12.10.25    காலை முரளி            ஓம் சாந்தி  17.03.2007      பாப்தாதா,   மதுபன்


உயர்ந்த உள்ளுணர்வினால் சக்திசாலியான வைப்ரேஷன் மற்றும் வாயு மண்டலத்தை அமைக்க தீவிர முயற்சி செய்யுங்குள். ஆசீர்வாதம் கொடுங்கள் ஆசீர்வாதம் பெறுங்கள்

இன்று அன்பு மற்றும் சக்தியின் கடலான பாப்தாதா தனது சினேகியான தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளைப் பார்க்க வந்துள்ளார். அனைத்து குழந்தைகளும் கூட வெகு தொலைவில் இருந்தெல்லாம் அன்பின் ஈர்ப்பால் சந்திப்பை கொண்டாட வந்துள்ளீர்கள். எதிரில் அமர்ந்திருப் பவரும் உள் நாடு, வெளிநாடு என ஆங்காங்கே இருப்பினும் அன்பாக சந்திப்பை கொண்டாடிக் கொண்டு இருக்கின்றனர். பாப்தாதா நாலாபுறமும் உள்ள சர்வ சினேகி மற்றம் சர்வ சகயோகி குழந்தைகளைப் பார்த்து மகிழ்கின்றார். அனைத்து குழந்தைகளின் மனதில் விரைவாகவே பாபாவை உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருப்பதை பாப்தாதா பார்க்கின்றார். பாபா சொல்கின்றார் அனைத்து குழந்தைகளிடமும் ஊக்கம் நன்றாகவே உள்ளது, ஆனால் குழந்தைகள் தன்னை முதலில் தந்தையைப் போலவே சம்பன்ன சம்பூரணமாக மாற்றும் பொழுதே தந்தையை வெளிப்படுத்த முடியும் குழந்தைகள் தந்தையிடம் எப்போது பிரத்யட்சம் என கேட்கின்றனர்? அதற்கு தந்தை கேட்கின்றார் நீங்கள் முதலில் தன்னை தந்தைக்கு நிகராக எப்போது மாற்றிக் காட்டுவீர்கள்? தனது முழுமை அடையும் நாளுக்கான தேதி குறித்து விட்டீர்களா? அயல் நாட்டவர் ஒரு வருடம் முன்பாகவே தேதி குறிப்போம் என்கின்றனர். ஆக தங்களுக்குள் கூடி தந்தைக்கு நிகராக மாறுவதற்கான தேதி குறித்து விட்டீர்களா?

பாப்தாதா பார்க்கின்றார், இப்போதெல்லாம் ஒவ்வொரு துறையைச் சார்ந்தவரும் அதிக மீட்டிங் போடுகின்றனர். இரட்டை அயல் நாட்டவரின் மீட்டிங் குறித்தும் பாப்தாதா கேள்விப்பட்டார். நன்றாக இருந்தது. அனைத்து மீட்டிங் செய்திகளும் பாபாவிடம் வந்து சேருகின்றது. ஆக பாப்தாதா கேட்கின்றார். இதற்கான தேதி குறித்து விட்டீர்களா? இதற்கான தேதியை டிராமா முடிவு செய்யுமா அல்லது நீங்கள் முடிவு செய்வீர்களா? யார் செய்வது? நீங்கள் லட்சியம் வைத்தே ஆக வேண்டும். இலட்சியம் என்னவோ மிக உயர்வாக நன்றாகவே வைக்கின்றீர்கள் இப்போது அந்த இலட்சியத் திற்கேற்ப இலட்சணத்தை அமைக்க வேண்டும் இப்போது இரண்டிற்கு மிடையே வேறுபாடு உள்ளது. இலட்சியமும் இலட்சணமும் சமமாகும் போதே இலட்சியம் நடைமுறையில் ஏற்படும். குழந்தைகள் அனைவரும் அமிர்தவேளையில் சந்திக்கும் போது மிக நன்றாக சங்கல்பம் வைக்கின்றனர். பாப்தாதா நாலாபுறமும் உள்ள ஒவ்வொரு குழந்தைகளின் ஆன்மீக உரை யாடலைக் கேட்கின்றார். மிக அழகாக பேசுகின்றனர். முயற்சியும் நன்றாகவே செய்கின்றார்கள். ஆனால் முயற்சியில் ஒரு விசயத்தை தீவிரப் படுத்த வேண்டும் முயற்சி உள்ளது ஆனால் தீவிர முயற்சி செய்ய வேண்டும். தீவிர முயற்சிக்காக திடத்தன்மையை சேர்க்க வேண்டும்.

குழந்தைகள் ஒவ்வொருவரும் சமயத்திற்கேற்ப தீவிர முயற்சி செய்ய வேண்டும் என்பதே பாப்தாதாவின் விருப்பம் வரிசைக்கிரமமாகவே இருந்தாலும் அதிலும் தீவிர முயற்சி சதா இருக்க வேண்டும் என்றே பாப்தாதா விரும்புகின்றார். அவசியமானதும் அதுவே ஆகும். நேரம் மிக வேகமாக முழுமையை சென்று கொண்டிருக்கின்றது. இப்போது குழந்தைகள் பாப்சமான் ஆகியேத் தீர வேண்டும். இதுவும் நிச்சயிக்கப்பட்டதே இதில் தீவிரத் தன்மை மட்டுமே வேண்டும் ஒவ்வொருவரும் நான் தீவிர முயற்சி செய்கின்றேனோ? என்று தன்னையே சோதனை செய்யுங்கள். ஏனெனில் முயற்சியில் சோதனைகள் அனேகம் வந்தே தீரும். ஆனால் தீவிர முயற்சி செய்பவருக்கு வெற்றி பெறுவதும் நிச்சயிக்கப்பட்டதே ஆகும். வெற்றியாக வேண்டும் என்பதல்ல நிச்சயிக்கப் பட்டது வெற்றி சேவையும் மிகுந்த ஆர்வத்துடன் நன்றாக செய்கின்றீர்கள், ஆனால் பாப்தாதா முன்பே கூறியுள்ளார், நிகழ்காலத்திற்கேற்ப ஒரே நேரத்தில் மனம், சொல், செயல் நடத்தை முகம் மூலமாக மூன்று விதமான சேவையும் செய்ய வேண்டும். மனதால் அனுபவம் செய்ய வைக்க வேண்டும், சொல்லால் ஞானத்தின் அறிமுகம் தர வேண்டும். முகம், நடத்தை மூலம் முழுமையான யோகி வாழ்வின் நடைமுறையினை அனுபவம் செய்விப்பது மூன்று சேவை ஒரே நேரத்தில் செய்ய வேண்டும். தனித்தனியே அல்ல. நேரம் இப்போது குறைவாக உள்ளது சேவை இன்னும் அதிகம் செய்ய உள்ளது. பாப்தாதா பார்க்கின்றார் சேவைக்காக அனைத்திலும் எளிமையான சாதனம் உள் உணர்வால் வைப்ரேஷன் மூலம் வாயு மண்டலம் அமைப்பது ஏனெனில் உள் உணர்வு அனைத்திலும் வேகமான கருவி. அறிவியல் ராக்கெட் வேகமாக செல்வதைப் போன்று உங்களுடைய ஆன்மீக சுபபாவனை சுபகாமனை எனும் உள்ளுணர்வு பார்வையையும் உலகையும் மாற்றிவிடும் ஓரிடத்தில் அமர்ந்தபடியே உள்ளுணர்வு மூலமாக சேவை செய்ய முடியும். கேட்ட விசயம் கூட மறந்து போகும். ஆனால் வாயு மண்டலம் அனுபவம் செய்ய வைக்கும் அது மறக்காது. மதுபனில் அனுபவம் ஆகிறது, அது பிரம்மா பாபாவின் கர்மபூமி, யோகபூமி, சரித்திர பூமியின் வாயு மண்டலம். இப்போது வரையிலும் ஒவ்வொருவரும் வாயுமண்டலத்தை அனுபவம் செய்கின்றனர். மறப்பதில்லை வாயு மண்டலத் தின் அனுபவம் உள்ளத்தில் பதிந்து விடுகின்றது. வார்த்தைகளால் பெரிய பெரிய நிகழ்ச்சிகளை செய்கின்றீர்கள் ஆனால் ஒவ்வொருவரும் தனது உயர்வான ஆன்மீக உள்ளுணர்வு மூலம் வைப்ரேஷன் மூலம் வாயு மண்டலத்தை உருவாக்க வேண்டும். ஆனால் தன் மனதில் எந்த ஒரு ஆத்மாவைப் பற்றியும் தாறுமாறானா உள்ளுணர்வு வைப்ரேஷன் இல்லாத பொழுதே தனது உள்ளுணர்வு ஆன்மீக நிலையில் சக்தி வாய்ந்ததாகவும் அமையும். தன் மனதின் உள்ளுணர்வு சதா சுத்தமாக இருக்க வேண்டும். ஏனெனில் எந்த ஒரு ஆத்மா பற்றியாவது வீண் எண்ணம், எதிர்மறை எண்ணம் இருந்தால் அது குப்பையாகும். அவ்வாறு மனதில் குப்பையிருந்தால் நல்லுணர்வால் சேவை செய்ய முடியாது. ஆக முதலில் என் மனம் ஆன்மீக நல்லுணர்வுடன் உள்ளதா? என தன்னைத் தானே சோதனை செய்யுங்கள். எதிர்மறையான உள்ளுணர்வையும் தனது நல்லுணர்வால் மாற்றி விட முடியுமா எதிர்மறை எண்ணத்தால் தன் மனம் தான் தொல்லைப் படுகின்றது. வீண் எண்ணம் வருகிறத தானே. முதலில் தன் மனதில் ஏதேனும் முரண்பாடு உள்ளதா? என சோதனை செய்யுங்கள். நம்பர் வாரியாகவே உள்ளீர்கள், நன்மை தீமை இணைந்தே உள்ளது. ஆனால் இவர் இப்படி உள்ளார். இவ்வாறு புரிவது நல்லது. தவறை தவறென புரிவது, சரியை சரியென புரிவது சரிதான். ஆனால் அதனை உள்ளத்தில் வைக்கக் கூடாது. புரிவது நல்லது ஞானம் நிறைந்தவராவது நல்ல? தவறை தவறென்று தானே கொள்வோம். சில குழந்தைகள் செய்கின்றனர், பாபா உங்களுக்கு இவர் எப்படி என்று தெரியாது. நீங்கள் பார்த்தால் தெரிவ வரும். பாபா ஏற்றுக் கொள்கிறார் நீங்கள் செய்வதற்கு முன்பே இவர் இப்படி என்று தெரியும் ஆனால் இதுபோன்ற விசயங்களை தன் மனதில் உள்ளத்தில் வைப்பதால் நான் தானே தொல்லைக்கு ஆளாகின்றேன். மனதில், உள்ளத்தில் தீயபொருள் இருந்தால் வீண் எண்ணம் இருந்தால் அவர் எப்படி விஸ்வ கல்யாணகாரி ஆவார்? உங்கள் அனைவரது தொழிலும் என்ன ? விஸ்வகல்யாணகாரியா? ஆம் எனில் கை உயர்த்துங்கள் (அனைவரும் கை உயர்த்தினர்) புரிவது வேறு, புரிவது நல்லது இது தவறு, இது சரி, ஆனால் மனதில் வைக்காதீர்கள் மனதில் உணர்வாக வைக்கும் போது பார்வையும், உலகம் மாறிவிடுகிறது. பாப்தாதா வீட்டுப் பாடம் கொடுத்திருந்தார். என்ன கொடுத்திருந்தார்? அனைத்திலும் எளிமையான முயற்சி அனைவரும் அதனை செய்ய முடியும். வயோதிகரும், வாலிபரும், குழந்தைகளும் செய்ய முடியும். அது இந்த விதிமுறைதான். ஒரே ஒரு வேலை செய்யுங்கள். யாருடைய தொடர்பில் வந்தாலும் ஆசி தருக ஆசி தருக பிறர் சாபமே கொடுத்தாலும், நீங்கள் கோர்ஸில் என்ன சொல்வீர்கள், அப்போது தனக்கும் இந்த கோர்ஸ் கொடுங்கள் சவால் என்ன? கீழ்தரமான இயற்கையையும் உயர்தரமாக மாற்றுவோம் என்பது தானே சவால். நீங்கள் அனைவரும் இயற்கையையும் உயர்தரமாக மாற்றுவோம் என சவால் விடுகிறீர்கள் தானே? மாற்றுவீர்களா? தலையசையுங்கள். கை அசையுங்கள். பாருங்கள். பார்த்து பார்த்து அசைக்காதீர்கள். மனதார அசையுங்கள். ஏனெனில் இப்போது சமயத்திற்கேற்ப வாயு மண்டலத்தை அமைப்பதில் தீவிர முயற்சி அவசியமானது. ஆக உள்ளுணர்வில் ஏதேனும் குப்பை இருக்குமானால் எப்படி வாயுமண்டலம் அமையும்? இயற்கை வரையிலும் உங்களது வைப்ரேஷன் உள்ளுணர்வால் அமையும் வைப்ரேசனால் வாயுமண்டலம் அமைகின்றது. மதுபனில் கூட அனைவரும் ஒன்று போல் கிடையாது. ஆனால் பிரம்மா பாபா நெருக்கமான குழந்தைகளின் உள்ளுணர்வால், தீவிர முயற்சியால் வாயுமண்டலம் அமைத்தார்.

இன்று உங்கள் தாதி நினைவு வருகின்றது, தாதியிடம் என்ன சிறப்பம்சம் பார்த்தீர்கள்? எப்படி கட்டுப்படுத்தினார்? ஒரு போதும் எப்படிப்பட்ட உள்ளுணர்வு உடையவரைப் பற்றியும் தாதி தன் மனதில் வைத்ததில்லை. அனைவருக்கும் ஊக்கம் கொடுத்தார். உங்களது ஜெகதம்பா தாயும் வாயு மண்டலம் அமைத்தார். தெரிந்திருந்து தன் உள்ளுணர்வை சதா சுபமாகவே வைத்தார். அந்த வாயுமண்டலத்தினை இன்றளவிலும் நீங்கள் அனைவரும் அனுபவம் செய்கின்றீர்கள். பாப்தாதா சொல்கின்றார், தந்தையை பின்பற்றுவதனாலும் ஒவ்வொருவருடைய சிறப்பம்சத்தையும் தெரிந்து கொள்ள அதனை தனதாக்குங்கள். ஒவ்வொரு குழந்தையிடமும் இதனை குறியுங்கள். பாப்தாதா விற்கு யார் குழந்தையானார்களோ அவர்கள் ஒவ்வொருவரிடமும் மூன்றாம் ரகமே ஆனாலும் டிராமாவின் விசேஷம் இது, பாப்தாதாவின் வரதானம் இது, அனைத்து குழந்தையிடமும் 99 குறைகள் இருப்பினும் ஒரு சிறப்பம்சம் அவசியம் இருக்கும். அந்த விசேஷத்தாலேயே என்னுடைய பாபா என்று சொல்லும் உரிமை பெற்றுள்ளார்கள். ஏதோ ஒரு குறைக்கு வசப்பட்டி ருந்தாலும் தந்தையிடம் உறுதியான அன்பு வைத்துள்ளார்கள். எனவே பாப்தாதா இப்போது நேரத்தின் நெருக்கத்திற்கேற்ப பாபாவின் நிலையங்கள் இருக்கும் இடமெங்கும் கிராமமோ, நகரமோ, பெரிய மண்டலமோ, கிளைகளோ ஒவ்வொரு இடத்திலும் சேவையில் துணையாக இருப்பவர்களிடமும் உயர்ந்த உள்ளுணர்வின் வாயு மண்டலம் அவசியமாகும். ஒன்றை மட்டும் நினைவில் வைத்தால் போதும் பிறர் சாபமே கொடுத்தால் எடுப்பவர் யார்? கொடுப்பவரும் எடுப்ப வரும் ஒருவரா, இருவரா? யாரேனும் உங்களுக்கு கெட்ட பொருளை கொடுத்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? தன்னிடம் வைப்பீர்களா? அல்லது திருப்பி கொடுத்து விடுவீர்களா அல்லது வீசி விடுவீர்களா அல்லது அலமாரியில் பத்திரமாக வைப்பீர்களா? ஆகவே உள்ளத்தில் பத்திரப்படுத்தி வைக்காதீர்கள் ஏனெனில் உங்கள் உள்ளம் பாப்தாதாவின் ஆசனம் அதனால் ஒரு வார்த்தை மனதில் உறுதியாக நினையுங்கள். வாயில் வார்த்தையாக அல்ல மனதில் நினைவு வையுங்கள். வாயில் வார்த்தையாக அல்ல மனதில் நினைவு வையுங்கள். ஆசி தர வேண்டும், ஆசி பெற வேண்டும். எந்த ஒரு எதிர்மறையும் மனதில் வைக்கக் கூடாது. நல்லது. ஒரு காதில் கேட்டு மறு காதில் விடுவது உங்களது வேலையா, பிறரது வேலையா? அப்போதே உலகில் ஆத்மாக்களுக்கு தீவிர வேகத்தில் உள்ளுணர்வால் வாயுமண்டலத்தை அமைக்கும் (சேவையினை) செய்ய முடியும். உலகை மாற்ற வேண்டும் அல்லவா. ஆகவே எதனை நினைவில் வைப்பீர்கள்? மனதில் வைத்தீர்களா? ஆசி எனும் சொல்லை நினைவில் வையுங்கள் போதும் ஏனெனில் உங்களுடைய ஜட மூர்த்திகள் என்ன தருகின்றது? ஆசி தருகிறதல்லவா. கோயிலில் சென்று என்ன கேட்கின்றார் கள்? ஆசி கேட்கிறார்கள் அல்லவா. ஆசி கிடைப் பதால் தானே ஆசி கேட்கிறார்கள். உங்களுடைய ஜட மூர்த்திகள் இறுதி பிறவியிலும் கூட ஆசி தருகின்றத. உணர்வாலேயே அவர்களது ஆசி தருபவராக மாறி உள்ளீர்கள் எனவே தான் இன்று வரையிலும் உங்களது ஜட சித்திரங்கள் ஆசிகளைத் தருகின்றது. பீடிக்கப்பட்ட ஆத்மாக்களுக்கு மன்னிப்பு கடலான தந்தையின் குழந்தை கள் சிறிதேனும் மன்னிப்பு கொடுப்பது நல்லது தானே. நீங்கள் அனைவரும் மன்னிப்பின் மாஸ்டர் கடல் அல்லவா? ஆம் இல்லையா? ஆம் தானே சொல்லுங்கள் முதலில் நான் இதில் அர்ஜூணன் ஆகுங்கள். அத்தகைய சுற்றுச் சூழலை அமையுங்கள். எதிரில் வருபவர் அனைவரும் அன்பு, ஒத்துழைப்பு, மன்னிப்பு, தைரியம், ஊக்கம், உற்சாகம் ஏதேனும் ஒன்றினை அனுபவமாக பெற வேண்டும். இதனை செய்ய முடியுமா? முடியுமா? முதல் வரிசையில் உள்ளவர்கள், முடியுமா? கை உயர்த்துங்கள் முதலில் செய்தாக வேண்டும் அப்போதே அனைவரும் செய்வார்கள். ஆசிரியர்கள் செய்வீர்களா? நல்லது

ஆங்காங்கே இருந்து குழந்தைகளின் மெயில், கடிதம் வந்த வண்ணம் உள்ளது. கடிதம் எழுதாதவர்களின் சங்கல்பமும் அன்பு நினைவுகளும் பாப்தாதாவை வந்தடைந்தது. மிக இனிமை யாக கடிதம் எழுதுகின்றார்கள். ஊக்கம், உற்சாகத்தில் பறந்து கொண்டேயிருப்பவர்கள் எழுது கின்றார்கள். கடிதம் எழுதுவதால் தன்னை பந்தனத்தில் இணைத்துக் கொள்கின்றனர். உறுதி மொழி எடுக்கிறார்கள். நாலாபுறமும் எங்கெல்லாம் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு எதிரில் இருப்பவர்களை விட முன்பாகவே அன்பு நினைவுகளை தருகின்றார். ஏனெனில் பாப்தாதாவிற்குத் தெரியும் ஆங்காங்கே வெவ்வேறு நேரமாக இருப்பினும் அனைவரும் மிக உற்சாகத்தில் நினைவில் அமர்ந்து கேட்டுக் கொண்டும் இருக்கிறார்கள் நல்லது.

அனைவரும் எண்ணம் வைத்தீர்களா தீவிர முயற்சி செய்து முதல் நம்பரை அடைவோம் என்று எண்ணம் வைத்தீர்களா? கை உயர்த்துங்கள் நல்லது இப்போது ஆசிரியர்கள் கை உயர்த்து கின்றார்கள். முதல் வரிசையில் உள்ளவர்களும் உயர்த்துகின்றனர் நல்லது. பாப்தாதா இந்த டைரக்சனும் கொடுத்துள்ளார் முழு நாளில் இடையிடையே 5 நிமிடம் கிடைத்தாலும் மனதிற்கு பயிற்சி செய்யுங்கள் ஏனெனில் இன்றைய உலகமே உடற்பயிற்சி செய்கிறது. அவ்வாறே நீங்களும் 5 நிமிடம் மனப் பயிற்சி செய்யுங்கள். மனதை பரந்தாமத்தி கொண்டு வாருங்கள், சூட்சும வதனத்தில் பரிஸ்தாவை நினையுங்கள் பூஜ்ய நிலையை நினையுங்கள், பிராமண ரூபம், தேவதா ரூபத்தை நினையுங்கள் எத்தனை ஆயிற்று? 5 நிமிடம் தானே. இந்த 5 நிமிட பயிற்சியினை முழு நாளில் நடமாடும் பொழுதெல்லாம் செய்ய முடியும் தானே. இதற்காக மைதானம் தேவை யில்லை. உடற் பயிற்சியும் அவசியமே அதையும் செய்யுங்கள் அதற்கு தடையில்லை. ஆனால் இந்த மனதிற்கான டிரில் பயிற்சி மனதை சதா மகிழ வைக்கும் ஊக்கம் உற்சாகமாக வைத்திருக் கும். பறக்கும் கலையினை அனுபவம் செய்ய வைக்கும். ஆகவே இப்போதே அனைவரும் இந்த டிரில் செய்யுங்கள். பரந்தாமத்திலிருந்து தேவதை வரை ( பாப்தாதா டிரில் செய்வித்தார்) நல்லது.

சதா சர்வ காலமும் தனது ஆன்மீக உள்ளுணர்வால் நாலாபுறமும் சக்திசாலியான சுற்றுத் சூழலை அமைப்பதில் தீவிர முயற்சி செய்யும் குழந்தைகளுக்கு சதா தான் இருக்குமிடத்தையும் தன் மனோ நிலையையும் சக்திசாலியான வைப்ரேசனில் அனுபவம் செய்ய வைப்பவர்களுக்கு திட சங்கல் கொண்ட சிரேஸ்ட ஆத்மாக்களுக்கு சதா ஆகி தருவதிலும் பெறுவதிலும் இரக்கமன முள்ள ஆத்மாக்களுக்கு, சதா தனக்குத்தானே பறக்கும் கலையில் அனுபவம் செய்யும் டபுள் லைட் ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் நமஸ்காரமும்.

ஆசீர்வாதம்:
விசால புத்தி மூலமாக குழுவின் சக்தியை அதிகப்படுத்தி வெற்றி சொரூபம் ஆகுக !

குழுவின் சக்தியை அதிகப்படுத்துக இது பிராமண வாழ்வின் முதன்மையான உயர் செயலாகும். இதற்காக எந்த ஒரு விசயத்திலும் பெரும்பான்மையோரின் கருத்தில் தான் இதுவே குழுவின் சக்தியை அதிகப்படுத்து வதாகும். இதில் என் கருத்தே மேலானது என்ற பெருமை காட்டாதீர்கள். எவ்வளவு நல்ல கருத்தேயானாலும் எங்கே குழுவின் உறுதியோ அங்கு நல்ல கருத்தும் சாதாரண மாகி விடும். அந்த நேரத்தில் தனது கருத்தை தியாகம் செய்ய வேண்டியிருப்பின் தியாகத்தில் தான் பாக்யம் உள்ளது. இதனாலேயே வெற்றி சொரூபமாவீர்கள். அருகே சம்மந்தத்தில் வருவீர்கள்.

சுலோகன்:
அனைத்து எண்ணமும் ஈடேற மனதின் ஒருமுகத்தன்மையை அதிகப்படுத்துங்கள்


அவ்யக்த சமிக்ஞை : தனக்காவும் பிறருக்காகவும் மனதின் மூலம் யோக சக்திகளை பயன்படுத்துங்கள்.

சமயத்திற்கேற்ப இப்போது மனதாலும் சொல்லாலும் இணைந்து சேவை செய்யுங்கள். வார்த்தை யால் சேவை செய்வது எளிது. மனதிற்கு நல்லாசை நல் விருப்பம் வைக்க வேண்டும். சொல்லில் இனிமை, திருப்தி, சரளத்தன்மையெனும் புதுமை இருந்தால் சேவையில் வெற்றி சுலபமாகவே கிடைத்தேரும்.