17-04-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! தூய்மை ஆனீர்கள்
என்றால் ஆன்மீக சேவைக்கு தகுதி உடையவர் ஆகிவிடுவீர்கள். (தேஹீ
அபிமானி) ஆத்ம உணர்வுடைய குழந்தைகள் ஆன்மீக யாத்திரையில்
இருப்பார்கள், மேலும் மற்றவர்களுக்கும் இதே யாத்திரை
செய்விப்பார்கள். (கற்றுத் தருவார்கள்)
கேள்வி:
சங்கமத்தில் குழந்தைகளாகிய
நீங்கள் வருமானம் செய்வதில் ஈடுபடுகிறீர்கள், இது தான்
உண்மையான வருமானம் ஆகும், எப்படி?
பதில்:
தற்போதைய வருமானம் 21 பிறவிகள்
வரை நடக்கின்றது. இதில் ஒருபொழுதும் திவால் ஆக முடியாது. ஞானம்
கேட்பது மற்றும் கூறுவது, நினைவு செய்வது மற்றும் செய்விப்பது.
இது தான் உண்மையிலும் உண்மையான வருமானம். இதை உண்மையிலும்
உண்மையான தந்தை தான் உங்களுக்குக் கற்பிக்கிறார்.
இப்பேர்ப்பட்ட வருமானத்தை முழு கல்பத்திலும் யாருமே செய்ய
முடியாது. வேறு எந்த ஒரு வருமானமும் கூட வராது.
பாடல்:
நாம் அந்த வழியில் நடக்க வேண்டும்
.. .. .. ..
ஓம் சாந்தி.
பக்தி மார்க்கத்தில் குழந்தைகள் நிறைய அலைந்து திரிந்து
ஏமாற்றம் அடைந்துள்ளார் கள். பக்தி மார்க்கத்தில் மிகவுமே
பாவனையுடன் யாத்திரை செல்கிறார்கள். இராமாயணம் ஆகியவை
கேட்கிறார்கள். அந்தளவு அன்புடன் அமர்ந்து கதைகளைக்
கேட்கிறார்கள், அப்போது அழுகை கூட வந்துவிடுகிறது. எங்களுடைய
பகவானின் சீதை, பகவதியை இராவணன் என்ற கொள்ளைக்காரன் எடுத்துச்
சென்றான். பிறகு கேட்கும் நேரத்தில் அழுகிறார்கள். இவை எல்லாமே
கட்டுக் கதைகள் ஆகும். இதனால் எந்த நன்மையும் இல்லை. ஹே! பதீத
பாவனரே வாருங்கள், வந்து துக்கம் நிறைந்த ஆத்மாக்களாகிய எங்களை
சுகம் நிறைந்தோராக ஆக்குங்கள் என்று முறை யிடவும் செய்கிறார்கள்.
ஆத்மா துக்கமுடையதாக ஆகிறது என்பதைப் புரிந்து கொள்வதில்லை.
ஏனெனில் அவர்கள் ஆத்மாவில் எதுவும் பதிவதில்லை (நிர்லேப்) என்று
கூறிவிடுகிறார்கள். ஆத்மா சுகம் துக்கத்திலிருந்து தனிப்பட்டது
என்று நினைக்கிறார்கள். இதை ஏன் கூறுகிறார்கள்? ஏனெனில்
பரமாத்மா சுகம் துக்கத்திலிருந்து தனிப்பட்டவர். எனவே
குழந்தைகள் சுகம் துக்கத்தில் எப்படி வருவார்கள் என்று
நினைக்கிறார்கள். இந்த எல்லா விஷயங்களையும் இப்பொழுது
குழந்தைகள் புரிந்துள்ளார்கள். இந்த ஞான மார்க்கத்தில் கூட சில
சமயம் கிரகச்சாரம் ஏற்படு கிறது மற்றும் சில சமயம் ஏதாவது
ஆகிறது. சில சமயம் ஆனந்தமாக இருக்கிறார்கள். சில சமயம்
வாடிப்போன முகம் இருக்கும். இது மாயையுடன் ஏற்படும் யுத்தமாகும்.
மாயை மீது தான் வெற்றி அடைய வேண்டும். மூர்ச்சை அடையும் பொழுது
மன்மனாபவ என்ற சஞ்சீவினி மூலிகை அளிக்கப்படுகிறது. பக்தி
மார்க்கத்தில் நிறைய விஸ்தாரம் உள்ளது. தேவதைகளின் விக்கிரகங்
களை எவ்வளவு அலங்கரிக்கிறார்கள். உண்மையான நகைகளை அணிவிக்
கிறார் கள். அந்த நகையோ விக்கிரகத்தின் (தெய்வத்தின்)
சொத்தாகிறது. விக்கிரகத்தின் சொத்து பிறகு பூசாரி அல்லது
டிரஸ்டியினுடையதாக ஆகிவிடுகிறது. நாம் உயிரோட்ட மான ரூபத்தில்
நிறைய வைரங் கள் வைடூரியங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தோம்
என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். பிறகு பூசாரி
ஆகும்பொழுது கூட நிறைய நகைகளை அணிகிறீர்கள். இப்பொழுது எதுவும்
இல்லை. உயிரோட்டமான ரூபத்திலும் அணிந்தீர்கள், பிறகு ஜட
ரூபத்திலும் அணிந்தீர்கள். இப்பொழுது நகையே இல்லை. முற்றிலுமே
சாதாரணமாக இருக்கிறீர்கள். நான் சாதாரண உடலில் வருகிறேன் என்று
தந்தை கூறுகிறார். எந்த ஒரு இராஜ்யம் ஆகியவற்றின் ஆடம்பரம்
இல்லை. சந்நியாசிகளினுடையதும் கூட நிறைய ஆடம்பரம் இருக்கிறது.
உண்மையில் சத்யுகத்தில் ஆத்மாக்களாகிய நாம் எப்படி தூய்மையாக
இருந்தோம் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர் கள்.
நம்முடைய உடல் கூட தூய்மையாக இருந்தது. அவர்களுடைய அலங்காரம்
கூட மிகவும் நன்றாக இருக்கும். யாராவது அழகாக இருக்கிறார்கள்
என்றால், அவர்களுக்கு அலங்காரத் தினுடைய ஆர்வம் கூட இருக்கும்.
நீங்கள் கூட அழகாக இருக்கும்பொழுது மிகவுமே நல்ல நல்ல நகைகளை
அணிந்து கொண்டி ருந்தீர்கள். வைரங்களினுடைய பெரிய மாலைகள்
ஆகியவை அணிந்து கொண்டிருந்தீர்கள். இங்கு ஒவ்வொரு பொருளும்
கருப்பாக உள்ளது. பாருங்கள், பசுக்கள் கூட கருப்பாக
ஆகிவிட்டுள்ளது. பாபா ஸ்ரீநாத் துவாரகைக்குச் சென்றிருந்தபொழுது
மிகவும் நல்ல பசுக்கள் இருந்தன. கிருஷ்ணருடைய பசு மாடு மிகவும்
நன்றாகக் காண்பிக்கிறார்கள். இங்கு பார்த்தீர்கள் என்றால் ஒன்று
எப்படியோ மற்றொன்று எப்படியோ இருக்கிறது. ஏனெனில் கலியுகம் இது!
இந்த மாதிரி பசுக்கள் அங்கு இருக்காது. குழந்தைகளாகிய நீங்கள்
உலகிற்கு அதிபதி ஆகிறீர் கள். உங்களுடைய அலங்காரம் கூட அங்கு
இது போல அழகாக இருக்கும். சிந்தித்துப் பாருங்கள் - பசுக்கள்
அவசியம் இருக்க வேண்டும். அங்கு பசுக்களின் சாணம் கூட எப்படி
இருக்கக் கூடும். எவ்வளவு சக்தி இருக்கும். பூமிக்கு உரம்
வேண்டும் அல்லவா? உரம் இடப்படும் பொழுது தானியங் களின் நல்ல
விளைச்சல் இருக்கும். அங்கு எல்லா பொருட்களும் நல்ல சக்தி
வாய்ந்ததாக இருக்கும். இங்கோ எந்த ஒரு பொருளிலும் சக்தி இல்லை.
ஒவ்வொரு பொருளுமே முற்றிலுமே சக்தியற்றதாகி விட்டுள்ளது. பெண்
குழந்தைகள் சூட்சும வதனத்தில் சென்று கொண்டிருந்தார்கள்.
எவ்வளவு நல்ல நல்ல பெரிய பழங்களை சாப்பிடுவார்கள். சுவைமிகுந்த
பழச்சாறு நிறைந்த பழங்கள் பருகுவார்கள். இவை எல்லாமே
சாட்சாத்காரம் செய்வித்துக் கொண்டிருந்தார். தோட்டக் காரன்
எப்படி பழங்கள் ஆகியவற்றை வெட்டி கொடுக்கிறார். சூட்சும
வதனத்திலோ பழங்கள் ஆகியவை இருக்க முடியாது. இது சாட்சாத்காரம்
ஆகிறது (காட்சிகள் தெரிதல்). வைகுண்டம் பிறகு இங்கு உண்டாகும்
அல்லவா? மனிதர்கள் வைகுண்டம் ஏதோ மேலே இருக்கிறது என்று
நினைக்கிறார்கள். வைகுண்டம் சூட்சும வதனத்திலும் இல்லை.
மூலவதனத்திலும் இல்லை. இங்கு தான் இருக்கும். இங்கு பெண்
குழந்தைகள் என்ன சாட்சாத்காரம் செய்கிறார்களோ அதையே பிறகு இந்த
கண்களால் பார்ப்பார்கள். எப்படி பதவியோ அப்படி பொருட்கள்
இருக்கும். இராஜாக்களின் அரண்மனை கள் பாருங்கள் எவ்வளவு
அழகழகாக இருக்கும். ஜெய்ப்பூரில் மிகவும் நல்ல நல்ல அரண்மனைகள்
அமைக்கப்பட்டுள்ளன. அரண்மனைகளைப் பார்ப்பதற்கு மட்டுமே
மனிதர்கள் செல் கிறார்கள். இருந்தாலும் கட்டணம்
வசூலிக்கிறார்கள். குறிப்பாக அந்த (ஜெய்ப்பூர்) அரண்மனையை
பார்ப்பதற்காக கட்டணம் வசூலிக்கிறார்கள். அவர்கள் பிறகு வேறு
மாளிகை களில் இருக்கிறார்கள். அதுவும் இப்பொழுது கலியுகத்தில்
இருக்கிறார்கள். இது இருப்பதே பதீதமான உலகமாக. யாருமே தங்களை
பதீதமானவர்கள் என்று நினைக்கிறார்களா என்ன? நீங்கள் இப்பொழுது
புரிந்துள்ளீர்கள். நாமோ பதீதமாக இருந்தோம். எதற்கும்
உதவாதவர்களாக இருந்தோம். பிறகு நாம் வெண்மையாக (தூய்மையாக)
ஆகிவிடுவோம். அந்த உலகமே முதல் தரமானதாக ஆகிவிடும். இங்கு
அமெரிக்கா போன்ற இடங்களில் முதல் தரமான மாளிகைகள் இருக்கின்றன
என்றாலும் கூட அங்கு (சொர்க்கத்தில்) இருப்பதை ஒப்பிட்டு
பார்க்கும் பொழுது இதுவோ ஒன்றுமே இல்லை. ஏனெனில் இதுவோ அல்ப
கால சுகம் அளிக்கக் கூடியவை ஆகும். அங்கோ முதல் தரமான மாளிகைகள்
இருக்கும். முதல் தரமான பசுக்கள் இருக்கும். அங்கும் பசுக்களை
மேய்ப்பவர்கள் (வளர்ப்பவர்கள்) இருப்பார்கள். ஸ்ரீ கிருஷ்ணரை
கோபாலன் (மாடுகளை மேய்ப்பவர் - வளர்ப்பவர்) என்று கூறு
கிறார்கள் அல்லவா? இங்கு பசுக்களை பராமரிப்பவர்கள் தங்களை கூஐர்,
கிருஷ்ணருடைய வம்சாவளி என்று கூறுகிறார்கள். உண்மையில்
கிருஷ்ணருடைய வம்சாவளி என்று கூற முடியாது. கிருஷ்ணருடைய
இராஜாங்கத்தில் வருபவர்கள் என்று கூறலாம். செல்வந்தர்களிடம்
பசுக்கள் இருந்தது என்றால், அவற்றை பராமரிக்கும் பணியாளர்கள் (கூஜர்)
கூட இருப்பார்கள். இந்த கூஜர் என்ற பெயர் சத்யுகத்திலுள்ளது.
நேற்றைய விஷயம் ஆகும். நேற்றைக்கு நாம் ஆதி சனாதன தேவி தேவதா
தர்மத்தினராக இருந்தோம். பிறகு பதீதமாக ஆகும்பொழுது தங்களை
இந்து என்று அழைத்துக் கொண்டுவிடுகிறார்கள். நீங்கள் ஆதி சனாதன
தேவி தேவதா தர்மத்தினர் ஆவீர்களா இல்லை இந்து தர்மத்தினரா என்று
கேளுங்கள். தற்காலத்தில் எல்லோருமே இந்து என்று
எழுதிவிடுகிறார்கள். இந்து தர்மத்தை யார் ஸ்தாபனை செய்தார்?
தேவி தேவதா தர்மத்தை யார் ஸ்தாபனை செய்தார்? இது கூட யாருக்கும்
தெரியாது. ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தை யார் ஸ்தாபனை செய்தார்
என்று கூறுங்கள் என பாபா இந்த கேள்வி கேட்கிறார். சிவபாபா
பிரம்மா மூலமாக ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார். இராமர் அல்லது
சிவபாபாவின் ஸ்ரீமத் படி ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் ஸ்தாபனை
ஆகியது. பிறகு இராவண இராஜ்யம் ஆகிறது. விகாரங்களில்
செல்கிறார்கள். பக்தி மார்க்கம் ஆரம்பமாகி விடும்பொழுது இந்து
என கூற ஆரம்பித்தனர், இப்பொழுது யாரும் தங்களை தேவதை என்று
அழைத்துக் கொள்ள முடியாது. இராவணன் விகாரியாக ஆக்கினார். தந்தை
வந்து நிர்விகாரியாக ஆக்குகிறார். நீங்கள் ஈஸ்வரிய வழிப்படி
தேவதை ஆகிறீர்கள். தந்தை தான் வந்து பிராமணர் களாகிய உங்களை
தேவதையாக ஆக்கு கிறார். படியில் எப்படி இறங்குகிறீர்கள் என்பது
கூட குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் வரிசைக்கிரமமாக பதிகிறது.
மற்ற எல்லா மனிதர்களும் அசுர வழிப்படி நடந்துக் கொண்டி
ருக்கிறார்கள் மற்றும் நீங்கள் ஈஸ்வரிய வழிப்படி நடந்துக்
கொண்டி ருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
இராவணனினுடைய வழியினால் படியில் இறங்கிக் கொண்டே வந்துள்ளீர்கள்.
84 பிறவிகளுக்கு பிறகு மீண்டும் முதல் நம்பர் ஜென்மம் ஏற்படும்.
ஈஸ்வரிய புத்தியினால் நீங்கள் முழு சிருஷ்டியினுடைய முதல் இடை
கடையை அறிந்து கொண்டுவிடுகிறீர்கள். இந்த உங்களுடைய வாழ்க்கை
மிகவுமே விலைமதிப்பிட முடியாதது. இதில் தான் துணிவு உள்ளது.
தந்தை வந்து நம்மை இவ்வளவு தூய்மையாக ஆக்குகிறார். நாம் ஆன்மீக
சேவைக்குத் தகுதி உடையவர்களாக ஆகிறோம். அவர்கள் ஸ்தூல சமூக
ஊழியர்கள் ஆவார்கள். தேக அபிமானத்தில் இருக்கிறார்கள். நீங்கள்
தேஹீ அபிமானி (ஆத்ம உணர்வு டையவர்) ஆவீர்கள். ஆத்மாக்களை
ஆன்மீக யாத்திரையில் கூட்டிச் செல்கிறீர்கள். நீங்கள்
சதோபிரதானமாக இருந்தீர்கள். இப்பொழுது தமோபிரதானமாக
ஆகியுள்ளீர்கள் என்று தந்தைப் புரிய வைக்கிறார். சதோபிரதானமாக
இருப்பவர்களுக்கு பாவனமானவர்கள் என்றும் தமோபிரதானமாக
இருப்பவர்களுக்கு பதீதமானவர்கள் என்றும் கூறப்படுகிறது.
ஆத்மாவில் தான் துரு படிந்துள்ளது. ஆத்மாவை தான் சதோபிரதானமாக
ஆக்க வேண்டும். எவ்வளவு நினைவில் இருப்பீர்களோ அந்த அளவு
தூய்மையாக ஆவீர்கள். இல்லை என்றால் குறைவான தூய்மை உடையவர்
ஆவீர்கள். பாவங்களின் சுமை தலை மீது அப்படியே இருந்துவிடும்.
ஆத்மாக்களோ எல்லோருமே பவித்திரமாகி விடுவார்கள். பிறகு
ஒவ்வொருவரின் பாகமும் தனி ஆகும். எல்லோருடையதும் ஒன்று போல
இருக்க முடியாது. எல்லாவற்றையும் விட உயர்ந்தது பாபாவின் பார்ட்.
பிறகு பிரம்மா சரஸ்வதியின் பார்ட் எவ்வளவு இருக்கிறது. யார்
ஸ்தாபனை செய்கிறார்களோ அவர்களே பாலனையும் செய்கிறார்கள். பெரிய
பாகம் அவருடையது ஆகும். முதலில் சிவபாபா ஆவார். பிறகு பிரம்மா
சரஸ்வதி - இவர்கள் புனர் ஜென்மத்தில் வருகிறார்கள். சங்கரன்
சூட்சும ரூபத்தை மட்டும் தாரணை செய்கிறார். அப்படி யின்றி
சங்கர் யாரோ ஒருவரின் உடலை கடனாக எடுக்கிறார் என்பதல்ல.
கிருஷ்ணருக்கோ தனக்கென்று சரீரம் இருக்கிறது. இங்கு சிவபாபா
உடலைக் கடனாக மட்டும் எடுக்கிறார். பதீதமான சரீரம் பதீதமான
உலகத்தில் வந்து முக்தி-ஜீவன் முக்தியில் அழைத்துச்
செல்வதற்கான சேவை செய்கிறார். முதலில் முக்தியில் செல்ல
வேண்டியுள்ளது. நாலேஜ்ஃபுல் ஒரே ஒரு தந்தை. பதீத பாவனர் ஆவார்.
அவரைத் தான் சிவபாபா என்று கூறுகிறோம். சங்கரனை பாபா என்று
கூறினால் அழகாக இல்லை. சிவபாபா என்ற வார்த்தை மிகவும் இனிமையாக
உள்ளது. சிவனுக்கு ஒரு சிலர் எருக்கம் பூவை அர்ச்சனை
செய்கிறார்கள். ஒரு சிலர் வேறு எதையோ செய்கிறார்கள். ஒரு சிலர்
பால் கூட அபிஷேகம் செய்கிறார்கள்.
தந்தை குழந்தைகளுக்கு அநேக விதமான விளக்கவுரைகளை அளித்துக்
கொண்டே இருக்கிறார். எல்லாமே யோகத்தில் ஆதாரத்தில் என்பது
குழந்தைகளுக்குப் புரிய வைக்கப் படுகிறது. யோகத் தினால் தான்
விகர்மங்கள் விநாசம் ஆகும். யோகம் உடையவர்களுக்கு ஞானத்தின்
தாரணையும் கூட நன்றாக ஆகும். தங்களுடைய தாரணையில் நடந்துக்
கொண்டே இருப்பார்கள். ஏனெனில் மற்றவர்களுக்குக் கூற வேண்டியும்
வரும். இது புதிய விஷயம் ஆகும். பகவான் யாருக்கு நேரிடையாக
ஞானம் கூறினாரோ அவர்கள் தான் கேட்டார்கள். பிறகோ இந்த ஞானம்
இருப்பதே இல்லை. இப்பொழுது தந்தை உங்களுக்கு என்ன கூறுகிறாரோ
அதை நீங்கள் இப்பொழுது கேட்கிறீர்கள். தாரணை ஆகிறது. பிறகோ பலனை
அனுபவம் செய்யும் பாகம் நடிக்க வேண்டி இருக்கும். ஞானம் கேட்பது
மற்றும் கூறுவது இப்பொழுது நடக்கிறது. சத்யுகத்தில் இந்த பாகம்
இருக்காது. அங்கோ இருப்பதே பிராலப்தத்தின் (பலன்) அனுபவிக்கும்
பாகம். மனிதர்கள் சட்ட வியல் படிக்கிறார்கள். பின் வழக்கறிஞராகி
சம்பாதிக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய சம்பாத்தியம் ஆகும். இது
உலகத் தாருக்குத் தெரியாது. உண்மையான பாபா நமக்கு உண்மையான
சம்பாத்தியம் செய்வித்துக் கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள்
அறிந்துள்ளீர்கள். இதில் ஒரு பொழுதும் திவால் ஆக முடியாது.
இப்பொழுது நீங்கள் உண்மையின் சம்பாத்தியம் செய்கிறீர்கள். அது
பிறகு 21 பிறவிகள் கூடவே இருக்கும். அந்த சம்பாத்தியம் கூடவே
வராது. இது கூட வரக்கூடியது. எனவே இப்பேர்ப் பட்ட
சம்பாத்தியத்தை மற்றவர்களும் பெற ஒத்துழைக்க வேண்டும்.. இந்த
விஷயங்கள் உங்களைத் தவிர வேறு யாருடைய புத்தியிலும் இல்லை.
உங்களிலும் கூட அடிக்கடி ஒரு சிலர் மறந்துவிடுகிறீர்கள். தந்தை
மற்றும் ஆஸ்தியை மறக்கக் கூடாது. விஷயம் ஒன்று தான்! அவ்வளவே!
தந்தையை நினைவு செய்யுங்கள். அந்த தந்தை யிடமிருந்து 21
பிறவிகளுக்கான ஆஸ்தி கிடைக்கிறது. 21 பிறவிகளுக்கு நோயற்ற
சரீரம் இருக்கும். முதுமைப் பருவம் வரை அகால மரணம் ஏற்படாது.
குழந்தைகளுக்கு எவ்வளவு குஷி இருக்க வேண்டும். தந்தையின் நினைவு
முக்கியமானது. அதில் தான் மாயை தடைகளை ஏற்படுத்துகின்றது.
புயல்களை எடுத்து வருகிறது. அநேகவிதமான புயல்கள் வருகின்றன.
தந்தையை நினைவு செய்வேன் என்று நீங்கள் கூறுவீர்கள். ஆனால்
செய்ய முடியாமல் இருப்பீர்கள். நினைவில் தான் நிறைய பேர்
தோற்றுப் (ஃபெயில்) போகிறார்கள். நிறைய பேரிடம் யோகத்தில்
குறைவு இருக்கிறது. கூடுமானவரை யோகத்தில் உறுதியாக இருக்க
வேண்டும். மற்றபடி விதை மற்றும் விருட்சத்தின் ஞானம் ஒன்றும்
பெரிய விஷயம் கிடையாது. என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை
கூறுகிறார். என்னை நினைவு செய்வதால் என்னை அறிந்து கொள்வதால்
நீங்கள் எல்லாமே அறிந்து கொண்டுவிடுவீர்கள். நினைவில் தான்
எல்லாமே நிரம்பி உள்ளது. ஸ்வீட் பாபா - சிவபாபாவை நினைவு செய்ய
வேண்டும். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான் ஆவார். சிறந்ததிலும்
சிறந்தவர் அவர் ஆவார். உயர்ந்ததிலும் உயர்ந்த ஆஸ்தி 21 பிறவி
களுக்காக அளிக்கிறார். சதா சுகமுடையவர்களாக, அமரராக ஆக்குகிறார்.
நீங்கள் அமரபுரிக்கு அதிபதி ஆகிறீர்கள். எனவே அப்பேர்ப்பட்ட
தந்தையை மிகவுமே நினைவு செய்ய வேண்டும். தந்தையை நினைவு
செய்யவில்லை என்றால் மற்ற எல்லாமே நினைவிற்கு வந்துவிடும்.
நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக்
கண்டெடுக்கப்பட்ட செல்லமானக் குழந்தைகளுக்கு தாயும்
தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை
வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. இந்த ஈஸ்வரிய வாழ்க்கை மிக மிக விலைமதிப்பிட முடியாதது.
இந்த வாழ்க்கையில் ஆத்மா மற்றும் சரீரம் இரண்டையும் பாவனமாக
ஆக்க வேண்டும். ஆன்மீக யாத்திரையில் இருந்து மற்றவர்களுக்கும்
இதே யாத்திரையைக் கற்பிக்க வேண்டும்.
2. கூடுமானவரை உண்மையான சம்பாத்தியத்தில் ஈடுபட்டு விட வேண்டும்.
நோயற்றவராக ஆவதற்கு நினைவில் உறுதியானவர் ஆக வேண்டும்.
வரதானம்:
சரீரத்தை ஈஸ்வரிய சேவையின் அடமானப் பொருள் என்று புரிந்து
கொண்டு காரியத்தில் பயன்படுத்தக் கூடிய பற்றற்றவர் ஆகுக.
ஒருவரது அடமானப் பொருளில் உரிமை கொண்டாட முடியாது, இஷ்டம் போல்
பயன்படுத்த முடியாது. ஆக இந்த சரீரமும் ஈஸ்வரிய சேவையின்
பொருட்டு கிடைத்த அடமானப் பொருளாகும். இந்த அடமானம் ஆன்மிக
தந்தை கொடுத்திருக்கின்றார். எனவே அவசியம் தந்தை யின் நினைவு
இருக்கும். அடமானம் என்று நினைக்கும் போது ஆன்மிகம் வந்து
விடும், என்னுடையது என்ற அகங்காரம் இருக்காது. நிரந்தர யோகி,
பற்றற்றவர் ஆவதற்கு இது ஒரு எளிய விதியாகும். எனவே இப்போது
ஆன்மிக ஸ்திதியை வெளிப்படுத் துங்கள்.
சுலோகன்:
வானபிரஸ்த ஸ்திதிக்கு செல்ல வேண்டுமெனில்
திருஷ்டி-விருத்தியிலும் தூய்மையாக இருப்பதற்கு அடிக்கோடு
இடுங்கள்.
அவ்யக்த சமிக்கை: மகான் ஆகுவதற்கு மதுரதா (இனிமை) மற்றும்
பணிவு என்ற குணங்களை தாரணை செய்யுங்கள்.
உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் மகான் ஆக இருக்க வேண்டும்.
மனதின் ஒவ்வொரு சங்கல்பமும் ஒவ்வொரு ஆத்மாவிற்காகவும்
இனிமையானதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வரையும் உயர்ந்தவர்களாக
ஆக்கும் சுபாவம், இனிமையின் சுபாவம், பணிவின் சுபாவம் இருக்க
வேண்டும். உரத்தக் குரலில் பேசுவது என்னுடைய சுபாவம்,
ஆவேசத்தில் வருவது என்னுடைய சுபாவம். என்னுடைய சுபாவம் இப்படி
இருக்கிறது என்று ஒருபோதும் கூறக்கூடாது. எனது என்று
எங்கிருந்து வந்தது! சுபாவத்திற்கு வசம் ஆவது தான் மாயை ஆகும்.
இப்பொழுது மாயாஜீத் ஆகுங்கள். அபிமானம் அல்லது மனம் உடைவது,
பொறாமை அல்லது ஆவேசத்தில் வரக் கூடிய சுபாவத்தை மாற்றுங்கள்.