11-10-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! உங்களுடைய கடமை
அனைவருக்கும் நிலையான சுகம் மற்றும் அமைதிக்கான வழியைக்
காட்டுவதாகும். அமைதியில் இருங்கள் மற்றும் அமைதியின் பரிசைக்
கொடுங்கள்.
கேள்வி:
எந்த ஒரு ஆழமான ரகசியத்தைப்
புரிந்து கொள்வதற்காக எல்லைக்கப்பாற்பட்ட புத்தி தேவை?
பதில்:
நாடகத்தின் எந்த காட்சி எந்த
சமயத்தில் நடக்க வேண்டுமோ, அந்த சமயத்தில் தான் நடக்கும்,
இதனுடைய ஆயுள் துல்லியமானது, தந்தையும் கூட தான் வரவேண்டிய
துல்லியமான சமயத்தில் வருகிறார், இதில் ஒரு வினாடியும் கூட
வித்தியாசம் ஏற்பட முடியாது. முழுமையாக 5000 வருடங்களுக்குப்
பிறகு தந்தை வந்து பிரவேசம் செய்கிறார் என்ற இந்த ஆழமான
ரகசியத்தைப் புரிந்து கொள்வதற்காக எல்லைக்கப்பாற்பட்ட புத்தி
தேவை.
பாடல்:
உலகம் மாறினாலும் நாங்கள் மாறப்
போவதில்லை. . . .
ஓம் சாந்தி.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை வந்து புரிய வைக்கிறார்.
குழந்தை களுக்கு சாந்தி தாமம் மற்றும் சுக தாமத்திற்கு வழி
காட்டுகிறார். இந்த சமயத்தில் அனைத்து மனிதர்களும் உலகில்
அமைதியை விரும்புகின்றனர். ஒவ்வொரு தனிப்பட்டவரும் விரும்பு
கின்றனர் மற்றும் உலகிலும் கூட அமைதியை விரும்பு கின்றனர்.
மனதிற்கு அமைதி வேண்டும் என ஒவ்வொருவரும் கூறுகின்றனர். இப்போது
அது கூட எங்கே கிடைக்கும்? அமைதிக்கடலாக இருப்பவர் தந்தை தான்,
அவரிடமிருந்து தான் ஆஸ்தியை அடைய முடியும். தனியாகவும்
கிடைக்கும், மொத்தமாகவும் கிடைக்கும். அதாவது அனைவருக்கும்
கிடைக்கும். நாம் அமைதி யின் ஆஸ்தியை எடுப்பதற்காக தனக்காகவும்
முயற்சி செய்கிறோம், மற்றவர்களுக்கும் வழி காட்டுகிறோம் என
படிக்கக் கூடிய குழந்தைகள் புரிந்து கொள்ள முடியும். உலகில்
அமைதி ஏற்படவே வேண்டும். யாராவது ஆஸ்தியை பெறுவதற்கு வந்தாலும்
சரி இல்லையென்றாலும் சரி. அனைத்து குழந்தைகளுக்கும் அமைதி
கொடுக்க வேண்டியது குழந்தைகளின் கடமையாகும். 2-4 பேர்களுக்கு
அமைதி கிடைப்பதால் என்ன ஆகும் என புரிந்து கொள்ளப்படு வதில்லை.
பிறருக்கு வழி காட்டப்படுகிறது, ஆனால் நிச்சயம் இல்லாத
காரணத்தால் பிறரை தனக்குச் சமமாக ஆக்க முடிவதில்லை. நிச்சய
புத்தி உள்ளவர்கள் பாபாவிடமிருந்து நமக்கு வரம் கிடைத்துக்
கொண்டுள்ளது என புரிந்து கொள்கின்றனர். ஆயுஷ்வான் பவ (நீண்ட
ஆயுள் உள்ளவர்களாகுக) என வரதானம் கொடுக்கின்றனர் அல்லவா, தனவான்
பவ (செல்வந்தர் ஆகுக) எனவும் சொல் கின்றனர். வெறுமனே சொல்வதால்
மட்டுமே ஆசீர்வாதம் கிடைப்பது இயலாது. ஆசீர்வாதம் கேட்டார்கள்
என்றால் அவர்களுக்குப் புரிய வைக்கப்படுகிறது - உங்களுக்கு
அமைதி தேவை என்றால் இப்படி முயற்சி செய்யுங்கள். முயற்சியின்
மூலம் அனைத்தும் கிடைத்துவிடும். பக்தி மார்க்கத்தில் எவ்வளவு
ஆசீர்வாதங்கள் பெறுகின்றனர். தாய், தந்தை, ஆசிரியர், குரு
முதலானவர் களிடம் நாங்கள் சுகமாகவும் அமைதியாகவும் இருக்க
வேண்டும் என்று ஆசி வேண்டுகின்றனர். ஆனால் இருக்க முடியாது,
ஏனென்றால் இவ்வளவு அளவற்ற மனிதர்கள் இருக்கின்றனர், அவர்களுக்கு
சுகமும் அமைதியும் எப்படி கிடைக்கும். சாந்தி தேவா என பாடவும்
செய்கின்றனர். ஓ ! பரமபிதா பரமாத்மா! எங்களுக்கு அமைதியின்
பரிசு கொடுங்கள் என புத்தியில் தோன்றுகிறது. உண்மையில் (கையில்)
எடுத்துக் கொடுக்கும் பொருள் பரிசு எனப்படுகிறது. இது உனக்கான
பரிசு, இனாம் என்று சொல்கின்றனர். அன்பளிப்பு யார் எவ்வளவு
கொடுக்கின்றனரோ, பணமாக, வீடாக, துணி மணிகளாக என, அந்த
தானம்-புண்ணியம் அல்ப காலத்திற்கானது என தந்தை சொல் கின்றார்.
மனிதர்கள் மனிதர்களுக்கும், செல்வந்தர்களுக்கு செல்வந்தர்களும்,
அல்லது செல்வந்தர் கள் ஏழைகளுக்கும் கொடுத்தபடி வந்தனர். ஆனால்
விரும்புவதோ நிலையான சாந்தி மற்றும் சுகத்திற்கானதாகும். இங்கே
(இந்த உலகில்) யாரும் ஒரு பிறவிக்குக் கூட சுகம், அமைதியைக்
கொடுக்க முடியாது, ஏனென்றால், அவர்களிடமே இல்லை. கொடுக்கக்
கூடியவர் ஒரே தந்தை ஆவார். அவர் சுகம், அமைதி, தூய்மையின் கடல்
என சொல்லப்படுகிறார். உயர்ந்தவரிலும் உயர்ந்த பகவானுடைய
மகிமைதான் பாடப்படுகிறது. அவரிடமிருந்துதான் அமைதி கிடைக்கும்
என புரிந்து கொள்கின்றனர். பிறகு அவர்கள் சாது சன்னியாசிகளிடம்
செல்கின்றனர், ஏனென்றால் பக்தி மார்க்கம் அல்லவா, சுற்றித்
திரிந்து கொண்டே இருக்கின்றனர். அது அல்ப காலத்தின்
முயற்சியாகும். குழந்தைகளாகிய உங்களுக்கு இவையனைத்தும் நின்று
விட்டது. எல்லைக்கப் பாற்பட்ட தந்தையிடமிருந்து 100 சதவிகிதம்
தூய்மை, சுகம், அமைதியின் ஆஸ்தியை அடைய முடியும் என நீங்கள்
எழுதி வைக்க முடியும். இங்கே 100 சதவிகிதம் தூய்மையற்ற நிலை,
துக்கம், அசாந்தி உள்ளது. ஆனால் மனிதர்கள் புரிந்து கொள்வதில்லை.
ரிஷி, முனிவர்கள் முதலானவர்கள் தூய்மையாக உள்ளனர் என்று
சொல்கின்றனர். ஆனாலும் கூட பிறவி விஷத்தின் (விகாரத்தின்) மூலம்
எடுக்கின்றனர். முக்கிய விஷயமே இதுவாகும். இராவண இராஜ்யத்தில்
தூய்மை இருக்க முடியாது. தூய்மை-சுகம் முதலான அனைத்தின் கடலாக
இருப்பவர் ஒரே ஒரு தந்தை ஆவார்.
நமக்கு சிவபாபாவிடமிருந்து 21 பிறவிகள் அதாவது அரைக் கல்பம்,
2500 வருடங்களுக்கு ஆஸ்தி கிடைக்கிறது என்பதை நீங்கள்
அறிவீர்கள். இது உத்திரவாதமாகும். அரைக் கல்பம் சுகதாமம், அரைக்
கல்பம் துக்கதாமமாகும். சிருஷ்டியில் இரண்டு பாகங்கள் உள்ளன -
ஒன்று புதிது, மற்றொன்று பழையது. ஆனால் புதியது எப்போது, பழையது
எப்போது ஏற்படுகிறது என்பது கூட யாருக்கும் தெரியாது. கல்ப
மரத்தின் ஆயுளை எவ்வளவு என்று துல்லியமாக சொல்ல முடிவ தில்லை.
இப்போது தந்தை மூலமாக இந்த மரத்தைப் பற்றி தெரிந்து
கொள்கிறீர்கள். இது 5000 வருடத்து பழமையான மரமாகும், இதன்
ஆயுளைப் பற்றி உங்களுக்குத் தெரியும், மற்ற மரங்களின் ஆயுளைப்
பற்றி யாருக்கும் தெரியாது, தோராயமாகச் சொல்கின்றனர். புயல்
வந்ததோ, மரம் விழுந்ததோ, ஆயுள் முடிந்து விட்டது.
மனிதர்களுக்கும் திடீர் என மரணம் ஏற்பட்டபடி இருக்கிறது. இந்த
எல்லைக்கப்பாற்பட்ட மரத்தின் ஆயுள் முழுமையாக 5 ஆயிரம்
வருடங்கள் ஆகும். இதில் ஒரு நாள் கூட குறை வாகவோ, அதிகமாகவோ ஆக
முடியாது. இது உருவாகி உருவாக்கப்பட்ட மரமாகும். இதில்
வித்தியாசம் ஏற்பட முடியாது. நாடகத்தில் எந்த சமயத்தில் என்ன
காட்சி நடக்க வேண்டுமோ அந்த சமயத்தில்தான் நடக்கும். அப்படியே
மீண்டும் நடக்கும். ஆயுள் கூட துல்லியமான தாகும். தந்தையும்
புதிய உலகத்தை படைப்பதற்காக வரவேண்டியுள்ளது. துல்லிய மான
நேரத்தில் வருகிறார். ஒரு வினாடி கூட அதில் வித்தியாசம் ஏற்பட
முடியாது. இப்போது உங்களுடைய இந்த புத்தியும் கூட
எல்லைக்கப்பாற்பட்ட புத்தியாகியுள்ளது. நீங்கள்தான் புரிந்து
கொள்ள முடியும். 5000 ஆயிரம் வருடங்கள் முழுமையாக ஆன பிறகு
தந்தை வந்து பிரவேசிக் கிறார். ஆகையால் சிவராத்திரி என
சொல்கின்றனரே தவிர ஜென்மாஸ்டமி என்று சொல்வ தில்லை... அவருடைய
பிறவி தெய்வீகமானது, அலௌகிகமானது, வேறு எவருடையதும் அப்படி
கிடையாது. சிவபாபா எப்போது, எப்படி வருகிறார் என்பது யாருக்கும்
தெரியாது. சிவராத்திரியின் அர்த்தம் என்ன என்பதை நீங்கள் தான்
அறிவீர்கள். இது எல்லைக்கப்பாற்பட்ட இரவாகும். பக்தியின் இரவு
முடிந்து பகலாகிறது. பிரம்மாவின் இரவு மற்றும் பகல் என்றால்
அதுவே பிராமணர்களுடையதுமாக ஆகிறது. ஒரு பிரம்மாவின் விளையாட்டு
மட்டும் நடப்பதில்லை. இப்போது பகல் தொடங்க வேண்டும் என நீங்கள்
அறிவீர்கள். படித்து படித்து, தன் வீடு சென்று அடைவீர்கள்.
பிறகு பகலில் வருவீர்கள். அரைக் கல்பம் பகல் மற்றும் அரைக்
கல்பம் இரவு என பாடப்படுகிறது. ஆனால் யாருடைய புத்தியிலும்
வருவதில்லை. அவர்கள் கலியுகத்தின் ஆயுள் இன்னும் 40 ஆயிரம்
வருடங்கள் உள்ளன, சத்யுகம் லட்சக்கணக்கான வருடங்கள் நடக்கும்
என்று சொல்வார்கள், ஆனால் பிறகு பாதி, பாதி என்ற கணக்கே
இருக்காது. கல்பத்தின் ஆயுள் குறித்து யாருக்கும் தெரியாது.
நீங்கள் முழு உலகின் முதல், இடை, கடைசி பற்றி அறிவீர்கள். இந்த
சிருஷ்டி சக்கரம் 5 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும்
சுழலத் தொடங்கியபடி இருக்கும். உலகம் இருக்கவே செய்கிறது, அதில்
நடிப்பை நடித்து நடித்து மனிதர்கள்தான் களைத்து விடு கின்றனர்.
இது எப்படிப்பட்ட பிறப்பு, இறப்பு என்பதாக உள்ளது. ஒருவேளை 84
லட்சம் பிறவிகளின் மறு பிறவி அல்லது புனர் ஜென்மம் என்றால்,
என்ன ஆகும் என்றே தெரியாது. தெரியாத காரணத்தால் கல்பத்தின்
ஆயுளையே அதிகமாக ஆக்கி விட்டனர். இப்போது குழந்தைகளாகிய நீங்கள்
தந்தையிடம் நேரடியாக படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
உள்ளுக்குள் உணர்வு உண்டாகிறது - நாம் நடைமுறையில்
அமர்ந்திருக்கிறோம். புருஷோத்தம சங்கமயுகமும் கண்டிப்பாக வர
வேண்டும். எப்போது வருகிறது, எப்படி வருகிறது என்பது யாருக்கும்
தெரியது. குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள் என்றால்
எவ்வளவு குதூகலம் இருக்க வேண்டும். நீங்கள்தான் ஒவ்வொரு
கல்பமும் தந்தையிடமிருந்து ஆஸ்தி எடுக்கிறீர்கள் அதாவது
மாயையின் மீது வெற்றி பெறுகிறீர்கள், பிறகு தோற்கிறீர்கள். இது
எல்லைக்கப்பாற்பட்ட தோல்வி மற்றும் வெற்றி. அந்த ராஜாக்களுக்கு
அதிக அளவில் வெற்றி தோல்வி ஏற்பட்டபடி இருக்கும். பல சண்டைகள்
நடந்தபடி இருக்கின்றன. சிறிய சண்டை நடந்தாலே நாங்கள் வெற்றி
பெற்று விட்டோம் என சொல்லி விடுகின்றனர். என்ன வெற்றி அடைந்தனர்?
சிறிய துண்டு நிலத்தை வென்றார்கள். பெரிய சண்டையில் தோற்றால்
பிறகு கொடியை இறக்கி விடுகின்றனர். முதன் முதலாக ஒரு ராஜா
இருப்பார், பிறகு மேலும் மேலும் அதிகரித்தபடி இருப்பார்கள்.
முதன் முதலில் இந்த லட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருந்தது,
பிறகு மற்ற ராஜாக்கள் வரத்தொடங்கினர். போப் ஆண்டவர்களை
காட்டுவது போல. முதலில் ஒருவர் இருந்தார், பிறகு
வரிசைக்கிரமமாக மற்ற போப் ஆண்டவர்களும் வந்தபடி இருந்தனர்.
யாருடைய மரணத்தையும் நிறுத்த முடிவது இல்லை அல்லவா.
நம்மை பாபா அமரர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார் என
குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அமரபுரியின் எஜமானாக
ஆக்குகிறார், எவ்வளவு குஷி இருக்க வேண்டும். இது மரண லோகம். அது
அமர லோகம். இந்த விசயங்கள் புதியவர்கள் யாரும் புரிந்துக்
கொள்ள முடியாது. அவர்களுக்கு பழையவர்கள் (சீனியர்) அளவுக்கு
மகிழ்ச்சி இருக்காது. நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கின்றனர்.
நிச்சயம் உறுதியாக ஆகி விடுகிறது. இதில் சகிப்புத்தன்மையும்
அதிகமாக இருக்க வேண்டும். இது அசுர உலகம், துக்கம் கொடுக்க
தயங்குவதில்லை. நாங்கள் இப்போது பாபாவின் ஸ்ரீமத்படி நடந்து
கொண்டிருக்கிறோம் என உங்களுடைய ஆத்மா சொல்கிறது. நாம் சங்கம
யுகத்தில் இருக்கிறோம், மற்றவர்கள் கலியுகத்தில் இருக்கின்றனர்.
நாம் இப்போது புருஷோத்தமர்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம்.
புருஷர்களில் உத்தம புருஷர்களாக படிப்பின் மூலமே ஆகின்றனர்.
படிப்பின் மூலமே தலைமை நீதிபதி முதலானவர்களாக ஆகின்றனர் அல்லவா.
உங்களுக்கு தந்தை படிப்பிக்கிறார். இந்த படிப்பின் மூலமே தனது
முயற்சியின் அடிப் படையில் பதவியை அடைகிறீர்கள். யார் எந்த அளவு
படிக்கின்றனரோ அந்த அளவே (பதவியின்) தர வரிசையும் கிடைக்கும்.
இதில் இராஜ்ய பதவியின் தரம் உள்ளது. அப்படி அந்த (உலகாயத)
படிப்பில் இராஜ்ய பதவியின் தர வரிசை இருப்பதில்லை. நாம்
ராஜாக்களுக்கு ராஜாவாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என நீங்கள்
அறிவீர்கள். ஆக, உள்ளுக்குள் எவ்வளவு குஷி இருக்க வேண்டும்.
நாம் இரட்டை கிரீடதாரிகளாக மிகவும் உயர்ந்தவர்களாக ஆகிறோம்.
பகவானாகிய தந்தை நம்மைப் படிப்பிக்கிறார். நிராகார தந்தை எப்படி
வந்து படிப்பிக்கின்றார் என ஒருபோதும் யாரும் புரிந்து கொள்ள
முடியாது. ஓ ! பதீத பாவனா ! வந்து எங்களை தூய்மையாக்குங்கள் என
மனிதர்கள் அழைக் கவும் செய்கின்றனர். அப்போதும் கூட
தூய்மையடைவதில்லை. காமம் மிகப் பெரிய எதிரி என தந்தை சொல்கிறார்.
நீங்கள் ஒருபக்கம் பதித பாவனா வாருங்கள் என அழைக்கிறீர்கள்,
இப்போது நான் வந்திருக்கின்றேன், குழந்தைகளே தூய்மையில்லாத
தன்மையை விட்டு விடுங்கள் என சொல்கிறேன், என்றாலும் ஏன் நீங்கள்
விடுவதில்லை? தந்தை உங்களை தூய்மையாக்கினால் நீங்கள்
தூய்மையற்றவராக ஆகிக்கொண்டே இருக்கக் கூடாது. கணக் கற்றவர்கள்
இப்படி தூய்மையற்றவர்களாக (பதீதர்களாக) ஆகின்றனர். சிலர் உண்மை
சொல் கின்றனர் - பாபா இந்தத் தவறு நடந்து விட்டது. பாபா
சொல்கிறார் - ஏதாவது பாவ கர்மம் ஆகி விட்டாலும் உடனடியாக
தெரியப்படுத்துங்கள். சிலர் உண்மை சொல்கின்றனர், சிலர் பொய்
சொல் கின்றனர். யார் கேட்கிறார்கள்? நான் ஒவ்வொருவருக்குள்ளும்
அமர்ந்து தெரிந்து கொள்வதில்லை, இது நடக்காத ஒன்று. நான் வருவதே
வழி காட்டுவதற்குத்தான், தூய்மை யடையாவிட்டால் நஷ்டம்
உங்களுக்குத்தான். முயற்சி செய்து தூய்மையடைந்து பின் பதிதராகி
விட்டால் சம்பாதித்த வருமானம் மறைந்து போய் விடும். தாமே
தூய்மையற்றவராகி விட்டோம் என வெட்கம் ஏற்படும், அப்போது
தூய்மையடையுங்கள் என பிறருக்கு எப்படி சொல்ல முடியும்? நாம்
எந்த அளவு கட்டளையை மீறி விட்டோம் என உள்ளுக்குள் மனசாட்சி
அரிக்கும். இங்கே நீங்கள் தந்தையிடம் நேரடியாக வாக்குறுதி
கொடுக்கிறீர்கள், பாபா நம்மை சுக தாமம்-சாந்தி தாமத்தின்
எஜமானன் ஆக்குகிறார் என அறிவீர்கள். பாபா ஆஜராகி இருக்கிறார்,
நாம் அவர் முன்னால் அமர்ந்திருக்கிறோம். முன்னர் இவருக்குள் (பிரம்மா
பாபாவுக்குள்) இந்த ஞானம் இருக்கவில்லை. ஞானத்தைக் கொடுக்க
எந்த குருவும் இருக்க வில்லை. குரு இருந்திருந்தால் ஒருவருக்கு
மட்டுமே ஞானம் கொடுப்பாரா என்ன? குருமார்களுக்கு சீடர்கள் பலர்
இருப்பார்கள் அல்லவா. ஒருவர் மட்டும் இருக்க மாட்டார். இவை
புரிந்து கொள்ளக் கூடிய விசயங்கள் அல்லவா. சத்குரு ஒரே
ஒருவர்தான் ஆவார். அவர் நமக்கு வழி காட்டுகிறார். நாம் பிறகு
மற்றவர்களுக்கு வழி காட்டுகிறோம். நீங்கள் அனைவருக்கும்
சொல்கிறீர்கள் - தந்தையை நினைவு செய்யுங்கள். அவ்வளவு தான்.
உயர்ந்தவரிலும் உயர்ந்த தந்தையை நினைவு செய்வதன் மூலம்தான்
உயர்ந்த பதவி கிடைக்கும். நீங்கள் ராஜாக்களுக்கு ராஜாவாக
ஆகிறீர்கள். உங்களிடம் கணக்கற்ற செல்வம் நிறைந்திருக்கும்.
நீங்கள் உங்களுடைய பையை நிரப்பிக் கொள்கிறீர்கள் அல்லவா. பாபா
நம்முடைய பையை நன்றாக நிரப்பிக் கொண்டிருக்கிறார் என நீங்கள்
அறிவீர்கள். குபேரனிடம் நிறைய செல்வம் இருந்தது என சொல்கின்றனர்
அல்லவா. உண்மையில் நீங்கள் அனைவரும் குபேரர்களே. உங்களுக்கு
வைகுண்டம் எனும் பொக்கிஷம் கிடைத்து விடுகிறது. இறை நண்பனின் (குதா
தோஸ்த்) கதையும் உள்ளது. அவருக்கு முதலில் கிடைத்ததை ஒரு
நாளுக்காக இராஜ்யத்தைக் கொடுத்திருந்தார். இவை யனைத்தும்
உதாரணங்களாகும். அல்லாஹ் என்றால் தந்தை, அந்த அவல்தீன்
படைப்பவர் ஆவார். பிறகு காட்சிகள் தெரியும். நாம் யோகபலத்தின்
மூலம் உலக இராஜ்யத்தை அடை கிறோம் என நீங்கள் அறிவீர்கள். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. இந்த அசுர உலகில் மிக மிக சகிப்புத் தன்மை மிக்கவராகி
இருக்க வேண்டும். யார் நிந்தனை செய்தாலும், துக்கம்
கொடுத்தாலும் கூட சகித்துக் கொள்ள வேண்டும். தந்தை யின்
உயர்ந்த வழியை (ஸ்ரீமத்) ஒரு போதும் விடக் கூடாது.
2. தந்தை நேரடியாக தூய்மை அடைவதற்கான கட்டளை இட்டிருக்கிறார்,
ஆகையால் ஒரு போதும் தூய்மையை இழக்கக் கூடாது. ஏதாவது பாவம்
செய்து விட்டால் ஒரு போதும் மறைக்கக் கூடாது.
வரதானம்:
ஏக்னாமி மற்றும் எக்கானமி என்ற பாடத்தின் மூலம் குழப்பத்திலும்
கூட ஆடாத, அசையாதவர் ஆகுக.
சமயத்தின் அனுசாரம் வாயுமண்டலத்தில் அசாந்தி மற்றும் குழப்பம்
அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது, அப்படிப்பட்ட சமயத்தில்
ஆடாத, அசையாதவராக இருப்பதற்காக புத்தியின் லைன் மிகவும்
தெளிவாக இருக்க வேண்டும். இதற்காக சமயத்தின் அனுசாரம் டச்சிங்
மற்றும் கேட்சிங் சக்தி அவசியமானதாக இருக்கின்றது, இதை
அதிகரிப்பதற்காக ஒருவருடைய நினைவில் இருப்ப வராக (ஏக்னாமி)
மற்றும் சிக்கனமானவராக (எக்கானமி) ஆகுங்கள். ஒருவருடைய நினைவில்
இருக்கக்கூடிய மற்றும் சிக்கனமாக இருக்கக்கூடிய குழந்தைகளின்
லைன் தெளிவாக இருப்பதன் காரணத்தினால் பாப்தாதாவின் டைரக்ˆனை (வழிகாட்டுதலை)
அவர்கள் சகஜமாக கேட்ச் செய்து (கிரஹித்து) குழப்பத்திலும் கூட
ஆடாத - அசையாதவராக இருப்பார்கள்.
சுலோகன்:
ஸ்தூல, சூட்சும விருப்பங்களை தியாகம் செய்யுங்கள், அப்பொழுது
எப்பேற்பட்ட விசயத்தையும் எதிர்கொள்ள முடியும்.
அவ்யக்த சமிக்கை: தங்களுக்காகவும் மற்றும் அனைவருக்காகவும்
மனதின் மூலமாக யோகத்தின் சக்திகளை பயன்படுத்துங்கள்.
இப்பொழுது மனதின் தரத்தை அதிகரித்தீர்கள் என்றால் தரமான
ஆத்மாக்கள் சமீபத்தில் வருவார்கள், இதில் சுயம் மற்றும் மற்றவர்
- இருவருக்குமான இரட்டை சேவை அடங்கியுள்ளது. சுயத்திற்காக
தனியாக உழைக்க வேண்டியதிருக்காது. பிராப்தி கிடைத்திருக்கின்றது
என்ற இந்த ஸ்திதி அனுபவம் ஆகும். இந்த சமயத்தின் சிரேஷ்டமான
பிராப்தி என்னவென்றால் - சதா சுயம் சர்வ பிராப்திகளில்
சம்பன்னமாக இருப்பது மற்றும் சம்பன்னமாக ஆக்குவது என்பதாகும்.