12.04.26 காலை முரளி
ஓம் சாந்தி 30.11.2009 பாப்தாதா,
மதுபன்
தந்தை மற்றும் அனைவரின் அன்புக்குரியவர் ஆவதற்கு திருப்தியின்
மணி ஆகி
ஒவ்வொரு சூழ்நிலையின் பிரபாவத்திலிருந்து விடுபட்டு இருங்கள்
இன்று நாலாபுறமும் உள்ள திருப்தியான ஆத்மாக்களைப் பார்த்துக்
கொண்டிருக்கிறார். திருப்தி மணிகள் நாலாபுறமும் தங்கள் மணியின்
ஜொலிப்பைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். திருப்தி என்பது
அனைத்திலும் பெரியதிலும் பெரிய ஸ்திதி ஆகும். சதா திருப்தியாக
இருப்பவர்கள் அனை வருக்கும் பிரியமானவர்களாக இருப்பார்கள்.
பாபாவுக்கோ பிரியமானவர்களாகவே இருக்கிறார்கள். யாருக்கு
அனைத்துப் பிராப்திகளும் உள்ளனவோ, அவர்கள் தாம் திருப்தியாக
இருக்க முடியும். பிராப்திகளுக்கு ஆதாரம் திருப்தி. எனவே
அத்தகைய ஆத்மாக்கள் அனைத்து பிராமண ஆத்மாக் களுக்கும்
பிரியமானவர்கள். சர்வ பிராப்திகள் என்றால் சதா திருப்தி.
திருப்தியான ஆத்மாவின் வாயுமண்டலத்திலும் கூட பிரபாவம்
ஏற்படுகிறது மற்றும் சர்வ பிராப்தி கள் பரமாத்மாவின் கொடை.
பரமாத்மா தந்தை மூலம் சர்வ சக்திகள், சர்வ குணங்கள், சர்வ
கஜானாக்களைப் பெற்றுள்ள ஆத்மா சதா திருப்தியாக இருப்பார்.
திருப்தியான ஆத்மாவின் ஸ்திதி எப்போதும் முன்னேற்றத்தில்
இருக்கும். சூழ்நிலை திருப்தியான ஆதமாவின் மீது தாக்கத்தை
ஏற்படுத்த முடியாது. ஏனென்றால் எங்கே திருப்தி உள்ளதோ, அங்கே
சர்வ சக்திகள், சர்வ குணங்கள் தாமாகவே வந்து விடும். ஒரு
திருப்தி அநேக குணங்களைத் தன்னுடையதாக ஆக்கி விடுகிறது. ஆக,
ஒவ்வொருவரும் தன்னைத் தான் கேளுங்கள் - நான் சதா திருப்தியான
ஆத்மாவாக இருக்கிறேனா? திருப்தியான ஆத்மா சதா அனைவரின்,
பாபாவின் சமீப மற்றும் சமமான ஸ்திதியில் இருப்பார். ஆனால் இந்த
ஸ்திதியில் இருப்பதற்காக மிகவும் சாட்சிப் பார்வையாளர் அவஸ்தா
இருக்க வேண்டும், திரிகாலதரிசி அவஸ்தா இருக்க வேண்டும். ஒவ்வொரு
கர்மமும் திரிகாலதரிசி, அதாவது ஒவ்வொரு விஷயத்தின் மூன்று
காலங்களையும் கண்டறிந்து பிறகு கர்மம் செய்பவர். இதற்காக இரண்டு
விஷயங்கள் அவசியம். அந்த இரண்டு விஷயங்கள் சம்பந்தம் மற்றும்
செல்வம். சம்பந்தமும் அவிநாசி, செல்வமும் அவிநாசி. அவை
கிடைப்பது அவிநாசி பாபாவின் மூலம். அவிநாசி செல்வமும்
சம்பந்தமும் என்பதால் ஆத்மா சதா திருப்தியாக உள்ளது மற்றும்
பாபாவுக்கும் சர்வ ஆத்மாக்களுக்கும் மிகப் பிரியமானதாக ஆகி
விடுகிறது. எந்த ஒரு பரிஸ்திதியும் மாயாவின் ரூபத்தில்
வருகின்றது என்றால் பயப்படுவதில்லை. எல்லையற்ற திரையில் மிக்கி
மவுஸ் விளையாட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கவலை
கொள்வதில்லை, மிக்கி மவுஸ் விளையாட்டைப் பார்த்து மனமகிழ்ச்சி
அடைகிறார்கள். மாயாவின் பல்வேறு ரூபங்களை, பல விதமான மிக்கி
மவுஸ் ரூபங்களில் அனுபவம் செய்கிறார்கள். அந்த மாதிரி
ஸ்திதியின் அனுபவம் பாபா மூலம் அனைவரும் செய்யத் தான் வேண்டும்
மற்றும் செய்தும் இருக்கிறார்கள்.
பாப்தாதா பார்க்கிறார் - பயமற்ற, ஒருமுகத் தன்மையுடன் கூடிய
புத்தி உள்ள வெற்றியாளராகிய ஆத்மாக்கள் எந்த ஒரு
பரிஸ்திதியிலும் மேலே-கிழே ஆக மாட்டார்கள். பாபாவுக்கு ஒவ்வொரு
குழந்தையிடமும் சுப ஆசை உள்ளது - அதாவது ஒவ்வொரு குழந்தையும்
சதா வெற்றியாளராகி, பாபாவுக்குத் தன்னுடைய வெற்றி சொரூபத்தைக்
காட்ட வேண்டும். எனவே ஒவ்வொருவரும் தன்னைத் தான் கேட்டுக்
கொள்ளுங்கள் - நான் யார்? பாப்தாதா இதற்கு முன்பும் சொல்லி
யிருக்கிறார் - எப்போதாவது என்ற சொல்லை, சமயத்தின் பிரமாணம்
இப்போது பிராமணர்களின் அகராதியிலிருந்து முடித்து விடுங்கள்.
பாபாவிடமிருந்து சதா காலத்திற்கான ஆஸ்தி பெற வேண்டும் எனும்
போது ஒவ்வொரு பிராப்தியும் பெற்றாக வேண்டும். ஏனென்றால்
பாபாவின் நம்பிக்கைகளை நிறைவேற்றுகிற நம்பிக்கை தீபங்கள்.
அவர்களின் சங்கல்பத்தில் கூட எப்போதாவது என்ற சொல் வர முடியாது.
ஏன்? சதா பாபாவின் துணையாகவும் துணைவராகவும் இருப்பவர்கள்.
கூடவே இருப்பவர்கள் மற்றும் துணைவராகி உலக மாற்றத்திற்கான
காரியம் செய்பவர்கள்.
எனவே சொல்லுங்கள் - இந்த சதா காலத்திற்குமான வரதானத்தை
பாபாவிடமிருந்து பெற்றுக் கொண்டீர்கள் இல்லையா? இதையோ பிறவி
எடுத்ததுமே பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்கும் இந்த வரதானத்தைத்
தான் கொடுக்கிறார் - சதா யோகி பவ, பவித்திர பவ. அந்த
வரதானத்தின் மூலம் கிடைக்கும் பிராப்திகள் அனைத்தும் சதா
காலத்துக்கும் இருக்கும். எப்போதாவது இல்லை. ஆக, குழந்தைகள்
அனைவரும் சதா காலத்திற்கான அதிகாரிகள். ஏனென்றால் பாபாவின்
ஒவ்வொரு குழந்தையிடமும், கடைசிக் குழந்தையாக இருந்தாலும்,
பாபாவுக்கு மனதின் அன்பு உள்ளது. ஏனென்றால் பெரிய-பெரிய
மனிதர்கள், தங்களை புத்திசாலி என நினைப்பவர்களும் கூட பாபாவை
அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் பாப்தாதாவின் கடைசிக் குழந்தை
பாபாவை அறிந்து கொண்டு விட்டார். மேரா பாபா என்று மனதார
சொல்கிறார்கள். எனவே பாபாவுக்கு ஒவ்வொரு குழந்தையிடமும் அழியாத
அன்பு உள்ளது. எனவே ஒவ்வொரு குழந்தைக்கும் பாபாவின் வரதானம்
உள்ளது. குழந்தைகள் நம்பர்வார் இருந்தாலும் பாப்தாதா நாள்தோறும்
ஒரே சமயத்தில் ஒரே வரதானம் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒன்றாகக்
கொடுக்கிறார். பாப்தாதா வின் ஒவ்வொரு குழந்தையும் நம்பர்வார்
இருந்தாலும், மேரா பாபா என்று சொல்லி விட்டால் ஒவ்வொரு நாளும்
வரதானத்திற்கு அதிகாரி ஆகி விட்டார்கள். ஒவ்வொரு குழந்தைக்கும்,
எங்கே இருந்தாலும், இந்தியாவில் இருந்தாலும், வெளிநாட்டில்
இருந்தாலும், அனைவருக்கும் பாப்தாதா விடமிருந்து ஒரே வரதானம்
தான் கிடைக்கிறது. மற்றும் வரதானத்தைப் பெற்று,
மகிழ்ச்சியடையவும் செய்கின்றனர். ஆனால் இரண்டு விதமான
குழந்தைகள் உள்ளனர். ஒரு விதமான குழந்தைகள் வரதானத்தைப்
பார்த்து அவசியம் குஷி அடைகின்றனர். ஆனால் யார் வரதானத்தைப்
பார்த்துக் குஷி அடையாமல், இது எனக்கான வரதானம் என்று வர்ணனை
செய்யாமல், வரதானத்தை பலனளிக்கக் கூடியதாக ஆக்குகிறார்களோ,
அவர்கள் தாம் முன்னால் நம்பர் பெறுகிறார்கள். வரதானத்தினால்
நன்மை பெற்று வரதானத்தின் பலனை அடைகிறார்கள். விதை உள்ளது,
ஆனால் விதையை பலன் தரத்தக்கதாக ஆக்கவில்லை, பலனை வெளிப்படுத்
தவில்லை என்றால் வெறுமனே குஷி ஏற்படுகிறது. வரதானத்திலிருந்து
பலனை வெளிப்படுத்து வதற்கு, எப்படி ஏதேனும் விதை
இருக்கிறதென்றால், அதன் பலனை வெளிப்படுத்த அதற்கு நீரும்
வெப்பமும் வேண்டும். அப்போது தான் பலன் வெளிப்படும். எனவே
இங்கேயும் கூட ஒவ்வொரு குழந்தையும் வரதானத்தின் பலனை
வெளிப்படுத்த வேண்டுமென்றால், அதன் மூலம் (மரத்தின்) விஸ்தாரம்
ஏற்பட வேண்டுமென்றால், தனது மனதில் வரதானத்தின் பலன் மூலம்
விருத்தி ஏற்பட்டுக் கொண்டே போக வேண்டுமானால், இங்கேயும் பாபா
சொல்கிறார் - வரதானத்தின் பலனை வெளிக்கொண்டு வருவதற்கு அடிக்கடி
வரதானத்தை ஸ்மிருதியில் கொண்டு வாருங்கள். ஸ்மிருதி சொரூபத்தின்
ஸ்திதியில் நிலைத்திருங்கள். அடிக்கடி சிந்தனையில் கொண்டு
வருவது மட்டுமில்லை, ஆனால் ஸ்மிருதி - இது தான் நீர் விடுவது
மற்றும் சொரூபத்தில் நிலைத்து விடுவது தான் வெப்பம்
கொடுப்பதாகும். எனவே இது பலனளிப்பதன் மூலம் தனக்குள்ளும்
மிகுந்த சக்தி நிரம்புகிறது, மற்றும் மற்றவர்களுக்கும் அந்த
பலன் மூலம் அந்த சக்தியை அனுபவம் செய்விக்க முடியும்.
பாப்தாதா இப்போது எதை விரும்புகிறார்? ஏனென்றால் பாப்தாதா
சிறிது காலமாகவே சமயத்தின் எச்சரிக்கை கொடுத்துக்
கொண்டிருக்கிறார். ஒவ்வொரு குழந்தையின் படிப்பினுடைய
ரிசல்ட்டுக் கான சமயம் திடீரென்று வரப் போகின்றது. அதற்காக சதா
எவர்-ரெடியாக இருக்க வேண்டும். அதோடு பாப்தாதா இந்த சமிக்ஞையும்
கொடுத்துக் கொண்டிருக்கிறார் - இப்போது பறக்கும் கலையின் தீவிர
புருஷார்த்தத்திற்கான சமயம். சென்று கொண்டிருக்கிறோம் -- இல்லை,
ஆனால் பறந்து கொண்டிருக்கிறோம். சாதாரண ரீதியில் தனது
தினச்சரியாவைக் கழிப்பது என்ற அந்த சாதாரண புருஷார்த்தத்தின்
சமயமெல்லாம் கடந்து விட்டது. எனவே பாப்தாதா சமிக்ஞை கொடுத்துக்
கொண்டிருக்கிறார். ஒவ்வொரு விநாடி, ஒவ்வொரு சங்கல்பத்தையும்
சோதித்துப் பாருங்கள். தீவிர புருஷார்த்தம் செய்யாமல் ஒரு மணி
நேரம் சாதாரண புருஷார்த்தத்தில் இருந்து விட்டீர்களானால் அந்த
ஒரு மணி நேரத்தில் திடீரென்று கடைசிப் பேப்பரின் நேரம் வந்து
விட்டால் அந்த் மதி ஸோ கதி ஆகி விடும். அந்த ஒரு மணி நேரத்தின்
சாதாரண புருஷார்த்தம் எவ்வளவு நஷ்டத்தை ஏற்படுத்தி விடும்! எனவே
பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு சங்கல்பம், ஒவ்வொரு
விநாடி நேரத்தின் மகத்துவத்தைப் பற்றி அவ்வப்போது சமிக்ஞை
கொடுத்துக் கொண்டிருக்கிறார். குழப்பங்கள் வரும் நேரத்தில்
அசையாமல் இருப்பதற்கான புருஷார்த்தம் தீவிர புருஷார்த்தி தான்
செய்ய முடியும். சாதாரண புருஷார்த்தி எவர்-ரெடி ஆவதில்
தாமதமாக்கி விடுவார். மேலும் பாப்தாதா சொல்லியிருக்கிறார் - ஒரு
விநாடியில் பிந்தி, அதாவது முற்றுப்புள்ளி. தீவிர புருஷார்த்தி
இல்லை என்றால் என்னவாகும்? அனுபவியாகவோ இருக்கிறீர் கள்.
முற்றுப்புள்ளிக்கு பதிலாக கேள்விக்குறியோ ஆகி விடாதா? பிந்தி
எவ்வளவு சுலபம்! கேள்விக் குறி எவ்வளவு கோணல்-மாணலாக உள்ளது!
முற்றுப்புள்ளி என்றால் முற்றுப்புள்ளி ஆகிவிட வேண்டும்.
கமாவும் இல்லை, ஆச்சரியக்குறியும் இல்லை. என்ன செய்வேன் என்று
யோசிப் பதற்கான நேரமும் கிடைக்காது. ஆக, எந்த ஒரு குழந்தையும்
இதை யோசிக்க முடியாது. இவ்வளவு வேகமான புருஷார்த்தம் செய்வது
தான் பேப்பரில் பாஸாவதாகும்.
பாப்தாதா பார்க்கிறார் - இப்போதும் காரணத்துடனோ காரணம் இல்லாமலோ,
ஏன், என்ன, எப்படி, இப்படி. இது குழந்தைகள் சிலரின் தினசரி
சார்ட்டில் காணப்படுகிறது. அநேகரின் சார்ட்டில் பாப்தாதா
பார்த்தார் - வீண் எண்ணங்களின் அலை சமயத்தை எடுத்துக் கொள்கிறது.
மேலும் வீணானவற்றின் வேகம் அவ்வளவு தீவிரமாக உள்ளது - சாதாரண
சங்கல்பத்தின் ஒரு மணி நேரம் மற்றும் வேகமான சங்கல்பத்தின் ஒரு
நிமிடத்துக்கு சமம். எனவே இன்று இதைப் பார்த்துக்
கொண்டிருந்தார் - அனைவர்க்கும் பிரியமான, பாப்தாதாவுக்குப்
பிரிய மான திருப்தியான ஆத்மாக் கள் யார்-யார்? திருப்தியான
ஆத்மாவின் சங்கல்பத்தில் கூட இது ஏன், என்ன என்ற பாஷை கனவிலும்
கூட வராது. ஏனென்றால் அந்த ஆத்மாவுக்கு விசேஷமாக மூன்று
விஷயங்கள், மூன்று பிந்திகள் நினைவிருக்கும் - ஆத்மா, பரமாத்மா
மற்றும் டிராமா. மூன்றையுமே சமயத்தில் காரியத் தில் ஈடுபடுத்த
முடியும். ஏனென்றால் அத்தகைய சமயத்தில் சர்வசக்திகளின் கஜானா
அவசியம். மேலும் எந்த நேரத்தில் எந்த சக்திக்குக் கட்டளை
இடுகிறாரோ, அந்த சக்தி ஆஜராகி விட வேண்டும் - அவரே மாஸ்டர்
சர்வ சக்திவான் ஆவார். பொறுமை சக்தி வேண்டும், ஆனால் எதிர்
கொள்ளும் சக்தி வந்து விட்டால், அதுவும் சக்தி தான், ஆனால்
அந்த சக்தி பயன்படாது. எனவே சர்வ கஜானாக்களின் சாவி மூன்று
பிந்திகளாகும் - நீங்கள், பாபா மற்றும் டிராமா.
ஆக, பாப்தாதாவுக்கு ஒரு சங்கல்பம் உள்ளது, சொல்லட்டுமா? செய்ய
வேண்டியதிருக்கும். யார் செய்வதற்குத் தயாராக இருக்கிறார்களோ,
அவர்கள் கை உயர்த்துங்கள். செய்தே ஆக வேண்டும். நல்லது,
அனைவரும் கை உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். மனதின் கை
உயர்த்திக் கொண்டிருக் கிறீர்களா, அல்லது சரீரத்தின் கை
உயர்த்திக் கொண்டிருக்கிறீர்களா? மனதின் கை பக்காவாக இருக்கும்.
இந்தப் பதினைந்து நாள் கடந்து போகும் போது இந்த விசேஷ
அப்பியாசம் செய்யுங்கள். மேலும் அவரவர் சென்டரில்
இருப்பவர்களையும் செய்ய வையுங்கள். சுற்றி வந்து ஃபோன் செய்து
அவர்களுக்கு நினைவு படுத்துங்கள் - வீட்டுப் பாடம் செய்து
கொண்டிருக்கிறீர்களா என்று. வீட்டுப்பாடம் என்ன? சுலபமானது.
பலவித சூழ்நிலைகளின் பிரச்சினைகளைக் கடந்து செல்லவோ
செய்கிறீர்கள். ஆனால் இந்தப் பதினைந்து நாள்களும் ஒவ்வொருவரும்
சங்கல்பம், வாய்மொழி, மற்றும் கர்மத்தில், குறைந்தது 80
சதவிகித மார்க் பெற வேண்டும். பிறகும் பாப்தாதா 20 சதவிகிதம்
இதில் கிரேஸ் மார்க் தருகிறார். சம்மதம் தானே? சம்மதமா? இந்த
வேலை (வீட்டுப்பாடம்) கொடுக் கட்டுமா? நல்லது. 15 நாள்கள்.
மாயாவும் கேட்டுக் கொண்டிருக்கிறது. பிரச்சினைகளோ வரத் தான்
செய்யும். பிரச்சினைகளைப் பார்க்கக் கூடாது. பாஸ் ஆக வேண்டும்.
இதை நினைவு வையுங்கள். 15 நாள்கள் பெரிய விஷயமில்லை. ஆனால்
ஒவ்வொருவரும் உண்மையான, தூய்மையான மனதோடு கனவிலும் கூட
சங்கல்பம், பேச்சு மற்றும் கர்மத்தில் பாஸாகிக் காட்ட வேண்டும்.
முடியுமா? முடியுமா? டீச்சர்கள் சொல்லுங்கள், முடியுமா? 15 நாள்
என்பது ஒன்றுமே இல்லை. ஆனால் பாப்தாதா ஒத்திகைக்காகச்
சொல்கிறார் - சங்கல்பமும் கூட வீணாகக் கூடாது, யுத்தம்
செய்யக்கூடாது, வெற்றியாளர் ஆக வேண்டும். 15 நாள்களுக்கு முழு
வெற்றியாளர். கஷ்டமா அல்லது சுலபமா? கஷ்டமா அல்லது சுலபமா?
சுலபம் என்பவர்கள் கை உயர்த்துங்கள். சுலபமா? ஆக, பாப்தாதா
இந்த 15 நாள்களின் ரிசல்ட்டைப் பார்ப்பார். பிறகு முன்னேறச்
செய்வார். 15 நாளோ யார் வேண்டுமானாலும் செய்யலாம் இல்லையா?
செய்யலாம் இல்லையா? மதுபன் வாசிகள் கை உயர்த்துங்கள்.
முன்னால்-முன்னால் மதுபன்வாசிகள் அமர்ந்துள்ளனர். மிக நன்று.
வெளிநாட்டினர் அல்லது இந்தியாக்காரர்கள் அனைவரும் செய்ய
வேண்டும். கிராமத்தினரோ அல்லது பெரிய நகரத்தினரோ, அனைவரும் 15
நாள்களின் ரிக்கார்டு வைக்க வேண்டும். என்ன, ஏன் என்ற கேள்விகள்
எழக் கூடாது. என்ன செய்வது, விஷயமே அந்த மாதிரி இருந்தது என்று
இது போல் சொல்லக் கூடாது. 80 சதவிகிதம் எடுத்தே ஆக வேண்டும்.
பிறகும் பாப்தாதா லேசாக்கிக் கொண்டி ருக்கிறார். 20 சதவிகிதத்தை
விட்டு விட்டார். ஏனென்றால் பாப்தாதா பார்க்கிறார் - எங்கெங்கோ
போகப்போக மாயா அலட்சியம் மற்றும் சோம்பலில் கொண்டு வந்து
விடுகிறது. ராயல் கவனக்குறைவு இது இருந்தது, அது இருந்தது, இது
ராயல் கவனக்கறைவு, சோம்பல் - இது தீவிர புருஷார்த்தத்தில்
குறைவை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் இப்போது பாப்தாதா யாரெல்லாம்
மாணவர்கள் உள்ளனரோ, ஒவ்வொரு மாணவர்க்கும் இப்போது முதலில் இந்த
15 நாளுக்கான ஒத்திகை செய்வித்து, கொஞ்ச காலத்திற்கு இது போலவே
அப்பியாசம் செய்விக்க விரும்புகிறார். இதற்கு அனைவரையும் கை
உயர்த்தச் செய்கிறார். எவர்-ரெடி என்றால் அனைவரும் கை
உயர்த்தலாம். இதற்காக நீண்ட காலத்தின் அப்பியாசம் தேவை. அதனால்
இந்தச் சிறு அப்பியாசத்தைச் செய்விக்கிறார். நல்லது.
முதல் முறையாக எவ்வளவு பேர் வந்திருக்கிறீர்கள், எழுந்து
நில்லுங்கள். நல்லது. உங்களுக்கு பாப்தாதாவின் முன்னிலையில்
வந்த நாளுக்கான மிகமிக வாழ்த்துகள், வாழ்த்துகள்! பாபாவின்
பார்வை குழந்தைகள் மீது பட்டது மற்றும் குழந்தைகளின் பார்வை
பாபா மீது பட்டது. ஆக, மிகமிக வாழ்த்துகள். நல்லது. மற்றும்
கேக் இல்லை, ஆனால் குஷியின் கேக் சாப்பிடுங்கள். நல்லது.
இப்போது தாமதமாக வந்திருக்கிறீர்கள். ஆனால் வேகமாகச் சென்று
நம்பர் முன்னால் பெற முடியும். எனவே பாப்தாதாவின்
தரப்பிலிருந்து மற்றும் உங்கள் துணையிலுள்ள அனைத்து
சகோதர-சகோதரிகளின், அனைவரின் வாழ்த்துகள், வாழ்த்துகள். அந்த
மாதிரி இது முன் உதாரண மாகும் - கடைசியில் வந்தவர் கூட வேகமாகச்
சென்று முதல் வரிசையில் வர முடியும். நல்லது.
நாலாபுறமும் உள்ள பாப்தாதாவின் ஆசைகளை நிறைவேற்றக்கூடிய
நம்பிக்கை தீபங்கள், ஏன், என்ன என்ற பாஷையிலிருந்து விலகி
இருக்கக் கூடிய, சதா ஏக்ரஸ், சதா ஒரு பாபாவைத் தவிர வேறு யாரும்
இல்லை, பாபாவிடம் தான் விசேஷமாக வாழ்க்கையின் மூன்று
சம்பந்தங்கள், தந்தை, ஆசிரியர், சத்குருவாக அவரை அனுபவம்
செய்பவர்கள், தந்தையிடமிருந்து ஆஸ்தி, ஆசிரியரிடம் இருந்து
படிப்பின் ஆஸ்தி மற்றும் சத்குருவிடமிருந்து வரதானங்களின் ஆஸ்தி
பெறக்கூடிய பல மடங்கு பாக்கியவான் ஒவ்வொரு குழந்தைக்கும்
பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாதிகளிடம் - (இந்தத் தடவை நாலாபுறமும் சேவைகளின் புரோகிராம்
மிக நன்றாக நடந்தது) அனைவரும் அனைவருக்கும் உதவியும் நன்றாகச்
செய்திருக்கிறார்கள். எப்படிச் செய்வது என்று யாருக்கும்
யோசிக்க வேண்டி இருக்கவில்லை. செய்தே ஆக வேண்டும். ஒருவர்
மற்றவரின் உதவியுடன் புரோகிராம் நன்றாகவே நடந்தது. சப்தம்
பரவியுள்ளது. செய்தியோ கிடைத்துள்ளது, இப்போது இன்னும்
முன்னேறிச் செல்லுங்கள். (யோகத்தில் அனைவரும் மிக நல்ல அனுபவம்
செய்தார்கள்) ஏனென்றால் தலைப்பே வரதானம் பெற வேண்டும் என்றே
இருந்தது இல்லையா? ஆக, யோகத்தின் புரோகிராமினால் அனுபவம்
செய்தீர்கள்.
பஞ்சாப் மண்டலத்தின் சேவாதாரிகளுடன்:
பஞ்சாபுக்கு டிராமாவின் அனுசாரம் இந்த சந்நியாசி கள்,
மகாத்மாக்களுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பு நன்றாகக்
கிடைத்துள்ளது. மேலும் செய்து கொண்டும் இருக்கிறார்கள்.
பஞ்சாபில் ஸ்தாபனையின் சமயத்தில் எப்படி சேவை தொடங்கியதோ, அது
போல் சகயோகி மற்றும் வாரிசு குவாலிட்டி உள்ளவர்கள்
நிமித்தமானார்கள். அங்கே எவ்வளவு தீவிரவாதிகள் உள்ளனரோ, அது
போல் அவ்வளவு சிங்கம் போன்ற குவாலிட்டி உள்ளவர்களும்
வெளிப்பட்டிருக்கிறார்கள். இப்போது பஞ்சாப் என்ன செய்ய வேண்டும்?
இந்த விசேஷத் தன்மையோ இருக்கிறது, இப்போது பஞ்சாப் காரர்கள்
யாராவது அந்த மாதிரி சிங்கத்தைத் தயார் செய்ய வேண்டும்,
புகழ்பெற்றவராக, சபையில் மைக் ஆகித் தங்கள் அனுபவம் சொல்ல
வேண்டும். மைக் பெரியதாக இருக்க வேண்டும், சிறியதாக இருக்கக்
கூடாது. எப்படி அரசாங்கத்தின் வி.ஐ.பி.க்களோ தனியாக உள்ளனர்.
ஆனால் மகாத்மாக்களிலும் கூட வி.ஐ.பி.க்கள் உள்ளனர். அந்த மாதிரி
ஏதேனும் பெரிய மைக் தயார் செய்யுங்கள். அவர்கள் தங்கள்
அனுபவத்தின் மூலம் மற்றவர்களை உற்சாகத்தில் கொண்டு வர வேண்டும்.
அது போல் யாரை யாவது தயார் செய்து வெளிக்கொண்டு வாருங்கள்,
தயார் செய்யுங்கள். செய்ய முடியும். ஏனென்றால் தற்சமயம்
அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர், சாது சந்நியாசிகளின் சேவைகளோ
துவாபரயுகத்திலிருந்து தொடங்கின. ஆனால் தங்களுக்கு சமமான, அந்த
மாதிரி பெரிய குருவாக மற்றவர்களை, சீடர்களை ஆக்க வேண்டும்.
அந்த மாதிரி உதாரணம் அவர்களுக்குள் இல்லை மற்றும் பாப்தாதா
தம்மை விடவும் சாமர்த்தியமான குழந்தைகளைத் தயார் செய்துள்ளார்.
அவர்கள் பொதுவெளியில் வருகின்றனர். எனவே பஞ்சாப் ஏதேனும்
புதுமையைச் செய்து காட்டுங் கள். வி.ஐ.பி.க்களோ அனைத்துத்
தரப்பிலிருந்தும் வருகின்றனர். ஆனால் நீங்கள் அந்த மாதிரி
கொண்டு வாருங்கள் - அவர்களைப் பார்த்து அனைவரும்
விழித்துக்கொள்ள வேண்டும். செய்தி கிடைக்க வேண்டும். முடியுமா?
பார்க்கலாம். கொஞ்சம் சமயம் பிடிக்கவோ செய்கிறது. ஆனால் அது
போல் யாரையாவது தயார் செய்து காட்டுங்கள். மற்றப்படி விருத்தியோ
ஆகிக் கொண்டிருக்கிறது. நல்லது.
ஆசீர்வாதம்:
பாபாவின் கை மற்றும் துணையின் ஸ்மிருதி மூலம் கடினமானதை
சகஜமாக்கக் கூடிய கவலையற்றவர் ஆகுக.
எப்படி யாராவது பெரியவர்களின் கையோடு கை சேர்த்தால் ஸ்திதி
கவலையற்றதாக உள்ளது. அது போல் ஒவ்வொரு கர்மத்திலும் இதையே
புரிந்து கொள்ள வேண்டும் - பாப்தாதா என்னோடு கூடவே இருக்கிறார்
மற்றும் நமது இந்த அலௌகிக வாழ்க்கையின் கை அவருடைய கையில்
உள்ளது. அதாவது வாழ்க்கை அவரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. எனவே
பொறுப்பும் அவருடையதாக ஆகி விடுகிறது. அனைத்து சுமைகளையும்
தந்தை மீது வைத்து விட்டுத் தன்னை லேசாக்கிக் கொள்ளுங்கள்.
சுமையை இறக்கி விடுவதால் கடினத்தை சகஜமாக்கக் கூடிய சாதனமே -
பாபாவின் கை மற்றும் துணை.
சுலோகன்:
புருஷார்த்தத்தில் உண்மை இருக்குமானால்
பாப்தாதாவின் அதிகப்படியான உதவியை அனுபவம் செய்வீர்கள்.
அவ்யக்த இஷாரா - மகான் ஆவதற்காக இனிமை மற்றும்
பணிவு என்ற குணங்களை தாரணை செய்யுங்கள்
யாராவது உங்களோடு மோதலை உருவாக்குகிறார்கள் என்றால் நீங்கள்
அவருக்கு உங்களுடைய அன்பு என்ற தண்ணீர் கொடுங்கள். நீங்கள்
உங்களுடைய இனிமை மற்றும் பணிவின் குணத்தை விட்டுவிடாதீர்கள்.
பணிவு என்ற ஆடை அணிந்து அமர்ந்திருங்கள். இந்தப் பணிவு தான்
கவசமாகும். அது பாதுகாப்பிற்கான சாதனம். சம்ஸ்காரங்களின் நடனம்
(ராஸ்) இணக்கமாவதற் கான அனைத்திலும் சுலபமான வழி - சுயம் பணிவு
மற்றும் இனிமை நிறைந்தவர் ஆகி விடுங்கள். அடுத்தவர்களுக்கு
சிரேஷ்ட இருக்கை கொடுத்து விடுங்கள்.