16.08.26 காலை முரளி
ஓம் சாந்தி 16.03.2011 பாப்தாதா,
மதுபன்
"மனதின் மூலமாக இயற்கையை சதோகுணியாக (அதாவது தூய்மையாக,
தெய்வீக நிலை கொண்டதாக) ஆக்குவதற்கான சேவையை செய்யுங்கள்; சுப
பாவனா (சுபமான உணர்வு), சுப காம்னா (சுபமான ஆசைகளைக்) கொண்டு
சம்ஸ்காரங்களை ஒருங்கிணைக்கும் (அனைவருடனும் இணக்கமாக செல்லும்)
நடனத்தை ஆடுங்கள்"
மிகவும் புனிதமான (ஹோலியஸ்ட்) தந்தை இன்று தனது குழந்தைகளுடன்
ஹோலி கொண்டாட வந்துள்ளார். நீங்கள் அனைவரும் கூட ஹோலி கொண்டாட
வந்துள்ளீர்கள். நான்கு திசைகளிலும் வெகு தொலைவில்
அமர்ந்திருக்கும் குழந்தைகளும் கூட தூரத்திலிருந்தபடியே ஹோலி
கொண்டாட அமர்ந்திருக்கின்றீர்கள். நீங்கள் அனைவரும் எந்த
வண்ணத்தில் ஹோலி கொண்டாட வந்துள்ளீர்கள்? எல்லாவற்றையும் விட
உயர்ந்த வண்ணம் பரமாத்மாவின் சங்கத்தின் (தொடர்பின்) வண்ணமாகும்
என்பது உங்களுக்குத் தெரியும். இந்த வண்ணம் (இறைவனின் நினை
வலைகள் என்னும் வண்ணம்) எப்போதும் நம்மை மிக உயர்ந்தவரிலும்
உயர்ந்தவராக மாற்றக்கூடியது. தந்தை எப்படி மிக உயர்ந்தவரோ,
அதேபோல இந்த பரமாத்மாவின் தொடர்பு நம்மை உயர்ந்தவராக
மாற்றுகின்றது.
ஒவ்வொரு குழந்தையினுடைய நெற்றியிலும் அதிர்ஷ்ட நட்சத்திரம்
பிரகாசிப்பதை தந்தை பார்த்துக் கொண்டிருக் கின்றார். இந்த
அதிர்ஷ்ட நட்சத்திரத்தை முழு கல்பத்திலும் - அதிர்ஷ்டசாலிக்
குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு யாரும் பெற முடியாது. அந்த
உயர்ந்த அதிர்ஷ்டம் என்னவென்றால்-குழந்தைகளாகிய நீங்கள் தான் 'இரட்டை
பவித்ரதாரி யாக (புனிதமானவர்களாக)' ஆகுகின்றீர்கள். உலகத்தில்
தர்ம ஆத்மாக்கள் இருக்கின்றார்கள், ஆனால் அவர்கள் உடல்
ரீதியாகத் தூய்மையாகுவது இல்லை. எதிர்காலத்தில் பிராமண
ஆத்மாக்களாகிய உங்களுடைய ஆத்மாவும் தூய்மை ஆகுகின்றது, உடலும்
தூய்மை ஆகு கின்றது. இதன் அடையாளமாக இரட்டைப் பவித்ரதா விற்குப்
பரிசாக இரட்டை மகுடம் கிடைக் கின்றது. முழு கல்பத்திலும் இந்தச்
சங்கம யுகத்தில் மட்டுமே தந்தையின் தொடர்பின் வண்ணத்தால்
நீங்கள் இரட்டைப் பவித்ரதாரியாக, கிரீடதாரியாக ஆகுகின்றீர்கள்.
சங்கம யுகத்தில் ஏற்படும் பரமாத்ம தொடர்பு நம்மை இரட்டைப்
பவித்ரதாரியாக ஆக்கி விடுகின்றது. எனவே நீங்கள் ஹோலி தந்தையுடன்
இணைந்திருப்பதன் மூலம், அவரைத் தங்களுடன் இணைந்தவராக ஆக்கிக்
கொள்வதன் மூலம் இரட்டைப் பவித்ரதாரியாக ஆகி விடுகின்றீர்கள்.
சதா உள்ளத்தில் தந்தையின் தொடர்பு இருக்கின்றது; இந்தத் தொடர்பு
எவ்வளவு உயர்ந்தது என்றால், இது நம்மை அவ்வளவு உன்னதமானவர்களாக
மாற்றிவிடுகின்றது! உலக மக்கள் ஸ்தூலமான வண்ணங்களால் ஹோலி
கொண்டாடுகின்றார்கள், ஆனால் நீங்களோ தந்தையின் தொடர்பின்
வண்ணத்தால் புனிதமாக (ஹோலியாக) மாறிவிடுகின்றீர்கள்; அதுவும்
இரட்டை ஹோலி. எனவே உங்களுடைய இந்த ஹோலி உலகத்திற்கு
அப்பாற்பட்டது மற்றும் பரமாத்மா விற்குப் பிரியமானது. எனவே, நஷா
இருக்கின்றது தானே அதாவது
நம்முடைய இந்த ஆன்மீக ஹோலி, இறை தொடர்பின் வண்ணம் காரணமாக அரை
கல்ப காலத்திற்கு நம்மை அவ்வளவு தூய்மையானவர்களாக ஆக்குகின்றது,
அதாவது இப்போதும் கூட உங்களுடைய சித்திரங்கள் (விக்கிரகங்கள்)
விதிமுறைகளின் படி வணங்கப்படுகின்றன என்ற போதை (நஷா) உங்களுக்கு
இருக்கின்றது தானே! வேறு யாருடைய சித்திரங்களும் இவ்வளவு
பக்திப் பூர்வமாக வணங்கப்படுவதில்லை. நீங்கள் உங்களுடைய சொந்த
சித்திரங் களையே பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள்.
மற்றவர்களும் வணங்கப்படுகின்றார்கள், ஆனால் இவ்வளவு நீண்ட
காலத்திற்கு, இவ்வளவு விதிமுறைகளுடனும் வழிபாடு நடப்பதில்லை.
ீங்கள் எப்போதும் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும்
இருக்கின்றீர்கள், இருக்கின்றீர்கள் தானே! ஊக்கம் உற்சாகத்தில்
இருக்கின்றீர்கள் தானே? கைகளை உயர்த்துங்கள். அவ்வபோதா அல்லது
எப்போதும் இருக்கின்றீர்களா? "நாங்கள் எப்போதும் ஊக்கம்
உற்சாகத்தில் இருக்கின்றோம், மற்றவர்களுக்கும் ஊக்கம்
உற்சாகத்தை ஏற்படுத்து கின்றோம்" என்று கூறுபவர்கள் கைகளை
உயர்த்துங்கள். அவ்வபோது அல்ல, எப்போதும்! 'எப்போதும்' என்ற
வார்த்தைக்கு அடிக் கோடிட்டுக் கொள்கின்றீர்கள் தானே! ஆனால்
உங்களுடைய நினைவுச் சின்னங்கள்-அதாவது உங்களுடைய மனோ நிலை
என்னவாக இருந்ததோ, அதையே நினைவு சின்னமாக உங்களுடைய பக்தர்கள்
ஒரு திருவிழா ரூபத்தில் கொண்டாடுகின்றார்கள். நீங்கள் இறைவனின்
தொடர்பினுடைய வண்ணத்தைப் பூசிக் கொண்டீர்கள், அவர்களும் வண்ணம்
பூசுகின்றார்கள்; ஆனால் அவர்கள் உடல் உணர்வில் இருப்பதால்
ஸ்தூலமான வண்ணத்தைப் பூசிவிடுகின்றார்கள். அவர்கள் (உலக மக்கள்)
கொண்டாடும் வண்ணங்களில் செலவும் அதிகம், அதன் முடிவோ சிலருக்கு
நன்றாக இருக்கும், சிலருக்கு நன்றாக இருக்காது; இப்படித்தான்
கொண்டாடுகின்றார்கள். ஆனால், உங்களுடைய ஊக்கம் உற்சாகத்தின்
நினைவுச் சின்னமாகத் திருவிழாக்கள் நிச்சயமாகக் கொண்டாடப்படு
கின்றன. நீங்கள் பரமாத்மாவிற்கு உரியவராக ஆகுவதற்காக, முதலில்
உங்களுடைய பழைய சம்ஸ்காரங்களை எரிக்கின்றீர்கள்; பிறகு இறை
தொடர்பின் வண்ணம் பூசிக்கொண்டு எப்போதும் கொண்டாடியபடி
இருக்கின்றீர்கள். அவர்களும் கூட முதலில் எரிக்கின்றார்கள்,
பிறகு கொண்டாடுகின்றார்கள்; ஆனால் நீங்கள் கொண்டாடு வதற்கும்
அவர்கள் கொண்டாடுவதற்கும் இடையே இரவு பகலுக்குரிய வித்தியாசம்
உள்ளது. அவர்கள் உடல் உணர்வில் இருக்கின்றார்கள், நீங்களோ ஆத்ம
அபிமானியாக இருக்கின்றீர்கள். அவர்கள் தேக உணர்வில்
இருக்கின்றார்கள், நீங்கள் ஆத்மீக உணர்வில் இருக்கின்றீர்கள்.
உங்களுக்கு பாப்தாதாவின் கட்டளை என்னவென்றால்-ஹோலி என்றால்
கடந்தவை கடந்ததே (முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும்).
அவர்களும் "ஹோலி" (நடந்து முடிந்தது) என்று வாயளவில்
கூறுகின்றார்கள், ஆனால் அதன் அர்த்தத்தை நடைமுறைக்குக் கொண்டு
வர முடிவதில்லை. நீங்கள் அனைவரும் ஹோலி, அதாவது கடந்தவை கடந்ததே
என்று செய் கின்றீர்கள் தானே! செய்கின்றீர்கள் தானே! அல்லது
அவ்வபோது செய்கின்றீர்களா? ஏனெனில், கடந்து போனவற்றை நினைவு
கூர்வதால் வீணான சங்கல்பங்கள் அதிகம் ஓடுகின்றன. காலமும்
வீணாகுகின்றது. நீண்ட காலத்து பழைய சம்ஸ்காரங்கள் நீங்கள்
விரும்பா விட்டாலும் செயல்படத் தொடங்கும் போது... இந்தச் சங்கம
யுகத்தின் ஒவ்வொரு நிமிடமும், இந்த ஒரு பிறவியில் உங்களுக்கு
21 பிறவிகளுக்கான பாக்கியத்தை உருவாக்குகின்றது; அப்படியென்றால்
ஒவ்வொரு சங்கல்பமும், ஒவ்வொரு நிமிடமும் எவ்வளவு மதிப்புமிக்கது!
ஒரு நொடி வீணாகப் போனாலும் கூட, அநேக பிறவிகளின் பாக்கியத்தில்
வித்தியாசம் ஏற்பட்டு விடுகின்றது.
சங்கம யுகத்தின் நேரத்தையும் சங்கல்பத்தையும் ஒருபோதும்
வீணாக்கக் கூடாது என்று பாப்தாதா முன்பே கூறியுள்ளார். நீங்கள்
எப்போதும் இறைவனின் வண்ணத்தில் மூழ்கி யிருந்தால்-அதாவது
தந்தையை எப்போதும் உங்களது தோழனாக ஆக்கிக் கொண்டிருந்தால்,
சங்கம யுகத்தின் ஒவ்வொரு சங்கல்பத்தையும் மற்றும் நேரத்தையும்,
அதாவது ஒவ்வொரு நிமிடத்தையும் உங்களால் வெற்றிகரமாக்க முடியும்.
எனவே, உங்களுடைய ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு சங்கல்பமும்
வெற்றிகரமாகின்றதா அல்லது வீணாகப் போகின்றதா என்று உங்களை
நீங்களே பரிசோதித்துப் பாருங்கள். ஏனெனில், இது வெறும் ஒரு
நிமிடம் அல்ல-ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒவ்வொரு
சங்கல்பத்திற்கும் 21 பிறவிகளுடன் தொடர்பு உள்ளது. அவ்வளவு
மதிப்பு இதற்கு உண்டு.
எனவே, இந்த அளவு (நேரத்தின் மீது, சங்கல்பத்தின் மீது) மதிப்பு
எப்போதும் உங்களுக்குள் இருக்கின்றதா என்று உங்கள் இதயத்தில்
சிந்தித்துப் பாருங்கள்! இந்தச் சங்கமத்தின் நேரத்திற்காக, "இப்போது
இல்லை என்றால், எப்போதும் இல்லை" என்று கூறப்பட்டுள்ளது. இந்த
அளவு மதிப்பு எப்போதும் உங்களுடைய நினைவில் இருக்க வேண்டும்.
அப்படியென்றால் நீங்கள் அனைவரும் இன்று ஹோலி
கொண்டாடினீர்கள்-அதாவது எப்போதும் தந்தையின் தொடர்பின்
வண்ணத்தைப் பூசிக் கொண்டீர்கள். எனவே நாள் முழுவதும், "தந்தையின்
வண்ணம் பூசியபடியே இருந்ததா? பரமாத்ம தொடர்பிலேயே இருந்தோமா
அல்லது வேறு எங்காவது நேரமும் சங்கல்பமும் வீணாகச் சென்றதா?"
என்று பரிசோதித்தீர்களா? பரிசோதித்தீர்களா? தலை அசைத்துச்
சொல்லுங்கள், கைகளை உயர்த்த வேண்டாம், இப்படித் தலை அசைத்துக்
காட்டுங்கள்.
பாப்தாதா எப்போதும் இதையே சமிஞையாக (வழிகாட்டுதலாக)
வழங்குகின்றார்-தங்களுடைய மனதின் சுபமான சதோகுணி (தூய்மையான,
தெய்வீக நிலை கொண்ட) சங்கல்பங்களின் மூலமாக இயற்கையையும்
சதோகுணியாக (தூய்மையான, தெய்வீக நிலை கொண்டதாக) ஆக்கிக் கொண்டே
இருங்கள். எனவே அந்த மனசா சேவை நினைவிருக்கின்றதா? ஏனெனில்,
தற்போது இயற்கை பெரிய அளவில் தன் காரியத்தைச் செய்யப் போகின்றது.
இதுவோ ஒர் சிறிய விஷயம்தான்(பாப்தாதா அப்போது ஏற்பட்ட ஓர்
இயற்கை சீற்ற நிகழ்வை குறிப்பிடு கின்றார்), ஆனால் இயற்கையை
மனித ஆத்மாக்கள் தொந்தரவு செய்கின்றார்கள் என்றால், அதுவும் (பதிலுக்கு
மனிதர்களை) தொந்தரவு செய்யத் தொடங்கிவிடுகின்றது; எனவே தந்தை
கூறுகின்றார்- மாயையை வென்றவராக (மாயாஜீத்) ஆகுவதற்கு எப்படி
கவனம் செலுத்து கின்றீர்களோ (அப்படி இயற்கையையும் வெல்ல
வேண்டும்), கவனம் செலுத்துகின்றீர்கள் தானே!
மாயையிடம் ஒர் ஒப்பந்தம் (வாக்குறுதி) செய்துள்ளீர்கள்-அதாவது
"உன்னுடைய வேலை வருவது, எங்களுடைய வேலை வெற்றி பெறுவது."
அனைவரும் இந்த ஒப்பந்தத்தைச் செய்திருக்கின்றீர்கள் தானே?
செய்திருக்கின்றீர்களா? மாயையை வென்றவராக (மாயாஜீத்) ஆக
வேண்டும் தானே! இதேபோல இயற்கையை வென்றவராகவும் (பிரகிருதி ஜீத்)
ஆக வேண்டும், ஏனெனில் நீங்கள் ஆட்சி செய்ய வேண்டும் தானே.
உங்களுடைய ராஜ்யம் வந்து கொண்டி ருக்கின்றது தானே! அந்த நஷா
இருக்கின்றது தானே! உலக மக்களோ பாவம் "என்ன ஆகுமோ" என்று
யோசித்து பயப்படுகின்றார்கள். ஆனால் உங்களுக்குத்
தெரியும்-இப்போது சங்கம யுகத்தின் அமிர்தவேளை நடந்து கொண்டி
ருக்கிறது. அப்படியென்றால் அமிர்தவேளைக்குப் பிறகு என்ன வரும்?
விடியற்காலை, அந்த விடியற்காலையில் தான் நம்முடைய ராஜ்யம்
வரவிருக்கின்றது. அந்த நஷா இருக்கின்றதா! இது நம்முடைய ராஜ்யமா
அல்லது வெறும் மகாரதிகளுக்கு (முன்னோடி குழந்தைகளுக்கு)
மட்டுமான ராஜ்யமா? இது உங்கள் அனைவருடைய ராஜ்யம். என்ன நடக்குமோ
என்று உங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. நல்லதிலும் நல்லதாகவே
நடக்கும். அப்படியென்றால் உங்களுடைய ராஜ்யத்தில் இயற்கையும்
கூட சதோபிரதானமாக (மிகவும் தூய்மையானதாக) இருக்க வேண்டும்.
அப்படியென்றால் இயற்கையை தமோகுணியிலிருந்து சதோகுணியாக யார்
மாற்றுவார்கள்? அல்லது இயற்கை எப்படி இருந்தாலும் பரவாயில்லை
என்று நடந்துவிடுமா? உங்களுடைய ராஜ்யத்தில் அப்படி நடக்குமா?
நடக்குமா? 'ஆம்' என்று சொல்லுங்கள் அல்லது 'இல்லை' என்று
சொல்லுங்கள். நடக்காது தானே! அப்படியென்றால் இயற்கையை
சதோகுணியாக யார் மாற்றுவார்கள்? நீங்கள்தானே மாற்றுவீர்கள்!
எனவே இப்போது திடீரென்று நடந்த முதல் காட்சி (அதாவது அந்த
காலகட்டத்தில் நடந்த ஓர் இயற்கை சீற்றத்தை பாப்தாதா
குறிப்பிடுகின்றார்), இது ஓர் சிறிய காட்சி தான், இது ஆரம்பம்
தான். இன்னும் பெரிய பெரிய காட்சிகள் (இயற்கை சீற்றங்கள்)
வரவிருக்கின்றன, அவை திடீரென்றுதான் வரப்போகின்றன. எதை நாம்
கற்பனை கூட செய்து பார்க்க வில்லையோ, அதுதான் நடக்கப் போகின்றது.
பாப்தாதா நீண்ட காலமாகவே இந்த 'திடீரென்று' நடப்பதற்கான
பாடத்தைக் கற்பித்து வருகின்றார். ஆனால் இப்போது அதை
பிரத்யேகமாக (நேரடியாகக்) கண்டு, உங்களுடைய காரியத்தைத்
தொடங்குங்கள். பயந்து விடாதீர்கள். ஓர் கதை ஒன்று சொல்வார்கள்
- அதாவது நாலாபுறமும் தீப்பற்றி எரிந்த போதும் பரமாத்மாவின்
குழந்தைகள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்று. அப்படியென்றால்
இப்போதும் கூட குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கின்றார்கள் தானே!
தேர்வுகள் வரத்தான் செய்யும், ஆனால் உங்களுக்கு இரட்டை வேலை
இருக்கின்றது. ஒன்று, அச்சமற்றவராக மாறி அதை எதிர்கொள்ளுங்கள்;
இரண்டாவது, உங்களுடைய பக்தர்கள் மற்றும் உங்களுடைய துக்கப்படும்
சகோதர-சகோதரிகளுக்கு யார் சேவை செய்வார்கள்? நீங்கள் இறை
தொடர்பின் வண்ணத்தில் மூழ்கியிருக்கின்றீர்கள், எனவே பரமாத்ம
தொடர்பின் வண்ணத்தின் மூலம் நீங்கள் எதைப் பெற்றீர்களோ, அதை
உங்களுடைய சகோதர- சகோதரிகளுக்கும் பக்தர்களுக்கும் மிகுந்த
அன்போடு இதயப்பூர்வமாகப் பகிர்ந்தளியுங்கள். துக்கப்படும்
நேரத்தில் யார் நினைவுக்கு வருவார்கள்? அவர்கள் புரிந்து
கொண்டாலும் சரி, புரிந்து கொள்ளாவிட்டாலும் சரி, சூழ்நிலையின்
கட்டாயத்தின் பேரில் "ஹே தந்தையே, ஹே பரமாத்மா" என்று
நிச்சயமாகக் கூறுவார்கள். எனவே பரமாத்மக் குழந்தைகளாகிய நீங்கள்
இப்போது துக்கப்படுபவர்களுக்கு ஆதரவாக ஆக வேண்டும். அவர்களுக்கு
உங்களுடைய சுப பாவனா, சுப காம்னா மூலமாகவும், தந்தை மூலமாகக்
கிடைத்த (சக்தியின்) கிரணங்கள் மூலமாகவும் ஆதரவாக ஆகுங்கள்.
எப்படியிருந்தாலும் அவர்கள் உங்களுடைய குடும்பம்தானே!
அப்படியென்றால் குடும்பத்தில் ஒருவருக் கொருவர் ஒத்துழைப்பு
கொடுக்கின்றோம் தானே! அதனால்தான் இதற்கு 'சஹ யோகம்' அல்லது 'ஸ்ரேஷ்ட
யோகம்' என்று பெயர். அதுவே (மனசா சேவையே) ஆதரவு அளிப்பதற்கான
சாதனமாகும். செய்தியும் அனுப்பப் பட்டிருந்தது - அதாவது நேரத்தை
உங்களுக்கென்று நிர்ணயம் செய்யுங்கள்(அதாவது குறிப்பிட்ட
நேரத்தை மனசா சேவைக்கு ஒதுக்குங்கள்) அதுவாகவே நடந்துவிடாது.
டிராபிக் கன்ட்ரோல், அமிர்தவேளை போன்றவை நிச்சயமாக
இருக்கும்போது செய்கின்றீர்கள் தானே! அதேபோல உங்களுடைய இந்த
மனசா சேவையும் தற்போதைய காலத்தின் தேவைக்கேற்ப மிகவும்
அவசியமானதாகும். எனவே நேரம் ஒதுக்குங்கள், கருணை உள்ளம்
கொண்டவராக ஆகுங்கள். உலகிற்கு நன்மை செய்பவராக (கல்யாணகாரி)
ஆகுங்கள். உங்களுடைய சுவமான் (சுயமரியாதை) என்ன? விஸ்வ
கல்யாணகாரி (உலகிற்கு நன்மை செய்பவர்). அப்படியென்றால்
உங்களுக்குள் கருணை வருகின்றதா? அல்லது அதுவாகவே நடந்துவிடுமா?
இதில் அலட்சியமாக இருக்க வேண்டாம்; ஏனெனில், நீங்கள் யாருக்கு
ஆன்மீக ஒளியை (சக்தியை) வழங்குகின்றீர்களோ, அவர்களே உங்களுடைய
பக்தர்களாக ஆகுவார்கள். எனவே என்ன செய்ய வேண்டும்? கவனம் இருக்
கின்றதா? "என்னுடைய கவனம் இருக்கின்றது, அது இன்னும்
அதிகரிக்கும்" என்று நினைப் பவர்கள் கைகளை உயர்த்துங்கள்.
கைகளை மேலும் கீழும் அசைக்கின்றீர்கள். பாபா இங்கு (டி.வி.யில்)
பார்த்துக் கொண்டு இருக் கின்றார். இத்தனை பேரும் தங்களுடைய
சுவமானத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தால், ஆத்மாக்கள் இப்போதும்
கூட சங்கம யுகத்தில் உங்களுக்காக இதயப்பூர்வமாக, "ஆஹா பரமாத்மக்
குழந்தைகளே ஆஹா! எங்களுக்கு ஆதரவு அளித்தீர்கள்" என்று பாடல்
பாடுவார்கள். இப்போது அளிக்கப்படும் இந்த ஆதரவு அரை கல்ப
காலத்திற்கு உங்களுக்காக பாடல் பாடிக் கொண்டே இருப்பார்கள்.
நீங்கள் அவர்களுக்கு முன்னோடிகள் (பூர்வஜ்) ஆகிவிடுவீர்கள்.
நீங்கள் பூர்வஜ். கல்ப விருட்ச மரத்தில் பிராமணர்கள் எங்கு
அமர்ந்திருக்கின்றீர்கள்? கீழே அமர்ந்திருக்கின்றீர்கள் தானே!
அப்படியென்றால் நீங்கள் பூர்வஜ் தானே! பக்தர்களின் குரல்
உங்களுக்குக் கேட்கின்றதா? உங்களை சற்றே விழிப்புணர்வுடன்
ஆக்கிக் கொள்ளுங்கள்; துக்கப்படுபவர்களுக்கு ஆதரவாக
மாறினால்தான் அந்தக் குரல் உங்களுக்குக் கேட்கும்.
அப்படியென்றால் அனைவரும் ஹோலி கொண்டாடினீர்கள்; உங்களுடைய முழு
சங்கம யுகமுமே ஹோலி தான். எப்போதும் பரமாத்ம தொடர்பின்
வண்ணத்திலேயே இருக்கின்றீர்கள். உலக மக்கள் ஒன்று அல்லது இரண்டு
நாட்கள் நினைவுச் சின்னமாகத் திருவிழா கொண்டாடு கின்றார்கள்,
ஆனால் நீங்களோ முழு சங்கம யுகமும் இறைவனின் தொடர்பில்
வாழ்பவர்கள். அந்த நஷா இருக்கின்றது தானே! உலக மக்கள் பாவம், "இறைவா
இதைச் செய்து கொடு, அதைச் செய்து கொடு" என்று கேட்டுக்கொண்டே
இருக்கின்றார்கள்; ஆனால் உங்களுக்கோ 21 பிறவிகளுக்கான
உத்தரவாதம் கிடைத்துள்ளது. ஒருபோதும் சொப்பனத்தில் கூட
துக்கத்தின் எந்தவொரு காட்சியும் வராது. எண்ணத்தில் கூட
துக்கத்தின் அலை எழாது. எனவே, சதா ஒவ்வொருவரும் தங்களுடைய
ராஜ்ஜியத்தை ஒருவேளை பெற விரும்பினால், இப்போது தங்களுடைய
சத்யுக பரிவாரமான தோழர்களை மேலும் கௌரவமான பிரஜைகளை (ராயல்
பிரஜாக்களை), சாதாரண பிரஜைகளை இப்போதே உருவாக்கிக் கொள்ள
முடியும். 21 பிறவி களுக்கான உத்தரவாதம் இருக்கின்றது. சற்றே (கொஞ்சம்)
சேவை செய்யுங்கள், நேரம் ஒதுக் குங்கள்; ஏனெனில் உங்களிடம்
சங்கல்ப சக்தி (எண்ண வலிமை) ஏற்கனவே உள்ளது. தந்தை யிடமிருந்து
எதைப் பெற்றீர்களோ, அதை உங்களுடைய சகோதர-சகோதரிகளுக்கும்
கொடுங்கள்.
பிராமணக் குடும்பத்தின் இடையே எனக்குச் 'சம்ஸ்காரங்களை
ஒருங்கிணைக்கும் நடனத்தை' (அதாவது எல்லோருடனும் இணக்கமாக
செல்லும் நடனத்தை) ஆடத் தெரிகின்றதா என்பதை எப்போதும்
பரிசோதித்துக் கொள்ளுங்கள் என்று பாப்தாதா முன்பே
கூறியிருந்தார். அந்த நடனத்தை எப்போது ஆடுவீர்கள் என்பதற்கான
தேதியையும் நிர்ணயம் செய்யுங்கள் என்று பாப்தாதா கூறியிருந்தார்.
நிர்ணயம் செய்ய முடியுமா? முடியுமா? முதல் வரிசையில்
இருப்பவர்கள் சொல்லுங்கள். கைகளை உயர்த்துங்கள். முடியுமா?
பாண்டவர்களே, நீங்களும் உயர்த்துங்கள். பாண்டவர்கள் இல்லாமல்
முன்னேற்றம் இல்லை. நல்லது. இப்போது இது உங்களுடைய கடைசித்
தருணம் (இந்த வருடத்திற்கான கடைசி மாதத்திற்கான சந்திப்பு), ஒரு
தருணம் (அதாவது இன்னும் ஒரு பாப்தாதா சந்திப்பு) மீதமுள்ளது.
அதில் ஒவ்வொருவரும் தமக்கான உறுதியான சங்கல்பம் என்ன என்பதை
முடிவு செய்து எழுத வேண்டும். எவ்வளவு நேரம் ஆகும், பிராமணக்
குடும்பத்தில் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் (பழைய)
சம்ஸ்காரங்கள் தன் வேலையைக் காட்டக் கூடாது. என்னுடைய
சம்ஸ்காரமாக இருந்தாலும் சரி, மற்றவர்களுடைய சம்ஸ்காரமாக
இருந்தாலும் சரி, என் மீது அது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடாது.
இந்தத் தேதியை முடிவு செய்ய முடியுமா? முடியுமா? கைகளை
உயர்த்துங் கள். நல்லது, அனைவரையும் புகைப்படம் எடுத்தாச்சா!
ஏனெனில், இப்போது இந்தத் 'திடீர்' காட்சியைப் பார்த்தீர்கள்
தானே! (ஜப்பானில் நில நடுக்கமும் சுனாமியும் ஏற்பட்டுள்ளது,
அதில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது) இது போன்ற அனைத்தும்
திடீரென்றுதான் நடக்கப் போகின்றது; எனவே பாப்தாதா நீங்கள்
தயாராக இருக்கின்றீர்களா என்பதை பார்ப்பார் தானே! மற்றவர்
களுக்கு சுப பாவனா, சுப காம்னா வழங்கும் போது, மற்றவர்களுக்கான
இந்தச் சேவைத் திட்டத்தையும் நீங்கள் உருவாக்கி யிருப்பதை
பாப்தாதா பார்த்தார், எனவே ஒவ்வொரு ஆத்மாவின் மீதும் எப்போதும்
சுப பாவனையும் சுப காம்னையும் வையுங்கள்; தகுதிக்கு ஏற்ப (நம்பர்
வாராக) மாறுவது என்பது நிச்சயம் நடக்கத்தான் செய்யும்.
உங்களுடைய நினைவுச் சின்ன மாலையில் (ஜெபமாலையில்) அனைவரும்
முதலிடத்தில் (ஒன்றாம் நம்பரில்) இருக் கின்றீர்களா என்ன?
தகுதிக்கு ஏற்ப வரிசையாகத்தான் (நம்பர் வாராக) இருக்கின்றீர்கள்,
ஆனால் மாலையில் கோர்க்கப்பட்டிருக்கின்றீர்கள் தானே! ஏன்
வரிசைப்படி கிடைக்கின்றது. வெவ்வேறு சன்ஸ்காரங்கள் இருக்கின்றன,
ஆனால் நாம் சன்ஸ்காரங்களைப் பார்ப்பதற்குப் பதிலாக சுப
பாவனையும் சுப காம்னாவும் வைக்க வேண்டும். எப்படியிருந்தாலும்
இது பிராமணக் குடும்பம் தானே! அது எப்படிப்பட்டதாக இருந்தாலும்,
என்னுடைய குடும்பம் தானே! "என் பாபா" என்று கூறுவது போல, "என்
குடும்பம்" என்றும் கூற வேண்டும். நல்லது, பெரும்பான்மையினர்
கைகளை உயர்த்தியுள்ளனர். அனைவருக்கும் ஊக்கம் உற்சாகம்
இருக்கின்றது அதனால் தான் கைகளை உயர்த்தி யுள்ளீர்கள்,
அப்படித்தானே! எனவே, ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பவராக (சஹயோகியாக)
மாறி, சுப பாவனா மற்றும் சுப காம்னா நிறைந்த பார்வை (திருஷ்டி),
எண்ணம் (விருத்தி) மற்றும் நினைவை (ஸ்மிருதியை) வைப்பதன் மூலம்
இந்த சம்ஸ்கார நடனம் (ராஸ்) ஆடுவது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல.
இதில் யார் மிகச் சிறந்த நம்பரை (தகுதியை) எடுக் கின்றார்களோ,
யார் தேதியை உறுதி செய்து அதை நடைமுறையில் செய்து
காட்டுகின்றார் களோ, அவர்களுக்கு ஒரு தனித்துவமான மற்றும்
அன்பான பரிசு கிடைக்கும். பரிசு என்ன வென்று இப்போது சொல்ல
மாட்டோம், ஆனால் பாப்தாதா பரிசு வழங்குவார். ஏன்? சேவை
செய்வதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டும் தானே! ஏனெனில், இந்தச்
சம்ஸ்காரங்களின் சலசலப்பு நேரத்தைத் தன் பக்கமாக இழுத்து
விடுகின்றது; எனவே இப்போது நேரத்தின் அவசியம் இருக்கின்றது. சரி
தானே!
இவர்கள் அனைவரும் மதுபனைச் சேர்ந்தவர்கள் தானே! (முன்னால்
அமர்ந்திருப்பவர்களைப் பார்த்து பாபா கூறுகின்றார்)
பிடித்திருக்கின்றது தானே! ஏனெனில் மதுபன்வாசிகள் விசேஷ
மானவர்கள். மதுபன்வாசிகளின் மீது பாப்தாதாவிற்கு இதயப்பூர்வமான
அன்பு உள்ளது, மதுபன் வாசிகளுக்கும் (பாபா மீது அன்பு) உள்ளது.
இதையும் பாபா கூறுகின்றார்- தந்தை மீது அன்பு இருக்கின்றது,
எப்போதும் இருக்கும். அது அழிய முடியாது, அன்பின் விஷயத்தில்
அமரர்களாக இருக்கின்றீர்கள். அதனால்தான் மதுபன்வாசிகளாக
ஆகியிருக்கின்றீர்கள், அப்படித் தானே! மதுபன்வாசிகள் எங்கு
சென்றாலும் (மற்றவர்கள் அவர்களை) எந்த அளவு மரியாதையுடன்
பார்க்கின்றார்கள்? "மதுபனைச் சேர்ந்தவர், மதுபனைச் சேர்ந்தவர்"
என்று பார்க்கின்றார்கள். எனவே, இதை கவனத்தில் வையுங்
கள்-அதாவது கடைசித் தருணத்திற்கு (இவ்வருடத்தின் பாப்தாதாவின்
கடைசி சந்திப்பிற்கு) முன்பாக, மதுபனில் ஏதேனும் ஓர் இடத்தை
நிர்ணயம் செய்து, அங்கு தங்களுடைய சீட்டை(மாற்றத்திற்கான தேதி
எழுதப்பட்ட காகிதத்தை) போடுங் கள்; ஆனால் கடைசித் தருணத்திற்கு
முன்பாக.
அனைவரும் ஹோலி கொண்டாடினீர்களா? உங்களுக்கோ ஒவ்வொரு நாளும் ஹோலி
தான். இப்போது கொண்டாடுவது வெளி உலகிற்கான சற்றே ஒரு
கொண்டாட்டமாகும். எங்கு சென்று கொண்டாடுவது, இங்குதானே
கொண்டாடுவோம். ஆனால் அது உலக வழக்கப்படி அமைந்த ஒரு சடங்காகும்.
எனவே நாலாபுறமும் உள்ள பாப்தாதாவின் அதி தீவிரமான சிநேகம்
கொண்ட, மிகவும் அன்பான, செல்லக் குழந்தைகளான, நீண்ட
காலத்திற்குப் பிறகு கிடைத்த (சிகிலதே), சுவமான்தாரி குழந்தைகள்
ஒவ்வொருவருக்கும் பாப்தாதா பலமடங்கு அன்பு நினைவுகளையும்,
இதயப்பூர்வமான அன்பையும் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார். நாலா
புறமும் உள்ள அனைவரும் (இந்த முரளியைக்) கேட்டு, பார்த்துக்
கொண்டு மகிழ்ச்சியடைவதை பாப்தாதா பார்த்துக் கொண்டிருக்கின்றார்.
நல்லது,
இன்று முதல் முறையாக யார் வந்திருக்கின்றீர்கள்? எழுந்திருங்கள்.
இவர்கள் அனைவரும் முதல் முறையாக வந்துள்ளனர். நல்லது, முதல்
முறையாக மதுபனின் வாசியாக ஆகக்கூடிய பாக்கியம் உங்களுக்குக்
கிடைத்துள்ளது. உங்களுடைய சகோதர-சகோதரிகள் அனைவரும் மற்றும்
பாப்தாதாவும் கூட நீங்கள் அனைவரும் முதல் முறையாக
வந்திருப்பதற்கான வாழ்த்துக்களைத் (முபாரக்) கொடுத்துக் கொண்டு
இருக்கின்றார்கள். இப்போது பாப்தாதா பார்ப்பார்-ஏனெனில் நீங்கள்
சற்றே தாமதமாக வந்திருப்பதற்கான வாய்ப்பு இருந்தாலும், யார்
விரும்பினாலும் இப்போதும் கூட 'கடைசியாக வந்து வேகமாய்
செல்பவராக' மாறி, முதலிடத்தைப் பெற்று முதல் பிரிவில் வர
முடியும். இன்று வந்துள்ள அந்த எல்லாக் குழந்தை களுக்கும் இது
பாப்தாதாவின் வரதானமாகும். தந்தையின் மகா வாக்கியங்கள் எதுவாக
இருந்தாலும், அந்த ஸ்ரீமத்படி நீங்கள் தொடர்ந்து நடந்து
கொண்டிருக்க வேண்டும்; அப்போது ஸ்ரீமத் உங்களை மிக உயர்ந்த
பிரிவிற்கு கொண்டு வர முடியும், கொண்டு வரும். இத்தனை பெரிய
குடும்பத்தின் சார்பாக உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! வரம்
என்பது தந்தை யுடையது தான், ஆனால் நீங்கள் எவ்வளவு முன்னேற
விரும்புகின்றீர்களோ அவ்வளவு முன்னேற முடியும் என்ற சுப
பாவனையும் சுப காம்னையும் இங்குள்ளது. அனைவரும் உங்களுக்கு
இதயப்பூர்வமான ஆசிகளை வழங்குவார்கள். நீங்கள் எங்கு
வகுப்பிற்குச் சென்றாலும், அங்கெல்லாம் உங்களுக்கு ஆசிகள்
கிடைத்துக் கொண்டே இருக்கும்; அந்த ஆசிகள் உங்களைத் தீவிர
புருஷார்த்தியாக மாற்றி முன்னோக்கி அழைத்துச் செல்லும் என்ற
நிச்சயத்தை வையுங்கள். நல்லது. இப்போது பாப்தாதா அனைவருக்கும்
மிகவும் அற்புதமான, அழகான சுப இரவு (குட் நைட்) கூறுகிறார்.
நல்லது.
ஆசீர்வாதம்:
ஒவ்வொரு சங்கல்பத்திலும் மற்றும் கர்மத்திலும் சித்தி, அதாவது
வெற்றியை அடைகின்ற சம்பூர்ண மூர்த்தியாக (முழுமையான சொரூபமாக)
ஆகுக.
சங்கல்பங்களின் சித்தி (வெற்றி) எப்போது கிடைக்கும் என்றால்,
நீங்கள் சமர்த்தான (வலிமை யான) சங்கல்பங்களை உருவாக்கும்
போதுதான். யார் அதிகப்படியான சங்கல்பங்களை உருவாக்குகிறார்களோ,
அவர்களால் அதைப் பராமரிக்க (பாலனை செய்ய) முடிவதில்லை; எனவே
உருவாக்கம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு பலவீனமாக
மாறும். எனவே, முதலில் வீணான உருவாக்கங்களை (வியர்த்
சங்கல்பங்களை) நிறுத்துங்கள், அப்போது தான் வெற்றி கிடைக்கும்.
கர்மங்களில் வெற்றி பெறுவதற்கான யுக்தி என்னவென்றால்-கர்மம்
செய்வதற்கு முன்பாகவே அதன் ஆதி, மத்திய மற்றும் அந்தத்தை (துவக்கம்,
இடை மற்றும் முடிவு) அறிந்து கொண்டு பிறகு கர்மம் செய்யுங்கள்.
இதன் மூலமாகவே நீங்கள் சம்பூர்ண மூர்த்தியாக ஆகிவிடுவீர்கள்.
சுலோகன்:
நேரத்திற்கு ஏற்ப துக்கத்திலிருந்தும் ஏமாற்றத்திலிருந்தும்
தப்பித்து வெற்றியை அடைபவரே ஞானி (புத்திசாலி) ஆவார்.
அவ்யக்த சமிக்ஞை: தூய்மையற்ற தன்மையின் (அபவித்ரதாவின்)
விதையையும்
முடிவுக்குக் கொண்டு வந்து முழுமையான தூய்மையானவராக ஆகுங்கள்.
ஹோலிஹன்ஸ் (புனிதமான அன்னப்பறவை) குழந்தைகளாகிய உங்களுடைய
உணவும் தூய்மையானதாக இருக்க வேண்டும், உங்களுடைய நடத்தையும்
தூய்மையானதாக இருக்க வேண்டும். அசுத்தத்தின் பெயரோ அடையாளமோ
கூட இருக்கக் கூடாது; ஏனெனில் நீங்கள் தூய்மையான உலகிற்குச்
சென்று கொண்டிருக்கிறீர்கள், அங்கு அசுத்தமோ அல்லது தூய்மை
யின்மையோ பெயரளவில் கூட இருக்காது. நீங்கள் எப்போது
இப்படிப்பட்ட ஹோலிஹன்ஸாக மாறுகின்றீர்களோ, அப்போதுதான்
எதிர்காலத்தில் "ஹிஸ் ஹோலினஸ்" (பரம புனிதம் மிக்கவர்) என்று
அழைக்கப்படுவீர்கள்.
விசேஷ அறிவிப்பு - மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை யோகப்
பயிற்சி
இன்று மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை ஆகும்; சகோதர
சகோதரிகள் அனைவரும் ஓர் குழுவாக ஒன்றுகூடி, மாலை 6.30 மணி முதல்
7.30 மணி வரை தங்களுடைய பரம பவித்திர (மிகத் தூய்மையான) சொரூபத்
தில் நிலைத்திருந்து, தூய்மையின் தெய்வீகக் கிரணங்களை
நாலாபுறமும் பரவச் செய்து, அனைத்து ஆத்மாக்களுக்கும் "தூய்மையானவராக
ஆகுக - யோகியாக ஆகுக" என்ற சுபமான தூண்டுதலை (மனசா சேவை அல்லது
சகாஷ் வடிவில்) வழங்கும் சேவையைச் செய்யுங்கள்.