16-04-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! யோகத்தின் மூலமே
ஆத்மாவின் துரு நீங்கும். பாபாவிடமிருந்து முழு சொத்தும்
கிடைக்கும். ஆகையால் எவ்வளவு முடியுமோ யோக பலத்தை அதிகரியுங்கள்.
கேள்வி:
தேவி தேவதைகளின் கர்மம்
உயர்ந்ததாக இருந்தது? இப்போது அனைவரின் கர்மமும் கீழானதாக ஏன்
மாறியிருக்கிறது?
பதில்:
ஏனென்றால் தங்களுடைய உண்மையான
தர்மத்தை மறந்து விட்டார்கள். தர்மத்தை மறந்த காரணத்தினால்
செய்யக் கூடிய கர்மங்கள் அனைத்தும் கீழானதாகி விடுகின்றன. பாபா
உங்களுக்கு தங்களின் உண்மையான தர்மத்தின் அறிமுகத்தைக்
கொடுக்கிறார். கூடவே, முழு உலகத்தின் வரலாறு, புவியியலையும்
கூறுகின்றார். அதை அனைவருக் கும் கூற வேண்டும். பாபாவின்
உண்மையான அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும்.
பாடல்:
முகத்தை பார்த்துக்கொள் மனிதா.....
ஓம் சாந்தி.
இது யார் கூறியது? யாரிடம் கூறினர்? பாபா எந்த குழந்தைகளை
அழுக்கி லிருந்து தூய்மையாக மாற்றிக் கொண்டிருக்கிறாரோ அந்த
குழந்தைகளுக்குக் கூறினார். பாரதவாசியாகிய நாம் தேவி தேவதைகளாக
இருந்தோம். அவர்களே இப்போது 84 பிறவி களின் சக்கரத்தில் சுழன்று
சதோபிரதானத்தைக் கடந்து இப்போது சதோ, ரஜோ, தமோ மற்றும்
தமோபிரதானமாக மாறியிருக் கிறார்கள். இப்போது மீண்டும் பதீதர்
களை பாவன மாக்கக் கூடிய தந்தை, உங்கள் மனதினிடம் எவ்வளவு நாம்
புண்ணிய ஆத்மாவாக மாறியிருக்கிறோம் என கேளுங்கள் என
கூறுகின்றார். நீங்கள் தமோபிரதான தூய்மையான ஆத்மாவாக
இருந்தீர்கள். அப்போது முதன் முதலில் இங்கே நீங்கள் தேவி
தேவதைகள் என்று அழைக்கப்பட்டீர்கள். அவர்களுக்கு ஆதி சனாதன தேவி
தேவதா தர்மம் சார்ந்தவர்கள் என்று கூறப்பட்டது. இப்போது எந்த
பாரதவாசியும் தன்னை தேவி தேவதா தர்மம் என்று கூற முடியாது.
இந்து என்பது தர்மம் கிடையாது. ஆனால் அழுக்காகிவிட்ட காரணத்தால்
தன்னை தேவதை என்று சொல்லிக் கொள்ள முடியவில்லை. சத்யுகத்தில்
தேவதை கள் தூய்மையாக இருந்தனர். தூய்மையான இல்லற மார்க்கம்
இருந்தது. இராஜா இராணியைப் போன்றே பிரஜைகளும் தூய்மையாக
இருந்தனர். நீங்கள் தூய்மையான இல்லற மார்க்கத்தினராக, ஆதி
சனாதன தேவி தேவதா தர்மத்தினராக இருந்தீர்கள், அதற்கு சொர்க்கம்
என்று கூறப்பட்டது என பாரதவாசிகளுக்கு பாபா
நினைவுப்படுத்துகிறார். அங்கே ஒரே யொரு தர்மம் தான் இருந்தது.
முதல் நம்பரில் மகாராஜா மகாராணியாக இலஷ்மி நாராயணன் உள்ளார்.
அவர்களுடைய வம்சம் இருந்தது. மேலும் பாரதம் மிக மிக பணக்கார
நாடாக இருந்தது. சத்யுகமாக இருந்தது. பிறகு திரேதா யுகத்திற்கு
வரும் போது தான் பூஜைக்குரிய தேவி தேவதைகள் அல்லது
சத்திரியர்கள் என கூறப்பட்டார்கள். அது இலஷ்மி நாராயணனின்
இராஜ்யம், அடுத்தது, சீதா இராமரின் இராஜ்யம். அந்த வம்சம்
நடக்கிறது. எப்படி கிறிஸ்தவர் களில் முதலாம் எட்வர்ட், இரண்டாம்......
என்று இருக்கிறதோ அவ்வாறு நடக்கிறது. அதே போன்று பாரதத்திலும்
அவ்வாறே இருந்தது. இது 5000 வருடங்களின் விஷயம் ஆகும். அதாவது
5000 வருடங்களுக்கு முன்பு பாரதத்தின் இராஜ்யம் இருந்தது. ஆனால்
அவர்கள் இந்த இராஜ்யத்தை எப்போது? எப்படி? அடைந்தனர் என்பதை
யாரும் அறியவில்லை. அதே சூரிய வம்சத்தினருடைய இராஜ்யத்தினர்
தான் பிறகு சந்திர வம்சத்தில் வந்தனர். ஏனென்றால் மறுபிறவி
எடுத்து எடுத்து ஏணிப்படியில் இறங்குகின்றனர். இந்த பாரதத்தின்
வரலாறு புவியியலை யாரும் அறியவில்லை. படைப்பவர் தந்தை எனும்
போது சத்தியுக புதிய உலகை படைத்தவர் தந்தையே, பாபா கூறுகிறார்
குழந்தைகளே, நீங்கள் இன்றைய லிருந்து 5000 வருடங்களுக்கு முன்பு
சொர்க்கம் இருந்தீர்கள், பிறது நரகத்திற்கு வந்துள்ளீர்கள்.
இந்த உலக வராலாறு யாரும் தெரிந்திருக்கவில்லை. அவர்கள் பின்னால்
வரக்கூடிய பாதி வரலாற்றை மட்டுமே அறிகிறார்கள். சத்யுகம்
திரேதாவின் வரலாறு புவியியலை யாரும் அறிய வில்லை. ரிஷிமுனிகள்
கூட நாங்கள் படைப்பவர் மற்றும் படைப்பின் முதல், இடை, கடை பற்றி
அறியவில்லை என கூறிவிட்டனர். எப்படி அறிந்துக் கொள்வார்கள்!
பாபா உங்களுக்கு வந்துப் புரிய வைக்கின்றார். சிவபாபா
பாரதத்தில் தான் தெய்வீகப் பிறவி எடுக்கிறார். அவருடையது
சிவஜெயந்தியாகும். சிவ ஜெயந்திக்குப் பிறகு கீதா ஜெயந்தி, பிறகு
கூடவே கிருஷ்ண ஜெயந்தி வர வேண்டும். ஆனால் இந்த ஜெயந்திகளின்
இரகசியத்தை பாரதவாசிகள் அறியவில்லை. சிவஜெயந்தி எப்போது
ஏற்பட்டது. மற்ற தர்மத்தைச் சார்ந்தவர் கள் புத்த ஜெயந்தி,
கிறிஸ்து ஜெயந்தி எப்போது என்று கேட்டால் உடனே தெரிவிப்பார்கள்.
பாரதவாசிகளிடம் சிவஜெயந்தி எப்போது ஏற்பட்டது என கேட்டால்
யாரும் சொல்ல மாட்டார்கள். சிவன் பாரதத்தில் வந்தார். வந்து
என்ன செய்தார்? யாருக்கும் தெரியவில்லை. சிவன் அனைத்து
ஆத்மாக்களுக்கும் தந்தை யாவார். ஆத்மா அழிவற்றதாகும். ஆத்மா ஒரு
உடலை விட்டு விட்டு இன்னொரு உடலை எடுக்கிறது. இது 84 பிறவிகளின்
சக்கரம் ஆகும். சாஸ்திரங்களிலோ 84 லட்சம் பிறவிகள் என்று
கட்டுக் கதைகளை எழுதி இருக்கிறா ர்கள். தந்தை வந்து சரியான
விஷயத்தைத் தெரிவிக்கிறார். பாபாவைத் தவிர மற்ற அனைவரும்
படைப்பவர் மற்றும் படைப்பினைப் பற்றி பொய் தான் சொல்கிறார்கள்.
ஏனென்றால் இது மாயாவின் இராஜ்யம் ஆகும். முதலில் நீங்கள் தங்க
புத்தி உள்ளவர்களாக இருந்தீர்கள். பாரதமும் தங்கக் குருவியாக
இருந்தது. தங்கம், வைரம், வைடூரியங் களின் மாளிகைகள் இருந்தது.
பாபா வந்து படைப்பவர் மற்றும் படைப்பின் முதல், இடை, கடை
இரகசியத்தை அதாவது உலகின் வரலாறு புவியியலைத் தெரிவிக்கின்றார்.
நாம் தான் முதன் முதலில் தேவி தேவதைகளாக இருந்தோம். இப்போது
அழுக்காக, ஏழையாக, தெய்வ பக்தியற்றவர் களாக மாறிவிட்டோம் என
பாரதவாசிகளுக்குத் தெரியவில்லை. தங்களுடைய தர்மத்தையும்
மறந்துவிட்டனர். இதுவும் நாடகத்தின் படி நடக்க வேண்டும். இந்த
உலகத்தின் வரலாறு புவியியல் புத்தியில் வர வேண்டும் அல்லவா?
உயர்ந்ததிலும் உயர்ந்த அனைத்து ஆத்மாக் களுக்கும் தந்தை மூல
வதனத்தில் வசிக்கின்றார். பிறகு சூட்சும வதனம். இது ஸ்தூல வதனம்
ஆகும். சூட்சும வதனத்தில் பிரம்மா, விஷ்ணு, சங்கர் மட்டுமே
இருக்கிறார்கள். அவர்களின் வரலாறு புவியியல் வேறு எதுவும் இல்லை.
இது மூன்று பாகங்களாக உள்ளது. இறைவன் ஒருவரே! அவருடைய படைப்பும்
ஒன்றே! சக்கரம் சுழன்றுக் கொண்டே இருக்கிறது. சத்யுகத்
திலிருந்து திரேதா, பிறகு துவாபர், பிறகு கலியுகத்திற்கு வர
வேண்டி யிருக்கிறது. 84 பிறவிகளின் கணக்கு இருக்கிறது அல்லவா?
அதை யாரும் அறியவில்லை. எந்த சாஸ்திரத்திலும் இல்லை. 84
பிறவிகளின் பாகத்தை குழந்தை களாகிய நீங்கள் தான் நடிக்கிறீர்கள்.
அப்பா இந்த சக்கரத்தில் வருவதில்லை. குழந்தைகள் தான்
பரிசுத்தமான நிலையிலிருந்து அழுக்கா கிறார்கள். பாபா தாங்கள்
வந்து எங்களை மீண்டும் தூய்மையாக்குங் கள் என கூவி
அழைக்கிறார்கள், அந்த. ஒருவரைத் தான் அனைவரும் அழைக்கிறார்கள்.
இராவண இராஜ்யத்தில் அனைவரும் துக்கமுடையவராகி விட்டார்கள்.
அவர்களை வந்துவிடு வியுங்கள். பிறகு இராம இராஜ்யத்திற்கு
அழைத்துச் செல்லுங்கள். அரைக் கல்பம் இராம இராஜ்யம் ஆகும்.
அரைக் கல்பம் இராவண இராஜ்யம் ஆகும். தூய்மையாக பாரதவாசிகள்
இருந்தனர். அவர்களே அழுக்காகி விட்டனர். வாம மார்க்கத்தில்
சென்றதால் அழுக்கடைய ஆரம்பித்துவிட்டனர். பக்தி மார்க்கம்
ஆரம்பம் ஆகிறது. இப்போது குழந்தைளாகிய உங்களுக்கு ஞானம்
கூறப்படுகிறது. இதன் மூலமாக அரைக் கல்பத் திற்கு 21
பிறவிகளுக்கு நீங்கள் சொர்க்கத்தின் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள்.
அரைக் கல்பம் ஞானத் தின் பிராப்தி நடக்கிறது. பிறகு இராவண
இராஜ்யம் உருவாகிறது. கீழே விழ ஆரம்பிக்கிறார்கள். நீங்கள்
தெய்வீக இராஜ்யத்தில் இருந்தீர்கள். பிறகு அசுர இராஜ்யத்தில்
வந்துள்ளீர்கள். இதனை நரகம் என்று கூறுகிறார்கள். நீங்கள்
சொர்க்கத்தில் இருந்தீர்கள். பிறகு 84 பிறவிகளைக் கடந்து
நரகத்தில் வந்து விட்டீர்கள். அது சுக உலகமாக இருந்தது. இது
துக்க உலகம் ஆகும். 100 சதவீதம் ஏழையாகி விட்டனர். 84
பிறவிகளின் சக்கரத்தில் சுழன்று அதே பாரதவாசி கள் பூஜைக்குரிய
நிலையிலிருந்து பூஜாரி ஆகிவிட்டீர்கள். இதற்குத் தான் உலகத்தின்
வரலாறு-புவியியல் என்று கூறப்படுகிறது. இது அனைத்தும்
பாரதவாசிகளாகிய உங்களின் சக்கரம் ஆகும். மற்ற தர்மத்தினர் 84
பிறவிகள் எடுப்பதில்லை. அவர்கள் சத்யுகத்தில் இருப்பதும் இல்லை.
சத்யுகம் திரேதாவில் பாரதம் மட்டுமே இருந்தது. சூரிய
வம்சத்தினர், சந்திர வம்சத்தினர், வைசிய வம்சத்தினர், சூத்திர
வம்சத்தினர்...... இப்போது மீண்டும் நீங்கள் வந்து தேவதா
வம்சத்தினராக ஆவதற்காக பிராமண வம்சத்தினர் ஆகியிருக்கிறீர்கள்
இது பாரதத்தின் வர்ணம் ஆகும். இப்போது நீங்கள் பிராமணர்கள்
ஆகியதால் சிவபாபாவிடமிருந்து ஆஸ்தியை அடைந்துக்
கொண்டிருக்கிறீர்கள். பாபா உங்களை 5000 வருடங்களுக்கு முன்பு
போலவே படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். கல்ப கல்பமாக நீங்கள்
தூய்மையாகி பிறகு அழுக்காகிறீர்கள். சுக தாமத்திற்குச் சென்று
பிறகு துக்க தாமத்தில் வருகிறீர் கள். மீண்டும்
சாந்திதாமத்திற்குச் செல்ல வேண்டும். அதற்கு நிராகார உலகம் என
கூறப்படுகிறது. ஆத்மா என்றால் என்ன, பரமாத்மா என்றால் என்ன
என்பதை எந்த மனிதரும் அறியவில்லை. ஆத்மாவும் ஒரு நட்சத்திர
புள்ளியாக இருக்கிறது. புருவ மத்தியில் நட்சத்திரம் மின்னுகிறது.
மிகச்சிறிய புள்ளி. இது தெய்வீகப் பார்வையால் பார்க்க முடியும்
என கூறுகிறார்கள். உண்மையில் நட்சத்திரம் என்று கூட கூற
முடியாது. நட்சத்திரம் மிகவும் பெரியது. மிக தொலைவில் இருந்து
பார்க்கின்ற காரணத்தால் மிகச் சிறியதாக தென்படுகிறது. இவ்வாறு
எடுத்துக்காட்டு கொடுக்கப்படுகிறது. எப்படி மேலே நட்சத்திரங்கள்
தென்படுகிறதோ அவ்வாறு ஆத்மா சிறியதாக இருக்கிறது. பாபாவின்
ஆத்மாவும் ஒரு புள்ளி போன்றதே! அவருக்கு சுப்ரீம் ஆத்மா என
கூறப்படுகிறது. அவருடைய மகிமைகள் தனியாகும். மனித சிருஷ்டியின்
சைத்தன்ய விதை ரூபமாக இருக்கும் காரணத்தால் அவருக்குள் அனைத்து
ஞானமும் இருக்கிறது. உங்களுடைய ஆத்மாவிற்கும் இப்போது ஞானம்
கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆத்மா தான் ஞானத்தை கிரகித்துக்
கொண்டிருக்கிறது. இவ்வளவு சிறிய புள்ளியில் 84 பிறவி களின்
நடிப்பு நிச்சயிக்கப் பட்டிருக்கிறது. அதுவும் அழிவற்றது. 84
பிறவிகளின் சக்கரத்தில் சுழன்றுக் கொண்டே வந்துள்ளீர்கள்.
இதற்கு முடிவு கிடையாது. தேவதைகளாக இருந்தீர் கள், அசுரர்களாகி
விட்டீர்கள். மீண்டும் தேவதையாக வேண்டும். இந்த சக்கரம் சுழன்று
கொண்டே வந்திருக் கிறது. மற்ற அனைத்தும் உப கதைகள் ஆகும்.
இஸ்லாமியர், புத்த மதத்தினர் யாரும் 84 பிறவிகள் எடுப்ப தில்லை.
இதே சத்யுக பாரதத்தில் நல்ல குணமுடைய பணக்காரர்களாக
இருந்தார்கள். பிறகு 84 பிறவிகள் எடுத்து விகாரிகளாகி விட்டனர்.
இது விகார உலகம் ஆகும். 5000 வருடங்களுக்கு முன்பு தூய்மை
இருந்தது, அமைதி இருந்தது, சுகம் கூட இருந்தது. பாபா
குழந்தைகளுக்கு நினைவுப் படுத்துகிறார். தூய்மை முக்கிமானதாகும்.
ஆகவே தான் விகாரிகளை நிர்விகாரியாக மாற்றக் கூடியவரே! வாருங்கள்,
என அழைக்கிறார்கள். அவரே சத்கதி அளிப்பவர். ஆகவே, அவரே சத்குரு
ஆவார். இப்போது நீங்கள் பாபா மூலமாக யாசிக்கும் நிலையிலிருந்து
இளவசரன் ஆகிக் கொண்டி ருக்கிறீர்கள். நரனிலிருந்து நாராயணனாக,
பெண்ணிலிருந்து (நாரி) இலஷ்மியாக மாறுகிறீர்கள். இது உங்களுடைய
இராஜ யோகம் ஆகும். இப்போது பாபா மூலமாக இராஜ்யம் கிடைக்கிறது.
ஆத்மா தான் 84 பிறவிகள் எடுக்கிறது. ஆத்மா தான் சரீரத்தின்
மூலமாகப் படிக்கிறது. சரீரம் படிப்பதில்லை. ஆத்மா சம்ஸ்காரத்தை
எடுத்துச் செல்கிறது. நான் ஆத்மா. இந்த உடல் மூலமாக கற்கிறேன்
- இதற்கு ஆத்ம உணர்வு என கூறப்படுகிறது. ஆத்மா பிரிந்துவிட்டால்
உடல் எதற்கும் பயன் படாது. இப்போது நான் புண்ணிய ஆத்மா ஆகிக்
கொண்டிருக்கிறேன் என ஆத்மா கூறுகிறது. மனிதன் தேக உணர்வில்
வந்து இதைச் செய்கிறேன்..... என கூறுகிறான். இப்போது நாம் ஆத்மா,
நம்முடைய இந்த உடல் பெரியதாக இருக்கிறது என இப்போது நீங்கள்
புரிந்துக் கொள்கிறீர்கள். பரமாத்மா தந்தை மூலமாக ஆத்மாவாகிய
நான் கற்றுக் கொண்டிருக் கிறேன். என்னை மட்டும் நினையுங்கள் என
பாபா கூறுகின்றார். நீங்கள் பொற்காலத்தில் மிக உயர்ந்த வராக
தூய்மையாக இருந்தீர்கள். பிறகு உங்களுக்குள் கலப்படம் (கறை)
ஏற்பட்டுவிட்டது. துரு ஏற ஏற நீங்கள் தூய்மையிலிருந்து
அழுக்காகிவிட்டீர்கள். இப்போது மீண்டும் தூய்மை யாக வேண்டும்.
ஓ, பதீத பாவனா வாருங்கள், வந்து எங்களை தூய்மை யாக்குங்கள் என
கூறுகின்றார்கள். ஆகவே அழுக்கான ஆத்மா தந்தையாகிய என்னை
நினைத்தால் உங்களுக் குள் இருக்கும் துரு நீங்கி விடும்,
நீங்கள் தூய்மையாகிவிடுவீர்கள் என தந்தை ஆலோசனை அளிக்கிறார்.
அதற்கு பழமை யான யோகம் என கூறப்படுகிறது. இந்த நினைவு என்றால்
யோக அக்னியினால் துரு எரிந்து போகிறது. முக்கியமான விஷயம்
அழுக்கிலிருந்து தூய்மை யாவதாகும். சாது, சன்னியாசி அனைவரும்
அழுக்காக இருக்கிறார்கள். என்னை மட்டும் நினையுங்கள் என்று
தூய்மை யாவதற்கான வழியை பாபா தான் தெரிவிக்கிறார். இந்த கடைசி
பிறவியில் தூய்மையாகுங்கள், உண்டாலும், அருந்தினாலும்,
நடந்தாலும், போனாலும் வந்தாலும் என்னை மட்டுமே நினையுங்கள்.
ஏனென்றால், ஆத்மாக்களாகிய உங்கள் அனைவருக்கும் (மணப்பெண்கள்)
மணவாளன் நானே! உங்களை நான் தூய்மையாக மாற்றியிருந்தேன். பிறகு
அழுக்காகிவிட்டீர்கள். அனைத்து பக்தர் களும் மணப்பெண்களே,
செயல்களைக் கூட செய்யுங்கள் என மணவாளன் கூறுகிறார். புத்தியில்
என்னை நினைத்துக் கொண்டே இருந்தால் விகர்மங்கள் அழியும். இதுவே
கடின முயற்சி ஆகும். எனவே சொத்து அடைவதற்கு தந்தையை நினைக்க
வேண்டும் அல்லவா? யார் அதிகமாக நினைக்கிறார்களோ அவர்களுக்கு
ஆஸ்தியும் அதிகமாக கிடைக்கும். இது நினைவு யாத்திரை ஆகும். யார்
அதிகமாக நினைக் கிறார்களோ அவர்களே தூய்மையாகி என்னுடைய
கழுத்தின் மாலையாவார்கள். அனைத்து ஆத்மாக்களுக்கும் நிராகார
உலகில் ஒரு மலர்ச்செண்டு போல உருவாக்கப் பட்டிருக்கிறது. அதற்கு
நிராகார மரம் என கூறப்படுகிறது. இது ஸ்தூல மரம் ஆகும். நிராகார
உலகத்தி-ருந்து அனைவரும் வரிசைக்கிரமத்தில் வர வேண்டும்.
வந்துக் கொண்டே இருக்க வேண்டும். ஆத்மா இங்கே நடிப்பதற்காக
வருகிறது. அனைத்து அத்மாக்களும் இந்த நாடகத்தின் நடிகர்கள்
ஆவார். ஆத்மா அழிவற்றது. அதில் அழிவற்ற பாகம் நிரம்பி
இருக்கிறது. எப்போது நாடகம் உருவாக்கப்பட்டது. இதை யாரும் கூற
முடியாது. இது போய்க் கொண்டே இருக்கிறது. பாரதவாசி முதன்
முதலில் சுகத்தில் இருந்தனர். பிறகு துக்கத்தில் வந்தனர். பிறகு
சாந்தி தாமத்திற்குப் போக வேண்டும். பிறகு பாபா சுக தாமத்திற்கு
அனுப்பிவிடுவார். அதில் யார் எவ்வளவு முயற்சி செய்கிறார் களோ
அதற்கு ஏற்ப உயர்ந்த பதவி அடையலாம். பாபா இராஜ்யத்தை
உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அதில் முயற்சிக்கு ஏற்ப
இராஜ்யத்தில் பதவி பெறலாம். சத்யுகத்தில் நிச்சயம் மிகக்
குறைந்த மனிதர்களே இருப்பார்கள். ஆதி சனாதன தேவி தேவதா
தர்மத்தின் மரம் சிறியது. மற்ற அனைத்தும் அழிந்து போகும். இந்த
சனாதன தேவி தேவதா தர்மம் உருவாகிக் கொண்டிருக்கிறது என்றால்
சொர்க்கத்தின் வாயில் திறந்துக் கொண்டி ருக்கின்றது. 5000
வருடங்களுக்கு முன்பும் இந்த போருக்கு பின்பு சொர்க்கம்
உருவாகியது. பல தர்மங்கள் அழிந்துவிட்டது. இந்த போருக்கு நன்மை
நடக்கும் போர் என்று கூறப்படுகிறது இப்போது நரகத்தின் வாயில்
திறந்து இருக்கின்றது. பிறகு சொர்க்கத்தின் வாயில் திறக்கும்.
சொர்க்கத்தின் வாயிலை பாபா திறக்கிறார். நரகத்தின் வாயிலை
இராவணன் திறக்கிறான். அப்பா ஆஸ்தியை கொடுக்கின்றார். இராவணன்
சாபம் கொடுக்கிறான். இந்த விஷயங்களை உலகம் அறியவில்லை.
குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைக்கிறேன். கல்வி அமைச்சர்
கூட எல்லையற்ற ஞானத்தை விரும்புகிறார். அதை நீங்கள் தான்
கொடுக்க முடியும். ஆனால் நீங்கள் குப்தமாக (மறைவாக)
இருக்கிறீர்கள். உங்களை அறிந்துக் கொள்ள வில்லை. நீங்கள் யோக
சக்தி யினால் உங்களின் இராஜ்யத்தை உருவாக்கிக் கொண்டி
ருக்கிறீர்கள். இலஷ்மி நாராயணன் இந்த இராஜ்யத்தை எப்படி
அடைந்தார் என்பதை நீங்கள் அறிகிறீர்கள். இதற்கு மிக உயர்ந்த
நன்மை நடக்கக்கூடிய யுகம் என கூறப்படுகிறது. அப்போது தான் பாபா
வந்து தூய்மை யாக்குகிறார். கிருஷ்ணரை அனைவருக்கும் தந்தை என
கூற முடியாது. தந்தைக்கு நிராகாரர் என கூறப்படு கிறது. அந்த
தந்தையை நினைக்க வேண்டும். தூய்மையாக வேண்டும். நிச்சயம்
விகாரங்களை விட வேண்டும். பாரதம் விகாரம் அற்ற சுக உலகமாக
இருந்தது. இப்போது விகாரியாக துக்க உலகமாக இருக்கிறது. ஒரு
பைசாவிற்கும் மதிப் பில்லை. இது நாடகத்தின் விளையாட்டாகும். இதை
புத்தியில் கடைப்பிடித்து மற்றவர்களையும் கடைபிடிக்க வைக்க
வேண்டும். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக்
கண்டெடுக்கப்பட்ட செல்லமானக் குழந்தைகளுக்கு தாயும்
தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை
வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. நினைவின் மூலம் தூய்மையாகி பாபாவின் கழுத்து மாலையாக
வேண்டும். கர்மங்களைச் செய்துக் கொண்டே பாபாவின் நினைவில்
இருந்து விகர்மங்களை வென்றவர் ஆக வேண்டும்.
2. புண்ணிய ஆத்மா ஆவதற்காக முழுமையாக முயற்சி செய்ய வேண்டும்.
தேக உணர்வை விட்டு விட்டு ஆத்ம உணர்வுடையவராக மாற வேண்டும்.
வரதானம்:
தனது புத்தி எனும் நேத்திரத்தை (கண்ணை) தெளிவாகவும், கவனமாகவும்
வைத்துக்கொள்ளக்கூடிய மாஸ்டர் ஞானம் நிறைந்தவர் மற்றும் சத்தி
நிறைந்தவர் ஆகுக.
ஜோதிடர்கள் தங்களின் ஜோதிட அறிவின் மூலம் கிரகங்களின் நிலையைக்
கொண்டு - வரவிருக்கும் ஆபத்துகளை அறிந்து கொள்கிறார்கள்;
அதுபோலவே குழந்தைகளாகிய நீங்களும் மாயையினால் வரவிருக்கும்
தேர்வுகளை (பேப்பர்ஸ்) முன்கூட்டியே உணர்ந்து, அவற்றில் பாஸ்
வித் ஆனர் (சிறப்புடன் தேர்ச்சி) பெறுவதற்கு உங்கள் புத்தி
எனும் கண்ணைத் தெளிவாக வைத்துக்கொள்ளுங்கள் மற்றும் கவனமாக
இருங்கள். ஒவ்வொரு நாளும் நினைவின் சக்தி அல்லது அமைதியின்
சக்தியை அதிகரித்துக் கொண்டால், இன்று என்ன நடக்கப்போகிறது
என்பது உங்களுக்கு முன்கூட்டியே தெரியவரும். மாஸ்டர் ஞானம்
நிறைந்தவர் மற்றும் சத்தி நிறைந்தவர் ஆகுங்கள், அப்போது
ஒருபோதும் தோல்வி அடைய மாட்டீர்கள்.
சுலோகன்:
தூய்மை தான் புதுமையாகும், அதுவே ஞானத்தின் அஸ்திவாரமும் ஆகும்.
அவ்யக்த சமிக்கை: மகான் ஆகுவதற்கு மதுரதா (இனிமை) மற்றும்
பணிவு என்ற குணங்களை தாரணை செய்யுங்கள்.
குழந்தைகளாகிய உங்கள் நடத்தையில் - இனிமை தன்மையும், மனதில் -
எல்லையற்ற வைராக்கிய உணர்வும் இருக்கட்டும். இவை இரண்டும்
நினைவில் இருந்தால் நீங்கள் பாஸ் வித் ஆனர்ஸ் (சிறப்புடன்
தேர்ச்சி பெற்றவர்) ஆகிவிடுவீர்கள். இனிமை மற்றும் பணிவு எனும்
இந்த இரண்டு விசேஷ தாரணைகள் மூலம் எப்பொழுதும்- விஷ்வ கல்யாண
காரி, மகாதானி மற்றும் வரதானி ஆகி விடுவீர்கள் மேலும் மிக
எளிதாக அன்பிற்கான (பாபா மீது கொண்ட அன்பிற்கான) ஆதாரத்தை
கொடுக்க முடியும்.
|
|
|
|