17-05-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! நான் மலர்
ஆகியுள்ளேனா, தேக அகங்காரத்தில் வந்து முள்ளாக ஆகவில்லைதானே என
தன்னைத் தான் பாருங்கள், தந்தை உங்களை முள்ளிலிருந்து
மலராக்குவதற்காக வந்துள்ளார்.
கேள்வி:
எந்த நிச்சயத்தின் ஆதாரத்தில்
தந்தையிடம் நீங்காத அன்பு வைக்க முடியும்?
பதில்:
முதலில் தன்னை ஆத்மா என
நிச்சயப்படுத்திக் கொண்டீர்கள் என்றால் தந்தையிடம் அன்பாக
இருப்பீர்கள். நிராகார தந்தை இந்த பாக்யரதத்தில்
வீற்றிருக்கிறார் (அமர்ந்திருக்கிறார்) என்ற உறுதியான
நிச்சயமும் இருக்க வேண்டும். அவர் நமக்கு இவர் (பிரம்மா)
மூலமாக படிப்பித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிச்சயம் நீங்கி
விட்டது என்றால் அன்பும் குறைந்து விடும்.
ஓம் சாந்தி.
முள்ளிலிருந்து மலராக்கக் கூடிய பகவானுடைய மஹா வாக்கியம்,
அதாவது தோட்டக்காரரின் மஹா வாக்கியம். நாம் இங்கே
முள்ளிலிருந்து மலராவதற்காக வந்துள்ளோம் என குழந்தைகள்
அறிவார்கள். முன்னர் நாம் முள்ளாக இருந்தோம், இப்போது மலராக
ஆகிக் கொண்டிருக்கிறோம் என ஒவ்வொரு வரும் அறிவார்கள். பதித
பாவனா வாருங்கள் என தந்தையின் மகிமையைப் பாடுகின்றனர். அவர்
படகோட்டி, தோட்டக்காரர், பாப கடேஷ்வரர் (பாவங்களைப் போக்குபவர்)
ஆவார். பல பெயர்களைச் சொல்கின்றனர், ஆனால் உருவம் அனைத்து
இடங்களிலும் ஒன்றாகத்தான் உள்ளது. ஞானக் கடல், சுகக் கடல் . .
. என அவருடைய மகிமைகளைக் கூட பாடுகின்றனர். நாம் அந்த ஒரு
தந்தையின் அருகில் அமர்ந்திருக்கிறோம் என இப்போது நீங்கள்
அறிவீர்கள். முள்ளாக இருக்கக் கூடிய மனிதரிலிருந்து இப்போது
நாம் மலர் போன்ற தேவதைகளாக ஆவதற்காக வந்துள்ளோம். இது லட்சியம்,
குறிக்கோளாகும். இப்போது ஒவ்வொருவரும் தம் மனதிற்குள் பார்க்க
வேண்டும் - எனக்குள் தெய்வீக குணங்கள் உள்ளனவா? நான் அனைத்து
குணங்களிலும் நிறைந்தவனாக உள்ளேனா? முன்னர் தேவதைகளின் மகிமைகளை
பாடிக்கொன்டிருந்தனர், தம்மை முள்ளாக நினைத்துக் கொண்டிருந்தனர்.
நாங்கள் தெய்வீக குணங்களின்றி தோல்வி அடைந்தவர்கள் எந்த
நற்குணங்களும் இல்லை. . . ஏனென்றால் 5 விகாரங்கள் உள்ளன. தேக
அபிமானமும் கூட மிகவும் கடினமான அபிமான மாகும். தன்னை ஆத்மா என
புரிந்து கொண்டால், தந்தையிடமும் மிகவும் அன்பு இருக்கும்.
நிராகார தந்தை இந்த சரீரத்தில் வீற்றிருக்கிறார் என இப்போது
நீங்கள் அறிவீர்கள். இதை நிச்சயப்படுத்திக் கொண்டிருந்தாலும்
கூட பிறகு நிச்சயம் உடைந்து விடுகிறது. நாம் சிவபாபா விடம்
வந்துள்ளோம் என நீங்கள் சொல்லவும் செய்கிறீர்கள். அவர் இந்த
பாக்கியசாலி ரதமாகிய பிரஜாபிதா பிரம்மாவின் உடலில் இருக்கிறார்,
ஆத்மாக்களாகிய நம் அனைவரின் தந்தை ஒரு சிவபாபா ஆவார், அவர்
இந்த ரதத்தில் வீற்றிருக்கிறார். முற்றிலும் உறுதியாக இந்த
நிச்சயம் இருக்க வேண்டும், இதில்தான் மாயை சந்தேகத்தில் கொண்டு
வருகிறது. கன்யா கணவருடன் திருமணம் ஆகும்போது அவரிடமிருந்து
மிகவும் சுகம் கிடைக்கும் என புரிந்து நினைக்கிறாள், ஆனால்
என்ன சுகம் கிடைக்கிறது, சென்று சட்டென தூய்மையை இழக்கிறாள்.
குமாரியாக இருக்கும்போது தாய் தந்தை முதலான அனைவரும் தலை
வணங்குகின்றனர், ஏனென்றால் தூய்மையாக இருக்கிறாள். தூய்மையை
இழக்கும்போது அனைவருக்கும் முன்பாக தலையை வணங்கத் தொடங்கி
விடுகிறாள். இன்று அனைவரும் அவளுக்குத் தலை வணங்குகின்றனர்,
நாளை தானே தலை வணங்கத் தொடங்குகிறாள்.
இப்போது குழந்தைகளாகிய நீங்கள் சங்கம யுகத்தில்
புருஷோத்தமர்களாக ஆகிக்கொண்டிருக் கிறீர்கள். நாளை எங்கே
இருப்பீர்கள்? இன்று இந்த வீடு வாழும் (உலகம்) இடம் என்னவாக
உள்ளது? எவ்வளவு அழுக்காகியுள்ளது. இது வேசியாலயம் என்றுதான்
சொல்லப்படுகிறது. அனைவரும் விஷத்தின் மூலம் பிறக்கின்றனர்.
நீங்கள் தான் சிவாலயத்தில் இருந்தீர்கள், இன்றிலிருந்து 5
ஆயிரம் வருடங்களுக்கு முன்பு மிகவும் சுகம் மிக்கவர்களாக
இருந்தீர்கள். துக்கத் தின் பெயர் அடையாளம் இருக்கவில்லை.
இப்போது மீண்டும் இப்படி ஆவதற்காக வந்துள்ளீர்கள்.
மனிதர்களுக்கு சிவாலயத்தைப் பற்றித் தெரியவே தெரியாது.
சொர்க்கம் சிவாலயம் என சொல்லப்படுகிறது. சிவபாபா சொர்க்கத்தின்
ஸ்தாபனையை செய்தார். பாபா என அனைவருமே சொல்கின்றனர், ஆனால்
தந்தை எங்கே என கேட்டால், சர்வவியாபி (எங்கும் நிறைந்தவர்) என
சொல்லி விடுகின்றனர். நாய், பூனை, மீன், ஆமையில் இருப்பதாக
சொல்லி விடுகின்றனர் எனும்போது எவ்வளவு வித்தியாசம் ஏற்பட்டு
விட்டது. நீங்கள் புருஷோத்தமர்களாக இருந்தீர்கள், பிறகு 84
பிறவிகள் எடுத்து எடுத்து, நீங்கள் என்னவாக ஆகியுள்ளீர்கள்? என
தந்தை கேட்கிறார். நரகவாசிகள் ஆகியுள்ளீர்கள். ஆகையால் அனைவரும்
பாடுகின்றனர் - ஓ பதீத பாவனா வாருங் கள். இப்போது தந்தை
பாவனமாக்குவதற்காக வந்துள்ளார். இது இறுதிப் பிறவி, விஷத்தை
அருந்து வதை விடுங்கள் என்று சொல்கிறார். ஆனாலும் புரிந்து
கொள்வதில்லை. தூய்மையடையுங்கள் என அனைத்து ஆத்மாக்களின் தந்தை
இப்போது கூறுகிறார். அனைவரும் பாபா என சொல்லவும் செய்கின்றனர்,
முதலில் ஆத்மாவுக்கு அந்த பாபா நினைவுக்கு வருகிறார், பிறகு
இந்த பாபா (பிரம்மா). நிராகாரத்தில் அந்த பாபா, பிறகு
சாகாரத்தில் இந்த பாபா. பரம ஆத்மா வந்து இந்த தூய்மையற்ற
ஆத்மாக்களுக்குப் புரிய வைக்கிறார். நீங்களும் கூட முதலில்
விசித்திரமாக (சரீரமற்றவர்களாக) இருந்தீர்கள். தந்தையுடன்
இருந்தீர்கள், பிறகு இங்கே நடிப்பை நடிப்பதற்காக வந்தீர்கள்.
இந்த சக்கரத்தை நல்ல விதமாகப் புரிந்து கொள்ளுங்கள். இப்போது
நாம் சத்யுகத்தில் புதிய உலகிற்குச் செல்பவர்கள். நாம்
சொர்க்கத்திற்குச் செல்வோம் என்று நீங்கள் ஆசைப்படு கிறீர்கள்
அல்லவா? கிருஷ்ணர் போல குழந்தை கிடைக்க வேண்டும் என நீங்கள்
சொல்லிக் கொண்டும் இருந்தீர்கள். இப்போது நான் உங்களை அதுபோல்
ஆக்குவதற்காக வந்துள்ளேன். அங்கே குழந்தைகள் கிருஷ்ணர்
போலத்தான் இருப்பார்கள். சதோபிரதானமான மலர்கள் அல்லவா. இப்போது
நீங்கள் கிருஷ்ணபுரிக்குச் செல்கிறீர்கள்!. நீங்கள்
சொர்க்கத்தின் எஜமான் ஆகின்றீர்கள். நான் மலராக ஆகியுள்ளேனா என
இப்போது தன்னையே கேளுங்கள். எங்காவது தேக அபிமானத்தில் வந்து
முள்ளாக ஆவதில்லைதானே? மனிதர்கள் தம்மை ஆத்மா என புரிந்து
கொள்வதற்குப் பதிலாக, தேகமாக நினைத்து கொள்கின்றனர். ஆத்மாவை
மறந்ததால் தந்தையை யும் கூட மறந்து விட்டனர். தந்தையை தந்தை
மூலம் தெரிந்து கொள்வதனால்தான் ஆஸ்தி கிடைக்கிறது.
எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடமிருந்து ஆஸ்தி அனைவருக்குமே
கிடைக்கிறது. ஆஸ்தி கிடைக்காதவர் என ஒருவர் கூட இருக்கப்
போவதில்லை. தந்தைதான் வந்து அனைவரையும் தூய்மையாக்குகிறார்,
நிர்வாண தாமத்திற்கு அழைத்துச் செல்கிறார். ஜோதியுடன் ஜோதியாக
ஐக்கியமாகி விட்டார், பிரம்மத்தில் கலந்து விட்டார் என அவர்கள்
சொல்லி விடுகின்றனர். கொஞ்சமும் ஞானம் இல்லை. நாம் யாரிடம்
வந்துள்ளோம் என நீங்கள் அறிவீர்கள். இது மனிதர்களின் சத்சங்கம்
அல்ல. ஆத்மாக்கள் பரமாத்மாவிடமிருந்து பிரிந்திருந்தனர்,
இப்போது அவருடய சங்கம் (தொடர்பு) கிடைத்திருக்கிறது.
உண்மையிலும் உண்மையான இந்த சத்யமான வரின் சங்கம் (தொடர்பு) 5
ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறைதான் கிடைக்கிறது. சத்ய-திரேதா
யுகங்களில் சத்சங்கம் இருப்பதில்லை. மற்றபடி பக்தி
மார்க்கத்தில் எண்ணிலடங்கா சத்சங்கங்கள் இருக்கின்றன. இப்போது
உண்மையில் சத்தியமானவர் ஒரு தந்தைதான் ஆவார். இப்போது அவருடைய
தொடர்பில் அமர்ந்திருக்கிறீர்கள். நான் இறை மாணவன், பகவான்
எனக்கு பாடம் படிப்பிக்கிறார் என்ற நினைவு இருந்தாலும் கூட ஆஹா!
எனது சௌபாக்கியம்!
நம்முடைய பாபா இங்கே இருக்கிறார், அவர் தந்தை, ஆசிரியர், பிறகு
குருவாகவும் இருக்கிறார். மூன்று பாகத்தையும் இப்போது நடித்துக்
கொண்டிருக்கிறார். குழந்தைகளை தன்னுடையவர்களாக ஆக்குகிறார்.
நினைவின் மூலமே பாவ கர்மங்கள் அழியும் என்று தந்தை சொல்கிறார்.
தந்தையை நினைவு செய்வதன் மூலமே பாவங்கள் நீங்குகின்றன. பிறகு
உங்களுக்கு ஒளி கிரீடம் கிடைத்து விடுகிறது. இதுவும் கூட ஓர்
அடையாளமாகும். மற்றபடி ஒளியைப் பார்க்க முடிகிறது என்றல்ல. இது
தூய்மையின் அடையாளமாகும். இந்த ஞானம் வேறு யாருக்கும்
கிடைக்காது. கொடுப்பவர் ஒரே ஒரு தந்தை ஆவார். அவருக்குள்
முழுமையான ஞானம் உள்ளது. நான் மனித சிருஷ்டியின் விதை ரூபம்
ஆவேன் என தந்தை சொல்கிறார். இது தலைகீழான மரம். இது கல்ப மரம்
அல்லவா. முதலில் தெய்வீக மலர்களின் மரமாக இருந்தது. இப்போது
முள் நிறைந்த காடாக ஆகி விட்டது, ஏனென்றால் 5 விகாரங்கள் வந்து
விட்டன. முதலில் முக்கியமானது தேக அபிமானம். அங்கே தேக அபிமானம்
இருப்பதில்லை. நாம் ஆத்மா என்பது மட்டும் தெரியும். மற்றபடி
பரமாத்மா தந்தையை தெரியாது. நான் ஆத்மா. . . அவ்வளவுதான்! வேறு
எந்த ஞானமும் கிடையாது. (பாம்பின் உதாரணம்) பிறவி பிறவிகளின்
பழைய காய்ந்து போன சட்டை இது (சரீரம்), இப்போது நீங்கள் இதை
விட வேண்டியுள்ளது என உங்களுக்குப் புரிய வைக்கப் படுகிறது.
இப்போது ஆத்மா மற்றும் சரீரம் இரண்டும் தூய்மையை இழந்துள்ளன..
ஆத்மா தூய்மையடைந்து விட்டது என்றால், இந்த சரீரம் விடுபட்டு
விடும். ஆத்மாக்கள் அனைத்தும் ஓடும். இந்த நாடகம் முடிவடைகிறது
என்ற இந்த ஞானம் இப்போது உங்களுக்குள் இருக்கிறது. இப்போது நாம்
தந்தையிடம் செல்ல வேண்டும், ஆகையால் வீட்டை நினைவு செய்ய
வேண்டும். இந்த சரீரத்தை விட்டு விட வேண்டும், சரீரம் அழிந்து
விட்டது என்றால், உலகம் முடிந்து விட்டது, பிறகு புதிய
வீட்டிற்குச் செல்வீர்கள், அப்போது புதிய சம்மந்தங்கள்
இருக்கும். எனினும், அவர்கள் பிறகு இங்கேயேதான் மறு பிறவிகள்
எடுப்பார்கள். நீங்கள் மலர்களின் உலகத்தில் மறுபிறவி எடுக்க
வேண்டும். தேவதைகள் தூய்மையானவர்கள் என அழைக்கப்படுகின்றனர்.
நாம்தான் மலர்களாக இருந்தோம், பிறகு முள்ளாக ஆகினோம், மீண்டும்
மலர்களின் உலகத்திற்குச் செல்ல வேண்டும் என நீங்கள் அறிவீர்கள்.
முன்னால் செல்லச் செல்ல உங்களுக்கு காட்சிகள் நிறைய தெரியும்.
இது விளையாட்டு. மீரா தியானத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்,
அவருக்கு ஞானம் இருக்கவில்லை. மீரா வைகுண்டத்திற்கு ஏதும்
செல்லவில்லை. இங்கேயேதான் எங்காவது இருப்பார். இந்த பிராமண
குலத்தைச் சேர்ந்தவர் என்றால், இங்கேயேதான் ஞானம்
எடுத்திருப்பார். நடனமாடினால் போதும், வைகுண்டத்திற்குச் சென்று
விடுவார் என்பதல்ல, அப்படி நிறைய பேர் நடனமாடிக் கொண்டிருந்தனர்.
தியானத்தில் சென்று பார்த்து விட்டு வந்தனர், பிறகு சென்று
விகாரிகளாகி விட்டனர். ஏறினால் வைகுண்ட ரசம், விழுந்தால் அதள
பாதாளத்தில் . . . என்று பாபா பயத்தை ஏற்படுத்துகிறார்.
ஞான-யோகத்தைக்கற்றீர்கள் என்றால் நீங்கள் வைகுண்டத்தின் எஜமானர்
ஆக முடியும், தந்தையை விட்டு விட்டால் விகாரம் என்ற சாக்கடையில்
விழுந்து விடுவீர்கள். ஆச்சரியப்படும்படியாக தந்தையுடையவராகி,
கேட்டு, மற்றவர்களுக்குக் கூறி, பிறகு ஓடியே விடுகின்றனர். ஆஹா
மாயா! எவ்வளவு பலமான அடி விழுந்து விடுகிறது. இப்போது தந்தையின்
ஸ்ரீமத்படி நீங்கள் தேவதை ஆகின்றீர்கள். ஆத்மா மற்றும் சரீரம்
இரண்டுமே உயர்வான வையாக இருக்க வேண்டுமல்லவா? தேவதைகள்
விகாரத்தின் மூலம் பிறவி எடுப்ப தில்லை. அது நிர்விகாரி உலகமாக
உள்ளது. அங்கே 5 விகாரங்கள் இருப்பதில்லை. சிவபாபா சொர்க்கத்தை
உருவாக்கி இருந்தார். இப்போது நரகமாக உள்ளது. இப்போது நீங்கள்
மீண்டும் சொர்க்கவாசி ஆவதற்காக வந்துள்ளீர்கள். நல்ல விதமாக
படிப்பவர்கள்தான் சொர்க்கத்திற்குச் செல்வார்கள். நீங்கள்
மீண்டும் படிக்கிறீர்கள், கல்பம் தோறும் படித்தபடி இருப்பீர்கள்.
இந்த சக்கரம் சுற்றியபடி இருக்கும். இது உருவாகி
உருவாக்கப்பட்ட நாடகம், இதிலிருந்து யாரும் விடுபடமுடியாது.
எதையெல்லாம் பார்க்கிறீர்களோ - கொசு பறந்தது என்றால்,
கல்பத்திற்குப் பிறகும் கூட பறக்கும். இதைப் புரிந்து கொள்வதில்
மிகவும் நல்ல புத்தி தேவை. இந்த படப்பிடிப்பு (ஷூட்டிங்)
நடந்தபடி இருக்கும். இது கர்ம க்ஷேத்திரமாகும். இங்கே
பரமதாமத்திலிருந்து நடிப்பை நடிப்பதற்காக வந்திருக்கிறோம்.
இப்போது இந்த படிப்பில் சிலர் மிகவும் புத்திசாலிகளாகி
விடுகின்றனர், சிலர் இப்போதுதான் படித்துக் கொண்டிருக்கின்றனர்.
சிலர் படித்து படித்து பழையவர்களையும் விட கூர்மையாக
ஆகிவிடுகின்றனர். ஞானக் கடல் அனைவருக்கும் கல்வி கற்றுத் தந்து
கொண்டிருக்கின்றார். தந்தையுடையவராகிவிட்டால் பிறகு உலகின்
ஆஸ்தி உங்களுடையது.ஆம், தூய்மையற்றிருக்கும் உங்கள் ஆத்மாவை
கண்டிப்பாக தூய்மையாக்க வேண்டும், அதற்கான சகஜமான யுக்தி -
எல்லைக்கப்பாற்பட்ட தந்தையை நினைவு செய்து கொண்டே இருந்தால்,
நீங்கள் தூய்மை ஆகி விடுவீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு
இந்த பழைய உலகின் மீது வைராக்கியம் வர வேண்டும். மற்றபடி முக்தி
தாமம், ஜீவன்முக்தி தாமம் உள்ளன, மேலும் நாம் ஒருவரைத் தவிர
வேறு யாரையும் நினைவு செய்ய மாட்டோம். அதிகாலையில் எழுந்து நான்
அசரீரியாக வந்தேன், அசரீரியாகி செல்ல வேண்டும் என்று பயிற்சி
செய்ய வேண்டும். பிறகு எந்த தேகதாரியையோ நாம் ஏன் நினைவு செய்ய
வேண்டும்! அதிகாலை அமிர்தவேளையில் எழுந்து தனக்குள் இப்படி
இப்படியாக பேசிக் கொள்ள வேண்டும். அதிகாலையை அமிர்தவேளை என
சொல்லப்படுகிறது. ஞானக்கடலிடம் ஞான அமிர்தம் உள்ளது. ஆக
ஞானக்கடல் சொல்கிறார் - அதிகாலை நேரம் மிகவும் நல்லது. அதிகாலை
எழுந்து மிகவும் அன்புடன் தந்தையை நினைவு செய்யுங்கள் - பாபா,
நீங்கள் 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு கிடைத்திருக்கிறீர்கள்.
இப்போது தந்தை கூறுகிறார் - என்னை நினைவு செய்தீர்கள் என்றால்
பாவங்கள் நீங்கிவிடும். ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். கண்டிப்பாக
சதோபிரதானமாக ஆக வேண்டும். தந்தையை நினைவு செய்யும் பழக்கம்
ஏற்பட்டு விட்டது என்றால் குஷியில் அமர்ந்திருப்பீர்கள்.
சரீரத்தின் கவர்ச்சி நீங்கியபடி செல்லும். பிறகு தேகத்தின்
உணர்வு இருக்காது. மிகவும் குஷியாக இருக்கும். நீங்கள்
தூய்மையாக இருந்தபோது குஷியில் இருந்தீர்கள். உங்கள் புத்தியில்
இந்த ஞானம் முழுமையாக இருக்க வேண்டும். முதன் முதலில்
வருபவர்கள் கண்டிப்பாக 84 பிறவிகள் எடுப்பார்கள். பிறகு சந்திர
வம்சத்தினர் குறைவாக, இஸ்லாமியர்கள் இன்னும் குறைவாக பிறவிகள்
எடுப்பார்கள். வரிசைக்கிரமமாக மரத்தின் வளர்ச்சி ஏற்படுகிறது
அல்லவா! முக்கியமானது தேவதா தர்மம், பிறகு அதிலிருந்து 3
தர்மங்கள் உருவாகின்றன. பிறகு இலை கிளைகள் வெளிப்படுகின்றன.
இப்போது நீங்கள் நாடகத்தைப் பற்றி அறிந்திருக்கிறீர்கள். இந்த
நாடகம் பேன் போல மெது மெதுவாக சுற்றியபடி இருக்கிறது. ஒவ்வொரு
வினாடியாக டிக் டிக் என நகர்தபடி இருக்கிறது, ஆகையால் ஒரு
வினாடி யில் ஜீவன் முக்தி என பாடப் படுகிறது. ஆத்மா தன் தந்தையை
நினைவு செய்கிறது. பாபா நாங்கள் உங்கள் குழந்தைகள். நாங்கள்
சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும். பிறகு நரகத்தில் ஏன்
இருக்கிறோம்? தந்தை சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யக் கூடியவர்,
பிறகு ஏன் நரகத்தில் இருக்கிறோம்? நீங்கள் சொர்க்கத்தில்
இருந்தீர்கள், 84 பிறவிகள் எடுத்து எடுத்து நீங்கள் அனைத்
தையும் மறந்து விட்டீர்கள் என தந்தை புரிய வைக்கிறார். பிறகு
இப்போது என் வழிப்படி நடந்து செல்லுங்கள். தந்தையின் நினைவின்
மூலமே பாவ கர்மங்கள் அழியும், ஏனெனில் ஆத்மாவில் தான் துரு
படிகிறது. சரீரம் ஆத்மாவின் ஆபரணம் ஆகும். ஆத்மா தூய்மையாக
இருக்கும் போது சரீரமும் தூய்மையானதாக கிடைக்கும். நாம்
சொர்க்கத்தில் இருந்தோம் என அறிந்துள்ளீர்கள். இப்போது மீண்டும்
தந்தை வந்துள்ளார் எனும்போது தந்தையிடமிருந்து முழுமையாக ஆஸ்தி
எடுக்க வேண்டுமல்லவா? 5 விகாரங்களை விட வேண்டும். தேக
அபிமானத்தை விட வேண்டும். வேலை மற்றும் காரியங்களை செய்தபடி
தந்தையை நினைவு செய்தபடி இருங்கள். ஆத்மா தனது பிரியதர்ஷனை
அரைக் கல்பமாக நினைவு செய்து வந்தது. இப்போது அந்த பிரியதர்ஷன்
வந்து விட்டார். காமச்சிதையில் அமர்ந்து நீங்கள் கருப்பாகி
விட்டீர்கள் என்று சொல்கிறார். இப்போது நாம் அழகாக ஆவதற்காக
வந்துள்ளோம். அதற்கான அக்னியாக இந்த யோகம் உள்ளது. ஞானத்தை சிதை
என சொல்வதில்லை. யோகத்தின் சிதையாகும். நினைவின் சிதையின் மீது
அமர்வதன் மூலம் பாவ கர்மங்கள் அழியும். ஞானம் நாலேஜ் (மெய்யறிவு)
என சொல்லப்படுகிறது. தந்தை உங்களுக்கு சிருஷ்டியின் முதல் இடை
கடைசியின் ஞானத்தை கூறுகிறார். உயர்ந்த வரிலும் உயர்ந்தவர்
தந்தை, பிறகு பிரம்மா, விஷ்ணு, சங்கர், பிறகு சூரியவம்சத்தினர்,
சந்திரவம்சத்தினர், அதன் பிறகு தர்மங்களின் உப கதைகள் உள்ளன.
மரம் எவ்வளவு பெரிதாக ஆகிவிடுகிறது. இப்போது இந்த மரத்தின் வேர்
இல்லை, ஆகையால் ஆலமரத்தின் உதாரணம் கொடுக்கப் படுகிறது. தேவி
தேவதா தர்மம் மறைந்துள்ளது. தர்மத்தில் கீழானவராக, கர்மத்தில்
கீழானவராக ஆகி விட்டனர். இப்போது குழந்தைகளாகிய நீங்கள்
உயர்வானவர்களாக ஆவதற் காக உயர்வான கர்மங்கள் செய்கிறீர்கள்.
தனது திருஷ்டியை (பார்வை) தூய்மையாக ஆக்கு கிறீர்கள். நீங்கள்
இப்போது கீழான கர்மம் செய்யக் கூடாது. கெட்ட திருஷ்டி (பார்வை)
பார்க்கக் கூடாது. தன்னைப் பாருங்கள் - நாம் லட்சுமியை
மணமுடிக்கத் தகுதி வாய்ந்தவராக ஆகி யுள்ளோமா? நாம் தன்னை ஆத்மா
என புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்கிறோமா? தினம்தோறும்
கணக்கு பாருங்கள். முழு நாளில் தேக அபிமானத்தில் வந்து எந்த
பாவ கர்மமும் செய்யவில்லைதானே? இல்லாவிட்டால் 100 மடங்கு ஆகி
விடும். மாயை சார்ட் வைப்பதற்கும் கூட விடாது. 2-4 நாட்கள்
எழுதி விட்டு, பிறகு விட்டு விடுகின்றனர். தந்தைக்கு சிந்தனை
இருக்குமல்லவா! இரக்கம் எற்படுகிறது - குழந்தைகள் என்னை நினைவு
செய்தார்கள் என்றால், அவர்களின் பாவங்கள் நீங்கும் அல்லவா.
இதில் முயற்சி தேவையுள்ளது. தனக்கு நஷ்டத்தை ஏற்படுத்தக் கூடாது.
ஞானம் மிகவும் சகஜமானதே. நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. அதிகாலை அமிர்தவேளை எழுந்து தந்தையிடம் இனிமையிலும்
இனிமையாகப் பேச வேண்டும். அசரீரி ஆவதற்கான பயிற்சி செய்ய
வேண்டும். கவனம் இருக்க வேண்டும் - தந்தையின் நினைவைத் தவிர
வேறு எந்த நினைவும் வரக் கூடாது.
2. தனது திருஷ்டியை மிகவும் சுத்தமாக தூய்மையாக ஆக்க வேண்டும்.
தெய்வீக மலர்களின் தோட்டம் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆகையால்
மலர் ஆவதற்கான முழு முயற்சி செய்ய வேண்டும்.
வரதானம்:
தனது சக்திசாலியான மனநிலையின் மூலம் மனதின் சேவைக்கான சான்றிதழ்
பெறக்கூடிய சுய பயிற்சியாளர் (தன்னை தானே பயிற்றுவிப்பவர்)
ஆகுக.
உலகத்திற்கு லைட் மற்றும் மைட்டின் (ஓளி மற்றும் சக்தியை)
கொடுப்பதற்காக அமிர்தவேளை நினைவில் சுயத்தின் பயிற்சியின் மூலம்
சக்திசாலியான வாயுமண்டலத்தை உருவாக்குங்கள். அப்பொழுது தான்
மனதின் சேவைக்கான சான்றிதழ் பெற முடியும். கடைசி நேரத்தில்
மனதின் மூலம் தான் பார்வையின் மூலம் திருப்திப்படுத்தக்கூடிய,
தனது உள்ளூணர்வின் மூலம் மற்றவர் களின் உள்ளுணர்வை
மாற்றுவதற்கான சேவை செய்ய வேண்டும். தனது சிரேஷ்ட நினைவின்
மூலம் அனைவரையும் சக்திசாலியாக மாற்ற வேண்டும். எப்பொழுது
அப்படிப்பட்ட லைட் மைட் தருவதற்கான பயிற்சி செய்யும் பொழுது
தான் தடையற்ற வாயுமண்டலம் உருவாகும், மேலும் இந்த கோட்டையும்
உறுதியாகிவிடும்.
சுலோகன்:
மனம், சொல், செயல் மூன்று விதமான சேவையை ஒன்றாக இணைந்து
செய்யக்கூடியவர் தான் புத்திசாலிகள் ஆவர்.
அவ்யக்த இசாரா: ஆன்மீக ஆளுமை மற்றும் தூய்மை எனும்
தனித்தன்மையையும் கையாளுங்கள்
நொடியில் முக்தி ஜீவன் முக்தியின் ஆஸ்தியை அடையுங்கள் என்று
சவால் விடுவார்களோ - அதை நடைமுறையில் கொண்டு வருவதற்காக
சுயமாற்றத்திற்கான வேகத்தை நொடியில் சென்ற டைந்துள்ளீர்களா?
சுய மாற்றத்தின் மூலம் மற்றவர்களையும் மாற்றம் செய்ய வேண்டும்.
பிரம்மா குமார் என்றால் உள்ளுணர்வு, பார்வை, செயல் மற்றும்
வார்த்தைகளில் மாற்றம். அதன் கூடவே தூய்மையின் பர்ஸ்னாலிட்டி,
ஆன்மீக இரால்ட்டியின் அனுபவம் செய்ய வையுங்கள். வந்ததுமே,
சந்திததுமே இந்த பர்ஸ்னாலிட்டியின் வசம் ஈர்க்கப்பட வேண்டும்.