19.04.26    காலை முரளி            ஓம் சாந்தி 15.12.2009      பாப்தாதா,   மதுபன்


பரிவாரத்துடன் அன்பான உறவை பராமரிப்பதற்காக ஞானம் நிறைந்தவராகி தந்தைக்குச் சமமான சாட்சி நிலையில் நிலைத்திருக்க வேண்டும், பாபா, சுயம், நாடகம் மற்றும் பரிவாரம் ஆகிய நான்கிலும் நிச்சயபுத்தியுடையவராகி வெற்றியாளர் (விஜயன்) ஆகவேண்டும்.

இன்று சக்திசாலியான தந்தை தன்னுடைய சக்திசாலி குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக் கின்றார். ஏனெனில் ஒவ்வொரு குழந்தையும் அன்புடன் பாபாவிற்குச் சமமாக ஆகுவதற்கான முயற்சியை மிகவும் ஈடுபாட்டுடன் செய்து கொண்டிருக்கின்றனர். பாப்தாதா குழந்தைகளைப் பார்த்து குஷியடைகின்றார். மேலும் உள்ளத்தில் குழந்தைகளுக்கான பாடல் ஆஹா குழந்தைகளே ஆஹா! என்று பாடுகின்றார். ஏனெனில் குழந்தைகள் தந்தையின் தலைக்கிரீடமாக இருக்கின்றனர். பாருங்கள் குழந்தைகளின் பூஜை இரட்டை ரூபத்தில் நடைபெறுகிறது, பாபாவின் பூஜையோ ஒரு ரூபத்தில் தான் நடக்கிறது. எனவே குழந்தைகள் தந்தையைக் காட்டிலும் தந்தை மூலமாக முன்னால் செல்கின்றார்கள். எனவே பாபா குழந்தைகளின் முயற்சியைப் பார்த்து குஷியடை கின்றார். வரிசைக்கிரமம் என்பது இருக்கவே செய்கிறது. ஆனால் புருஷார்த்தின் இலட்சியமானது முன்னேற வைத்துக் கொண்டி ருக்கின்றது.

இன்று அமிர்தவேளை நாற்புறமும் உள்ள குழந்தைகளிடத்தில் ஞானத்தின் அடித்தளமான ஒரு விசயத்தைப் பார்த்தார். அந்த அடித்தளம் நம்பிக்கை. நிச்சயபுத்தி விஜயந்தி (நம்பிக்கையான புத்தியே வெற்றி பெறும்) என சொல்லப்பட்டுள்ளது. எனவே உங்கள் அனைவருடைய நம்பிக்கை யைப் பார்த்தார். பாபாவிடம் நிச்சயபுத்தி அனைவருக்கும் வரிசைக் கிரமமாக இருக்கவே இருக் கின்றது. அதன் அடையாளம் அனைவரும் பாபாவை அறிந்து, பாபாவுடையவர்களாக ஆகியிருக் கின்றீர்கள் மேலும் இங்கு சந்திப்பு கொண்டாட வும் வந்துள்ளீர்கள். பாபாவிடம் ஒவ்வொரு குழந்தைக்கும் துண்டிக்கப்படாத நம்பிக்கை இருக்கின்றது. பாபாவுடன் கூடவே மேலும் சில நம்பிக்கை உறுதியாக இருக்க வேண்டும். அது என்னவென்றால் சுயத்தின் மீது நம்பிக்கை. கூடவே நாடகத்தின் மீது நம்பிக்கை மேலும் பரிவாரத்தின் மீது நம்பிக்கை. இந்த நான்கு விதமான நம்பிக்கையில் உறுதியாக அதாவது நிச்சயபுத்தி விஜயந்தி (நம்பிக்கைபுத்தி உடையவர்கள் வெற்றியடைபவர்கள்) என்று இருக்க வேண்டும். இந்த நான்கு நம்பிக்கைகளும் உறுதியாக இருக்கின்றதா எனச் சோதனை செய்யுங்கள். பாபாவிடத்தில் அனைவரும் என்னுடைய பாபா, நான் பாபா வுடையவன் என்று கூறுகின்றனர். என்னுடைய பாபா என்று கூறி பாபாவின் முழு அதிகாரத் தையும் அடைந்துவிட்டீர்கள். சதா பாபா மூலமாக அதிகாரியாகி அனைத்துப் பொக்கிஷங்களின் அதிகாரி ஆகிவிட்டீர்கள். கூடவே தன் மீதான நம்பிக்கையும் அவசிய மாகும் ஏன்? ஒருவேளை தன் மீது நம்பிக்கை இல்லையெனில் மனச்சோர்வு அடைகிறீர்கள். நான் பாபாவின் மூலமாக சுய பெருமைகளைப் பெற்றவன், சுயராஜ்ஜிய அதிகாரி ஆவேன் இவையே சுயத்தின் மீதான நம்பிக்கை ஆகும். சுயம் தந்தை எனக்கு எவ்வளவு சுய பெருமைகளைக் (சுவமான்) கொடுத்துள்ளார். ஒவ்வொரு சுவமானத்தையும் நினைவில் கொண்டு வந்தீர்கள் எனில் எவ்வளவு போதை ஏறுகிறது. இன்றைய காலத்தில் யாருக்காவது ஏதாவது ஒரு பட்டம் கிடைத்துவிட்டால் அதைக் கூட தமது பாக்கியமாகக் கருதுகின்றார்கள். ஆனால் குழந்தைகள் உங்களுக்கு ஒவ்வொரு சுவமானமும் யார் கொடுத்திருக்கின்றார்? சுயம் பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் சுவமான தாரியாக ஆக்கியுள்ளார். ஒவ்வொரு சுவமானத்தையும் நினைத்து குஷியில் பறக்கிறீர்கள். நான் பாபாவின் மூலமாக சுயராஜ்ஜிய அதிகாரியாக, சுவமானதாரியாக, கோடியில் சிலராக இருக் கின்றேன் என்ற அளவிற்கு தன் மீது சதா நம்பிக்கையின் போதை இருக்கவேண்டும். பாபாவிடம் நம்பிக்கை இருப்பதன் கூடவே தன்னிடமும் நம்பிக்கை இருக்கவேண்டியது அவசியமாகும், ஏனெனில் ஒருவேளை தன் மீது நம்பிக்கை இருக்கின்றதெனில் எங்கு நம்பிக்கை இருக்கிறதோ அங்கு ஒவ்வொரு செயலிலும் நிச்சயபுத்தி என்றால் சுவமான்தாரி வெற்றியாளர். நம்பிக்கை யின் அர்த்தமே வெற்றி ஆகும். பாபாவிடமோ நமக்கு நம்பிக்கை இருக்கிறதே என்று இருந்து விடக்கூடாது, பாபாவிடம் இருப்பது மிக நல்லது ஆனால் பாபாவின் கூடவே நான் யார் என்ற தனக்கான போதையும் அவசியமாகும். ஒவ்வொரு சுவமானையும் நினைவு செய்தீர்கள் எனில் நம்பிக்கை மற்றும் போதை என்பது உங்களுடைய நடத்தை மற்றும் முகத்தில் தென்படும். தென்பட்டுக் கொண்டிருக்கின்றது, மேலும் தென்பட்டுக்கொண்டே இருக்கும். கூடவே மூன்றாவது விசயம் - நாடகத்தின் மீதான நிச்சயம் மிக அவசியமாகும். ஏனெனில் நாடகத்தில் பிரச்சனைகளும் வருகின்றன, வெற்றியும் கிடைக்கின்றது. ஒரு வேளை நாடகத்தில் உறுதியான நம்பிக்கை இருந்தால் நாடகத்தின் நம்பிக்கையில் நிச்சய புத்தி உடையவர்கள் அந்த பிரச்சனையையும் சமாதான (தீர்வு) சொரூபமாக மாற்றி விடு கின்றார்கள் ஏனெனில் நம்பிக்கை என்றால் வெற்றி. எவற்றின் மீது வெற்றி உருவாகின்றன? மாற்றம் செய்வதில், ஒரே விநாடியில் பிரச்சனை மாறி தீர்வு சொரூபமாக ஆகிவிடுகின்றன. குழப்பத்தில் வரமாட்டீர்கள், நிலையாக இருப்பீர்கள். ஏனெனில் நாடகத்தின் ஞானத்தால் ஆடாத அசையாதவர்களாக ஆகின்றீர்கள். நான் தான் கல்பத்திற்கு முன்பு சமாதான சொரூபமாக அதாவது வெற்றி ஆத்மாவாக ஆகியிருந்தேன், ஆகியிருக்கிறேன், மேலும் நானே கல்பத்திற்கு பிறகும் ஆகுவேன் என்ற நிச்சயம் இருக்கிறது. ஆகையினால் இந்த நாடகத்தின் நம்பிக்கை, போதை உறுதி (பக்கா) ஆக்குகிறது, பெருமை இருக்கிறது, போதை இருக்கிறது நான் இருந்தேன், இருக்கிறேன், இருப்பேன். எனவே இந்த புருஷார்த்த்தி (முயற்சியாளர்) வாழ்வில் நாடகத்தின் ஞானமும் அவசியமாகும். நான்காவது பரிவாரத்தின் (குடும்பம்) மீதான நிச்சயம், ஏனெனில் பாபா வந்ததுமே பரிவாரத்தைப் படைத்தார். பாபா விடம் நம்பிக்கை இருப்பதைப் போன்று பரிவாரத்தின் மீதும் நம்பிக்கை அவசியம் வேண்டும், ஏனென்றால் பரிவாரம் யாருடையது? மேலும் இவ்வளவு பெரிய பரிவாரம் யாருக் கேனும் இருக்க முடியுமா! ஆகவே பரிவாரத்தின் மீதான நம்பிக்கை மிக அவசியமாகும். ஏனெனில் இவ்வளவு பெரிய பரிவாரம் உலகில் வேறு யாருக்காவது இருக்கின்றதா? சோதனை செய்யுங்கள் உங்களைப் போன்ற பரிவாரம் உலகில் யாருக்கு இருக் கின்றது? குடும்பம் என்ற முறையில் எந்தவொரு தெய்வீக பிதாக்களுக்கும் இல்லை, அங்கு பின்பற்று பவர்கள் (ஃபாலோவர்), இங்கு பரிவாரம் (குடும்பம்). பரிவாரத்தோடு சேவையில், சம்பந்தத்தில் இருக்கின்றீர்கள். நமக்கு பாபா விடம் தான் தொடர்பு, குடும்பத்தில் இல்லாவிட்டால் என்ன! என்று இருக்கக்கூடாது. பரிவாரத்தின் மீதான நிச்சயம் உங்களுக்கு 21 பிறவிகளுக்கு கூடவே வரவேண்டும். தெரிந்துள்ளீர்கள் அல்லவா! பரிவாரத்தின் சம்பந்தத்தில் வருகையில் இவ்வளவு பெரிய பரிவாரத்தில் அனைவருடனும் நமபிக்கையுடன் நடந்து கொண்டிருக்கின்றேனா, பரிவாரத்தில் ஒவ்வொருவரின் சமஸ்காரமும் விதவிதமாக இருக்கும் என்ற கவனம் கொடுக்க வேண்டியிருக்கிறது. உங்களுடைய நினைவுச் சின்னம் மாலை, மாலை யில் மணிகளைப் பாருங்கள் முதல் எண் எங்கிருக்கிறது மேலும் 108 வது எண் எங்கிருக் கிறது ஏனெனில் பரிவாரத்தில் விதவிதமான சமஸ்காரங்கள் இருக்கின்றன. எனவே இவ்வளவு பெரிய பரிவாரத்தில் வாழ்ந்தாலும் சமஸ்காரங்களைப் புரிந்துகொண்டு ஒருவர் மற்றவரிடத்தில் ஒரு குடும்பம், ஒரு தந்தை, ஒரு ராஜ்ஜியம் என ஒற்றுமையோடு நடக்க வேண்டும். எப்படி பெரிய பரிவாரமோ, அதே போல ஒருவர் மற்றவரிடத்தில் பெரிய உள்ளம், ஒவ்வொருவருக்காக சுபபாவனை, சுபவிருப்பத்தின் ஸ்திதியில் நிலைத்திருந்து செல்ல வேண்டும். ஏனெனில் பரிவாரத்தின் இடையில் தான் சமஸ்கார சுபாவம் வருகிறது. ஆனால் சிலர் பரிவாரத் திடம் எதற்கு, பாபாவிடம் இருக்கிறதே என நினைக்கலாம். ஆனால் இங்கு தர்மம் மற்றும் ராஜ்ஜியம் இரண்டும் ஸ்தாபனை இருக்கின்றன, வெறும் தர்மம் மட்டுமல்ல, மற்ற தர்மபிதாக்கள் யாரெல்லாம் இருக்கின்றனரோ அவர்களுக்கு தர்மம் மட்டும் தான், இராஜ்ஜியம் இல்லை, இங்கோ நீங்கள் இராஜ்ஜியமும் செய்யவேண்டும். ஆகவே இராஜ்ஜியத்தில் பரிவாரம் அவசியமானதாக இருக் கின்றது. மேலும் 21 பிறவிகள் விதவித மான ரூபத்தில் பரிவாரத்துடன் தான் இருக்க வேண்டும், பரிவாரத்தை விட்டு எங்கும் செல்ல முடியாது. எனவே சோதனை செய்யுங்கள் - பாபா அறிவார், நான் அறிவேன் என்றிருக்க வேண்டாம். காரியம் பாபாவிடம் தான், ஆனால் இந்த நான்கு நிச்சயத்தில் ஒரு நம்பிக்கை குறைவாக இருந்தாலும் குழப்பத்தில் வருவீர்கள். பாபா சகாஷ் கொடுக்ககூடியவர் தான், ஆனால் சேவையின் துணைவர்கள் யார்? சாகாரத்தில் துணையாக இருப்பது பரிவாரமே, பாபா பார்த்தார் மூன்று நிச்சயத்தில் அதிகளவு சரியாக நடந்துகொண்டிருக் கின்றனர். ஆனால் பரிவாரத்துடன் உறவை பராமரிப்பது, சமஸ்காரங்களை இணைப்பது, ஒருவருக் கொருவர் நன்மைக்கான பாவனையுடன் பார்ப்பது மற்றும் நடப்பது, இதில் பல குழந்தைகள் யதா சக்தி (இயன்ற அளவு) என்று ஆகிவிடுகின்றனர். ஆனால் பாபா பார்த்தார் - யார் பரிவாரத்தின் நிச்சயத்தில்யில் ஞானம் நிறைந்தவராகி சதா பாபாவிற்கு சமமாக சாட்சியாளர் மனோ நிலையில் (ஸ்திதியில்) நிலைத்திருந்து சம்பந்தத்தில் வருகின்றார்களோ, இருக்கின்றார்களோ அவர்களே நம்பர் ஒன் அல்லது முதல் பாகத்தில் (டிவிசனில்) வரு கின்றார்கள். எனவே சோதனை செய்யுங் கள். பாவ் (உள்ளுணர்வு), சுபாவம் பரிவாரத்தில் ஏற்படுகிறது, சிறு சிறு தவறுகளும் நடக்கிறது, தடைகள் வருவதும் பரிவாரத்தின் சம்பந்தத் தில் தான். எனவே அனைத்தையும் விட அவசிமானது இந்த பரிவாரத்தின் சம்பந்தத்தில் பாஸ் (தேர்ச்சி) ஆகவேண்டும். ஒருவேளை பரிவாரத்துடன் இணைந்து செல்வதில், சம்பந்தத்தை நிர்வகிப்பதில் ஏதாவது குறை இருக்கிறதெனில் அந்த தடை சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இருக்கலாம். ஆனால் தொந்தரவு செய்கிறது. இது ஏன், இது எப்படி போன்றவை பரிவாரத்தின் தொடர்பில் வருகிறது. ஆகவே ஏன் என்பதற்கு பதிலாக, ஏன் என்று கூறாமல், ஒன்றிணைந்து நடக்க வேண்டும், உறவை நிர்வகிக்க வேண்டும் ஏனெனில் பாபாவின் பரிவாரமானது பகவானின் பரிவாரம், பொதுவான பரிவாரமல்ல. ஆஹா பாபா! ஆஹா டிராமா! ஆஹா நான்! ஆஹா பரிவாரம்! என்ற நஷா இருக்க வேண்டும. சரி தானே! சோதனை செய்கிறீர்களா? நான்கிலும் தேர்ச்சி பெறுவீர்களா? நான்கிலும்? ஒன்றிலும் குறை இருக்கக்கூடாது. சோதனை செய்யுங்கள், இப்பொழுதே சோதனை செய்யுங்கள். ஏனெனில் வெற்றியாளர் ஆகுவதற்கான சாதனம் இது தான். பரிவாரத்தின் மத்தியில் தான் சமஸ்காரங்கள் வெளிப்படு கிறது. மேலும் சமஸ்காரம் இணைப்பது தன்னை மாற்றிக்கொள்வது மேலும் பரிவாரத்தையும் அந்தளவு உயர்ந்த பார்வையோடு பார்ப்பதாகும். பாப்தாதா முன்பே கூறியிருக்கிறார் அதாவது பாப்தாதா இறுதியில் வரும் குழந்தைகளைக் கூட மிகவும் பாக்கயசாலி என நினைக்கின்றார் ஏன்? பகவானை கண்டறிந்து விட்டனர், சாதாரண ரூபத்தில் தந்தையைக் கண்டறிந்தனர், பெரிய பெரிய மகாத்மாக்கள் கூட கண்டறிய முடியவில்லை, ஆனால் பாப்தாதாவின் கடைசி குழந்தை கூட என்னுடைய பாபா என்று கூறுகிறார். உள்ளத்தால் என்னுடைய பாபா என்று கூறுகின்றனர். ஆகவே பாப்தாதா கடைசி குழந்தையின் விசேஷத்தைப் பார்த்து, மற்ற குழந்தைகளைப் போலவே கடைசி குழந்தைக்கும் செல்லமான, அன்பு நினைவுகளைக் கொடுக்கின்றார். எனவே சோதனை செய்யுங்கள் மூன்றிலும் சரியாக இருக்கின்றோமா அல்லது நான்கிலும் சரியாக இருக்கின்றோமா அல்லது இரண்டிலா அல்லது ஒன்றில் சரியாக இருக்கின்றோமா? சோதனை செய்தீர்களா? செய்தீர் களா சோதனை? தந்தை, சுயம் (தன்), டிராமா, பரிவாரம் போன்ற நான்கு நிச்சயத்திலும் சரியாக இருக்கின்றேன் என நினைப்பவர்கள் கை உயர்த்துங்கள். சரியாக இருக்கின்றேனா? நல்லது சரியாக இருக்கின்றேனா? பேபர் வரும். ஆம் கை உயர்த்துங்கள். நல்லது பரிவாரத்தில் பாஸ் ஆகுவீர்களா? பரிவாரத்தின் சம்பந்தத் தில் வரவேண்டும், பரிவாரத்தை விட்டு எங்கு செல்வீர்கள், இருக்கவே வேண்டும், நிர்வகிக்க வேண்டும், இதில் தேர்ச்சி அடைவீர்களா? இது இல்லையென்றால் நன்றாக இருக்கும், இவர் ஏன் செய்கிறார், இது ஏன் நடக்கிறது, இந்த எண்ணங்கள் வருகிறது... இப்படி எப்போதாவது வருகிறதா? ஒரேயடியாக பரிவாரத்தின் போதை, நான்கு நிச்சயம் உள்ளவர் கள் ஒருபோதும் இப்படி அப்படி போன்ற சங்கல்பங்களில் வரமாட்டார்கள். எண்ணத்தில் இது ஏன் இப்படி என்று வந்தாலும், அந்த ஏன், என்ன என்பது அசைக்கக் கூடாது, மனநிலை (மூட்) மாறக் கூடாது. இவர்களைத்தான் நான்கிலும் தேர்ச்சி அடைந்தவர் என கூறப்படுகிறது. கை உயர்த்துங் கள். பாப்தாதாவை மகிழ்வித்தீர்கள் ஆனால் பாப்தாதா இந்த பரிவாரத்தின் விசயத்தில் அவ்வப் போது விசயங்களைக் கேட்கவேண்டியிக்கிறது, பார்க்கவேண்டியிருக்கிறது. ஒரேயடியாக பரந்த உள்ளம் கொண்டவராக வேண்டும், அனை வரையும் சுபபாவனை, சப விருப்பத்தினால் சரி செய்யவேண்டும், ஏனெனில் ஒரே பரிவாரம் தான். ஒற்றுமையாக நடக்கவேண்டும், நடத்த வேண்டும். நடப்பது மட்டுமல்ல, நடத்தவும் வேண்டும் ஆகவே பாப்தாதா இந்த விசயத்தில் கவனம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். பரிவாரத்தில் யார் எவ்வித குழப்பத்திலும் தேர்ச்சி அடைகிறார் களோ, வீண் எண்ணம் செய்வதில்லையோ, அவர்கள் மற்றவர் களையும் அவ்வாறு ஆக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் தங்கள் தங்களுடைய சென்டர்களில் எத்தனை பேர் இருக்கின்றீர் கள், சரி அதிகத் திலும் அதிகம் 25-50 பேர், அவ்வளவு இல்லை ஆனாலும் பெரிய இடம் என எடுத்துக் கொண்டால் அதில் 50-60 நல்லது, அதிகபட்சம் 100 என்று கூட புரிந்து கொள்ளுங்கள், அந்தளவெல்லாம் இல்லை ஆனால் புரிந்துகொள்ளுங்கள், பாப்தாதா அனைத்து சென்டர் களின் குழந்தைகளுக்கும் கடைசி நம்பரையும் தனது அன்பானவராக நடத்துகின்றார். மேலும் அன்பின் அடையாளமாக தினமும் பாப்தாதா அன்பு நினைவுகள் என்ன கொடுக்கிறார்? இனிமையிலும் இனிமையான, தெரியும் கசப்பானவர்களும் உள்ளனர், ஆனால் இனிய கசப்பான என்று அன்பு நினைவில் கூறியிருக்கிறாரா? அவர்களையும் செல்லக்குழந்தை என்று சொல்கிறார், கூறுவது மட்டுமில்லை, ஆனால் என்னுடைய குழந்தை என்னுடைய என்ற உணர்வோடு நடத்துகிறார், ஏனெனில் நாடகத்தில், மாலையில் அனைவரும் முதல் எண்ணாக இல்லை, இது ரிசல்ட் ஆகும். சமஸ்காரம் விதவிதமாக இருக்கிறது, இருக்கத்தான் வேண்டும். இல்லாவிட்டால் அனைவரும் ராஜா ஆகிவிடுவார்கள், பிரஜையாக யார் ஆவார்கள்? இராஜ்ஜியம் யார் மீது செய்வீர்கள்? நல்ல பிரஜையும் வேண்டும், ராயல் பிரஜை, ராஜதானி இருக்கின்றதல்லவா! இப்படி ஒவ்வொருவரும் தன்னைத்தான் சோதனை செய்யுங்கள். பரிவாரத்தில் ஏதாவது விசயத்தில் சமஸ்காரம் கெட்டதாக இருந்தால், ஆனால் எனது சமஸ்காரம் என்ன? ஒருவேளை கெட்டதைப் பார்த்து என்னுடைய சமஸ்காரமும் கெட்டுவிட்டது எனில், நானும் கெட்டுவிட்டேன். கெட்டது நல்லதையும் மாற்றி விடுகிறது.

பாபா ஸ்தாபனையின் காலத்தில் 350-400 பேரை ஒன்றாக வளர்த்தார், இந்தளவுக்கு இப்போது யாரிடமும் ஒன்றாக இருக்கும் பரிவாரம் இல்லை. சரி வேலைகள் வெவ்வேறாக இருக்கின்றது, அது காரியம் மேலும் பரிவாரத்தில் காரியம் இருக்கிறது. சாதாரண குடும்பமாக, சாதாரண வேலை, சாதாரண முறையில் முழு நாளின் காரியங்கள் செய்வதில் (தினச்சரியத்தில்) கழிப்பது, இதுவல்ல, விடுபட்ட மற்றும் அன்பான பரிவாரமாக இருக்கிறது. இதில் மனமுடைந்து போவது, பிறகு இவர் இப்படி செய்ததால் இப்படி ஆகிவிட்டது என சாக்குப்போக்கு சொல்கின்றனர். இவர் செய்தார் இப்படி ஆகிவிட்டது, ஆனால் பாபாவின் முன்பும் எந்த எதிர்ப்பு வரவில்லையா! கைவிட்டும் சென்றார்கள் அல்லவா! இது எதிர்ப்பு அல்ல, ஆனாலும் பாபா கூறினார், கைவிட்டுச் சென்றவர் களுக்கும் டோலி அனுப்புங்கள், அவர்களை அழைப்பதற்கான முயற்சி செய்யுங்கள், சேவை செய்யுங்கள், நினைவு கொடுங் கள். இவ்வாறு நான்கு நிச்சயத்தியிலும் தேர்ச்சி பெற வேண்டுமா அல்லது மூன்றிலா, இரண்டிலா? நம்பர்ஒன் ஆகவேண்டும். இதற்காகவே விநாசத்தின் ஏற்பாடுகள் தயாராக இருந்தாலும் நின்று கொண்டிருக்கின்றது. இயற்கையும் பாபாவிடம் வருகிறது, இப்போது அதிக சுமையாகி விட்டது என கூறுகிறது. இயற்கையும் கூட சுமையிலிருந்து விடுபட விரும்பு கிறது. மாயாவோ எனது பாகம் இப்போது திரும்பிச் செல்ல வேண்டும் என்பதை தான் அறிந்திருக் கிறேன், ஆனால் பிராமண பரிவாரத்தில் சிறிய விசயத்தில் எனக்கு துணையாக ஆகிவிடும் அப்படிப்பட்ட குழந்தைகளும் இருக்கின்றனர், என்னை அமர வைத்து விடுகின்றனர் என்று சொல்கிறது. ஆக தன்னுடைய இராஜ்ஜியத்தைக் கொண்டு வருவதில் இந்த நம்பிக்கை சதவிகிதத் தில் இருக்கின்றது ஆகையால் சமயம் நின்று கொண்டி ருக்கிறது. மற்றபடி மாயா மற்றும் இயற்கை இரண்டும் தயாராக இருக்கின்றது. இப்போது கூறுங்கள் கட்டளையிடட்டுமா? குழந்தை கள் ஒருவேளை எவரெடியாக இல்லையென்றால் மாயைக்கும் இயற்கைக்கும் கட்டளையிடவா? கட்டளையிடவா? கை உயர்த்துங்கள். தயாராக இருக்கின்றீர்களா? அப்படி கையை உயர்த்துக் கூடாது. பேபர் வரும், தேர்வுத்தாள் வரும், எவரெடியா?

இப்பொழுது பாப்தாதாவிற்கு ஒவ்வொரு குழந்தைகளிடத்தில் இந்த ஆசை வைத்துள்ளார் அதாவது எப்படி என்பதை நீக்கி இப்படி என்று ஆக்குங்கள். எப்படி செய்வது, எப்படியாகும் என்று அல்ல. இப்படி ஆகும் என்று இருக்கவேண்டும். என்ன செய்வது என்றல்ல, இப்படி செய்வது என்று ஆக்க வேண்டும். இந்த ஆசை எது வரை நிறைவேற்றுவீர்கள்? எவ்வளவு நேரம் வேண்டும்? ஏனெனில் அனைவரும் தயாராக வேண்டும். ஒருவேளை நீங்கள் தயார் என கை தூக்கினீர்கள், அவர்களது வேலை என்ன? ஒருவர் மற்றவரை தன்னைப் போல ஆக்கவேண்டும். நல்லது - பாப்தாதா அனைத்து செய்திகளின் ரிசல்ட் கேட்டார், நடந்ததெல்லாம் நல்ல படியாக நடந்தது மேலும் ரிசல்ட் நன்றாக ஊக்க உற்சாகமுடையதாக இருந்தது. எனவே இப்பொழுது ஏற்படத்தான் வேண்டும், செய்யத்தான் வேண்டும் என்று லட்சியம் வையுங்கள். சமாப்தியை (முடிவு) அருகில் கொண்டு வாருங்கள். நீங்கள் சிறிது அசைந்தாலும் சமாப்தியும் தூரப் போய்விடுகிறது. நீங்கள் தான் முடிவை அருகில் கொண்டு வர வேண்டும். ஏனெனில் இராஜ்ஜியம் செய்பவர்கள் தயாராக வில்லை என்றால் நேரம் என்ன செய்யும்? ஆகையால் அனைத்து சாக்குப்போக்கு, காரணம் போன்ற வார்த்தைகளை சமாப்தி செய்யுங்கள். நிவாரணத்தை எதிரில் கொண்டு வாருங்கள் ஏனெனில் துக்கமானவர்களுக்கு செய்தி கொடுத்து முக்தி ஆக்குவது தான் உங்கள் அனைவருடைய இலட்சியம் அல்லவா! அவர் களுக்கு முக்தி அளிக்காமல் நீங்கள் முக்திக்கு செல்ல முடியாது. எனவே அவர்களை முக்தி ஆக்குங்கள் ஏனெனில் பாபா வந்திருக்கின்றார் எனில் முழு உலகத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஆஸ்தி கொடுப்பார் அல்லவா! உங்களுக்கு ஜீவன் முக்தியின் ஆஸ்தி அளிப்பார், அவர்களுக்கும் ஆஸ்தி கொடுப்பார் அல்லவா! ஆகையால் அவர்களுடைய ஆஸ்தி முக்தி, உங்களுடைய ஆஸ்தி ஜீவன் முக்தி. எதுவரை முக்தி கொடுக்கவில்லையோ அதுவரை நீங்களும் செல்லமுடியாது. இதற்காக 12 முறை ஃபரிஸ்தா ரூபத்தின் மற்றும் 12 முறை நிராகார சொரூபத்தின் ஸ்திதியில் நிலைத்திருப்பதற்கான டிரில் செய்யுங்கள். இரவு பகல் என 24 மணி நேரத்தில் 24 முறை இந்த டிரில் செய்ய வேண்டும், தூங்கும் நேரத்தில் தாராளமாக தூங்குங்கள். தூங்க வேண்டாம் என பாப்தாதா கூறவில்லை. தூங்குங் கள் ஆனால் பகல் பொழுதில் அதிகம் செய்யுங்கள். ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடத்துகிறீர்கள் எனில் முழு நாளும் வேலை செய்கின்றீர்கள் தானே! விழித்திருக்கின்றீர்கள் அல்லவா! அதுபோல இந்த டிரில் செய்வதற்கும் நேரம் ஒதுக்குங்கள். நல்லது.

நாலாபுறங்களிலும் உள்ள பாபாவின் அன்பான, யார் அன்பானவர்களோ அவர்கள் சகயோகி யாகவும் அவசியம் இருக்கின்றார்கள், அன்பிற்கு கைமாறாக பிரத்யட்ச ரூபத்தில் ஒவ்வொரு காரியத்தில் உடல், மனம், செல்வம், மக்கள் இதில் ஒருவர் மற்றவருக்கு சகயோகி யாக அவசியம் இருப்பார்கள். அப்படிப்பட்ட அன்பான, சகயோகி (உதவி செய்யும்) குழந்தை கள், சதா பாபாவின் அன்பில் மூழ்கி இருக்ககூடிய, அன்பு மட்டும் அல்ல, ஆனால் அன்பில் மூழ்கியிருக்கக்கூடிய மேலும் சதா பாபாவின் அனைத்து காரியத்திலும் நேரம் எண்ணத்தை ஈடுபடுத்தக்கூடிய, ஏனெனில் சங்கமயுகத்தில் நேரம் மற்றும் சங்கல்பத்திற்கு மிகுந்த மதிப்பு இருக்கின்றது, ஒரு பிறவியில் பல பிறவிகளுக்கான பிராப்தியை உருவாக்கக் கூடிய, அப்படிப்பட்ட தீவிர முயற்சியாளர், ஒவ்வொரு குணம், ஒவ்வொரு சக்தியை, ஒவ்வொரு நேரத்தின் அனுசாரம் காரியத்தில் ஈடுபடுத்தக்கூடிய அப்படிப்பட்ட குண சம்பன்னமான, சக்தி சம்பன்னமான குழந்தைகளுக்கு மிக மிக கோடான கோடி மடங்கு அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

ஆசீர்வாதம்:
விதியை உருவாக்குவதின் (விதாதா) கூடவே வரங்களை வழங்கக்கூடிய வள்ளலாகி (வரதாதா) அனைத்து ஆத்மாக்களிடம் பலம் நிறைக்கக்கூடிய கருணை உள்ளம் படைத்தவர் ஆகுக!

ஒருவேளை யாரேனும் ஓர் ஆத்மா விருப்பப்படுகிறார்கள் ஆனால் தைரியம் இல்லாத காரணத் தால் விரும்பியும் அடைய முடிவதில்லை, அப்படிப்பட்ட ஆத்மாக்களுக்காக விதாதா அதாவது ஞானத்தை வழங்குபவர் ஆகுவதன் கூடவே கருணை உள்ளமுடைய வராகி வரதாதா ஆகுங்கள், அவர்களுக்கு உங்களுடைய சுப பாவனையின் கூடுதல் (ஏக்ஸ்ரா) பலம் கொடுங்கள். உங்களுடைய ஒவ்வொரு எண்ணமும் பாபாவிற்கு பலி ஆகியிருந்தால் அப்படிப்பட்ட வரதானி மூர்த்தி ஆகமுடியும். ஒவ்வொரு நேரம், ஒவ்வொரு எண்ணம், ஒவ்வொரு செயலில் பலி ஆகுவேன் என்ற எடுத்த உறுதிமொழியைக் கடைபிடியுங்கள்.

சுலோகன்:
தன்னுடைய சத்திய (நிலையான) சொரூபத்தின் நினைவிருந்தால்


சத்திய தன்மையின் (உண்மையின்) சக்தி வரும்.

அவ்யக்த பிரேரணை: மகான் ஆகுவதற்கு இனிமை மற்றும்

பணிவு என்ற குணத்தை தாரணை செய்யுங்கள்.

பாப்தாதா இப்போது ஒவ்வொரு குழந்தையின் நெற்றியில் சம்பூரண தூய்மையின் ஜொலிக்கக் கூடிய மணியைப் பார்க்க விரும்புகின்றார். ஆன்மிகத்தால் ஒளிரக்கூடிய கண்களைக் காண விரும்புகின்றார், பேச்சில் இனிமை, விசேஷமான, மதிப்பு மிக்க வார்த்தைகளை கேட்க விரும்பு கின்றார் மேலும் ஒவ்வொரு செயலில் திருப்தி, பணிவை சதா பார்க்க விரும்புகின்றார்.