18.01.26 காலை முரளி
ஓம் சாந்தி பாப்தாதா,
மதுபன்
‘இனிமையான குழந்தைகளே! ஞான இரத்தினங்களினால் புத்தியை நிறைத்து
தானமும் செய்ய வேண்டும். எந்த அளவிற்கு மற்றவர்களுக்கு பாதை
கூறுவீர்களோ, அந்த அளவிற்கு ஆசிர்வாதம் கிடைக்கும்’
ஓம்சாந்தி. இனிமையான குழந்தைகள் இதை பக்காவாக நினைவில் வைத்துக்
கொள்ள வேண்டும் - சிவபாபா எனக்கு படிப்பு கற்பிக்கின்றார்.
சிவபாபா பதீத பாவனாகவும் இருக்கின்றார், சத்கதி கொடுக்கும்
வள்ளலாகவும் இருக்கின்றார். சத்கதி என்றால் சொர்கத்தின்
இராஜ்யம் கொடுக் கின்றார். பாபா எவ்வளவு இனிமையானவராக
இருக்கின்றார்! எவ்வளவு அன்பாக அமர்ந்து குழந்தைகளுக்கு
கற்பிக்கின்றார்! பாபா தாதாவின் மூலம் எனக்கு கற்பிக்கின்றார்.
பாபா எவ்வளவு இனிமையானவராக இருக்கின்றார், எவ்வளவு அன்பானவராக
இருக்கின்றார்! எந்த கஷ்டமும் கொடுப்பது கிடையாது. என்னை நினைவு
செய்யுங்கள் மற்றும் சக்கரத்தை நினைவு செய்யுங்கள் என்று
மட்டுமே கூறுகின்றார். தந்தையின் நினைவில் உள்ளம் முற்றிலும்
உருகி விட வேண்டும். (குளிர்ந்ததாக ஆகிவிட வேண்டும்). ஒரே ஒரு
தந்தையின் நினைவு தான் துன்புறுத்த வேண்டும். ஏனெனில்
தந்தையிடமிருந்து எவ்வளவு உயர்ந்த ஆஸ்தி கிடைக்கிறது! ஆக எனக்கு
தந்தையின் மீது எவ்வளவு அன்பு இருக்கிறது? எனக்குள் எவ்வளவு
தெய்வீக குணங்கள் இருக்கின்றன? என்று தன்னை பார்க்க வேண்டும்.
ஏனெனில் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது முள்ளிலிருந்து மலராக
ஆகிக் கொண்டி ருக்கிறீர்கள். எவ்வளவுக்கெவ்வளவு யோகாவில்
இருப்பீர்களோ, அவ்வளவு மலராக, சதோ பிரதானமாக ஆகிக் கொண்டே
செல்வீர்கள். மலராக ஆகிவிட்டால் பிறகு இங்கு இருக்க முடியாது.
மலர் நிறைந்த பூந்தோட்டம் சொர்க்கமாகும். யார் அதிக முட்களை
மலர்களாக ஆக்குகின்றார்களோ, அவர்களைத் தான் உண்மையான
நறுமணமுள்ள மலர் என்று கூறலாம். அவர்கள் ஒருபோதும் முள் போன்று
துக்கம் கொடுக்கமாட்டார்கள். கோபமும் மிகப் பெரிய முள்ளாகும்.
பலருக்கு துக்கம் கொடுக்கிறது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள்
முட்கள் நிறைந்த உலகிலிருந்து விடுபட்டு கரைக்கு வந்து
விட்டீர்கள், நீங்கள் சங்கமத்தில் இருக்கிறீர்கள். தோட்டக்காரன்
மலர்களை ஒரு தனியான பாத்திரத்தில் வைப்பது போன்று மலர்களாகிய
உங்களையும் இப்பொழுது சங்கமயுகம் என்ற பாத்திரத்தில் தனியாக
வைத்திருக்கின்றார். பிறகு மலர்களாகிய நீங்கள் சொர்கத்திற்கு
சென்று விடுவீர்கள். கலியுக காடு அழிந்து விடும்.
இனிய குழந்தைகள் அறிவீர்கள் - பரலௌகீக தந்தையிடமிருந்து நமக்கு
அழிவற்ற ஆஸ்தி கிடைக்கிறது. உண்மையிலும் உண்மையான குழந்தைகள்
யாருக்கு பாப்தாதாவின் மீது முழுமை யான அன்பு இருக்கிறதோ,
அவர்களுக்கு மிகுந்த குஷி இருக்கும். நாம் உலகிற்கு
எஜமானர்களாக ஆகின்றோம். ஆம், முயற்சியின் மூலம் தான் உலகிற்கு
எஜமானர்களாக ஆக முடியும், கூறுவதனால் மட்டும் ஆகிவிட முடியாது.
ஒப்பற்ற குழந்தைகளுக்கு இந்த நினைவு சதா இருக்கும் - நாம்
நமக்காக மீண்டும் அதே சூரியவம்சம், சந்திரவம்ச இராஜ்யம் ஸ்தாபனை
செய்து கொண்டிருக்கின்றோம். தந்தை கூறுகின்றார் - இனிமையான
குழந்தைகளே! நீங்கள் எந்த அளவிற்கு பலருக்கு நன்மை செய்வீர்களோ,
அந்த அளவிற்கு உங்களுக்குத் தான் வட்டி கிடைக்கும். பலருக்கு
பாதை கூறினால் பலருடைய ஆசிர்வாதம் கிடைக்கும். ஞான இரத்தினங்
களினால் புத்தியை நிறைத்து பிறகு தான் செய்ய வேண்டும்.
குழந்தைகளுக்குள் எவ்வளவு குஷி இருக்க வேண்டும்! புத்திசாலி
குழந்தைகளாக இருப்பவர்கள் நான் பாபாவிடமிருந்து முழு ஆஸ்தி
அடைவேன் என்று கூறுவார்கள். ஒரேயடியாக பலியாகி விடுவார்கள்.
தந்தையிடம் மிகுந்த அன்பு இருக்கும். ஏனெனில் உயிர் தானம்
கொடுக்கும் தந்தை கிடைத்து விட்டார் என்பதை அறிவார்கள். ஞானம்
என்ற வரதானம் கொடுத்து எப்படியிருந்த நம்மை எப்படி ஆக்கி
விட்டார்! ஏழையிலிருந்து செல்வந்தவர்களாக ஆகிவிடுகிறோம். அந்த
அளவிற்கு பொக்கி‘த்தை நிறைத்து விடுகின்றார். எந்த அளவிற்கு
தந்தையை நினைவு செய்வோமோ, அந்த அளவிற்கு அன்பு இருக்கும்,
ஈர்ப்பு இருக்கும். ஊசி சுத்தமாக இருந்தது எனில் காந்தத்தின்
பக்கம் ஈர்க்கப்பட்டு விடும் அல்லவா! தந்தையின் நினைவின் மூலம்
துரு நீங்கிக் கொண்டே செல்லும். ஒரு தந்தையைத் தவிர வேறு யார்
நினைவும் வரக் கூடாது.
தந்தை புரிய வைக்கின்றார் - இனிமையான குழந்தைகளே! இப்பொழுது
தவறு செய்யாதீர்கள். சுவதரிசன சக்கரதாரி ஆகுங்கள், கலங்கரை
விளக்கு ஆகுங்கள். சுவதரிசன சக்கரதாரி ஆவதற் கான பயிற்சி
நன்றாக வந்து விட்டால் பிறகு நீங்கள் ஞானக் கடலாக
ஆகிவிடுவீர்கள். மாணவர் கள் படித்து ஆசிரியராக ஆகி
விடுகிறார்கள் அல்லவா! உங்களுடைய தொழிலே இது தான். அனைவரையும்
சுவதரிசன சக்கரதாரியாக ஆக்குங்கள், அப்பொழுது தான் சக்கரவர்த்தி
இராஜா-ராணி ஆவீர்கள். எனவே பாபா குழந்தைகளிடம் சதா கேட்கின்றார்
- சுவதரிசன சக்கரதாரி ஆகி அமர்ந்திருக்கிறீர்களா? தந்தையும்
சுவதரிசன சக்கரதாரி அல்லவா! இனிய குழந்தைகளாகிய உங்களை திரும்பி
அழைத்துச் செல்ல தந்தை வந்திருக்கின்றார். குழந்தைகளாகிய
நீங்கள் இன்றி நானும் அசௌகரியமாக இருக்கின்றேன். நேரம் வரும்
பொழுது அசௌகரியமாக ஆகிவிடு கின்றேன். நான் இப்பொழுது செல்ல
வேண்டும், அவ்வளவு தான். குழந்தைகள் அதிகம் அழைக்கிறார்கள்.
மிகவும் துக்கமானவர்களாக இருக்கிறார்கள். கருணை வருகிறது.
இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும்.
பிறகு நீங்கள் அங்கிருந்து தானாகவே சுகதாமம் சென்று விடுவீர்கள்.
அங்கு நான் உங்களுக்கு துணையாக இருக்க மாட்டேன். தனது
ஸ்திதியைப் பொறுத்து உங்களது ஆத்மா சென்று விடும்.
குழந்தைகளாகிய நீங்கள் எவ்வளவு நினைவில் இருப்பீர்களோ, அவ்வளவு
மற்றவர்களுக்கு புரிய வைப்பதில் பிரபாவம் ஏற்படும். நீங்கள்
அதிகம் பேசக் கூடாது. ஆத்ம அபிமானியாகி குறைவாக புரிய
வைத்தாலும் அம்பு பதிந்து விடும். தந்தை கூறுகின்றார் -
குழந்தைகளே! கடந்தவைகளை கடந்தவைகளாக ஆக்கி விடுங்கள். இப்பொழுது
முதலில் தன்னை மாற்றிக் கொள்ளுங்கள். சுயம் நினைவு செய்யவில்லை,
மற்றவர்களுக்கு கூறிக் கொண்டே இருந்தால் - இந்த ஏமாற்றம்
நடக்காது. உள்ளுக்குள் மனம் உருத்திக் கொண்டே இருக்கும். தந்தை
யிடம் முழு அன்பு இல்லை யெனில் ஸ்ரீமத் படி நடக்கமாட்டீர்கள்.
எல்லையற்ற தந்தையின் போதனைகள் போன்று வேறு யாரும் கொடுக்க
முடியாது. தந்தை கூறுகின்றார் - இனிமையான குழந்தைகளே! இந்த
பழைய உலகை இப்பொழுது மறந்து விடுங்கள். கடைசியில் இவை
அனைத்தையும் மறந்தே ஆக வேண்டும். புத்தி தனது சாந்திதாமம்
மற்றும் சுகதாமத்தில் ஈடுபட வேண்டும். தந்தையை நினைவு செய்து
செய்து தந்தையிடம சென்று விட வேண்டும். பதீத ஆத்மா செல்ல
முடியாது. அதுவோ பாவன ஆத்மாக்களின் வீடு. இந்த சரீரம் 5
தத்துவங்களினால் உருவாக்கப்பட்டது. எனவே 5 தத்துங்கள் இங்கு
இருப்பதற்காக ஈர்க்கின்றது. ஏனெனில் ஆத்மா இந்த சொத்து
அடைந்திருக்கிறது. ஆகையால் சரீரத்தின் மீது பற்று ஏற்பட்டு
விட்டது. இப்போது இதன் மீதிருக்கும் பற்றை நீக்கி தனது
வீட்டிற்கு செல்ல வேண்டும். அங்கு இந்த 5 தத்துங்களும்
இருக்காது. சத்யுகத்திலும் சரீரம் யோக பலத்தினால் உருவாகிறது.
இயற்கை சதோ பிரதானமாக இருக்கும். ஆகையால் ஈர்ப்பது கிடையாது.
துக்கம் ஏற்படுவது கிடையாது. இது புரிந்து கொள்வதற்கு மிகவும்
ஆழமான விசயமாகும். இங்கு 5 தத்துவங்களின் பலம் ஆத்மாவை
ஈர்க்கிறது. ஆகையால் சரீரம் விடுவதற்கு மனம் விரும்புவது
கிடையாது. இல்லையெனில் இதில் இன்னும் குஷியடைய வேண்டும்.
பாவனமாகும் போது வெண்ணெயிலிருந்து நெய் வெளிப்படுவது போன்று
சரீரம் விடுவீர்கள். எனவே சரீரத்திலிருந்து, அனைத்து
பொருட்களின் மீதிருக்கும் பற்றை முற்றிலும் அழித்து விட
வேண்டும். இதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. நான்
பாபாவிடம் செல்கிறேன், அவ்வளவு தான்! இந்த உலகிலிருந்து தனது
பெட்டி படுக்கைகளை தயாராக்கி முன் கூட்டியே அனுப்பி வைத்து
விட்டேன். கூடவே எடுத்துச் செல்ல முடியாது. மற்றபடி ஆத்மாக்கள்
செல்ல வேண்டும். சரீரத்தையும் இங்கேயே விட்டு விட வேண்டும்.
பாபா புதிய சரீரத்தின் சாட்சாத்காரம் செய்வித்து விட்டார். வைர
வைடூரியங்களின் மாளிகை கிடைத்து விடும். அப்படிப்பட்ட சுகதாம்
செல்வதற்காக எவ்வளவு முயற்சி செய்ய வேண்டும்! களைப்படையக்
கூடாது. இரவு பகல் அதிக வருமானம் செய்ய வேண்டும். எனவே பாபா
கூறுகின்றார் - தூக்கத்தை வெல்லக் கூடிய குழந்தைகளே! என் ஒருவனை
நினைவு செய்யுங்கள் மற்றும் ஞானச் சிந்தனை செய்யுங்கள்.
நாடகத்தின் ஞானத்தை புத்தியில் வைப்பதன் மூலம் புத்தி
ஒரேயடியாக குளிர்ச்சி ஆகிவிடும். மகாரதி குழந்தைகளாக
இருப்பவர்கள் ஒருபோதும் அசைந்து விடமாட்டார்கள். சிவபாபாவை
நினைவு செய்தால் அவர் பாதுகாக்கவும் செய்வார்.
தந்தை குழந்தைகளாகிய உங்களை துக்கத்திலிருந்து விடுவித்து
அமைதிக்கான தானம் கொடுக்கின்றார். நீங்களும் அமைதிக்கான தானம்
செய்ய வேண்டும். உங்களுடைய இந்த எல்லையற்ற அமைதி அதாவது யோக
பலம் மற்றவர்களையும் ஒரேயடியாக அமைதியாக்கி விடும். நீங்கள்
தந்தையின் நினைவில் இருந்து பிறகு பாருங்கள் - இந்த ஆத்மா நமது
குலத்தைச் சார்ந்ததா? இல்லையா? ஒருவேளை இருந்தால் அமைதியாகி
விடும். இந்த குலத்தைச் சார்ந்தவர் களுக்கு மட்டுமே இந்த
விசயங்களில் ரசனை ஏற்படும். குழந்தைகள் நினைவு செய்தால்
தந்தையும் அன்பு செலுத்துவார். ஆத்மா மீது அன்பு
செலுத்தப்படுகிறது. யார் அதிக பக்தி செய்திருக்கிறார்களோ
அவர்கள் தான் அதிகம் படிப்பார்கள் என்பதையும் அறிவீர்கள்.
தந்தையின் மீது எவ்வளவு அன்பு இருக்கிறது என்பதை அவர்களது முகம்
பார்த்தே அறிந்து கொள்ளலாம். ஆத்மா தந்தையை பார்க்கின்றது.
தந்தை ஆத்மாக்களாகிய நமக்கு கற்பித்துக் கொண்டிருக்கின்றார்.
தந்தையும் புரிய வைக்கின்றார் - நான் இவ்வளவு சிறிய புள்ளி
ஆத்மாவிற்கு கற்பிக்கின்றேன். நாளடைவில் உங்களுடைய நிலை அவ்வாறு
ஆகிவிடும். நான் சகோதரர்களுக்கு கற்பிக்கின்றேன் என்று புரிந்து
கொள்வீர்கள். தோற்றம் சகோதரியாக இருந்தாலும் பார்வை ஆத்மாவின்
பக்கம் செல்ல வேண்டும். சரீரத்தின் பக்கம் பார்வை முற்றிலுமாக
செல்லக் கூடாது, இதில் அதிக உழைப்பு இருக்கிறது. இது மிகவும்
ஆழமான விசயமாகும். மிக உயர்ந்த படிப்பாகும். அளந்து பார்க்கும்
போது (தராசில்) இந்த படிப்பின் பக்கம் அதிக பாரம் ஏற்பட்டு
விடும். நல்லது.
இனிமையிலும் இனிமையான, செல்லக் குழந்தைகளுக்கு தாய்-தந்தையாகிய
பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிக
தந்தை ஆன்மிக குழந்தைகளுக்கு நமஸ்தே.
அவ்யக்த மகாவாக்கியம் :மகாவீர் குழந்தைகளுக்கான குழுவின்
விசேசதா – ஏக்ரஸ், ஒரே ஸ்திதி - 09.12.75
மகாவீர் என்றால் விசேச ஆத்மா. அவ்வாறு மகாவீர், விசேச
ஆத்மாக்களுக்கான குழுவின் விசேசதா நிகழ்காலத்தில் இதுவாகத் தான்
இருக்க வேண்டும் - ஒரே நேரத்தில் அனைவரும் ஏக்ரஸ், ஒரே
ஸ்திதியில் நிலைத்திருக்க வேண்டும். அதாவது எந்த ஸ்திதியில்
எவ்வளவு நேரம் நிலைத்திருக்க விரும்புகிறீர்களோ, அவ்வளவு நேரம்
அந்த ஸ்திதியில் குழுவாக நிலைத்து விட வேண்டும். குழுவாக
அனைவரின் சங்கல்பம் என்ற விரல் ஒன்றாக இருக்க வேண்டும். எதுவரை
குழுவாக இந்த பயிற்சி இல்லையோ, அதுவரை வெற்றி ஏற்படாது.
குழுவிற்கு இப்பொழுது கட்டளை பிறப்பித்தால் - ஐந்து விநாடிக்கு
வீண் எண்ணங்களை அழித்து, விதை ரூப சக்திசாலி யான ஸ்திதியில்
ஏக்ரஸ் ஆக நிலைத்து விடுங்கள், இந்த பயிற்சி இருக்கிறதா? சிலர்
சிந்தனை செய்யக் கூடிய ஸ்திதியில் இருக்கிறார், சிலர் ஆன்மிக
உரையாடல் செய்து கொண்டிருக்கிறார் மற்றும் சிலர் அவ்யக்த
ஸ்திதியில் இருக்கிறார் என்று இருக்கக் கூடாது. கட்டளை
என்னவெனில் விதை ரூபத்தில் இருப்பது, ஆனால் செய்து
கொண்டிருப்பது உரையாடல் எனில் கட்டளையை ஏற்றுக் கொள்ளவில்லை
அல்லவா! இந்த பயிற்சி செய்ய வேண்டுமெனில் முதலில் வீண்
எண்ணங்களை அழித்து விட வேண்டும். வீண் எண்ணங்களினால் தான்
குழப்பம் ஏற்படுகிறது. இந்த வீண் எண்ணங்களை அழிப்பதற்கு, தனது
குழுவை சக்திசாலியாக அல்லது ஒரே மனதுடையதாக ஆக்குவதற்கு எந்த
சக்தி தேவை?
இதற்கு ஒன்று நம்பிக்கை, இரண்டாவது அனுசரிக்கும் சக்தி தேவை.
குழுவை இணைப்பதற்கான நூல் - நம்பிக்கை. ஒருவர் ஏதாவது செய்தால்,
தவறு செய்தாலும் கூட குழுவிற்காக அல்லது தனது சன்ஸ்காரத்தின்
படி அல்லது நேரத்தின் அநுசாரமாக அவர் என்ன செய்தாரோ அதில்
அவசியம் ஏதாவது உள்ளுணர்வு இருக்கும். குழு ரூபத்தில் எங்கு
சேவை இருக்கிறதோ, அங்கு அவரது சன்ஸ்காரத்தை கருணையுள்ளத்தின்
பார்வையுடன் பார்த்து, சன்ஸ்காரங்களை எதிரில் வைக்காமல்,
இதிலும் நன்மை இருக்கும், இவருடன் இணைந்து செய்வதில் கூட நன்மை
இருக்கிறது. இவ்வாறு ஒருவருக்கொருவர் மீது குழுவில் நம்பிக்கை
இருக்கும் போது தான் வெற்றி கிடைக்கும். முன் கூட்டியே வீண்
எண்ணங்களை உருவாக்கி விடக் கூடாது. சிலர் தங்களது தவறை உணரவும்
செய்கின்றனர், ஆனால் அதை ஒருபோதும் பரப்பமாட்ôர்கள், மாறாக
தனக்குள் ஏற்றுக் கொள்வார்கள். அதை வேறொருவர் பரப்பினால்
மோசமாக தோன்றும். அதே போன்று பிறரது தவறையும் தனது தவறு என்று
புரிந்து கொண்டு பரப்பக் கூடாது. வீண் எண்ணங்களை உருவாக்கக்
கூடாது, மாறாக அதையும் தனக்குள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த
அளவிற்கு ஒருவருக்கொருவர் மீது நம்பிக்கை இருக்க வேண்டும்.
அன்புச் சக்தியின் மூலம் சரி செய்து விட வேண்டும்.
லௌகீகத்திலும் கூட வீட்டு விசயங்களை வெளியில் கூறமாட்டார்கள்,
இதனால் வீட்டிற்குத் தான் நஷ்டம் ஏற்படும். ஆக குழுவில் கூட
இருப்பவர் என்ன செய்தாலும் அதில் அவசியம் இரகசியம் இருக்கும்.
அவர் தவறு செய்திருந்தாலும் கூட அதை மாற்றி விட வேண்டும். இந்த
இரண்டு விதமான நம்பிக்கை வைத்து ஒருவருக்கொருவரின் தொடர்பில்
நடந்து கொள்வது, குழுவில் வெற்றி என்பது கிடைக்கும். இதற்கு
தனக்குள் ஏற்றுக் கொள்ளும் சக்தி அதிகம் தேவை. வீண் எண்ணங்களை
ஏற்று விட வேண்டும். கடந்து போன சன்ஸ்காரங்களை ஒருபோதும்
நிகழ்காலத்தில் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். அதாது கடந்தவைகளை
நிகழ்காலமாக ஆக்காதீர்கள். கடந்தவைகளை நிகழ்காலத்தில்
ஒப்பிடுவதனால் தான் சங்கல்பங்கள் நீண்ட வரிசையாக ஆகிவிடுகிறது.
மேலும் எதுவரை இந்த வீண் எண்ணங்களின் வரிசை இருக்கிறதோ, அதுவரை
குழு ரூபத்தில் ஏக்ரஸ் ஸ்திதி இருக்க முடியாது.
பிறரது தவறை தனது தவறு என்று புரிந்து கொள்வது - இது தான்
குழுவை உறுதியானதாக ஆக்குவதாகும். இது எப்போது நடைபெறும்
என்றால் ஒருவருக்கொருவர் மீது நம்பிக்கை வைக்கும் போது. மாற்றக்
கூடிய நம்பிக்கை அல்லது நன்மை செய்யக் கூடிய நம்பிக்கை, இதில்
கரைத்துக் கொள்ளும் சக்தி அவசியம் தேவை. பார்த்தீர்கள் மற்றும்
கேள்விபட்டீர்கள், பிறகு அதை முற்றிலும் கரைத்து விட்டு, அவர்
மீது ஆன்மிக பார்வை மற்றும் நன்மைக்கான பாவனை வைக்க வேண்டும்.
அஞ்ஞானிகளுக்கு கூறுகின்றோம் - அபகாரிகளுக்கு உபகாரம் செய்ய
வேண்டும். ஆக குழுவிலும் கூட ஒருவருக்கொருவர் மீது கருணை பாவணை
இருக்க வேண்டும். இப்போது கருணை பாவணை குறைவாக இருக்கிறது.
ஏனெனில் ஆன்மிக ஸ்திதிக்கான பயிற்சி குறைவாக இருக்கிறது.
இவ்வாறு சக்திசாலியான குழு உருவாகும் போது தான் வெற்றி
கிடைக்கும். இப்பொழுது நீங்கள் வெற்றி வரவேற்கிறீர்கள், ஆனால்
பிறகு உங்கள் முன் வெற்றி சுயம் தலை வணங்கும். சத்யுகத்தில்
இயற்கை சேவகனாக ஆகிவிடுவது போன்று வெற்றி உங்கள் முன் சுயம் தலை
வணங்கும். வெற்றி உங்களை வரவேற்கும். சிரேஷ்ட ஞானம் இருக்கிறது,
ஸ்திதியும் சக்திசாலி யாக இருக்கிறது எனில் வெற்றி அடைவது என்ன
பெரிய விசயம்? சதா காலத்திற்கு ஏக்ரஸ் ஸ்திதியில்
இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்பது இருக்க முடியாது.
ஆனால் இதற்கு குழுவின் சக்தி தேவை. ஒருவர் ஏதாவது கூறினால்,
மற்றொருவர் ஏற்றுக் கொள்ள வேண்டும். எதிர்கொள்ளும் சக்தியை
பிராமண குடும்பத்தினரிடம் பயன்படுத்தக் கூடாது. அதை மாயாவின்
முன் பயன்படுத்த வேண்டும். குடும்பத்தில் எதிர்கொள்ளும் சக்தியை
பயன்படுத்தும் போது குழு சக்திசாலியாக ஆவது கிடையாது. எந்த ஒரு
விசயம் பிடிக்கவில்லை என்றாலும் ஒருவருக்கொருவர் மரியாதை
கொடுக்க வேண்டும். அந்த நேரத்தில் ஒருவரது சங்கல்பம் அல்லது
வார்த்தையை அவமதிக்கக் கூடாது. ஆகையால் இப்பொழுது கரைத்துக்
கொள்ளும் சக்தியை தாரணை செய்யுங்கள்.
குழுவில், பிராமணக் குழந்தைகளாகிய நீங்கள், தங்களுடைய தொடர்பின்
மொழி அவ்யக்த உணர்வுடையதாக இருக்க வேண்டும். பரிஸ்தாவைப் போன்று
அதாவது ஆத்மாக்கள் ஆத்மாக் களுடன் பேசிக் கொண்டிருக்கிறன. வேறு
ஒருவர் கூறிய தவறை சங்கல்பத்திலும் ஏற்றுக் கொள்ளக் கூடாது,
ஏற்றுக் கொள்ளும் படியும் வற்புறுத்தக் கூடாது. இப்படிப்பட்ட
ஸ்திதி உருவாகும் போது தான் தந்தையின் சுப பாவனையாகிய குழுவின்
சக்தி நடைமுறையில் வெளிப்படும். இதற்கு விசேஷ முயற்சி அதாவது
விசேஷ அனுபவங்களை தங்களுக்குள் கொடுக்கல்-வாங்கல் செய்யுங்கள்.
குழுவாக விசேஷ யோகா நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டே இருக்கம் போது
விநாச நெருப்பிற்கும் காற்று வீச ஆரம்பித்து விடும். யோக
நெருப்பின் மூலம் விநாச நெருப்பு பற்றிக் கொள்ளும். நல்லது. ஓம்
சாந்தி.
ஆசீர்வாதம்:
சாகாரத்தில் இருந்தாலும் அவ்யக்த பரிஸ்தா ரூபத்தின்
சாட்சாத்காரம் செய்விக்கக் கூடிய வெள்ளை உடை அணிந்தவர் மற்றும்
வெற்றி ஒளியுடையவர் ஆகுக.
இந்த வெள்ளை உடை அணிந்தவர்கள் யார்? எங்கிருந்து
வந்திருக்கிறார்கள்? என்று இப்பொழுது நாலாப் புறங்களிலும் இந்த
ஓசை ஒலித்துக் கொண்டிருக்கிறது போன்று இப்பொழுது நாலாப்
புறங்களிலும் பரிஸ்தா ரூபத்தின் சாட்சாத்காரம் செய்வியுங்கள் -
இதைத் தான் இரட்டை ரூப சேவை என்று கூறப்படுகிறது. மேகம்
நாலாப்புறங்களிலும் சூழ்ந்து விடுவது போன்று நாலாப்புறங்களிலும்
பரிஸ்தா ரூபம் வெளிப்பட வேண்டும். எங்கு பார்த்தாலும் பரிஸ்தா
தான் தென்பட வேண்டும். ஆனால் இது எப்பொழுது நடைபெறும் என்றால்
சரீரத்திலிருந்து விலகி சூட்சும சரீரத்தில் சுற்றி வரும்
பயிற்சி இருக்கும் போது தான் ஏற்படும். மனம் சக்திசாலியாக
இருக்க வேண்டும்.
சுலோகன்:
அனைத்து குணங்கள் அல்லது சர்வ சக்திகளுக்கும் அதிகாரி ஆவதற்கு
கட்டளைப்படி நடப்பவர் ஆகுங்கள்.
அவ்யக்த இசாரே: இந்த அவ்யக்த மாதத்தில் பந்தனத்திலிருந்து
விடுபட்டு ஜீவன்முக்தி ஸ்திதியின் அனுபவம் செய்யுங்கள்
தந்தை சுதந்திரமாக இருப்பது போன்று தந்தைக்குச் சமம் ஆகுங்கள்.
குழந்தைகள் சார்ந்திருப்பது பாப்தாதாவினால் பார்க்க இயலவில்லை.
ஒருவேளை தன்னை சுதந்திரம் ஆக்கிக் கொள்ள முடியவில்லை, தன
பலவீனங்களில் சுயம் கீழே விழுந்து கொண்டே இருந்தால் உலகை
மாற்றுபவர்களாக எப்படி ஆக முடியும்? நான் மாஸ்டர் சர்வசக்திவான்
என்ற நினைவு இப்பொழுது அதிகப்படுத்துங்கள். இதன் மூலம் எளிதாக
அனைத்து வலைகளிலிருந்து விடுபட்டு பறக்கும் பறவை ஆகிவிடுவீர்கள்.