19-05-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! ஸ்ரீமத் உங்களை
உயர்ந்தவர்களாக மாற்றுகிறது. ஆகவே ஸ்ரீமத்தை மறக்காதீர்கள்.
தன்னுடைய வழியை (மனப்போக்கை) விட்டுவிட்டு ஒரு பாபாவின் வழியில்
செல்லுங்கள்.
கேள்வி:
புண்ணிய ஆத்மாவாக மாறுவதற்கான வழி
என்ன?
பதில்:
1. புண்ணிய ஆத்மாவாக மாறவேண்டும்
என்றால் உண்மையான மனதோடு, அன்போடு ஒரு தந்தையை நினையுங்கள். 2.
கர்மேந்திரியங்களால் எந்த விகர்மமும் செய்யாதீர்கள். அனை
வருக்கும் வழி காட்டுங்கள். நாம் இந்த புண்ணியம் எவ்வளவு
செய்திருக்கிறோம் என தன்னுடைய மனதைக் கேளுங்கள். 100 மடங்கு
தண்டனை அடையும் படியான எந்த கர்மமும் செய்ய வில்லையா என தன்னையே
சோதியுங்கள். சோதிப்பதால் புண்ணிய ஆத்மாவாக ஆகி விடலாம்..
ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார்.
இப்போது நாம் சிவபாபாவின் வழிப்படி நடந்து கொண்டு இருக்கிறோம்
என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அவருடையது
உயர்ந்ததிலும் உயர்ந்த வழியாகும். உயர்ந்ததிலும் உயர்ந்த
சிவபாபா உயர்ந்தவர்களாக ஆக்குவதற்காக எப்படி உயர்ந்த வழியைக்
கொடுக்கிறார் என்பது உலகத்தினர் யாருக்கும் தெரியவில்லை. இந்த
இராவண இராஜ்யத்தில் எந்த ஒரு மனிதரும் மனிதர்களுக்கு உயர்ந்த
வழியை கொடுக்கக் முடியாது. இப்பொழுது நீங்கள் ஈஸ்வரிய வழிப்படி
நடக்கிறீர்கள். இச்சமயம் குழந்தைகளாகிய உங்களுக்கு பதீத
நிலையில் இருந்து பாவனமாவதற்கு ஈஸ்வரிய வழி கிடைத்துக் கொண்டு
இருக்கிறது. நாம் உலகத்திற்கே அதிபதியாக இருந்தோம் என இப்போது
உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. இந்த பிரம்மா அதிபதியாக
இருந்தார் என அவருக்குக் கூடத் தெரியவில்லை. உலகத்திற்கே அதிபதி
ஒரேயடியாக பதீதமாகியிருக்கிறார். இந்த விளையாட்டை மிகவும்
நன்றாக புத்தியில் புரிந்து கொள்ள வேண்டும். எது சரி, எது தவறு,
இதில் தான் புத்தியின் போராட்டம் உள்ளது. முழு உலகமும் தவறாகும்.
ஒரு தந்தை தான் உண்மையானவர், உண்மையை பேசக்கூடியவர். அவர்
உங்களை உண்மையான கண்டத்திற்கு அதிபதியாக மாற்று கிறார் என்றால்
அவருடைய வழியைப் பெற்று நடக்க வேண்டும். தன்னுடைய வழிப்படி
நடப்ப தால் ஏமாற்றம் அடைகிறீர்கள். ஆனால் அவர் குப்தமாக
இருக்கிறார். நிராகாரராகவும் இருக்கிறார். நிறைய குழந்தைகள்,
இதுவோ தாதாவின் வழி என நினைக்கிறார்கள். தவறாக புரிந்து
கொள்கிறார் கள். மாயை உயர்ந்த வழியைப் பெற விடுவதில்லை.
ஸ்ரீமத்படி நடக்க வேண்டும் அல்லவா!. பாபா, தாங்கள் என்ன
கூறுகின்றீரோ அதை நாங்கள் நிச்சயமாக ஏற்போம். ஆனால் பலர்
ஏற்றுக் கொள்வதில்லை. வரிசைக்கிரமத்தில் முயற்சிக்கேற்ப
செல்கிறார்கள். மற்றவர்களோ தனது வழிப்படி நடக்கிறார்கள். தந்தை
உயர்ந்த வழியைக் காண்பிப்பதற்காக வந்திருக்கிறார். இப்படிப்
பட்ட தந்தையை அடிக்கடி மறந்து போகிறார்கள். மாயை தந்தையின்
வழியைப் பெற விடுவ தில்லை. ஸ்ரீமத் மிகவும் எளிதானது அல்லவா!
உலகத்தில் நாம் தமோபிரதானமாக இருக்கிறோம் என்பது யாருக்கும்
புரிவதில்லை. என்னுடைய வழி பிரசித்தமானது, ஸ்ரீமத் பகவத் கீதை.
நான் 5000 வருடங்களுக்குப் பிறகு வருகிறேன், வந்து ஸ்ரீமதத்தை
அளித்து பாரதத்தை உயர்ந்ததிலும் உயர்ந்ததாக மாற்றுகிறேன் என
பகவான் கூறுகிறார். பாபா எச்சரிக்கை செய்கிறார். குழந்தைகள்
ஸ்ரீமத்படி நடப்பதில்லை. பாபா தினந்தோறும் ஸ்ரீமத்படி நடப்பதை
மறக்காதீர்கள் என புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார். இவரின் (பிரம்மா)
விஷயம் கிடையாது. அவருடைய விஷயம் என்று புரிந்துக் கொள்ளுங்கள்
அவரே இவர் மூலமாக வழி காண்பிக்கிறார். அவரே புரிய வைக் கிறார்.
உணவு போன்றவைகளைப் சாப்பிடுவதில்லை. நான் எதையும்
அனுபவிக்காதவன் (அபோக்தா) என்று கூறுகின்றார். குழந்தைகளாகிய
உங்களுக்கு ஸ்ரீமத் அளிக்கிறேன். நம்பர் ஒன் வழியை அளிக்கிறேன்,
என்னை நினையுங்கள். எந்த ஒரு விகர்மமும் செய்யாதீர்கள். எவ்வளவு
பாவம் செய்திருக்கிறேன் என்று தன்னுடைய மனதை கேட்டுக்
கொள்ளுங்கள். அனைவரின் பாவங்களின் குடமும் நிறைந்திருக்கிறது
என அறிகிறீர்கள். இச்சமயம் அனைவரும் தவறான வழியில்
இருக்கிறார்கள். இப்போது உங்களுக்கு பாபா மூலமாக சரியான வழி
கிடைத்திருக்கிறது. உங்களுடைய புத்தியில் முழு ஞானமும்
இருக்கிறது. கீதையில் என்ன ஞானம் இருக்க வேண்டுமோ அது இல்லை.
அது பாபாவால் உருவாக்கப்பட்டது கிடையாது. இதுவும் பக்தி
மார்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. பகவான் வந்து
பக்தியின் பலனை அளிக்கிறார் எனக் கூறு கிறார்கள். ஞானத்தினால்
சத்கதி என குழந்தைகளுக்குப் புரிய வைக்கப் பட்டிருக்கிறது. அனை
வருக்கும் சத்கதியும் கிடைக்கிறது. அனைவருக்கும் துர்கதியும்
ஏற்படுகிறது. இந்த உலகமே தமோபிரதானமாக இருக்கிறது. யாரும்
சதோபிரதானமாக இல்லை. மறு பிறவி எடுத்து எடுத்து இப்போது கடைசியை
வந்தடைந்திருக்கிறார்கள். இப்போது அனைவரின் தலைக்கு மேல் மரணம்
காத்திருக்கிறது. இது பாரதத்தின் விஷயம் ஆகும். கீதை என்பது
தேவி தேவதா தர்மத்தின் சாஸ்திரம் ஆகும். எனவே நீங்கள்மற்ற
தர்மத்தில் போவதால் என்ன நன்மை இருக்கிறது? ஒவ்வொருவரும்
தன்னுடைய குரான், பைபிள் போன்றவைகளைப் படிக்கிறார்கள். தனது
தர்மத்தைப் பற்றி அறிகிறார்கள். பாரதவாசிகள் மட்டும் தான் மற்ற
அனைத்து தர்மங்களிலும் மாறி சென்றிருக்கிறார்கள். மேலும் மற்ற
அனைவரும் அவரவர் தர்மத்தில் உறுதியாக இருக்கிறார் கள். ஒவ்வொரு
தர்மத்தினரின் முகமும் (முக தோற்றம்) தனிப்பட்டதாக இருக்கிறது.
குழந்தை களே, நீங்கள் உங்களுடைய தேவி தேவதா தர்மத்தை மறந்து
விட்டீர்கள் என பாபா நினைவு படுத்துகிறார். நீங்கள்
சொர்க்கத்தின் தேவதைகளாக இருந்தீர்கள். நானே அது என்பதன் பொருளை
பாரதவாசிகளுக்கு பாபா சொல்லியிருக்கிறார். மற்றபடி ஆத்மா
பரமாத்மா ஆவதில்லை. இந்த விஷயங்களை பக்தி மார்க்கத்தின்
குருக்கள் உருவாக்கியிருக்கிறார்கள். கோடிக்கணக்கான குருக்கள்
இருக்கிறார்கள். மனைவியிடம் கணவரே உன்னுடைய குரு, ஈஸ்வர் எனக்
கூறு கிறார்கள். கணவரே கடவுள் என்றால் ஏ பகவான்! ஏ ராம்! என ஏன்
கூறுகிறீர்கள்?. மனிதர்களின் புத்தி முற்றிலும் கல்லாகி விட்டது.
நானும் இவ்வாறே இருந்தேன் என இவருமே கூறுகிறார்.
வைகுண்டத்திற்கு அதிபதியாகிய ஸ்ரீகிருஷ்ணர் எங்கே! பிறகு அவரை
கிராமத்து சிறுவன் என்று கூறிவிட்டனர். சியாம் சுந்தர் எனக்
கூறுகிறார்கள். பொருளை புரிந்து கொள்ளவில்லை. யார் நம்பர் ஒன்
அழகாக இருந்தாரோ அவரே கடைசி நம்பரில் தமோபிரதானமாக கருப்பாக
மாறிவிட்டார் என இப்போது பாபா உங்களுக்குப் புரிய வைக்கிறார்.
நாம் அழகாக இருந்தோம். பிறகு கருப்பாகி விட்டோம் என நீங்கள்
புரிந்துக் கொள்கிறீர்கள். 84 பிறவிகளின் சக்கரத்தில் சுழன்று
இப்போது கருப்பிலிருந்து வெள்ளையாக மாறுவதற்காக பாபா என்னை
நினையுங்கள் என்ற ஒரே மருந்தை கொடுக்கின்றார். உங்களுடைய ஆத்மா
அழுக்கிலிருந்து தூய்மையாகி விடும். உங்களுடைய பிறவி பிறவிகளின்
பாவங்கள் அழிந்து போகும்.
இராவணன் வந்ததிலிருந்து நீங்கள் விழுந்து விழுந்து பாவ ஆத்மா
ஆகியிருக்கிறீர்கள் என அறிகிறீர்கள். இதுவே பாவ ஆத்மாக்களின்
உலகம் ஆகும். ஒருவரும் அழகாக இல்லை. தந்தையைத் தவிர அழகாக வேறு
யாரும் இல்லை. நீங்கள் சொர்க்கவாசியாக அழகாக மாறுவதற்காக
வந்துள்ளீர்கள். இப்போது சியாம் நரகவாசியாவார். ஏனென்றால் காம
சிதையில் அமர்ந்து கருப்பாகி உள்ளார்கள். காமம் மிகப் பெரிய
எதிரி என பாபா கூறுகின்றார். இதை யார் வெற்றி அடைகிறார்களோ
அவர்களே உலகத்தை வெற்றியடைகிறார்கள். நம்பர் ஒன் காமம் ஆகும்.
அவர்களுக்குத் தான் பதீதமானவர்கள் என்று கூறப்படுகிறது.
கோபப்படுபவர்களை பதீத மானவர் என்று கூற முடியாது.
பதீதத்திலிருந்து பாவனமாக்க வாருங்கள் என அழைக்கிறார்கள். எனவே
இப்போது பாபா வந்துள்ளார். இந்தக் கடைசி பிறவியில்
தூய்மையாகுங்கள் என கூறுகிறார். இரவிற்குப் பிறகு பகல் வருவது
போல பகலுக்குப் பிறகு இரவு ஏற்படுகிறது. அதே போல
சங்கமயுகத்திற்குப் பிறகு சத்யுகம் வர வேண்டும். சக்கரம்
சுழல்கிறது. மற்றபடி வேறு எங்கோ ஆகாயத்திலோ அல்லது பாதாளத்திலோ
உலகம் இல்லை. இதே சிருஷ்டி தான் சத்யுகம், திரேதா..... இங்கே
தான் இருக்கிறது. மரமும் ஒன்று தான். வேறு எதுவும் இருக்க
முடியாது. பல உலகங்கள் இருக்கிறது என்று கூறுவது அனைத்தும்
கட்டுக் கதையாகும். இது அனைத்தும் பக்தி மார்க்கத்தின்
விஷயங்கள் என பாபா கூறுகிறார். இப்போது பாபா சத்தியமான
விஷயங்களைக் கூறுகிறார். நாம் எவ்வளவு ஸ்ரீமத்படி நடந்து
சதோபிரதானமாக புண்ணிய ஆத்மாவாக மாறிக் கொண்டிருக் கின்றோம் என
தனக்குள்ளேயே பார்த்துக் கொள்ளுங்கள். தூய்மையானவர்களுக்கு
புண்ணிய ஆத்மா, விகாரி களுக்கு பாவ ஆத்மா எனக் கூறப்படுகிறது.
விகாரத்தில் ஈடுபடுவது பாவமாகும். இப்போது தூய்மையாகுங்கள் என
பாபா கூறுகிறார். என்னுடையவராகி விட்டீர்கள் என்றால் என்னுடைய
ஸ்ரீமத்படி நடங்கள். முக்கியமான விஷயம் எந்த பாவமும்
செய்யாதீர்கள். விகாரத்தில் ஈடுபடுதல் நம்பர் ஒன் பாவமாகும்.
இன்னும் நிறைய பாவங்கள் நடக்கிறது. திருடுதல், ஏமாற்றுதல்
போன்றவைகளும் செய்கிறார்கள். நிறைய பேரை அரசாங்கமும்
பிடிக்கிறது. நாம் எந்த பாவமும் செய்யவில்லையா என நீங்கள்
உங்களின் மனதைக் கேளுங்கள் என குழந்தைகளுக்கு பாபா கூறுகின்றார்.
நாம் திருடினோம் அல்லது இலஞ்சம் வாங்கினோம் என்றால் பாபா
அனைத்தும் அறிந்தவர், அதனால் அவருக்கு அனைத்தும் தெரியும் என
நினைக்காதீர்கள். இல்லை எல்லாம் அறிந்தவர் என்பதன் பொருள் இது
இல்லை. சரி, யாராவது திருடினார்கள், பாபாவிற்குத் தெரியும்.
பிறகு என்ன? யார் திருடினார்களோ அவர்களுக்கு 100 மடங்கு தண்டனை
கிடைக்கும். அதிகமான தண்டனை பெறுவார்கள். பதவியும் குறைந்து
போகும். ஒரு வேளை அம்மாதிரியான காரியங்களை செய்தார்கள் என்றால்
தண்டனை அனுபவிக்க நேரிடும் என பாபா புரிய வைக்கிறார்.
ஈஸ்வரனுடைய குழந்தையாக மாறிய பிறகும் சிலர் திருடு கிறார்கள்,
சிவபாபாவிடமிருந்து இவ்வளவு சொத்து கிடைக்கிறது. அவருடைய
பொக்கிஷத் திலிருந்து திருடுகிறார்கள் என்றால் இது மிகப் பெரிய
பாவம் ஆகும். சிலருக்குள் திருடும் பழக்கம் இருக்கிறது,
அவருக்கு சிறைப் பறவை என்று கூறப்படுகிறது. இது ஈஸ்வரனுடைய
வீடாகும். அனைத்தும் ஈஸ்வரனுடையது அல்லவா! பாபாவிடமிருந்து
சொத்து அடைவதற்காக ஈஸ்வரனின் வீட்டிற்கு வருகிறார்கள். ஆனால்
ஒரு சிலருக்கு பழக்கமாகி விடுகிறது. அதற்காக 100 மடங்கு
தண்டனையும் அனுபவிக்கிறார்கள். தண்டனைகளும் நிறைய கிடைக்கும்.
மேலும் அழுக்கான வீட்டில் ஒவ்வொரு ஜென்மத்திலும் சென்று
பிறப்பார்கள் என்றால் தனக்குத் தானே நஷ்டப் படுத்திக்
கொள்கிறார்கள் அல்லவா. இவ்வாறு பலர் இருக்கிறார்கள். முற்றிலும்
நினைப்பதில்லை. எதுவும் கேட்பதில்லை. புத்தியில் திருடுவது
பற்றி எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும். இவ்வாறு பலர் சில
சத்சங்கத்திற்குப் போகிறார்கள். செருப்புகளை திருடுகிறார்கள்.
அவர்களுடைய வேலையே அதுவாகும். எங்கே சத்சங்கம் நடக்கிறதோ அங்கே
சென்று செருப்புகளை திருடிக் கொண்டு வருவார்கள். உலகம்
முற்றிலும் அழுக்காக இருக்கிறது. இது ஈஸ்வரனின் வீடாகும்.
திருடும் பழக்கம் மிகவும் மோசமானது. ஒன்று திருடினாலும் திருடன்
தான், இலட்சம் திருடினாலும் திருடன் தான் என்று கூறப்படுகிறது.
நாம் எவ்வளவு புண்ணிய ஆத்மாவாக மாறி யிருக்கிறோம்? எவ்வளவு
பாபாவை நினைக்கிறோம்? எவ்வளவு சுய தரிசன சக்கரதாரியாக மாறி
யிருக்கிறோம்? எவ்வளவு நேரம் ஈஸ்வரிய சேவையில் இருக்கின்றோம்?
எவ்வளவு பாவங்கள் விலகிப் போய்க்கொண்டே இருக்கிறது? என தனக்குள்
கேட்டுக் கொள்ளுங்கள். தினந்தோறும் தன்னுடைய கணக்கு வழக்கைப்
பாருங்கள். எவ்வளவு புண்ணியம் செய்தேன், எவ்வளவு யோகத்தில்
இருந்தேன்? எவ்வளவு பேருக்கு வழிகாட்டினேன்? வேலை போன்றவைகளைச்
செய்யுங்கள். நீங்கள் கர்ம யோகியாகி கர்மம் செய்யுங்கள் நல்லது.
பாபா இந்த பேட்ஜ்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார். நல்ல
நல்ல மனிதர்களுக்கு இதைப் பற்றி புரிய வையுங்கள். இந்த மகாபாரத
போர் மூலமாகத் தான் சொர்க்கத்தின் வாசல் திறக்கப்படுகிறது.
கிருஷ்ணரின் சித்திரத்தின் கீழே எழுத்துக்கள் நன்கு பெரியதாக
இருக்கின்றது. ஆனால் குழந்தைகள் இந்த அளவிற்கு விசாலபுத்தி
உடையவராக வில்லை. சிறிது பணம் கிடைத்தாலே ஆட ஆரம்பித்து
விடுகிறார்கள். ஒரு சிலருக்கு நிறைய பணம் இருக்கிறது என்றால்
எங்களைப் போன்று யாரும் இல்லை என்று நினைக்கிறார்கள். எந்த
குழந்தைகளுக்கு பாபாவை பற்றி சிந்தனை இல்லையோ அவர்களுக்கு பாபா
எவ்வளவு அழிவற்ற ஞான இரத்தினங்களின் பொக்கிஷத்தை அளிக்கிறார்.
இருந்தாலும் அவர்களுக்கு அதைப் பற்றிய மதிப்பு இருக்காது. பாபா
ஒன்று சொல்வார், அவர்கள் ஒன்று செய்வார்கள். பொருட்படுத்தாததால்
நிறைய பாவங்கள் செய்கிறார்கள். ஸ்ரீமத்படி நடப்பதில்லை. பிறகு
கீழே விழுகிறார்கள். இதுவும் நாடகம் என்று பாபா கூறுகிறார்.
அவர்களின் அதிர்ஷ்டத்தில் இல்லை. பாபாவிற்கு தெரியும் அல்லவா!
நிறைய பாவங்கள் செய்கிறார்கள். பாபா நம்மை படிக்க வைக்கிறார்
என்ற நிச்சயம் இருந்தால் குஷி ஏற்பட வேண்டும். நான் எதிர்கால
புது உலகில் இளவரசன் இளவரசி ஆகப் போகிறோம் என நீங்கள்
அறிகிறீர்கள் என்றால் எவ்வளவு குஷி இருக்க வேண்டு!. ஆனால்
குழந்தைகளோ இது வரை வாடிப் போய்க் கொண்டே இருக்கிறார்கள். அந்த
மன நிலையில் நிலையாக இல்லை.
விநாசத்திற்காக ஒத்திகைகள் நடக்கும், இயற்கைச் சீற்றங்கள் கூட
நடக்கும் என பாபா புரிய வைத்துள்ளார். பாரதம் பலவீனமாகிக்
கொண்டே போகும். இது அனைத்தும் நடக்கும் என பாபாவே கூறுகின்றார்.
இல்லை என்றால் எப்படி அழிவு ஏற்படும்? பனி மழை பொழியும். பிறகு
விளை நிலங்களின் நிலை என்னவாகும்? இலட்சக் கணக்கானவர்கள் இறந்து
கொண்டே போவார்கள். யாரும் தெரிவிக்க முடியாது. எனவே, நான்
எவ்வளவு பாபாவை நினைக்கிறேன் என தன்னைத் தானே சோதியுங்கள் என
முக்கியமாக பாபா புரிய வைக்கிறார். பாபா, தாங்கள் மிகவும் இனிமை
யானவர், தாங்கள் அதிசயம் செய்கிறீர்கள், தங்களை நினைத்தால் 21
பிறவிகளுக்கு ஒரு போதும் நோய்கள் ஏற்படாது என்பது தங்களின்
கட்டளை. தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைத்தால் நான்
உறுதியளிக்கிறேன் என்று நேரடியாக பாபா உங்களுக்குக்
கூறுகின்றார், பிறகு நீங்கள் மற்றவர்களுக்குக் கூறுகிறீர்கள்.
தந்தையாகிய என்னை நினையுங்கள், மிகவும் அன்பு செலுத்துங்கள் என
பாபா கூறுகிறார். அழுக்கிலிருந்து தூய்மையாவதற்காக உங்களுக்கு
எவ்வளவு எளிதான வழியைக் காண்பிக்கிறேன்! நாங்கள் பெரிய பாவ
ஆத்மா என சிலர் கூறுகிறார்கள் சரி, இனிமேல் இது போன்ற பாவங்களை
செய்யாதீர்கள், என்னை நினைத்துக் கொண்டே இருந்தால் பல
பிறவிகளின் பாவங்கள் என்னென்ன இருக்கின்றதோ அது இந்த நினைவில்
எரிந்து கொண்டே போகும். நினைவு தான் முக்கியமான விஷயம் ஆகும்.
இதற்கு எளிய நினைவு என்று கூறப் படுகிறது. யோகா என்ற
வார்த்தையைக் கூட விட்டு விடுங்கள். சந்நியாசிகளின் ஹடயோகமோ
விதவிதமாக இருக்கின்றது. பல்வேறு விதமாக கற்பிக்கிறார்கள்.
இந்த பாபா நிறைய குருக்களிடம் சென்றிருக்கிறார் அல்லவா! இப்போது
எல்லையற்ற தந்தை இது அனைத்தையும் விடுங்கள் எனக் கூறுகிறார்.
இவர்கள் அனைவரையும் கூட நானே சீர்திருத்துகிறேன். இவ்வாறு
கூறுவதற்கு வேறு யாருக்கும் சக்தி கிடையாது. நான் இந்த
சாதுக்களையும் திருத்துகிறேன் என பாபா தான் கூறியுள்ளார். பிறகு
இவர்கள் எப்படி குருவாக முடியும்? எனவே, முக்கியமாக ஒரு
விஷயத்தை பாபா புரிய வைக்கிறார். நான் எந்தப் பாவமும்
செய்யவில்லையா என உங்கள் மனதையே கேளுங்கள். யாருக்கும் துக்கம்
கொடுக்கவில்லையா? இதில் எந்தத் துன்பமும் இல்லை. முழு நாளில்
எவ்வளவு பாவம் செய்துள்ளேன்? எவ்வளவு நினைத்தேன்? என தனக்குள்
சோதிக்க வேண்டும். நினைவினால் தான் பாவங்கள் எரிந்து போகும்.
முயற்சி செய்ய வேண்டும். இது மிகவும் கடினமான வேலையாகும்.
ஞானத்தை அளிப்பவர் ஒரே ஒரு தந்தை தான். தந்தை தான் முக்தி,
ஜீவன் முக்தியின் வழியை காண்பிக்கிறார். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. பாபா அழியாத ஞான இரத்தினங்களின் பொக்கிஷங்களைக் கொடுக்கிறார்.
அதற்கு மரியாதை கொடுங்கள். பொருட்படுத்தாதவர்களாக மாறி (அலட்சியம்
செய்து) பாவ கர்மங் களை செய்யக்கூடாது. பகவான் நமக்கு படிக்க
வைக்கிறார் என்ற நிச்சயம் இருந்தால் அளவற்ற குஷியில் இருக்க
வேண்டும்.
2. ஈஸ்வரிய வீட்டில் ஒருபோதும் திருட வேண்டும் என்ற எண்ணம்
வரக்கூடாது. இந்தப் பழக்கம் மிகவும் மோசமானது. ஒன்று
திருடினாலும் திருடன் தான், இலட்சம் திருடினாலும் திருடன்தான்
என்று சொல்லப்படுகிறது. நாம் எவ்வளவு புண்ணிய ஆத்மாவாக
ஆகியிருக்கிறோம் என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொள்ள வேண்டும்.
வரதானம்:
பலமிழந்து மனமுடைந்து, சக்தியற்ற ஆத்மாக்களுக்கு அபரிமிதமான
சக்தி தரும் ஆன்மீக இரக்கமனமுள்ளவராகுக!
ஆன்மீக இரக்கமனமுள்ள குழந்தைகள் மகாதானியாகி முற்றிலும்
நம்பிக்கையிழந்தவருக்குள்ளும் நம்பிக்கை பெறச் செய்வர்.
சக்தியற்றவர்களை சக்திவாய்ந்தவராக மாற்றிவிடுவர். ஏழைக்கும்,
ஆதரவற்றவருக்குமே தானம் வழங்கப்படும். சக்தியற்று மனமுடைந்து
பலவினமான பிரஜை களான ஆத்மாக்களுக்கும் ஆன்மீக இரக்க
மனமுள்ளவராகி மகாதானி ஆகுங்கள். உங்களுக்குள் ஒருவருக்கொருவர்
மகாதானி அல்ல. அவர்கள் ஒத்துழைப்பில் துணை செய்பவர்கள், சகோதர
சகோதரர்கள், உங்களுக்கு நிகரான முயற்சியாளர்கள் சகயோகம்
செய்யுங்கள் தானமல்ல.
சுலோகன்:
எப்போதும் ஒரு தந்தையின் உன்னத தொடர்பில் இருந்தால் எவரது
சகவாசத்தாலும் பாதிப்படையமாட்டீர்கள்.
அவ்யக்த சமிக்ஞை : ஆன்மீக கௌரவத்தையும் தூய்மையெனும்
ஆளுமையையும் கையாளுங்கள்.
தூய்மை மட்டுமின்றி அதனுடன் முகம் மற்றும் நடத்தையில்
ஆளுமையெனும் ஆன்மீக பெருமிதத்தில் இருங்கள். தனது ஆன்மீக
பர்சனாலிட்டியை நினைவில் வைத்து சதா முக மலர்ச்சி யுடன்
இருந்தால் அனைத்து கேள்விகளும் முடிந்து விடும். அமைதியின்றி
மன இறுக்கத்தில் உள்ள ஆத்மாக்களும் உங்களது மலர் முகம் கொண்ட
பார்வையால் முகமலர்ச்சி பெறுவார்கள்.