21-07-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! முயற்சி செய்து
நல்ல முறையில் தெய்வீகக் குணங்களை கடைபிடிக்க வேண்டும்.
யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது. உங்களிடம் எந்த ஒரு அசுர
செயலும் இருக்கக் கூடாது.
கேள்வி:
எந்த அசுர குணம் உங்களின்
அலங்காரத்தை கெடுத்துவிடுகிறது?
பதில்:
தங்களுக்குள் சண்டையிட்டுக்
கொள்ளுதல், கோபித்துக் கொள்ளுதல், சென்டர்களில் இரைச்சல்
ஏற்படுத்துவது, (ஒழுங்கீனமாக நடந்து கொள்வது) துக்கம் கொடுத்தல்
போன்றவைகள் அசுர குணங்கள் ஆகும். இவை உங்கள் அலங்காரத்தை
கெடுத்துவிடுகிறது. பாபாவினுடைய வராகிய பிறகும் கூட அசுர
குணங்களை தியாகம் செய்யாமல் தவறான கர்மங்களைச் செய்கிறார் கள்
என்றால் அந்த குழந்தைகளுக்கு நிறைய நஷ்டம் ஏற்படுகிறது.
கணக்குக்கு மேல் கணக்கு அதிகமாகிறது. பாபாவுடன் தர்மராஜ் கூட
இருக்கிறார்.
பாடல்:
கள்ளம் கபடம் அற்றவர்,
விச்சித்திரமானவர்.....
ஓம் சாந்தி.
உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான் என்பதை ஆன்மீகக் குழந்தைகள்
அறிந்திருக் கிறார்கள். மனிதர்கள் பாடுகிறார்கள். நீங்கள்
தெய்வீக பார்வையினால் பார்க்கிறீர்கள். அவர் நம்மை படிக்க
வைத்துக் கொண்டிருக்கிறார் என புத்தியினால் தெரிந்துக்
கொள்கிறீர்கள். ஆத்மா தான் உடல் மூலமாகப் படிக்கிறது. அனைத்தும்
ஆத்மா தான் உடலினால் செய்கிறது. உடல் அழியக் கூடியது. அதில்
ஆத்மா பிரவேசித்து நடிப்பை நடித்துக் கொண்டிருக்கிறது.
ஆத்மாவில் தான் அனைத்து நடிப்பும் பதிவாகி இருக்கிறது. 84 பிறவி
களினுடையதும் ஆத்மாவில் தான் பதிந்திருக்கிறது. முதன் முதலில்
தன்னை ஆத்மா என புரிந்துக் கொள்ள வேண்டும். பாபா சர்வ சக்திவான்.
அவரிடமிருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு சக்தி கிடைக்கிறது.
நினைவினால் சக்தி நிறைய கிடைக்கிறது. இதனால் நீங்கள்
தூய்மையாகிறீர்கள். பாபா உங்களுக்கு உலகத்தை ஆட்சி செய்யக்
கூடிய சக்தி கொடுக்கிறார். இந்தளவிற்கு மகான் சக்தியை
கொடுக்கின்றார். அந்த அறிவியல் கர்வம் உடையவர்கள் அழிவிற்காக
அனைத்தையும் செய்கிறார்கள். அவர்களுடைய புத்தி முழுவதும்
அழிவிற்கானது. உங்களுடைய புத்தி அழிவற்ற பதவியை அடைவதற்கான
தாகும். உங்களுக்கு நிறைய சக்தி கிடைக்கிறது. இதன் மூலம்
நீங்கள் விஷ்வ இராஜ்யத்தை பெறுகிறீர்கள். அங்கே பிரஜைகள்
பிரஜைகளை இராஜ்யம் செய்ய வில்லை. அங்கே ராஜா ராணி களின்
இராஜ்யம் ஆகும். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான். அவரைத்தான்
நினைக் கிறார்கள். லஷ்மி நாராயணனின் கோவிலை கட்டி
பூஜிக்கிறார்கள். இருப்பினும் உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான்
என பாடப்பட்டிருக்கிறது. இந்த லஷ்மி நாராயணன் உலகத்திற்கே
அதிபதியாக இருந்தனர் என புரிந்துக் கொள்கிறீர்கள்.
உயர்ந்ததிலும் உயர்ந்த உலகத்தின் இராஜ்ய பதவி எல்லையற்ற
தந்தையிடமிருந்து கிடைக்கிறது. உங்களுக்கு எவ்வளவு உயர்ந்த பதவி
கிடைக் கிறது. எனவே குழந்தைகளுக்கு எவ்வளவு குஷி இருக்க
வேண்டும். ஒருவரிடமிருந்து ஏதாவது கிடைக்கிறது என்றால் அவரை
நினைக்கிறார்கள் அல்லவா? கன்னியருக்கு கணவரிடம் எவ்வளவு அன்பு
இருக்கிறது. கணவருக்காக தன் உயிரையே கொடுக்கிறார். கணவர் இறந்து
விட்டார் என்றால் அழகை அழித்துக் கொள்கிறார்கள். இவரோ
கணவருக்கெல்லாம் கணவர். நீங்கள் உயர்ந்த பதவி அடைய வேண்டும்
என்பதற்காக உங்களை எவ்வளவு அலங்காரம் செய்துக் கொண்டிருக்கிறார்.
எனவே குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு பெருமிதம் இருக்க
வேண்டும். நீங்கள் இங்கே தெய்வீக குணங்களைக் கடைபிடிக்க
வேண்டும். இதுவரையிலும் கூட பலரிடம் சண்டையிட்டுக் கொள்ளுதல்,
கோபித்துக் கொள்ளுதல், சென்டர்களில் அதிக இரைச்சல் மற்றும்
ஒழுங்கற்று நடத்தல்...... போன்ற அசுர அவ குணங்கள் இருக்கிறது.
நிறைய குற்றச் சாட்டுகள் வருகிறது என்பது பாபாவிற்குத் தெரியும்.
காமம் மிகப் பெரிய எதிரி என்றால் கோபமும் குறைந்தது ஒன்றும்
கிடையாது. இன்னார் மீது அன்பு, என் மீது ஏன் இல்லை, அந்த
விஷயத்தை இவரிடம் கேட்டார், என்னிடம் ஏன் கேட்கவில்லை. இவ்வாறு
பேசக் கூடிய சந்தேக புத்தி உடையவர்கள் பலர் இருக்கிறார்கள்.
இராஜ்யம் உருவாகிக் கொண்டிருக்கிறது அல்லவா? இப்படிப்
பட்டவர்கள் என்ன பதவி அடைவார்கள். பதவியில் வித்தியாசம்
இருக்கிறது அல்லவா? பணிவிடை செய்பவர்கள் (பணியாளர்கள்) கூட
நல்ல நல்ல கட்டிடங்களில் வசிக்கிறார்கள் பாருங்கள். ஒரு சிலர்
எங்கோ இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தனக்காக முயற்சி செய்து
தெய்வீக குணங்களை நன்கு கடைப்பிடிக்க வேண்டும். தேக உணர்வில்
வருவதால் அசுர செயல்கள் நடக்கிறது. ஆத்ம உணர்வுடையவராகி நல்ல
குணங்களைக் கடைப் பிடித்தால் உயர்ந்த பதவி பெறலாம். தெய்வீக
குணங்களைக் கடைப்பிடித்து யாருக்கும் துக்கம் கொடுக்காத
அளவிற்கு முயற்சி செய்ய வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள்
துக்கத்தை நீக்கி சுகம் அளிக்கக் கூடிய தந்தையினுடைய குழந்தைகள்.
யாருக்கும் துக்கம் அளிக்கக் கூடாது. சென்டர் நடத்தக்
கூடியவர்களுக்கு நிறைய பொறுப்பு இருக்கிறது. குழந்தைகளே ஏதாவது
தவறு செய்தால் 100 மடங்கு தண்டனை என பாபா கூறுகிறார் அல்லவா?
தேக உணர்வில் இருப்பதால் நிறைய நஷ்டம் ஏற்படுகிறது. ஏனென்றால்
பிராமணர்களாகிய நீங்களே மற்றவர்களைத் திருத்துவதற்கு
நிமித்தமாகி இருக்கிறீர்கள். ஒரு வேளை நீங்கள் திருந்தவில்லை
என்றால், மற்றவர்களை எப்படி திருத்துவீர்கள்? நிறைய நஷ்டம்
ஏற்படுகிறது. பாண்டவ அரசாங்கம் அல்லவா. உயர்ந்ததிலும் உயர்ந்த
தந்தை இருக்கிறார், அவருடன் தர்மராஜ் கூட இருக்கிறார். தர்மராஜ்
மூலமாக மிகவும் நிறைய தண்டனை அடைகிறார்கள். இது போன்ற கர்மங்களை
செய்து விட்டால் நிறைய நஷ்டம் ஏற்படுகிறது. கணக்குக்கு மேல்
கணக்கு அதிகரிக்கிறது. பாபாவிடம் முழு கணக்கும் இருக்கிறது.
பக்தி மார்க்கத்தில் கூட பாவ கணக்கு உண்டு. பகவான் உங்களை
பார்த்துக் கொள்வார் என கூறுகிறார்கள் அல்லவா? தர்மராஜ் மிகவும்
கணக்கெடுப்பார் என இங்கே பாபாவே கூறுகிறார். பிறகு அச்சமயம்
என்ன செய்ய முடியும். நாம் இது இது செய்தோம் என சாட்சாத்காரம்
கிடைக்கும். அங்கேயோ சிறிது அடி தான் கிடைக்கும். இங்கேயோ
நிறைய அடி வாங்க வேண்டி யிருக்கிறது. குழந்தைகளாகிய நீங்கள்
சத்யுகத்தில் கர்ப சிறையில் வர வேண்டியது இல்லை. அங்கேயோ கர்ப
மாளிகை இருக்கிறது. யாரும் எந்த பாவமும் செய்யவில்லை. எனவே
இப்படிப் பட்ட இராஜ்ய பாக்கியத்தை அடைய குழந்தைகள் மிகவும்
எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். நிறைய குழந்தைகள் டீச்சரை விட
வேகமாக செல்கிறார்கள். டீச்சரை விட உயர்ந்த அதிர்ஷ்டம்
உடையவர்களாகி விடுகிறார்கள். நன்கு சேவை செய்யவில்லை என்றால்
ஜென்ம ஜென்மத்திற்கும் வேலைக்காரர்கள் ஆகி விடுவார்கள் என பாபா
புரிய வைத்திருக்கிறார்.
பாபா நேரில் வந்ததுமே குழந்தைகளே! ஆத்ம உணர்வுடையவராகி
அமர்ந்திருக்கிறீர்களா என குழந்தை களிடம் கேட்கின்றார்.
குழந்தைகளே! ஆத்ம உணர்வுடையவர்களாக ஆவதற்கு நிறைய முயற்சி
செய்ய வேண்டும் என்று பாபா குழந்தைகளின் முன்பு இந்த மகா
வாக்கியங்களை அளிக்கிறார். போகும் போதும் வரும் போதும்
வந்தாலும் சிந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும். நிறைய
குழந்தைகள் நாம் சீக்கிரமாக இந்த நரகத்தின் மோசமான
உலகத்திலிருந்து சுக தாமத்திற்குப் போக வேண்டும் என
நினைக்கிறார்கள். நல்ல நல்ல மகா ரதிகள் கூட பலர் நினைவு
செய்வதில் ஃபெயில் ஆகிறார்கள் என பாபா கூறுகிறார்.
அவர்களுக்குக் கூட முயற்சி செய்ய வைக்கப்படுகிறது. நினைவில்
இல்லை என்றால் ஒரேயடியாக விழுந்து விடுவார்கள். ஞானம் மிகவும்
எளிதாகும். வரலாறு புவியியல் அனைத்தும் புத்தியில் வந்து
விடுகிறது. மிகவும் நல்ல நல்ல பெண் குழந்தைகள் பட
கண்காட்சிகளில் புரிய வைப்பதில் மிகவும் கூர்மையாக இருக்கிறார்
கள். ஆனால் தந்தையின் நினைவில் இருப்பதில்லை. தெய்வீக
குணங்களும் இல்லை. அவ்வப் போது நினைவு வருகிறது. இப்படி இன்னும்
என்னென்னவோ மன நிலைகள் குழந்தைகளிடம் இருக்கின்றது. உலகத்தில்
எவ்வளவு துக்கம் இருக்கிறது. சீக்கிரமாக இது முடிய வேண்டும்.
சீக்கிரமாக சுக தாமத்திற்குப் போக வேண்டும் என்று எதிர்பார்த்து
உட்கார்ந்திருக்கிறார்கள், எப்படியாவது பாபாவை சந்திக்க
வேண்டும் என்பதற்காக துடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால்
பாபா நமக்கு சொர்க்கத்திற்கான வழியை காண்பித்துக்
கொண்டிருக்கிறார். இப்படிப் பட்ட தந்தையைப் பார்ப்பதற்காக
துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட தந்தையின் முன்பு
சென்று தினந்தோறும் முரளி கேட்க வேண்டும் என நினைக்கிறார்கள்.
இப்போது இங்கே எந்த சச்சரவும் இல்லை என நீங்கள் புரிந்துக்
கொள்கிறீர்கள். வெளியில் இருக்கும் போது எல்லோரிடமும் விடுபட்ட
நிலையில் பராமரிக்க வேண்டியிருக்கிறது. இல்லை என்றால் சண்டை
சச்சரவுகள் நடந்துக் கொண்டே இருக்கும். ஆகவே அனைவருக்கும்
பொறுமையை அளிக்கிறார். இதில் மிகவும் குப்தமான உழைப்பு
இருக்கிறது. நினைவின் உழைப்பு யாரையும் சென்று சேர வில்லை.
குப்தமான நினைவில் இருந்தால் பாபாவின் டைரக்ஷன் படி நடக்கலாம்.
தேக உணர்வின் காரணமாக பாபாவின் டைரக்ஷன் படி நடப்பதில்லை.
சார்ட் எழுதினால் நிறைய முன்னேற்றம் ஏற்படும் என கூறுகிறேன்.
இதை யார் கூறியது சிவபாபா. டீச்சர் வேலை (வீட்டுப் பாடம்)
கொடுக் கிறார் என்றால், செய்து விட்டு வருகிறார்கள் அல்லவா!.
இங்கே நல்ல நல்ல குழந்தைகளைக் கூட மாயை செய்ய விடுவதில்லை.
நல்ல நல்ல குழந்தைகளின் சார்ட் பாபா விடம் வந்தால் பாபா எப்படி
நினைவிலிருக் கிறீர்கள் என தெரிவிப்பார். ஆத்மாக்களாகிய நாம்
ஒரு பிரியதர்ஷனனின் பிரிய தர்ஷனிகள் என நினைக் கிறார்கள். அந்த
உலகத்தில் இருக்கும் பிரியதர்ஷன் பிரிய தர்ஷினிகள் பல விதமாக
இருக்கிறார்கள் நீங்கள் மிகவும் பழைய பிரிய தர்ஷினிகள். இப்போது
நீங்கள் ஆத்ம உணர்வுடையவராக வேண்டும். ஏதாவது ஒன்றை பொறுத்துக்
கொள்ளத்தான் வேண்டும். எல்லாம் தெரிந்தவர் என்று ஆகக்கூடாது.
பாபா எலும்பைக் கொடுத்து விடுங்கள் என கூறுவதில்லை.
ஆரோக்கியத்தை நன்றாக வைத்துக் கொண்டால் சேவையும் நன்றாக செய்ய
முடியும் என்று தான் பாபா கூறுகிறார். நோயாளியாக இருந்தால்
அப்படியே தான் இருக்க வேண்டும். சில மருத்துவ மனைகளில் புரிய
வைக்கக் கூடிய (ஆன்மீக) சேவை செய்தால், மருத்துவர்கள் இவர்களோ
பரிஸ்தாக்கள் என கூறுவார்கள். சித்திரங்களை உடன் எடுத்து
செல்வார்கள். இப்படிப்பட்ட சேவைகளை செய்பவர்களுக்கு இரக்க மனம்
உடையவர் என கூறுவார்கள். சேவை செய்தால் ஒரு சிலர் வருவார்கள்.
எவ்வளவுக்கு எவ்வளவு நினைவின் பலத்தில் இருக்கிறீர்களோ அவ்வளவு
நீங்கள் மனிதர்களைக் கவரலாம். இதில் தான் சக்தி இருக்கிறது.
முதலில் தூய்மை, அமைதி, பிறகு சுகம் என கூறப்படுகிறது. நினைவின்
பலத்தினால் தான் நீங்கள் தூய்மையாகலாம். மேலும் தெய்வீக
குணங்களும் வரும். பாபாவின் மகிமைகளைத் தெரிந்திருக்கிறீர்கள்
அல்லவா? பாபா எவ்வளவு சுகம் அளிக்கிறார் 21 பிறவி களுக்கு
நீங்கள் சுகத்திற்குத் தகுதி அடைகிறீர்கள். ஒரு போதும்
யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது.
நிறைய குழந்தைகள் டிஸ்சர்வீஸ் செய்து தனக்குத்தானே சபித்துக்
கொள்கிறார்கள். மற்றவர்களை நிறைய துன்புறுத்துகிறார்கள். கெட்ட
பிள்ளைகள் ஆகிறார்கள் என்றால் தனக்குத்தானே சபித்துக்
கொள்கிறார்கள். டிஸ்சர்வீஸ் செய்வதால் ஒரேயடியாக தரம்
குறைந்தவராகி விடுகிறார்கள். நிறைய குழந்தைகள் விகாரத்தில்
விழுந்து விடுகிறார்கள் அல்லது கோபத்தில் வந்து படிப்பை
விடுகிறார்கள். பலவிதமான குழந்தைகள் இங்கே
அமர்ந்திருக்கிறார்கள். இங்கே புத்துணர்வு அடைந்து
செல்கிறார்கள் என்றால் செய்த தவறுகளுக்கு பச்சாதாபம்
ஏற்படுகிறது. இருப்பினும் பச்சாதாபப்படுவதால் எந்த மன்னிப்பும்
கிடையாது. உங்களை நீங்களே மன்னித்துக் கொள்ளுங்கள் என பாபா
கூறுகிறார். நினைவிலிருங்கள். பாபா யாரையும் மன்னிப்பதில்லை.
இதுவே படிப்பாகும். பாபா படிக்க வைக்கின்றார். குழந்தைகள்
தன்மீது தானே இரக்கம் கொண்டு படிக்க வேண்டும். நல்ல பழக்க
வழக்கங்கள் இருக்க வேண்டும். பாபா டீச்சரிடம் பதிவேட்டை கொண்டு
வாருங்கள் என்கிறார். ஒவ்வொருவரின் செய்திகளையும் கேட்டு
அறிவுரை கொடுக்கப்படுகிறது. டீச்சர் புகார் கூறி இருக்கிறார்
என புரிந்துக் கொண்டு அவர்கள் இன்னும் அதிகம் சேவைக்குப்
புறம்பாக நடக்கிறார்கள். மிகவும் கடினமாக முயற்சி
தேவைப்படுகிறது. மாயை மிகப்பெரிய எதிரியாகும். குரங்கிலிருந்து
கோவிலாவதற்கு (தகுதி பெற) விடுவதில்லை. உயர்ந்த பதவி
அடைவதற்குப் பதிலாக இன்னும் முற்றிலும் கீழே விழுந்து
விடுகிறார்கள். பிறகு ஒரு போதும் எழ முடியாது. (பாபாவை
பொருத்தவரை) இறந்து விடுகிறார்கள். பாபா குழந்தைகளுக்கு
உலகத்திற்கே அதிபதி யாவது மிகப் பெரிய குறிக்கோள் என அடிக்கடி
புரிய வைக்கின்றார். பெரிய மனிதர்களின் குழந்தைகள் மிகவும்
ராயல்டியோடு நடக்கிறார்கள். இங்கேயும் தந்தையின் மரியாதை
கெட்டுப் போகக்கூடாது. உங்களுடைய தந்தை இவ்வளவு நல்லவர்.
நீங்கள் எவ்வளவு கெட்ட பிள்ளையாக இருக்கிறீர்கள் என கூறுவார்கள்.
நீங்கள் உங்கள் தந்தைக்கு அவமரியாதை ஏற்படுத்துகிறீர்கள்.
இங்கேயோ ஒவ்வொருவரும் தன்னுடைய மரியாதையை இழக்கிறார்கள். நிறைய
தண்டனைகள் அடைய வேண்டியிருக்கிறது. பாபா மிகவும் எச்சரிக்கையோடு
நடந்து கொள்ளுங்கள் என எச்சரிக்கிறார். சிறைப் பறவை ஆகாதீர்.
இங்கே கூட சிறைப் பறவைகள் இருக்கிறார்கள். சத்யுகத் தில் எந்த
சிறையும் கிடையாது. இருப்பினும் படித்து உயர்ந்த பதவி பெற
வேண்டும். தவறு செய்யாதீர்கள், யாருக்கும் துக்கம்
அளிக்காதீர்கள். நினைவு யாத்திரையில் இருங்கள், நினைவு தான்
பயன்படும், பட கண்காட்சியில் கூட இந்த முக்கியமான விஷயத்தைக்
கூறுங்கள். தந்தை யின் நினைவினால் தான் தூய்மையாகலாம். அனைவரும்
தூய்மையாக மாற விரும்புகிறார்கள். இதுவே பதீத உலகம் ஆகும்.
அனைவருக்கும் சத்கதியை அளிப்பதற்காக ஒரே ஒரு தந்தை வருகிறார்.
கிறிஸ்து, புத்தர் போன்றோர் யாருக்கும் சத்கதி அளிக்க முடியாது.
பிறகு பிரம்மா வின் பெயரையும் எடுக்கிறார்கள். பிரம்மாவைக் கூட
சத்கதியை அளிக்கும் வள்ளல் எனக்கூற முடியாது. அவர் தேவி தேவதா
தர்மத்திற்கு நிமித்தமாக இருக்கிறார். தேவி தேவதா தர்மத்தை
சிவபாபா ஸ்தாபனை செய்கிறார். இருப்பினும். பிரம்மா, விஷ்ணு,
சங்கர்...... என்ற பெயர்கள் இருக்கிறது அல்லவா? திரிமூர்த்தி
பிரம்மா என்கின்றனர். இவரும் குரு கிடையாது என பாபா கூறுகிறார்.
குரு ஒருவரே. அவர் மூலாக நீங்கள் ஆன்மீக குரு ஆகிறீர் கள்.
மற்றவர்கள் தர்மத்தை நிறுவுபவர்கள். தர்மத்தை
உருவாக்குபவர்களுக்கு சத்கதி அளிக்கும் வள்ளல் என்று எப்படி
கூற முடியும்?. இது புரிந்துக் கொள்ள வேண்டிய மிகவும் ஆழமான
விஷயங்கள் ஆகும். மற்ற தர்ம ஸ்தாபகர்கள் தர்மத்தை மட்டும்
உருவாக்குகிறார்கள். அவர்களுக்குப் பின்னால் அனைவரும்
வருகின்றார்கள். அவர்கள் யாரையும் திரும்ப அழைத்துச் செல்ல
முடியாது. அவர்கள் மறு பிறவியில் வந்து தான் ஆக வேண்டும்.
அனைவருக்கும் இதை புரிய வைக்க வேண்டும். ஒரு குரு கூட சத்கதியை
அளிக்க முடியாது. குரு பதீத பாவனர் ஒருவர் தான், அவரே
அனைவருக்கும் சத்கதியை அளிக்கும் வள்ளல், விடுவிக்கக் கூடியவர்
என பாபா புரிய வைக்கிறார். நம்முடைய குரு ஒருவரே, அவரே சத்கதி
அளிக்கிறார், சாந்தி தாமம், சுகதாமத்திற்கு அழைத்துச்
செல்கிறார் என தெரிவிக்க வேண்டும். சத்யுக ஆரம்பத்தில் மிகச்
சிலரே இருக்கிறார்கள். அங்கே யாருடைய இராஜ்யம் இருந்தது.
படங்களைக் காண்பிக்கலாம் அல்லவா? பாரத வாசிகள் தான் ஏற்றுக்
கொள்வார்கள். தேவதைகளின் பூஜாரிகள் உண்மையில் இவர்கள்
சொர்க்கத்திற்கு அதிபதியாக இருந்தனர் என்பதை உடனே ஏற்றுக்
கொள்வார்கள். சொர்க்கத்தில் இவர்களின் இராஜ்யம் இருந்தது. மற்ற
மக்கள் அனை வரும் எங்கிருந்தனர். நிச்சயமாக நிராகார உலகத்தில்
இருந்தனர் என கூறுவார்கள். இதைக் கூட இப்போது நீங்கள்
புரிந்துக் கொள்கிறீர்கள். முன்பு ஒன்றும் தெரியவில்லை. இப்போது
உங்களுடைய புத்தியில் சக்கரம் சுழன்றுக் கொண்டிருக்கிறது. உண்மை
யில் 5000 வருடங்களுக்கு முன்பு பாரதத்தில் இவர்களின் இராஜ்யம்
இருந்தது. ஞானத்தின் பலன் முடிவடைந்தது பக்தி மார்க்கம் ஆரம்பம்
ஆகிறது. பிறகு பழைய உலகத்தின் மீது வைராக்கியம் வேண்டும்.
அவ்வளவு தான், இப்போது நாம் புதிய உலகத்திற்குப் போவோம். பழைய
உலகத்திலிருந்து மனம் விலகி விடுகிறது. அங்கே கணவர் குழந்தை
போன்ற அனைவரும் புதிய உலக தகுதிப்படி கிடைப்பார்கள். எல்லையற்ற
தந்தை நம்மை உலகத்திற்கு அதிபதியாக்குகிறார்.
உலகத்திற்கே அதிபதியாகக் கூடிய குழந்தைகளின் எண்ணங்கள் மிகவும்
உயர்ந்ததாகவும் நடத்தை மிகவும் ராயலாகவும் இருக்கும். சாப்பாடு
கூட மிகவும் குறைவாக உட்கொள்வார்கள். அதிகமான பேராசை இருக்கக்
கூடாது. நினைவில் இருக்கக் கூடியவர்களின் உணவு கூட மிகவும்
சூட்சுமமாக இருக்கும். நிறைய பேருக்கு சாப்பிடுவதில் புத்தி
போகிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு உலகத்திற்கே அதிபதி ஆகிறோம்
என்ற குஷி இருக்கிறது. குஷியை போன்ற சத்துணவு (டானிக்) இல்லை
என கூறப்படுகிறது. எப்போதும் இது போன்ற மகிழ்ச்சியில் இருந்தால்
உணவு போன்றவைகள் கூட மிகவும் குறைந்து விடும். அதிகமாக
சாப்பிடும் போது எடை அதிகமாகி விடுகிறது. பிறகு தூக்கம் வந்துக்
கொண்டே இருக்கிறது. பிறகு பாபா தூக்கம் வருகிறது என்கிறார்கள்.
சதா உணவு ஒரே அளவு இருக்க வேண்டும். நல்ல உணவாக இருந்தால்
நிறைய சாப்பிடக் கூடாது நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு,
ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. நாம் துக்கத்தை நீக்கி சுகம் அளிக்கும் தந்தையின் குழந்தைகள்.
நாம் யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது. சேவையில்
நியமத்திற்குப் புறம்பாக நடந்து தன்னை சபித்துக் கொள்ளக் கூடாது.
2. தன்னுடைய எண்ணங்களை மிகவும் உயர்ந்ததாகவும் ராயலாகவும்
வைத்துக் கொள்ள வேண்டும். இரக்க மனம் உடையவராகி சேவையில் ஈடுபட
வேண்டும். சாப்பிடுதல், அருந்துதல் போன்றவைகளில் பேராசையை
விட்டு விட வேண்டும்.
வரதானம்:
நேர்மையுடன் தன்னை தந்தைக்கு முன்பாக வெளிப்படுத்தி முன்னேறும்
கலையின் அனுபவி ஆகுக.
நான் எப்படி இருக்கின்றேன், எதுவாக இருக்கின்றேன் என்பதனை
அப்படியே தந்தைக்கு முன்பாக வெளிப்படுத்த வேண்டும். இதுவே
அனைத்திலும் உயர்ந்த முன்னேறும் கலைக்கான சாதனமாகும்.
நேர்மையுடன் தன்னை தந்தைக்கு முன்பாக வெளிப்படுத்துவதே
முயற்சிக்கான வழியை தெளிவு செய்வதாகும். சில சமயங்களில்
புத்திசா-த்தனமாக தன் மனவழி மற்றும் பிறர் வழியின் திட்டங்
களுடன் பாபாவிடமும், நிமித்தமான ஆத்மாக்கள் முன்பாகவும் தன்
விசயத்தை வைக்கின்றார்கள். இது நேர்மை அல்ல என்பது தந்தை எப்படி
தன்னைப் பற்றி உள்ளது உள்ளபடி குழந்தைகளுக்கு முன்பாக
வெளிப்படையாக வைக்கின்றாரோ அவ்வாறே குழந்தைகளும் தந்தைக்கு
முன்பாக வெளிப்படையாக இருக்க வேண்டும்.
சுலோகன்:
சதா தியாகம் செய்தேன் என்ற எண்ணத்தையும் தியாகம் செய்த நிலையில்
இருப்பவரே உண்மையான தபஸ்வி ஆவார்.
அவ்யக்த இஷாரா: எண்ணங்களின் சக்தியை சேமியுங்கள், உயர்ந்த
சேவைக்கு நிமித்தமாகுங்கள்
நிகழ்காலம் என்பது எதிர்காலத்தை காண்பிக்கும் நிலைக்
கண்ணாடியாகும். நிகழ்கால நிலை யெனும் நிலைக் கண்ணாடி மூலம் தனது
எதிர்காலத்தை தெளிவாக காண முடியும். நாளைய இராஜ்ய அதிகாரி
ஆவதற்காக நிகழ்காலத்தில் என்னிடம் ஆளுமை சக்தி எவ்வளவு தூரம்
உள்ளது என்பதை சோதனை செய்யுங்கள். முத-ல் சூட்சும சக்திகள்,
முக்கிய சேவர்களான எண்ணங்களின் மீது புத்தியின் மீது முழு
அதிகாரம் செலுத்தும் பொழுதே தனது எதிர்கலம் பிரகாசமடையச்
செய்வீர்கள்.