21-01-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே - ஒரு தந்தையினுடைய
நினைவின் மூலம் நீங்கள் உயர்ந்தவர்களாக (சூப்ரீம்) ஆக வேண்டும்
எனவே மறந்தும் கூட எந்த ஒருவரையும் நினைவு செய்ய வேண்டாம்
கேள்வி:
தந்தையிடத்தில் எந்த ஒரு
நம்பிக்கை வைக்காது, கருணையை கேட்பதற்கு பதிலாக, தன்னுடைய
உழைப்பை செய்ய வேண்டும்?
பதில்:
பழைய சரீரத்தின் கர்மவினை ஏதேனும்
இருக்கிறது என்றால், திவால் ஆகிவிட்டால் அல்லது நோய் வாய்பட்டு
விட்டால் - அது உங்களுடைய கணக்கு வழக்கு, எனவே இதில் பாபா
ஏதேனும் கருணை காட்டுங்கள் என்ற நம்பிக்கையை என்னிடத்தில்
வைக்காதீர்கள் என்று பாபா சொல்வார். தன்னுடைய உழைப்பினால், யோக
பலத்தின் மூலம் காரியங்களை செய்யுங்கள், நினைவின் மூலம் தான்
ஆயுளும் அதிகரிக்கும். கர்மவினை முடிவடையும். நம் பிராணத்தை
விட அன்பான (உயிரினும் மேலான) தந்தை மீது எத்தனை அன்பு
இருக்குமோ அத்தனை நினைவு இருக்கும் மேலும் கல்யாண் (நன்மை)
ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
ஓம் சாந்தி.
எல்லையற்ற தந்தை அமர்ந்து குழந்தைகளுக்கு புரிய வைக்கின்றார் -
இனிமையான குழந்தை களே, தங்களை ஆத்மா எனப் புரிந்து தந்தையை
நினைவு செய்யுங்கள் மேலும் தங்களுடைய வீட்டை நினைவு செய்யுங்கள்.
அதைத்தான் (வீட்டை) அமைதியின் கோபுரம் என்று சொல்லப் படுகின்றது.
சுகத்தின் கோபுரம்(சத்யுகம்). கோபுரம் என்பது மிகவும் உயர்வாக
இருக்கக் கூடியது. நீங்கள் அங்கே செல்வதற்காக புருஷார்த்தம்
செய்து கொண்டு இருக்கிறீர்கள். உயர்ந்த திலும் உயர்ந்த
அமைதியின் கோபுரத்திற்கு நீங்கள் எப்படி செல்ல முடியும் என்பதை
கூட அந்த கோபுரத்தில் இருக்கக் கூடிய தந்தை அமர்ந்து
கற்றுக்கொடுக்கின்றார். குழந்தைகளே, தங்களை ஆத்மா எனப் புரிந்து
கொள்ளுங்கள். நாம் ஆத்மா-சாந்திதாமத்தில் வசிக்கக்கூடியவர்கள்.
அதுதான் தந்தையினுடைய வீடு. நடந்தாலும், சுற்றினாலும்
பழக்கப்படுத்துங்கள் - தங்களை ஆத்மா எனப் புரிந்து சாந்திதாம்,
சுகதாமத்தை நினைவு செய்யுங்கள். இதில் தான் உழைப்பு என்பது
இருக்கின்றது என தந்தை அறிவார். யார் ஆத்ம உணர்வில்
இருக்கின்றார்களோ அவர்களை மகாவீரன் என்று சொல்லப்படுகின்றது.
நினைவின் மூலமாகத்தான் நீங்கள் மகாவீரனாக, சூப்ரீம்-ஆக ஆகு
கின்றீர்கள். சூப்ரீம் என்றால் சக்திவான் என்பதாகும்.
குழந்தைகளுக்கு குஷி இருக்க வேண்டும் - சுவர்கத்திற்கு
எஜமானர்களாக(நம்மை) ஆக்கக்கூடிய பாபா, உலகிற்கே எஜமானர்களாக
ஆக்கக்கூடிய பாபா நமக்கு படிப்பித்துக்கொண்டு இருக்கின்றார்.
ஆத்மாவின் புத்தி தந்தையின் பக்கம் செல்கின்றது. இது - ஆத்மா,
ஒரு தந்தையிடம் கொண்டுள்ள காதல் ஆகும். அதிகாலை எழுந்து
பாபாவிடம் இனிமையிலும் இனிமையான விஷயங்களை பேசுங்கள். பாபா, இது
உங்களுடைய அதிசயம், தாங்கள் எங்களை சுவர்கத்தின் எஜமானர்களாக
ஆக்குவீர்கள் என்று கனவில் கூட இருந்ததில்லை. பாபா, நாங்கள்
உங்கள் படிப்பினை படி கண்டிப்பாக நடப்போம். எந்த ஒரு பாவ
காரியமும் செய்ய மாட்டோம். பாபா(பிரம்மா பாபா) எப்படி
புருஷார்த்தம் செய்கின்றாரோ அதை குழந்தைகளுக்கும் கூட
சொல்கின்றார். சிவபாபா விற்கு எத்தனை குழந்தைகள், கவலை என்பது
இருக்கும் தானே, எத்தனை குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டி
இருக்கிறது. இங்கே நீங்கள் ஈஸ்வரிய குடும்பத்தில்
அமர்ந்திருக்கிறீர்கள். பாபா (உங்கள்) முன்னால்
அமர்ந்திருக்கின்றார். உங்களுடன் தான் உணவருந்துவேன், உங்களுடன்
தான் அமருவேன்...நீங்கள் அறிந்துள்ளீர்கள் அதாவது சிவபாபா
இவரிடத்தில் வந்த சொல்கின்றார் அதாவது இனிமையான குழந்தைகளே,
மனதால் என் ஒருவனை நினைவு செய்யுங்கள். தேகம் உட்பட தேகத்தின்
அனைத்து உறவுகளையும் மறந்து விடுங்கள். இது கடைசி ஜென்மம்.
இந்த பழைய உலகம், பழைய தேகம் முடிவடையப் போகின்றது. தாங்கள்
இறந்து விட்டால், உலகம் இறந்து விட்டது (உங்களை பொறுத்தவரையில்)
என்று பழமொழி கூட சொல்லப்படுகின்றது. புருஷார்த்தத்திற்காக
சங்கமத்தின் சிறிதளவு சமயம் என்பது இருக்கின்றது. பாபா, இந்த
படிப்பு எது வரை நடக்கும்? என குழந்தைகள் கேட்கின்றார்கள். (பாபா
பதில் சொல்கிறார்) எப்போது தெய்வீக ராஜதானி ஸ்தாபனை ஆகுகின்றதோ,
அது வரை சொல்லிக் கொண்டே இருப்பேன். பிறகு புது உலகிற்கு
இடமாற்றம் செய்யப்படுவீர்கள். இது பழைய சரீரம், ஏதேனும்
கர்மவினை நடந்து கொண்டே தான் இருக்கும், இதில் பாபா உதவி செய்ய
வேண்டும் என்ற நம்பிக்கையை (பாபா விடத்தில்) வைக்காதீர்கள்.
திவால் ஆகுவது, நோய்வாய் படுவது என்பது உங்களின் கணக்கு, வழக்கு
என்கிறார் தந்தை. ஆமாம், பிறகும் கூட(கணக்கு வழக்கு இருந்தாலும்
கூட) யோகத்தின் மூலம் ஆயுள் அதிகரிக்கும். தன்னுடைய உழைப்பை
போடுங்கள். கருணை கேட்கக் கூடாது. தந்தையை எவ்வளவு நினைவு
செய்கின்றீர்களோ (அவ்வளவு) அதில் தான் நன்னை அடங்கியிருக்
கின்றது, எவ்வளவு முடியுமோ – யோக பலத்தினால் காரியத்தை
முடித்துக் கொள்ளுங்கள். என்னை கண் இமைக்குள் மறைத்து
வைத்துக்கொள்ளுங்கள்(பாபா).... அன்பான ஒன்றை - கண்ணின் மணியாக,
உயிரின் காதலாக சொல்லப்படுகிறது என, பாடக்கூட செய்கிறீர்கள்
தானே. இந்த தந்தையோ மிக பிரியமானவர், ஆனால் மறைவானவர்.
அவருக்காக நம்முடைய காதல் அப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்; அதை
ஏன் கேட்கிறீர்கள் என்ற அளவிற்கு (அளவிட முடியாத அளவிற்கு அன்பு
இருக்கிறது) . குழந்தைகளை, தந்தை - கண் இமைகளுக்குள்
மறைத்துவைக்க வேண்டி இருக்கின்றது. கண் இமைகள் என்று சொல்வது -
இந்த கண்களை அல்ல. இது புத்தியில் நினைவு வைப்பதை
சொல்லப்படுகின்றது. மிக அன்பான நிராகாரமான தந்தை நமக்கு
படிப்பித்துக் கொண்டு இருக்கின்றார். அவர் ஞானத்தின் கடல்,
சுகத்தின் கடல், அன்பின் கடல். அப்படிப்பட்ட மிக அன்பான
தந்தையிடத்தில் எத்தனை அன்பு வேண்டும். குழந்தைகளுக்காக எத்தனை
தன்னல மற்ற சேவை செய் கின்றார். பதீத சரீரத்தில் வந்து
குழந்தைகளாகிய உங்களை வைரத்திற்கு சமமாக ஆக்குகிறார். எவ்வளவு
இனிமையான பாபா. எனவே, குழந்தைகளும் கூட அப்படி இனிமையானவராக ஆக
வேண்டும். பாபா எத்தனை அகங்காரமற்றவராக, குழந்தைகளுக்கான சேவையை
செய்கின்றார், எனவே குழந்தைகளும் கூட அதே போல் சேவை செய்ய
வேண்டும். ஸ்ரீமத் படி நடக்க வேண்டும். எங்காவது தன்னுடைய வழியை
காட்டிணீர்கள் என்றால் (மன்மத் படி சென்றால்) அதிர்ஷ்டத்தில்
கீரல் ஏற்பட்டு விடும். பிராமணர்களாகிய நீங்கள், ஈஸ்வரனின்
குழந்தைகள். பிரம்மாவின் குழந்தைகள் - சகோதரன் மற்றும்
சகோதரியாக இருக்கின்றீர்கள். ஈஸ்வரனின் பேரன்-பேத்திகளாக
இருக்கின்றீர்கள். அவரிடமிருந்து ஆஸ்தியை பெற்றுக் கொண்டு
இருக்கின்றீர்கள். எவ்வளவு புருஷார்த்தம் செய்கின்றீர்களோ
அவ்வளவு பதவியை பெறுவீர்கள். இதில் (புருஷார்த்தத்தில்)
சாட்சியாக இருப்பதற்கான பயிற்சியும் அதிகமாக வேண்டும். பாபா
சொல்கிறார் - இனிமையான குழந்தைகளே, ஹே ஆத்மாக்களே - மனதால் என்
ஒருவனை நினைவு செய்யுங்கள், மறந்தும் கூட தந்தையை தவிர வேறு
யாரையும் நினைவு செய்ய வேண்டாம். பாபா, எனக்கு நீங்கள் ஒருவர்
மட்டுமே என்று உறுதிமொழி செய்துள்ளீர்கள். நாங்கள் ஆத்மாக்கள்,
நீங்கள் பரமாத்மா, உங்களிடமிருந்தே ஆஸ்தியை பெற வேண்டும்.
உங்களிடமிருந்தே இராஜயோகத்தை கற்றுக் கொண்டு இருக்கின்றோம்,
இதன் மூலம் இராஜ்ய பாக்கியத்தை பெறுகின்றோம்.
இனிமையான குழந்தைகளே, இது அநாதியான(முடிவில்லாத) டிராமா, இதில்
வெற்றி தோல்விக்கான விளையாட்டு நடக்கின்றது என்பதை நீங்கள்
அறிவீர்கள். எது நடக்கின்றதோ, அது சரியாக நடக்கின்றது.
படைப்பவருக்கு இந்த டிராமா கண்டிப்பாக பிடித்திருக்கும் தானே,
அப்படி யெனில் படைப்பவரின் குழந்தைகளுக்கும் கூட
பிடித்திருக்கும். இந்த டிராமாவில், பாபா-தம் உள்ளத்தால்
மற்றும் உயிரினால், ஆழமாக மற்றும் தீவிரமாக, குழந்தைகளுக்கு
சேவை செய்வதற் காக ஒரே ஒரு முறை குழந்தைகளிடத்தில் வருகின்றார்.
பாபாவிற்கு எல்லா குழந்தைகளும் அன்பானவர்கள். சத்யுகத்தில் கூட
அனைவரும் ஒருவர் மற்றவருக்கு மிகுந்த அன்பு செய்வார்கள் என்பதை
நீங்கள் அறிவீர்கள். மிருகங்களிடத்தில் கூட அன்பு இருக்கும்.
அன்பு இல்லாத மிருகம் என்று அங்கே எதுவும இருக்காது. எனவே,
குழந்தைகளாகிய நீங்கள்-இங்கே மாஸ்டர் அன்பு கடல் ஆக வேண்டும்.
இங்கே அப்படி ஆகும் போது அது அழிவற்ற சன்ஸ்காரமாக ஆகி விடும்.
பாபா சொல்கிறார் - கல்பத்திற்கு முன்பு போல அப்படியே மீண்டும்
உங்களை அன்பானவர்களாக ஆக்கு வதற்காக வந்திருக்கின்றேன்.
எப்போதேனும் எந்த குழந்தையினுடைய கோபத்தினுடைய சப்தத்தை
கேட்கும் போது, தந்தை படிப்பினை கொடுக்கின்றார் - குழந்தைகளே,
கோபப்படுவது சரி அல்ல, இதனால் நீங்களும் துக்கமானவர் ஆவீர்கள்
மேலும் மற்றவர்களையும் கூட துக்க மானவர் களாக ஆக்குவீர்கள்.
தந்தை - சதா காலத்திற்கு சுகம் கொடுக்கக்கூடியவர், எனவே
குழந்தைகளும் தந்தைக்கு சமமாக ஆக வேண்டும். ஒருவர் மற்றவருக்கு
ஒருபோதும் துக்கம் கொடுக்கக்கூடாது.
குழந்தைகளாகிய உங்களுக்கு தெரியும், சிவபாபா - பகலிற்கான
சுவாமி(சாயி)... இரவை-பகலாக அதாவது காலையை உருவாக்கக் கூடியவர்.
எல்லையற்ற தந்தையை, சுவாமி(சாயி) என சொல்லப்படுகின்றது. அவர்
ஒருவர் மட்டுமே சாயி பாபா, கள்ளம் கபடமற்ற சிவபாபா. அவர் பெயரே
- போலாநாத் (கள்ளம் கபடமற்றவர்). அப்பாவி குமாரிகள்,
தாய்மார்கள் மீது ஞானத்தின் கலஷத்தை வைக்கின்றார். அவர்களைத்
தான் விஷ்வத்தின் எஜமானர்களாக ஆக்குகின்றார். எத்தனை சகஜமான வழி
சொல்கின்றார். எத்தனை அன்பாக உங்களுக்கு ஞானத்தினுடைய வளர்ப்பை
செய்கிறார். ஆத்மாவை பாவனம் ஆக்குவதற்காக நினைவு யாத்திரையில்
இருங்கள். யோகத்தினுடைய குளியலை செய்யுங்கள். ஞானம் என்பது
படிப்பு. யோக குளியல் செய்வதன் மூலம பாவம் பஸ்மம் ஆகுகின்றது.
தன்னை ஆத்மா என புரிந்து கொள்ளக்கூடிய பயிற்சியை செய்து கொண்டே
இருங்கள், அப்போது இந்த தேகத்தின் அகங்காரம் முற்றிலுமாக
உடைந்து போகும். யோகத்தின் மூலம் தான் பவித்ர-சதோபிரதானமாக (தூய்மையாக-ஞானத்தின்
சூவரூ பமாக) ஆகி தந்தையிடம் செல்ல வேண்டும். அநேக குழந்தைகள்
இந்த விஷயங்களை நல்ல முறையில் புரிந்துகொள்வது இல்லை. தனது
உண்மையிலும் உண்மையான சார்ட்-ஜ சொல்வது இல்லை. அரைக்கல்பம்
பொய்யான உலகத்தில் இருந்து இருக்கிறீர்கள், எனவே பொய் உள்ளே
உறைந்து விட்டது. உண்மை யான தன்னுடைய சார்ட்-ஐ தந்தைக்கு சொல்ல
வேண்டும். சோதனை செய்ய வேண்டும் - (உதாரணமாக) நான் முக்கால் மணி
நேரம் (45 நிமிடம்) நினைவில் அமர்ந்தேன், இதில் இவ்வளவு நேரம்
தன்னை ஆத்மா என புரிந்து தந்தையை நினைவு செய்தேன்! அநேகருக்கு
உண்மை சொல்வதில் வெட்கம் வருகிறது. இத்தனை பேருக்கு சேவை
செய்தோம், இத்தனை பேருக்கு புரிய வைத்தோம் என்பதையோ உடனேயே
சொல்கிறீர்கள் ஆனால் நினை வினுடைய சார்ட் - எவ்வளவு நினைவில்
இருந்தேன் என்பதில் உண்மையை சொல்வதில்லை. நினைவில் இல்லாத
காரணத்தினால் தான் உங்களுடைய அம்பு யார்மீதும் தைப்பதில்லை.
ஞானம் என்ற வாளில் - கூர்மை என்பது நிரம்புவதில்லை.
சிலர் நாங்கள் நிரந்தரமாக தந்தையின் நினைவில் இருக்கின்றோம்
என்று சொல்கிறார்கள், பாபா சொல்கிறார் - அதற்குரிய அவஸ்தா (நிலை)
உங்களிடம் இல்லை என்று. நிரந்தரமாக நினைவில் இருக்கிறீர்கள்
என்றால் கர்மாதீத் அவஸ்தா (கர்மத்தை வென்ற நிலை) ஏற்பட்டு
விடும். ஞானத்தின் உச்சநிலை என்பது தென்பட வேண்டும், இதில்
நிறைய உழைப்பு இருக்கின்றது. விஷ்வத்திற்கு எஜமானர்களாக
அப்படியே ஆகிவிடுவீர்களா என்ன (தகுதியை அடையாமல்). ஒரு
தந்தையின் நினைவைத் தவிர வேறு யாருடைய நினைவும் இருக்கக் கூடாது.
இந்த தேகம் கூட நினைவுக்கு வரக் கூடாது. இந்த நிலை உங்களுக்கு
பின்னாளில் ஏற்படும். நினை வினுடைய யாத்திரை மூலம் மட்டுமே
உங்களுக்கான வருமானம் ஏற்பட்டு கொண்டே இருக்கும். ஒருவேளை
சரீரத்தை விட்டு விட்டால் பிறகு வருமானம் செய்ய முடியாது. ஆத்மா
என்னவோ சன்ஸ்காரத்தை எடுத்து செல்லும் ஆனால் மீண்டும் நினைவு
படுத்துவதற்கு ஆசிரியர் வேண்டும் இல்லையா. தந்தை ஒவ்வொரு
நொடியும் நினைவு கொடுத்துக் கொண்டே இருக்கின்றார்.
அப்படி அநேக குழந்தைகள் இருக்கின்றார்கள் அதாவது குடும்ப
விவகாரத்தில் இருந்து கொண்டே, வேலை பார்த்துக் கொண்டே, உயர்ந்த
பதவியை அடைவதற்காக ஸ்ரீமத் படி நடந்து- தன்னுடைய
எதிர்காலத்திற்கான சேமிப்பை செய்து கொண்டு இருக்கின்றார்கள்.
பாபாவிடமிருந்து கருத்துக் களை பெற்றுக் கொண்டே
இருக்கின்றார்கள். பணம் இருக்கின்றது எனில் அதை எப்படி வெற்றி
உடையதாக ஆக்குவது (என பாபாவிடம் கருத்து கேட்கின்றார்கள்). பாபா
சொல்கின்றார் - சென்டர் திறங்கள், இதன் மூலம் அநேகருக்கு நன்மை
ஏற்படும். மனிதர்கள் தானம், புண்ணியம் ஆகிய வற்றை
செய்கின்றார்கள், அதற்கான பலன் அடுத்த பிறவியில் கிடைக்கின்றது.
உங்களுக்கும் கூட எதிர்காலத்தில் 21 பிறவிகளுக்கான ராஜ்ய
பாக்கியம் கிடைக்கின்றது. இது (பாபாவின் யக்ஞம்) உங்களுக்கான
நம்பர்-1 வங்கி (பேங்க்), இதில் 4 அணா போட்டால் கூட
எதிர்காலத்தில் ஆயிரமாக ஆகிவிடும். கல்லில் இருந்து தங்கமாக ஆகி
விடும். உங்களின் ஒவ்வொரு பொருளும் தங்கமாக (பல மடங்கு மதிப்பு
கூடியதாக) ஆகி விடும். தந்தை சொல்கின்றார் - இனிமையான
குழந்தைகளே, உயர்ந்த பதவியை பெற வேண்டும் என்றால், தாய் தந்தையை
முழுமையாக பின்பற்றுங்கள் மேலும் தங்களுடைய கர்மேந்திரியங்கள்
மீது கட்டுப்பாடு வையுங்கள். ஒருவேளை கர்மேந்திரி யங்கள்
வசப்படவில்லை எனில், நடத்தை சரியாக இல்லை எனில் உயர்ந்த
பதவியிலிருந்து வஞ்சிக்க படுவீர்கள் (உயர்ந்த பதவியை பெற
முடியாமல் போவீர்கள்). தன்னுடைய நடத்தையை மேம்படுத்துங்கள் (சிறப்பாக,
உயர்வாக ஆக்குங்கள்). அதிகப்படியான ஆசைகளை வைக்காதீர்கள்.
பாபா, குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு ஞானத்தின் அலங்காரம்
செய்து சத்யுகத்தின் மகாராஜா, மகாராணியாக ஆக்குகின்றார்,
இதில்(இவ்வாறு ஆகுவதற்கு) சகிப்புத்தன்மையின் குணம் மிக நன்றாக
இருத்தல் வேண்டும். தேகத்தின் மீது அதிகப்படியான மோஹம் இருக்க
வேண்டாம். யோகபலத்தின் மூலம் காரியத்தை செய்து கொள்ள வேண்டும்.
பாபாவிற்கு (பிரம்மா பாபா) எவ்வளவு இருமல் ஏற்படுகின்றது,
பிறகும் கூட எப்போதும் சேவையில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றார்.
ஞானம், யோகத்தின் மூலம் அலங்காரம் செய்து குழந்தைகளை
தகுதியானவர் களாக ஆக்குகின்றார். நீங்கள் இப்போது ஈஸ்வரனின்
மடியில் இருக்கின்றீர்கள், தாய்-தந்தையின் மடியில்
அமர்ந்திருக்கின்றீர்கள். தந்தை பிரம்மா மூலமாக குழந்தைகளாகிய
உங்களுக்கு பிறப்பு கொடுப்பதால் இவர் (பிரம்மா பாபா) தாயாக ஆகி
விட்டார். ஆனால் உங்கள் புத்தி பிறகும் கூட சிவபாபாவின் பக்கம்
செல்கின்றது. நீங்கள் தான் எங்களின் தாயும், தந்தையும் -
நாங்கள் உங்கள் குழந்தைகள்... நீங்கள் சர்வ குணங்களும்
நிறைந்தவர் களாக இங்கே ஆக வேண்டும். அடிக்கடி மாயாவிடம் தோல்வி
அடையக் கூடாது. தந்தை புரிய வைக்கின்றார் - இனிமையான குழந்தைகளே,
தங்களை ஆத்மா என புரிந்து கொள்ளுங்கள். அப்படி தன்னை ஆத்மா என
புரிந்து கொள்வது எவ்வளவு இனிமையானதாக இருக்கின்றது. நாம்
என்னவாக இருந்தோம், இப்பொழுது என்னவாக ஆகிக் கொண்டு
இருக்கின்றோம்.
இந்த டிராமா எத்தனை அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது - இதையும்
கூட நீங்கள் இப்போது புரியவைக் கின்றீர்கள். இது புருஷோத்தம
சங்கமயுகம் - இது நினைவில் இருந்தால் கூட, நாம் இப்போது
சங்கமத்தில் இருக்கின்றோம், நாம் சத்யுகம் செல்லக் கூடியவர்கள்
என்ற நிச்சயம் ஏற்பட்டுவிடும். பிறகு நம் வீட்டிற்கு (சங்கமத்
திற்கு பிறகு) செல்ல வேண்டும் எனவே கண்டிப்பாக பாவனம் ஆக
வேண்டும். உள்ளுக்குள் நிறைய குஷி இருக்க வேண்டும் - ஓஹோ!
எல்லையற்ற தந்தை சொல்கின்றார் - இனிமையிலும் இனிமையான
குழந்தைகளே, என்னை நினைவு செய்தால், நீங்கள் சதோபிரதானமாக
ஆகுவீர்கள். பாபா, குழந்தைகளுக்கு எத்தனை அன்பு செய்கின்றார் -
அவர் வெறும் டீச்சராக இருந்து படிப்பு சொல்லிக் கொடுத்து விட்டு,
வீட்டிற்கு சென்று விடுவதில்லை. இவர் தந்தையாகவும்
இருக்கின்றார், டீச்சராகவும் இருக்கின்றார். உங்களை
படிப்பிக்கவும் செய்கிறார். நினைவின் யாத்திரையையும் கூட
கற்றுக்கொடுக்கின்றார். அப்படி விஷ்வத்திற்கு எஜமான்
ஆக்கக்கூடிய, பதீதத்திலிருந்து பாவனம் ஆக்கக்கூடிய தந்தையிடம்
மிகுந்த காதல் இருக்க வேண்டும். அதிகாலை எழுந்தவுடனேயே
சிவபாபாவிற்கு குட்மார்னிங் (காலை வணக்கம்) சொல்ல வேண்டும்.
குட்மார்னிங் - அதாவது நினைவு செய்கின்றீர்கள் எனில் நிறைய
குஷியில் இருப்பீர்கள். குழந்தைகள் தங்கள் உள்ளத்திடம் கேட்க
வேண்டும் - நாம் அதிகாலை எழுந்து எந்த அளவிற்கு எல்லையற்ற
தந்தையை நினைவு செய்கின்றோம். மனிதர்கள் பக்தியை கூட
அதிகாலையில் செய்கின்றார்கள் இல்லையா. பக்தியை எவ்வளவு அன்பாக
செய் கின்றார்கள். ஆனால் பாபாவிற்கு தெரியும் - அநேக குழந்தைகள்
- உள்ளத்தால் மற்றும் உயிரினால், ஆழமாக மற்றும் தீவிரமாக (தந்தையை)
நினைவு செய்வதில்லை. அதிகாலை எழுந்து பாபாவிற்கு குட்மார்னிங்
செய்து, ஞான சிந்தனையில் இருந்தால் - குஷியின் அளவு
அதிகரிக்கும். தந்தைக்கு குட்மார்னிங் செய்யவில்லை எனில்
பாவங்களின் சுமையை எப்படி இறக்குவீர்கள். முக்கியமானதே நினைவு,
இதன் மூலம் எதிர்காலத்தில் மிக வலிமையான வருமானம் ஏற்படும்.
கல்ப கல்பத்திற்கு - இந்த வருமானம் காரியத்தில் பயண்படும்.
பாபாவை நினைவு செய்வது என்பது - மிகுந்த பொறுமையுடன்,
தீவிரத்தன்மையுடன், புரிதலுடன் நினைவு செய்ய வேண்டிய தானது.
மேலோட்டமான கணக்கில் என்னவோ, நினைவு செய்துவிட்டு - நாங்கள்
மிகவும் பாபாவை நினைவு செய்கின்றோம் என்று சொல்லி
விடுகின்றீர்கள் ஆனால் சரியாக-நினைவு செய்வதில் உழைப்பு
இருக்கின்றது. யார் தந்தையை அதிகமாக நினைவு செய்கின்றார்களோ
அவர் களுக்கு கரண்ட்(சக்தி) அதிகமாக கிடைக்கின்றது ஏனெனில்
நினைவின் மூலம் நினைவு கிடைக் கின்றது. யோகா மற்றும் ஞானம்
என்ற இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. யோகத்தினுடைய பாடம்
தனி-மிக வலிமையான பாடம். யோகத்தினால் மட்டுமே ஆத்மா சதோபிரதானம்
ஆகுகின்றது. நினைவு இல்லாமல் சதோபிரதானம் ஆகுவது, அசம்பவம் (முடியாதது).
நல்ல முறையில் அன்பாக தந்தையை நினைவு செய்யுங்கள் அப்போது
தானாகவே கரண்ட் கிடைக்கும், ஆரோக்கியமாக ஆகி விடுவீர்கள்.
கரண்ட் மூலமாக ஆயுளும் கூட அதிகமாகின்றது. குழந்தைகள் நினைவு
செய்கின்றார்கள் எனில் பாபாவும் கூட நீண்ட ஒளியை (இடைவிடாது
சக்தி) கொடுக் கின்றார். தந்தை எத்தனை பெரிய, வலிமையான கஜானாவை
குழந்தைகளாகிய உங்களுக்கு கொடுக்கின்றார். நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக்கண்டெடுக்கப்பட்ட, கண்களின்
மணியாக இருக்கும் குழந்தை களுக்காக - தாயும், தந்தையுமாகிய
பாப்தாதாவின் - உள்ளத்திலிருந்து மற்றும் உயிரிலிருந்து, ஆழமான
மற்றும் தீவிரமான - அன்பு நினைவுகள் மற்றும் குட்மார்னிங்.
ஆன்மீக தந்தையின் ஆன்மீக குழந்தைகளுக்கு நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
(1) தந்தையை மிகுந்த பொறுமையுடன், தீவிரத்தன்மையுடன் மற்றும்
புரிதலுடன் நினைவு செய்யுங்கள். நினைவு சரியாக இருந்தால்,
தந்தையிடமிருந்து கரண்ட் கிடைக்கும், ஆயுள் அதிகரிக்கும்,
ஆரோக்கியமாக ஆகி விடுவீர்கள்.
(2) உயர்ந்த பதவியை அடைய வேண்டும் என்றால் தன்னுடைய நடத்தையை
மேம்படுத் துங்கள் (சிறப்பாக, உயர்வாக ஆக்குங்கள்).
அதிகப்படியான ஆசைகளை வைக்காதீர்கள். கர்மேந்திரியங்களை
முழுமையாக கட்டுப்படுத்துங்கள், தாய்-தந்தையை (பிரம்மா பாபா,
மம்மாவை) முழுமையிலும் முழுமையாக பின்பற்றுங்கள்.
வரதானம்:
தந்தையைப் பின்பற்றுங்கள் மற்றும் தந்தையைப் பாருங்கள் என்ற
மகாமந்திரத்தின் மூலம் ஏக்ரஸ் ஸ்திதியை உருவாக்கக் கூடிய
சிரேஷ்ட புருஷார்த்தி ஆகுக.
தந்தையைப் பாருங்கள், தந்தையைப் பின்பற்றுங்கள் என்ற மந்திரத்தை
சதா முன்னால் வைத்து உயரும் கலையில் சென்று கொண்டே இருங்கள்.
பறந்து கொண்டே செல்லுங்கள். ஒரு போதும் ஆத்மாக்களைப் பார்க்கக்
கூடாது. ஏனென்றால் ஆத்மாக்கள் அனைவரும் முயற்சியாளர்கள்.
முயற்சியாளர்களிடம் நல்லதும் இருக்கும், கொஞ்சம் குறைபாடுகளும்
இருக்கும். அவர்கள் சம்பன்னமாக இல்லை. எனவே தந்தையைப்
பின்பற்றுங்கள். சகோதர-சகோதரிகளைப் பின்பற்ற வேண்டாம். அப்போது,
எப்படி தந்தை ஏக்ரஸ் நிலையில் இருக்கிறாரோ, அது போல் அவரைப்
பின்பற்றுபவர்கள் தாமாகவே ஏக்ரஸ் ஆகி விடுவார்கள்.
சுலோகன்:
பரசிந்தனையின் (மற்றவர்களைப் பற்றி சிந்திப்பது) பிரபாவத்தில்
வராமல் சுயசிந்தனை செய்யக்கூடிய சுபசிந்தக் (நலம் விரும்பி) மணி
ஆகுங்கள்.
அவ்யக்த இசாரே: இந்த அவ்யக்த மாதத்தில் பந்தனத்திலிருந்து
விடுபட்டு ஜீவன்முக்தி ஸ்திதியின் அனுபவம் செய்யுங்கள்
எப்படி மற்ற ஸ்தூலப் பொருள்களை எப்போது விரும்புகிறீர்களோ,
அப்போது எடுக்கிறீர்கள் மற்றும் எப்போது விரும்புகிறீர்களோ,
அப்போது விட்டு விடுகிறீர்கள். அது போல் தேக உணர்வை எப்போது
விரும்புகிறீர்களோ, அப்போது விட்டுவிட்டு ஆத்ம உணர்வுள்ளவராக
ஆகி விடுங்கள். இந்தப் பயிற்சி அவ்வளவு சரளமாக ஆகிவிட வேண்டும்
- எந்த ஒரு ஸ்தூலப் பொருளுக்கும் சகஜமாக ஆவது போல. படைப்பவர்
எப்போது விரும்புகிறாரோ, அப்போது படைப்பின் ஆதாரத்தை எடுத்துக்
கொள்ள வேண்டும். எப்போது விரும்புகிறாரோ, அப்போது படைப்பின்
ஆதாரத்தை விட்டுவிட வேண்டும். எப்போது விரும்புகிறாரோ. அப்போது
விலகி விட வேண்டும். எப்போது விரும்பு கிறாரோ, அப்போது
அன்பானவராக ஆகிவிட வேண்டும். அந்த மாதிரி பந்தன்முக்த் ஆகுங்கள்.