15-06-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே மாயையை வென்றவர் ஆவதற்காக தவறான காரியங்கள் செய்வதை விட்டு விடுங்கள். துக்கத்தைக் கொடுப்பது மற்றும் துக்கத்தை எடுப்பது - இது மிகவும் பெரிய தவறு. இதை குழந்தைகளாகிய நீங்கள் செய்யக் கூடாது.

கேள்வி:
பாபாவிற்கு குழந்தைகளாகிய நம் மீது எந்த ஒரு விருப்பம் இருக்கிறது?

பதில்:
என்னுடைய அனைத்து குழந்தைகளும் எனக்குச் சமமாக சதா தூய்மையாக வேண்டும் என்ற விருப்பம் பாபாவிற்கு இருக்கிறது. பாபா எப்போதும் வெண்மையாக இருக்கிறார்.அவர் குழந்தைகளை கருபிலிருந்து வெண்மையாக்க வந்திருக்கிறார். மாயா கருப்பாக மாற்றுகிறது. பாபா வெண்மையாக மாற்றுகிறார். இலட்சுமி நாராயணன் வெண்மையாக இருக்கிறார்கள். கருப்பான தூய்மை இல்லாத மனிதர்கள் அவர்களின் மகிமையை பாடுகிறார்கள். தன்னை தாழ்ந்தவராக நினைக்கின்றனர். இனிமையான குழந்தைகளே! இப்போது வெண்மையாக, சதோபிர தானமாக மாற முயற்சி செய்யுங்கள் என்ற பாபாவினுடைய ஸ்ரீமத் இப்போது கிடைத்திருக்கிறது.

ஓம் சாந்தி.
பாபா என்ன செய்து கொண்டிருக்கின்றார் மேலும், குழந்தைகள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்? நம்முடைய ஆத்மா தமோபிரதானமாக ஆகியிருக்கிறது. அதை சதோபிரதானமாக மாற்ற வேண்டும் என்பது பாபாவிற்கும் தெரியும், குழந்தைகளுக்கும் தெரியும். இதற்கு பொற்காலம் என்று பெயர். பாபா ஆத்மாக்களை பார்க்கின்றார். ஆத்மாவிற்கு நம்முடைய ஆத்மா கருப்பாகிவிட்டது என்ற எண்ணம் தோன்றுகின்றது. ஆத்மாவின் காரணமாக சரீரம் கூட கருப்பாகிவிட்டது. இலட்சுமி நாராயணனின் கோவிலுக்கு போகிறார்கள். முன்பு சிறிது கூட ஞானம் இல்லை. இவர்கள் சர்வகுண சம்பன்னர்களாக (அனைத்து குணங்களும் நிறைந்தவர்கள்) இருக்கிறார்கள். வெண்மையாக இருக்கிறார்கள். நாம் கருப்பு பூதமாக இருக்கிறோம் என்பதை பார்க்கிறார்கள், ஆனால், ஞானம் இல்லை. இப்போது இலட்சுமி நாராயணனின் கோவிலுக்குச் சென்றால், முதலில் நாம் சர்வகுண சம்பன்னர்களாக இருந்தோம். இப்போது கருப்பாகிவிட்டோம் என்பதை புரிந்து கொள்வார்கள். நாங்கள் கருப்பாக, விகாரமுடையவராக, பாவிகளாக இருக்கிறோம் என அவர்களுக்கு முன்பு கூறுகிறார்கள். திருமணம் செய்கிறார்கள் என்றால் முதலில் இலட்சுமி நாராயணன் கோவிலுக்கு அழைத்துச் செல்கிறார்கள். முதலில் இருவரும் நிர்விகாரியாக இருக்கிறார்கள், பிறகு விகாரியாக மாறுகிறார்கள். ஆகையால் நிர்விகாரியான, தேவதைகளுக்கு முன்பு சென்று தன்னை விகாரி, தூய்மையற்றவர்கள் எனக் கூறுகின்றனர். திருமணத்திற்கு முன்பு இவ்வாறு கூறமாட்டார்கள். விகாரத்தில் ஈடுபடுவதால் தான் கோவிலுக்குச் சென்று அவர் களுடையச் மகிமையை செய்கிறார்கள். தற்காலத்தில் இலட்சுமி நாராயணனுடைய கோவில், சிவனுடைய கோவில்களில் கூட திருமணம் நடை பெறுகிறது. பதீதமாவதற்காக (தூய்மையை இழப்பதற்கு) கங்கணம் கட்டுகிறார்கள். இப்போது நீங்கள் வெள்ளையாவதற்காக (தூய்மை யாவதற்கு) கங்கணம் கட்டுகிறீர்கள். இதற்காக வெண்மையாக மாற்றக்கூடிய சிவபாபாவை நினைக்கிறீர்கள். இந்த ரதத்தின் (பிரம்மா பாபா) புருவமத்தியில் சிவபாபா இருக்கிறார் என்பதை அறிந்திருக்கிறீர்கள். அவர் சதா தூய்மையாக இருக்கிறார். குழந்தைகள் கூட தூய்மையாக வெள்ளையாக மாறவேண்டும் என்பது அவருடைய ஆசை. என்னை மட்டும் நினைவு செய்து தூய்மையாகுங்கள். ஆத்மா, தந்தையை நினைக்க வேண்டும். தந்தை கூட குழந்தைகளைப் பார்த்துப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். குழந்தைகளாகிய நீங்களும் பாபாவைப் பார்த்து தூய்மையாக வேண்டும் என புரிந்து கொள்கிறீர்கள். பிறகு நாம் இது போன்று இலட்சுமி நாராயணனாக மாறுவோம். இந்த குறிக்கோளை குழந்தைகள் மிகவும் கவனத்தோடு நினைக்க வேண்டும். பாபாவிடம் வந்திருக்கிறோம் அவ்வளவு தான் என்று இருக்கக்கூடாது. மீண்டும் அங்கே செல்வதால் தன்னுடைய வேலை போன்றவைகளில் மூழ்கிவிடக்கூடாது. ஆகையால் இங்கே பாபா நேர் எதிரில் அமர்ந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். புருவமத்தியில் ஆத்மா இருக்கிறது. அழியாத ஆத்மாவின் சிம்மாசனம் இது. எந்த ஆத்மாக்கள் என்னுடைய குழந்தை களோ, அவர்கள் இந்த சிம்மாசனத்தில் அமர்வார்கள். ஆத்மா தமோபிரதானமாக இருப்பதால் சிம்மாசனமும் தமோபிரதானமாக இருக்கிறது. இது நன்றாகப் புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம். இது போன்று இலட்சுமி நாராயணனாக மாறுவது சித்தி வீட்டிற்குச் செல்வது போன்ற தல்ல. நாம் இவர்களைப் போல மாறிக்கொண்டிருக்கிறோம் என நீங்கள் அறிகிறீர்கள். ஆத்மா தூய்மையாகி தான் செல்லும். பிறகு தேவி தேவதைகள் என அழைப்பார்கள். நாம் இது போன்று சொர்க்கத்தின் எஜமானன் ஆகின்றோம். ஆனால், மாயா மறக்க வைக்கிறது. பலர் இங்கே கேட்டுவிட்டு வெளியில் சென்றதும் மறந்து விடுகிறார்கள். ஆகையால், பாபா நன்றாக உறுதிப்படுத்துகிறார் - தன்னைப் பாருங்கள்; இந்த தேவதைகளுக்குள் எவ்வளவு குணங்கள் இருக் கிறதோ அவற்றை ஸ்ரீமத்படி நடந்து தாரணை செய்கிறோமா? படம் கூட எதிரில் இருக்கிறது. நாம் இது போன்று மாறவேண்டும் என உங்களுக்குத் தெரியும். பாபா தான் மாற்றுவார். வேறு யாரும் மனிதனிலிருந்து தேவதையாக மாற்ற முடியாது. ஒரு பாபாதான் மாற்றக்கூடியவர். மனிதனிலிருந்து தேவதையாக என்ற பாடலும் இருக்கிறது. நீங்களும் வரிசைக்கிரமத்தில் தான் அறிந்திருக்கிறீர்கள். இந்த விஷயங்கள் பக்தர்களுக்குத் தெரியாது. எதுவரை பகவானின் ஸ்ரீமத்தை கடைபிடிக்கவில்லையோ அதுவரை எதுவும் புரிந்துக் கொள்ள முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் இப்போது ஸ்ரீமத்தை பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். நாம் சிவபாபாவின் வழிப்படி பாபாவை நினைவு செய்து செய்து இவ்வாறு மாறிக்கொண்டிருக்கிறோம் என்பதை நன்றாக புத்தியில் வைத்துக் கொள்ளுங்கள். நினைவினால் தான் பாவம் எரிந்து போய் விடும். வேறு எந்த வழியும் இல்லை.

இலட்சுமி நாராயணன் வெள்ளையாக இருக்கிறார்கள் அல்லவா! கோவில்களில் கருப்பாக உருவாக்கி வைத்திருக்கின்றனர். ரகுநாத் கோவிலில் இராமரை கருப்பாக ஏன் உருவாக்கியிருக்கின்றனர். யாருக்கும் தெரியவில்லை. எவ்வளவு சிறிய விஷயம் இது. இராமர் திரேதாயுகத்தை சார்ந்தவர். சிறிதளவு வித்தியாசம் இருக்கிறது. இரண்டு கலைகள் குறைகிற தல்லவா! ஆரம்பத்தில் இவர் சதோபிரதானமாக அழகாக இருந்தார் என பாபா புரிய வைக்கிறார். பிரஜைகள் கூட சதோபிரதானமாக மாறுகின்றனர். ஆனால். தண்டனைகளை அடைந்து மாறு கின்றனர். எவ்வளவு தண்டனை அடைகின்றனரோ, அவ்வளவு பதவி குறைகின்றது. முயற்சி செய்யவில்லையென்றால் பாவம் நீங்காது. பதவி குறைந்து விடுகிறது. பாபா தெளிவாக புரிய வைக்கின்றார். நீங்கள் வெள்ளையாவதற்காக இங்கு அமர்ந்திருக்கிறீர்கள். ஆனால், மாயை மிகப் பெரிய எதிரி. உங்களை கருப்பாக்குகிறது. இப்போது வெண்மையாக மாற்றுவதற்காக வந்திருக் கின்றார் என்றால் மாயா எதிர்க்கிறது. நாடகத்தின் படி அதுவும் அரைக்கல்பம் நடிக்க வேண்டும் என பாபா கூறுகின்றார். மாயா அடிக்கடி முகத்தை திருப்பி மற்ற பக்கம் அழைத்துச் செல்கிறது. பாபா, மாயா எங்களை மிகவும் துன்புறுத்துகிறது என எழுதுகின்றனர். இது தான் யுத்தம் என்று பாபா கூறுகின்றார். நீங்கள் வெள்ளையிலிருந்து கருப்பாக, மீண்டும் கருப்பிலிருந்து வெள்ளையாக மாறுகின்றீர்கள். இது விளையாட்டு. யார் முழுமையாக 84 பிறவிகள் எடுத்தார்களோ அவர் களுக்குத் தான் புரியவைக்கின்றார். அவர்கள் பாரதத்தில் தான் வருகிறார்கள். பாரதத்தில் அனைவரும் 84 பிறவிகள் எடுக்கின்றார்கள் என்பதும் கிடையாது.

இப்போது குழந்தைகளாகிய உங்களுடைய நேரம் மிகவும் மதிப்பு வாய்ந்தது. நாம் இவ்வாறு மாற வேண்டும் என முழுமையாக முயற்சி செய்ய வேண்டும். என்னை மட்டும் நினையுங்கள் மற்றும் தெய்வீக குணங்களை கடைபிடியுங்கள் என உறுதிபட பாபா கூறியிருக்கின்றார். யாருக்கும் துக்கம் கொடுக்கக்கூடாது. பாபா கூறுகின்றார் - குழந்தைகளே! இப்போது இது போன்று தவறு செய்யா தீர்கள். புத்தியோகம் ஒரு தந்தையிடம் வையுங்கள். நாங்கள் உங்களிடம் அர்ப்பணம் ஆவோம் என நீங்கள் உறுதிமொழி எடுத்திருக்கின்றீர்கள். பாபா, தாங்கள் வந்தால் நாங்கள் உங்களின் வழிப்படி நடப்போம், தூய்மையாகி தேவதையாக மாறுவோம் என பல பிறவிகளாக உறுதிமொழி செய்து வந்துள்ளீர்கள். உங்களுடைய ஜோடி (மனைவி) ஒத்துழைக்கவில்லை என்றாலும் நீங்கள் உங்களுடைய முயற்சியை செய்யுங்கள். ஜோடி (யுகல்) ஒத்துழைக்கவில்லை என்றால் ஜோடியாக முடியாது. யார் எவ்வளவு நினைவு செய்திருக் கிறார்களோ, தெய்வீக குணங்களை கடைபிடித்திருக் கிறார்களோ, அவர்களுக்கு ஜோடி (துணைவி) அமையும். பிரம்மா சரஸ்வதியை பாருங்கள் நன்றாக முயற்சி செய்தமையால் ஜோடியாகின்றார்கள். இவர்கள் மிகவும் நன்றாக சேவை செய்திருக் கிறார்கள். நினைவில் இருக்கிறார்கள். இது கூட குணம் அல்லவா! கோபியர்களில் கூட நல்ல நல்ல குழந்தைகள் நிறைய இருக்கின்றனர். சிலர் தானாகவே மாயை இழுக்கின்றது என்பதை புரிந்து கொள்கின்றனர். இந்த சங்கிலி துண்டாவதே இல்லை. அடிக்கடி பெயர் ரூபத்தில் மாட்ட வைக்கிறது. பெயர், ரூபத்தில் மாட்டிக் கொள்ளாதீர்கள், என்னிடம் இணையுங்கள் (என் வசப்படுங் கள்) என பாபா கூறுகின்றார். நீங்கள் நிராகாரமாக இருப்பது போல நானும் நிராகாரமாக இருக்கிறேன். உங்களை எனக்குச் சமமாக மாற்றுகிறேன். டீச்சர் தனக்குச் சமமாக மாற்றுவார் அல்லவா! மருத்துவர், மருத்துவராக மாற்றுவார்கள். இவர் எல்லையற்ற தந்தை அவருடைய பெயர் போற்றக்கூடியதாக இருக்கிறது. ஓ! பதீத பாவனா வாருங்கள் என அழைக்கின்றார்கள். பாபா, வந்து எங்களை பாவனமாக மாற்றுங்கள் என ஆத்மா சரீரம் மூலமாக அழைக்கிறது. நம்மை எப்படி தூய்மையாக மாற்றிக் கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும். வைரத்தில் கூட கருமையான கறை இருப்பது போல ஆத்மாவிலும் கறை படிந்திருக்கிறது. அவற்றை நீக்கி மீண்டும் உண்மையான தங்கமாக மாற்றுகின்றார். ஆத்மாவை மிகவும் தூய்மை யாக்க வேண்டும். உங்களுடைய குறிக்கோள் தெளிவாக இருக்கிறது. மற்ற சத்சங்கங்களில் இவ்வாறு ஒருபோதும் கூற மாட்டார்கள்.

இவ்வாறு மாறுவதே உங்களது குறிக்கோள் என பாபா புரிய வைக்கிறார். நாடகத்தின் படி நாம் அரைக்கல்பமாக இராவணனின் சங்கத்தில் விகாரியாகியிருக்கிறோம் என அறிவீர்கள். இப்போது இப்படி மாற வேண்டும். உங்களிடம் பேட்ஜ் கூட இருக்கிறது. இதை வைத்து புரியவைப்பது மிகவும் எளிது. இது தான் திருமூர்த்தி, பிரம்மா மூலமாக ஸ்தாபனை. ஆனால், பிரம்மா செய்வ தில்லை. அவர் தூய்மையற்ற நிலையி-ருந்து தூய்மை ஆகிறார். இப்படி தூய்மையின்றி இருப்பவர் கள் தான் தூய்மையாகிறார்கள் என மனிதர்களுக்கு தெரிவதில்லை. இப்போது குறிக்கோள் எட்டுவதற்கான படிப்பு உயர்ந்தது என குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். தந்தை படிக்க வைப்பதற்காக வருகிறார். ஞானம் பாபாவிற்குள் இருக்கிறது. அவர் யாரிடமும் படிக்க வில்லை. நாடகத்தின் திட்டப்படி அவருக்குள் ஞானம் இருக்கிறது. ஞானம் இவருக்குள் எங்கிருந்து வந்தது? என யாரும் கூறமுடியாது. இல்லை, அவரே ஞானம் நிறைந்தவர். அவர்தான் உங்களை தூய்மை இல்லாத நிலையி-ருந்து தூய்மையாக மாற்றுகிறார். மனிதர்கள் தூய்மையாவதற்காக கங்கை போன்றவற்றில் நீராடிக்கொண்டிருக்கிறார்கள். கடலில் கூட நீராடுகிறார்கள். பிறகு பூஜையும் செய்கிறார்கள். கடலையும் தேவதை என நினைக்கின்றனர். உண்மையில் ஓடிக் கொண்டிருக்கின்ற நதிகள் அப்படியே தான் இருக்கிறது. ஒருபோதும் அழிவதில்லை. ஆனால் முதலில் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. வெள்ளம் போன்ற பெயரே இல்லை. ஒருபோதும் மனிதர்கள் மூழ்கவில்லை. அங்கே மனிதர்கள் குறைவாகவே இருந்தனர், பிறகு அதிகரித்துக் கொண்டே யிருக்கின்றனர். கலியுகம் முடிவதற்குள் எவ்வளவு மனிதர்கள் ஆகிவிட்டனர். அங்கே ஆயுள் கூட மிகவும் அதிகமாக இருக்கிறது. எவ்வளவு குறைவாக மனிதர்கள் இருக்கிறார்கள். பிறகு 2500 வருடத்தில் மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. மரம் எவ்வளவு விரிவாக யிருக்கிறது. முதன் முதலில் பாரதத்தில் நம்முடைய இராஜ்யம் மட்டும் தான் இருந்தது. நீங்கள் இவ்வாறு கூறுவீர்கள். உங்களில் கூட சிலருக்கு நாம் நமது இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டு இருக்கின்றோம் என்று நினைவிருக்கிறது. ஆன்மீக படைவீரர் களாகிய நாம் யோக பலத்தை உடையவர்கள். இதையும் மறக்கிறார்கள். நாம் மாயாவிடம் சண்டையிடக்கூடியவர்கள். இப்போது நமது இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. எவ்வளவு பாபாவை நினைக் கிறார்களோ, அவ்வளவு வெற்றியாளர் ஆவார்கள். இவ்வாறு மாறுவதே குறிக்கோளாக இருக்கிறது. இவர் மூலமாக பாபா நம்மை இந்த தேவதையாக மாற்றுகிறார். பிறகு என்ன செய்ய வேண்டும்? தந்தையை நினைவு செய்ய வேண்டும். இவர் இடைத்தரகர். தரகர் ரூபத்தில் சத்குரு கிடைத்திருக்கிறார் என்றும் பாடப்பட்டிருக்கிறது. பாபா இந்த உடலை எடுத்திருக்கின்றார் என்றால் இவர் இடையில் தரகர் ஆகிவிட்டார் அல்லவா! பிறகு உங்களுடைய யோகம் சிவபாபாவிடம் வைக்க வேண்டும். மற்றபடி நிச்சயதார்த்தம் என்ற பெயரை எடுக்காதீர்கள். சிவபாபா இவர் மூலமாக நம்முடைய ஆத்மாவை தூய்மையாக்குகின்றார். ஓ,! குழந்தைகளே! தந்தையாகிய என்னை நினையுங்கள் எனக் கூறுகின்றார். தந்தையாகிய என்னை நினையுங்கள் என நீங்கள் கூறமாட்டீர்கள். நீங்கள் பாபாவின் ஞானத்தை சொல்வீர்கள் என பாபா கூறுகின்றார். இதையும் பாபா நன்றாகப் புரிய வைக்கின்றார். இன்னும் செல்ல செல்ல பலருக்கு சாட்சாத்காரம் கிடைக்கும் போது இதயம் உள்ளுக்குள் வருந்தும். இப்பொழுது நேரம் குறைவாக இருக்கிறது என பாபா கூறுகிறார். இந்த கண்களால் நீங்கள் வினாசத்தை பார்க்கலாம். ஒத்திகை நடக்கும் போது நீங்கள் இப்படி வினாசம் நடக்கும் என பார்க்கலாம். இந்த கண்களினால் கூட நிறைய பார்ப்பீர்கள். பலருக்கு வைகுண்டத்தினுடைய சாட்சாத்காரம் கூட கிடைத்திருக்கிறது. இவையனைத்தும் வெகு விரைவாக நடந்து கொண்டேயிருக்கும். ஞானமார்க்கத்தில் அனைத்தும் உண்மை, பக்தியில் கற்பனை, சாட்சாத்காரம் மட்டும் கிடைத்திருக்கும், மாறவில்லை அல்லவா! நீங்கள் தான் மாறுகிறீர்கள். யாருக்கு சாட்சாத்காரம் கிடைத்திருக்கிறதோ, பிறகு இந்த கண்களால் பார்ப்பார்கள். அழிவைப் பார்ப்பது வெறும் சித்தி வீடு கிடையாது. நடைமுறையின் விஷயத்தை கேட்காதீர்கள். ஒருவர் மற்றொருவருக்கு முன்பு கொலை செய்கிறார்கள்; இரண்டு கரங்களினால் தான் கைதட்டல் ஏற்படும் அல்லவா! இரண்டு சகோதரர்களை தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளுங்கள் என தனியாக பிரிக்கிறார்கள். இது கூட நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த ரகசியத்தை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. இருவரை தனியாக பிரிப்பதால் சண்டையிட்டுக் கொண்டேயிருக் கின்றனர். அவர்களுக்கு வெடிகுண்டு விற்பனையாகிக் கொண்டேயிருக்கும். வருமானம் கிடைக் கிறதல்லவா? ஆனால் கடைசியில் இதனால் வேலை நடக்காது. வீட்டில் இருந்தபடியே அனுகுண்டுகளை வீசி எரிவார்கள். அவ்வளவு தான் அழிந்தது. அதில் மனிதர்களோ, ஆயுதங்களோ அவசியம் இல்லை. குழந்தைகளே! ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது என பாபா புரிய வைக்கின்றார். யார் எவ்வளவு முயற்சி செய்கிறார்களோ அவ்வளவு உயர்ந்த பதவி அடைவார்கள். நிறைய புரியவைத்திருக்கிறார்கள். இந்த காமவிகாரத்தில் ஈடுபடாதீர்கள் என பகவான் கூறுகிறார். காமத்தை வெற்றியடைவதால் உலகத்தை வென்றவர் ஆகலாம். கடைசியில் யாருக்காவது அம்பு நிச்சயம் பாயும். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. இந்த நேரம் மிகவும் மதிப்பு வாய்ந்தது. இதில் தான் முயற்சி செய்து பாபாவிடம் முழுமையாக அர்ப்பணம் ஆக வேண்டும். தெய்வீக குணங்களை கடைபிடிக்க வேண்டும். எந்த விதமான தவறும் செய்யக் கூடாது. ஒரு தந்தையின் வழிப்படி நடக்க வேண்டும்.

2. குறிக்கோளை எதிரில் வைத்து மிகவும் கவனத்தோடு செல்ல வேண்டும். ஆத்மாவை சதோபிரதானமாக தூய்மையாக மாற்றுவதற்காக முயற்சி செய்ய வேண்டும். உள்ளுக்குள் எந்த ஒரு கறை (குறைபாடு) இருந்தாலும் அவைகளை சோதித்து வெளியேற்ற வேண்டும்.

வரதானம்:
பிராமண வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் சுகமயமான ஸ்திதியை அனுபவம் செய்யக்கூடிய சம்பூரண தூய்மையான ஆத்மா ஆகுக.

தூய்மையைத் தான் சுகம், சாந்தியின் தாய் என்று கூறப்படுகிறது. எந்த விதமான தூய்மையற்ற தன்மையும் துக்கம், அசாந்தியின் அனுபவம் செய்விக்கிறது. பிராமண வாழ்க்கை என்றால் ஒவ்வொரு நொடியும் சுகமயமான ஸ்திதியில் இருப்பது. துக்கத்தின் காட்சியாகக் கூட இருக்கட்டும், ஆனால், எங்கே தூய்மையின் சக்தி உள்ளதோ, அங்கே துக்கத்தின் அனுபவம் ஏற்பட முடியாது. தூய்மையான ஆத்மாக்கள் மாஸ்டர் சுகம் கொடுப்பவராகி, துக்கத்தை ஆன்மிக சுகம் நிறைந்த வாயுமண்டலமாக மாற்றம் செய்துவிடுகின்றார்கள்.

சுலோகன்:
சாதனங்களை உபயோகம் செய்துகொண்டு இருக்கும்போதிலும் சாதனை (தவத்தை) அதிகப்படுத்துவது தான் எல்லையற்ற வைராக்கிய விருத்தி ஆகும்