15-04-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! உங்களுடைய
சுயதர்மம் அமைதியாகும், உண்மையான அமைதி சாந்திதாமத்தில்
கிடைக்கும், இந்த விஷயத்தை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும்,
சுயதர்மத்தில் இருக்க வேண்டும்.
கேள்வி:
எந்தவொரு ஞானம் ஒரு தந்தையிடம்
இருக்கிறது, அதை இப்போது தான் நீங்கள் படிக்கிறீர்கள்?
பதில்:
பாவம் மற்றும் புண்ணியத்தின்
ஞானமாகும். பாரதவாசிகள் எப்போது பாபாவை நிந்தனை செய்ய
ஆரம்பிக்கிறார்களோ, அப்போது பாவாத்மாக்களாக ஆகிறார் கள் மற்றும்
எப்போது பாபா மற்றும் நாடகத்தை தெரிந்துக் கொள்கிறார்களோ,
அப்போது புண்ணிய ஆத்மாக்களாக ஆகிவிடு கிறார்கள். இந்த படிப்பை
குழந்தைகளாகிய நீங்கள் இப்போது தான் படிக்கிறீர்கள்.
அனைவருக்கும் சத்கதியை வழங்குபவர் ஒரே ஒரு பாபா தான் என்பதை
நீங்கள் தெரிந்துள்ளீர்கள். மனிதர்கள், மனிதர்களுக்கு சத்கதி
அதாவது முக்தி-ஜீவன் முக்தியை கொடுக்க முடியாது.
பாடல்:
இந்த பாவ உலத்திலிருந்து.......
ஓம் சாந்தி.
இது பாவாத்மாக்களின் உலகம் மற்றும் பாரதத்தைத் தான் புண்ணிய
ஆத்மாக்களின் உலகமாக இருந்தது, அங்கே தேவதைகளின் இராஜ்யம்
இருந்தது என்று சொல்ல முடியும் என பாபா வந்து குழந்தைகளுக்குப்
புரிய வைக்கின்றார். இந்த பாரதம் சுகதாமமாக இருந்தது அப்போது
வேறு எந்த கண்டமும் இருக்கவில்லை, ஒரு பாரதம் தான் இருந்தது.
அமைதி அல்லது சுகம் அந்த சத்யுகத்தில் இருந்தது, அதனை சொர்க்கம்
என்று சொல்கிறார்கள். இது நரகமாகும். பாரதம் தான் சொர்க்கமாக
இருந்தது, இப்போது நரகமாகியிருக்கிறது. நரகத்தில் நிம்மதி
அல்லது சுகம்-அமைதி எங்கிருந்து வரும். கலியுகத்தை நரகம்
என்றழைக்கப்படுகிறது. கலியுகக் கடைசியைத் தான் மோசமான நரகம்
என்று சொல்லப்படுகிறது. துக்கதாமம் என்று சொல்லப்படுகிறது.
இந்த இலஷ்மி - நாராயணனுடைய இராஜ்யம் இருந்தபோது இந்த பாரதம்
தான் சுகதாமமாக இருந்தது. பாரதவாசிகளின் இல்லற-தர்மம்
தூய்மையாக இருந்தது. தூய்மையும் இருந்தது, அமைதி- சுகமும்
இருந்தது, செல்வமும் அதிகம் இருந்தது. இப்போது அதே பாரதம்
தூய்மை யற்றதாக ஆகியுள்ளது, அனைவரும் விகாரிகளாக ஆகியுள்ளார்கள்.
இது துக்க தாமமாகும். பாரதம் சுகதாமமாக இருந்தது மற்றும்
ஆத்மாக்களாகிய நாம் எங்கே வசிக்கிறோமோ அது சாந்திதாமமாகும்.
சாந்தி என்பது அங்கே சாந்திதாமத்தில் தான் கிடைக்க முடியும்.
ஆத்மா அமைதியாக அங்கே தான் இருக்க முடியும், அதனை இனிமையான வீடு
நிராகார் உலகம் என்று சொல்லப்படுகிறது. அது ஆத்மாக்களின்
வீடாகும். அங்கே இருக்கும்போது ஆத்மா அமைதியாக இருக்கிறது.
மற்றபடி அமைதி ஒன்றும் காடு போன்ற இடங்களுக்கு செல்வதினால்
கிடைப்பதில்லை. அது தான் சாந்திதாமமாகும். சத்யுகத்தில் சுகமும்
இருக்கிறது அமைதியும் இருக்கிறது. இங்கே துக்க தாமத்தில் அமைதி
என்பது இருக்க முடியாது. அமைதி என்பது சாந்திதாமத்தில்
கிடைக்கும். சுகதாமத்திலும் கூட கர்மம் நடக்கிறது, சரீரத்தின்
மூலம் நடிப்பை நடிக்க வேண்டியிருக்கிறது. இந்த துக்கதாமத்தில்
அமைதியும்-சுகமும் உடைய மனிதன் யாருமில்லை. இது கீழான தூய்மை
யற்ற இடமாகும், ஆகையினால் தூய்மையற்றவர்கள் தூய்மையாக்குபவரை
அழைக்கிறார்கள். ஆனால் அந்த தந்தையை யாரும் தெரிந்திருக்கவில்லை
ஆகையினால் அனாதைகளாகி விட்டார்கள். அனாதைகளாக இருக்கின்ற
காரணத்தினால் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.
எவ்வளவு துக்கம்-அசாந்தி, சண்டைகள் நடக்கின்றன. இந்த உலகமே
இராவண இராஜ்யமாகும். இராம இராஜ்யம் வேண்டும் என்று கேட்கிறார்
கள். இராவண இராஜ்யத்தில் சுகமும் இல்லை, அமைதியும் இல்லை. இராம
இராஜ்யத்தில் சுகம்-அமைதி இரண்டும் இருந்தது. தங்களுக்குள்
ஒருபோதும் சண்டையிட்டுக் கொள்வ தில்லை, அங்கு 5 விகாரங்களே
இருப்பதில்லை. இங்கே 5 விகாரங்கள் இருக்கின்றன. முதலில்
தேக-அபிமானம் முக்கியமான தாகும். பிறகு காமம், கோபமாகும்.
பாரதம் சொர்க்க மாக இருந்தபோது இந்த விகாரங்கள் இருக்கவில்லை.
அங்கே ஆத்ம-அபிமானிகளாக இருந்தார்கள். இப்போது மனிதர்கள்
அனைவரும் தேக-அபிமானிகளாக இருக்கிறார்கள். தேவதைகள்
ஆத்ம-அபிமானிகளாக இருந்தார்கள். தேக-அபிமானமுடைய மனிதர்கள்
ஒருபோதும் யாருக்கும் சுகம் கொடுக்க முடியாது,
ஒருவர்-மற்றவருக்கு துக்கம் தான் கொடுக்கிறார்கள். யாராவது
இலட்சாதிபதியாக, கோடீஸ்வரர்களாக, பலகோடி சொத்து
வைத்திருக்கிறார்கள் என்றால் சுகமாக இருக்கிறார்கள் என்று
நினைக்காதீர்கள். கிடையாது, இவையனைத்தும் மாயையின் பகட்டாகும்.
மாயையின் இராஜ்யமாக இருக்கிறது. இப்போது அதனுடைய வினாசத்திற்கு
இந்த மகாபாரத சண்டை எதிரிலேயே இருக்கிறது. இதற்குப் பிறகு
சொர்க்கத்தின் வாசல் திறக்கப்பட வேண்டும். அரைக் கல்பத்திற்குப்
பிறகு நரகத்தின் வாசல் திறக்கிறது. இந்த விஷயங்கள் எந்த
சாஸ்திரத்திலும் இல்லை. பக்தி செய்தால் தான் பகவான் கிடைப்பார்
என்று பாரதவாசிகள் சொல்கிறார்கள். பக்தி செய்து-செய்து எப்போது
முற்றிலும் கீழே வந்துவிடுகிறார்களோ, அப்போது சொர்க்கத்தை
ஸ்தாபனை செய்வதற்கு அதாவது பாரதத்தை சொர்க்கமாக்க நான் வர
வேண்டியிருக்கிறது என்று பாபா கூறுகின்றார். சொர்க்கமாக இருந்த
பாரதம் எவ்வாறு நரகமாயிற்று? இராவணன் அவ்வாறு ஆக்கினான்.
கீதையின் பகவான் மூலம் உங்களுக்கு இராஜ்யம் கிடைத்தது, 21
பிறவிகள் சொர்க்கத்தில் இராஜ்யம் செய்தீர்கள். பிறகு பாரதம்
துவாபர யுகத்திலிருந்து கலியுகத்திற்கு வந்துவிட்டது அதாவது
இறங்கும் கலையாகி விட்டது ஆகையினால் அனைவரும் ஹே பதீத பாவனரே
வாருங்கள் என்று அழைக்கிறார்கள். தூய்மையற்ற மனிதர்களுக்கு
சுகம்-அமைதி தூய்மையற்ற உலகத்தில் கிடைக்க முடியாது. எவ்வளவு
துக்கம் அடைகிறார்கள். இன்று பணம் திருடு போய் விட்டது, இன்று
திவாலாகிவிட்டது, இன்று நோயுற்றேன். துக்கமோ துக்கம் தான்
அல்லவா. நீங்கள் இப்போது சுகம்-அமைதியின் ஆஸ்தியைப் பெறுவதற்கு
முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள், தந்தையிடமிருந்து
சொர்க்கத்தின் ஆஸ்தியை அடைவதற் காக முயற்சி செய்து
கொண்டிருக்கிறீர்கள். எப்போதும் சுகம் கொடுப்பவர் ஒரேயொரு
பாபாவே ஆவார். எப்போதும் துக்கமாக்குபவன் இராவணன் ஆவான். இந்த
விஷயங் களை பாரதவாசிகள் தெரிந்திருக்கவில்லை. சத்யுகத்தில்
துக்கத்தின் விஷயங்கள் நடப்ப தில்லை. ஒருபோதும் அழ
வேண்டியதில்லை. எப்போதும் சுகமே சுகமாகும். அங்கே தேக-அபிமானம்
அல்லது காமம், கோபம் போன்றவை இருப்பதில்லை. எதுவரை 5 விகாரங்களை
தானம் கொடுக்கவில்லையோ அதுவரை துக்கம் எனும் கிரகம் விடுபடாது.
தானம் கொடுத்தால் கிரகம் விட்டு விடும் என்று சொல்வார்கள்
அல்லவா. இந்த சமயத்தில் பாரதம் முழுமைக்கும் 5 விகாரங் கள்
எனும் கிரகம் பிடித்திருக்கிறது. எதுவரை 5 விகாரங்களை தானம்
செய்யவில்லையோ அதுவரை 16 கலை சம்பூரணமான தேவதையாக ஆக முடியாது.
பாபா அனைவருக்கும் சத்கதியை வழங்கும் வள்ளல் ஆவார். குரு
இல்லாமல் கதி அடைய முடியாது என்று சொல்வார்கள். ஆனால் கதி
என்பதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. மனிதர்களுடைய
கதி-சத்கதி என்றால் முக்தி- ஜீவன் முக்தியாகும். அதை பாபா தான்
கொடுக்க முடியும். இந்த சமயத்தில் அனைவருக் கும் சத்கதி ஏற்பட
வேண்டும்.
தில்லியை புதுதில்லி, பழைய தில்லி என்று கூறுகிறார்கள். ஆனால்
இப்போது புதியதாக ஒன்றும் இல்லை. புதிய உலகத்தில்
புதுதில்லியாக இருக்கிறது. பழைய உலகத்தில் பழைய தில்லி
இருக்கிறது. சரியாக யமுனை நதிக்கரையில் இருந்தது, தில்லி
பரிஸ்தானமாக (தேவதைகள் வாழும் இடம்) இருந்தது. சத்யுகமாக
இருந்தது அல்லவா. தேவி-தேவதைகள் இராஜ்யம் செய்தார்கள். இப்போது
பழைய உலகத்தில் பழைய தில்லி இருக்கிறது. புதிய உலகத்தில் இந்த
இலஷ்மி-நாராயணனுடைய இராஜ்யம் நடந்தது. பாரதவாசிகள் இதை
மறந்துவிட்டார்கள். புதிய பாரதம், புது தில்லியாக இருந்தது,
புதிய தில்லியாக இருந்தபோது இலஷ்மி-நாராயணனுடைய இராஜ்யம்
இருந்தது வேறு எந்த கண்டமும் இருக்கவில்லை. இதை யாரும்
தெரிந்திருக்க வில்லை. அரசாங்கம் இதை கற்பிப்பதில்லை. இது பாதி
வரலாறு என்பதை தெரிந்திருக்கிறார்கள். எப்போதிலிருந்து
இஸ்லாமியர்களும் பௌத்தர்களும் வந்தார்களோ, அப்போதிலிருந்து தான்
வரலாறு இருக்கிறது. இலஷ்மி-நாராயணனுடைய இராஜ்யத்தைப் பற்றி
யாருக்கும் தெரியாது. முழு சிருஷ்டி சக்கரமும் எப்படி
சுற்றுகிறது என்பதை பாபா தான் வந்துப் புரிய வைக் கின்றார்.
பாரதம் சொர்க்கமாக இருந்தபோது கோல்டன் ஏஜாக (தங்க யுகமாக)
இருந்தது. இப்போது அதே பாரதத்தைப் பாருங்கள் என்னவாக ஆகிவிட்டது.
பிறகு பாரதத்தை வைரம் போல் ஆக்குவது யார்? நீங்கள் எப்போது
மிகவும் பாவாத்மாக்களாக ஆகிவிடுகிறீர்களோ அப்போது நான் புண்ணிய
ஆத்மாக்களாக்க வருகின்றேன் என்று பாபா கூறுகின்றார். இந்த
நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது, இதை யாருமே தெரிந்திருக்க வில்லை.
இந்த ஞானத்தை பாபாவைத் தவிர வேறு யாரும் கொடுக்க முடியாது.
ஞானக் கடலான பாபா தான் வந்து படிப்பிக்கின்றார். மனிதர்கள்,
மனிதர் களுக்கு ஒருபோதும் சத்கதியை கொடுக்க முடியாது.
தேவி-தேவதைகளாக இருந்தபோது ஒருவர் மற்றவருக்கு சுகம்
கொடுத்தீர்கள். எந்தவொரு வியாதியும், நோயுற்றவர்களும்
இருக்கவில்லை. இங்கே அனைவருமே நோயுற்றவர்களாவர். இப்போது
மீண்டும் சொர்க்கமாக்க பாபா வந்திருக் கிறார். பாபா
சொர்க்கமாக்குகின்றார், இராவணன் நரகமாக்குகின்றான். இந்த விளை
யாட்டை யாரும் தெரிந்திருக்கவில்லை. சாஸ்திரங்களின் ஞானம் (விளக்கம்)
தத்துவமாகும், பக்தி மார்க்கமாகும். அது ஒன்றும் சத்கதி
மார்க்கமல்ல. இது ஒன்றும் சாஸ்திரங்களின் தத்துவமல்ல. பாபா
ஒன்றும் சாஸ்திரத்தை சொல்வதில்லை. இங்கே ஆன்மீக ஞானமாகும்.
பாபாவை ஆன்மீகத் தந்தை என்று சொல்லப்படுகிறது. அவர்
ஆத்மாக்களின் தந்தை யாவார். பாபா கூறுகின்றார், நான் மனித
சிருஷ்டியின் விதையாக இருக்கின்றேன், ஆகையினால் ஞானக்கடலாவேன்.
இந்த மனித சிருஷ்டி எனும் மரத்தின் ஆயுள் எவ்வளவு. எப்படி
வளருகிறது, பிறகு எப்படி பக்தி மார்க்கம் ஆரம்பமாகிறது என்பதை
நான் தெரிந்திருக்கின்றேன். குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த
ஞானத்தைக் கொடுத்து சொர்க்கத்திற்கு எஜமானர்களாக்குகின்றேன்
பிறகு நீங்கள் எஜமானர்களாகி விடுகிறீர்கள். இந்த ஞானம்
உங்களுக்கு ஒரே முறை தான் கிடைக்கிறது பிறகு மறைந்துவிடுகிறது
பிறகு சத்யுகம் திரேதாவில் இந்த ஞானத்திற்கு அவசியம்
இருப்பதில்லை. இந்த ஞானம் பிராமணர்களாகிய உங்களுக்குத் தான்
இருக்கிறது. தேவதைகளிடத்தில் இந்த ஞானம் இல்லை. எனவே
பரம்பரையாக இந்த ஞானம் வர முடியாது. இது குழந்தைகளாகிய
உங்களுக்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கிறது, இதன்மூலம் நீங்கள்
ஜீவன்முக்தர்களாக ஆகிவிடுகிறீர்கள். தந்தை யிடமிருந்து ஆஸ்தி
அடைகிறீர்கள். உங்களிடம் நிறைய பேர் வருகிறார்கள், அமைதி எப்படி
கிடைக்கும் என்று கேட்கிறார்கள். ஆனால் இப்படி கேட்பது தவறாகும்.
மனம்-புத்தி ஆத்மாவின் உறுப்புகளாகும், எப்படி சரீரத்தின்
உறுப்புகள் இருக்கின்றனவோ அதுபோலாகும். ஆத்மாவை கல்
புத்தியிலிருந்து தங்கபுத்தியாக பாபா தான் வந்து ஆக்குகின்றார்
- அது சத்யுகம் திரேதாவரை செல்கிறது. பிறகு மீண்டும்
கல்லுபுத்தியாகிவிடுகிறது. இப்போது நீங்கள் கல்
புத்தியிலிருந்து தங்கபுத்தியுடையவர் களாக ஆகின்றீர்கள்.
தங்கமாக இருந்த உங்களுடைய புத்தியில் அழுக்கு சேர்ந்துக் கொண்டே
சென்றது. பிறகு இப்போது எப்படி தங்கபுத்தியாகும்? ஹே ஆத்மா!
என்னை நினைவு செய், என்று பாபா கூறுகின்றார். நினைவு
யாத்திரையின் மூலம் நீங்கள் தூய்மை யாவீர்கள் மற்றும்
என்னிடத்தில் வந்துவிடுவீர்கள். மற்றபடி மனதிற்கு அமைதி எப்படி
கிடைக்கும் என்று கேட்கிறார்கள்? இங்கே எப்படி அமைதி கிடைக்கும்
என்று அவர் களிடத்தில் கேளுங்கள். இது இருப்பதே துக்கதாமமாகும்
ஏனென்றால் விகாரங்களின் பிரவேசம் ஆகியுள்ளது. அமைதி
தந்தையிடமிருந்து ஆஸ்தியாகத் தான் கிடைக்க முடியும். பிறகு
இராவணனுடன் சேரும்போது தூய்மையற்றவர்களாக ஆகிவிடுகிறீர்கள்
தந்தை யின் மூலம் தூய்மையாவதற்கு ஒரு வினாடி ஆகிறது. இப்போது
நீங்கள் தந்தையிட மிருந்து ஜீவன்முக்தி ஆஸ்தியைப் பெறுவதற்காக
வந்துள்ளீர்கள். பாபா ஜீவன்முக்தியின் ஆஸ்தியை கொடுக்கின்றார்
மற்றும் இராவணன் ஜீவன் பந்தனம் எனும் சாபத்தை கொடுக்கின்றான்
ஆகையினால் துக்கமோ துக்கமாகும். நாடகத்தையும் தெரிந்து கொள்ள
வேண்டும். துக்கதாமத்தில் யாருக்கும் சுகம்-அமைதி கிடைக்க
முடியாது. அமைதி ஆத்மாக்களாகிய நம்முடைய சுயதர்மமாகும்,
சாந்திதாமம் ஆத்மாக்களின் வீடாகும். நம்முடைய சுயதர்மம் அமைதி
என்று ஆத்மா கூறுகிறது. இந்த சரீரம் என்ற வாத்தியத்தை
இசைப்பதில்லை, அமர்ந்து கொள்கிறேன். ஆனால் எதுவரை அமர்ந்து
கொண்டே இருப்பது. கர்மம் செய்யத் தான் வேண்டும். எதுவரை
மனிதர்கள் நாடகத்தை புரிந்து கொள்ளவில்லையோ அதுவரை துக்கமாகவே
இருக்கிறார்கள். நான் ஏழைப்பங்காளனாக இருக்கின்றேன் என்று பாபா
கூறுகின்றார். இங்கே ஏழைகள் தான் வருவார்கள். செல்வந்தர்களுக்கு
சொர்க்கம் இங்கேயே இருக்கிறது. அவர்களுடைய அதிர்ஷ்டத்தில்
சொர்க்கத்தின் சுகம் இல்லை. நான் ஏழைப்பங்காளன் என்று பாபா
கூறுகின்றார். செல்வந்தர்களை ஏழைகளாகவும், ஏழைகளை
செல்வந்தர்களாகவும் ஆக்குகின்றேன். செல்வந்தர்கள் அந்தளவிற்கு
உயர்ந்த பதவியை அடைய முடியாது ஏனென்றால் இங்கே
செல்வந்தர்களுக்கு போதை இருக்கிறது. பிரஜையில் வந்துவிடுவார்கள்.
ஆனால் உயர்ந்த பதவியை ஏழைகள் அடைகிறார்கள். ஏழைகள்
செல்வந்தர்களாகிவிடுகிறார்கள். நாம் செல்வந்தர் கள் என்ற
தேக-அபிமானம் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் இந்த
செல்வம்-பொருட்கள் அனைத்தும் மண்ணோடு மண்ணாகிவிடும்,
அழிந்துவிடும் என்று பாபா கூறுகின்றார். ஆத்ம-அபிமானியாவதில்
தான் அதிக உழைப்பு இருக்கிறது. இந்த சமயத்தில் அனைவரும்
தேக-அபிமானிகளாகவே இருக்கிறார்கள். இப்போது நீங்கள்
ஆத்ம-அபிமானிகளாக ஆக வேண்டும். நான் 84 பிறவிகள்
முடித்திருக்கிறேன் என்று ஆத்மா சொல்கிறது. நாடகம் முடிகிறது,
இப்போது திரும்பிச் செல்ல வேண்டும். இப்போது கலியுகத்தின் கடைசி
மற்றும் சத்யுகத்தின் ஆரம்பத்தின் சங்கமமாகும். ஒவ்வொரு 5
ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் நான் பாரதத்தை மீண்டும்
வைரத்தைப் போல் ஆக்குவதற்கு வருகின்றேன் என்று பாபா
கூறுகின்றார். இந்த வரலாறு- புவியியலை பாபா தான் சொல்ல முடியும்.
நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக்
கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய
பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. பாபாவிடமிருந்து ஜீவன்முக்தி ஆஸ்தியை அடைவதற்கு கண்டிப்பாக
தூய்மையாக வேண்டும். நாடகத்தின் ஞானத்தை புத்தியில் வைத்து
துக்கதாமத்தில் இருந்தாலும் கூட துக்கங்களிலிருந்து விடுபட
வேண்டும்.
2. செல்வம்-பொருட்கள் செல்வந்தம் நிறைந்தவன் என்ற போதையை விட்டு
விட்டு ஆத்ம-அபிமானியாக இருப்பதற்கான முயற்சி செய்ய வேண்டும்.
வரதானம்:
விகாரங்களின் வம்சத்தின் அம்சத்தையும் கூட
முடித்துவிடக் கூடிய சர்வ சமர்ப்பணம் மற்றும் டிரஸ்டி ஆகுக.
யார் வருங்காலத் தேவைகளுக்காகப் பழைய சம்ஸ்காரங்களின் ஆஸ்தியை
ஒதுக்கி வைத்திருக் கிறார்களோ, அவர்களை மாயா ஏதேனும் ஒரு
ரூபத்தில் பிடித்துக் கொள்ளும். பழைய ரிஜிஸ்டரின் ஒரு சிறு
துண்டுச் சீட்டினாலும் கூட பிடிபட்டு விடுவார்கள். மாயா மிக
வேகமானது. அதன் கேச்சிங் பவர் ஒன்றும் குறைந்தது இல்லை. எனவே
விகாரங்களின் வம்சத்தின் அம்சத்தையும் கூட முடித்து விடுங்கள்.
ஏதேனுமொரு மூலையிஹீலும் கூட பழைய கஜானாவின் அடையாளம் ஒரு
சிறிதும் இருக்கக் கூடாது. இதுவே சர்வ சமர்ப்பணம், டிரஸ்டி
அல்லது யக்ஞ சிநேகி சகயோகி என்று சொல்லப் படும்.
சுலோகன்:
யாருடைய விஷே குணத்தின் காரணமாகவும்
அவருடன் விசேஷ அன்பு கொள்வதும் கூட பற்றுதல் ஆகும்.
அவ்யக்த இஷாரா - மகான் ஆவதற்காக இனிமை மற்றும்
பணிவு என்ற குணங்களை தாரணை செய்யுங்கள்
இனிமையே மகான் தன்மை ஆகும். இதனால் மனம் (எண்ணம்) மற்றும்
வாயின் (சொல்) கடுமை முடிந்து விடும். கோப அக்னி குளிர்ந்து
விடும். பாப்தாதா தம்முடைய குழந்தைகளைக் குளிர்ந்த தேவதைகளாக
ஆக்க விரும்புகிறார். எனவே இனிமையின் குணத்தை தாரணை செய்யுங்கள்.
உங்கள் முகமும் இனிமையானதாக இருக்க வேண்டும். இனிமையின் குணம்
நிரம்பப் பெற்றவர் ஆகுங்கள். யார் உங்கள் தொடர்பில் வந்தாலும்
அவர்களை இனிய சொல் மற்றும் சக்திசாலி திருஷ்டியினால் நிரப்பி
விடுங்கள்.