்து கொள்ள முடிய வில்லை என்றால் பிறகு
தூங்கி விழுந்து கொண்டே இருப்பார்கள். வருமானத்தின் போது
ஒருபோதும் தூங்கி விழுவதில்லை. அந்த வருமானமோ அல்ப
காலத்திற்கானது. இதுவோ அரைக் கல்பத்திற்கானது. ஆனால் புத்தி
வேறு பக்கம் அலைகிறது என்றால் பிறகு களைத்துப் போகின்றனர்.
கொட்டாவி விட்டுக்கொண்டே இருக் கின்றனர். நீங்கள் கண்களை மூடிக்
கொண்டு அமரக் கூடாது. நீங்கள் அறிவீர்கள், ஆத்மா அழியாதது,
சரீரம் அழியக் கூடியது. கலியுக நரகவாசி மனிதர்கள்
பார்ப்பதற்கும் நீங்கள் பார்ப் பதற்கும் இரவு-பகலுக்குள்ள
வேறுபாடு ஆகி விடுகின்றது. ஆத்மாக்கள் நாம் பாபாவிடம் படித்துக்
கொண்டிருக்கிறோம். இது யாருக்கும் தெரியாது. ஞானக்கடல் பரமபிதா
பரமாத்மா வந்து படிப்பு சொல்லித் தருகிறார். ஆத்மாக்கள் நாம்
கேட்டுக் கொண்டிருக்கிறோம். தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையை
நினைவு செய்வதால் விகர்மங்கள் விநாசமாகும். உங்கள் புத்தி மேலே
சென்று விடும். சிவபாபா நமக்கு ஞானம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இதில் மிகவும் தூய்மை யான புத்தி வேண்டும். தூய்மையான புத்தியை
அமைத்துக் கொள்வதற்காக பாபா யுக்தி சொல்கிறார் - தன்னை ஆத்மா
என உணர்வதால் தந்தையின் நினைவு நிச்சயமாக வரும். பாபாவின்
நினைவு வர வேண்டும், முழுக் கல்பத்திலும் விடுபட்டிருந்த
சம்மந்தம் இப்போது இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் தன்னை
ஆத்மா என உணர்கிறோம். அங்கோ பிராலப்தம், (பலனின் அனுபவம்) சுகமே
சுகமாக இருக்கும். துக்கத்தின் விசயம் இருக்காது. அதை சொர்க்கம்
எனச் சொல்கின்றனர். சொர்க்கத்தைப் படைக்கும் தந்தை தான்
சொர்க்கத்தின் எஜமானராக ஆக்குகிறார். அப்படிப்பட்ட தந்தையையும்
கூட எவ்வளவு மறந்து விடுகின்றனர். தந்தை வந்து குழந்தைகளைத்
தத்தெடுக் கிறார். மார்வாடிகள் அதிகமாகத் தத்தெடுக்கின்றனர்.
அதனால் அந்தக் குழந்தைகளுக்குக் குஷி வரும் இல்லையா? - நான்
பணக்காரரின் மடியில் வந்துள்ளேன். பணக்காரரின் குழந்தை ஏழையிடம்
ஒருபோதும் செல்லாது. இவர்கள் பிரஜாபிதாவின் குழந்தைகள் என்றால்
நிச்சயமாக முகவம்சாவளியாக இருப்பார்கள் இல்லையா? பிராமணர்
களாகிய நீங்கள் முகவம்சாவளி. அவர்கள் குகவம்சாவளி (விகாரத்தில்
பிறந்தவர்கள்). இந்த வித்தியாசத்தை நீங்கள் அறிவீர்கள். நீங்கள்
எப்போது புரிய வைப்பீர்களோ, அப்போது வாய் வழிவம்சாவளி ஆவார்கள்.
இது தான் தத்தெடுப்பது என்பது. மனைவியை என்னுடைய மனைவி எனப்
புரிந்து கொண்டுள்ளனர். இப்போது மனைவி குகவம்சாவளியா, முக (வாய்வழி)
வம்சாவளியா? மனைவி முக (வாய் வழி) வம்சாவளி. பிறகு எப்போது
குழந்தைகள் உருவாகிறார் களோ, அவர்கள் குகவம்சாவளி. பாபா
சொல்கிறார், இவர்கள் அனைவரும் முக வம்சாவளி. என்னுடையவள் எனச்
சொன்னதால் என்னுடையவளாக ஆனாள் இல்லையா? என்னுடைய குழந்தைகள்
எனச் சொல்வதால் நஷா அதிகரிக்கிறது இல்லையா? ஆக, இவர்கள்
அனைவரும் முகவம்சாவளி. ஆத்மாக்கள் முகவம்சாவளி அல்ல. ஆத்மாவோ
அநாதி அவிநாசி (அழிவற்றது) நீங்கள் அறிவீர்கள், இந்த மனித
சிருஷ்டி எப்படி மாற்றமடைகிறது என்று. பாயின்ட்டுகளோ
குழந்தைகளுக்கு அதிகம் கிடைக்கின்றன. பிறகும் கூட பாபா
சொல்கிறார் - வேறு எந்த ஒரு தாரணையும் ஆவதில்லை, வாயினால்
எதுவும் சொல்ல முடியவில்லை என்றால், நல்லது, நீங்கள் பாபாவை
நினைவு செய்து கொண்டே இருங்கள். அப்போது நீங்கள், சொற்பொழிவு
செய்பவர்களை விட உயர்ந்த பதவி பெற முடியும். சொற்பொழிவு
செய்பவர்கள் சில சமயம் புயலில் விழுந்து விடுகின்றனர். அவர்கள்
கீழே விழாமல் பாபாவை நினைவு செய்து கொண்டே இருப்பார்களானால்
பெரிய பதவி பெற முடியும். அனைவரைக் காட்டிலும் அதிகமாக யார்
விகாரத்தில் விழுகிறார் களோ, அப்போது 5-வது மாடியில் இருந்து
விழுவதால் எலும்புகள் நொறுங்கிப் போகின்றன. ஐந்தாவது மாடி
என்பது தேக அபிமானம். நாலாவது மாடி காமம், பிறகு இறங்கிக்
கொண்டே வாருங்கள். பாபா சொல்கிறார், காமம் மகாசத்ரு. பாபா,
நாங்கள் விழுந்து விட்டோம் என்று எழுதவும் செய்கின்றனர்.
கோபத்தைப் பற்றி இதுபோல் சொல்ல மாட்டார்கள்- நாங்கள் விழுந்து
விட்டோம் என்று. முகத்தைக் கருப்பாக்கிக் கொள்வதால் பெரிய காயம்
ஏற்பட்டு விடுகிறது. அப்போது காமம் மகாசத்ரு என்று
மற்றவர்களுக்குச் சொல்ல முடியாது. பாபா அடிக்கடி புரிய
வைக்கிறார் - குற்றமான கண்கள் இல்லாதவாறு மிகவும்
எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சத்யுகத்தில் மானபங்கப்படும்
விசயமே கிடையாது. குற்றமான கண்கள் அங்கே கிடையாது. குற்றமற்ற
கண்களாக இருக்கும். அது நாகரிகமான (தவறு நடக்காத) இராஜ்யம்.
இச்சமயம் இருப்பது குற்றமான உலகம். இப்போது ஆத்மாவாகிய
உங்களுக்கு குற்றமற்ற கண்கள் கிடைக் கின்றன. அவை 21
பிறவிகளுக்குக் காரியமாற்றும். அங்கே யாரும் குற்றவாளி ஆவதில்லை.
இப்போது முக்கிய விசயம் பாபா சொல்கிறார் - பாபாவை நினைவு
செய்யுங்கள், 84 பிறவிச் சக்கரத்தை நினைவு செய்யுங்கள். யார்
ஸ்ரீநாராயணனாக உள்ளாரோ, அவர் தான் கடைசியில் வந்து பாக்கியசாலி
ரதமாக ஆகிறார் இதுதான் அதிசயம். அவருக்குள் சிவபாபாவின்
பிரவேசம் நடை பெறுகிறது என்றால் பாக்கியசாலி ஆகிறார். பிரம்மா
தான் விஷ்ணு ஆகிறார், விஷ்ணு தான் பிரம்மா ஆகிறார். இந்த 84
பிறவிகளின் வரலாறு புத்தியில் இருக்க வேண்டும். நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) பாபாவின் நினைவு மூலம் புத்தியைத் தூய்மைப் படுத்த (தெளிவாக்க)
வேண்டும். புத்தி படிப்பினால் சதா நிறைந்திருக்க வேண்டும்.
தந்தை மற்றும் வீட்டை சதா நினைவு வைக்கவும் நினைவுப் படுத்தவும்
வேண்டும்.
2) இந்தக் கடைசிப் பிறவியில் குற்றமான பார்வைக்கு முடிவு
கட்டிவிட்டு குற்றமற்ற கண்கள் உள்ளவராக ஆக வேண்டும்.
குற்றப்பார்வையுள்ள கண்கள் பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருக்க
வேண்டும்.
வரதானம்:
வள்ளல் ஸ்திதி மற்றும் கரைத்துக் கொள்ளும் சக்தியின் மூலம் சதா
தடைகளை அழிப்பவர், சமாதான சொரூபம் ஆகுக.
தடைகளை அழிப்பவர், சமாதான சொரூபம் ஆவதற்கான வரதானம் விசேˆமாக
இரண்டு விசயங் களின் ஆதாரத்தில் பிராப்தியாக கிடைக்கிறது:-
1) நான் வள்ள-ன் குழந்தை. ஆகையால் நான் அனைவருக்கும் கொடுக்க
வேண்டும். மரியாதை கிடைத்தால், அன்பு கிடைத்தால் அன்பு
கொடுப்பேன் என்றில்லாமல் நான் கொடுக்க வேண்டும் என்ற நினைவு சதா
இருக்க வேண்டும்.
2) தனக்காக மற்றும் சம்பந்தம், தொடர்பில் வரும் அனைவருக்காகவும்
ஏற்றுக் கொள்ளும் சக்தி சொருப கடல் ஆக வேண்டும். இந்த இரண்டு
விசேˆங்களின் மூலம் சுப பாவனை, சுப விருப்பம் மூலம் சம்பன்ன
சமாதான சொரூபம் ஆக விடுவீர்கள்.
சுலோகன்:
சத்தியத்தை தனது துணையாக ஆக்கிக் கொண்டால் உங்களது படகு
ஒருபோதும் மூழ்காது.
அவ்யக்த சமிக்கை: தங்களுக்காகவும் மற்றும் அனைவருக்காகவும்
மனதின் மூலமாக யோகத்தின் சக்திகளை பயன்படுத்துங்கள்.
எப்போது மனதில் சதா சுப பாவணை மற்றும் சுபமான ஆசிர்வாதம்
கொடுப்பது இயற்கையான சுபாவமாக ஆகிவிடுகிறதோ, உங்களது மனம்
பிசியாக ஆகிவிடும். மனதில் ஏற்படும் குழப்பங்களிலிருந்து
தானாகவே விலகி விடுவீர்கள். தனது முயற்சியில் சில நேரங்களில்
ஏற்படும் மனமுடைந்த நிலையும் ஏற்படாமல் போய் விடும். மாய
மந்திரமாக ஆகிவிடும்.
|
|
|