20.07.25    காலை முரளி            ஓம் சாந்தி  25.02.2006      பாப்தாதா,   மதுபன்


உற்சவ தினமான இன்று மனதின் ஊக்கம்-உற்சாகத்தின் மூலமாக மாயையிடமிருந்து விடுபட்டிருக்கும் விரதம் எடுங்கள், கருணை உள்ளத்துடன் மாஸ்டர் முக்தி வள்ளல் ஆகுங்கள், தந்தையுடன் செல்ல வேண்டுமெனில் சமநிலை பெறுங்கள்

இன்று நாலா புறமிருந்தும் மிகப் பிரியமான குழந்தைகளின் ஊக்கம் உற்சாகம் நிரம்பிய இனிமை யிலும் இனிமையான அன்பு நினைவுகளும் வாழ்த்துக்களும் வந்தடைந்த வண்ணம் உள்ளன. ஒவ்வொருவர் மனதிலும் பாப்தாதாவின் பிறந்த நாளுக்கான ஊக்கம் நிறைந்த வாழ்த்துக்கள் கலந்துள்ளன. நீங்கள் அனைவரும் கூட இன்று விசேஷமாக வாழ்த்துக்களை பெற வந்தீர்களா? தர வந்தீர்களா? பாப்தாதாவும் செல்லமான குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் குழந்தைகளின் பிறந்த நாளுக்கான பன்மடங்கு வாழ்த்துக்களை வழங்குகின்றார். இன்றைய நாளின் சிறப்பே முழு கல்பத்திலும் இல்லாது தந்தைக்கும் குழந்தைகளுக்கும் ஒன்றாக இணைந்தே கொண்டாடும் நாள் இன்று. இதனை விசித்திர ஜெயந்தி இது போன்ற ஜெயந்தி எப்போதாவது கொண்டாடியதுண்டா! ஆனால் இன்றோ பாப்தாதா குழந்தைகளின் ஜெயந்தி யையும் குழந்தைகள் பாப்தாதாவின் ஜெயந்தியையும் கொண்டாடுகின்றீர்கள், பெயர் சிவ ஜெயந்தி என்று சொல்லப்படுகின்றது. ஆனால் இந்த ஒரு ஜெயந்திக்குள் அனேக ஜெயந்தி அடங்கியுள்ளது. உங்கள் அனைவருக்கும் அதிக சந்தோஷம் உள்ளது தானே, நாம் பாபாவிற்கு வாழ்த்து தர வந்துள்ளோம். தந்தையும் நமக்கு வாழ்த்து தர வந்துள்ளார். ஏனெனில் தந்தைக்கும் குழந்தைகளுக்கும் ஒன்றாக பிறந்த நாள் நிகழ்வது இது அதிமிதமான அன்பின் அடையாள மாகும் தந்தை குழந்தைகளன்றி ஏதும் செய்ய இயலாது. குழந்தைகளும் தந்தையின்றி ஏதும் செய்ய இயலாது. பிறவியும் ஒன்றாக, சங்கம யுகத்தில் இருப்பதும் ஒன்றாகவே ஏனெனில் தந்தையும் குழந்தைகளும் (கம்பைண்டு) இணைந்துள்ளனர். உலக நன்மைக்கான செயலும் ஒன்றாகவே நடைபெறுகின்றது. தனித்து தந்தையும் செய்ய இயலாது, குழந்தைகளும் செய்ய இயலாது. உடனிருந்தே செயல்படுபவர் தந்தையின் வாக்கு உடனிருப்போம் உடன் செல்வோம் உடன் செல்வோம் அல்லவா வாக்கு உள்ளதல்லவா! தந்தைக்கும் குழந்தைகளுக்கும் இடையே யான இத்தகைய அன்பை பார்த்துள் ளீர்களா? பார்த்ததுண்டா, அனுபவம் செய்துள்ளீர்களா? எனவே இந்த சங்கமயுகத்திற்கு மகிமை உள்ளது இந்த சந்திப்பின் நினைவாக பல்வேறு விழாக்களை கொண்டாடுகின்றனர். இந்த சிவ ஜெயந்தி நன்னாளில் பக்தர்கள் வாருங்கள் என அழைக்கின்றார்கள். எப்போது வருவார் எப்படி வருவார் என யோசித்துக் கொண்டுள்ளனர். இங்கே நீங்கள் கொண்டாடுகின்றீர்கள்.

பாப்தாதாவிற்கு பக்தர்களின் மீது அன்பும் உள்ளது. இரக்கமும் வருகிறது எவ்வளவு முயற்சிக் கின்றார்கள் நீங்கள் எவ்வளவு முயற்சி செய்கிறீர்கள். தேடிக் கொண்டேயிருக்கின்றார் கள். நீங்கள் தேடினீர்களா? தந்தை உங்களை தேடினாரா? யார் யாரைத் தேடியது? நீங்கள் தேடினீர்களா? நீங்களோ சுற்றிக் கொண்டே இருந்தீர்கள். ஆனால் பாருங்கள் தந்தை குழந்தைகளை தேடிக் கண்டு பிடித்து விட்டார். குழந்தைகள் எங்கோ சென்று தொலைந்து போனீர்கள். இன்று கூட பாருங்கள் பாரதத்தின் அனேக ராஜ்யங்களிலிருந்து (மாநிலம்) வந்துள்ளீர்கள். ஆனால் அயல் நாடும் குறைந்ததல்ல. 100 தேசங்களிலிருந்து வந்துள்ளீர்கள். என்ன முயற்சி செய்தீர்கள்? கை உயர்த்துங்கள் தந்தையை தேடுவதில் யாரெல்லாம் உழைத்தீர்கள். பக்தியில் செய்தீர்கள் ஆனால் தந்தை தேடி கண்டுபிடித்த பிறகு என்ன முயற்சி செய்தீர்கள்? செய்தீர் களா முயற்சி ஒரு நொடியில் நிச்சயம் செய்துவிட்டீர்கள். ஒரே சொல்லில் நிச்சயம் ஆயிற்று. அந்த ஒரு சொல் எது? எனது குழந்தைகள் சொன்னீர்கள்: என்னுடைய பாபா தந்தையும் சொன்னார்: என்னுடைய குழந்தாய் அவ்வளவே தான் சுலபமான நிச்சயமா? கடினமா? சுலபம் தானே. சிறிது கடினம் என நினைப்பவர்கள் கை உயர்த்துங்கள். அவ்வப்போது கடினம் தானே? இல்லையா? சுலபம் தான் பலவீனங்கள் கடினமாக்குகின்றது.

பாப்தாதா பார்க்கின்றார் தன்னலமில்லாத உண்மையான பக்தர்கள் இன்றைய நாளில் மிகுந்த அன்புடன் விரதம் இருக்கின்றார்கள். நீங்களும் விரதம் இருந்திருப்பீர்கள். அவர்கள் சில தினங்களுக்கு விரதம் இருக்கின்றார்கள். நீங்களோ இப்போது இருக்கும் ஒரு விரதத்தால் 21 பிறவிக்கு விரதம் இருக்கின்றார்கள். நீங்களோ இப்போது இருக்கும் ஒரு விரதத்தால் 21 பிறவிகளுக்கு நன்மை பயக்கிறது. அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்றார்கள், விரதம் இருக்கின்றார்கள். நீங்கள் கல்பத்தில் ஒரு முறை விரதம் இருக்கின்றீர்கள். இதனால் 21 பிறவிக்கு உடலாலோ, மனதாலோ விரதம் இருக்க வேண்டியதில்லை. நீங்களும் விரதம் இருக்கின்றீர்கள், என்ன விரதம் ? தூய உள்ளுணர்வு, பார்வை, செயல் தூய வாழ்வெனும் விரதம் எடுத்துள்ளீர்கள். வாழ்வே தூய்மையானது பிரம்மச்சரியம் மட்டும் தூய்மையல்ல, ஆகாரம், விவகாரம், உலகம், சம்ஸ்காரம் அனைத்தும் தூய்மை. அவ்வாறு விரதம் எடுத்துள்ளீர் கள் தானே? எடுத்துள்ளீர்களா? தலையசையுங்கள் எடுத்துள்ளீர்களா! உறுதியாக எடுத்துள்ளீர் களா? உறுதியா சிறிது அரை குறையா? நல்லது மகா பூதமான காமம், இதனை விரதம் எடுத்தீர்களா, மீதமுள்ள நான்கிலும் விரதம் எடுத்துள்ளீர்களா? பிரம்மச்சாரி ஆகியுள்ளீர்கள் மேலும் பின்னால் உள்ள நான்கையும் விரதம் எடுத்தீர்களா? கோபம் விடுபட்டதா? கோபம் விடைபெற்றுச் சென்றதா? இரண்டாம் நம்பர் தானே பரவாயில்லை என்று இருந்து விட வில்லையே? எப்படி மகா பூதத்தை மகா பூதம் என புரிந்து கொண்டு மனம் சொல் செயலால் விரதம் வைத்தீர்களோ அவ்வாறே கோபத்தின் மீதும் விரதம் வைத்துள்ளீர்களா? கோபத்தின் மீது விரதம் வைத்துள்ளோம் என்று நினைக்கின்றீர்கள். குழந்தை குட்டிகளும் உள்ளது. லோபம், அகங்காரம் ஆனால் இன்று பாப்தாதா கோபத்தை பற்றி கேட்கின்றார். யாரெல்லாம் கோபத்தின் மீது முழு விரதம் வைத்துள்ளீர்கள், மனதளவிலும் கோபம் இல்லை, உள்ளத்திலும் கோபத்தின் உணர்வில்லை, அப்படிதானே? இன்று சிவஜெயந்தி நாளில் பக்தர் களும் விரதம் இருக்கின்றார்கள், பாப்தாதாவும் விரதம் குறித்து கேட்பார் அல்லவா? (சிலர் கை உயர்த்தினார்கள்) நல்லது, கை உயர்த்தியவர்களை படம் பிடியுங்கள். ஏனெனில் பாப்தாதா நீங்கள் கை உயர்த்துவதால் மட்டும் ஏற்பதில்லை. உங்கள் துணையில் இருப்பவர்களும் சான்றிதழ் தர வேண்டும் பிறகே பரிசு வழங்கப்படும். நல்லது - விசயம் ஏனெனில் பாப்தாதா பார்க்கின்றார். கோபத்தின் அம்சமும் உள்ளது. பொறாமை, சந்தேகம் இவையும் கோபத்தின் குழந்தை குட்டிகளே, இருப்பினும் நல்லது, தைரியம் வைத்துள்ளவர்களுக்கு பாப்தாதா இப்போது வாழ்த்துக்களை வழங்குகின்றார், ஆனால் சான்றிதழுக்குப் பிறகு பரிசு தருவார் ஏனெனில் பாப்தாதா வீட்டுப்பாடம் கொடுத்துள்ளார். அதன் ரிசல்ட்டையும் பாப்தாதா பார்க்கின்றார். இன்று பிறந்த நாளை கொண்டாடுகின்றீர்கள், பிறந்த நாளில் என்ன செய்வார்கள்? ஒன்று கேக் வெட்டுவார்கள், இப்போது ஒரு மாதம் உள்ளது. இந்த இரண்டு மாதத்தில் தனது வீண் எண்ணங்களெனும் கேக்கை வெட்டினீர்களா? இந்த கேக்கை வெகு சுலபமாக வெட்டி விடுகின்றீர்கள். இன்றும் வெட்டுவீர்கள் - ஆனால் வீண் எண்ணம் எனும் கேக்கை வெட்டினீர்களா? வெட்ட வேண்டும் அல்லவா. ஏனெனில் தந்தையுடன் செல்ல வேண்டும் இது உறுதியான வாக்கு தானே. யாருடன், உடன் செல்வீர்கள் உடன் செல்ல வேண்டுமெனில் சமநிலையும் பெற வேண்டும். இன்னும் மீதம் இருந்தாலும், இரண்டு மாதம் பூர்த்தியானது, இன்று எங்கிருந்தெல்லாம் பிறந்த நாள் கொண்டாட வந்துள்ளீர்கள், விமானம் மூலமாக, ரயில் மூலமாக, கார் மூலமாக வந்துள்ளீர்கள், ஓடோடி வந்துள்ளீர்கள் பாப்தாதாவிற்கு மகிழ்ச்சியே, ஆனால் பிறந்த நாளில் முதலில் பரிசு தருவார்கள், ஒரு மாதம் உள்ளது, ஹோலியும் வருகின்றது. ஹோலியில் சிறிது எரிக்கப்படும். சில வீணான எண்ணம் எனம் விதையும் உள்ளது. விதை இருந்தால் தண்டும் வரும், இலையும் வரும் இன்றைய மனதின் ஊக்கம், உற்சாகத்துடன் (சொற்களால் அல்ல மனதில் ஊக்கம், உற்சாகத் துடன்) மனதாலும் சொல்லாலும் தொடர்பு முறையிலும் மீதுமுள்ளவற்றை தந்தையின் பிறந்த நாளான இன்று தந்தைக்கு பரிசு தருவீர்களா? மனிதன் ஊக்கம் உற்சாகத்துடன் தருவீர்களா? இதில் லாபம் உங்களுக்குத் தான். பாபா பார்க்க விரும்புகின்றார், யார் ஊக்கம் உற்சாகத்துடன் தைரியத்துடன் செய்வீர்கள், செய்தே காண்பிப்போம் நல்லவர்களாகி காண்பிப்போம் என்பவர்கள் கை உயர்த்துங்கள். விட வேண்டியிருக்கும், சிந்தியுங்கள் சொல்லிலும் கூடாது, தொடர்பிலும் கூடாது, தைரியம் உள்ளதா? தைரியம் இருக்கிறதா? மதுபனில் இருப்பவர்களிடம், அயல்நாட்டவரிடம், பாரதவாசி களிடமும் ஏனெனில் பாப்தாதாவிற்கு அன்பு உள்ளது. ஆகவே பாப்தாதா யாரும் இருந்து விடக்கூடாது, அனைவரும் இணைந்தே செல்ல வேண்டும் என விரும்புகின்றார். உடன் செல்வோம் என்று வாக்கு கொடுத்திருக்கும் பொழுது சமமாகியே தீர வேண்டும். அன்பு உள்ளது தானே. கடினத்துடன் கை உயர்த்தவில்லை தானே?

பாப்தாதா இந்த குழுவினை, பிராமண பரிவாரத்தை தந்தைக்கு சமமான முகமாக பார்க்க விரும்புகின்றார். உறுதியான எண்ணத்துடன் தைரியம் வைத்தாலே போதும் பெரிய விசயம் அல்ல - ஆனால் பொறுமை சக்தி வேண்டும், ஏற்றுக் கொள்ளும் சக்தி தேவை, யாரிடம் பொறுமை மற்றும் ஏற்றுக் கொள்ளும் இவ்விரு சக்திகள் இருக்குமோ அவர்கள் சுலபமாகவே கோபத்தை விட்டு விடுவார்கள். பிராமண குழந்தைகளான உங்களுக்கு பாப்தாதா சர்வ சக்தி களையும் வரதானமாக கொடுத்துள்ளார். மாஸ்டர் சர்வ சக்திவான் என்ற பெயரும் உள்ளது. இந்த ஒரு மாதத்தில் சமமாகியே தீர வேண்டுமெனில் வாக்குறுதியின் சுலோகன் ஒன்றினை நினைவில் வையுங்கள். துக்கம் தராதே துக்கம் பெறாதே. அனேகர் இன்று நான் யாருக்கும் துக்கம் தர வில்லை என்று சோதனை செய்கின்றார்கள். ஆனால் சுலபமாக எடுத்துக் கொள் கின்றார்கள். நானா கொடுத்தேன் அவர் கொடுத்தார். ஆனால் ஏன் எடுத்தீர்கள்? எடுத்தவர் நீங்களா? கொடுத்தவரா? கொடுத்தவர் தவறிழைத்தார். அதனை தந்தை அறிவார் டிராமா அறியும் அதன் கணக்கை - ஆனால் நீங்கள் ஏன் எடுத்தீர்கள்? பாப்தாதா ரிசல்ட்டை பார்க்கும் பொழுது கொடுப் பதில் சற்று சிந்திப்பவர்கள் சுலபமாக எடுத்துக் கொள்கின்றார்கள். எனவே சமநிலை பெற முடிய வில்லை. ஒருவர் துக்கம் எவ்வளவு தான் கொடுத்தாலும் பெறக் கூடாது. இல்லையேல் உணர்ச்சி வசமாகும் வியாதி அதிகமாகின்றது. அவ்வாறு சிறிய சிறிய விசயத்திற்கெல்லாம் உணர்ச்சி வசமாகும் பொழுது வீண் எண்ணம் அழிவதில்லை. பிறகு தந்தையுடன் எப்படி செல்வீர்கள். தந்தைக்கு அன்பு உள்ளது. தந்தை உங்களை விட்டுச் செல்லமாட்டார், உடன் அழைத்துச் செல்வார். சம்மதமா? பிடித்துள்ளதா? பிடித்துள்ள தெனில் கை உயர்த்துங்கள் பின்னால் பின்னால் வர வேண்டாமே. தந்தையுடன் செல்ல வேண்டுமெனில் பரிசு கொடுத்தே ஆக வேண்டும் ஒருமாதம் அனைவரும் பயிற்சி செய்யுங் கள் துக்கம் பெறமாட்டேன். ஏதாவது நடக்கும். நான் கொடுக்கவில்லை, அவர் எடுத்துக் கொண்டார் என்று சொல்லாதீர்கள். பிறரைப் பார்க்காதீர்கள், தன்னைப் பாருங்கள் நான் தான் அர்ஜீணன் ஆக வேண்டும்.

பாப்தாதா ரிப்போர்ட்டில் பார்க்கின்றார் பெரும்பான்மையினரின் ரிப்போர்ட்டில் திருப்தி யில்லை. எனவே பாப்தாதா மீண்டும் ஒரு மாதத்திற்காக கோடிட்டுக் காண்பிக்கின்றார். ஒரு மாதம் பயிற்சி செய்தால் பழகி விடும். பழக்கமாக்க வேண்டும். இப்படித்தான் இருக்கும். இவ்வளவு தான் முடியும் என்ற லேசாக இருந்து விடக் கூடாது. பாப்தாதா மீது அன்பு உள்ளதெனில் ஒரு கோபத்தை அர்ப்பணிக்க முடியாதா? அர்ப்பணிப்பின் அடையாளம் தந்தையின் சொல்லை தலைமேற் கொள்பவர். வீண் எண்ணங்கள் இறதி நேரத்தில் மிகுந்த ஏமாற்றத்தையே தரும். ஏனெனில் நாலா புறமும் துக்கமான வாயு மண்டலம், இயற்கை ஆத்மாக் களின் வாயு மண்டலம் யாவும் தன் வசம் ஈர்ப்பதாகவே இருக்கும் ஒரு வேளை வீண் எண்ணங்களின் பழக்கம் இருப்பின் அதிலேயே சுழல வைக்கும். பாப்தாதாவிற்கு இன்று உள் நாடாயினும் அயல்நாடாயினும் ஒரு தந்தையின் குழந்தைகள் (விசேஷமாக தைரியமான எண்ணம்) வைக்க விரும்புகின்றார். நாலாபுறமும் உள்ள குழந்தைகள் தைரியம் மற்றும் உறுதியுடன் வெற்றி மூர்த்தியாகி பரமாத்மாவின் பிள்ளைகள் எங்களிடம் காமம் இல்லை, கோபம் இல்லை என்று உலகிற்கு அறிவிப்பு செய்வோமா, பிறரை போதையிலிருந்து, பீடி, சிகரெட்டிலிருந்து விடுவிக்கின்றீர்கள்.ஆனால் பாப்தாதா இன்று ஒவ்வொரு குழந்தையும் கோபத்தையும் துறந்தோம், காமத்தை துறந்தோம் என்று தைரியத்துடன் உலக மேடையில் காண்பிக்க விரும்புகின்றார். பிடித்துள்ளதா? தாதி மார்களுக்கு பிடித்துள்ளதா? முதல் வரிசையில் உள்ளவர்களுக்கு பிடித்துள்ளதா? மதுபன் நிவாசிகளுக்கு பிடித்துள்ளதா? மதுபன் நிவாசிகளுக்கும் பிடித்துள்ளது. அயல் நாட்டவருக்கும் பிடித்துள்ளதா? பிரியமான விசயத்தை செய்வதில் என்ன கடினம். பாப்தாதாவும் அபரிமிதமான கதிர்களை (சக்தி) தருவார். ஆசிகளை தருபவரும் பெறுபவருமான பிராமண பரிவாரம் எனும் வரை படம் தென்பட வேண்டும். ஏனெனில் சமயத்தின் கூக்குரல் இது. பாப்தாதாவிடமும் அட்வான்ஸ் பார்ட்டியினரின் கூக்குரலும் இதுவே மாயாவும் இப்போது களைத்துப் போனது. அதுவும் இப்போது முக்தியை வேண்டுகின்றது. முக்தி தருகின்றீர்கள் ஆனால் இடையிடையே சிறிது தோழமை செய்து விடுகின்றீர்கள். ஏனெனில் 63 பிறவியான நட்பு அல்லவா? ஆகவே பாப்தாதா கூறுகின்றார். ஹே மாஸ்டர் முக்தி வள்ளலே இப்போது அனைவருக்கும் முக்தி வழங்குங்கள். ஏனெனில் அகிலம் முழுவதற்கும் ஏதேனும் ஒரு பிராப்தியெனும் அஞ்சலி தர வேண்டும் எத்தனை வேலை செய்ய வேண்டியுள்ளது. ஏனெனில் இந்த சமயமே, நேரம் உங்கள் துணையாக உள்ளது. ஆத்மாக்கள் அனைவரும் முக்திக்கு சென்றே ஆக வேண்டும் சமயம் உள்ளது. மற்ற சமயத்தில் நீங்கள் முயற்சியே செய்தாலும் நேரம் இருக்காது. எனவே நிங்கள் தர முடியாது. இப்போது சமயம் உள்ளது எனவே பாப்தாதா கூறு கின்றார். முதலில் தனக்கு முக்தி தாருங்கள், பிறகு உலக ஆத்மாக்களுக்கு முக்தியெனும் அஞ்சலி வழங்குங்கள். அவர்கள் கூக்குரலிடுகின்றார்கள். துக்கத்தின் கூக்குரல் கேட்காது. மீண்டும் பாடல் பாடுகின்றனர். துக்கத்தில் இருபவர்களுக்கு சிறிதேனும் இரக்கம் காட்டுங்கள்.... இப்போதிலிருந்தே தயவு, கருணை, இரக்கத்தின் சம்ஸ்காரம் நிரம்பவில்லையெனில் உங்களுடைய ஜட மூர்த்தியில் தயவு, கருணை, இரக்கம் எனும் வைப்ரேஷன் எப்படி நிரம்பும்.

இரட்டை அயல் நாட்டவர் புரிந்துள்ளீர்களா, நீங்களும் துவாபரயுகத்தில் கருணையுள்ளத் துடன் தனது கற்சிலைகள் மூலமாக அனைவருக்கும் கருணை செய்வீர்கள் அல்லவா ! உங்களது சித்திரமும் உள்ளதா? அல்லது இந்தியர்களுடைய மட்டுமா? வெளி நாட்டவர் தமது சித்திரமும் இருப்பதாக உணருகின்றீர்கள்? சித்திரம் எவ்வாறு அமைக்கின்றார்கள்? சித்திரங் களிடம் சென்று என்ன கேட்கின்றார்கள். கருணை, கருணை என்றே கதருகின்றார்கள். ஆக இப்போதே சங்கம யுகத்தில் துவாபர கலியுகத்திற்காக ஜட சித்திரங்களில் வைப்ரேஷனை சேமித்தால் தான் உங்களது ஜட சித்திரங்கள் மூலமாக அனுபவம் செய்வார்கள் - பக்தர்களுக்கு நன்மை நிகழும். பக்தர்களும் உங்கள் வம்சாவழி தான். நீங்கள் அனைவரும் கிரேட் கிரேட் கிரான்ட் பாதரின் குழந்தைகளே. பக்தர்களாயினும், துயரத்தில் உள்ளவராயினும் உங்களது வம்சாவளியே. உங்களுக்கு இரக்கம் வரவில்லையா? வருகிறது ஆனால் சிறிது சிறிதே அவ்வப் போது வேறு விசயங்களில் பிசியாகி விடுகின்றிர்கள். இப்போது தனது முயற்சியிலேயே நேரம் அதிகம் செலவு செய்யாதீர்கள். கொடுப்பதில் செலவிடுங்கள். கொடுப்பதே எடுப்பதாகும். சிறிய சிறிய விசயங்கள் அல்ல. முக்தி நாளை கொண்டாடுங்கள் இன்று முக்தி நாளாக கொண்டாடு கிறோம் சரி தானே? முதல் வரிசையினர் சரியா? மதுபன் நிவாசிகள் சரியா?

இன்று மதுபன் நிவாசிகள் மிகப் பிரியமாகின்றார்கள் ஏனெனில் மதுபனை வெகு எளிதில் பின்பற்றுகின்றனர். ஒவ்வொரு விசயத்திலும் மதுபனை சுலபமாகவே பின்பற்று கின்றனர். மதுபன் நிவாசிகள் முக்தி நாளை கொண்டாடினால் அனைவரும் பின்பற்றுவார்கள். மதுபன் வாசிகள் அனைவரும் மாஸ்டர் முக்திதாதா ஆகி விடுங்கள் ஆவிர்கள் தானே? (அனைவரும் கை உயர்த்துங்கள்) மிக நல்லது. நல்லது இப்போது பாப்தாதா எதிரில் உள்ளவர்கள் உள்நாடு, வெளிநாட்டில் தொலைவில் கேட்டுக் கொண்டிருப்பவர்கள், பார்த்துக் கொண்டிருப் பவர்கள் அனை வருக்கும் டிரில் செய்விக்கின்றார். அனைவரும் தயாரா அனைத்து எண்ணங்களையும் ஒதுக்கி வையுங்கள். இப்போது ஒரு நொடியில் மனம், புத்தி மூலமாக தமது இனிய வீட்டை சென்றடையுங்கள்... இப்போது பரம் தாமம் விட்டு சூட்சும வதனம் செல்லுங்கள்..... இப்போது சூட்சும வதனம் விட்டு இந்த சாகார மண்ணுலகில் தமது ராஜ்யமான சொர்க்கத்தை சென்றடையுங் கள்..... இப்போது தமது புருஷோத்தம சங்கமயுகத்தை வந்தடையுங்கள்...... இப்போது மதுபனிற்கு வந்து விடுங்கள். இவ்வாறாக மீண்டும் மீண்டும் சுயதரிசன சக்ரதாரியாக சக்கரம் சுழற்றிக் கொண்டேயிருங்கள். நல்லது.

நாலாபுறமும் உள்ள அன்பான, அதிர்ஷ்டசாலியான குழந்தைகளுக்கு சதா சுயராஜ்யம் மூலம் சுயமாற்றம் செய்யும் ராஜா குழந்தைகளுக்கு சதா உறுதி தன்மை மூலம் வெற்றியைப் பெறும் வெற்றி நட்சத்திரங்களுக்கு சதா மகிழ்ந்திருக்கும் பாக்கியசாலி குழந்தைகளுக்கு பாப்தாதாவின் மற்றும் இன்று குழந்தைகளின் பிறந்த நாளில் வாழ்த்துக்கள், ஆசிகள், அன்பு நினைவுகள் அவ்வாறு உயர்ந்த குழந்தைகளுக்கு நமஸ்காரம்.

ஆசீர்வாதம்:
உலக நன்மைக்கான பொறுப்பை உணர்ந்து சமயம் மற்றும் சக்திகளை சிக்கனம் செய்யும் மாஸ்டர் படைப்பாளர் ஆகுக.

உலகின் அனைத்து ஆத்மாக்களும் உயர்வான ஆத்மாக்களான உங்களது குடும்பம் எவ்வளவு பெரிய குடும்பமோ அவ்வளவு சிக்கனம் கையாள வேண்டும். ஆக அனைத்து ஆத்மாக்களையும் முன்னால் வைத்து தன்னை உலகளாவிய சேவையில் நிமித்தமான கருவி யென புரிந்து தனது நேரம் மற்றும் சக்திகளை செயல்படுத்துங்கள் தனககெனவே சம்பாதித் தோம், சாப்பிட்டோம் முடித்தோம் என்று அலட்சியமாகாதீர்கள். அனைத்து பொக்கிஷங் களுக்குக்கும் கணக்குப் போடுங் கள் மாஸ்டர் படைப்பாளர் பவ எனும் வரதானத்தை நினைவில் வைத்து சமயம் மற்றும் சக்தியை சேவைக்காக சேமியுங்கள்.

சுலோகன்:
யாரொருவர் எண்ணம் மற்றும் வார்த்தை மூலமாக அனைவருக்கும் வரதானங்களை தருவாரோ அவரே மகாதானி ஆவார்.


அவ்யக்த இஷாரா : எண்ணங்களின் சக்தியை சேமித்து உயர்ந்த சேவைக்கு நிமித்தமான கருவியாகுங்கள்.

உங்களுடைய மந்திரி, மகா மந்திரிகளான சூட்சும சக்திகள் (மனம், புத்தி) இவற்றை தனது கட்டுப்பாட்டில் வையுங்கள். இப்போதிலிருந்தே உங்களது ராஜ்ய தர்பார் சரியாக இருந்தால் தர்மராஜாவின் தர்பாரில் செல்ல மாட்டீர்கள். தர்மராஜாவும் வரவேற்பார். ஆனால் கட்டுப்படுத்தும் சக்தியில்லையெனில் இறுதியில் அபராதம் செலுத்த தர்மராஜபுரிக்கு செல்ல வேண்டும். தண்டனைகளே அபராதம் ஃரிபைன் ஆகிவிட்டால் ஃபைன் அபராதம் செலுத்த வேண்டாம்.