11-05-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! குழந்தைகளாகிய
உங்களை தனக்குச் சமமாக மகிமைக்கு தகுதி உடையவராக மாற்றுவதற்கு
பாபா வந்திருக்கிறார். பாபாவிற்கு என்னென்ன மகிமைகள் இருக்கிறதோ
அவற்றை இப்போது நீங்கள் கடைபிடிக்கிறீர்கள்.
கேள்வி:
பக்தி மார்க்கத்தில் பரமாத்மா
பிரியதர்ஷனை முழுமையாக புரிந்துக் கொள்ளா திருந்தாலும் கூட
மிகவும் அன்போடு எந்த வார்த்தைகளை மிகவும் அன்புடன்
கூறுகிறார்கள், அத்துடன் நினைவும் செய்கிறார்கள்?
பதில்:
பிரிய தர்ஷனே நீங்கள் வரும் போது
நாங்கள் உங்களை மட்டும் தான் நினைவு செய்வோம், மற்ற
அனைத்திலிருந்தும் புத்தியோகத்தை துண்டித்து தங்களுடன்
இணைப்போம் என மிகவும் அன்போடு கூறுகிறார்கள், நினைவும்
செய்கிறார்கள். இப்போது குழந்தைகளே ! நான் வந்திருக் கிறேன்,
ஆத்ம உணர்வு உடையவர் ஆகுங்கள். உங்களுடைய முதல் கடமை அன்போடு
பாபாவை நினைத்தல் ஆகும் என பாபா கூறுகின்றார்.
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஜீவ ஆத்மாக்களுக்கு, பரம்பிதா பரமாத்மா (யார்
இப்போது ஒருவருடைய உடலை கடனாக பெற்றிருக்கிறாரோ) நான் ஒரு
சாதாரணமான முதியவரின் உடலில் வருகிறேன் என புரிய வைக்கிறார்.
வந்து பல குழந்தைகளைப் படிக்க வைக்கிறேன். பிரம்மா முக வம்சாவளி
பிராமண குழந்தைகளுக்குக் தான் புரிய வைப்பார். நிச்சயம் வாய்
மூலமாகத் தான் புரிய வைப்பார், மற்றபடி வேறு யாருக்கு புரிய
வைப்பார். குழந்தைகளே நீங்கள் என்னை பக்தி மார்க்கத்தில் ஓ,
பதீத பாவனா என அழைத்தீர்கள் என கூறு கின்றார். முக்கியமாக
பாரதத்திலும், உலகம் முழுவதிலும் அனைவரும் அழைக்கிறார்கள்.
பாரதம் தான் தூய்மையாக இருந்தது. மற்ற அனைவரும் சாந்தி
தாமத்தில் இருந்தனர். சத்யுகம் திரேதாயுகம் என்று எதற்கு
கூறப்படுகிறது, துவாபரயுகம், கலியுகம் என்று எதற்கு
கூறப்படுகிறது என்பது குழந்தைகளுக்கு நினைவில் இருக்க வேண்டும்.
அவற்றில் யார் யார் இராஜ்யம் செய்தனர் என்ற ஞானம் முழுவதும்
உங்களுடைய புத்தியில் இருக்கிறது. பாபாவிற்கு படைப்பின் முதல்,
இடை, கடை ஞானம் புத்தியில் இருப்பது போல உங்களுடைய புத்தியிலும்
கூட இருக்கிறது. பாபா கொடுக்கின்ற ஞானம் நிச்சயம் குழந்தை
களுக்குள் இருக்க வேண்டும். தந்தை வந்து குழந்தை களை தனக்குச்
சமமாக மாற்றுகிறார். பாபாவிற்கு எவ்வளவு மகிமை இருக்கிறதோ
அவ்வளவும் குழந்தைகளுக்கும் இருக்கிறது. பாபா குழந்தைகளை
அதிகமாக மகிமைக்கு உரியவர் களாக மாற்றுகிறார். எப்போதும்
சிவபாபா இவர் மூலமாக கற்றுக் கொடுக்கிறார் என புரிந்துக்
கொள்ளுங் கள். ஆத்மா தான் ஒன்று இன்னொன்றுடன் பேசுகிறது. ஆனால்
மனிதர்கள் தேக உணர்வின் காரணமாக இன்னார் படிக்க வைக்கிறார் என
நினைக்கிறார்கள். உண்மையில் அனைத்தையும் செய்வது ஆத்மா தான்.
ஆத்மா தனது பாகத்தை நடிக்கிறது. ஆத்ம உணர்வுடையவர்களாக வேண்டும்.
அடிக்கடி தன்னை ஆத்மா என உணர வேண்டும். எதுவரை தன்னை ஆத்மா என
உணர வில்லையோ அதுவரை பாபாவை நினைக்க முடியாது. மறந்து
விடுகிறார்கள். நீங்கள் யாருடைய குழந்தைகள் என உங்களிடம்
கேட்டால் நாங்கள் சிவபாபாவின் குழந்தைகள் என கூறுகிறீர்கள்.
பார்வையாளர் புத்தகத்தில் உங்களுடைய தந்தை யார் என
எழுதப்பட்டிருக்கிறது. உடனே தேகத்தின் தந்தையின் பெயரை
கூறுவார்கள். சரி, இப்போது ஆத்மாவின் தந்தையின் பெயரை கூறுங்கள்
என்றால் சிலர் கிருஷ்ணர், சிலர் அனுமானின் பெயரை எழுதுவார்கள்
அல்லது எங்களுக்கு தெரிய வில்லை எனவும் எழுதுவார்கள். அடே,
நீங்கள் லௌகீக தந்தையை அறிந்துள்ளீர்கள். யாரை துக்கம் வரும்
போதெல்லாம் நினைக்கிறீர்களோ அந்த பாரலௌகீக தந்தையை அறியவில்லையா?
ஏ, பகவான் இரக்கம் காட்டுங்கள், ஏ, பகவான் ஒரு பிள்ளையைக்
கொடுங்கள் என கூட கூறுகிறார்கள். கேட்கிறார்கள் அல்லவா. இப்போது
பாபா முற்றிலும் எளிய விசயங்களைத் தெரிவிக்கிறார். நீங்கள்
அதிகமாக தேக உணர்வில் இருக்கிறீர்கள். ஆகவே, பாபா கொடுக்கும்
ஆஸ்தியின் போதை ஏறுவதில்லை. உங்களுக்கு நிறைய போதை ஏற வேண்டும்.
பாகவானை சந்திப்பதற்காகத் தான் நிறைய பக்தி செய்கிறார்கள்.
யாகம், தவம், தான புண்ணியம் போன்ற வைகளை செய்தல் அனைத்தும்
பக்தியாகும். அனைவரும் ஒரு பகவானை நினைக் கிறார்கள். நான்
உங்களுடைய கணவருக்கெல்லாம் கணவராக, தந்தைக்கெல்லாம் தந்தையாக
இருக்கிறேன் என பாபா கூறுகிறார். அனைத்து தந்தைகளும் பகவானை
நிச்சயம் நினைவு செய்கிறார்கள். ஆத்மாக்கள் தான் நினைவு
செய்கின்றன. புருவ மத்தியில் மின்னக் கூடிய விசித்தரமான
நட்சத்திரம்..... என்றும் கூட கூறுகிறார்கள். ஆனால் இதை
புரிந்துக் கொள்ளாமல் அப்படியே கூறிவிடுகிறார்கள். இரகசியத்தை
பற்றி எதுவும் அறியவில்லை. நீங்கள் ஆத்மாவைப் பற்றியே
அறியவில்லை என்றால் ஆத்மாவின் தந்தையைப் பற்றி எப்படி அறிந்துக்
கொள்ள முடியும். பக்தி மார்க்கத்தினுடைய காட்சிகள் கிடைக்கிறது.
பக்தி மார்க்கத்தில் பூஜை செய்வதற் காக பெரிய பெரிய லிங்கங்களை
வைத்து விடுகிறார்கள். ஏனென்றால் பிந்துவின் ரூபத்தை
காண்பித்தால் யாரும் புரிந்துக் கொள்ள முடியாது. இது
நுணுக்கமான விஷயம் ஆகும். பரமாத்மாவை அகண்ட ஜோதி சொருபம்
என்கிறார்கள், அவருடைய ரூபம் மிகப் பெரியது என மனிதர்கள்
கூறுகிறார்கள். பிரம்ம சமாஜத்தினர் ஜோதியை பரமாத்மா
என்கிறார்கள். பரம்பிதா பரமாத்மா பிந்துவாக இருக்கிறார் என்பது
யாருக்கும் தெரிய வில்லை. கூறினால் குழம்பி போகிறார்கள்.
குழந்தைகள் கூட பாபா எதை நினைவு செய்வது என்கிறார்கள். நாங்கள்
அவர் பெரிய லிங்கமாக இருக்கிறார், அவரை அது போன்று
நினைக்கப்படுகிறது என கேள்விப் பட்டிருக் கிறோம் இப்போது
புள்ளியை எப்படி நினைப்பது. அடே, ஆத்மா நீங்களும் புள்ளியாக
இருக்கிறீர்கள். பாபாவும் புள்ளியாக இருக்கிறார். ஆத்மாவை
அழைக்கிறார்கள். அது நிச்சயம் இங்கே தான் புருவ மத்தியில் வந்து
அமரும். பக்தி மார்க்கத்தில் காட்சிகள் போன்றவைகள் கிடைக்கிறது.
அது அனைத்தும் பக்தி ஆகும். பக்தியும் ஒருவரின் பக்தி
செய்யவில்லை. பல பேரை பகவான் ஆக்கி விட்டார்கள். பக்தி செய்துக்
கொண்டிருக்கக் கூடிய பக்தர்களை பகவான் என்று எப்படி கூற
முடியும். ஒரு வேளை பரமாத்மா சர்வவியாபி என்று கூறினால்
யாருடைய பக்தி செய்கிறர்கள். இப்படி பலவிதமான பக்தி
செய்கிறார்கள்.
குழந்தைகளே, நாம் பல வருடங்கள் வாழ வேண்டும் என்று
நினைக்காதீர்கள், இப்போது நேரம் மிகவும் நெருங்கிக்
கொண்டிருக்கிறது என பாபா புரிய வைக்கிறார். பாபா பிரம்மா
மூலமாக ஸ்தாபனை செய்கிறார் என்பதில் நிச்சயம் இருக்க வேண்டும்.
நாம் இவர் மூலாக உங்களுக்கு சிருஷ்டியின் முதல், இடை, கடை
இரகசியத்தை தெரிவிக்கிறேன் என பாபாவே கூறுகிறார். பிரம்மா
மூலமாக ஸ்தாபனை என பாடுகிறார்கள். புது உலகம் விஷ்ணுபுரி என்று
கூறப்படுகிறது, அதாவது விஷ்ணுவின் இரண்டு வடிவத்தில் இராஜ்யம்
செய்தனர் என்பதை அறியவில்லை. விஷ்ணு யார் என்பது யாருக்கும்
தெரியவில்லை. இந்த பிரம்மா-சரஸ்வதி என்பவர்கள் தான் பிறகு
விஷ்ணுவின் இரண்டு ரூபமான லட்சுமி நாராயணன் ஆகி பாலனை
செய்கின்றனர். பிரம்மா மூலமாக ஸ்தாபனை, விஷ்ணுபுரி என்றால்
சொர்க்கத்தை பிறகு பாலனை செய்வார். பாபா ஞானக்கடல் என்பது
உங்களுடைய புத்தியில் வர வேண்டும் மனித சிருஷ்டியின் விதை ரூபம்
ஆவார். அவர் இந்த நாடகத்தின் முதல், இடை, கடையை அறிந்துள்ளார்.
அவரே பதீத பாவனர், பாபாவின் தொழில் என்னவோ அதுவே உங்களுடையது
ஆகும். நீங்களும் பதீதத்திலிருந்து தூய்மையாக்குகிறீர்கள்.
உலகத்தில் ஒரு தந்தைக்கு மூன்று, நான்கு குழந்தைகள்
இருப்பார்கள். சில பிள்ளைகள் மிகவும் உயர்ந்த நிலைக்கு
சென்றுவிடுவர். சிலரோ மிகவும் கீழான நிலையில் இருப்பர். இங்கே
பாபா உங்களுக்கு பதீத்தர்களை பாவனமாக்குங்கள் என்ற ஒரே தொழிலை
கற்பிக்கின்றார். என்னை நினையுங்கள் என்ற இலட்சியத்தை
அனைவருக்கும் கொடுங் கள் என சிவபாபா கூறுகின்றார். கீதையில்
கிருஷ்ண பகவான் வாக்கு என தலைகீழாக எழுதி விட்டனர். பகவான்
நிராகார், புனர் ஜென்மம் இல்லாதவர் என்பதை நீங்கள் புரிய வைக்க
வேண்டும். அவ்வளவு தான், கிருஷ்ண பகவான் வாக்கு என்று கூறுவது
ஒன்றே தவறு ஆகும். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் கிருஷ்ண
புரிக்கு அதிபதியாகிக் கொண்டிருக்கிறீர்கள். சிலர் இராஜ்யத்தில்
வருகிறார்கள், சிலர் பிரஜைகளில். கிருஷ்ணபுரி என்று
கூறப்படுகிறது. ஏனென்றால் கிருஷ்ணன் அனைவருக்கும் மிகவும்
அன்பானவராக இருக்கிறார். குழந்தைகள் அன்பாக இருக் கிறார்கள்
அல்லவா. குழந்தைகளுக்கு கூட தாய் தந்தையரிடம் அன்பு இருக்கிறது.
அன்பு முழுவதும் பிறகு சிதறி போகிறது. இப்போது நீங்கள் தங்களை
சரீரம் என நினைக்காதீர்கள், அடிக்கடி ஆத்மா என்று உறுதி
படுத்திக் கொள்ளுங்கள், ஆத்ம உணர்வுடைய வராகுங்கள் என பாபா
புரிய வைக்கிறார். பாபாவும் நிராகார் ஆவார். இங்கே புரிய
வைப்பதற்காக சரீரத்தை கடனாக எடுக்க வேண்டியிருக்கிறது. சரீரம்
இல்லாமல் புரிய வைக்க முடியாது. உங்களுக்கு தனது சரீரம் என்று
இருக்கிறது. பாபா கடனாக எடுக்கிறார். மற்றபடி இதில் பிரேரணை
போன்ற விசயங்கள் எதுவும் இல்லை. நான் இவர் உடலை கடனாக எடுத்து
குழந்தைகளைப் படிக்க வைக்கிறேன் என பாபாவே கூறுகிறார்.
ஏனென்றால் உங்களுடைய ஆத்மா தமோபிரதானமாக ஆகிவிட்டது, அதை
இப்போது சதோபிரதானமாக மாற்ற வேண்டும். பதீத பாவனா வாருங்கள் என
பாடுகிறார்கள். ஆனால் அர்த்தம் புரிந்துக்கொள்ளவில்லை. பாபா
எப்படி வந்து தூய்மையாக மாற்றினார் என இப்போது நீங்கள்
புரிந்துக் கொள்கிறீர்கள். இதையும் நீங்கள் அறிகிறீர்கள்.
சத்யுகத்தில் நம்முடைய சிறிய மரம் மட்டும் தான் இருக்கும்.
நீங்கள் சொர்க்கத்திற்கு செல்வீர்கள். மீதம் இத்தனை கண்டங்கள்
இருக்கின்றது. அதன் பெயர் அடையாளம் இருக்காது. பாரத கண்டம் தான்
சொர்க்க மாக இருக்கும். பரம்பிதா பரமாத்மா தான் வந்து
சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கிறார். இது நரகமாக இருக்கிறது.
பழமையானது பாரத கண்டம் தான். அங்கே தேவதைகள் இராஜ்யம் செய்தனர்.
இப்போது இல்லை. அவர்களுடைய கோவில்கள் இங்கே இருக்கின்றன.
சித்திரங்கள் இருக்கின்றன என்றால் பாரதத்தின் விசயம் தான்
அல்லவா. பாரதம் சொர்க்கமாக இருந்தது. இந்த லஷ்மி நாராயணன்
அதிபதியாக இருந்தனர், வேறு எந்த கண்டமும் இல்லை என்பதெல்லாம்
எந்த பாரதவாசிகளின் புத்தியிலும் இல்லை. இப்போது பல தர்மங்கள்
வந்து விட்டது. பாரதவாசிகளின் தர்மம் கீழாகவும் செயல்களும்
கீழானதாகவும் மாறிவிட்டது. கிருஷ்ணரை சியாம், சுந்தர்
என்கிறார்கள். ஆனால் அதன் பொருளை புரிந்துக் கொள்ள வில்லை.
உண்மையில் இவர் கருப்பாக இல்லை. கிருஷ்ணரை பாம்பு தீண்டியது.
அவர் கருப்பாகிவிட்டார் என்கிறார்கள். இப்போது அவரோ
சத்யுகத்தின் இளவரசனாக இருந்தார். எப்படி கருப்பாகி விட்டார்.
இப்போது நீங்கள் இந்த விஷயங்களை புரிந்துக் கொள்கிறீர்கள்.
கிருஷ்ணரின் தாய் தந்தையும் படித்துக் கொண்டி ருக்கிறார்கள்.
தாய் தந்தையை விட உயர்ந்தவர் ஸ்ரீகிருஷ்ணர் என பாடப்பட்டிருக்
கிறது. தாய் தந்தைக்கு வேறு எந்த பெயரும் இல்லை. இல்லை என்றால்
எந்த தாய் தந்தையிடமிருந்து இப்படிப்பட்ட குழந்தை
பிறந்திருக்கிறாரோ அந்த தாய் தந்தையும் அன்பிற்குரியவராக
இருக்க வேண்டும். ஆனால் இல்லை. மகிமை அனைத்தும் ராதா
கிருஷ்ணருக்கு தான். தாய் தந்தைக்கு எதுவும் இல்லை. உங்களுடைய
புத்தியில் ஞானம் இருக்கிறது. ஞானம் பகல். பக்தி இரவாகும்.
காரிருளான இரவில் ஏமாற்றம் அடைந்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது வீட்டிலேயே இருங்கள், இந்த சேவையும் கூட செய்துக்
கொண்டிருங்கள் என குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய
வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு பிரியதர்ஷனின் அரைக் கல்பத்தின்
பிரியதர்ஷினிகள் நீங்கள் என யாருக்கு வேண்டுமானாலும் புரிய
வையுங்கள். பக்தி மார்கத்தில் அனைவரும் அவரை நினைவு
செய்கிறார்கள் என்றால் பிரியதர்ஷினிகள் ஆகி விட்டார்கள் அல்லவா.
ஆனால் பிரியதர்ஷனை முழுமையாகப் புரிந்துக் கொள்ள வில்லை.
மிகவும் அன்போடு நினைவு செய்கிறார்கள். ஓ, பிரியதர்ஷனே நீங்கள்
வரும் போது நாங்கள் உங்களை மட்டும் தான் நினைவு செய்வோம், மற்ற
அனைத்திலிருந்தும் புத்தியோகத்தை துண்டித்து தங்களுடன்
இணைப்போம், இவ்வாறு பாடினார்கள் அல்லவா. ஆனால் தந்தை
யிடமிருந்து நமக்கு என்ன சொத்து கிடைக்கிறது என்பது யாருக்கும்
தெரியவில்லை. நீங்கள் ஆத்ம உணர்வுடையவராகுங்கள் என பாபா புரிய
வைக்கிறார். பாபாவை நினைத்தல் – குழந்தை களாகிய உங்களுடைய முதல்
கடமையாகும். ஆண் குழந்தை எப்போதும் தந்தையையும், பெண் குழந்தை
எப்போதும் தாயையும் நினைக்கிறது. தனக்கு ஒப்பானவர்கள் அல்லவா.
ஆண் குழந்தை நாம் தந்தையின் வாரிசாவோம் என நினைக்கின்றது. பெண்
குழந்தை கூற முடியாது. அது நாம் தந்தை வீட்டிலிருந்து மாமியார்
வீட்டிற்குச் செல்வோம் என நினைக்கிறது. இப்போது உங்களுக்கு
நிராகாரத்திலும் சாகாரத்திலும் தந்தை வீடு இருக்கிறது. ஓ,
பரம்பிதா பரமாத்மா இரக்கம் காட்டுங்கள் என அழைக்கிறார்கள்.
துக்கத்தை நீக்கி சுகம் அளியுங்கள் எங்களை விடுவியுங்கள்.
எங்களுக்கு வழிகாட்டுங்கள் என்கிறார்கள். ஆனால் அதனுடைய பொருளை
பெரிய பெரிய வித்வான்கள் ஆச்சாரியர்கள் கூட அறியவில்லை. தந்தை
அனைவரையும் விடுவிக்கக் கூடியவர், அவரே அனைவருக்கும் நன்மை
செய்யக் கூடியவர் ஆவார். மற்ற அனைவரும் தனக்கே நன்மை செய்துக்
கொள்ள முடியவில்லை என்றால் மற்றவர்களுக்கு என்ன செய்வார்கள்.
நான் குப்தமாக வருகிறேன், குதா தோஸ்தின் (கடவுள்-நண்பனின்)
கதையை கூறுகிறார்கள் அல்லவா என இங்கே பாபா கூறுகின்றார்.
இப்போது கலியுகம் மற்றும் சத்யுகத்திற்கு இடையில் இது ஒரு பாலம்
ஆகும், அதை கடந்து போக வேண்டும் இப்போது கடவுள் தந்தையாகவும்
இருக்கிறார், நண்பனாகவும் இருக்கிறார். தாய், தந்தை, ஆசிரியரின்
நடிப்பையும் நடிக்கிறார். இங்கே உங்களுக்கு காட்சிகள்
கிடைக்கிறது என்றால் மாயாஜாலம் மாயாஜாலம் என்று கூறுகிறார்கள்.
தீவிரமான பக்தி செய் பவர்களுக்கு கூட சாட்சாத்காரம் கிடைக்கிறது.
மிகவும் தீவிரமான பக்தர்கள் கூட இருக்கிறார்கள். தரிசனம்
கொடுக்காவிட்டால் நாங்கள் கழுத்தை வெட்டிக் கொள்வோம்
என்கிறார்கள் அப்போது சாட்சாத் காரம் கிடைக்கிறது. அவர்களுக்கு
கண்மூடித்தனமாக தீவிரமான பக்தர்கள் என கூறப் படுகிறது. இங்கே
தீவிரமான பக்தியின் விசயம் கிடையாது. வீட்டில் அமர்ந்த படியே
கூட பலருக்கு சாட்சாத்காரம் கிடைத்துக் கொண்டே இருக்கிறது.
தெய்வீக திருஷ்டியின் சாவி என்னிடம் இருக்கிறது. அர்ஜுனனுக்கு
கூட நான் தெய்வீக திருஷ்டியினை கொடுத்தேன் அல்லவா. இந்த
வினாசத்தை பார், உன்னுடைய இராஜ்யத்தை பார், இப்போது என்னை
மட்டும் நினைவு செய்தால் இவ்வாறு மாறலாம். விஷ்ணு யார் என
இப்போது நீங்கள் அறிகிறீர்கள். கோவில் களை கட்டுபவர்கள் கூட
அறியவில்லை. நான்கு கைகளின் அர்த்தம் கூட இருக்கிறது. இரண்டு
கைகள் ஆணினுடையது, இரண்டு கைகள் பெண்ணினுடையதாகும். விஷ்ணுவின்
இரட்டை ரூபம் லஷ்மி நாராயணன். ஆனால் எதையும் புரிந்துக்
கொள்ளவில்லை. யாரை பற்றிய ஞானமும் இல்லை. சிவபாபா பற்றியும்
இல்லை. விஷ்ணு பற்றியும் இல்லை. முதன் முதலில் பாபாவின்
கவர்ச்சி இருந்தது. பலர் வந்தனர். ஆரம்பத்தில் முற்றம்
முழுவதும் நிறைந்து போனது. நீதிபதி, மேஜிஸ்ட்ரேட் அனைவரும்
வந்தனர். பிறகு விகாரத்தின் சண்டை ஆரம்பம் ஆகியது. குழந்தை
பிறக்கவில்லை என்றால் சிருஷ்டி எப்படி நடக்கும் என கூறினர்.
இந்த சிருஷ்டி பெருக வேண்டும் என்பதே சட்டம் ஆகும். காமம் மிகப்
பெரிய எதிரி அதை வெற்றி அடைய வேண்டும் என்பது பகவான் வாக்கு
என்ற கீதையின் விசயத்தை மறந்து விட்டனர். கணவர் மனைவி இருவரும்
சோந்து வந்தால் அவர்களுக்கு ஞானம் கொடுங்கள் என்று சொல்ல
ஆரம்பித்தனர். தனியாக வருபவர்களுக்கு கொடுக்காதீர்கள். இப்போது
இருவருமே வந்தால் கொடுக்கலாம். பாருங்கள், இருவருக்கும்
சேர்த்து கொடுத்தால் கூட சிலர் ஞானத்தை எடுக்கிறார்கள். சிலர்
ஞானத்தை எடுப்ப தில்லை. அதிர்ஷ்டத்தில் இல்லை என்றால் என்ன
செய்வது. ஒன்று அன்னப்பறவையாக இருக் கிறது, ஒன்று நாரையாக
இருக்கிறது. இங்கே பிராமணர்களாகிய நீங்கள் தேவதைகளை விட
உயர்ந்தவர்கள், நாம் ஈஸ்வரிய வாரிசு சிவபாபாவின் குழந்தைகள் என
அறிகிறீர்கள். அங்கே சொர்க்கத்தில் இந்த ஞானம் உங்களுக்கு
இருக்காது. நிராகார உலகம் முக்தி தாமத்தில் இருக்கும் போதும்
இந்த ஞானம் இருக்காது. இந்த ஞானம் சரீரத்துடனேயே முடிந்து
போகிறது. இப்போது உங்களுக்கு இந்த ஞானம் இருக்கிறது ஒரு தந்தை
படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இப்போது இந்த விளையாட்டு
முழுமை அடைகிறது. அனைத்து நடிகர்களும் வந்து விட்டார்கள்.
பாபாவும் வந்துவிட்டார். மீதம் இருக்கக் கூடிய ஆத்மாக்களும்
வந்துக் கொண்டே இருக்கிறார்கள். அனை வரும் எப்போது
வந்துவிடுவார்களோ அப்போது வினாசம் நடக்கும். பிறகு அனைவரையும்
பாபா உடன் அழைத்து செல்வார். அனைவரும் செல்ல வேண்டும். இந்த
அழுக்கான உலகம் வினாசம் ஆக வேண்டும். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீக தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. பதீதத்திலிருந்து பாவனமாக்கக் கூடிய தொழில்
பாபாவினுடையதாகும். அதே தொழிலை (நீங்களும்) செய்ய வேண்டும்.
தந்தையை நினையுங்கள். தூய்மையாகுங்கள் என்ற இலட்சியத்தை
அனைவருக்கும் கொடுக்க வேண்டும்.
2. இந்த பிராமண வாழ்க்கை தேவதைகளைவிட உயர்ந்த வாழ்க்கை யாகும்.
இந்த போதை யில் இருக்க வேண்டும். புத்தியின் யோகத்தை மற்ற
அனைத்திலிருந்தும் துண்டித்து ஒரு பிரியதர்ஷனை நினைக்க வேண்டும்.
வரதானம்:
தியாகம் மற்றும் அன்பு என்ற சக்தியின் மூலம் சேவையில்
வெற்றி பெறக்கூடிய அன்பானவர் சகயோகி ஆகுக
ஆரம்பத்தில் ஞானத்தின் சக்தி குறைவாக இருந்தது, ஆனால் தியாகம்
மற்றும் அன்பின் ஆதாரத் தில் வெற்றி கிடைத்தது. புத்தியில்
இரவும் பகலும் பாபா மற்றும் யக்க்ஷதை பற்றிய நினைவு இருந்தது.
உள்ளத் திலிருந்து எப்போதும் பாபா மற்றும் யக்க்ஷம் என்ற எண்ணமே
வந்தது. இந்த அன்பே அனைவரையும் சக யோகியாக மாற்றியது. . இந்த
சக்தியால் செண்டர்கள் உருவானது. சகார அன்பினால் தான் மன்மனா பவ
என்ற நிலை ஏற்பட்டது; சகார அன்பின் மூலம் தான் உதவியாளராக
மாற்றியது. இன்றும் தியாகமும் அன்பும் என்ற சக்தியால் கோட்டை (சுற்று)
அமைத்தால் வெற்றி அவசியம் கிடைக்கும்.
சுலோகன்:
தேவதையாக (பரிஸ்தா) ஆக வேண்டுமெனில், வீண் பேச்சுகளிலிருந்து
மற்றும் தொல்லை தரும் வார்த்தைகளிலிருந்து விடுபடுங்கள்.
அவ்யக்த இஷாரா - சதா ஆடாத, அசையாத, ஒரே சமநிலையின்
ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்
எந்த விஷயமாக இருந்தாலும் - அது இயற்கையினுடையதோ அல்லது
மனிதர்களுடையதோ - எதுவும் உங்கள் நிலையான, அசைக்க முடியாத
நிலையில் சற்றும் அசைக்க முடியாதபடி உறுதியாக இருங்கள். உடல்
ஒரே நிலையாக அமர முடியாவிட்டால் அது அசைந்து கொண்டே இருக்கும்
அல்லவா? அதுபோல் மனமும் அசையாமல் இருக்க வேண்டும். எப்போதும்
அசைக்க முடியாத, நிலையான நிலையில் இருங்கள். சில நேரங்களில்
அசைவது, சில நேரங்களில் நிலை யாக இருந்தால், சிம்மாசனம்
ஒருபொழுதும் கிடைக்காது, கிடைத்தாலும் நிலைத்து இருக்காது.