15-05-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! தங்களது சுபாவத்தை
தந்தைக்குச் சமமாக சரளமானதாக (ஈஸி) ஆக்கிக் கொள்ளுங்கள்.
உங்களிடம் எந்த ஒரு கர்வமும் இருக்கக் கூடாது. ஞானத்துடன்
கூடிய புத்தி இருக்க வேண்டும். அகம்பாவம் இருக்கக் கூடாது.
கேள்வி:
சேவை செய்து கொண்டிருக்கும்
பொழுது கூட நிறைய குழந்தைகள் பேபியை விடவும் பேபியாக (சிறு
குழந்தையை விடவும் குழந்தைத்தனமாக) இருக்கிறார்கள் - எப்படி?
பதில்:
நிறைய குழந்தைகள் சேவை செய்து
கொண்டே இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு ஞானம் கூறிக் கொண்டே
இருக்கிறார்கள். ஆனால் தந்தையை நினைவு செய்வதில்லை. பாபா நினைவு
மறந்து விடுகிறது என்று கூறுகிறார்கள். ஆக பாபா அவர்களை பேபி
என்று கூறுவார். ஏனெனில் குழந்தைகள் ஒரு பொழுதும் தந்தையை
மறப்பதில்லை. எந்த ஒரு தந்தை உங்களை இளவரசன் இளவரசியாக
ஆக்குகிறாரோ அவரை நீங்கள் ஏன் மறந்து விடுகிறீர்கள்? அவ்வாறு
மறந்தீர்கள் என்றால் ஆஸ்தி எப்படி கிடைக்கும்? நீங்கள் கைகளால்
காரியம் செய்கையிலும் கூட தந்தையை நினைவு செய்ய வேண்டும்.
ஓம் சாந்தி.
படிப்பினுடைய லட்சியம், நோக்கம் குழந்தைகளுக்கு எதி-லேயே உள்ளது.
தந்தை சாதாரண உடலில் இருக்கிறார், அதுவும் வயோதிக உடலில்
என்பதையும் குழந்தைகள் அறிந்துள்ளார்கள். அங்கோ வயோதிகராக
ஆனாலும் கூட நாங்கள் போய் (அடுத்த பிறவியில்) குழந்தையாகப்
பிறப்போம் என்ற குஷி இருக்கும். நாம் இது போல ஆகப் போகிறோம்
என்று இவருக்கு குஷி இருக்கிறது என்பதையும் அறிந்துள்ளீர்கள்.
குழந்தை போன்ற நடத்தை ஆகி விடுகிறது. குழந்தைகள் போல சரளமாக
இருப்பார். கர்வம் எதுவும் கிடையாது. ஞானத் தினுடைய புத்தி
உள்ளது. எப்படி இவருக்கு இருக்கிறதோ அதே போல குழந்தைகளாகிய
உங்களுக்கும் இருக்க வேண்டும். பாபா நமக்கு கற்பிக்க
வந்துள்ளார். நாம் இது போல ஆகி விடுவோம். எனவே நாம் இந்த
சரீரத்தை விட்டு விட்டு போய் இது போல (லட்சுமி, நாராயணன்) ஆகி
விடுவோம் என்ற குஷி குழந்தைகளாகிய உங்களுக்குள் இருக்க வேண்டும்
அல்லவா? இராஜ யோகம் கற்றுக் கொண்டிருக்கிறோம். சிறிய குழந்தைகளோ,
பெரியவர்களோ, எல்லோரும் சரீரத்தை விடுவார்கள். அனைவருக்கான
படிப்பு ஒன்றே ஒன்று தான். நான் இராஜயோகம் கற்கிறேன் என்று
இவரும் கூறுகிறார். பிறகு நாம் போய் இளவரசர் ஆகி விடுவோம்.
நாங்கள் இளவரசர் இளவரசி ஆகி விடுவோம் என்று நீங்களும்
கூறுகிறீர்கள். இளவரசன் இளவரசி ஆவதற்காக நீங்கள் படித்து
கொண்டிருக்கிறீர்கள். அந்த் மதி சோ கதி (கடைசியில் மனநிலை
எவ்வாறோ அவ்வாறே கதி) ஆகி விடும். நாம் ஏழையிலிருந்து இளவரசர்
ஆகப் போகிறோம் என்ற நிச்சயம் புத்தியில் உள்ளது. இந்த ஏழை உலகமே
முடியப் போகிறது. குழந்தைகளுக்கு மிகுந்த குஷி இருக்க வேண்டும்.
பாபா குழந்தைகளைக் கூட தனக்குச் சமமாக ஆக்குகிறார். நானோ
இளவரசன் இளவரசி ஆக வேண்டியது இல்லை என்று சிவ பாபா கூறுகிறார்.
ஆனால் நானோ ஆக வேண்டி உள்ளது என்று இந்த பாபா கூறுகிறார்.
நாங்கள் இது போல ஆவதற்காகப் படித்துக் கொண்டிருக்கிறோம்.
இராஜயோகம் ஆகும் அல்லவா? நாங்கள் இளவரசர் இளவரசி ஆகிவிடு வோம்
என்று குழந்தைகளும் கூறுகிறார்கள். முற்றிலும் சரி, உங்கள்
வாயில் குளாப் ஜாம் (இனிப்பு) என்று தந்தை கூறுகிறார். இந்த
தேர்வு கூட இளவரசர் இளவரசி ஆவதற்கானது ஆகும். (நாலேஜ்) ஞானமோ
மிகவும் சுலபமாகும். தந்தையை நினைவு செய்ய வேண்டும் மற்றும்
வருங்கால ஆஸ்தியை நினைவு செய்ய வேண்டும். இந்த நினைவு செய்வதில்
தான் உழைப்பு உள்ளது. இந்த நினைவில் இருந்தீர்கள் என்றால்,
பிறகு அந்த் மதி சோ கதி (கடைசியில் புத்தி எவ்வாறோ அவ்வாறே கதி)
ஆகி விடும். சந்நியாசிகள் உதாரணம் தருகிறார்கள், ஒருவர்
கூறினார் நான் எருமை என்று.. பின் உண்மையில் அவ்வாறு ஆகி
விட்டதாக நினைக்க ஆரம்பித்து விட்டார். அவை எல்லாம் பயனற்ற
விஷயங்கள். இங்கோ தர்மத்தின் விஷயம் ஆகும். எனவே ஞானமோ மிகவும்
சுலபமானது என்று தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார்.
ஆனால் நினைவில் உழைப்பு உள்ளது. நீங்களோ சிறு குழந்தைகள் (பேபி)
ஆவீர்கள் என்று பாபா பெரும்பாலும் கூறு கிறார். பிறகு
குழந்தைகளின் புகார்கள் வருகின்றன, நாங்கள் பேபியா? பாபா
கூறுகிறார் - ஆம், பேபிகள் தான்! ஞானமோ மிகவும் நன்றாக
இருக்கிறது! கண்காட்சியில் சேவை மிகவும் நன்றாகச் செய்கிறீர்கள்.
இரவு பகலாக சேவையில் ஈடுபட்டு விடுகிறீர்கள். இருந்தாலும் பேபி
என்று தான் கூறுவோம். இந்த (பிரம்மா) கூட பேபி ஆவார் என்று
தந்தை கூறுகிறார். இந்த பாபா கூறுகிறார், நீங்கள் எங்களை
விடவும் பெரியவர்கள். இவருக்கோ நிறைய விஷயங்கள் பார்க்க வேண்டி
உள்ளன. யாருடைய தலை மீது விஷயங்களோ.. அநேக சிந்தனைகள் உள்ளன.
பாபாவிடம் எவ்வளவு செய்திகள் வருகின்றன,. எனவே காலையில்
அமர்ந்து நினைவு செய்வதற்கான முயற்சி செய்கிறார். ஆஸ்தியோ
அவரிடமிருந்து தானே பெற வேண்டும். எனவே தந்தையை நினைவு செய்ய
வேண்டும். அனைத்து குழந்தைகளுக்கும் தினமும் புரிய வைக்கிறேன்.
இனிமையான குழந்தைகளே! நீங்கள் நினைவு யாத்திரையில் மிகவும்
பலவீனமாக இருக்கிறீர்கள். ஞானத்தில் வேண்டுமானால் நன்றாக
இருக்கலாம். ஆனால் ஒவ்வொருவரும் நான் பாபாவின் நினைவில் எவ்வளவு
நேரம் இருக்கிறேன் என்று உங்கள் உள்ளத்தையே கேட்டுப் பார்க்க
வேண்டும். நல்லது, பகலில் நிறைய வேலைகள் ஆகியவற்றில் பிஸி
மும்முரமாக இருக்கிறீர்கள். பார்க்கப் போனால் காரியம்
செய்கையிலும் கூட நினைவில் இருக்க முடியும். கைகள் காரியம்
செய்து கொண்டிருக்க, புத்தி அங்கு (பாபாவிடம்) ஈடுபட்டிருக்க
வேண்டும். எப்படி பக்தி மார்க்கத்தில் பூஜை செய்து கொண்டே
இருக்கிறார்கள் என்றாலும் கூட புத்தி வெவ்வேறு பக்கங்களில்.
தொழில் ஆகிய வற்றின் பக்கம் சென்று விடுகிறது அல்லது ஒரு
பெண்ணினுடைய கணவன் வெளிநாட்டில் இருந்தார் என்றால் அவருடைய
புத்தி அங்கு சென்று விடுகிறது. ஏனெனில் அவருடன் அதிகமான (கனெக்ஷ்ன்)
தொடர்பு உள்ளது. ஆக, சேவை நன்றாகச் செய்கிறார்கள் என்றாலும்
கூட பாபா பேபி புத்தி என்றே கூறுவார். நாங்கள் பாபாவின் நினைவை
மறந்து விடுகிறோம் என்று நிறைய குழந்தைகள் எழுதுகிறார்கள். அட,
தந்தையை பேபி சிறு குழந்தை கூட மறப்பதில்லை. நீங்களோ பேபியை
விடவும் பேபி ஆவீர்கள். எந்த தந்தை மூலமாக நீங்கள் இளவரசர்
இளவரசி ஆகிறீர் களோ, அவர் உங்களது தந்தை ஆசிரியர் குருவாக
இருக்கிறார். நீங்கள் அவரையே மறந்து விடு கிறீர்கள்!
எந்த குழந்தைகள் தங்களுடைய முழுமையான கணக்கை தந்தைக்கு
அனுப்புகிறார்களோ அவர் களுக்குத் தான் பாபா தனது ஆலோசனை
தருகிறார். நாம் தந்தையை எவ்வாறு நினைவு செய்கிறோம். எப்பொழுது
நினைவு செய்கிறோம் என்பதை குழந்தைகள் கூற வேண்டும். பிறகு தந்தை
ஆலோசனை அளிப்பார். இவருக்கு இந்த சர்வீஸ் (சேவை) இருக்கிறது.
இதற்கேற்ப அவருக்கு எவ்வளவு நேரம் இருக்க முடியும்" என்பதை பாபா
புரிந்து கொள்வார். அரசாங்க ஊழியர் களுக்கு நிறைய நேரம்
இருக்கும். வேலை கொஞ்சம் குறைந்ததாக உள்ளது என்றால் தந்தையை
நினைவு செய்து கொண்டே இருங்கள். நடந்தாலும், போனாலும்,
வந்தாலும் தந்தையின் நினைவு இருக்கட்டும். பாபா நேரம் கூட
கொடுக்கிறார். நல்லது. இரவு 9 மணிக்கு உறங்கி விடுங்கள். பிறகு
2-3 மணிக்கு எழுந்து நினைவு செய்யுங்கள். இங்கு வந்து அமர்ந்து
விடுங்கள். ஆனால் இது கூட உட்காருவதற்கான பழக்கம் பாபா
ஏற்படுத்துவது இல்லை. நினைவோ நடந்தாலும் சென்றாலும் கூட
செய்யலாம். இங்கோ (மதுபன்) குழந்தைகளுக்கு நிறைய நேரம்
கிடைக்கிறது. முன்பெல்லாம் நீங்கள் தனிமையில் மலைகள் மீது போய்
அமர்ந்து கொண்டிருந்தீர்கள். தந்தையை அவசியம் நினைவு செய்ய
வேண்டும். இல்லையென்றால் (விகர்மங்கள் விநாசம்) பாவங்கள் எப்படி
அழிய முடியும்? தந்தையை நினைவு செய்ய முடியவில்லை என்றால்
பேபியை விடவும் பேபி ஆகிறீர்கள் இல்லையா? எல்லாமே நினைவைப்
பொருத்தது ஆகும். பதீத பாவன தந்தையை நினைவு செய்வதில் முயற்சி
உள்ளது. ஞானமோ மிகவும் சுலபமானது. யார் முந்தைய கல்பத்தில்
வந்திருந்தார்களோ அவர்கள் தான் வந்து புரிந்து கொள்வார்கள்
என்பதையும் அறிந்துள்ளீர்கள். குழந்தைகளுக்கு டைரக்ஷ்ன் (உத்தரவுகள்)
கிடைத்து கொண்டே இருக்கின்றன. நாம் தமோபிரதான நிலையிலிருந்து
எப்படி சதோபிரதானமாக ஆகலாம் என்பதற்கான முயற்சி தான் செய்ய
வேண்டும். தந்தையின் நினைவைத் தவிர வேறு எந்த ஒரு வழியும் இல்லை.
பாபா எங்களுடைய இந்த தொழிலின் காரணமாக அல்லது இந்த காரியம்
இருக்கும் காரணத்தால் நான் நினைவு செய்ய முடியாமல் இருக்கிறேன்
என்று பாபாவிடம் நீங்கள் கூறலாம். பாபா உடனே இப்படி அல்ல,
இப்படி செய்யுங்கள் என்று உடனே ஆலோசனை அளிப்பார். உங்களுடையது
எல்லாமே நினைவைப் பொருத்தது. நல்ல நல்ல குழந்தைகள் ஞானமோ
மிகவும் நன்றாக அளிக் கிறார்கள். யாரையும் குஷிப்படுத்தி
விடுகிறார்கள். ஆனால் யோகம் இல்லை. தந்தையை நினைவு செய்ய
வேண்டும். இதை அறிந்திருந்தும் கூட மறந்து விடுகிறார்கள். இதில்
தான் உழைப்பு உள்ளது. பழக்கம் ஏற்பட்டு விட்டால் பின்
விமானத்திலோ அல்லது இரயில் வண்டியில் அமர்ந் திருந்தாலும் கூட
தங்களது ஈடுபாடு நினைவு செய்வதில் இருந்து கொண்டே இருக்கும்.
நாம் பாபா மூலமாக வருங்கால இளவரசர் இளவரசி ஆகிறோம் என்பது
உள்ளுக்குள் குஷி இருக்கும். அதிகாலை எழுந்து இது போல தந்தையின்
நினைவில் அமர்ந்து விடுங்கள். பிறகு களைத்து விடுகிறீர்களா?
நல்லது நினைவில் படுத்து கொள்ளுங்கள். தந்தை யுக்திகளைக்
கூறுகிறார். நடந்தா லும் சென்றாலும் நினைவு செய்ய முடியவில்லை
என்றால் பின் பாபா கூறுவார் நல்லது இரவில் தியானத்தில்
அமருங்கள். அப்பொழுது கொஞ்சம் உங்களுக்கு சேமிப்பு ஆகி விடும்.
ஆனால் இது வலுக்கட்டாயமாக ஒரு இடத்தில் அமருவது என்பது ஹடயோகம்
ஆகி விடுகிறது. உங்களு டையதோ சகஜ மார்க்கம் ஆகும். ரொட்டி
சாப்பிடுகிறீர்களா, பாபாவை நினைவு செய்யுங்கள். நாம் பாபா
மூலமாக உலகத்தின் அதிபதி ஆகிக் கொண்டிருக்கிறோம். தங்களிடம்
உரையாடிக் கொண்டே இருங்கள். நான் இந்த படிப்பினால் இது போல
ஆகிறேன்.படிப்பின் மீது முழு கவனம் (அட்டென்ஷன்) கொடுக்க
வேண்டும். உங்களுடைய (சப்ஜெக்ட்) பாடங்களே மிகக் குறைவு. பாபா
எவ்வளவு கொஞ்சமாகப் புரிய வைக்கிறார். எந்த ஒரு விஷயம் கூட
புரிய வில்லை என்றால் பாபாவிடம் கேளுங்கள். தன்னை ஆத்மா என்று
உணர வேண்டும். இந்த சரீரமோ 5 பூதங்களா லானது. நான் சரீரம் ஆவேன்
- இவ்வாறு கூறுவது என்றாலே தன்னை பூதம் என்று கருதுவது ஆகும்.
இது இருப்பதே அசுரர்களின் உலகமாக. அது தெய்வீக உலகம் ஆகும்.
இங்கு எல்லோருமே (தேக அபிமானி) தேக உணர்வுடையவர்களாக
இருக்கிறார்கள். தங்களது ஆத்மாவை யாருமே அறியாமல்
இருக்கிறார்கள். சரி மற்றும் தவறு என்று இருக்கிறது தானே! நான்
ஆத்மா அவினாஷி (அழியாதவன்) ஆவேன் என்று உணர்ந்திருப்பது சரி
ஆகும். தன்னை அழியக் கூடிய சரீரம் என்று நினைப்பது தவறு ஆகி
விடுகிறது. தேக அகங்காரம் மிகப் பெரியது. இப்பொழுது தேகத்தை
மறந்து விடுங்கள், ஆத்ம அபிமானி (ஆத்ம உணர்வுடையவர்) ஆகுங்கள்
என்று தந்தை கூறுகிறார். இதில் தான் உழைப்பு உள்ளது. 84
பிறவிகள் எடுக்கிறீர்கள். இப்பொழுது வீடு செல்ல வேண்டும்.
உங்களுக்கு தான் (ஈஸி) சுலபமானதாகப்படுகிறது. உங்களுக்குத் தான்
84 பிறவிகள் உள்ளன. சூரிய வம்ச தேவதா தர்மத்தினருக்கு 84
பிறவிகள் ஆகும். திருத்தி (கரெக்ட்) எழுத வேண்டி உள்ளது.
குழந்தைகள் படித்து கொண்டே இருக்கிறார்கள். (கரெக்ஷ்ன்)
திருத்தம் ஆகிக் கொண்டே இருக்கிறது. அந்த படிப்பில் கூட
வரிசைக்கிரமமாக இருக்கிறார்கள் அல்லவா? குறைவாகப் படித்தீர்கள்
என்றால் ஊதியம் கூட குறைவாகக் கிடைக்கும். இப்பொழுது
குழந்தைகளாகிய நீங்கள் உண்மையிலும் உண்மையான நரனிலிருந்து
நாராயணர் ஆவதற்கான அமர கதையைக் கேட்பதற் காக பாபாவிடம்
வந்துள்ளீர்கள். இந்த மரண உலகம் இப்பொழுது முடியப் போகிறது.
நாம் அமர லோகம் செல்ல வேண்டும். நாம் தமோ பிரதான நிலையிலிருந்து
சதோபிரதானமாக, பதீத (தூய்மையற்ற) நிலையிலிருந்து பாவனமாக ஆக
வேண்டும் என்ற இந்த கவலை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு
ஏற்பட்டிருக்க வேண்டும். பதீத பாவன தந்தை அனைத்து குழந்தை
களுக்கும் ஒரே ஒரு யுக்தி கூறுகிறார் - தந்தையை நினைவு
செய்யுங்கள், சார்ட் வையுங்கள். அப்பொழுது உங்களுக்கு மிகுந்த
குஷி இருக்கும் என்பதை மட்டுமே கூறுகிறார். இப்பொழுது உங்களிடம்
ஞானம் உள்ளது. உலகமோ கோரமான இருளில் உள்ளது. உங்களுக்கு
இப்பொழுது தெளிவு கிடைக்கிறது. நீங்கள் திரிநேத்ரி திரிகாலதரிசி
ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். நிறைய மனிதர்கள், ஞானமோ அங்கங்கு
கிடைத்து கொண்டு தானிருக்கிறது. இது ஒன்றும் புதிய விஷயம்
கிடையாது என்பார்கள்.அட! இந்த ஞானம் யாருக்கும் கிடைப்பதே இல்லை.
அங்கு ஞானம் கிடைக்கிறது என்றாலும் கூட நடைமுறையில் செய்வது
ஒன்றுமில்லையே! நரனிலிருந்து நாராயணர் ஆவதற்கான புருஷார்த்தம்
(முயற்சி) யாராவது செய்கிறார்களா? ஒன்றும் கிடையாது. எனவே தந்தை
குழந்தைகளுக்குக் கூறுவதாவது: - அதிகாலை நேரம் மிகவும் நல்லது
ஆகும். மிகவும் ஆனந்தம் ஏற்படுகிறது. அமைதியாக ஆகி விடுகிறோம்.
வாயு மண்டலம் நன்றாக இருக்கும். எல்லாவற்றையும் விட மோசமான
வாயுமண்டலம் இரவு 10 மணி முதல் 12 மணி வரையிலானது ஆகும். எனவே
அதிகாலை நேரம் மிகவும் நல்லது ஆகும். இரவில் சீக்கிரம் உறங்கி
விடுங்கள். பிறகு 2-3 மணிக்கு எழுந்திருங்கள். ஓய்வாக
அமருங்கள்.பாபாவிடம் உரையாடுங்கள். உலகத்தின் சரித்திரம்
பூகோளம் நினைவு செய்யுங்கள். சிவபாபா கூறுகிறார் - என்னிடம்
படைப்பவர் மற்றும் படைப்பின் ஞானம் உள்ளது அல்லவா? நான்
உங்களக்கு ஆசிரிய ராகி கற்பிக்கிறேன். ஆத்மாவாகிய நீங்கள்
தந்தையை நினைவு செய்து கொண்டே இருக்கிறீர்கள். பாரதத்தினுடைய
பழமையான யோகம் பிரசித்தமானது ஆகும். யோகம் (தொடர்பு) யாருடன்?
இதையும் எழுத வேண்டும். ஆத்மா பரமாத்மாவுடன் கொள்ளும் யோகம்
அதாவது நினைவு ஆகும். நாம் ஆல்ரவுண்டர் ஆவோம். முழுமையாக 84
பிறவிகள் எடுக்கிறோம் என்பதை குழந்தை களாகிய நீங்கள் இப்பொழுது
அறிந்துள்ளீர்கள். இங்கு பிராமண குலத்தினர் தான் வருவார்கள்.
நாம் பிராமணர்கள் ஆவோம். இப்பொழுது நாம் தேவதை ஆகப் போகிறவர்கள்
ஆவோம். சரஸ்வதி கூட மகள் ஆவார் அல்லவா? வயோதிகராகவும்
இருக்கிறேன். மிகுந்த குஷி ஏற்படுகிறது. இப்பொழுது நான்
சரீரத்தை விட்டு விட்டு, இராஜாவின் வீட்டில் போய் ஜன்மம்
எடுப்பேன். நான் படித்துக் கொண்டிருக்கிறேன். பிறகு கோல்டன்
ஸ்பூன் இன் மௌத் (வாயில் தங்கக் கரண்டி) இருக்கும். உங்கள்
எல்லோருடைய இலட்சியம் நோக்கம் இதுவே ஆகும். ஏன் குஷி இருக்கக்
கூடாது. மனிதர்கள் என்ன வேண்டுமானாலும் கூறிக் கொண்டி
ருக்கட்டும்? உங்களுடைய குஷி ஏன் மறைந்து போய் விட வேண்டும்?
தந்தையை நினைவே செய்யவில்லை என்றால், நரனிலிருந்து நாராயணராக
எப்படி ஆவீர்கள்? உயர்ந்தவராக ஆக வேண்டும் அல்லவா? அது போன்ற
புருஷார்த்தம் (முயற்சி) செய்து காண்பியுங்கள். ஏன்
குழம்புகிறீர்கள்? எல்லோரும் ராஜா ஆகி விடுவார்களா என்ன என்று
ஏன் மனமுடைந்து போகிறீர்கள்? இந்த சிந்தனை வந்ததோ இல்லையோ (ஃபெயில்)
தோற்று விடுவீர்கள். கல்விக் கூடத்தில் சட்டவியல், பொறியியல்
ஆகியவை படிக்கிறார்கள் என்றால் எல்லோரும் வழக்கறிஞர் ஆகி
விடுவார்களா என்று கூறுவார் களா என்ன? படிக்கவில்லை என்றால் ஃபெயில்
ஆகி விடுவீர்கள். 16108 ன் முழு மாலை உள்ளது. முதன் முதலில்
யார் வருவார்கள். யார் அந்த அளவு புருஷார்த்தம் (முயற்சி)
செய்வார்களோ அவர்கள் ஒருவரை விட ஒருவர் வேகமாக முயற்சி
செய்கிறார்கள் அல்லவா? இப்பொழுது நாம் இந்த பழைய சரீரத்தை
விட்டு விட்டு வீடு செல்ல வேண்டும் என்பது குழந்தைகளாகிய
உங்களுடைய புத்தியில் உள்ளது. இதுவும் நினைவு இருந்தது என்றால்
புருஷார்த்தம் தீவிரமாக ஆகி விடும். அனைவருக்கும் முக்தி ஜீவன்
முக்தி அளிக்கும் வள்ளல் ஒரே ஒரு தந்தை ஆவார் என்பது
குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். இன்று
உலகத்தில் இத்தனை கோடி மனிதர்கள் இருக்கிறார்கள். நீங்கள் 9
லட்சம் பேர் இருப்பீர்கள். அது கூட சுமாராகக் கூறப் படுகிறது.
சத்யுகத்தில் இன்னும் எவ்வளவு பேர் இருப்பார்கள். ராஜ்யத்தில்
சிறிதளவாவது மனிதர் கள் வேண்டும் அல்லவா? இது ராஜ்யம் ஸ்தாபனை
ஆகிக் கொண்டிருக்கிறது. சத்யுகத்தில் மிகவும் சிறிய விருட்சம்
இருக்கும் என்று புத்தி கூறுகிறது. ப்யூட்டி ஃபுல் (அழகாக
இருக்கும்) பெயரே சொர்க்கம் (பேரடைஸ்) என்பதாகும்.
குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் முழு சக்கரம் சுற்றிக்
கொண்டே இருக்கிறது. இதுவும் எப்பொழுதும் சுற்றிக் கொண்டே
இருந்தாலும் கூட நல்லது.
இந்த இருமல் ஆகியவை வருவது - இதுவும் வினைப் பயன் ஆகும். இது
பழைய செருப்பு ஆகும். புதியதோ இங்கு கிடைக்கப் போவதில்லை. நான்
புனர் ஜென்மமோ எடுப்பது இல்லை. கர்ப்பத்தில் வருவதும் இல்லை.
நானோ சாதாரண உடலில் பிரவேசம் செய்கிறேன். வானப்பிரஸ்த நிலை
ஆகும். இப்பொழுது சப்தத்திற்கு அப்பாற்பட்ட சாந்திதாமம் செல்ல
வேண்டும். எப்படி இரவிலி ருந்து பகல், பகலிலிருந்து இரவு
அவசியம் ஆகிறதோ. அதே போல பழைய உலகம் அவசியம் அழியப் போகிறது.
இந்த சங்கமயுகம் அவசியம் முடிந்து பிறகு சத்யுகம் வரும்.
குழந்தைகள் நினைவு யாத்திரையின் மீது மிக மிக கவனம் வைக்க
வேண்டும். அது இப்பொழுது மிகக் குறைவாக உள்ளது. எனவே பாபா பேபி
என்று கூறுகிறார். குழந்தைத்தனமாக இருக்கிறார்கள்.
கூறுகிறார்கள், பாபாவை நினைவு செய்யவே முடிவதில்லை -
அப்படியானால் பேபி என்று தான் கூறுவார்கள் அல்லவா? நீங்கள்
சிறிய பேபி ஆவீர்கள். தந்தையை மறந்து விடுகிறீர்கள்?
இனிமையிலும் இனிமையான தந்தை, ஆசிரியர், குரு அரைகல்பத்தின்
மிகவும் அன்பிற்குரியவர் - அவரை மறந்து விடுகிறீர்களா? அரை
கல்பமாக துக்கத்தில் நீங்கள் அவரை ஹே பகவான் என்று நினைவு
செய்து கொண்டே வந்துள்ளீர்கள். ஆத்மா சரீரத்தின் மூலமாக (மேற்கண்டவாறு)
கூறுகிறது அல்லவா? இப்பொழுது நான் வந்துள்ளேன். நல்ல முறையில்
நினைவு செய்யுங்கள். அநேகருக்கு வழி கூறுங்கள். இனி போகப் போக
மிகவும் விருத்தி அடைந்து கொண்டே செல்வீர்கள். தர்மத்தின்
விருத்தியோ ஆகிறது அல்லவா? அரவிந்த் கோஷ்-ன் உதாரணம். இன்று
அவருடைய எவ்வளவு சென்டர்கள் இருக்கின்றன. அவை அனைத்தும் பக்தி
மார்க்கம் ஆகும் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
இப்பொழுது உங்களுக்கு ஞானம் கிடைக்கிறது. புருஷோத்தமர்
ஆவதற்கானது, இந்த நாலேஜ் (ஞானம்) ஆகும். நீங்கள் மனிதனிலிருந்து
தேவதை ஆகிறீர்கள். தந்தை வந்து அனைத்து அழுக்கு துணிகளையும்
தூய்மைப்படுத்துகிறார். அவருக்குத் தான் மகிமை உள்ளது.
முக்கியமானது நினைவு ஆகும். ஞானமோ மிகவும் சுலபமானது. முரளி
படித்து கூறுங்கள். நினைவு செய்து கொண்டே இருங்கள். நினைவு
செய்து செய்து ஆத்மா தூய்மையாக ஆகி விடும். பெட்ரோல் நிரம்பிக்
கொண்டே போகும். பிறகு நீங்கள் ஓடி விடுவீர் கள். இந்த
சிவபாபாவின் ஊர்வலம் என்று கூறினாலும் சரி, குழந்தைகள் என்று
கூறினாலும் சரி. நான் காமச் சிதையிலிருந்து இறக்கி உங்களை யோக
சிதையில் அமர்த்து கிறேன். அதற்காக நான் வந்துள்ளேன் என்று
தந்தை கூறுகிறார். யோகத்தினால் (ஹெல்த்) ஆரோக்கியம், ஞானத்
தினால் (வெல்த்) செல்வம் கிடைக்கிறது. நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து
கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. எய்ம்-ஆப்ஜெக்ட் - லட்சியம் நோக்கத்தை முன்னால் வைத்து
குஷியாக இருக்க வேண்டும். ஒரு பொழுதும் மனமுடைந்தவராகி விடக்
கூடாது. எல்லோரும் ராஜா ஆகி விடுவார்களா என்ன என்ற இந்த எண்ணம்
ஒரு பொழுதும் வரக் கூடாது. புருஷார்த்தம் (முயற்சி) செய்து
உயர்ந்த பதவி அடைய வேண்டும்.
2. மிகவும் அன்பிற்குரிய தந்தையை மிகவும் அன்புடன் நினைவு
செய்ய வேண்டும். இதில் பேபி ஆகக் கூடாது. நினைவிற்கு அதிகாலை
நேரம் நல்லது. ஓய்வாக அமைதியில் அமர்ந்து நினைவு செய்யுங்கள்.
வரதானம்:
யக்ஞ சேவையின் மூலமாக அனைத்து பிராப்திகளையும் (பலன்களையும்)
பிரசாதமாக பெறக்கூடிய ஆல்ரவுண்டர் சேவாதாரி ஆகுக.
சங்கமயுகத்தில் ஆல்ரவுண்டர் சேவைக்கான வாய்ப்பு கிடைப்பது
என்பது கூட டிராமாவில் ஓர் லிஃப்ட் கிடைப்பது போன்றதாகும். யார்
அன்போடு, ஆல்ரவுண்டராகி யக்ஞயத்தினுடைய சேவை செய்கின்றார்களோ,
அவர்களுக்கு அனைத்து பிராப்திகளும், பிரசாதமாக, தானாகவே
கிடைத்து விடுகின்றது. அவர்கள் தடைகளற்றவர் களாக
இருக்கின்றார்கள். ஒரு முறை சேவை செய்தால், பல ஆயிரம்
மடங்குக்கான, சேவைக்கான பலன் கிடைத்து விடுகின்றது. ஸ்தூல
மற்றும் சூட்சமத்தில் சதா (மற்றவர்களுக்கு) விருந்து அளித்துக்
கொண்டே இருங்கள். யாரை யேனும் திருப்தி படுத்துகின்றீர்கள்
என்பது-மிகப்பெரிய சேவை ஆகும். தன்னை விருந்தினராக கருதி
வசிப்பது என்பது மிகப்பெரிய பாக்யமாகும்.
சுலோகன்:
சுயமரியாதையில் நிலைத்து இருங்கள் அப்போது அனேக விதமான அபிமானம்
(கர்வம்) தானாகவே முடிவுக்கு வரும்.
அவ்யக்த சமிக்கை: ஆன்மீக ராயல்டி (தெய்வீகத்தன்மை) மற்றும்
ப்யூரிட்டி(தூய்மை) என்ற பெர்சனாலிடியை (ஆளுமையை) தாரணை
செய்யுங்கள்
எப்படி உலகத்தில் ராயல் ஆத்மாக்கள் ஒருபோதும் சின்ன சின்ன
விஷயங்களில், அற்பமான விஷயங்களில், தன்னுடைய புத்தி மற்றும்
நேரத்தை கொடுக்க மாட்டார்களோ; பார்த்தாலும் பார்காதவாறு,
கேட்டாலும் கேட்காதவாறு இருப்பார்களோ, அப்படி ராயல்
ஆத்மாக்களாகிய நீங்கள், ஒருபோதும் சின்ன சின்ன விஷயங்களில்,
தெய்வீகத்தன்மை அல்லாத விஷயங்களில், தன்னுடைய புத்தியையும்,
நேரத்தையும் கொடுக்க முடியாது. ஆன்மீக ராயல் ஆத்மாக்களின்
வாயிலிருந்து, ஒருபோதும் வீணான அல்லது சாதாரணமான வார்த்தை
வரமுடியாது.