11.05.25 காலை முரளி
ஓம் சாந்தி 07.03.2005 பாப்தாதா,
மதுபன்
சம்பூர்ண பவித்ரதாவின் விரதம் இருப்பதும், நான் என்ற தன்மையை
சமர்ப்பணம் செய்வதும் தான் சிவஜெயந்தி கொண்டாடுவதாகும்.
இன்று, விசேஷமாக தந்தை தனது சாலிகிராம் குழந்தைகளுடைய
பிறந்தநாளைக் கொண்டாட வந்துள்ளார். குழந்தைகளாகிய நீங்கள்
தந்தையின் பிறந்தாநாளைக் கொண்டாட வந்துள்ளீர்கள் மேலும்
பாப்தாதா குழந்தைகளின் பிறந்தநாளைக் கொண்டாட வந்துள்ளார்,
ஏனெனில், குழந்தை களிடத்தில் தந்தைக்கு அளவுகடந்த அன்பு
இருக்கின்றது. தந்தை அவதாரம் செய்தவுடனே யக்ஞத்தை படைக்கின்றார்.
மேலும் யக்ஞத்தில் பிராமணர்கள் இல்லை எனில் அந்த யக்ஞம்
முழுமையாகாது. எனவே இந்த பிறந்தநாள் அலௌகீகமானது (இயற்கைக்கு
அப்பாற்பட்டது), விடுபட்டது மேலும் அன்பானது. தந்தைக்கும்,
குழந்தைகளுக்கும் ஒன்றாக பிறந்தநாள் என்பது முழு கல்பத்திலும்
கிடையாது, ஒருபோதும் இருக்கவும் முடியாது. தந்தை நிராகாரமானவர்,
ஒருபக்கம் நிராகாரமாக இருக்கின்றார், மறுபக்கம் பிறந்தநாள்
கொண்டாடுகின்றார். ஒரே ஒரு சிவ தந்தை மட்டுமே, தனக்கென்று
சரீரம் அல்லாதவர், எனவே பிரம்மாவின் உடலில் அவதாரம்
செய்கின்றார், இந்த அவதாரத்தின் நிகழ்வையே சிவஜெயந்தியின்
ரூபத்தில் கொண்டாடு கின்றார்கள். எனவே, தாங்கள் அனைவரும்
தந்தையின் ஜென்ம தினத்தை கொண்டாட வந்துள்ளீர் களா அல்லது
தங்களுடையதை கொண்டாட வந்துள்ளீர்களா? வாழ்த்துக்கள்
கொடுப்பதற்கு வந்துள்ளீர்களா அல்லது வாழத்துக்கள் பெறுவதற்கு
வந்துள்ளீர்களா? இணைந்து இருப்பதற்கான உறுதிமொழியை தந்தை
குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார். இப்பொழுது சங்கமயுகத்திலும்
துணையாக இணைந்து இருக்கின்றார், அவதாரமும் சேர்ந்தே நடந்தேறியது,
மாற்றத்தை கொண்டு வரும் காரியத்திலும் துணையாக இருக்கின்றார்
மேலும் பரம்தாமம் வீட்டிற்கு செல்வதிலும் கூடவே இருக்கின்றார்.
இது தந்தை மற்றும் குழந்தைகளுக்கான அன்பின் வெளிப்பாடு ஆகும்.
சிவஜெயந்தியை பக்தர்கள் கூட கொண்டாடுகின்றார்கள் ஆனால் அவர்கள்
அவரை அழைக்க (கூக்குரல்) மட்டுமே செய்கின்றார்கள், பாடல்
பாடுகின்றார்கள். ஆனால் நீங்கள் கூக்குரல் இடுவ தில்லை,
சந்திக்கின்றீர்கள் (பாபாவை) மேலும் சமமாக ஆகுகின்றீர்கள்.
சந்திப்பது என்றால் அர்த்தம் சதா ஊக்கம் உற்சாகத்தில் பறந்து
கொண்டே இருப்பது, எனவே அதை உற்சவம் என்று அழைக்கின்றார்கள்.
உற்சவத்தின் அர்த்தமே- உற்சாகமாக இருப்பது. எனவே சதா
உற்சவத்தில் அதாவது உற்சாகத்தில் இருப்பவர்கள் தானே! சதா
இருக்கின்றீர்களா அல்லது அவ்வப்போதா? பார்க்கப்போனால் பிராமண
வாழ்வின் மூச்சே- ஊக்கம் உற்சாகம் தான். எப்படி சுவாசம்
இல்லாமல் இருக்க முடியாத, அப்படி பிராமண ஆத்மாக்கள் ஊக்கம்
உற்சாகம் இல்லாமல் பிராமண வாழ்க்கை யில் இருக்க முடியாது.
அப்படி அனுபவம் செய்கின்றீர்கள் தானே! விசேஷமாக ஜெயந்தியை
கொண்டாடுவதற்காக எங்கெங்கிருந்தோ, தூர தூரத்திலிருந்து ஓடோடி
வந்துள்ளதை பாருங்கள். குழந்தைகளின் ஜென்ம தினத்தை
கொண்டாடுவதில் ஏற்படும் மகிழ்ச்சி பாப்தாதாவிற்கு தன்னுடைய
ஜென்ம தினத்தை கொண்டாடுவதில் ஏற்படுவதில்லை, எனவே பாப்தாதா
ஒவ்வொரு குழந்தைக்கும் பலகோடி மடங்கு தட்டுகள் நிரம்ப நிரம்ப
வாழ்த்துக்கள் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார். வாழ்த்துக்கள்,
வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.
பாப்தாதாவிற்கு இன்று உண்மையான பக்தனுடைய நினைவு கூட அதிகமாக
வந்து கொண்டு இருக்கின்றது. அவர்கள் ஒரு நாளுக்கான விரதம்
இருக்கின்றார்கள் மேலும் நீங்கள் முழு வாழ்க்கைக்கான சம்பூர்ண
பவித்திரம் ஆகுவதற்கான விரதம் இருக்கின்றீர்கள். அவர்கள் உணவிற்
கான விரதம் இருக்கின்றார்கள், தாங்களும் கூட மனதிற்கான உணவில்-
வீணான எண்ணங்கள், எதிர்மறையான எண்ணங்கள், அபவித்ரமான
எண்ணங்களின் விரதம் இருக்கின்றீர்கள். உறுதியுடன் விரதம்
இருக்கின்றீர்கள் தானே. இரட்டை வெளிநாட்டினர் - முன்னே
அமர்ந்துள்ளார்கள். இந்த குமாரர்கள் சொல்லட்டும், குமாரர்கள்
விரதத்தில் உறுதியாக உள்ளீர்கள் தானே, பலவீனமாக இல்லையே. மாயா
கேட்டுக் கொண்டு இருக்கின்றது. எல்லோரும் கொடிகளை அசைத்துக்
கொண்டு இருக்கின்றீர்கள், அதை மாயாவும் பார்த்துக் கொண்டு
இருக்கின்றது. எப்பொழுது பவித்ரம் ஆகியே தீருவேன் என்ற விரதம்
இருக்கின்றீர்கள், அப்பொழுது அந்த விரதத்தின் அர்த்தம் -
உயர்ந்த உள்ளுணர்வை உருவாக்குவது என்பதாகும். எப்படி உள்ளுணர்வு
இருக்கின்றதோ அதற்கேற்றபடி திருஷ்டி மற்றும் செயல் தானாகவே
உருவாகுகின்றது. அப்படியெனில், அதற்கான விரதம் இருக்கின்றீர்கள்
தானே? ஒருவர் மற்றவரைப் பார்க்கும் போது, தூய்மையான சுபமான
உள்ளுணர்வுடன், தூய்மையான சுபமான பார்வையுடன் பார்க்கின்றீர்களா?
முகத்தை பார்க் கின்றீர்களா அல்லது நெற்றியின் இடையே
பிரகாசிக்கக்கூடிய ஆத்மாவை பார்க்கின்றீர்களா? சில குழந்தைகள்
கேட்கின்றார்கள் - பேசும் பொழுது, காரியம் செய்யும் பொழுது,
முகத்தை பார்க்க வேண்டியதாக இருக்கின்றது; கண்களின் பக்கம் தான்
பார்வை செல்கின்றது, அப்பொழுது சிலநேரம் முகத்தை பார்க்க
வேண்டியதாக இருக்கின்றது, உள்ளுணர்வு மாறிவிடுகின்றது. பாப்தாதா
சொல் கின்றார் - கண்களுக்கு இடையில் தானே நெற்றியும்
இருக்கின்றது, அந்த நெற்றிக்கு இடையே உள்ள ஆத்மாவை பார்த்து
பேச முடியாதா? இப்பொழுது பாப்தாதா குழந்தைகளுக்கு முன்னால்
அமர்ந்து, குழந்தைகளின் கண்களை பார்த்துக்கொண்டு இருக்கின்றாரா
அல்லது நெற்றிக்கு இடையே பார்த்துக்கொண்டு இருக்கின்றாரா என்று
கண்டுபிடிக்க முடிகின்றதா? இரண்டும் கூட கூடவே தான்
இருக்கின்றது. எனவே முகத்தை பாருங்கள் ஆனால் முகத்தில் இரண்டு
புருவங் களுக்கு இடையில் பிரகாசிக்கக்கூடிய நட்சத்திரத்தை
பாருங்கள். எனவே இந்த விரதத்தை எடுங்கள், ஏற்கெனவே
எடுத்துள்ளீர்கள் ஆனால் கவனத்தை அதிகப்படுத்துங்கள். ஆத்மாவை
பார்த்து பேசுங்கள், ஆத்மா ஆத்மாவுடன் பேசிக்கொண்டு
இருக்கின்றது. ஆத்மா பார்த்துக் கொண்டு இருக்கின்றது. அப்பொழுது
உள்ளுணர்வு சதா சுபமானதாகவே இருக்கும் மேலும் அதன் கூடவே
மற்றொரு லாபம் என்னவென்றால் எப்படி உள்ளுணர்வோ அப்படி
வாயுமண்டலம் (சூழ்நிலை) உருவாகுகின்றது. வாயுமண்டலம்
உயர்வானதாக ஆகும்பொழுது, சுயத்திற்கான புருஷார்த்தத்தின் கூடவே
சேவையும் நடந்தேறிவிடுகின்றது. அப்பொழுது இரட்டை லாபம் இல்லையா!
தன்னுடைய உள்ளுணர்வை அந்த அளவிற்கு உயர்வாக ஆக்குங்கள்,
அதன்மூலம் எப்படிப்பட்ட விகாரியாக, பதீதமானவர்களாக இருப்பினும்
அவர்கள் மாறிவிட வேண்டும். அப்படிப்பட்ட விரதம் சதா தன்னுடைய
நினைவில், சொரூபத்தில் (வெளிப்பாட்டில்) இருக்கட்டும்.
இன்று பாப்தாதா குழந்தைகளின் சார்ட்-ஐ பார்த்தார், தன்னுடைய
உள்ளுணர்வு மூலமாக வாயு மண்டலத்தை உருவாக்குவதற்கு பதிலாக
ஆங்காங்கே, அவ்வப்போது, மற்றவர்களுடைய வாயு மண்டலத்தினால்
பாதிப்பிற்கு உள்ளாகிவிடுகன்றார்கள். காரணம் என்னவாக
இருக்கின்றது? குழந்தைகள் ஆன்மீக உரையாடலில் மிகவும்
இனிமையிலும் இனிமையான விஷயங்களை பேசு கின்றார்கள், என்ன
சொல்கின்றார்கள் என்றால் - இவருடைய விசேஷதா (சிறப்புத்தன்மை)
நன்றாக உள்ளது, இவரிடமிருந்து சகயோகம் (உதவி) மிக நன்றாக
கிடைக்கின்றது, ஆனால் விசேஷதா என்பது பிரபுவினால்
கொடுக்கப்பட்ட பரிசு. பிராமண வாழ்வில் என்னவெல்லாம் கிடைத்
துள்ளதோ, என்ன விசேஷதாவாயினும் அனைத்தும் பிரபுவின் பிரசாதம்
ஆகும், பரிசாகும். கொடுக்கக் கூடியவரை மறந்து எடுக்கக்கூடியவரை
நினைவு செய்வது... பிரசாதம் என்பது ஒருபோதும் தனிப்பட்ட
நபருடையதாக பாடப்படுவது அல்ல, பிரபுவின் பிரசாதமாக சொல்லப்
படுகின்றது. இன்னாருடைய பிரசாதம் என்று சொல்லப்படுவதில்லை.
சகயோகம் கிடைக்கின்றது என்றால் நல்ல விஷயம் ஆனால் சகயோகத்தை
கொடுக்க வைக்க கூடிய வள்ளலின் நினைவு மறந்து விட வில்லை தானே!
எனவே உறுதியிலும் உறுதியான பிறந்த நாளிற்கான விரதம்
இருக்கின்றீர்களா? விருத்தி (உள்ளுணர்வு) மாறிவிட்டதா?
முழுமையான தூய்மைக்கான - உண்மையிலும் உண்மையான விரதம் இருங்கள்
மேலும் உறுதிமொழி செய்யுங்கள்.
சோதனை செய்யுங்கள்-பெரிய பெரிய விகாரங்களுக்கான விரதம்
இருக்கின்றீர்கள் ஆனால் அதனுடைய சின்ன சின்ன குழந்தை
குட்டிகளிடமிருந்து முக்தி பெற்று விட்டீர்களா? இல்லற வாழ்வில்
கூட தன் பிள்ளைகளைக் காட்டிலும் பேரன் பேத்தி மீது அதிக அன்பு
இருக்கும். தாய்மார் களுக்கு அன்பு இருக்கின்றது தானே. எனவே,
பெரியதிலும் பெரியதின் மீது வெற்றி பெற்று விட்டீர் கள் ஆனால்
சின்ன சின்ன சூட்சம சுவரூபத்தில் யுத்தம் செய்யவில்லை தானே?
அநேகர் சொல்கின்றார்கள்- எனக்கு (இதன் மீது)பற்று இல்லை ஆனால்
(இது) நன்றாக இருக்கின்றது. இந்த பொருள் மிகவும் நன்றாக
இருக்கின்றது, ஆனால் பற்று இல்லை. ஏன் விசேஷமாக நன்றாக இருக்
கின்றது? எனவே சோதனை செய்யுங்கள். சின்ன சின்ன ரூபத்தில் கூட
அபவித்திரதாவின் அம்சம் கூட இருந்து விடவில்லை தானே? ஏனெனில்
அம்சத்திலிருந்து எப்பொழுது வேண்டுமானாலும் வம்சம்
பிறப்பெடுக்க முடியும். எந்தவொரு விகாரம்-அது சிறிய ரூபத்திலோ
அல்லது பெரிய ரூபத்திலோ வருவதற்கு காரணம் - ஒரு சப்தத்தினுடைய
வெளிப்பாடாகும், அந்த ஒரு சப்தம் - "நான்". தேக உணர்விலான "நான்".
இந்த "நான்" என்ற ஒரு சப்தத்திலிருந்து அபிமானமும் (அகங்காரமும்)
வருகின்றது மேலும் அகங்காரம் பூர்த்தி ஆகவில்லை என்றால் கோபமும்
வருகின்றது ஏனெனில் அபிமானத்தின் அடையாளம் - அவமானத்தின் ஒர்
சப்தத்தைக் கூட சகித்துக்கொள்ள முடியாது, எனவே கோபம் வந்து
விடுகின்றது.
பக்தர்கள் என்னவோ பலியிடுகின்றார்கள் ஆனால் நீங்கள் இன்றைய
தினம் நான் என்ற தன்மையை தந்தையிடம் அர்ப்பணித்து விடுங்கள்.
செய்யத்தான் வேண்டும், ஆகத்தான் வேண்டும்-என்று யோசிப்பதை
விடுங்கள். சக்தி உள்ளது என்றால் சக்தி நிறைந்தவராகி(நான் என்ற
தன்மையை) முடித்துவிடுங்கள். இது ஒன்றும் புதிய விஷயமல்ல.
எத்தனையோ கல்பம், எத்தனையோ முறை சம்பூர்ணம் ஆகியூள்ளீர்கள் (முழுமை
நிலையை அடைந்துள்ளீர்கள்). கல்பம் கல்பமாக ஆகியூள்ளீர்கள்,
ஏற்கெனவே உருவானது மீண்டும் உருவாகிக்கொண்டு இருக்கின்றது,
மீண்டும் செய்தால் போதுமானது. உருவானதை-உருவாக்க வேண்டும், எனவே
தான் உருவாகி உருவாகிக் கொண்டிருக்கும் நாடகம் என்று
சொல்லப்படுகின்றது. உருவாகி இருக்கின்றது - அதை மீண்டும்
செய்வது என்பது உருவாக்குவதாகும். கடினமா அல்லது சுலபமா?
பாப்தாதா புரிந்துள்ளார் - சங்கமயுகத்தின் வரதானம் - சகஜ
புருஷார்த்தி (எளிமையான முயற்சியாளர்). இந்தப் பிறவியில் சகஜ
புருஷார்த்தத்தின் வரதானத்தின் மூலமாக 21 பிறவிகளுக்கு
எளிமையான வாழ்க்கை தானாகவே பலனாக கிடைத்து விடுகின்றது.
பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் முயற்சி யிலிருந்து
விடுவிப்பதற்காக வந்துள்ளார்.
63 பிறவிகள் கடினமாக உழைத்துள்ளீர்கள், ஒரு பிறவி -
பரமாத்மாவின் மீது கொண்ட அன்பு, காதல் மூலமாக கடின
உழைப்பிலிருந்து விடுபடுங்கள். எங்கே காதல் இருக்கின்றதோ அங்கே
கடின உழைப்பு இல்லை, எங்கே கடின உழைப்பு இருக்கின்றதோ அங்கே
காதல் இல்லை. எனவே பாப்தாதா சகஜ புருஷார்த்தி ஆகுக என்ற
வரதானத்தை கொடுத்துக்கொண்டு இருக்கின்றார் மேலும்
முக்தி(உழைப்பிலிருந்து) பெறுவதற்கான சாதனம்-காதல்,
தந்தையிடத்தில் உளமாற அன்பு கொள்தல். காதலின் மூலமாக கடின
உழைப்பிலிருந்து விடுபடுங்கள். அன்பில் மூழ்கி விடுங்கள் மேலும்
மிகப்பெரிய எந்திரம் (பாதுகாப்பிற்கான கருவி) - மன்மனாபவ என்ற
மந்திரம் ஆகும். எனவே இந்த எந்திரத்தை காரியத்தில்
பயன்படுத்துங்கள். காரியத்தில் ஈடுபடுத்த வருகின்றது தானே!
பாப்தாதா பார்த்தார் - சங்கமயுகத்தில் பரமாத்மா மீது கொண்ட
அன்பின் மூலமாக, பாப்தாதா மூலமாக எண்ணற்ற சக்திகள்
கிடைத்திருக்கின்றது, குணங்கள் கிடைத்திருக்கின்றது, அறிவாற்றல்
கிடைத்திருக்கின்றது, குஷி கிடைத்திருக்கின்றது, பிரபுவினால்
கிடைக்கப்பெற்ற இந்த அனைத்து பரிசுகளையும், பொக்கிஷங்களையும்
சரியான நேரத்தில் காரியத்தில் ஈடுபடுத்துங்கள்.
எனவே பாப்தாதா என்ன விரும்புகின்றார், கேட்டீர்களா? ஒவ்வொரு
குழந்தையும் சகஜ (எளிமையான) புருஷார்த்தி, எளிமையும் வேண்டும்,
தீவிரமும் வேண்டும். திடத்தன்மையை (மனஉறுதியை) பயன்படுத்துங்கள்.
ஆகியே தீர வேண்டும், நாம் ஆகவில்லை என்றால், பின்னர் யார்
ஆகுவார்கள். நாம் தான் ஆகியிருந்தோம், நாம் தான் ஆகுகின்றோம்
மேலும் ஒவ்வொரு கல்பத்திலும் நாமே ஆகுவோம். இவ்வளவு உறுதியான
நம்பிக்கையை தன்னிடத்தில் தாரணை செய்தே ஆக வேண்டும். செய்வோம்
என்று சொல்லாதீர்கள், செய்து தான் ஆக வேண்டும். நடந்தே ஆக
வேண்டும், நடத்தப்பட வேண்டும்.
பாப்தாதா உள்நாட்டு மேலும் வெளிநாட்டு குழந்தைகளைப் பார்த்து
குஷி அடைகின்றார். ஆனால் தன் முன்னால் நேரில்
இருக்கக்கூடியவர்களை மட்டும் பார்த்துகொண்டு இருக்கவில்லை,
நான்கு பக்கங்களிலும் உள்ள உள்நாட்டு, வெளிநாட்டு குழந்தைகளை
பார்த்துக்கொண்டு இருக்கின்றார். பெரும்பான்மையோரிடமிருந்து,
பல இடங்களிலிருந்து பிறந்த நாளிற்கான வாழ்த்துக்கள் வந்துள்ளது,
வாழ்த்து அட்டைகள் (கார்ட்) வந்து சேர்ந்துள்ளது, இ-மெயில்
வந்து சேர்ந்துள்ளது, உள்ளத்தின் சங்கல்பம் கூட வந்து
சேர்ந்துள்ளது. தந்தை கூட குழந்தைகளுக்கான பாடலை பாடுகின்றார்,
எப்படி நீங்கள் பாபவுக்காக பாடுகின்றீர்களோ - நீங்கள் அதிசயமான
செயலை(கமால்) செய்து விட்டீர்கள் பாபா என்று, தந்தையும்
குழந்தைகளுக்காக பாடுகின்றார்-இனிமையான குழந்தைகள் அதிசயமான
செயலை செய்து விட்டார்கள். பாப்தாதா சதா சொல்கின்றார் அதாவது
தாங்களாவது முன்னால் அமர்ந்துள்ளீர்கள் ஆனால் தூரத்தில்
உள்ளவர்கள் கூட தந்தையின் இதயத்தில் அமர்ந்துள்ளனர். இன்று
நான்கு பக்கங்களிலும் உள்ள குழந்தைகளின் சங்கல்பத்தில் இருப்பது
- வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள். சப்தம்-
பாப்தாதாவின் காதுகளுக்கு வந்து சேருகின்றது, சங்கல்பம் -
மனதில் வந்து சேருகின்றது. இது வெறும் கார்ட் மற்றும் கடிதம்
தான், ஆனாலும் கூட இது மிகப்பெரிய வைரத்தைக் காட்டிலும்
அதிகப்படியான மதிப்புமிக்க பரிசாகும். அனைவரும் கேட்டுக்கொண்டு
இருக்கின்றீர்கள், மகிழ்ந்து கொண்டு இருக்கின்றீர்கள். எனவே
அனைவரும் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிவிட்டீர்கள். இரண்டு
வருடமானவராக இருக்கலாம், ஒரு வருடமானவராக இருக்கலாம், ஒருவார
காலம் ஆனவராக இருக்கலாம், ஆனாலும் யக்ஞத்திற்கான பிறந்தநாள்
தினம் இருக்கின்றது. அனைத்து பிராமணர்களோ யக்ஞத்தின்
நிவாசிகளாகத்தான் (யக்ஞயத்தில் வசிப்பவர்களாக) இருக்கின்றீர்கள்,
எனவே அனைத்து குழந்தைகளுக்கும் மிக மிக மனமார்ந்த அன்பு நினைவு
களும், ஆசிர்வாதமும் உரித்தாகுக, சதா ஆசிர்வாதத்தில்
வளர்ந்துகொணடே இருங்கள், பறந்து கொண்டே இருங்கள். ஆசிர்வாதம்
கொடுப்பதும், எடுப்பதும் எளிமை தானே! எளிமையா? எளிமை என்று
புரிந்துள்ளவர்கள் கை உயர்த்துங்கள். கொடியை அசையுங்கள். எனவே
ஆசிர்வாதத்தை விட்டு விட மாட்டீர்களே? அனைத்தையும் விட சகஜமான
புருஷார்த்தம் செய்வதற்கான வழி - ஆசிர்வாதம் கொடுப்பது,
ஆசிர்வாதம் எடுப்பது. இதில் யோகாவும் வந்து விடுகின்றது,
ஞானமும் வந்து விடுகின்றது, தாரணையும் வந்து விடுகின்றது,
சேவையும் வந்து விடுகின்றது. ஆசிர்வாதம் கொடுப்பது மற்றும்
எடுப்பதில் நான்கு பாடங்களும் வந்து விடுகின்றது.
எனவே இரட்டை வெளிநாட்டவருக்கு ஆசிர்வாதம் கொடுப்பது மற்றும்
எடுப்பது எளிமை தானே! எளிமையா? 20 வருடம் (ஞானத்தில் வந்து)
ஆனவர்கள் யார் வந்துள்ளீர்களோ, அவர்கள் கைகளை உயர்த்துங்கள்.
தாங்களோ 20 வருடம் ஆனவர்கள் ஆனால் தந்தையோ தங்களுக்கு பலகோடி
மடங்கு வாழ்த்துக்களை கொடுத்துக் கொண்டு இருக்கின்றார். எத்தனை
தேசங்களிலிருந்து வந்துள்ளார்கள்? (69 தேசங்களிலிருந்து)
வாழ்த்துக்கள். 69வது பிறந்தநாளை கொண்டாடுவதற்கு 69
தேசங்களிலிருந்து வந்துள்ளீர்கள். எவ்வளவு நன்றாக இருக்கின்றது.
வருவதில் அசௌகரியம் எதுவும் ஏற்படவில்லை தானே? எளிமையாக வந்து
விட்டீர்கள் தானே. எங்கே காதல் இருக் கின்றதோ அங்கே கடின
உழைப்பு இல்லை. ஆக, இன்றைய விசேஷ வரதானமாக எதை நினைவில்
வைப்பீர்கள்? சகஜ புருஷார்த்தி. சகஜமான காரியம் வேகம் வேகமாகவே
முடிக்கப்பட்டு விடுகின்றது. உழைப்பிற்கான காரியம் கடினமாக
இருக்கின்றது, நேரம் ஆகுகின்றது. எனவே நீங்கள் அனைவரும் யார்?
சகஜமான புருஷார்த்தி. சொல்லுங்கள் (சகஜ புருஷார்த்தி என்று),
நினைவில் வையுங்கள். தனது தேசத்திற்கு சென்ற பிறகு உழைப்பில்
ஈடுபடக் கூடாது. ஒரு வேளை கடின உழைப்பிற்கான காரியம் ஏதேனும்
வந்தாலும் கூட மனதார சொல்லுங்கள் - பாபா, என்னுடைய பாபா -
அப்பொழுது உழைப்பு முடிந்து போய்விடும். நல்லது,
கொண்டாடிவிட்டீர்கள் தானே, தந்தையும் கொண்டாடிவிட்டார்,
தாங்களும் கொண்டாடிவிட்டீர்கள். நல்லது.
இப்பொழுது ஒரு வினாடியில் டிரில் (பயிற்சி) செய்ய முடியுமா?
செய்ய முடியும் தானே! நல்லது. (பாப்தாதா டிரில்
செய்விக்கின்றார்)
நான்கு பக்கங்களிலும் உள்ள சதா ஊக்கம் உற்சாகத்தில்
இருக்கக்கூடிய உயர்ந்த குழந்தைகளுக்கு, சதா சகஜ புருஷார்த்தி,
சங்கமயுகத்தின் அனைத்து வரதானங்களையும் பெற்ற குழந்தைகளுக்கு,
சதா தந்தை மற்றும் நான் ஆத்மா என்ற நினைவில் இருந்து நான் என்ற
சப்தத்தை சொல்லக் கூடிய, நான் ஆத்மா (என்ற நினைவில்) - சதா
சர்வ ஆத்மாக்களுக்கு தன்னுடைய உள்ளுணர்வின் மூலம்
வாயுமண்டலத்திற்கான (சுழ்நிலைக்கான) சகயோகம் செய்யக்கூடிய,
அப்படிப்பட்ட மாஸ்டர் சர்வ சக்திவான் குழந்தைகளுக்கு,
பாப்தாதாவின் அன்பு நினைவுகள், ஆசிர்வாதங்கள், வாழ்த்துக்கள்
மேலும் நமஸ்தே!
இரட்டை வெளிநாட்டினர்-மூத்த சகோதரிகளுடன் சந்திப்பு:
எல்லோரும் நன்றாக உழைத்துள்ளீர்கள். குழுக்களை உருவாக்கியதால்,
நன்றாக உழைத்துள்ளார்கள். மேலும் இங்கே வாயுமண்டலமும் நன்றாக
இருக்கின்றது, குழுவினுடைய சக்தியும் இருக்கின்றது, அப்பொழுது
அனைவருக்கும் புத்துணர்ச்சியும் நன்றாக கிடைத்து விடுகின்றது
மேலும் நீங்கள் அதற்கு நிமித்த மானவர்களாக ஆகி விடுகின்றீர்கள்.
நல்லது. தூர தூரத்தில் இருக்கின்றீர்கள் அல்லவா, எனவே
குழுவினுடைய எந்தவொரு சக்தி இருக்கின்றதோ அது மிகவும் நன்றாக
இருக்கின்றது. இவ்வளவு முழு பரிவாரமும் ஒன்றாக இருக்கும்போது,
ஒவ்வொருவரின் விசேஷதாவின் தாக்கம் ஏற்படத் தான் செய்கின்றது.
நன்றாக திட்டமிட்டு இருந்தீர்கள். தந்தைக்கு மகிழ்ச்சி.
அனைவரின் நறுமணத் தையும் தாங்கள் எடுத்துக்கொண்டு விட்டீர்கள்
(விசேஷதாவை தனதாக்கிக் கொண்டீர்கள்). அவர்கள் குஷி அடை
கின்றார்கள், உங்களுக்கு ஆசிர்வாதம் கிடைக்கின்றது. நல்லது,
இங்கே அனைவரும் ஒன்று சேர்ந்து இருப்பது மிகவும் நன்றாக உள்ளது,
தங்களுக்குள் கொடுக்கல் வாங்கலும் நடக்கின்றது மேலும்
புத்துணர்ச்சியும் அடைந்து விடுகின்றீர்கள். ஒருவருக்கு மற்ற
வரின் விசேஷதா பிடித்தமானதாக இருக்கின்றது, அதை பயன்படுத்த
செய்கின்றீர்கள், இதன் மூலம் குழு நன்றாக ஆகி விடுகின்றது. இது
சரியானதாக இருக்கின்றது.
சென்டரில் வசிக்கக்கூடிய-சகோதரன் சதோகதரிகளுடன் சந்திப்பு:
(எல்லோரும் பேனரை காட்டிக் கொண்டு இருக்கின்றார்கள், அதில்
அன்பு மற்றும் கருணை என்ற ஜோதியை ஏற்றி வைப்போம் என்று
எழுதப்பட்டு இருந்தது) மிகவும் நன்றாக சங்கல்பம்
செய்துள்ளீர்கள். தன் மீதும் கருணையின் பார்வை, தன்னுடன்
இருப்பவர்கள் மீதும் கருணையின் பார்வை மேலும் அனைவர் மீதும்
கருணையின் பார்வை. ஈஸ்வரிய அன்பு என்பது காந்தம்; தங்களிடம்
அந்த ஈஸ்வரிய அன்பின் காந்தம் உள்ளது. எந்தவொரு ஆத்மாவையும்
ஈஸ்வரிய அன்பு என்ற காந்தத்தின் மூலம் தந்தையுடையவராக ஆக்க
முடியும். பாப்தாதா சென்டரில் இருப்பவர்களுக்கு விசேஷமாக உள்ளத்
தின் ஆசிர்வாதங்களை கொடுக்கின்றார், ஏனெனில் நீங்கள் அனைவரும்
விஷ்வத்தில் பெயரை பிரசித்திபெற வைத்துள்ளீர்கள். மூலை
முடுக்குகளில் பிரம்மா குமாரிகளின் பெயரை பரப்பியுள்ளீர் கள்
தானே! பாப்தாதாவிற்கு மிகவும் நன்றாக இருக்கக்கூடிய விஷயம் -
இரட்டை வெளிநாட்டினர் போல இரட்டை வேலை செய்பவர்கள்.
பெரும்பான்மையோர் லௌகீக வேலையும் செய்கின்றார் கள் மேலும்
அலௌகீக வேலையும் செய்கின்றார்கள். பாப்தாதா பார்க்கின்றார்,
பாப்தாதாவின் டி.வி மிகவும் பெரியது, அப்படிப்பட்ட பெரிய டி.வி
இங்கே இல்லை. பாப்தாதா பார்க்கத்தான் செய் கின்றார் - வகுப்பு
நடத்திய உடனேயே நின்று கொண்டே காலை உணவை உண்கின்றார்கள்,
நேரத்திற்கு வேலைக்கு செல்கின்றார்கள், அதிசயம் செய்கின்றார்கள்.
பார்க்க பார்க்க - பாப்தாதா, உள்ளத்தின் அன்பை கொடுத்துக்கொண்டே
இருக்கின்றார். மிகவும் நல்லது, சேவைக்கு நிமித்தமாகி
யுள்ளீர்கள் மேலும் நிமித்தமானதற்கான பரிசை தந்தை விசேஷ
திருஷ்டியின் மூலமாக சதா கொடுத்துக்கொண்டு இருக்கின்றார்.
மிகவும் நல்ல லட்சியம் வைத்துள்ளீர்கள், நன்றாக இருக்
கின்றீர்கள், நன்றாக இருப்பீர்கள், நன்றாக உருவாக்குவீர்கள்.
ஆசீர்வாதம்:
அனைத்து பொக்கிஷங்களுக்குமான பொருளாதார பட்ஜெட்-ஜ
உருவாக்கக்கூடிய நுட்பமான (சிறு விசயங்களையும் கூர்ந்து
கவனித்து செய்யும். திறமை கொண்ட) புருஷார்த்தி ஆகுக.
எப்படி லௌகீக ரீதியில் ஒருவேளை, சிக்கனமானவர் வீட்டில் இல்லை
என்றால் சரியான விதத்தில் (வீட்டை) நடத்த முடியாதோ அதேபோல்
நிமித்தமாக ஆகியுள்ள குழந்தைகள் சிக்கன மாக இல்லை எனில் சென்டர்
சரியாக நடைபெறாது. அது எல்லைக்கு உட்பட்ட குடும்பம், இது
எல்லைக்கு அப்பாற்பட்ட குடும்பம். எனவே சோதனை செய்ய வேண்டும் -
எண்ணம், சொல், சக்தி- இவற்றில் எதையெல்லாம் அதிகப்படியாக செலவு
செய்துள்ளேன்? யார் அனைத்து பொக்கிஷங் களுக்கும் பொருளாதார
பட்ஜெட்-ஜ (வரவு செலவுக்கான திட்டத்தை) உருவாக்கி அதன் படி
நடக்கின்றார்களோ அவர்களே நுட்பமான புருஷார்த்தி என்று
அழைக்கப்படுவார்கள். அவர் களுடைய எண்ணம், சொல், செயல் மற்றும்
ஞானத்தின் சக்திகள் எதுவே வீணாக போக முடியாது.
சுலோகன்:
அன்பு என்ற கஜானாவின் மூலமாக செல்வந்தராகி அனைவருக்கும் அன்பை
கொடுங்கள் மேலும் அன்பை எடுங்கள்.
அவ்யக்த சமிக்கை: ஆன்மீக ராயல்டி (தெய்வீகத்தன்மை) மற்றும்
ப்யூரிட்டி (தூய்மை) என்ற பெர்சனாலிடியை (ஆளுமையை) தாரணை
செய்யுங்கள்
பவித்திரதாவின் சக்தி பரமபூஜ்யவராக (மிகவும் பூஜைக்குரியவராக)
ஆக்குகின்றது. பவித்திரதா வின் சக்தி மூலமாக இந்த பதீத உலகை
மாற்றம் செய்கின்றீர்கள். பவித்ரதாவின் சக்தி- விகாரங் களின்
நெருப்பில் எரிந்து போன ஆத்மாக்களை குளிர்ச்சியாக ஆக்கி
விடுகின்றது. ஆத்மாக்களை அநேக ஜென்மங்களுடைய விகர்மங்களின்
பந்தனத்திலிருந்து விடுவித்து விடுகின்றது. பவித்திர தாவின்
ஆதாரத்தினால் துவாபர யுகத்திலிருந்து இந்த சிருஷ்டி
தாக்குப்பிடித்து வருகின்றது. இந்த மகத்துவத்தை தெரிந்துகொண்டு
பவித்திரதாவின் ஒளியினால் ஆன கிரீடத்தை தாரணை செய்யுங்கள்.